PDA

View Full Version : இனியும் சில இரவுகள்



franklinraja
02-11-2006, 11:56 AM
ஆயிற்று! இன்றோடு பத்து தினங்கள்...
அவளிடமிருந்து ஒரு மின்னஞ்சலும் இல்லை!
காலை உற்சாகம் இழந்திருந்தது...

காலை அலுவலகம் சென்றவுடன்
புதிதாய் வந்திருக்கும் மின்னஞ்சல்களில்
அவள் பெயரைத்தான்
தேடுகின்றன விரல்கள் முதலில்...

நானோ தவறாமல்தான்
மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்
நாள்தோறும்...
பதில்தான் இல்லை...

"என்ன ஆயிற்று அவளுக்கு?"
கவலை தொற்றிக்கொண்டது...
"வேலை அதிகமாய் உள்ளது"
அவள் கடைசி மின்னஞ்சல் சொன்னது
நினைவுக்கு வந்தது...

"நலம், சில தினங்கள் கழித்து எழுதுகிறேன்"
என்று உலகின் மறுமுனையில் இருக்கும் எனக்கு
மட்டும் எழுதக்கூடவா நேரமில்லை
என்று அதனிடமே கேட்டுக்கொண்டது
சமாதானமாகாத மனம்!

ஒவ்வொரு காலையும் அடைந்த ஏமாற்றமும்
மறுநாளாவது வந்துவிடும் என்று எதிர்பார்த்து
தோற்றுப்போன என் ஆசைகளும்
கோபமாய் மாறியிருந்தன கடந்த சில தினங்களில்...

என் கோபத்தை வெளிக்காட்ட
தொலைபேசி உதவிக்கு வந்தது...
"நாய்குட்டி" என்று செல்லமாய் கூப்பிடுவதைத் தவிர
இன்றுவரை அவளைத் திட்டியதேயில்லை
இன்று முதல்முறையாய் திட்டப்போகிறேன்...

வார்த்தைகளை தேடிக்கொண்டே
பரிச்சயமான அவள் எண்களை தட்டியது விரல்
"ஹலோ" என்ற என் குரலை
உடனே கண்டுபிடித்துவிட்டாள்
"தூங்கிக்கொண்டிருந்தேன்... லேசான தலைவலி"
என்று அவள் சொன்னதைக் கேட்டவுடன்
கலங்கிவிட்டன கண்கள்...

"மாத்திரை சாப்பிட்டாயா? மருத்துவரிடம் போனாயா?
இரவில் அதிகமாய் கண்விழித்தாயா?"
பேசிக்கொண்டே போனதில்
ஒரு மணிநேரம் முழுதாய் கரைந்திருந்தது
தொலைபேசி வைத்தபின்தான் நினைவுக்கு வந்தது
அவளை திட்ட மறந்துவிட்டேன் என்று...

பி.கு:முன்பே இக்கவிதையை படித்திருப்பவர்கள் மன்னிக்க...
இது "படித்ததில் பிடித்தது" வகை ! :)

அல்லிராணி
02-11-2006, 12:21 PM
"ஹலோ" என்ற என் குரலை
உடனே கண்டுபிடித்துவிட்டாள்
"தூங்கிக்கொண்டிருந்தேன்... லேசான தலைவலி"
என்று அவள் சொன்னதைக் கேட்டவுடன்
கலங்கிவிட்டன கண்கள்...

"மாத்திரை சாப்பிட்டாயா? மருத்துவரிடம் போனாயா?
இரவில் அதிகமாய் கண்விழித்தாயா?"
பேசிக்கொண்டே போனதில்
ஒரு மணிநேரம் முழுதாய் கரைந்திருந்தது
தொலைபேசி வைத்தபின்தான் நினைவுக்கு வந்தது
அவளை திட்ட மறந்துவிட்டேன் என்று...
:)

பேசிக்கொண்டே போனதில்
ஒரு மணிநேரம் முழுதாய் கரைந்திருந்தது

ஒருவேளை தலைவலிக்கே இதுதான் காரணமோ???

meera
03-11-2006, 04:05 AM
கவிதை நல்லா இருக்கு. பாவம் திட்டக்கூட தெரியாத ஒருவர் ம்ம்ம்ம்ம்ம்ம்.:eek: :eek: :eek:

பென்ஸ்
03-11-2006, 04:13 AM
பிராங்....
உண்மையை சொல்லும்..
இது கவிதையா
இல்லை
காதல் கடிதமா....????
இல்லை கவிதையாய் காதலிக்கு கடிதமா...???

சொல்லவேண்டியதை மன்றம் மூலமா சொல்லுறிரா....
பரவாயில்லை... சூப்பராய்ருக்கு

தலைவலி என்று தகவல் தரவில்லையா...
தப்பு எங்கயோ இருக்குயா...
ஆரம்பத்திலையே கவனியும்....

meera
03-11-2006, 04:23 AM
பிராங்....
உண்மையை சொல்லும்..
இது கவிதையா
இல்லை
காதல் கடிதமா....????
இல்லை கவிதையாய் காதலிக்கு கடிதமா...???

சொல்லவேண்டியதை மன்றம் மூலமா சொல்லுறிரா....
பரவாயில்லை... சூப்பராய்ருக்கு

தலைவலி என்று தகவல் தரவில்லையா...
தப்பு எங்கயோ இருக்குயா...
ஆரம்பத்திலையே கவனியும்....

பென்ஸ்,

ஏன் இப்படி குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்குறீங்க.அவராவது நிம்மதியா இருக்கட்டுமே. :rolleyes: :rolleyes:

ஓவியா
03-11-2006, 03:02 PM
அருமையான கரு

அழகான கவிதை

ரசித்து படித்தேன்

விமர்சனம் எழுத வார்த்தை வரவில்லை.....

ஏனோ எண்ண பறவை மட்டும் எங்கோ பறகின்றன.....