PDA

View Full Version : ஹைக்கூ 02 - திருமணச் சந்தை

meera
02-11-2006, 07:56 AM
விற்கப்பட்டேன்
விருப்பமின்றி
திருமணச்சந்தை!...........

franklinraja
02-11-2006, 08:25 AM
அழைப்புவிட்டார்கள் ஆனந்தமாய் அனைவருக்கும்...
அனுப்பிவிட்டார்கள் அழுகையோடு என்னை...
-என் திருமணம்.

ஹி.. ஹி.. இதை ஒரு பெண் எழுதியதாக நினைத்துக்கொள்ளுங்கள்... ;)

pradeepkt
02-11-2006, 08:33 AM
விற்கப்பட்டேன்
விருப்பமின்றி
திருமணச்சந்தை!...........
விற்கப் படும் பொருளைக் கேட்டு விற்பனை செய்யும் காலம் என்றைக்கு இருந்தது, இன்றைக்கு இருப்பதற்கு.
பெண்கள் தம்மைப் பொருட்களாய்க் கற்பனை செய்து கொண்டிருக்கும் வரை விற்பனை நடந்து கொண்டுதானிருக்கும்.

meera
02-11-2006, 08:38 AM
விற்கப் படும் பொருளைக் கேட்டு விற்பனை செய்யும் காலம் என்றைக்கு இருந்தது, இன்றைக்கு இருப்பதற்கு.
பெண்கள் தம்மைப் பொருட்களாய்க் கற்பனை செய்து கொண்டிருக்கும் வரை விற்பனை நடந்து கொண்டுதானிருக்கும்.

பிரதீப் வாங்க, தீபாவளி முடிஞ்சதா?

நாங்க எப்போ எங்களை பொருளாய் கற்பனை செய்தோம்.
மற்றவர்கள் அப்படி நினைத்துக்கொண்டார்கள்.:angry: :angry: :angry:

pradeepkt
02-11-2006, 08:46 AM
பிரதீப் வாங்க, தீபாவளி முடிஞ்சதா?

நாங்க எப்போ எங்களை பொருளாய் கற்பனை செய்தோம்.
மற்றவர்கள் அப்படி நினைத்துக்கொண்டார்கள்.:angry: :angry: :angry:
மற்றவர்களை நினைக்க வைத்ததால்தான் பொருட்கள் என்கிறேன். எந்த உயிரும் ஏதோ ஒரு விதத்தில் தனித்தன்மையை நிலைநாட்டுகிறது.
கோபித்துக் கொள்ளாதீர்கள். விற்கப்படும் வரை காத்திருந்து விட்டுப் பின்னர் கவிதை எழுதி ஆதங்கம் காட்டுபவர்களைப் பொருட்கள் என்றுதானே சொல்ல முடியும்??? :angry:

meera
02-11-2006, 09:01 AM

விற்கப்படும் வரை காத்திருக்கவில்லை.விற்பதற்க்காகவே காத்திருக்கிறார்கள் விதைத்தவர்கள்.சரியான நேரத்தில் விலைபோகவில்லை என்றால் விட்டுவிடுமா சமுதாயம் அவளை அப்படியே???? :angry: B)

மதி
02-11-2006, 09:44 AM
மீரா..இந்தக் கவிதை ஓர் ஆணின் அவலக் குரலா என்ன?
ஒரு பெண்ணின் எண்ணம் என்றால் பொருள் தவறு..
விலை கொடுப்பவர் விற்கப்படுவதில்லை....எந்தச் சந்தையிலும்.!!

meera
02-11-2006, 09:51 AM
மீரா..இந்தக் கவிதை ஓர் ஆணின் அவலக் குரலா என்ன?
ஒரு பெண்ணின் எண்ணம் என்றால் பொருள் தவறு..
விலை கொடுப்பவர் விற்கப்படுவதில்லை....எந்தச் சந்தையிலும்.!!

இல்லை மதி இது இரு தரப்புக்கும் பொருந்தும்.

பெண் வீட்டார் மாப்பிள்ளையை வாங்குகிறார்கள் படிப்பு,வேலை போன்றவைகாக.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை வாங்குகிறார்கள் பொருள் போன்றவைக்காக

இங்கே பெண்,மாப்பிள்ளை இருவருமே விற்க்கப்படுகிறார்கள் வித்தியாசம் இல்லாமல்.

மதி
02-11-2006, 09:59 AM

தோழி இதில தான் எனக்கு சந்தேகமே..
பொதுவாக திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு எதையும் தட்சிணையாகத் தருவதில்லை.(ஆயினும் சில சமூகங்களில் மாப்பிள்ளை வீட்டார் தான் தட்சிணை தர வேண்டும்)...

ஆண் பெண் இருவருமே விற்கப்படும் பொருளென்றால் வாங்குபவர் தான் யார்..?

meera
02-11-2006, 10:25 AM

பெண் வீட்டுக்கு,மாப்பிள்ளை வீட்டார் தரும் தட்சிணை மாப்பிள்ளையின் படிப்பு,வேலை இவைதான்.

நல்லா படித்த பெண் தனக்கு கீழ் படித்த மாப்பிள்ளையை விரும்புவதில்லை.ஆகவேதான் மாப்பிள்ளை வீட்டார் தரும் தட்சிணை மாப்பிள்ளையின் படிப்பு,வேலை இவை என்றேன்.

மன்னிக்க வேண்டும் நண்பரே!
இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ஹி ஹி ஹி:D :D :D :D

மதி
02-11-2006, 10:44 AM
ஆக பரஸ்பர பண்ட மாற்று முறை...ஹ்ம்ம்..!

அல்லிராணி
02-11-2006, 12:23 PM
விற்கப்பட்டேன்
விருப்பமின்றி
திருமணச்சந்தை!...........

வாங்கியவனை:p
வாங்கிவிட்டேன்:rolleyes:
வாங்கு வாங்கென்று...:eek:

franklinraja
02-11-2006, 01:00 PM
வாங்கியவனை:p
வாங்கிவிட்டேன்:rolleyes:
வாங்கு வாங்கென்று...:eek:

மீரா பார்த்தீர்களா...?

அப்படி வாங்குபவர்களை, அல்லிராணி போன்ற தோழிகள் சும்மா விடமாட்டார்கள்...

அல்லிராணி... பின்னிட்டீங்க...

ஆண் மக்களே... எதற்கும் ஜாக்கிரதை...! ;)

தாமரை
02-11-2006, 01:27 PM
வாங்கியவனை:p
வாங்கிவிட்டேன்:rolleyes:
வாங்கு வாங்கென்று...:eek:
ஏங்கியது :p
வாங்கியது:)
வீங்கியது:eek:

அறிஞர்
02-11-2006, 01:51 PM
அனைவரின் கவிதைகளும் அருமை....
வாங்கி வீங்கிய.. தாமரையின் அனுபவமும் சிறப்பு...

ஓவியா
02-11-2006, 05:47 PM
வாங்கியவனை:p
வாங்கிவிட்டேன்:rolleyes:
வாங்கு வாங்கென்று...:eek:

அள்ளியக்காவா ...கொக்கா

:D :D :D

meera
03-11-2006, 04:32 AM
வாங்கியவனை:p
வாங்கிவிட்டேன்:rolleyes:
வாங்கு வாங்கென்று...:eek:

அல்லிராணி,
நல்லா இருக்கு.
எல்லா பெண்களும் இப்படி இருந்தா?அய்யோ ஆண்களின் நிலை நினைக்கவே பாவமா இருக்கு.பொழச்சு போகட்டும் விட்டுடுங்க:p :rolleyes:

meera
03-11-2006, 04:34 AM
ஏங்கியது :p
வாங்கியது:)
வீங்கியது:eek:

அண்ணா,

அடிக்கடி உண்மை தானா வெளிய வருது போல இருக்கு???

ஓவியா
03-11-2006, 03:23 PM
மன்னிக்க வேண்டும் நண்பரே!
இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ஹி ஹி ஹி:D :D :D :D

மகளே மாட்டிக்கொண்டாய..ஹி ஹி ஹி:D

தாமரை
04-11-2006, 02:57 AM
அண்ணா,

அடிக்கடி உண்மை தானா வெளிய வருது போல இருக்கு???

இது கல்யாணமான பெண்களுக்கும் மிக பொருந்துமே..

கை நிறைய இல்லை இல்லை வீடு நிறைய சம்பாதிக்கும் கணவன் வேண்டுமென ஏக்கம்...

பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகாய் காட்டி.. வரதட்சணை கொடுத்து, எப்பாடு பட்டாஅது அந்த கணவனை வாங்கி விடுவது...

வாங்கிய பின் என்ன சாப்பிட்டு, டி.வி பார்த்து சாப்பிட்டு, தூங்கி சாப்பிட்டு டிவி பார்த்து குண்டாகி (வீங்கி) விடுகிறார்களே

meera
04-11-2006, 04:06 AM

நல்ல சமாளிபிகேஷன்.எப்படியோ சமாளிச்சுட்டீங்க போல.
(ஆமா அண்ணா,உங்க ட்ரைனிங் மீராக்கு வேலை செய்தா??)

மன்மதன்
04-11-2006, 10:14 AM
அடடே..
அடடே
அடடே....

ஓவியா
04-11-2006, 12:08 PM
அடடே..
அடடே
அடடே....

அதான் சொல்லுறது அடிக்கடி மன்றம் வரனும்னு...

இப்படி எல்லா பதிவையும் ஒறேடிய படித்துட்டு

அடடே.. ...அடடே....அடடேனு

மயக்கம்போட்டு விழுந்தா எப்படி.;) :D

ஓவியா
04-11-2006, 12:15 PM
இது கல்யாணமான பெண்களுக்கும் மிக பொருந்துமே..

கை நிறைய இல்லை இல்லை வீடு நிறைய சம்பாதிக்கும் கணவன் வேண்டுமென ஏக்கம்...

பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகாய் காட்டி..
வரதட்சணை கொடுத்து............
எப்பாடு பட்டாஅது அந்த கணவனை வாங்கி விடுவது...

வாங்கிய பின் என்ன சாப்பிட்டு, டி.வி பார்த்து சாப்பிட்டு, தூங்கி சாப்பிட்டு டிவி பார்த்து குண்டாகி (வீங்கி) விடுகிறார்களே

உங்க ஊரில் இப்படிதானா.....

எங்க ஊரில் கல்யாணத்திர்க்கு ஆப்பாலதான் கணவனை வாங்குவாங்க.......பூரிகட்டையிலே......

தாமரை
06-11-2006, 03:29 AM
உங்க ஊரில் இப்படிதானா.....

எங்க ஊரில் கல்யாணத்திர்க்கு ஆப்பாலதான் கணவனை வாங்குவாங்க.......பூரிகட்டையிலே......

ஆப்புதான் யார் இல்லேன்னாங்க..:D :D :D

மன்மதன்
06-11-2006, 08:37 AM
அதான் சொல்லுறது அடிக்கடி மன்றம் வரனும்னு...

இப்படி எல்லா பதிவையும் ஒறேடிய படித்துட்டு

அடடே.. ...அடடே....அடடேனு

மயக்கம்போட்டு விழுந்தா எப்படி.;) :D

அடடே.............:rolleyes: :rolleyes:

sriram
26-11-2006, 04:32 AM
மீரா சொல்வது சரி.திருமணம் என்பது வியபார சந்தை மாதிரிதான் நடந்து கொண்டு இருக்கிறது. மனம் கலக்கவில்லை. பணம்தான் கலக்கிறது. பண்ட மாற்று முறை போல!
பயன்பாடு கருதிய உறவாகி விட்டது. நேசம் , காதல் எல்லாம் பேத்தல்..! திருமணம் என்பது ஒரு வியபார ஒப்பந்தம்.
அன்பு, நேசம், காதல் எல்லம் படிப்பு, வேலை, பணம் இவற்றின் பொருட்டே வருகிறது(பெரும்பாலும்).
இன்னும் சொல்லபோனால், நாம் வாழ்வதே பிறர் நம்மை பார்த்து பொறாமை, ஏக்கம் பட வென்டும் என்ற அடிப்படையில்தான் இருக்கிறது. அகமகிழ்ச்சியோடு பெரும்பாலும் யாரும் வாழ்வதில்லை.
எல்லோருடைய குறிகோளும் வட்டத்தின் மையமாக விரும்புவதே.
திருமணமும் அது போலவே நடக்கிறது.
'சாப்ட்வேர் என்சினியர்' தான் வேண்டும் என்று பெண்கள் திருமண வலை தளத்தில் கேட்கிறார்கள். அதற்கு கைமாறாக நகை, பணம் இவற்றை ஆண்கள் கேட்கிறார்கள்.
இவை எல்லாம் பொருந்தி வந்த பிறகு உடல்சுகம் பெற, கொடுக்க இருவரும் தீர்மானிக்கிறார்கள்(திருமண என்ற வியபார ஒப்பந்தம் வாயிலாக.)
காதல்-கத்திரிகாய் திருமணமும் இவற்றை அடிப்படையாக வைத்துதான் வருகிறது.
பெற்றோர் பார்த்து வைத்த திருமணமும் இப்படிதான் வருகிறது.
அக உணர்வை யாரும் கண்டு கொள்ள தயாராக இல்லை. இதற்கு தேர்வு என்ன? காதல் திருமணம் என்று சொல்லி சப்பைகட்டு கட்ட வேன்டாம்.
திருமணம் என்றால் என்ன?காதல் என்பது உண்மைய?

sriram
26-11-2006, 04:36 AM
மீரா சொல்வது சரி.திருமணம் என்பது வியபார சந்தை மாதிரிதான் நடந்து கொண்டு இருக்கிறது. மனம் கலக்கவில்லை. பணம்தான் கலக்கிறது. பண்ட மாற்று முறை போல!
பயன்பாடு கருதிய உறவாகி விட்டது. நேசம் , காதல் எல்லாம் பேத்தல்..! திருமணம் என்பது ஒரு வியபார ஒப்பந்தம்.
அன்பு, நேசம், காதல் எல்லம் படிப்பு, வேலை, பணம் இவற்றின் பொருட்டே வருகிறது(பெரும்பாலும்).
இன்னும் சொல்லபோனால், நாம் வாழ்வதே பிறர் நம்மை பார்த்து பொறாமை, ஏக்கம் பட வென்டும் என்ற அடிப்படையில்தான் இருக்கிறது. அகமகிழ்ச்சியோடு பெரும்பாலும் யாரும் வாழ்வதில்லை.
எல்லோருடைய குறிகோளும் வட்டத்தின் மையமாக விரும்புவதே.
திருமணமும் அது போலவே நடக்கிறது.
'சாப்ட்வேர் என்சினியர்' தான் வேண்டும் என்று பெண்கள் திருமண வலை தளத்தில் கேட்கிறார்கள். அதற்கு கைமாறாக நகை, பணம் இவற்றை ஆண்கள் கேட்கிறார்கள்.
இவை எல்லாம் பொருந்தி வந்த பிறகு உடல்சுகம் பெற, கொடுக்க இருவரும் தீர்மானிக்கிறார்கள்(திருமண என்ற வியபார ஒப்பந்தம் வாயிலாக.)
காதல்-கத்திரிகாய் திருமணமும் இவற்றை அடிப்படையாக வைத்துதான் வருகிறது.
பெற்றோர் பார்த்து வைத்த திருமணமும் இப்படிதான் வருகிறது.
அக உணர்வை யாரும் கண்டு கொள்ள தயாராக இல்லை. இதற்கு தீர்வு என்ன? காதல் திருமணம் என்று சொல்லி சப்பைகட்டு கட்ட வேன்டாம்.
திருமணம் என்றால் என்ன?காதல் என்பது உண்மையா?

ஓவியா
26-11-2006, 11:34 AM
அருமையான விமர்சனம் நண்பரே,

ஆனால்
அக உணர்வை யாரும் கண்டு கொள்ள தயாராக இல்லை
இதுதான் இடிக்குதே,
நான் கன்ட எத்தனயோ நன்பர்கள் இப்படி இல்லையே...
ஒரு சிலரே தவிர எல்லொருமல்ல,

இருப்பினும் நானும் சில சமயம் இதை சொல்லிதான் புலம்புவது..:)
அக உணர்வை யாரும் கண்டு கொள்ள தயாராக இல்லை

திருமணம் என்றால் என்ன?காதல் என்பது உண்மையா?
இதற்க்கு அனுபவ அவை சான்றோர்கள் பதில் கூருவார்கள்.

தாமரை
26-11-2006, 11:47 AM
அக உணர்வை யாரும் கண்டு கொள்ள தயாராக இல்லை

உங்களுக்கு கல்யாணம் ஆகலை போலிருக்கே,,, நவீன நாரதர் படிங்க...

திருமணம் என்றால் என்ன?காதல் என்பது உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாம கல்யாணம் பண்ணாதீங்க என்ன...

sriram
26-11-2006, 04:22 PM
கல்யாணம் ஆனவர்கள் சொல்லியதைதான் சொல்கிறேன்.அவர்களின் புலம்பலைதான் பதித்துள்ளேன்.
செல்வன் அண்ணா, நான் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா?

crisho
30-11-2006, 05:48 AM
கல்யாணம் ஆனவர்கள் சொல்லியதைதான் சொல்கிறேன்.அவர்களின் புலம்பலைதான் பதித்துள்ளேன்.
செல்வன் அண்ணா, நான் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா?

ஐயா இவர்களின் புலம்பலுக்கு காரணம் என்ன??

==> "திருமணம் என்றால் என்ன?" என்று அறியாமல் திருமண பந்த்தில் நுழைந்துள்ளார்கள்.

ஐயா எல்லா பெண்களும் 'சாப்ட்வேர் என்சினியர்' 'டாக்டர்', 'என்சினியர்' தான் தனக்கு கணவனாக வரனும் என்று நினைப்பதில்லை!

"டிக்கிரி" இல்லாதவர்கள் திருமணம் செய்யவில்லையா? சந்தோஷமாக வாழவில்லையா??

sriram
01-12-2006, 09:41 AM
சரி கிரிஷோ. ஒப்பு கொள்கிறேன். பெரும்பாலும் வியபார சிந்தனையோடு திருமணம் நடக்கிறது என்பதுதான் என் வருத்தம்.
உயிருக்கு உயிராக ' நேசித்தல் குறைந்து வருகிறதோ ? என ஒரு கேள்வி என் மனதில்.! அவ்ளோதான்.

ஓவியா
01-12-2006, 02:20 PM
சரி கிரிஷோ. ஒப்பு கொள்கிறேன். பெரும்பாலும் வியபார சிந்தனையோடு திருமணம் நடக்கிறது என்பதுதான் என் வருத்தம்.
உயிருக்கு உயிராக ' நேசித்தல் குறைந்து வருகிறதோ ? என ஒரு கேள்வி என் மனதில்.! அவ்ளோதான்.

ஆமாம்
கலியுகத்தில் அனைத்து கரைந்துதான் போகின்றது.......தேய்ப்பிறைபோல்
என்றோ ஒருநாள் மானிடர்களிடம் துமியளவு நேசித்தல்கூட இல்லாமல் போகலாம்....போய்விடலாம்

அது நடக்கக்கூடாது என்பதே அனைவரின் ஆவாலும்

ஆதவா
13-06-2007, 06:30 AM
விற்கப்பட்டேன்
விருப்பமின்றி
திருமணச்சந்தை!...........

எங்கோ தொலைத்த மனதை அந்த நிமிடங்கள் நினைக்கும்.. அல்லது தொலைக்கப்படாமல் தொல்லை சொல்லும் மனதையும் நினைக்கலாம்.. கலியாணம் ஒரு வியாபாரம். சிலருக்கு அது பண பறிமாற்றம்.. சிலருக்கு அது மன பறிமாற்றம்.

காலம் மாறியும் மாறாத வியாபாரம். ஆனால் இந்த வியாபார நுணுக்கத்தில் ஒரு விஷயம் என்னவென்றால் பொருளும் கொடுத்து பணமும் கொடுக்கவேண்டும்... அது சிலருக்கு...

ஆனால் திருமணம் மனிதருக்குத் தேவை என்று ஆகிவிட்டது. காதல் பல காதல் தம்பதியராலேயே ஒழிக்கப்பட்டுவிடுகிறது. நம்பிக்கைக் குறைவே இதற்குக் காரணம். விருப்பம் கெட்டால் அது காதலாகவும் இருக்க வாய்ப்பிருக்கு இல்லையா?

நல்ல கவிதை மீரா அவர்களே! மூன்று வரிகளுக்கு எத்தனையோ அர்த்தங்கள் அடக்கமுடிந்த இந்த ஹைக்கூ மட்டும் நம் கைகளுக்கு வருவதேயில்லை. உங்களுக்கு 100 காசுகள்..

அமரன்
13-06-2007, 06:44 PM
கற்றுக்கொண்டேன்.....எப்படிச் சிறுசாக சொன்னாலும் சிறப்பாகச் சொல்வதென்று...

rocky
16-06-2007, 04:32 PM
மீரா பார்த்தீர்களா...?

அப்படி வாங்குபவர்களை, அல்லிராணி போன்ற தோழிகள் சும்மா விடமாட்டார்கள்...

அல்லிராணி... பின்னிட்டீங்க...

ஆண் மக்களே... எதற்கும் ஜாக்கிரதை...! ;)

வாங்கியவளை
வனங்கினேன்
வாழ்கிறேன்.

நாங்க எஸ்கேப்புங்கோ