PDA

View Full Version : நாடு எங்கே போகுது???அறிஞர்
01-11-2006, 07:53 PM
இந்த தலைப்பில் நாட்டில் நடக்கும் அவலமான செய்திகளை இங்கு தரலாம். விழிப்புணர்ச்சி வேண்டும் என்ற நோக்கில் செய்திகளை தரவும்.

முதலில் தமிழ்நாடு, பின்னர் தமிழர்கள் வாழும் நாடு, இந்தியா மற்றும் வெளிநாட்டு செய்திகளை தரவும்.

எந்த காரணத்தை கொண்டும் படங்களை இங்கு தராதீர்கள். சில படங்கள் மனதை பாதிக்கும். ஆபாசமான செய்திகளை தரவேண்டாம்.

அறிஞர்
01-11-2006, 07:58 PM
1. என்னை பாதித்த செய்தி.. குன்னூரில் 7 வயது சிறுவனை 20 தெரு நாய்கள் கடித்து குதறியது. கடவுளின் அருளால் சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது.
இது மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்குமா..

2. 20ம் நூற்றாண்டில் நாடு முன்னேற படித்தவர்களை நாட்டின் தலைவர்களாக ஆக்கவேண்டும் என்பது அனைவரின் ஆவல். மதுரை முதல் பெண் மேயர் குறைந்தளவு படித்தவர். மதுரையின் முன்னேற்றத்துக்கு இவரின் பங்கு எவ்வாறு இருக்கும்?

அறிஞர்
04-01-2007, 08:19 PM
சமீபத்தில் சென்னை சிறுவர்கள் இணைந்து செய்த கொலை பற்றிய ஜுனியர் விகடன் கட்டுரை
---------------
நன்றி-விகடன்

உங்கள் பையன் நல்லவனா? கெட்டவனா?


எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் கலாசாரம்? எங்கே போகிறது நம் இளைஞர் சமூகம்?
&நடுங்க வைக்கும் இந்தக் கேள்விகளை மீண்டும் ஒருமுறை உரக்கக் கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். காரணம், சென்னை விருகம்பாக்கத்தில், மூன்று சிறுவர்கள் சேர்ந்து அரவிந்த் என்ற மற்றொரு சிறுவனைக் குரூரமாகக் கொலை செய்திருப்பதுதான்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப்போல, தற்கால சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தடம் புரண்டு தவறான வழிகளில் போவது, முளையிலேயே தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்த ஆபத்தான போக்கை முளை யிலேயே கிள்ளி எறியாவிட்டால்... நாட்டுக்காக எதிர்கால மன்னர்களை அல்ல, எதிர்கால கிரிமினல்களைத்தான் உருவாக்க முடியும். ஆகவே மாணவர்கள், ஆசிரியர் கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோ ரும் காவல்துறை உயரதிகாரிகளும் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தோம். உடனே மாநகர காவல் துறை ஆணையர் லத்திகா சரண், கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையில் இதற்காக ஒரு குழுவை ஏற்பாடு செய்தார்.
சென்னை குரோம்பேட்டை எஸ்.சி.எஸ்.மெட்ரிக்குலே ஷன் பள்ளியின் தலைமையாசிரியர் பேபி சரோஜா, மாணவர்கள் முகமது ஃபரக்கத் உல்லா, மீனாட்சி சுந்தரம், திவ்யா, ரேவதி, சமூக ஆர்வலர் தாம்பரம் நாராயணன், அவரது மனைவி வசந்தி மற்றும் கிழக்கு தாம்பரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்கள்.
சென்னை மாநகர போலீஸ் கூடுதல் ஆணையர் ஜாங்கிட், வட சென்னை காவல்துறை ஆணையர் ரவி மற் றும் போக்குவரத்து இணை ஆணையர் சுனில் குமார் ஆகியோர் பேபி சரோஜா தலைமையிலான குழுவை வரவேற்று, உரையாட ஆரம்பித்தனர். ரொம்ப வேகத்துல அரவிந்தோட கொலையைத் துப்புத் துலக்கியிருக்கீங்க. வாழ்த் துக்கள் என்று பேபி சரோஜா சொல்ல... இனி இப்படி ஒரு கொடூரம் நடக்காம இருக்கணும். அதுதான் இப் போதைக்கு எங்க ளோட வேண்டுதல். அது நடந்தா எங் களுக்கு சந்தோஷம் தான் என்று புன்னகைத்தார் ஜாங்கிட்.

முதலில், கொலை செய்யப்பட்ட அரவிந்த்கூட விளையாடிட்டிருக்கற பசங்கதான், அவனைக் கொலை செஞ்சாங்கன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க? என பேபி சரோஜா கேட்க, அந்தப் பசங்களே அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டாங்களா சார்? என்று ஜாங்கிட் பதிலளிப்பதற்கு முன்பே, மாணவர்களும் துணைக் கேள்வி ஒன்றை எழுப்பி னார்கள்.
இதற்கு கூடுதல் ஆணையர் பதில் சொல்லத் துவங்கினார். அரவிந்த் கொலை விவகாரத்தை எல்லோருமே வேற மாதிரியா பார்த்தாங்க. பொதுமக்களுக்குக்கூட எங்க மேல பெரும் கோபம் ஏற்பட்டுடுச்சு. ஆனா, நாங்க ரொம்ப சின்ஸியரா பதினஞ்சு தனிப்படைகளை உடனடியா அமைச்சோம். அது ஒவ்வொண்ணும் தனித்தனி கோணங்களில் ஃபாஸ்ட்டா விசாரணையில இறங்கியது. அதன் ஒரு பகுதியா அரவிந்த்கூட விளையாடிட்டிருந்த பசங்களை விசாரிச்சோம். அதுல ஒரு பைய னோட கையில காயம் இருந்ததை பார்த்துட்டு அது பத்தி கேட்டோம். அவன் தன்னை நாய் கடிச்சிட்டதா சொன்னான். வீட்டுல நாய் இருக்கானு கேட்டதும், இல்லை பக்கத்துல ஒரு வீட்டுல நாய் இருக்கு. அதை எங்களைப் பார்த்துக்கச் சொல்லிட்டு அந்த வீட்டுக்காரங்க ஊருக்குப் போயிருக்காங்க அப்படினு சொன்னான். சரி, நாயைக் காட்டு என்று சொல்லி அந்த வீட்டுக்குப் போனோம். அந்த நாயின் சைஸைப் பார்த்ததுமே இது நாய் கடிச்ச காயம் இல்லை, பொய் சொல்றான்னு புரிஞ்சு போச்சு. வீட்டினுள் நுழைந்து பார்த்தபோது ஒரு அறையில் ரத்தக் கறை இருந்ததைப் பார்த்தோம். அடுத்தடுத்த விசாரணையில் நடந்ததை எல்லாம் கக்கிவிட்டார்கள்.இந்த விஷயத்துல தென்சென்னை இணை ஆணையர் துரைராஜ் தலைமையில், துணை கமிஷனர்கள் பாஸ்கர், மவுரியா, உதவி கமிஷனர்கள் சேது, சைலேத்ராஜ், சுதாகர், இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், விஜயராகவன், ராஜசேகர், ஏசு, சரவணன், சந்த்ரு, காசிவிஸ்வநாதன், கோவிந்தராசன் ஆகியோர் கொண்ட படைதான் விசாரணையின் இறுதி கட்டத்துக்கு இந்த வழக்கைக் கொண்டுபோய் சேர்த்துச்சு என்றார்.

ஃபிரண்ட்ஸ்ங்களை தேர்ந்தெடுக்குறப்ப எப்படி சார் நல்லவங்க, கெட்டவங்கனு தெரிஞ்சிக்கிறது? என மாணவர்கள் கேட்க, வடசென்னை இணை ஆணையர் ரவி பதில் சொல்லத் துவங்கினார்.
உங்களோட முதல் பெற்றோர் ஆசிரியர்கள்தான். அதற் கடுத்துதான் உங்க அம்மா, அப்பா எல்லாம். வீட்டுல அம்மா, அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்ணமுடியாத விஷயங் களைக்கூட நீங்க உங்க டீச்சர்ஸ்கிட்டதான் பேசமுடியும். ஒவ்வொரு நாளும் பெரும்பாலான நேரத்தை அவங்ககூட தான் செலவு செய்யறீங்க. உங்ககூட இருக்கற ஃபிரண்ட் தப்பான ஒரு விஷயத்துக்காக உங்களோட நட்பு வச்சுக்கிறான்... இல்ல... உங்க கவனத்தை சிதைக்கறதுக்காக சில காரியங்களைப் பண்றான்ங்கறது உங்க மனசுக்கு நிச்சயமா தெரியும். இந்த நட்பைத் தொடரலாமா கூடாதாங்கிற ஒரு குழப்பம் உங்களுக்கு ஏற்படும். உடனே, நீங்க அதைப்பத்தி உங்க டீச்சர்ஸ்கிட்ட பேசலாம். அவங்களுக்கு எல்லாப் பசங்களைப் பத்தியும் ஒரு ஸ்கெட்ச் இருக்கும். அதனால இந்த மாதிரி சமயத்துல உங்க பெற்றோரைவிட டீச்சர்ஸ்தான் நல்லா கெய்ட் பண்ண முடியும். முடிஞ்சா, தப்பு பண்ற பசங்களைத் திருத்தவும் முடியும். இந்த இடத்துல எல்லா அம்மா&அப்பாவுக்கும் ஒரு மெஸேஜ் சொல்ல ஆசைப்படறேன். இப்ப இருக்குற பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தங்களோட குழந்தை எல்லாப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு வாங்கி, வல்லவனா இருக்கணும்னு மட்டும்தான் ஆசைப்படறாங்க. அதுமட்டும் போதாது. அதையும் தாண்டி பெற்றோருக்கு நிறைய பொறுப்பும் கடமையும் இருக்குது. மாணவர்கள் மற்றும் அவங்க பெற்றோர்களின் மனநிலை தொடர்பா நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளின்படி, குழந்தை கள் வல்லவர்களாக இருக்கணும் கிறதைவிட நல்லவர்களாக இருக் கணும்னு ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கணும்னுதான் சொல்லுது. அதனால பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மாரல் சொல்லித் தர்றதுல இனிமே ரொம்ப கவனமா இருக்கணும். அதுக்காகத் தான் எல்லா பள்ளிக்கூடத்துலயும் மாரல் சயின்ஸ்னு (நீதிபோதனை) ஒரு பாடம் இருந்துது. அந்த வகுப்புகள்ல குழந்தைகளின் ஒழுக்கம் மற்றும் நடத்தைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்துத் தான் முக்கியமா சொல்லித் தரு வாங்க. ஆனா, சமீபகாலமா பல பள்ளிகள்ல அந்தப் பாடமே நடத்தப்படுவதில்லை. இது வருத்தமான விஷயம்தான். இருந்தாலும், அதனையும் இனிமேல் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல, ஒவ்வொரு பெற்றோரும், இந்த மாதிரி மாரல் விஷயங்களில் நல்லதுகளை தங்கள் குழந்தைகளுக்கு மனதில் பதியும்படியாகப் போதித்து வர வேண்டும் என்றார்.
போலீஸ் முழுமையான நடவடிக்கைகளை ஸ்பீடா எடுத்திருந்தா, அரவிந்தைக் காப்பாற்றியிருக்கலாமேங்கற ஒரு எண்ணம் எல்லாத் தரப்பினர்கிட்டயும் இருக்கு? இதுல எனக்கும் உடன்பாடு இருக்கு... இதுக்கு உங்கள் பதில் என்ன?
&இந்தக் கேள்வியை ராமசந்திரன் கேட்க, உங்க கேள்வியில இன்னொரு அர்த்தமும் ஒளிஞ்சிருக்கு. அதாவது, போலீஸ் நட வடிக்கைகளில் ஏழை&பணக்காரன்ங்கற வித்தியாசம் இருக்காங்குறதுதான் அந்த அர்த்தம். ஆனா, எப்பவுமே போலீஸ் ஏழை பக்கம்தான். பணக்காரங்க சில பேர் தங்கள் செல்வாக்கால வழக்குகளைத் துரிதப் படுத்தலாம். அது வேற சப்ஜெக்ட். ஆனா, எங்க பார்வையில எல்லோரும் ஒண்ணு தான் என்று ஜாங்கிட் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சார்.. இதுக்கு நான் விளக்கமா பதில் சொல்றேன் என்று ரவி குறுக்கிட்டு ராமச்சந்திரனின் கேள்விக்கான முழு பதிலையும் கொடுக் கத் துவங்கினார். அரவிந்த் காணாமப் போயிட்டான்ங்கற செய்தி முதல்ல எனக்குத்தான் வந்தது. தொலைபேசியில பேசினது, அரவிந்தோட பெற்றோர்கள் அல்ல. அரவிந்த்தின் குடும்பத்தினருக்கு தெரிந்த ஒரு நபர்தான் பேசினார். அதனால் அரவிந்த் வீட்டின் சரியான முகவரியைக்கூட அவரால் உடனே கொடுக்க முடியவில்லை. அப்படியும் சுறுசுறுப்பா அரவிந்த் வீட்டைக் கண்டுபிடிச்சு போய்ட் டோம். எனக்குத் தகவல் வந்தபோது இரவு மணி ஒன்பது. ஆனா, அரவிந்த் அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலேயே கொலை செய்யப்பட்டிருக்கான். எப்பவுமே வீட்டை விட்டு வெளியில் இருக்கற தங்களோட பசங்க எங்க இருக்காங்க, யாரோட இருக்காங்க, பத்திரமா இருக்காங்களான்னு பார்த்துக்கற கடமை, ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கணும். குழந்தையை காணவில்லை, எங்க போயிருப்பான்னு தங்களுக்குள்ளே ஒரு சந்தேக எண்ணம் எழுந்தவுடனேயே கட்டுப்பாட்டு அறை எண் 100&க்கு போன் செஞ்சிடணும். இந்த மாதிரி அவசர உதவிகளுக் காக ஏற்படுத்தப்பட்டதுதான் தொலைபேசி எண்: 100. இதுதான் போலீஸை அணுக ரொம்ப சுலபமான வழி என்றார்.
அரவிந்தைக் கொலை செஞ்ச பசங்க செல்போன்கள் வாங்கத்தான் கொலை செஞ்சோம்னு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்கு? என்று கேட்டார் நாராயணன்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியை நல்ல காரியங்களுக் காக மட்டுமே உபயோகப்படுத்தணும்ங்ற விழிப்பு உணர்வை முதல்ல ஏற்படுத்தணும். வீட்டுல இருக்கற கம்யூட்டராகட்டும், செல்போனாகட்டும்... எல்லாமே மாண வனுக்குத் தேவைதான். இப்ப இருக்கற மாணவர்கள், நம்மைவிட மெத்தப் படிச்சவங்களா உலக விஷயங்களைக் கரைச்சுக் குடிச்சவங்களா இருக்காங்க. பையன் செல்போனையோ, கம்ப்யூட்டரையோ எப்படிப் பயன்படுத்த றான் ஏன் பயன்படுத்தறான்ங்கற ஒரு கண்காணிப்பு பெற்றோர்கள்கிட்ட இருக்கணும். விஞ்ஞானம் ஒருபக்கம் வளர்ந்துகிட்டேதான் இருக்கும். அதுக்கு சமமா குழந்தையை நல்லபடியா வளர்க்கற பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கணும். அதுக்குத்தான் திரும்பவும் சொல்றோம்... பொய் சொல்லக் கூடாது, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, திருடக் கூடாது என்பது போன்ற நல்விஷயங்களை சின்ன வயசிலயே ஒவ்வொரு குழந்தை மனதிலும் பெற்றோரும் ஆசிரியரும் பதிய வைக்க வேண்டும்... என்றார் போக்குவரத்து இணை ஆணையர் சுனில்குமார்.
இன்னிக்கு மீடியாதான் பசங்களை ரொம்ப கெடுத்து வெச்சிருக்கு. சீரியல், சினிமா ரெண்டும் பெரிய அளவுல பாதகத்தை ஏற்படுத்தியிருக்கு. ரத்தம்னா எந்த ஒரு மனுஷனுக் குமே சின்ன நடுக்கம் இருக்கும். ஆனா, இப்போ வர்ற படத்துல ரத்தம்ங்கிறது சர்வ சாதாரணமா போச்சு. சீரி யல்கள்லயும் சர்வசாதாரணமா கொலை செய்றதையெல்லாம் காட்டுறாங்க. இதுக்கெல்லாம் கடிவாளம் போட முடியாதா? &பேபி சரோஜா சீரியஸாகவே கேட்டார்.
அவருக்கு ஜாங்கிட் பதில் சொல்ல ஆரம்பித்தார். இதிலும் உங்கள மாதிரி ஆசிரியர்களுக்குதான் முக்கிய பொறுப்பு இருக்கு. இப்ப இருக்கற பசங்க மீடியா வுல வர்ற எல்லா விஷயத்தையும் ரொம்ப ஈஸியா அப்சர்வ் பண்ணிக்கறாங்க. அதுல கெட்ட விஷயங்களுக்கு மட்டும் ரொம்ப ஸ்பீடா ரியாக்ட் பண்றாங்க. நீங்க ஒருசில விஷயங் களைச் சொல்லி அவங்களை நல்வழிப்படுத்தணும். அதாவது சினிமா, டி.வி&யில வர்ற விஷயங்கள் முழுக்கமுழுக்க கற்பனைதான்... அது கற்பனைனு பசங்க மனசுல பலமா பதிய வைக்கணும். மீடியாவுல வர்ற மாதிரி யாரும் நிஜ வாழ்க்கையில இருந்துடக் கூடாதுங்கறதை எடுத்துச் சொல்லி டணும். மாரல் வேல்யூஸ்தான் பசங்க மனசை பக்குவப்படுத்தும். மீடியாக்கள் பாதிப்போட, இன்னொரு காரணத்தையும் நான் சொல் வேன். பணம் மட்டும்தான் வாழ்க்கை, ரெண்டு பேரும் வேலைக்குப் போயே தீரணுங்கற வைராக்கியத்தை பெற்றோர்கள் தயவுசெஞ்சு விடணும். பொருளாதாரத் தேவைகள் அவங்களை நெருக்கினாலும், அவங்களோட உண்மையான சொத்து வாரிசுகள்தான். அப்படியே வேலைக்குப் போய்தான் தீரணும்னு கட்டாயத்துல இருக்கறவங்க, கூட்டுக் குடும்ப கான்செப்ட்டுக்குள்ள கண்டிப்பா இருக்கணும். ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற பையனைக் கவனிக்க ஒரு ஆள் வீட்டுல இருக்கணும். ஸ்கூல் பேக்கை வீட்டுல போட்டுட்டு விளையாடப் போறவன்& எங்க போறான், யாரோட சேருகிறான்ங்கறதைப் பார்க்கணும். எந்த மேற் பார்வையும் இல்லாத பசங்கதான் பிஞ்சுலயே வெம்பிடு றாங்க. மற்ற மாநிலங்களை கம்பேர் செஞ்சா, தமிழகம் இன்னைக்கும் அமைதிப் பூங்காதான். போலீஸ் மேல முழு நம்பிக்கை வெச்சு உங்க பிரச்னைகளை எங்ககிட்ட சொல்லுங்க. அதுக்குத் தீர்வு கொடுக்க இருபத்து நாலு மணிநேரமும் நாங்க உங்களுக்காகக் காத்துக்கிட்டிருக்கோம்! என்று முடித்தார்.
வரும்முன்னர் காவாதான் வாழ்க்கை & எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
என்ற குறளையே கைவிளக்காகக் கொண்டு இளைய சமூகத்தைக் காக்கும் பொறுப்பில், சமூகத்தின் அத்தனை அங்ககளும் தீவிரம் காட்டவேண்டும் என்பதுதான் நம் ஆசை!

இளசு
08-01-2007, 07:00 PM
அன்பு அறிஞருக்கு

தினம் தினம் ஊடகங்களில் காணும் செய்திகள் -தனி மனிதர் மனப்பிறழ்வுகள் - கலங்கடிக்கின்றன.

கடலூர் அருகே ஒரே குழியில் மூன்று கொலை செய்யப்பட்ட பிணங்கள்... ஆகஸ்ட்டில் நடந்தது இப்போதுதான்..

ஹைதராபாத் அருகே முப்பது ரூபாய்க்காக இரண்டு கொலைகள் உட்பட மொத்தம் ஒன்பது கொலைகள் செய்த கும்பல் பற்றிய செய்தி -இன்று!!!!

இதை மீறி இந்தியருக்கு வாட்டிகன் அறிவியல் மையப் பதவி..
மாற்று எரிபொருள் காண 94வது அறிவியல் மாநாட்டில் தீர்மானம்


போன்ற மருந்து செய்திகளால் நெஞ்சப்புண் ஆற்றிக்கொள்கிறேன்...

மன்மதன்
10-01-2007, 04:25 AM
நேற்றைய தினசரியில் ஒரு செய்தி:
மகளுடன் ஏற்பட்ட சண்டையில் ஒரு வயது பேரனை கொன்றாள் பாட்டி. போட்டோவுடன் போட்டிருந்தார்கள். கொடுமை.

அறிஞர்
06-03-2007, 01:52 PM
புனே போதை விருந்து..

புனே, மார்ச் 6: புனேயில் சனிக்கிழமை இரவு நடந்த கேளிக்கை விருந்தில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில், போதை மருந்து பயன்படுத்தியதாக சென்னையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண், இசை நிகழ்ச்சி நடத்தும் வெளிநாட்டு டி.ஜே. உட்பட 280 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், பிறந்த நாள் போன்ற நாட்களின் போது எல்லாரும் ஒன்றாக சேர்ந்து மது விருந்தில் பங்கேற்பது என்பது இப்போது வழக்கமாகிவிட்டது. கால்சென்டர்களும், கம்ப்யூட்டர் நிறுவனங்களும் அதிகமாகிவிட்ட நிலையில், இதில் பணியாற்றுபவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இதையடுத்து, அந்நாட்டு கலாசாரத்தை நம் நாட்டிலும் கடைப்பிடிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்தப் பண்டிகையை 3 நாட்கள் மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு இந்தப் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. எனினும் கடந்த சனிக்கிழமை முதல் ஹோலி கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஹோலி பண்டிகையை யட்டி கேளிக்கை விருந்து (ரேவ் விருந்து)க்கு மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்தது. இதற்காக புனேயின் புறநகர் பகுதியில் உள்ள சிங்காட் கோட்டையின் அடிவாரத்தில் ஒரு பண்ணை வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்து பற்றியும், அதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று எஸ்.எம்.எஸ் மூலம் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விருந்தில் பங்கேற்க டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உட்பட பல நகரங்களிலிருந்து ஆண்களும் பெண்களும் வந்தனர். இவர்கள் பலர் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மற்றும் கால் சென்டர்களில் பணியாற்றுபவர்கள். விமானப் பணிப் பெண்கள், தொழிலதிபர்கள், பணக்கார வீடுகளை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். விருந்தின் போது பாடல்களும் இசைக்கபட்டது. ஜெர்மனியை சேர்ந்த ஒருவர், டி.ஜே. (இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்) ஆக செயல்பட்டார்.

விருந்தில் பங்கேற்றவர்களுக்கு போதை, தலைக்கேறியதும் தன்னிலை மறந்து ஆடத் தொடங்கினர். இந்த விருந்தில் போதை மருந்துகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சிங்காட் கோட்டை வளாகத்தில் பார்ட்டி ஒன்று நடப்பதாகவும், இதில் ஆண்களும், பெண்களும் போதையில் கும்மாளம் போடுகின்றனர் என்றும் புனே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிகாலை 2.10 மணியளவில் சாதாரண உடை அணிந்த போலீசார், சிங்காட் கோட்டைக்கு சென்று பார்ட்டியை பார்வையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், சர்வசாதாரண பல இளம் ஆண்களும், பெண்களும் போதை மருந்துகளை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

காலை நேரம் வரை பார்ட்டி தொடர்ந்துள்ளது. காலை 8.30 மணிக்கு கூடுதலாக போலீசார் வரைவழைக்கப்பட்டனர். பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ஏராளமான போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டது. இந்த விருந்தில் கலந்து கொண்ட டி.ஜே, அவருடன் வந்த சென்னையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் உட்பட 280க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விருந்துக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சானியா என்பவர் தான் போதை மருந்தை சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 7 பேருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர்.
-நன்றி தினகரன்.

ராஜா
26-03-2007, 03:55 PM
உண்மையில் எதிர்காலம் மிகப் பயங்கரமாக இருக்கும் போலிருக்கிறது.

அண்மையில் பெங்களூருவில் நான் பார்த்தக் காட்சி மனம் நோகச் செய்தது. தூக்கம் வராமல் பால்கனியில் இரவு 2 மணியளவில் வந்து நின்றபோது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஒரு காட்சி தென்பட்டது.

4 இளைஞர்களும் 2 யுவதிகளும் போதை ஊசி போட்டுக்கொள்ள ஒருவர்க்கொருவர் உதவிக் கொண்டதும் பின்னர் நடைபெற்ற ஆபாசங்களும் அப்பப்பா..

என் பையனை அங்கே விட்டுவைக்கவே மனம் பதறுகிறது.

aren
26-03-2007, 07:43 PM
இங்கே பாஸிடிவ் செய்திகளை பதிவுசெய்தால் அது மற்றவர்களை ஊக்குவிக்க உதவும் என்று நான் கருதுகிறேன்.

மற்றவர்கள் செய்யும் நல்ல விஷயங்களையோ அல்லது சிறப்பான படைப்புகளையோ இங்கே அறிவிக்கலாமே?

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
26-03-2007, 07:59 PM
ராஜா அண்ணா... யூட்யுபில் சில படங்கள் பார்த்தேன்..... மலேசிய நாட்டில் நடந்தது.. மிக கேவலான விசயங்கள் வீதிகளில்...
---
அமெரிக்காவில் 2 வயது பயல்களுக்கு... போதை மருந்து புகைக்க கற்று கொடுத்த வீடியோ... மனதை பதற வைக்கிறது.

அறிஞர்
26-06-2007, 01:52 PM
சென்ற வாரத்தில் மூன்று காரியங்கள் யோசிக்க வைத்தது.
−−−−−−−−−−−
1. 11வது படிக்கும் பையன் செய்த சிசேரியன் பிரசவம்

டாக்டர் தொழில் செய்யும் தம்பதியினர்... தன் மகன் சாதனை படைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்த காரியம். பையனின் தகப்பனார்... இதுவே வெளிநாடாக இருந்தால் சாதனையாக மாறியிருக்கும் என வாதிடுகிறார். ஆனால் அரசாங்கம் 9 பிரிவுகளின் கீழ் அவர்களை கைது செய்துள்ளது.

2. விளையாட்டு திருமணம் செய்த கிரஹலெட்சுமி

வாலிப வயதில் மனதிற்கு பிடித்தவருடன் திருமணம். பின் பெற்றோருக்கு பிடித்த பணக்கார நடிகர் பிரசாந்துடன் திருமணம். பின் சண்டை... தான் தவறு செய்திருப்பதை மறைத்து... சின்ன பிள்ளை மாதிரி சண்டை.. அவதூறு... தன் வாழ்க்கையே தானே கெடுத்துக்கொண்டார்.

3. வந்தனா−ஸ்ரீகாந்த் திருமணம்

வாலிப மோகம்... பணக்கார பெண்−நடிகர் காதல்... திருட்டு திருமணம்... பெற்றோர் சண்டை.... வெளிப்படையான திருமணம் நிறுத்தம்.... ஒருவர் மேல் ஒருவர்.. பழி சுமத்தல்...

உண்மையிலே நாடு எங்கே போகுது...

அன்புரசிகன்
26-06-2007, 02:00 PM
வீட்டுக்கு வீடு வாசல்ப்படி.
இவை தீர்ந்தால் தான் பூமி சொர்க்கம் ஆகிவிடுமே...

மனோஜ்
26-06-2007, 02:19 PM
கொடுமையான விஷயங்கள்
5தில் வலையாதது 50 பதில் வலையாது என்பதை பெற்றோர் உணரவேண்டும்

அறிஞர்
26-06-2007, 04:56 PM
வீட்டுக்கு வீடு வாசல்ப்படி.
இவை தீர்ந்தால் தான் பூமி சொர்க்கம் ஆகிவிடுமே... பூமி சொர்க்கமாக இருக்க வேண்டும் என்பதே ஆவல்..

அக்னி
26-06-2007, 05:15 PM
பூமி சொர்க்கமாக இருக்க வேண்டும் என்பதே ஆவல்..

இதனைத்
தப்பாக புரிந்த
மடையர்கள்...
சொர்க்கம் ஆக்குவதற்காகவோ,
செய்கின்றார்கள் கொலை...
சொர்க்கம் என்பது
மனிதன் இறந்தால்தான்
கிடைப்பதில்லை...
மனிதம் இறக்காவிட்டால்
கிடைப்பது...
புரிய வேண்டும்,
மனித பிறப்பெடுத்து,
உணர்வில் அரக்கர்களாய் வாழும்...
கொலைஞர்களுக்கு...

மீனாகுமார்
26-06-2007, 05:19 PM
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

என்பது வள்ளுவர் வாக்கு.

Education without Discipline is SIN என்பது மகாத்மா காந்தியடிகளின் வாக்கு. இது எங்கள் பள்ளிக்கூடத்தில் நுழைந்தவுடன் காந்தியடிகளின் புகைப்படத்தோடு காணும் வாசகம்.

கட்டுப்பாடு பள்ளிக்கூடத்திலிருந்தே வரவேண்டும். என்று கல்வி வியாபாரமாகிவிட்டதோ..... அங்கேயே இந்த முட்கள் முளை விடுகின்றன. நவீனமயம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை மீறுவதே மக்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. என்ன செய்ய ?

ஜோய்ஸ்
27-06-2007, 02:29 PM
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

என்பது வள்ளுவர் வாக்கு.

Education without Discipline is SIN என்பது மகாத்மா காந்தியடிகளின் வாக்கு. இது எங்கள் பள்ளிக்கூடத்தில் நுழைந்தவுடன் காந்தியடிகளின் புகைப்படத்தோடு காணும் வாசகம்.

கட்டுப்பாடு பள்ளிக்கூடத்திலிருந்தே வரவேண்டும். என்று கல்வி வியாபாரமாகிவிட்டதோ..... அங்கேயே இந்த முட்கள் முளை விடுகின்றன. நவீனமயம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை மீறுவதே மக்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. என்ன செய்ய ?


இதிலேதான் நாம் தவறு செய்து விட்டோம்.
படிக்கும்போது ஒழுக்கம் இல்லாவிடில் நடக்கும் அவலங்கள்தாம் தற்போதைய சீரழிவு.
பாருங்கள் இன்னும் சீரழிவு கூடிக் கொண்டே போகும்.
நாம்ளும்(வருங்கால பெற்றோர்களும்)சொறனையற்று போக வெகு விறைவில் பழகிக் கொள்வோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

aren
27-06-2007, 02:42 PM
மக்கள் எல்லோரும் ரொம்ப பேராசைப்பட ஆரம்பித்துவிட்டார்கள் என்று அர்த்தம். அந்த சிறுவனை கின்னஸ் ரிக்கார்ட் செய்ய வைக்க வேண்டுமாம். என்ன மடத்தனமான கற்பனை. இதற்கு எப்படி அந்த கற்பிணிப்பெண் சம்மதித்தாள். பணம் கொடுத்திருப்பார்களோ என்னவோ அல்லது பிரசவம் இலவசம் என்று சொல்லியிருப்பார்கள். பாவம் சம்மதித்திருப்பாள். கொடுமைடா சாமி.

சினிமா நடிகர்களின் வாழ்க்கை இப்படியே ஆகிவிட்டது. பாவம் அவர்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

lolluvathiyar
27-06-2007, 02:56 PM
மேடு இருந்தால் பள்ளம் இருந்தே தீரும்.
நன்மை என்று ஒன்றை வகுக்கும் போது தீமை வந்தே ஆக வேண்டும்
ஒரு செய*ல் சில*ருக்கு ந*ன்மை என்றால் சில*ருக்கு தீமை என்ற* ஒரு கால*சூல*லில் நாம் சிக்கி இருகிறோம்.
அனைத்தும் கொடுமை என்று கூற முடியாது, இன்று நம் வாழ்வில் பல விசயங்கள் உரிமையானது, நியாமானது.
அதை சட்டம் சமுகம் தீயது ஆக்கி விட்டது.
இப்படி நியாமானதை தீமையாக கருதினால் தீமையும் சகஜமாகும்.
தவறுகளை யாராலும் திருத்த இயலாது, குறைக்க முற்படலாம்.

இது போண்ற நிகழ்வுகள் ஒரு சுழற்சிபோல நடந்து கொண்டே இருக்கும், அதை புரிந்து கொன்டவன் ஞானி. ஆகையால் எதற்க்கும் மனதை தயார் படுத்திதான் வைத்திருக்க வேண்டும்

அறிஞர்
27-06-2007, 04:20 PM
லொள்ளுவின்.. பதில்களும்.. மனதை தயார் படுத்துவதும் அருமை...

அறிஞர்
27-06-2007, 04:21 PM
ஆவியுடன் பேசிய பிரதீபா பாட்டில்

காங்கிரஸ் கூட்டனி ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பாட்டிலுக்கு உயர் பதவி வருவதை முன்பே பாபா ஆவி சொல்லிவிட்டதாம்...

உயர் பதவிக்கு வருபவரின் இந்த பேச்சை நாம் என்ன சொல்வது.

மீனாகுமார்
27-06-2007, 04:30 PM
இது போண்ற நிகழ்வுகள் ஒரு சுழற்சிபோல நடந்து கொண்டே இருக்கும், அதை புரிந்து கொன்டவன் ஞானி. ஆகையால் எதற்க்கும் மனதை தயார் படுத்திதான் வைத்திருக்க வேண்டும்


ஆனாலும் ஆவது ஆகட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா... நாளை ஒவ்வொன்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நடக்கும் போதுதான் அதன் உண்மையான வலி தெரியும். அதை உணர்ந்து பின்னால் வரும் துயரங்களை முன்னமே அறிந்து அவற்றைத் தடுப்பதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமன்றோ ???

alaguraj
28-06-2007, 10:44 AM
மணியடிச்சா (சுவையான) சாப்படு

பெங்களூர்-ஒசூர் நெடுஞ்சாலையில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறுகுற்றங்கள், விசாரணை கைதிகள் உள்ள சிறையில், கடந்த மே மாதம் முதல் பெங்களுரு ஹரே கிருஷ்ணா இயக்கம் மூன்று வேளை சுவையான சைவ உணவு கொடுத்து வருவதால், கைதிகள் சிறையை விட்டு வெளியேற விருப்பமில்லாமல், ஜாமீன் பெறாமல் சிறைக்குள்ளேயே இருக்க விரும்புகின்றனர். 20 வது தடவை சிறைக்குவந்திருக்கும் ராஜா ரெட்டி," அருசுவை உணவு இங்கே கிடைக்கும் போது வெளியே போய் சிறு குற்றங்கள் செய்து எதற்கு கஷ்டப்படவேண்டும்" என்று கேட்டு, சிறையைவிட்டு வெளியற விருப்பமில்லை என்கிறார். மேலும் பலர் உணவுக்காக சிறைக்கு கைதியாக வரக்கூடும் என சிறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.


மேற்படி செய்திகளுக்கு:
http://www.allheadlinenews.com/articles/7007735487

சூரியன்
28-06-2007, 02:46 PM
ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் மழையின் விளையாட்டால்,பல பேர் பலியாகியுள்ளனர்,மழையின் போது டாஸ்மார்க்கில் மது அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது அருகில் இருந்த தொழிச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது..

அறிஞர்
07-12-2009, 08:19 PM
மாநில மகளிர் அணி செயலாளர் நடிகை புவனேஸ்வரிhttp://www.vikatan.com/vc/vcstyles/Shared_files/vdc_images/white_spacer.jpg

மாநில மகளிர் அணி செயலாளர் நடிகை புவனேஸ்வரி

சென்னை, டிச.7-:2009: மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், நடிகை புவனேஸ்வரி இணைந்தார். மாநில மகளிர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது

நடிகை டி.புவனேஸ்வரியின் வக்கீல்கள் டி.ரமேஷ், காமேஸ்வரராவ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட மற்றும் டி.வி. நடிகை டி.புவனேஸ்வரி, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் இணைந்தார். சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் சேதுராமனுக்கு அப்போது மாலை அணிவித்தார். நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குணமதி
08-12-2009, 12:57 AM
அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் - என்ற பெர்னாட்சாவின் கருத்து மிகச் சரியாகப் பொருந்துகிறது.

அறிஞர்
08-12-2009, 02:10 PM
அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் - என்ற பெர்னாட்சாவின் கருத்து மிகச் சரியாகப் பொருந்துகிறது.
மிகச்சரியாகவே பொருந்துகிறது...

முதலில் சின்ன கட்சி...
பின் மீடியம் லெவல்...
அதன் பின் பெரிய கட்சி... அமைச்சர்... :eek::eek::eek::eek::eek:

மன்மதன்
08-12-2009, 03:20 PM
டிசம்பர் 2, வேதாரண்யத்தில் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதால், பள்ளி வேன் ஒன்று குளத்தில் மூழ்கி பல மாணவர்கள் இறந்து விட்டனர். நேற்று விஜய்டிவி - நடந்தது என்ன ? நிகழ்ச்சியில் காட்டினார்கள்.

அறிஞர்
08-12-2009, 09:31 PM
வாகனம் ஓட்டும்பொழுது... செல்போன் பேசுவது பலருக்கு வழக்கமாக உள்ளது.

இதினால் கவனம் சிதறுகிறது என பல ஆய்வுகள் சொல்கிறது...

அரசு கட்டுபாடுகளை கொண்டுவந்தாலும், மக்கள் கடைபிடிப்பதில்லை

aren
08-12-2009, 11:02 PM
வாகனம் ஓட்டும்பொழுது செல்போன் உபயோகிக்கலாம் ஆனால் அதனை கையில் வைத்துக்கொண்டு பேசக்கூடாது. கை எப்பொழுதும் ஸ்டியரிங்கிலேயே இருக்கும்படிசெய்து வண்டியை ஓட்டவேண்டும். இல்லையென்றால் இந்த மாதிரியன விபத்துக்கள் அடிக்கடி நேரிடும்.

விக்ரம்
09-12-2009, 09:38 AM
வாகனம் ஓட்டும்பொழுது செல்போன் உபயோகிக்கலாம் ஆனால் அதனை கையில் வைத்துக்கொண்டு பேசக்கூடாது. கை எப்பொழுதும் ஸ்டியரிங்கிலேயே இருக்கும்படிசெய்து வண்டியை ஓட்டவேண்டும். இல்லையென்றால் இந்த மாதிரியன விபத்துக்கள் அடிக்கடி நேரிடும்.
ஸ்ரியரிங்கில் கை இருந்தாலும் (ஸ்பீக்கர் போனில் பேசினாலும்) கவனம் சிதறும்.

கண்டிப்பாக ஓட்டுனர் மொபைல் போனில் பேசக் கூடாது.