PDA

View Full Version : காதலித்து "தொலைத்துவிட்டேன்" !

franklinraja
31-10-2006, 01:44 PM
பள்ளியில் படிக்கும் போது பூக்கவில்லை...

கல்லூரியைக் கடக்கும் போது காய்க்கவில்லை...

காலம் கடந்து அது கனிந்தது...

காதலை சொல்லிக்கொல்லவே இல்லை -
சொல்லிக்கொல்லாமல் வந்தது காதல் !

இருவருக்கும் வயது இருபத்தைந்து...
இருவரும் சொல்லவில்லை வீட்டிற்கு பயந்து !

தன் வீட்டில் காதலன்தான் கேட்க்கவேண்டும் என்று நினைத்தாள் அவள்...
காதலியை சந்தோஷமாய்ப் பார்க்க முதலில் நல்ல வேலை வேண்டும் என நினைத்தான் அவன் !

வீட்டில் மாப்பிள்ளைப் பார்த்துவிட்டார்கள்...
இவர்களோ செய்வதறியாது திகைத்துவிட்டார்கள் !

நல்ல வேலை கிடைத்து கேட்க்க சென்றான் இவன்...
சொன்னார்கள் - காலம் கடந்து சொல்லி என்ன பயன் ?

அவமானப்படுத்த விரும்பவில்லைப் பெற்றோர்களை...
துணிந்துவிட்டார்கள் தியாகம்செய்ய தங்கள் காதலை !

இது காதலுக்கு அவர்கள் செய்த மரியாதையா..?
இல்லை காதலுக்கு செய்த அவமரியாதையா..?

காதலித்து தொலைத்துவிட்டேன்...
என் காதலியையும் தொலைத்துவிட்டேன் !

அறிஞர்
31-10-2006, 02:13 PM
தொலைத்தது உங்கள் நிரந்தர இன்பத்தை....

காதலி கிடைக்காமல் திரிவது கொடுமை.
காதலி கிடைத்தும் தொலைப்பது அதிலும் கொடுமை....

meera
31-10-2006, 02:22 PM
நல்ல கவிதை ராஜா.

காலம் கடந்த காரியம் எதுவும் கைகூடுவதில்லை என்பது இது தானா????? :confused: :confused: :confused:

ஓவியா
31-10-2006, 07:35 PM
பள்ளியில் படிக்கும் போது பூக்கவில்லை...
கல்லூரியைக் கடக்கும் போது காய்க்கவில்லை...
காலம் கடந்து அது கனிந்தது...

காதலை சொல்லிக்கொல்லவே இல்லை -
சொல்லிக்கொல்லாமல் வந்தது காதல் !

இருவருக்கும் வயது இருபத்தைந்து...
இருவரும் சொல்லவில்லை வீட்டிற்கு பயந்து !

தன் வீட்டில் காதலன்தான் கேட்க்கவேண்டும் என்று நினைத்தாள் அவள்...
காதலியை சந்தோஷமாய்ப் பார்க்க முதலில் நல்ல வேலை வேண்டும் என நினைத்தான் அவன் !

வீட்டில் மாப்பிள்ளைப் பார்த்துவிட்டார்கள்...
இவர்களோ செய்வதறியாது திகைத்துவிட்டார்கள் !

நல்ல வேலை கிடைத்து கேட்க்க சென்றான் இவன்...
சொன்னார்கள் - காலம் கடந்து சொல்லி என்ன பயன் ?

அவமானப்படுத்த விரும்பவில்லைப் பெற்றோர்களை...
துணிந்துவிட்டார்கள் தியாகம்செய்ய தங்கள் காதலை !

இது காதலுக்கு அவர்கள் செய்த மரியாதையா..?
இல்லை காதலுக்கு செய்த அவமரியாதையா..?

காதலித்து தொலைத்துவிட்டேன்...
என் காதலியையும் தொலைத்துவிட்டேன் !

கவிதை 'தூள்'

ஒரு சிறுகதையை...
சிக்கனமான தமிழ்ப்படத்தை....
பக்கம் பக்கமாக எழுதும் காவியத்தை.....
ஒருமடல் கவிதையாய் தந்த பெருமை உம்மை சேரட்டும்....

தோழ்வியடைந்த காதலை வாழ்த்துவது என் பழக்கமல்ல நண்பா
மாறாக ஆழ்ந்த அனுதாபங்கள்.....

franklinraja
01-11-2006, 08:18 AM
கவிதை 'தூள்'

ஒரு சிறுகதையை...
சிக்கனமான தமிழ்ப்படத்தை....
பக்கம் பக்கமாக எழுதும் காவியத்தை.....
ஒருமடல் கவிதையாய் தந்த பெருமை உம்மை சேரட்டும்....

தோழ்வியடைந்த காதலை வாழ்த்துவது என் பழக்கமல்ல நண்பா
மாறாக ஆழ்ந்த அனுதாபங்கள்.....

நன்றி ஓவியா...

உங்கள் அனுதாபங்களை உரியவரிடம் சேர்த்துவிடுகிறேன்... ;)