PDA

View Full Version : மழை..........



meera
31-10-2006, 07:08 AM
நீரில் நீந்த முடியுமா
நீர்குமிழி-இதோ
நீந்திக்கொண்டிருக்கிறேன்..

நீ
தொட்டவுடன்
உடைந்துபோக ஆயத்தமாய்..........

கறுத்த என்னை
காதலுடன் - நீ
தொட்டதால்
ஆனந்த கண்ணீர்....

Mano.G.
31-10-2006, 08:05 AM
நீ(ர்) இல்லாமல் வாடிய
நாங்கள் நீ(ர்) வந்தும்
வாடுகிரோம்
தேவைக்கும் அதிகமாக
வந்து சேர்ந்ததால்

நீ(ர்) தேவைக்கு ஏற்ப
கிடைத்தால்
எங்கள் வாழ்வும் செழிக்குமே.

பென்ஸ்
31-10-2006, 09:19 AM
மீரா....
கவிதையை விளக்கலாமா...

meera
31-10-2006, 09:25 AM
மீரா....
கவிதையை விளக்கலாமா...

நீர் என்பது வானம்.நீர்குமிழி என்பது மேகம்.நீ என்பது காற்று.காற்று தொட்டதால் மேகத்துக்கு சந்தோசம் அதனால் வந்தது ஆனந்த கண்ணீர்.

காற்று எப்படி மேகத்தை தொட்டதுனு கேக்கபடாது என்ன??? :D :D :D

meera
31-10-2006, 10:02 AM
நீ(ர்) இல்லாமல் வாடிய
நாங்கள் நீ(ர்) வந்தும்
வாடுகிரோம்
தேவைக்கும் அதிகமாக
வந்து சேர்ந்ததால்

நீ(ர்) தேவைக்கு ஏற்ப
கிடைத்தால்
எங்கள் வாழ்வும் செழிக்குமே.

நன்றி அண்ணா.

தேவைக்கு மட்டுமே
தரத்தான் எண்ணம்
வருடம் முழுவது
தேக்கி வைப்பதால்
பாரம் தாங்காமல்
கொட்டிவிடுகிறேன் உங்களிடம்.

franklinraja
31-10-2006, 11:19 AM
நீரில் நீந்த முடியுமா
நீர்குமிழி-இதோ
நீந்திக்கொண்டிருக்கிறேன்..

நீ
தொட்டவுடன்
உடைந்துபோக ஆயத்தமாய்..........

கறுத்த என்னை
காதலுடன் - நீ
தொட்டதால்
ஆனந்த கண்ணீர்....

மீரா...

இளம் புயலுடன்,
"கவிக்குயில்"
என்றும் உங்களை
அழைக்கலாம் போல...

கவிதைச் செண்டை
இன்னும் மலர்கள் அலங்கரிக்கட்டும்...

வாழ்த்துக்கள்...

meera
31-10-2006, 11:29 AM
மீரா...

இளம் புயலுடன்,
"கவிக்குயில்"
என்றும் உங்களை
அழைக்கலாம் போல...

கவிதைச் செண்டை
இன்னும் மலர்கள் அலங்கரிக்கட்டும்...

வாழ்த்துக்கள்...


நன்றி ராஜா.

அது சரி, எங்கே உங்களது கவிதை?

தொடருங்கள் உங்களது கவிதை கணைகளை.படிக்க ஆவலாய் உள்ளோம்.:) :)

மதி
31-10-2006, 12:35 PM
மீரா..
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்..!

franklinraja
31-10-2006, 01:17 PM
நன்றி ராஜா.

அது சரி, எங்கே உங்களது கவிதை?

தொடருங்கள் உங்களது கவிதை கணைகளை.படிக்க ஆவலாய் உள்ளோம்.:) :)

மீரா..

நன்றி... விரைவில் எழுதுகிறேன்...

meera
31-10-2006, 01:33 PM
மீரா..
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்..!

மிக்க நன்றி ராஜேஷ்.

அறிஞர்
31-10-2006, 01:40 PM
நீர் என்பது வானம்.நீர்குமிழி என்பது மேகம்.நீ என்பது காற்று.காற்று தொட்டதால் மேகத்துக்கு சந்தோசம் அதனால் வந்தது ஆனந்த கண்ணீர்.

காற்று எப்படி மேகத்தை தொட்டதுனு கேக்கபடாது என்ன??? :D :D :D நல்ல சிந்தனை.. விளக்கம்.... வாழ்த்துக்கள் மீரா.. இன்னும் தொடருங்கள்... :) :) :)

meera
31-10-2006, 02:26 PM
நல்ல சிந்தனை.. விளக்கம்.... வாழ்த்துக்கள் மீரா.. இன்னும் தொடருங்கள்... :) :) :)


அறிஞர் சார் நன்றி.


உங்கள் அனைவரின் ஊக்கம் இருக்கும் வரை தொடர்வதில் தடை ஏதும் இல்லை.:D :D

ஓவியா
31-10-2006, 05:13 PM
நீரில் நீந்த முடியுமா
நீர்குமிழி-இதோ....................நீந்திக்கொண்டிருக்கிறேன்..

நீ.................தொட்டவுடன்
உடைந்துபோக ஆயத்தமாய்..........

கறுத்த என்னை
காதலுடன் - நீ
தொட்டதால்
ஆனந்த கண்ணீர்....




நீர் என்பது வானம்.நீர்குமிழி என்பது மேகம்.நீ என்பது காற்று.காற்று தொட்டதால் மேகத்துக்கு சந்தோசம் அதனால் வந்தது ஆனந்த கண்ணீர்.




ஆஹ்

மீரா கவிதை ஜோர்ர்ர்ர்

அழகான கவிதை....
அதைவிட உங்க விமர்சனம் இன்னும் ஜோர்ர்ர்ர்ர்ர்....

அட, இயர்க்கையையே காதலில் விழ வைத்துவிட்டீரே........:)

leomohan
31-10-2006, 06:59 PM
நீரில் நீந்த முடியுமா
நீர்குமிழி-இதோ
நீந்திக்கொண்டிருக்கிறேன்..

நீ
தொட்டவுடன்
உடைந்துபோக ஆயத்தமாய்..........

கறுத்த என்னை
காதலுடன் - நீ
தொட்டதால்
ஆனந்த கண்ணீர்....

அருமை. இன்னும் எழுதுங்கள்.

meera
01-11-2006, 03:28 AM
ஆஹ்

மீரா கவிதை ஜோர்ர்ர்ர்

அழகான கவிதை....
அதைவிட உங்க விமர்சனம் இன்னும் ஜோர்ர்ர்ர்ர்ர்....

அட, இயர்க்கையையே காதலில் விழ வைத்துவிட்டீரே........:)

நன்றி தோழி,

இந்த ஊக்கம் தான் எழுத தூண்டுகிறது.:D :D :D

meera
01-11-2006, 03:29 AM
அருமை. இன்னும் எழுதுங்கள்.

நன்றி மோகன்.

நாகரா
19-07-2008, 12:43 PM
நீர் என்பது வானம்.நீர்குமிழி என்பது மேகம்.நீ என்பது காற்று.காற்று தொட்டதால் மேகத்துக்கு சந்தோசம் அதனால் வந்தது ஆனந்த கண்ணீர்.

காற்று எப்படி மேகத்தை தொட்டதுனு கேக்கபடாது என்ன??? :D :D :D

நீர் என்பது மன வானம், நீர்க்குமிழி என்பது எண்ண மேகம். நீ என்பது உணர்வுக் காற்று, ஆனந்தக் கண்ணீராம் மழை கவிதை, இது எப்படி மீரா!?

காற்றுக் காதலன் மேகக் காதலியை ஏன் தொடக்கூடாது!? எண்ணம் உடைந்து எழுத்துக்கள் எனும் கவி மழைத் துளிகளாய் விழ, உணர்வின் காம உரசல், எண்ணக் காதலிக்கு வேண்டுமல்லவா!?

"கறுத்த என்னை" அர்த்தமுள்ள சொல்லாடல், கவிதைக் கரு ஏந்திக் கருத்த எண்ண மேகத்தைக் குறிக்கிறது.

அழகான, அர்த்தச் செறிவுள்ள, ஆழமான, கற்பனை நயமுள்ள குறுங்கவிதை, வாழ்த்துக்கள் மீரா.

இளசு
19-07-2008, 01:26 PM
உவமைக்கவிஞர் மீரா போல்
இங்கே நம் மன்றக்கவி மீரா -
உயர்தள உவமைகளில்
கவிளையாடிவிட்டாயம்மா!

அண்ணனின் வாழ்த்துகள்!