PDA

View Full Version : மனக்கூட்டில்..........



meera
27-10-2006, 07:50 AM
பட்டமரத்தில் பசுமையிராது
தெரிந்தும்-அங்கே
சுற்றிக்கொண்டிருக்கிறது
அந்த பறவை

பழைய நினைவுகளை
மனக்கூட்டில்
பத்திரமாய் பாதுகாப்பதினால்......

பென்ஸ்
27-10-2006, 11:09 AM
பசுமையான மரத்தில்
ஒரு பச்சை கிளி
காத்திருக்கு..
பழுக்காத காய்
வெடித்தது பஞ்சாய்...!!!!

அடுத்த காய் கனிய
காத்திருக்கு நம்பிக்கையோடு...!!!

சொல்லவாறது புரியுதா மீரா???

தாமரை
27-10-2006, 12:06 PM
பசுமையான மரத்தில்
ஒரு பச்சை கிளி
காத்திருக்கு..
பழுக்காத காய்
வெடித்தது பஞ்சாய்...!!!!

அடுத்த காய் கனிய
காத்திருக்கு நம்பிக்கையோடு...!!!

சொல்லவாறது புரியுதா மீரா???
காய்த்த மரம்
கல்லடி படும்
காய்ந்த மரம் இப்படி
சொல்லடி படும்
கலங்காதே கிளியே
பச்சைப் பாம்புக்கு
நீ பயப்படுவது
தலைகீழாய் தொங்கும்
வௌவாலுக்குத் தெரியுமா?

பென்ஸ்
29-10-2006, 05:15 AM
பச்சை பாம்பா.. அது வவ்வாலின் இரையல்லவா???

ஓவியா
29-10-2006, 02:29 PM
பட்டமரத்தில் பசுமையிராது
தெரிந்தும்-அங்கே
சுற்றிக்கொண்டிருக்கிறது
அந்த பறவை

பழைய நினைவுகளை
மனக்கூட்டில் பத்திரமாய் பாதுகாப்பதினால்......



மீரா,
அருமையாய் உள்ளது தங்களின் கவிதை

ரொம்ப ஆழமான அர்தத்தை சும்மா ஒர்-இரு வரியில்....

சபாஷ்.....

ஓவியா
29-10-2006, 02:34 PM
பசுமையான மரத்தில்
ஒரு பச்சை கிளி
காத்திருக்கு..
பழுக்காத காய்
வெடித்தது பஞ்சாய்...!!!!

அடுத்த காய் கனிய
காத்திருக்கு நம்பிக்கையோடு...!!!

சொல்லவாறது புரியுதா மீரா???



அடுத்த காயும் பஞ்சாய் போக...
கிளின் நிலைதான் என்ன பெஞ்சு?

இனியவன்
29-10-2006, 02:41 PM
நினைவுக் கூட்டை அவ்வளவு
சீக்கிரத்தில் அழித்து விட முடியுமா?
கவிதைக்கு நன்றி.

meera
30-10-2006, 04:51 AM
பசுமையான மரத்தில்
ஒரு பச்சை கிளி
காத்திருக்கு..
பழுக்காத காய்
வெடித்தது பஞ்சாய்...!!!!

அடுத்த காய் கனிய
காத்திருக்கு நம்பிக்கையோடு...!!!

சொல்லவாறது புரியுதா மீரா???

புரியுது பென்ஸ்,நல்லாவே புரியுது.
கவலை வேண்டாம் கிளி கதை எதுவும் இங்க இல்ல:D :D :D :D

meera
30-10-2006, 04:54 AM
மீரா,
அருமையாய் உள்ளது தங்களின் கவிதை

ரொம்ப ஆழமான அர்தத்தை சும்மா ஒர்-இரு வரியில்....

சபாஷ்.....


நன்றி ஓவியா.

நான் தேடும் நபர்களில் நீங்கள் முக்கியமானவர்..

meera
30-10-2006, 04:57 AM
நினைவுக் கூட்டை அவ்வளவு
சீக்கிரத்தில் அழித்து விட முடியுமா?
கவிதைக்கு நன்றி.

நன்றி இனியவன்,

நலமாய் இருக்குறீர்களா?? தொடர்ந்து உங்களது விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

franklinraja
30-10-2006, 01:41 PM
பட்டமரத்தில் பசுமையிராது
தெரிந்தும்-அங்கே
சுற்றிக்கொண்டிருக்கிறது
அந்த பறவை

பழைய நினைவுகளை
மனக்கூட்டில்
பத்திரமாய் பாதுகாப்பதினால்......

அந்தப் பறவை
பசுமைக்காக அந்த மரத்தை சுற்றவில்லை...

அதற்கு ஒர் அடைக்கலத்தை எதிர்பார்த்தே...

நினைவுகளில் -
பழையது, புதியது
என்றில்லை...

நம் நினைவில் வாழும்
அனைத்துமே புதியவைதான் -
நாம் இறக்கும் வரை...

ஓவியா
30-10-2006, 06:14 PM
நன்றி ஓவியா.

நான் தேடும் நபர்களில் நீங்கள் முக்கியமானவர்..



அப்படியா ரொம்ப நன்றி............:D :D

ஓவியா
30-10-2006, 06:20 PM
அந்தப் பறவை
பசுமைக்காக அந்த மரத்தை சுற்றவில்லை...

அதற்கு ஒர் அடைக்கலத்தை எதிர்பார்த்தே...

நினைவுகளில் -
பழையது, புதியது
என்றில்லை...

நம் நினைவில் வாழும்
அனைத்துமே புதியவைதான் -
நாம் இறக்கும் வரை...


உண்மை

மதி
31-10-2006, 12:55 PM
பசுமையான மரத்தில்
ஒரு பச்சை கிளி
காத்திருக்கு..
பழுக்காத காய்
வெடித்தது பஞ்சாய்...!!!!

அடுத்த காய் கனிய
காத்திருக்கு நம்பிக்கையோடு...!!!

சொல்லவாறது புரியுதா மீரா???
ஆக வேற மரம் தேடாமல் ஒரே மரத்தை சுத்தி வருதுன்னு சொல்றீங்களோ...! இல்ல அந்த ஏரியாவில இருந்ததே ஒரே மரம் தானா..?

பென்ஸ்
31-10-2006, 01:05 PM
ஆக வேற மரம் தேடாமல் ஒரே மரத்தை சுத்தி வருதுன்னு சொல்றீங்களோ...! இல்ல அந்த ஏரியாவில இருந்ததே ஒரே மரம் தானா..?

மதி...
நான் எப்பவும் காடு மலைன்னு டிரக்கிங் போறவன்பா.... :rolleyes: :rolleyes:
மரத்தை பாத்திகிட்டு, ரசிச்சிகிட்டு போயிட்டேயிருக்கனும்....:p :p
அதைவிட்டுபுட்டு அதிலே டென்ட் அடிச்சிக்கிட்டோன்ன்னு வையி...
ஆதிவாசியாயிடுவோம்...:D :D :D :D

ஓவியா
31-10-2006, 04:14 PM
ஆக வேற மரம் தேடாமல் ஒரே மரத்தை சுத்தி வருதுன்னு சொல்றீங்களோ...! இல்ல அந்த ஏரியாவில இருந்ததே ஒரே மரம் தானா..?



மதி
வந்ததுக்கு ஒரு கடியா.....:D


பாவம்பா அந்த பொண்ணு
கவிதைக்கு ஒரு விமர்சனம் போட்டு வைக்கலாமே...;)

மதி
02-11-2006, 02:41 AM
மதி
வந்ததுக்கு ஒரு கடியா.....:D


பாவம்பா அந்த பொண்ணு
கவிதைக்கு ஒரு விமர்சனம் போட்டு வைக்கலாமே...;)

அக்கா..இது கடியெல்லாம் ஒன்னுமில்ல..
ஆனா..சில சமயங்களில் யதார்த்தத்துக்கும் எண்ணங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு. இது நல்லதொரு கவிதை. மனதினில் பசுமையான எண்ணங்கள் என்றென்றும் உண்டு. அவற்றை அசை போடுவதிலும் அதிக சுகமுண்டு.
மீரா..இந்த கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு அர்த்தங்கள் தருது...அதற்காக உங்களுக்கு பாராட்டுக்கள்...! தொடருங்கள் உங்கள் கவிதைகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

meera
02-11-2006, 04:21 AM
அக்கா..இது கடியெல்லாம் ஒன்னுமில்ல..
ஆனா..சில சமயங்களில் யதார்த்தத்துக்கும் எண்ணங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு. இது நல்லதொரு கவிதை. மனதினில் பசுமையான எண்ணங்கள் என்றென்றும் உண்டு. அவற்றை அசை போடுவதிலும் அதிக சுகமுண்டு.
மீரா..இந்த கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு அர்த்தங்கள் தருது...அதற்காக உங்களுக்கு பாராட்டுக்கள்...! தொடருங்கள் உங்கள் கவிதைகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

நன்றி மதீஈஈஈஈஈஈஈஇ

(சந்தோஷத்துல இப்படி ஆயிருச்சு,நிச்சயம் 'அது' இல்ல நம்புங்கப்பா):D :D :D :D

மதி
02-11-2006, 06:07 AM
நம்புறது இருக்கட்டும்....
இது மனிதனின் அனைத்து பருவங்களுக்கும் ஒத்து போகுதுன்னேன்...
(என் பேரில தீ இருக்கா...ஈ இருக்கான்னே தெரியல..)ஹ்ம்ம்