PDA

View Full Version : 01. கேடிசி பிஆர்சி தூத்துக்குடிgragavan
26-10-2006, 06:33 PM
எத்தனையோ தீபாவளிகளுக்குப் பெறகு தூத்துக்குடியில மறுபடியும் தீபாவளி கொண்டாடினேன். என்னைய வளத்த அத்தையோடயும் மாமாவோடயும். பொறந்த ஊருக்குப் போறதுல அப்படியொரு மகிழ்ச்சி. ஆனா பாருங்க....நான் தூத்துக்குடிக்குப் இந்திய ரயில்வே துறை ரொம்பவும் விருப்பமில்லை போல இருக்கு. நின்னுக்கிட்டு போற பெட்டியில இருந்து தூங்கிக்கிட்டுப் போற குளுகுளு பெட்டி வரைக்கும் டிக்கெட் தர முடியாதுன்னு மறுத்துட்டாங்க. என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம். என்ன ஆத்திரம்னு கேக்குறீங்களா? அத அங்க கேக்க வேண்டியதுதான...ஆனா அவரு அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னைய அவருக்குத் தெரியவே தெரியாதுன்னு சாதிப்பாரு. சரி. உலகத்துல பலர் அப்படித்தான். விடுங்க.

அடுத்து என்ன செய்ய? சொகுசுப் பேருந்துகள். கே.பி.என், ஷர்மா அது இதுன்னு ரெண்டு மூனு இருக்கே. ஆனா பாருங்க....அந்த வண்டியெல்லாம் மதுர வரைக்குந்தான். சரி. மதுரைக்குப் போயி தூத்துக்குடி வண்டி பிடிச்சாப் போச்சுன்னு நெனச்சேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லைன்னு கவியரசர் இவங்கள நெனச்சுத்தான் பாடியிருப்பாரு போல. டிக்கெட் இல்லைன்னு வெரட்டி விட்டுட்டாங்க. உண்மைதாங்க. இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. சரிதான் போங்கன்னு கெளம்பி வந்துட்டேன். அந்த ஆத்திரத்தைத் தனிக்க பக்கத்துல இருந்த அடையாறு ஆனந்த பவன்ல காக்கிலோ பாவக்கா சிப்சு வாங்கிக்கிட்டேன். அதத்தான நொறுக்க முடியும்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படுறதுதான் அரசாங்கமாமே! அப்படிப்பட்ட கர்நாடக தமிழக அரசுப் பேருந்துகளைத்தான் அடுத்து நெனச்சேன். ஆனா அவங்களும் வண்டி பொறப்படுறதுக்குச் சரியா பத்தே பத்து நாளைக்கு முன்னாடிதான் டிக்கெட் தருவாங்களாம். அதுவும் பண்டிகைக்காலங்குறதால விடியக்காலைல அஞ்சரைக்கே வந்தாத்தான் ஏதாவது தேறும்னு சொல்லீட்டாங்க. என்ன செய்ய? நம்ம நண்பர் பிரதீப்பு மதுரக்காரரு. அவருக்கு ஒரு அலைபேசி (நன்றி குமரன்) போட்டுக் கேட்டேன். அவரும் அந்த பொழுதுல மதுரைக்குப் போறவராம். ஆனா ஐதராபாத்துல இருந்து. அவரோட தம்பி பெங்களூர்ல இருந்து மதுரைக்குப் போகனும். ரெண்டு பேரும் ஒன்னா டிக்கெட் எடுத்து போயிட்டு வந்துட்டா வசதியாயிருக்குமுன்னு முடிவு செஞ்சி டிக்கெட் எடுக்குற லேசான வேலையை மட்டும் அவரோட தம்பி ராஜ் தலையில கட்டினோம்.

டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன். அஞ்சர மணிக்கு வரிசையில நின்னவன் விடுவிடுன்னு முன்னேறி பத்தர மணிக்கெல்லாம் ரெண்டு டிக்கட் எடுத்துட்டான். கடைசி வரிசைதான். அதெல்லாம் பாத்தா முடியுமா? திருநவேலி போற வண்டியில திருநவேலிக்கு டிக்கெட் எடுத்து மதுரையில எறங்கத் திட்டம். அதே மாதிரி பிரதீப்போட மாமா மதுரையில எங்க ரெண்டு பேருக்கும் திரும்பி வர டிக்கெட் எடுத்துட்டாரு. அப்பாடி.......ஒரு வழியா ஏற்பாடுகள் முடிஞ்சது.
திருநவேலி வண்டியோ மதியம் மூனரை மணிக்கு. மதுரைக்கு ரெண்டு ரெண்டரைக்குப் போகும். ஆபீசுக்கு பாதி நாள் மட்டம் போட்டுட்டு வியாழக் கெழமை...அதாவது அக்டோபர் 19ம் தேதி பொறப்பட்டோம். கடைசி வரிசை. சீட்டு சரியில்லை. ஒரு பக்கமா நெளிஞ்சிருக்கு. வண்டி ஓடாம நிக்கும் போதே சீட்டு ஆடாம நிக்க மாட்டேங்குது. சரி. ஊருக்குப் போகனும். அதுக்கு இதெல்லாம் நடக்கனும். நடக்கட்டும்.

இன்னும் நாலு பேரு டிக்கெட் எடுத்திருக்காங்க. ஆனா அதுல மூனு பேரு வந்தாச்சு. நாலாவது ஆளு வந்துக்கிட்டே இருந்தாரு. வண்டி கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்தது. "டிரைவருங்குற பேர்ல நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன். அதுனால என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு" சொல்லீட்டாரு நடத்துனரு. சரீன்னு அந்த சீட்ட இன்னொருத்தருக்குக் குடுத்து காசி வாங்கீட்டாங்க. விடுவாரா நடத்துனரு. பேச வேண்டிய பேரத்தப் பேசி அவரு கணக்குக்கு ஒரு நூறு ரூவாய வாங்கிக்கிட்டாரு. வாங்கீட்டு "ஒரு கட்டுக்கு ஆச்சு"ன்னாரு. அதுல கருத்து வேற சொன்னாரு. "சார். நாங்க குடிக்கிறது பசிக்கோ போதைக்கோ இல்ல. வாசனைக்குத்தான். அந்த வாடைக்குத்தான் குடிக்கிறது. பசிக்கோ போதைக்கோ குடிக்கிறோம்னு தப்பா நெனக்கக் கூடாது"ன்னு தன்னிலை வெளக்கம் குடுத்து அவரு நல்லவருன்னு சொல்லீட்டாரு. சரீன்னு நம்ம ஒத்துக்கலைன்னா இன்னும் பெரிய விளக்கமெல்லாம் குடுப்பாருன்னு அவரு சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டோம்.

பெங்களூர்ல எங்க பாத்தாலும் கூட்டம். மூனரைக்குப் பொறப்பட்ட வண்டி சரியா ரெண்டே மணி நேரங் கழிச்சு அஞ்சரைக்கு பெங்களூர விட்டு வெளிய வந்திருச்சு. அப்புறம் சர்ருன்னு ஓடுச்சு...ரொம்பப் பேரு நின்னுக்கிட்டும் கீழ உக்காந்து கிட்டும் வந்தாங்க. கொஞ்சப் பொம்பளைங்க டிரைவருக்குப் பின்னாடி இருக்குற கேபின் சீட்டுல உக்காந்து கிட்டும் வந்தாங்க. எப்படியோவது பண்டிகைக்கு ஊருக்குப் போனாச் சரிதான்னு. அவங்கவங்க பகுத்து அவங்கவங்களுக்கு.
வழியில பேர் தெரியாத ஊர்ல பேர் தெரியாத ஓட்டல்ல சாப்பிட நிப்பாட்டினாங்க. பரோட்டா ரொட்டி தவிர ஒன்னும் சரியாயில்ல அங்க. ஒரு பரோட்டாவும் முட்டைக் குருமாவும் வாங்கிச் சாப்பிட்டோம். சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. எதுவாயிருந்தா என்ன...தின்னாச்சு. அவ்வளவுதான். எனக்கு அப்பப் பாத்து டீ குடிக்க அடங்காத ஆசை. அத்தன சின்ன பிளாஸ்டிக் கப்ப நான் அப்பத்தான் பாக்குறேன். அதுல நெறைய நெறைய நொறையா வர்ர மாதிரி கொதிக்கிற டீய ஊத்திக் குடுத்தாரு டீக்கடைக்காரரு. என்னவோன்னு குடிச்சு வெச்சேன். அவ்வளவு நல்லாயிருக்கல.

இருட்டுற வரைக்கும் Lord of the rings புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்புறம் லைட்ட அணைச்சிட்டு சண்டைக்கோழி படம் வீடியோவுல ஓடிச்சு. மக்கள் ரசிச்சு ரசிச்சு பாத்தாங்க. நானும் அப்பப்ப பாத்துக்கிட்டேன். ரெண்டரை மணிக்கு அலாரம் வெச்சுட்டுத் தூங்கினேன். மதுரையில நான் மூனு மணிக்கு எறங்கி அரை மணி நேரத்துல பஸ் ஏறுனாக் கூட ஆறரைக்கெல்லாம் தூத்துக்குடி போயிரலாம்ல. போனேனா?

தொடரும்....

பாரதி
26-10-2006, 06:38 PM
இப்பத்தான் படிச்சு முடிச்சேன் இராகவன். ரொம்ப சுவாரசியமா இருக்கு... அடுத்ததப் படிக்க காத்துகிட்டு இருக்கேன்.

ஓவியா
26-10-2006, 08:20 PM
ராகவன்,
உங்கள் எழுத்துக்கலே ஒரு தனி பானிதான்.....
அதுவும் ....

அந்த ஆத்திரத்தைத் தனிக்க பக்கத்துல இருந்த அடையாறு ஆனந்த பவன்ல காக்கிலோ
பாவக்கா சிப்சு வாங்கிக்கிட்டேன்.
அதத்தான நொறுக்க முடியும்.....:D :D :D... வீரமான ஆளுதான்

சீக்கிரமா அடுத்த பதிவை போடுங்க
என்னதான் நடந்ததுனு தெரியும் வரை விட மாட்டேன்.....ஆமாம்

mukilan
27-10-2006, 12:38 AM
தீபாவளிக்கு ஊருக்குப் போகலைனாலும் நானும் இந்த பயணத்தில் உங்க கூட வர்றது போல நெனப்புத்தான். நானும் சிதம்பரத்தில படிச்ச் காலங்களில் ஊருக்கு வரப் பட்ட பாடு எல்லாம் இப்போ நெனைவுக்கு வருது. மதுரைக்கு ஒரே ஒரு பஸ்தான் இருக்கும்.ராத்திரி 8.30 மணிக்கு அதில் எல்லாம் மாதர் சங்கமும் மாதர் குலம் காக்கும் ஆடவர் சங்க அன்பர்களும் தான் இருப்பாங்க. அதுவும் அந்த நாகர்கோவில் காரய்ங்க ஒரு குரூப்பாத்தான் அலைவாய்ங்க. கட்டபொம்மன், பாண்டியன் கதை எல்லாம் வருது போல. என்னதான் பேரு மாத்தினாலும் இன்னமும் ஊர்ப்பக்கம் மருதுபாண்டியர் வந்திட்டானா, கேட்டீசி போய்ட்டானா கதைதான். எழுதுங்க! எழுதுங்க. காத்திருக்கிறேன்.

gragavan
27-10-2006, 07:39 AM
இப்பத்தான் படிச்சு முடிச்சேன் இராகவன். ரொம்ப சுவாரசியமா இருக்கு... அடுத்ததப் படிக்க காத்துகிட்டு இருக்கேன். நன்றி அண்ணா. அடுத்த பாகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக விரைவில் இடுகிறேன் அண்ணா.

meera
27-10-2006, 07:40 AM
ராகவன் சுவாரஷ்யமா போகும் போதே ஏன் இப்படி பிரேக் போடறீங்க.ஊர் பக்கம் போய் 5 வருசமாச்சு சரி உங்க பயணத்தோட ஊர் பக்கம் எட்டி பார்த்துட்டு வரலாம்னு பாத்தா இப்படி தொடரும் போட்டுடீயலே.

நீங்க சொன்னது சரிதான் எனக்கும் லாலு பிரசாத் தெரியும் அவருகிட்ட என்ன பத்தி கேட்டுப்பாருங்க தெரியவே தெரியாதுனு சாதிப்பார் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தாமரை
27-10-2006, 08:30 AM
கேடிசி எங்க இப்ப இருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி தானே!.. இருங்க இருங்க.. இப்படி சுருக்கறதை இன்னொரு முறை பார்த்தேன்.. சாத்தூர் காரர்கிட்ட சொல்லி சாத்த சொல்லிடுவேன்..
பி.ஆர்.சி..யா? இதையெல்லாம் தான் இப்ப என் பேர்ல.. டி.எஸ்.டி.சி ந்னு...(தாமரை செல்வன் ட்ரான்ஸ்போர்ட் கார்பரேசன்) மாத்திட்டம்ல..
போர்டுகளை சரியா படியும்

இனியவன்
30-10-2006, 04:20 PM
ராகவன் நல்ல பதிவு.
தொடருக்குக் காத்திருக்கிறேன்.

அறிஞர்
31-10-2006, 01:42 PM
இப்படி காத்திருந்து... டிக்கெட் வாங்கி... கடைசி சீட்டில் உட்கார்ந்து.. பயணமா... இப்படி போய் ரொம்ப நாளாகிவிட்டது.. இராகவன் பதிப்பை படித்ததில் பயணித்தது போன்ற அனுபவம்.

ஆமா.. உங்க ரேஞ்சுக்கு பிளைட் எல்லாம் ட்ரை பண்ணவில்லையா.. இராகவன்.

gragavan
01-11-2006, 10:02 AM
இப்படி காத்திருந்து... டிக்கெட் வாங்கி... கடைசி சீட்டில் உட்கார்ந்து.. பயணமா... இப்படி போய் ரொம்ப நாளாகிவிட்டது.. இராகவன் பதிப்பை படித்ததில் பயணித்தது போன்ற அனுபவம்.

ஆமா.. உங்க ரேஞ்சுக்கு பிளைட் எல்லாம் ட்ரை பண்ணவில்லையா.. இராகவன்.சர்ரு சர்ருன்னு பிளைட் போற ஊருல நான் பொறக்கலையே! என்ன செய்றது அறிஞரே.

pradeepkt
01-11-2006, 10:56 AM
ம்ம்ம்... நல்ல ஆரம்பம். தொடருங்க உங்க வீரப் பயணத்தை!!!
ஒரு மூணு வருசத்துக்கு முந்தி இப்படி முன்பதிவு செய்யாம பொங்கலுக்கு ஊருக்குப் போனேன். பெங்களூர்ல இருந்து தர்மபுரி வரைக்கும் துவஜஸ்தம்பம் மாதிரி நின்னுக்கிட்டு... தாங்க முடியாம சேலம் வரைக்கும் டிக்கட் எடுத்த நான் தர்மபுரியிலயே இறங்கி பஸ் ஸ்டாண்டிலேயே படுத்துத் தூங்கி... அது ஒரு அழகிய நிலாக்காலம்...

அறிஞர்
01-11-2006, 04:15 PM
ம்ம்ம்... நல்ல ஆரம்பம். தொடருங்க உங்க வீரப் பயணத்தை!!!
ஒரு மூணு வருசத்துக்கு முந்தி இப்படி முன்பதிவு செய்யாம பொங்கலுக்கு ஊருக்குப் போனேன். பெங்களூர்ல இருந்து தர்மபுரி வரைக்கும் துவஜஸ்தம்பம் மாதிரி நின்னுக்கிட்டு... தாங்க முடியாம சேலம் வரைக்கும் டிக்கட் எடுத்த நான் தர்மபுரியிலயே இறங்கி பஸ் ஸ்டாண்டிலேயே படுத்துத் தூங்கி... அது ஒரு அழகிய நிலாக்காலம்... ஓஹோ... பஸ் ஸ்டாண்டில் படுத்து எந்த நிலாவை கண்டீர்கள்... :rolleyes: :rolleyes: :rolleyes:

அல்லிராணி
02-11-2006, 01:48 PM
இப்படி காத்திருந்து... டிக்கெட் வாங்கி... கடைசி சீட்டில் உட்கார்ந்து.. பயணமா... இப்படி போய் ரொம்ப நாளாகிவிட்டது.. இராகவன் பதிப்பை படித்ததில் பயணித்தது போன்ற அனுபவம்.

ஆமா.. உங்க ரேஞ்சுக்கு பிளைட் எல்லாம் ட்ரை பண்ணவில்லையா.. இராகவன்.
அவரு ரேஞ்சுக்கு பிளேட்டு பிளேட்டா பறப்பாரே தவிர ஃபிளைட்டு ஃபிளைட்டா பறக்க மாட்டாரு

இளசு
12-11-2006, 11:24 AM
அன்பு ராகவன்

ஓவியா சொன்னது போல் - உங்கள் எழுத்துகள் அலாதி பாணி..
எழுதியவர் பெயர் போடலைன்னாலும் கண்டுபிடிச்சிடலாம்...

பாயசத்தில் ஊடாடும் ஏலக்காய் வாசம் போல்..
சுகமான எள்ளல் - உங்கள் கைவந்த கலை..

திகட்டாமல் சுவைக்க முடிகிறது..

இதில் உங்களுக்கு நல்ல ஈடு - வேற யாரு? - நம்ம செல்வன் தான்..


பிரதீப்பின் (அ)தர்மபுரி பிரவேசம் - இனிய உலர் திராட்சைத் தூவல்..


அடுத்த பாகம் படிக்க விரைகிறேன்..

பாராட்டுகள் ராகவன்...

ஓவியா
13-11-2006, 04:18 PM
ஆஆஹா
ராகவன், குட் வாங்கியாச்சாஆஆ...ம்ம்ம் இன்னிக்கி தூங்கனமாதிறிதானா....

சேரன்கயல்
27-02-2007, 11:55 AM
ராகவன்...
உங்கள் பாணி ரசனையானது...
சோர்வேயில்லாமல் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கலாம்...

மனோஜ்
27-02-2007, 01:33 PM
உ......திரும்ப இந்தியா பேனாதா இதல்லா அனுபவிக்க முடியூம் :rolleyes:
ஏக்கம்... தான் கதைமுலம் ஒரு முறை சென்று வந்ததில் மகிழ்ச்சி
ராகவன் சார் தீபாவளிக்கு கிளம்பினிங்க இன்னு துத்துக்குடி பேயிசேறலயா......:confused: :confused: :confused:

pradeepkt
27-02-2007, 02:11 PM
உ......திரும்ப இந்தியா பேனாதா இதல்லா அனுபவிக்க முடியூம் :rolleyes:
ஏக்கம்... தான் கதைமுலம் ஒரு முறை சென்று வந்ததில் மகிழ்ச்சி
ராகவன் சார் தீபாவளிக்கு கிளம்பினிங்க இன்னு துத்துக்குடி பேயிசேறலயா......:confused: :confused: :confused:
நல்லாக் கேளுங்க... :mad:

அமரன்
27-02-2007, 03:18 PM
நல்ல கதை. அடுத்த பாகம் எப்போ

இதயம்
12-04-2007, 09:37 AM
தொடர்ந்து எழுதுங்க இராகவன். உங்க பயணம் கஷ்டமா இருந்தாலும் அதை எழுதுன விதம் ரொம்ப சுவராசியமா இருக்கு. இந்த எழவெடுத்த எழுதுற வித்தை எனக்கு வரமாட்டேங்குதே..!! இதுக்காக அதே மாதிரி பிரச்சினைகளை சந்திக்கணுமோ..?!!

banupriya
12-04-2007, 10:49 AM
ப்ளைட் எல்லாம் சும்மா' பஸ்ல போற சுகமே தனி தான், ஏறினவுடனே நல்லா தூக்கத்தைப் போடவேண்டியது, இறங்கவேண்டிய ஸ்டாப்பை விட்டுட்டு ,நடத்துனர்கிட்ட பாட்டு வாங்கிட்டு, அடுத்த ஸ்டாப்ல இறங்கிப் பாடிக்கிட்டு போறதுதான் நல்ல அனுபவம்அறிஞரே.பஸ்ல போனதால தான் பதிவு போட முடியுது. பஸ்பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் இராகவன்.

ஓவியன்
12-04-2007, 01:01 PM
ராகவன் அண்ணா நீங்கள் இந்த பதிவைப் பதித்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் படிக்கும் சந்தர்பம் எனக்குக் கிடைத்தது. உங்களது வித்தியாசமான வேறுபட்டா நடையில் அட்டகாசமாக ஆரம்பித்திருந்தீர்கள், ஆனால் இப்போது என் கேள்வி என்னவென்றால் தொடரும் என்று போட்டு விட்டு ஏன் தொடராது நிறுத்தி வீட்டீர்கள். ஏதெனும் காரணம் பற்றி நிறுத்தினீர்களா? அல்லது வேலைச் சுமை காரணமாக தொடர முடியவில்லையா?

உங்களால் முடியுமானால் தொடர்ந்து எழுதலாமே? - நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஓவியா
12-04-2007, 03:12 PM
நன்பர்களே இதுதான் அதன் தொடர்சி சுட்டி என்று நினைக்கிறேன்.

ஒரு முறை படித்து பாருங்கள்.

02. மாட்டுத்தாவனி மகாத்மியம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7148

03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7185

04. புதுக்கிராமம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7706இது ஃபோனஸ் சுட்டி, இதையும் படித்து பாருங்கள்.
சொல் ஒரு சொல்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8438

ஓவியன்
14-04-2007, 12:26 PM
நன்பர்களே இதுதான் அதன் தொடர்சி சுட்டி என்று நினைக்கிறேன்.

ஒரு முறை படித்து பாருங்கள்.


நன்றி ஓவியாக்கா!

poo
20-04-2007, 11:40 AM
அடடா... உங்க கஷ்டத்தை எவ்வளவு சுவாரஸ்யமா ரசிச்சி படிக்கிறோம் நாங்க...

தொடர்ச்சி எங்கங்க இருக்கு?!!

Gobalan
21-04-2007, 07:07 PM
திபாவளிக்கு தூதுக்குடி பொய் சேர்ந்து விட்டீர்கள் என்பது உங்கள் பதிப்புலிருந்து தெரிகிறது. ஆனால் உங்கள் பயணக்கதையை ஏன் நிறுத்திவிட்டீர்கள். உங்கள் நகச்சுவை கலந்த நடையுடன் எழுதும் பாணியில் மிதியுள்ள பயணக்கட்டுரையையும் சீக்கிரமாக பதித்து விடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது ராகவன். எப்போழுது உங்களின் அடுத்த பாகம்? நன்றி. கோபால்

ஓவியா
22-04-2007, 08:02 PM
நன்பர்களே இதுதான் அதன் தொடர்சி சுட்டி என்று நினைக்கிறேன்.

ஒரு முறை படித்து பாருங்கள்.

02. மாட்டுத்தாவனி மகாத்மியம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7148

03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7185

04. புதுக்கிராமம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7706இது ஃபோனஸ் சுட்டி, இதையும் படித்து பாருங்கள்.
சொல் ஒரு சொல்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8438


இதுதான் அதன் தொடர்ச்சி,
முன்பே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்.