PDA

View Full Version : சட்டம் வந்தது



meera
26-10-2006, 11:08 AM
சட்டம் வந்தது
"சிறுவர்களை வேலைக்கு
அமர்த்தாதே" என்று..
சட்டம் போட தெரிந்த
இவர்களுக்கு

எங்களின்
சரித்திரம் தெரியாமல்
போனது வேடிக்கைதான்..

இவர்களின் சட்டத்தால்
சாதித்தது என்ன???

எங்களுக்கு
ஒருவேளை உணவும்
இல்லாமல் போனதுதானோ???

பென்ஸ்
26-10-2006, 11:29 AM
ஒருவேளை சாப்பாடிற்க்கு
சத்துணவு திட்டம்
சத்தான வாழ்க்கைக்கு
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தா திட்டம்...
எல்லா நாணயத்திற்க்கும் இரு பக்கம் உண்டு
சட்டங்களால் நல்லதும்... உண்டு

எல்லாக்கோடுகளும் ஒரு நிறையல்ல..
சாலையின் மஞ்சள் கோடு...
சாடிஸ்ட் கணவன் கட்டிய மஞ்சள் கோடு..
ஒன்றைத்தாண்டாதது பொதுநோக்கு ஒழுக்கம்..
ஒன்றைத்தாண்டாதது - குரல்வளை நெறிக்கும் 'சமூக, அழுத்தம்.
நன்றி : இளசு

சில திட்டங்களால் சில தற்காலிக கஷ்டங்கள் வரும்...
ஆனால் எதிர்காலம் நன்றாக இருக்க சில கட்டுபாடுகள் கண்டிப்பாக தேவை...

மீரா..கவிதை அருமை....
நல்லா சிந்திக்க ஆரம்பிச்சுட்டீங்க...
கவிதையும் வடிவம் எடுக்க ஆரம்பிச்சுட்டுது....
திட்டி திட்டியே பழக்க பட்டு போனாலும்...
மனமார வாழ்த்துகிறேன்...
அருமைடா....

meera
26-10-2006, 11:55 AM
ஒருவேளை சாப்பாடிற்க்கு
சத்துணவு திட்டம்
சத்தான வாழ்க்கைக்கு
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தா திட்டம்...
எல்லா நாணயத்திற்க்கும் இரு பக்கம் உண்டு
சட்டங்களால் நல்லதும்... உண்டு

எல்லாக்கோடுகளும் ஒரு நிறையல்ல..
சாலையின் மஞ்சள் கோடு...
சாடிஸ்ட் கணவன் கட்டிய மஞ்சள் கோடு..
ஒன்றைத்தாண்டாதது பொதுநோக்கு ஒழுக்கம்..
ஒன்றைத்தாண்டாதது - குரல்வளை நெறிக்கும் 'சமூக, அழுத்தம்.
நன்றி : இளசு

சில திட்டங்களால் சில தற்காலிக கஷ்டங்கள் வரும்...
ஆனால் எதிர்காலம் நன்றாக இருக்க சில கட்டுபாடுகள் கண்டிப்பாக தேவை...

மீரா..கவிதை அருமை....
நல்லா சிந்திக்க ஆரம்பிச்சுட்டீங்க...
கவிதையும் வடிவம் எடுக்க ஆரம்பிச்சுட்டுது....
திட்டி திட்டியே பழக்க பட்டு போனாலும்...
மனமார வாழ்த்துகிறேன்...
அருமைடா....

பென்ஸ் நன்றி நன்றீஈஈஈஈஈஈஈஈஈஇ

உண்மைதான் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளபடுகிறது நண்பா

எனக்கு தலை, கால் புரியல ஒரே சந்தோஷமா இருக்கு நீங்க பாராட்டினது.:D :D :D :D

அறிஞர்
26-10-2006, 12:49 PM
சட்டங்களால் உண்மை நிலையை மாற்ற முடியுமா எனத்தெரியவில்லை.

நல்ல கவிதை.... பிஞ்சு குரல்களின் பிரதிபலிப்பு.

தாமரை
26-10-2006, 12:56 PM
சட்டம் வந்தது
"சிறுவர்களை வேலைக்கு
அமர்த்தாதே" என்று..
சட்டம் போட தெரிந்த
இவர்களுக்கு

எங்களின்
சரித்திரம் தெரியாமல்
போனது வேடிக்கைதான்..

இவர்களின் சட்டத்தால்
சாதித்தது என்ன???

எங்களுக்கு
ஒருவேளை உணவும்
இல்லாமல் போனதுதானோ???

இதை ஒழிக்க எளிதான வழியுண்டு. பையன் பள்ளிக்கு படிக்கப் போனால் அப்பனுக்கு இலவச சாப்பாடு..(கூடவே கட்டிங்..)
எல்லா குழந்தைகளும் படிக்க ஆரம்பித்து விடுவார்களே...

gragavan
26-10-2006, 01:07 PM
சட்டம் என்பது வரையறை
அதற்குள் அடங்குமா
வாழ்க்கைப் படம்
எத்தனை சட்டம் வந்தாலும்
நீளம் மாறிடும் ஓவியத்திற்கு
புலவர் வர நீளும் சங்கப்பலகை
பிரச்சனைகள் வர நீளும் ஓவியப்பலகை!

தாமரை
26-10-2006, 01:13 PM
சட்டம் என்பது வரையறை
அதற்குள் அடங்குமா
வாழ்க்கைப் படம்
எத்தனை சட்டம் வந்தாலும்
நீளம் மாறிடும் ஓவியத்திற்கு
புலவர் வர நீளும் சங்கப்பலகை
பிரச்சனைகள் வர நீளும் ஓவியப்பலகை!

வாழ்க்கை
சட்டத்தில் அடங்கா
ஓவி(யா)யம்

இதத்தானே சொன்னீர்கள்...

அல்லிராணி
26-10-2006, 03:31 PM
சட்டம் வந்தது
"சிறுவர்களை வேலைக்கு
அமர்த்தாதே" என்று..
சட்டம் போட தெரிந்த
இவர்களுக்கு

எங்களின்
சரித்திரம் தெரியாமல்
போனது வேடிக்கைதான்..

இவர்களின் சட்டத்தால்
சாதித்தது என்ன???

எங்களுக்கு
ஒருவேளை உணவும்
இல்லாமல் போனதுதானோ???

குழந்தையின் பசி அறிந்த தாய் தகப்பன் வேலைக்கு அனுப்புவாரா?
தன் வயிற்றுக்கே சம்பாதிக்க வழி தெரியாதவன் தானே தன் குழந்தையை வேலைக்கு அனுப்புகிறான்..


தமிழகத்தில் உள்ள பல சட்டங்கள்

1. பான்ப்ராக் விற்கக் கூடாது..
2. பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது
3. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது
4. திருட்டு வி.சி.டி ஒழிப்புச் சட்டம்

இப்படி எத்தனை எத்தானையோ பேருக்கு சட்டங்களாய் உலா வந்து கொண்டிருக்கின்றன. ராகவர் சொன்ன மாதிரி சட்டம் போடுவது போதாது.. அது அமல் படுத்தவும் படவேண்டும்...

இது எல்லாம் ஒருவேளை மகாத்மா செய்த தவறாக இருக்கலாம்.. சட்ட மறுப்பை கற்றுக் கொடுத்தவர் அவர்தானே!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
26-10-2006, 05:53 PM
சட்டம் வந்தது
"சிறுவர்களை வேலைக்கு
அமர்த்தாதே" என்று..
சட்டம் போட தெரிந்த
இவர்களுக்கு

எங்களின்
சரித்திரம் தெரியாமல்
போனது வேடிக்கைதான்..

இவர்களின் சட்டத்தால்
சாதித்தது என்ன???

எங்களுக்கு
ஒருவேளை உணவும்
இல்லாமல் போனதுதானோ???

மீரா
அழகான கவிதைக்கு ஒரு வாழ்த்துக்கள்


சரி,
உங்க ஊரில் பள்ளியில் ஒரு வேலை சத்துணவுனு ஒரு திட்டம் இருக்கே
அப்புறம் எதுக்கு சிறுவர்கள் 'ஒருவேளை' உணவுக்கு வேலைக்கு போகனும்?????:confused:

ஓவியா
26-10-2006, 06:01 PM
இதை ஒழிக்க எளிதான வழியுண்டு. பையன் பள்ளிக்கு படிக்கப் போனால் அப்பனுக்கு இலவச சாப்பாடு..(கூடவே கட்டிங்..)
எல்லா குழந்தைகளும் படிக்க ஆரம்பித்து விடுவார்களே...

அடடா என்ன சிந்தனை..:D :D :D



வாழ்க்கை
சட்டத்தில் அடங்கா
ஓவி(யா)யம்

இதத்தானே சொன்னீர்கள்...


செல்வன் அண்ணா

சைக்கில் கேப்பில்
நம்மலே ஒரு சொறுவு சொறுவி இருகீங்க போல இருக்கே....:D :D

meera
30-10-2006, 05:05 AM
மீரா
அழகான கவிதைக்கு ஒரு வாழ்த்துக்கள்


சரி,
உங்க ஊரில் பள்ளியில் ஒரு வேலை சத்துணவுனு ஒரு திட்டம் இருக்கே
அப்புறம் எதுக்கு சிறுவர்கள் 'ஒருவேளை' உணவுக்கு வேலைக்கு போகனும்?????:confused:

வாழ்த்துக்களுக்கு நன்றி ஓவியா,

எங்களுக்கு ஒருவேளை உணவு என்று குறிப்பிட்டது அந்த குடும்பத்தின் நிலையை.தனி ஒரு பையனின் நிலையை மட்டும் அல்ல.

ஓவியா
30-10-2006, 06:28 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி ஓவியா,

எங்களுக்கு ஒருவேளை உணவு என்று குறிப்பிட்டது அந்த குடும்பத்தின் நிலையை.தனி ஒரு பையனின் நிலையை மட்டும் அல்ல.


ஓ அப்படியா....



நன்றி

மதி
31-10-2006, 12:48 PM
இந்த சட்டத்தின் மூலமாக இந்தியாவில் சுமார் 2 கோடி சிறுவர்கள் வேலையிழப்பர் என செய்தித்தாள் விவரம் கூறிற்று. இவர் அனைவரும் பள்ளிக்கு போவதாய் இருந்தாலும் இவரை மட்டுமே நம்பி இருக்கும் பல வீட்டினில் அடுப்பெரிய போவதில்லையே...!

மீரா...
நல்ல சிந்தனை..
தொடருங்கள் உங்கள் கவிதைகளை..!
வாழ்த்துக்கள்..

meera
31-10-2006, 02:30 PM
வாழ்த்துக்கு நன்றி மதி.

தாமரை
02-11-2006, 04:03 AM
வாழ்க்கை
சட்டத்தில் அடங்கா
ஓவி(யா)யம்

இதத்தானே சொன்னீர்கள்...

அடங்கா ஓவியா!!!!

இதைத்தானே சொன்னேன்

ஓவியா
02-11-2006, 04:59 PM
வாழ்க்கை
சட்டத்தில் அடங்கா
ஓவி(யா)யம்

இதத்தானே சொன்னீர்கள்...


அடங்கா ஓவியா!!!!

இதைத்தானே சொன்னேன்


அண்ணா,
என்னதான் நாம இரண்டுபேரும்
முகம் காணா அண்ணன் தங்கையாக மன்றத்தில் உலா வந்தாலும்......

இதை படித்தவுடன் எனக்கு ஆனந்த கண்ணிரே வந்துவிட்டது

நீங்கள்,
பாசமலர் சிவாஜியையே மிஞ்சிவிட்டீர்கள்...
சதா தங்கை ஓவியாவின் நினைப்பிலே இப்படியா......;) (ஓ வார்த்தை வரவில்லையே)

:D

pradeepkt
03-11-2006, 04:44 AM
இதையெல்லாம் படிச்சு எனக்கே அழுகாச்சி அழுகாச்சியா வந்துருச்சுன்னாப் பாருங்களேன்...

ஓவியா
03-11-2006, 02:17 PM
இதையெல்லாம் படிச்சு எனக்கே அழுகாச்சி அழுகாச்சியா வந்துருச்சுன்னாப் பாருங்களேன்...



பிரதீப்பை அழவைத்த பெருமையும் செல்வன் அண்ணவையே சேரும்


:D :D :D
பிரதீப்பூ அழாதீங்கப்பூ....:D :D