PDA

View Full Version : கல்லூரி நாட்கள்



franklinraja
25-10-2006, 10:39 AM
மகிழ்ச்சியாய்
சிறகடித்து
கல்லூரிக்கூட்டில்
வானம்படிகளாய்
எலிப்பொறி முதல் - கணிப்பொறி வரை
எத்தனை கடிகள்...
இமையும், விழியுமாய் - இருந்த நாட்கள்
மீண்டும் வருமா..?!

meera
25-10-2006, 11:19 AM
மகிழ்ச்சியாய்
சிறகடித்து
கல்லூரிக்கூட்டில்
வானம்படிகளாய்
எலிப்பொறி முதல் - கணிப்பொறி வரை
எத்தனை கடிகள்...
இமையும், விழியுமாய் - இருந்த நாட்கள்
மீண்டும் வருமா..?!

பிராங்க்ளின் மன்றத்தில் உங்கள் வரவு நல்வரவாக என் வாழ்த்துக்கள்.

அருமையான கவிதை.எல்லோரும் திரும்பிச் செல்ல நினைக்கும் ஒரே வாழ்க்கை இந்த கல்லூரி வாழ்க்கை மட்டுமே.

உங்கள் கவிதையை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்..

பென்ஸ்
25-10-2006, 11:20 AM
வேணாம்.. வேணாம்.. அழுதுருவேன்....
இதை எல்லாம் நியாபக படுத்த கூடாது....

பென்ஸ்
25-10-2006, 11:32 AM
மகிழ்ச்சியாய்
சிறகடித்து
கல்லூரிக்கூட்டில்
வானம்படிகளாய்
எலிப்பொறி முதல் - கணிப்பொறி வரை
எத்தனை கடிகள்...
இமையும், விழியுமாய் - இருந்த நாட்கள்
மீண்டும் வருமா..?!

பிராங்... மன்றத்தில் உங்களை வரவேற்க்கிறேன்... அறிமுக பகுதியில் உங்களை பற்றி கொஞ்சமோ, இல்லை அதிகமாகவோ, இல்லை கட்டுட்ரையாகவோ சொல்லுங்களேன்....

அப்புறம் கவிதை..

மறக்கமுடியுமா????

கிழிந்த ஜீன்ஸ்...
துவைக்காத சட்டை...
பரட்டைதலையும்,
ஓட்டை பைக்கும்
அதில் நால்வர் சவாரி
தினமும் கல்லூரி
வேப்பமரத்தடியில் வகுப்பு (அது என்னடான்னா??!!!)
கவணத்தை ஈர்க்க கலாட்டா...
பட்டம் விடுதல், கபடி விளையாட்டு
நூல்விடுதல், கண்ணடி வில்லங்கம்
போட்டோ எடுக்க வேண்டி ஸ்டிரைக்
சின்ன சின்ன காதல்
பெரிய பெரிய கண்ணீர்
நட்பு, துரோகம், பாசம், சகோதரம்.. இன்னும் இன்னும்
காசிருந்தால் பீர்
காசில்லாமல் பீடி
ஒரு பாத்திரம், பத்து கை
ஒரு அறை, பத்து குறட்டை
ஒரே சட்டை, ஒரே சோப்பு, ஒரே காலணி, எல்லாம் பஞ்ஜாயத்து சொத்தாய்...
இன்னும் இன்னும்...

மறக்கமுடியுமா....????

ஓவியா
25-10-2006, 04:16 PM
வணக்கம்
நண்பர் பிரங்கிளின் ராஜா.
உங்கள் வரவு நல் வரவாகுக

கவிதை அருமை.
தொடருங்கள் உங்கள் கவிதை கணைகளை

franklinraja
26-10-2006, 07:32 AM
மீரா, பெஞ்சமின், ஓவியா...
தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி...

எனக்குத் தெரிந்ததை தொடர்ந்து எழுதுகிறேன்...

mgandhi
03-11-2006, 04:20 PM
மறக்க முடியுமா என்பதை சுட்டி காட்டி இருக்கிறிர்கள்
மறக்கத்தான் முடியுமா அதை மருக்கத்தான் முடியுமா