PDA

View Full Version : வாழ்க்கையே ஒரு சக்கரம்



mgandhi
24-10-2006, 06:10 PM
கடல் நீர்தான் மேகமாய் மாறும்
மேகமே பின் மழையாய் பொழியும்
உண்மையை மணம் நம்ப மறுக்கும்
பொய்யை மனது மணக்கத் துடிக்கும்
கடமையை செய்யகரங்கள் மறுக்கும்
மறுக்கும் கடமையே ஜெயுக்கும்
வேண்டாதவற்றையே நா சுவைக்கும்
சுவையை யெல்லாம் உடம்பு வெறுக்கும்
பாசத்தால் தான் பகை வளரும்
பகையை பின் பாசம் வெல்லும்
வாழ்க்கை எப்போதும் இனிக்கும்
இனிக்கும் வாழ்க்கை முதுமையில் கசக்கும்
காதலே மனதில் பூவாய் பூக்கும்
பூவே பின் கருகி உதிரும்
வாழ்க்கையே ஒரு சக்கரம் தான்
சக்கரத்தில் சூழலும் மனிதர்கள் நாம்

அறிஞர்
24-10-2006, 08:54 PM
வாழ்க்கை சக்கரத்தில்
உழலும் காரியங்கள் எத்தனை.
அவைகள் இருந்தாலும் தொல்லை
இல்லாவிட்டாலும் தொல்லை...

தொடருங்கள் காந்தி