PDA

View Full Version : தீபாவளி..



கண்மணி
23-10-2006, 11:00 AM
தீபாவளி..

அக்னியில் குளித்து
தங்கமாய் வெளிப்பட்ட
சீதையைக் காண
காத்திருந்தன
அயோத்தியில்
அக்னிக் குஞ்சுகள்..

meera
23-10-2006, 03:49 PM
கண்மணி கவிதை நன்று.எங்க ஆளே காணோம்.

meera
23-10-2006, 03:53 PM
வானத்து நட்சத்திரங்களுடன்
போட்டியிட எங்களுக்கோர்
சந்தர்ப்பம்-இந்த
தீபாவளி திருநாள்
சந்தோஷத்தில்
செயற்கை நட்சத்திரங்கள்.

கண்மணி
24-10-2006, 04:48 AM
விண்மீன்கள்
வானத்தில்
வீதிகளில்
வீடுகளில்

வேடிக்கைப் பார்க்கும்
நிலவுகள்
வெட்கப்பட்டு வராது
வான் நிலவு..

பென்ஸ்
24-10-2006, 08:39 AM
விண்மீன்கள்
வானத்தில்
வீதிகளில்
வீடுகளில்

வேடிக்கைப் பார்க்கும்
நிலவுகள்
வெட்கப்பட்டு வராது
வான் நிலவு..

மேகப்பஞ்சை காதினின்று
எடுத்து கேள் நிலவே
என்னவள் மத்தாப்புடன் சிரிக்கிறாள்

கண்மணி
24-10-2006, 10:02 AM
மேகப்பஞ்சை காதினின்று
எடுத்து கேள் நிலவே
என்னவள் மத்தாப்புடன் சிரிக்கிறாள்

தீபாவளியன்று
அமாவாசை..
நிலவெங்கே?

அல்லிராணி
24-10-2006, 10:10 AM
தீபாவளியன்று
அமாவாசை..
நிலவெங்கே?

நிலவு
நட்சத்திரங்களை
விதைக்கிறது

தீபாவளி

பென்ஸ்
24-10-2006, 10:18 AM
தீபாவளியன்று
அமாவாசை..
நிலவெங்கே?

~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னவள் துயிலுகிறாள்
தீபாவளியிலும்
அம்மாவாசை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பூமியில்
தீப நச்சத்திரங்களுடன்
ஒரு தேயாத நிலவின் வலம்
எனக்கு ஓய்வு...
--அம்மாவாசை

அல்லிராணி
24-10-2006, 10:24 AM
~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னவள் துயிலுகிறாள்
தீபாவளியிலும்
அம்மாவாசை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பூமியில்
தீப நச்சத்திரங்களுடன்
ஒரு தேயாத நிலவின் வலம்
எனக்கு ஓய்வு...
--அம்மாவாசை

தேயாத நிலவு
பூமியில் இருக்க
தேய்கின்ற நிலவே
உனக்கென்ன வேலை?

அறிஞர்
24-10-2006, 09:05 PM
தேயாத நிலவு
பூமியில் இருக்க
தேய்கின்ற நிலவே
உனக்கென்ன வேலை?தேயாத நிலவை
அம்மாவாசையன்று (தீபாவளி)
புத்தாடையில் ரசிக்க
பல கண்கள் வேண்டும்.