PDA

View Full Version : தினம் ஒரு படம்



mgandhi
22-10-2006, 07:07 PM
http://www.dinamalar.com/news/photos/fpn1.jpg

நன்றி-தினமலர்.

அறிஞர்
23-10-2006, 04:36 PM
நல்ல முயற்சி.. நல்ல படங்களை தொடர்ந்து கொடுங்கள்.

இப்படி போட்டா நிறைய படங்கள் கொடுக்கலாமே.....
--------------------
எந்த செய்தி தாள்களின் (தினகரன், தினமலர், விகடன்) படங்களை நேரிடையாக இங்கு கொடுப்பதில்லை. அவர்களுடைய இணைய சட்ட திட்டங்கள் நமக்கு சரியாக தெரியாது. அவர்களின் படைப்புக்களை அவர்கள் அனுமதியில்லாமல் மற்ற இடங்களில் வெளியிடலாமா என்று சந்தேகம் உள்ளது.
மன்றத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக போட்டோ பக்கெட் போன்ற தளங்களில் பதித்துக்கொடுப்போம் (நன்றி-தினகரன், தினமலர், விகடன்) எனத்தெரிவிக்கலாம்.

இது பற்றி மற்ற நண்பர்கள் கருத்துக்கூறுங்கள்.

mgandhi
23-10-2006, 05:31 PM
தங்கள் தகவளுக்கு நன்றி

அவர்களுடைய இணைய சட்ட திட்டங்கள் நமக்கு சரியாக தெரியாது.
தெறித்தவர்கள் கூருங்கள்

பாரதி
23-10-2006, 06:22 PM
படங்கள் அதிக அளவில் இத்தளத்தில் ஏற்றப்பட்டால், என்னைப் போன்ற வாசகர்களின் கணினியில் தளத்தை பார்வையிடுவதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் கவனிக்க வேண்டுகிறேன்.

அறிஞர்
23-10-2006, 06:30 PM
படங்கள் அதிக அளவில் இத்தளத்தில் ஏற்றப்பட்டால், என்னைப் போன்ற வாசகர்களின் கணினியில் தளத்தை பார்வையிடுவதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் கவனிக்க வேண்டுகிறேன். பொதுவாக வேறு தளங்களில் ஏற்றி தானே கொடுக்கிறார்கள். அப்படியிருந்தாலும் வேகம் குறையுமா.

உண்மையிலே வேகத்தை பாதிக்குமானால், படம் ஏற்றுவதை.... நிறுத்த சொல்கிறோம்.

பாரதி
24-10-2006, 12:59 PM
பொதுவாக வேறு தளங்களில் ஏற்றி தானே கொடுக்கிறார்கள். அப்படியிருந்தாலும் வேகம் குறையுமா.

உண்மையிலே வேகத்தை பாதிக்குமானால், படம் ஏற்றுவதை.... நிறுத்த சொல்கிறோம்.

அன்பு அறிஞரே... நான் கூறியிருந்தது "இத்தளத்தில்" என்பதை கவனிக்கவும்.

இவ்விதம் வேண்டுமானால் செய்யலாம். தினம் ஒரு படம் என்று வேறு வேறாக பதிவுகள் செய்யாமல், முந்தைய தின பதிப்பை நீக்கிவிட்டு அன்றைய தினத்தின் படத்தை இடம் பெறச்செய்யலாம். அப்படியெனில் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். நன்றி.

அறிஞர்
24-10-2006, 01:04 PM
தினமும் மாற்றி மாற்றி கொடுக்கிறார்.

ஆனால் கருத்துக்களை நண்பர்கள் கூறும்போது.... படம் இல்லாமல் இருந்தால் வித்தியாசமாக இருக்கும்.

இப்பொழுது இப்படியே ஒரு இடத்தில் மாற்றி மாற்றி கொடுக்கட்டும்.

ஓவியா
25-10-2006, 06:18 PM
மன்றத்தில் நாம் வலம் வரும் நேரம் வேறுபடுவதால்......மற்றும் அனைவரும் அனுதினமும் மன்றம் வருவதில்லை

ஒரு ஐடியா
ஒவ்வொரு நாளும் (முறையும்) படங்களை மற்றங்கள் செய்யும் பொழுது...
நேற்றய பதிவு அப்படினு, .......முந்தய நாளின் பதிவை கீழே கொடுத்தால்.....நலம்

மோகன் காந்தி,
ஒரு சிறு ஆலோசனைதான்......கொவிக்க வேண்டாம்

அறிஞர்
25-10-2006, 08:50 PM
ஏ.கே. அந்தோணிக்கு வாழ்த்துக்கள்... நாட்டில் மிகப்பெரிய ஊழல் உள்ள துறை.. ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்பாரா எனப்பார்ப்போம்.

mgandhi
28-10-2006, 12:15 PM
http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=228&stc=1&d=1162037063

அறிஞர்
30-10-2006, 03:25 PM
http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=228&stc=1&d=1162037063

படம் தெரியவில்லை காந்தி....

mgandhi
30-10-2006, 04:53 PM
இன்றைய படம்
http://i2.turboimagehost.com/b/181161/pic200.jpg
நன்றி தினமலர்

படம் சரியாக வராத்திற்க்கு மன்னிக்கவும்
இந்த படம் சரியாக தெறிகிறதா

mgandhi
31-10-2006, 06:22 AM
http://i2.turboimagehost.com/b/182210/fpn1.jpg

இன்றைய படம் 31-10-2006
நன்றி தினமலர்

அறிஞர்
31-10-2006, 01:01 PM
தமிழகத்தில் தெற்கு ஆஸ்திரேலிய முதலீடுகள் குவியட்டும். நாட்டின் வளம் பெருகட்டும்.

ஓவியா
31-10-2006, 04:22 PM
படங்கள் அதிக அளவில் இத்தளத்தில் ஏற்றப்பட்டால், என்னைப் போன்ற வாசகர்களின் கணினியில் தளத்தை பார்வையிடுவதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் கவனிக்க வேண்டுகிறேன்.


அன்பு அறிஞரே... நான் கூறியிருந்தது "இத்தளத்தில்" என்பதை கவனிக்கவும்.

இவ்விதம் வேண்டுமானால் செய்யலாம். தினம் ஒரு படம் என்று வேறு வேறாக பதிவுகள் செய்யாமல், முந்தைய தின பதிப்பை நீக்கிவிட்டு அன்றைய தினத்தின் படத்தை இடம் பெறச்செய்யலாம். அப்படியெனில் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். நன்றி.


நாளுக்கு நாள் படங்கள் அதிகரிகின்றனவே.......

mgandhi
01-11-2006, 04:29 PM
http://i2.turboimagehost.com/b/185316/pic20.jpg

இன்றைய படம்1-11-2006
நன்றி தினமலர்

அறிஞர்
01-11-2006, 04:54 PM
நாளுக்கு நாள் படங்கள் அதிகரிகின்றனவே....... மற்ற தளங்களில் ஏற்றி கொடுத்தால் பிரச்சனை வராது.. தோழியே

அறிஞர்
01-11-2006, 04:54 PM
தமிழகத்தில் எப்பொழுது புது சர்வேத விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்போகிறார்களோ.

mgandhi
02-11-2006, 05:22 PM
http://i2.turboimagehost.com/b/187097/fpn1.jpg

இன்றய படம் 2-11-2006
நன்றி தினமலர்

pradeepkt
03-11-2006, 04:48 AM
மன்மோகன் சிங்கிற்கும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை இப்போதெல்லாம்.
ஏற்கனவே பாஜகவைப் பற்றி ஒரு உலகறிந்த ரகசியத்தை அவர் உளறி வைக்க பிரச்சினை தனிமனிதத் தாக்குதல்களாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன், அவர் இப்படி சோனியா இருப்பதாக எண்ணிக் கொண்டு கும்பிட்டபடியே பேசாமல் இருப்பது நலம் என்று தோன்றுகிறது.

ஓவியா
03-11-2006, 02:32 PM
மற்ற தளங்களில் ஏற்றி கொடுத்தால் பிரச்சனை வராது.. தோழியே


அப்படியா தகவல்...

நன்றி அறிஞரே

mgandhi
03-11-2006, 04:31 PM
http://i2.turboimagehost.com/b/188731/fpn1.jpg
இன்றைய படம் 3-11-2006
நன்றை தினமலர்

mgandhi
04-11-2006, 04:25 PM
http://i2.turboimagehost.com/b/190431/fpn1.jpg

இன்றய படம் 4-11-2006
நன்றி தினமலர்

mgandhi
05-11-2006, 12:24 PM
http://i2.turboimagehost.com/b/191624/fpn1.jpg
இன்றைய படம் 5-11-2006
நன்றி தினமலர்

mgandhi
05-11-2006, 12:35 PM
http://i2.turboimagehost.com/b/191624/fpn1.jpg
இன்றைய படம் 5-11-2006
நன்றி தினமலர்

மன்மதன்
06-11-2006, 09:03 AM
இந்த செய்தியை வெளியிட்ட பின்னர் சி.என்.என்.ஐ.பி.என் சேனல் நேயர்களிடம் எஸ்.எம்.எஸ் மூலம் கருத்து கேட்டது. அதற்கு நேயர்கள் அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஒரு பிடிபிடித்தனர்.

pradeepkt
06-11-2006, 09:25 AM
உலகமே இந்த விஷயத்தில் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.

ஓவியா
06-11-2006, 05:43 PM
இங்கு
அணைத்து நாளிதழ்களிலும் இதுதான் பரபரப்பான செய்தியாக உள்ளது

அதில் ஒரு நாளிதழில் (தே இன்டிபேன்டன்ஷ்)
அதிபர் புஷும், தோனி ப்ளேரும் இதைவிட அதிக மக்கள் அழிவிற்க்கு காரணமாகியுள்ளனர் என்று நாசுக்காக எழுதியிள்ளன

mgandhi
06-11-2006, 05:50 PM
http://i2.turboimagehost.com/b/194081/pic22.jpg
இன்றைய படம் 6-11-2006
நன்றி தினமலர்

அறிஞர்
07-11-2006, 01:04 PM
சதாமுக்கு தண்டனை கொடுப்பது சரிதான்.... தூக்கு தண்டனை கொஞ்சம் அதிகம்.

mgandhi
07-11-2006, 05:35 PM
http://i2.turboimagehost.com/b/196211/fpn1.jpg
இன்றைய படம் 7-11-2006
நன்றி தினமலர்

அறிஞர்
07-11-2006, 08:05 PM
டெல்லியில்... இது மாதிரி செயல்கள் நடப்பது.. வெளிநாடுகளில் நம்முடைய மதிப்பை குறைக்கிறது....

mgandhi
08-11-2006, 06:06 PM
http://static.flickr.com/119/292462148_023fc16e7a_m.jpg
இன்றைய படம் 7-11-2006
நன்றி தினமலர்

mgandhi
09-11-2006, 06:26 PM
http://static.flickr.com/111/293212644_54c3399e51_o.jpg
மக்கள் எப்படி இருக்கிரார்கள் பாவம் மக்கள்

இன்றைய படம் 9-11-2006
நன்றி தினமலர்

mgandhi
11-11-2006, 04:29 AM
http://i2.turboimagehost.com/b/203263/fpn1.jpgஎன்றுதான் இந்த நிலை மாருமே?
இன்றைய படம் 11-11-2006
நன்றி தினமலர்

mgandhi
11-11-2006, 05:11 PM
http://static.flickr.com/117/294600568_3be8bee189_o.jpgஇன்றைய படம் 12-11-2006
நன்றி தினமலர்

mgandhi
12-11-2006, 05:45 PM
http://static.flickr.com/118/295565598_2e12128db1_o.jpg
12-11-2006
நன்றி தினமலர்

mgandhi
19-11-2006, 04:54 PM
http://static.flickr.com/104/301055657_d98533f925.jpg

இன்றைய படம் 19-11-2006
நன்றி தினமலர்

mgandhi
22-11-2006, 05:42 PM
http://static.flickr.com/106/303658983_cb64993d94_o.jpg

இன்றைய படம் 23-11-2006
நன்றி தினமலர்

mgandhi
23-11-2006, 05:14 PM
http://static.flickr.com/111/305081718_8914a4af93_o.jpg வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்தில் அழகாய் அணிவகுத்து நிற்கும் ஹண்டாய் கார்கள்.
இன்றைய படம் 24-11-2006
நன்றி தமிழ் முரசு

pradeepkt
24-11-2006, 03:18 AM
படத்தை எங்கே சார் காணோம்??? பேசாம போட்டோபக்கெட்.காம் ல போடுங்க. அவங்க சேவை பரவாயில்லை.

mgandhi
25-11-2006, 05:14 PM
http://static.flickr.com/109/305833424_40d2030413_o.jpgசென்னை புழலில் கட்டப்பட்டுள்ள அதிநவீன சிறைச்சாலை வண்ண விளக்குகளில் ஜொலிக்கிறது சிறைச்சாலை.

அறிஞர்
28-11-2006, 06:58 PM
காந்தி தங்களின் படங்கள் தெரிவதில்லை. போட்டோபக்கெட் மூலம் பதியுங்கள்....

mgandhi
29-11-2006, 05:22 PM
http://static.flickr.com/108/309636999_99fd8dd893_o.jpg
பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த கேரளா மறுப்பு தீர்வு எட்டப்படாமல் முடிந்தது முதல்வர்கள் பேச்சுவார்த்தை
இன்றைய படம் 29-11-2006
நன்றி தினமலர்

mgandhi
30-11-2006, 05:51 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/pic21.jpg
இன்றைய படம் 1-12-2006
நன்றி தினமலர்

mgandhi
15-01-2007, 06:24 PM
http://www.dinamalar.com/news/photos/pic2.jpg
நன்றி தினமலர்

mgandhi
15-01-2007, 06:27 PM
http://www.dinamalar.com/news/photos/fpn1.jpg
நன்றி தினமலர்

அறிஞர்
16-01-2007, 01:31 PM
தலைவர்களின் படம் சிறப்பாக உள்ளது.

mgandhi
18-02-2007, 04:40 AM
http://farm1.static.flickr.com/166/393689165_7ac75fea51_o.jpg

மனோஜ்
18-02-2007, 02:55 PM
அருமையான படங்கள் தொடருங்கள் காந்தி

mgandhi
18-02-2007, 05:47 PM
http://farm1.static.flickr.com/147/394293163_6516c4b391_o.jpg

http://farm1.static.flickr.com/182/394286366_397e785ab2_o.jpg
நன்றி தினமலர்

மனோஜ்
18-02-2007, 06:03 PM
கறைக்டா கப்புன்னு செல்லீட்டாங் தினமலர் நன்றி காந்தி

mgandhi
19-02-2007, 06:20 PM
http://farm1.static.flickr.com/128/395660604_6db90a0fd6_o.jpg
நன்றி தினமலர்

ஆதவா
19-02-2007, 06:25 PM
ரசித்தேன் காந்தி..... அருமையா இருக்கிறது உங்களின் அனைத்து தொகுப்பும்

mgandhi
20-02-2007, 05:55 PM
http://farm1.static.flickr.com/155/396718029_20423a61f6_o.jpg
காவிரி நடுவர்மன்றம் இந்த மாதம் 5ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. இத்தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் 22 கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நன்றி தினகரன்

அமரன்
20-02-2007, 06:02 PM
காவிரி நடுவர்மன்றம் இந்த மாதம் 5ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. இத்தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் 22 கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


படத்துடன் செய்தி. நல்ல முயற்சி. கூட்டத்தின் முடிவுபற்றித் தெரிந்ததா காந்தி?

mgandhi
21-02-2007, 03:30 AM
http://farm1.static.flickr.com/174/397261950_7ecc2cda94_o.jpg
இந்திய விமானப்படை 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு, கோவை அருகே சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள் பாராசூட்டில் இருந்து குதித்து நேற்று சாகசம் செய்தனர்.

அறிஞர்
21-02-2007, 03:37 AM
வீரர்களின் சாகசத்தை நேரில் கண்டு களிக்க ஆசை...

மயூ
21-02-2007, 07:36 AM
நன்றி காந்தி அவர்களே!!!

அமரன்
21-02-2007, 01:49 PM
வீரர்களின் சாகசத்தை நேரில் கண்டு களிக்க ஆசை...

எனக்கும்தான். ஆனால் முடியவில்லையே.

அறிஞர்
21-02-2007, 01:52 PM
எனக்கும்தான். ஆனால் முடியவில்லையே.
உங்க ஊரில் இராணுவ சாகசம் நடக்குமே.. முயற்சிக்க வேண்டியதுதானே..

mgandhi
23-02-2007, 01:08 AM
http://farm1.static.flickr.com/170/399316700_774f6d3724_o.jpg
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் மாநகர பஸ்கள் உள்ளே சென்று பயணிகளை இறக்கி விட்டு வெளியே வருகிறது. இதேபோன்ற வசதி எழும்பூர் ரயில் நிலையம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. .

mgandhi
25-02-2007, 05:40 PM
http://farm1.static.flickr.com/187/402268235_ceb9addf2e_o.jpg
உடல் ஊனமுற்றோர் நலனுக்கான சிறப்பு இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன், தபேலா ஜாகீர் உசேன், மாண்டலின் சீனிவாசன் ஆகியோர் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை நடந்தினர்.

mgandhi
26-02-2007, 03:41 AM
http://farm1.static.flickr.com/181/403010731_62bcc1c2e2_o.jpg
புக்கோட்ட மாவட்டம் திருவப்பூர் முத்மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவ முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடபெற்ற. பல மாவட்டங்களச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளகள் கலந்கொண்டன. தன்னப் பிடிக்க முயன்றவர்கள கீழே தள்ளிவிட்டு, சீறிப்பாய்கிற காள. இந்த ஜல்லிக்கட்டில் 150 பேர் படுகாயமடந்தனர்.

அறிஞர்
26-02-2007, 03:12 PM
உடல் ஊனமுற்றோர் நலனுக்கான சிறப்பு இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன், தபேலா ஜாகீர் உசேன், மாண்டலின் சீனிவாசன் ஆகியோர் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை நடந்தினர்.
நல்ல செய்தி.... தேவையுள்ளோருக்கு சரியாக பணம் போய் சேரட்டும்.

மன்மதன்
26-02-2007, 05:47 PM
அழகிய புகைப்படங்கள்.. தொடரட்டும் இந்த அழகிய பதிவு..

mgandhi
27-02-2007, 03:50 AM
http://farm1.static.flickr.com/185/404254118_29d62402bd_o.jpg
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு, அமெரிக்க கலாசார பண்பாட்டு சாகச கலஞர்கள், கீழ்ப்பாக்கம் ஜே.ஜே. விளயாட்டு அரங்கில் நேற்று, சாகச நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டினர்.

gragavan
27-02-2007, 09:43 AM
நல்ல தகவல். தொடர்ந்து கொடுத்து வரும் நண்பர் எம்.காந்திக்கு நன்றி.

அமரன்
27-02-2007, 02:28 PM
உங்க ஊரில் இராணுவ சாகசம் நடக்குமே.. முயற்சிக்க வேண்டியதுதானே

நம்ம ஊரில் சாகசம் பார்க்கபோனால் சாகாவரம் பெற்றவனால்தான் திரும்பிவர முடியும்.

மயூ
27-02-2007, 02:49 PM
ம்... நல்ல புகைப்படங்கள் தொடருங்கள் அன்பரே!!!

mgandhi
28-02-2007, 06:18 AM
http://farm1.static.flickr.com/164/405467867_e9fdaa02a9_o.jpg
கோடயின் தொடக்கத்திலேயே குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் வறண்டு விட்டன. ஆனால், குமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிற.

pradeepkt
28-02-2007, 08:37 AM
திற்பரப்பு அருவி என் வாழ்வின் பசுமையான பக்கங்களைத் திறந்து விட்டிருக்கிறது. கல்லூரிக் கடைசியாண்டில் முதல் முதலாக நண்பர்களுடன் சுற்றுலா (திட்டமிடாத) சென்றோம். அப்போது முதலில் சென்றது கன்னியாகுமரி, மற்றும் திற்பரப்புக்குத்தான். அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குளுமை மிச்சம் இருக்கிறது...

படத்திற்கு மிக்க நன்றி காந்தி!

மனோஜ்
28-02-2007, 08:41 AM
இந்தியா வந்து முதல் சுற்றுலா திற்பரப்புதான் கண்ணீர்க்கு குளிர்ச்சியாக கொடுத்ததிற்கு நன்றி காந்தி

mgandhi
28-02-2007, 05:19 PM
http://i2.turboimagehost.com/b1/278666/3001_01.jpg
http://i2.turboimagehost.com/b1/278670/3001_02.jpg
http://i2.turboimagehost.com/b1/278672/3001_05.jpg

mgandhi
04-03-2007, 10:44 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TRI420PG24PH1.jpg

பென்ஸ்
04-03-2007, 10:54 AM
கோடயின் தொடக்கத்திலேயே குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் வறண்டு விட்டன. ஆனால், குமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிற.

அட போங்கையா...
எப்ப ஊருக்கு போனாலும் பசங்க என்னயாவது போகனும்ன்னு நச்சரிப்பாங்க...

இன்னைக்கும் அங்க போயி ஒரு ஆட்டம் போடுறதுன்னா தனி சுகம்தான்...

ஆனால் பின்னோக்கி போகும் போது சுகம் அதிகம்...
இன்றைய காரைவிட...
கல்லூரி நாட்கள் பைக் பயணம் இனியதாய்...
பள்ளிநாட்கள் சைக்கிள் பயணமும் இன்னும் இனியதாய்...

ஆனால் இடத்தை சுற்றிய சுத்தம் சுத்தமாய் மாறியிருப்பது வருத்தம்...

mgandhi
19-03-2007, 06:20 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_19-03-07_E1_06-0420CNI000.jpg
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணகள் 25 ஆயிரம் பேர் நேற்று ஒகேனக்கல்லில் குவிந்தனர். யுகாதி பண்டிகையையட்டி, ஒகேனக்கல் அருகே கர்நாடகா எல்லையில் உள்ள மாறுகொட்டாயில் இருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் மாதேஸ்வரன் கோயிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள்.

mgandhi
20-03-2007, 06:24 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TNJ2003PG17PH.jpg

mgandhi
21-03-2007, 05:53 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_21-03-07_E1_02-0620CNI.jpg
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெலிக்கான் பறவைகள், நவம்பர் முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் இனவிருத்திக்காக வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வருவது வழக்கம். இப்போது வேடந்தாங்கலில் முகாமிட்டுள்ள இப்பறவைகள், பகல் நேரங்களில் இரை தேடி முட்டுக்காடு படகுத்துறைக்கு வந்து செல்கின்றன. முட்டுக்காட்டில் இப்போது தண்ணீர் குறைந்து காணப்படுவதால் நிறைய மீன்கள் இவற்றுக்கு உணவாக கிடைக்கின்றன.

மயூ
21-03-2007, 06:45 PM
அழகாகத்தான் நீர் மேல் நர்த்தனம் ஆடுகின்றன!!!

மனோஜ்
21-03-2007, 07:00 PM
அருமை தகவல்கள் கண்களுக்கினிய காட்சிகளுடன் நன்றி காந்தி

mgandhi
22-03-2007, 06:56 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_22-03-07_E1_04-0520CNI1121.jpg
குமரி மாவட்டம், குளச்சல் கடலில் உயர்ரக மீனாகிய கேரை மீன்கள் தற்போது அதிக அளவில் கிடைக்கிறது. இதை வெளிமாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

மயூ
22-03-2007, 06:59 PM
இதைத் தானே சூரை மீன் என்றும் சொல்லுவார்கள்?

pradeepkt
23-03-2007, 05:00 AM
ஹ்ம்ம்ம்... அடுத்து அசைவம் சாப்பிட இன்னும் ரெண்டரை மாசம் ஆகும்... அப்ப கன்னியாகுமரிக்கே போயி இந்த மீனை ஒரு கட்டு கட்டிற வேண்டியதுதான். :D

அமரன்
23-03-2007, 08:37 AM
இதைத் தானே சூரை மீன் என்றும் சொல்லுவார்கள்?

இல்லை நண்பா. அது வேறு. இது வேறு. காந்தியின் படத் தகவல்களுக்கு நன்றி.

mgandhi
23-03-2007, 05:31 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_23-03-07_E1_02-0320CNI.jpg

அமராவதி அணை பண்ணையில் தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறி ஓய்வெடுக்கும் முதலைகள்.

mgandhi
25-03-2007, 07:17 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_25-03-07_E1_03-0320CNI.jpg
புழல் ஏரியில் மதகு பகுதி அருகே இறந்து கிடக்கும் மீன்கள். இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விகடன்
28-03-2007, 10:13 AM
அக்ழ்காகவும் இருக்கின்றது, ஆச்சரியப்படவைப்பனவாகவும் இருக்கின்றது, ஏன் பயமுறுத்துவனவாகவும் இருக்கின்றது.

இதுதான் கதம்பம் என்பதா?

mgandhi
29-03-2007, 06:59 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_29-03-07_E1_04-0620CNI.jpg
ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பதை தடுக்க தமிழக கடற்படயினர் நேற்று ஹெலிகாப்டரில் ரோந்து சென்றுது.

மயூ
29-03-2007, 07:05 PM
ம்.. நல்ல முயற்சி.. ஆனாலும் தமிழக கடற்படை என்ற பதம் பிழை என்று நீனைக்கின்றேன்.. இந்தியக் கடற்படை தமிழக காவல் துறை சரியா???

அறிஞர்
29-03-2007, 07:42 PM
மயூரேசன் சொல்வது சரிதான்..

அப்பாவி மீனவர்களை கொல்லாமல் இருந்தால் சரிதான்.

pradeepkt
30-03-2007, 04:56 AM
ம்.. நல்ல முயற்சி.. ஆனாலும் தமிழக கடற்படை என்ற பதம் பிழை என்று நீனைக்கின்றேன்.. இந்தியக் கடற்படை தமிழக காவல் துறை சரியா???
இந்தியக் கடற்படை என்பது சரிதான். தமிழகக் காவல்துறைக்கு இதில் சம்பந்தமில்லை.
எப்படியோ மனித உயிருக்கு மதிப்பு அனைவருக்கும் புரியட்டும்.

mgandhi
31-03-2007, 05:45 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_31-03-07_E1_08-1120CNI.jpg
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(31-3-2006) நடந்த பந்த் போராட்டத்தினால் சென்னை பேசின்பிரிட்ஜில் சாரைசாரையாக நிறுத்தப்பட்டிருக்கும் ரயில்கள்.

மயூ
01-04-2007, 05:46 AM
விமானங்களும் ஏதோ வேலைநிறுத்தமா???? ஹைதராபாத் வந்த பல்கலை நண்பர்கள் அங்கே விமானம் கிடைக்காமல் அலைந்து திரிவதாக எழுதினார்கள்!!!

mgandhi
01-04-2007, 06:10 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_01-04-07_E1_02-0420CNI.jpg
பங்குனி திருவிழாவ முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று 63 நாயன்மார்கள் வீதி உலா கோலாகலமாக நடந்த. நகரின் பல பகுதிகளில் இருந்ம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

mgandhi
02-04-2007, 06:54 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_02-03-07_E1_01-0120CNI.jpg
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மீனவர்கள்.

அறிஞர்
03-04-2007, 02:35 PM
திரளான கூட்டம்....
கடற்படை பார்த்து செயல்பட வேண்டும்.

mgandhi
05-04-2007, 03:58 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_05-04-07_E1_04-0420CNI.jpg

மேட்டுர் அணையில் தண்ணீர் மளமளவென குறைந்து வருகிறது. தற்போது 78 அடி தண்ணீரே உள்ளது. தண்ணீர் குறைவதால் பெரிய மீன்கள் வலையில் சிக்குகின்றன. அணையில் பிடிபட்டு நேற்று சேலம் மீன் விற்பனை சங்கத்திற்கு வந்த 30 கிலோ எடை கொண்ட கட்லா ரக மீன். இவ்வகை மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

மயூ
05-04-2007, 12:46 PM
வாவ்... ஆளைகத் தூக்கி சாப்பிட்டு விடும் போல உள்ளதே!!!

விகடன்
05-04-2007, 01:27 PM
கண்டன ஊர்வலம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக சிறீலங்கா அரசின் அட்டூழியங்கள் வெளிப்பட ஆரம்பித்துவிட்டன என்று பார்க்குமிடத்தில் சந்தோசமே. ஆனால் அதற்கு தமிழ் நாட்டவரும் பலியாக்கப்படுவது கவலைக்குரிய விடயமே.

mgandhi
08-04-2007, 03:43 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_08-04-07_E1_08-0120CNI.jpg
கடற்கரைஅதிகாலயிலேயே பரபரப்பாகிவிடும். வாக்கிங், கிரிக்கெட் விளயாட்டு என்று ஒவ்வொருவரும் மும்முரமாக இருப்பார்கள். இன்று அதிகாலை கடற்கரை மணல் பரப்பில் இளஞர்கள் வாலிபால் விளயாடிய ரம்மியமான காட்சி.

mgandhi
09-04-2007, 05:39 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_09-04-07_E1_01-0420CNI.jpg
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று பகல் முழுவதும் வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள், மாலையில் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் கூட்டம் அலைமோதியது. படம்: விநாயகம்

mgandhi
10-04-2007, 07:17 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_10-04-07_E1_02-0220CNI-1.jpg
உலகின் பல பகுதிகளில் வசிக்கும் இந்திய பெண்களில் அழகியை தேர்ந்தெடுக்கும் வகயில் ''மிஸ் இந்தியா வேர்ல்டு'' அழகிப் போட்டி, அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கலந்துகொண்ட இந்திய அழகிகள், தாங்கள் வசிக்கும் நாட்டின் தேசியக் கொடியுடன் வலம் வருகின்றனர்.

பென்ஸ்
10-04-2007, 07:19 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_10-04-07_E1_02-0220CNI-1.jpg
''மிஸ் இந்தியா வேர்ல்டு'' அழகிப் போட்டி,
இதுவேறயா....
ஆமா யாரது... சொல்லவேயில்லை...
தகவலுக்கு நன்றி காந்தி...

mgandhi
11-04-2007, 05:20 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/FE_1104_MN_19BOX3.jpg

varsha
11-04-2007, 05:23 PM
படம் அருமை

mgandhi
13-04-2007, 06:37 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/high2.jpg
வெரிகுட் என டால்பினை தட்டி பாராட்டுகிறார் அதன் பயிற்சியாளர். சாஸ்தா என்ற இந்த டால்பின் அமெரிக்க கடற்படை பயிற்சி பெற்று வருகிறது என்றால் நம்ப முடிகிறதா?சான்டியாகோ பகுதியில் விலங்குகள் பயிற்சி மையம் அமைந்து உள்ளது.

விலங்குகளையும் ராணுவத்துக்காக பயன்படுத்திக் கொள்வதற்காகவே இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
இங்கு சாஸ்தா மாதிரி 75 டால்பின்களுக்கு வெடிகளை கண்டுபிடிக்கும் பயிற்சி தரப்படுகிறது.
கூடவே 25 கடல் சிங்கங்களுக்கும்தான்.

mgandhi
14-04-2007, 05:42 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_14-04-07_E1_03-0320CNI.jpg

ஊட்டியில் (14-4-2007) இன்று குதிரைப்பந்தயம் துவங்கியது. ஜாக்கியுடன் குதிரைகள் பாய்கின்றன. தொடர்ந்து ஒரு மாதம் ரேஸ் நடக்கிறது.

மனோஜ்
14-04-2007, 08:09 PM
ஊட்டியில் (14-4-2006) இன்று குதிரைப்பந்தயம் துவங்கியது. ஜாக்கியுடன் குதிரைகள் பாய்கின்றன. தொடர்ந்து ஒரு மாதம் ரேஸ் நடக்கிறது.
தேதி தவறா அல்லது சென்றவருடம் நடந்ததைகூருகிறீர்களா காந்தி

mgandhi
15-04-2007, 05:05 AM
தேதி தவறா அல்லது சென்றவருடம் நடந்ததைகூருகிறீர்களா காந்தி

மன்னிக்கவும் தேதி தவராக பதிந்து விட்டேன்.

mgandhi
15-04-2007, 05:21 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_15-04-07_E1_04-0520CNI.jpg
ஊட்டியில் நிலவும் குளுகுளு சீசனால் தாவரவியல் பூங்கா பசுமயாக காட்சி அளிக்கிற. இத காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

mgandhi
18-04-2007, 03:52 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_18-04-07_E1_06-0120CNI.jpg
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. ஐந்து யானைகள் முன்னே செல்ல, பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஓவியன்
18-04-2007, 04:03 AM
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவைக் கண் முன்னே நிறுத்தியமைக்கு நன்றிகள்.

pradeepkt
18-04-2007, 06:06 AM
ஆகா, சமயபுரமா...
எத்தனை நாளாச்சு கோயிலுக்குப் போய்... சமயபுரம் மாரியம்மன் திருச்சியில் இருக்கும் மற்ற பெருந்தெய்வங்கள் போல் பணக்காரர்களுக்கானவள் இல்லை.
வெறும் சுற்றுப் பதினெட்டுப் பட்டி கிராம மக்கள் தரும் காணிக்கையினாலேயே தமிழகத்தின் மூன்றாவது பணக்காரக் கோயிலாக விளங்குகிறது சமயபுரம்.
24 மணி நேரமும் பக்தர்களுக்கு அருள் புரியக் காத்திருக்கிறாள் அன்னை என்பது இன்னொரு சிறப்பு விஷயம்.

அத்தோடு சமயபுரத்துக்குப் பக்கத்திலேயே விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மாகாளி கோயிலும் உள்ளது. அந்தத் திருவிழாவும் சித்திரையில்தான்!

mgandhi
18-04-2007, 05:56 PM
ஆகா, சமயபுரமா...
எத்தனை நாளாச்சு கோயிலுக்குப் போய்... சமயபுரம் மாரியம்மன் திருச்சியில் இருக்கும் மற்ற பெருந்தெய்வங்கள் போல் பணக்காரர்களுக்கானவள் இல்லை.
வெறும் சுற்றுப் பதினெட்டுப் பட்டி கிராம மக்கள் தரும் காணிக்கையினாலேயே தமிழகத்தின் மூன்றாவது பணக்காரக் கோயிலாக விளங்குகிறது சமயபுரம்.
24 மணி நேரமும் பக்தர்களுக்கு அருள் புரியக் காத்திருக்கிறாள் அன்னை என்பது இன்னொரு சிறப்பு விஷயம்.

அத்தோடு சமயபுரத்துக்குப் பக்கத்திலேயே விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மாகாளி கோயிலும் உள்ளது. அந்தத் திருவிழாவும் சித்திரையில்தான்!

தகவளுக்கு நன்றி பிரதிப்

mgandhi
18-04-2007, 05:57 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_18-04-07_E1_03-0320CNI.jpg
சேலம் மாவட்டம் இடைப்பாடியில் கரடி தாயத்து விற்பனை ஜோராக நடந்து வருகிறது. 20 ரூபாய் தாயத்து வாங்கும் நபர்களுக்கு கரடி இலவசமாக ஆசீர்வாதம் தருகிறது. கரடியிடம் ஆசி வாங்குகிறான் ஒரு சிறுவன்.

mgandhi
19-04-2007, 05:55 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_19-04-07_E1_01-0120CNI.jpg
மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில், 2 மாத கோடகால நீச்சல் பயிற்சி நேற்று தொடங்கிய. சிறுவர், சிறுமியருக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கிறார் பயிற்சியாளர்.

mgandhi
20-04-2007, 05:55 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_20-04-07_E1_08-0120CNI1.jpg
கடல்நீர குடிநீராக்கும் திட்டம் பற்றி விளக்குவதற்காக சென்னை துறமுகத்தில் இருந்து செய்தியாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களை இன்று காலை கடலுக்குள் அழத்ச் சென்றனர். கப்பலில் புறப்பட்டு சிறி தூரம் சென்றதும், கடலுக்குள் கலர் கலராய் துள்ளித் திரிந்த ஜெல்லி மீன்கள்,
நன்றி தினகரன்.

mgandhi
22-04-2007, 04:53 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/pic1.jpg

ஓவியா
22-04-2007, 09:04 PM
படங்கள் அருமை.

பிடிதவர்களுக்கு நன்றி, பதிந்த காந்தி அண்ணாக்கும் நன்றி

ஓவியா
22-04-2007, 09:06 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_19-04-07_E1_01-0120CNI.jpg
மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில், 2 மாத கோடகால நீச்சல் பயிற்சி நேற்று தொடங்கிய. சிறுவர், சிறுமியருக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கிறார் பயிற்சியாளர்.


அருமையாக இருகின்றது.
பிஞ்சுகளின் ஆனந்தம் காண கண் கோடி வேண்டும்..


இந்த படத்தை அடுத்த கவிதை போட்டிக்கு கொடுக்கலாமே!!!!!!!!!

mgandhi
23-04-2007, 05:32 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/their20news.jpg

mgandhi
24-04-2007, 05:19 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/fpn4.jpg

அன்புரசிகன்
24-04-2007, 05:38 PM
வீட்டில் நிம்மதியாக இருப்பதற்கும் ஆப்பா,?

mgandhi
25-04-2007, 07:48 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/25_04_2007_018_002_001.jpg
நன்றி தினமலர்

mgandhi
03-05-2007, 07:35 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_03-05-07_E1_06-0220CNI.jpg
ராஜஸ்தான் மாநிலம் பைக்கானேரில் இந்திய ராணுவத்தின் சிறப்பு பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் ''அஷ்வமேதா'' என்ற பெயரில் நடந்து வருகின்றன. தரைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பீரங்கி ஒன்று சர்வசாதாரணமாக கால்வாய்க்குள் இறங்குகிறது.

நன்றி தினகரன்

அறிஞர்
03-05-2007, 07:41 PM
கால்வாயில் இறக்குறது முக்கியமல்ல...

எதிரியின் கோட்டையை கலக்குவது போல் போரில் இறங்கி தாக்கனும்...

mgandhi
05-05-2007, 06:53 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_05-05-07_E1_02-0220CNI.jpg
நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டப்பட உள்ள இடம் இதுதான். இதற்காக இப்பகுதியில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி 16-ம் தேதி இடிக்கப்படுகிறது.
நன்றி தினகரன்.

mgandhi
07-05-2007, 05:31 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_07-05-07_E1-2004-0920CNI.jpg
நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி இப்போது வறண்டு கிடக்கிறது. ஆனால், மணிமுத்தாறு அருவியில் மட்டும் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும். அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
நன்றி தினகரன்

mgandhi
08-05-2007, 05:52 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/FE_0805_PH_4_12_Cni.jpg

நன்றி தினத்தந்தி

mgandhi
09-05-2007, 06:07 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_09-05-07_E1_02-0320CNI.jpg
ஈரோடு மாவட்டம், பண்ணாரி செல்லும் வழியிலுள்ள வனப்பகுதியில் பண்ணை அருகேயுள்ள நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க குட்டிகளுடன் வந்த யானைகள்.

நன்றி தமிழ் முரசு

அறிஞர்
09-05-2007, 06:43 PM
யானைக்கூட்டத்தின் படம் அருமை.

mgandhi
10-05-2007, 06:24 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/fpn5.jpg
நன்றி தினமலர்

mgandhi
11-05-2007, 06:29 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_11-05-07_E1_02-0120CNI.jpg
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் கோடைகாலப் பின்னலாடைக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கண்காட்சியையட்டி நடந்த பேஷன் ஷோவில் வலம் வந்த மாடல்கள்.
நன்றி தினகரன்

mgandhi
13-05-2007, 04:41 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_13-05-07_E1_03-0320CNI.jpg
கோடை வெயிலால் பரிதவித்த இந்த மயில், ஓடை நீரை பருகி தாகத்தை தணித்துக் கொள்கிறது. இடம்: வண்டலூர் உயிரியல் பூங்கா
நன்றி தினகரன்

அன்புரசிகன்
13-05-2007, 04:46 PM
அருமையான படங்கள். நன்றி காந்தி.

sarcharan
14-05-2007, 02:35 PM
மயில்களும் மயிலும் சூப்பர்.... ஹி ஹி

mgandhi
14-05-2007, 06:30 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_14-05-07_E1-03-0520CNI.jpg
சென்னையில் வெயில் அளவு நேற்று சற்று குறைந்திருந்தது. புறநகர் பகுதிகளிலும் இதமான காற்று வீசியது. செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. மதுராந்தகத்தில் நேற்று மாலை ஜிலுஜிலு காற்றை அனுபவித்தபடி சிறகடித்துப் பறக்கும் பறவைகள்.
நன்றி தினகரன்

mgandhi
15-05-2007, 05:59 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_15-05-07_E1_06-0520CNI.jpg
இது நெதர்லாந்தின் ரோட்டர்டாம்ஸ் நகரம். 1940ம் ஆண்டு மே 14ம் தேதி அன்று ஜெர்மன் படைகள் வீசிய குண்டில் இந்த நகரம் சேதமடைந்தது. இதன் நினவாக நேற்று இங்கு சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது. குண்டு வீச்சில் சேதமடைந்த பகுதிகளின் எல்லை விண்ணில தெரியும் வகயில் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஒளியைப் பாய்ச்சிய காட்சி.
நன்றி தமிழ் முரசு

sinnavan
15-05-2007, 06:25 PM
இது நெதர்லாந்தின் ரோட்டர்டாம்ஸ் நகரம். 1940ம் ஆண்டு மே 14ம் தேதி அன்று ஜெர்மன் படைகள் வீசிய குண்டில் இந்த நகரம் சேதமடைந்தது. இதன் நினவாக நேற்று இங்கு சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது. குண்டு வீச்சில் சேதமடைந்த பகுதிகளின் எல்லை விண்ணில தெரியும் வகயில் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஒளியைப் பாய்ச்சிய காட்சி.
நன்றி தமிழ் முரசு

அழகாக உள்ளது.. நன்றி.. காந்தி அவர்களே...

mgandhi
16-05-2007, 05:49 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_16-05-07_E1_06-0420CNI.jpg
சீனாவின் ஷாங்காய் நகரில் ""சர்வதேச நிதி மையம்"" என்ற 101 மாடிக் கட்டிடத்தை ஜப்பானைச் சேர்ந்த மோரி நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஆயிரத்து 623 அடியில் உலகிலேயே மிக உயரமாக எழுப்பப்பட்டு வரும் இந்த கட்டிடம் அடுத்த ஆண்டில் திறப்பு விழா காண உள்ளது. உச்சிப் பகுதியில் நவீன இயந்திரங்களின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
நன்றி தமிழ் முரசு

அமரன்
16-05-2007, 05:53 PM
அருமை மோகன் காந்தி. அடுத்த ஆண்டு சீனாவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் போது இதனை அங்குரார்ப்பணம் செய்யப்போகின்றார்களாம்.

mgandhi
17-05-2007, 06:15 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_17-05-07_E1-04-0320CNI.jpg
ஊட்டியில் பழங்கால கார்களின் ஊர்வலம் நேற்று நடபெற்றlது

நன்றி தினகரன்.

அக்னி
17-05-2007, 06:36 PM
கண்ணைக் கவரும் அழகிய புகைப்படத் தொகுப்பு.

mgandhi
18-05-2007, 06:39 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/8-2.jpg
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாள மற்றும் நாள மறுநாள் நடக்கும் 111வ மலர் கணகாட்சிய முன்னிட்டு 30 வகயான டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வக்காக வக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள டோலியா மலர்கள்.நன்றி- தமிழ் முரசு

அமரன்
19-05-2007, 09:15 AM
மோகன் காந்திக்கு சிறு விண்ணப்பம் இதே போன்ற அபூர்வ பூக்களின் படங்களை அதிகமாகப் பதிக்கலாமே.

அறிஞர்
19-05-2007, 02:48 PM
அடுத்த வருட.. உலகின் பெரிய கட்டிடத்தை காண்பதில் மகிழ்ச்சி..

தற்போதைய உலகின் பெரிய கட்டிடம் (தைபே 101) கட்டும்.. ஒவ்வொரு நிலையும் சில வருடம் முன் கண்டு ரசித்தேன்... பிரமாண்டமான செயல்தான்.

ஓவியா
19-05-2007, 04:18 PM
அடுத்த வருட.. உலகின் பெரிய கட்டிடத்தை காண்பதில் மகிழ்ச்சி..

தற்போதைய உலகின் பெரிய கட்டிடம் (தைபே 101) கட்டும்.. ஒவ்வொரு நிலையும் சில வருடம் முன் கண்டு ரசித்தேன்... பிரமாண்டமான செயல்தான்.

உலகம் போகும் போக்கை பார்த்தால், தங்கமே, இது போல் கட்டிடங்களில் என்றாவது ஒருநாள் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்றுதான் என் எண்ணம் போகின்றது.

mgandhi
20-05-2007, 03:17 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_20-05-07_E1-05-0220CNI1.jpg
தீயணப்பு வீரர்களிடம் சிக்கிய பறக்கும் அணில்.
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_20-05-07_E1-05-0420CNI00.jpg
கிளைடர் விமான இறக்கை போன்ற அமப்புடன் அணிலின் பின் பகுதி உள்ளது.
நன்றி-தினகரன்

mgandhi
21-05-2007, 05:45 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/fpn9.jpg
நன்றி தினமலர்

mgandhi
22-05-2007, 05:55 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_22-05-07_E1_06-0220CNI.jpg
பிரான்சின் கேன்ஸ் நகரில் 60-வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. பாலிவுட் சார்பில் இதில் கலந்கொள்ள சென்றிருக்கும் இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுக்கிறார்.
நன்றி தமிழ் முரசு

mgandhi
23-05-2007, 06:09 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/00000.jpg
மெக்சிகோ நாட்டில் நடந்துவரும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் சென்றிருக்கும் பூஜா குப்தா, பாரம்பரிய உடைக்கான சுற்றில் கலக்கலாய் போஸ் கொடுக்கிறர்
நன்றி தமிழ் முரசு

அமரன்
23-05-2007, 06:16 PM
நன்றி காந்தி.

mgandhi
25-05-2007, 03:56 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/123.jpg
அமெரிக்காவில் ஓயோ மாகாணத்தில் உள்ள பூங்கா ஒன்றில் பாடும் பறவை ஒன்று தனது கூட்டில் உள்ள பறவைகளுக்கு பூச்சியை உணவாக அளிக்கிறது. தாயிடம் இருந்து உணவைப் பெற வாயைத் திறந்தபடி தயாராக இருக்கின்றன 3 சிறிய பறவைகள்.
நன்றி தினகரன்

mgandhi
27-05-2007, 05:21 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_27-05-07_E1-01-0220CNI.jpg
புதுச்சேரி சுண்ணாம்பாற்றில் சுற்றுலாத்றயின் சார்பில் முதன் முறயாக 6 விதமான நீர் விளயாட்டு சாகசம் நேற்று மால நடபெற்ற. இதில் பல்வேறு மாநிலங்கள சேர்ந்த 25 வீரர்கள் பங்கேற்றனர். சுற்றுலாப் பயணிகளும் படகில் சவாரி செய் மகிழ்ந்தனர்.
தினகரன் நன்றி

mgandhi
28-05-2007, 05:56 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_28-05-07_E1_06-0220CNI.jpg
மும்பை மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மதானத்தில் இந்திய குடியரசு கட்சி நேற்று பிரம்மாண்ட விழா நடத்தியது. நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள், நாடோடிகள் உள்பட ஒரு லட்சத்க்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் புத்தத்து றவிகள் முன்னிலயில் அந்த மதத்தில் சேர்ந்தனர்.
நன்று தமிழ் முரசு

விகடன்
28-05-2007, 06:17 PM
தெளிவான படங்கள். சிறப்பிக்கும் தகவல்கள்.

வாழ்த்துக்கள்,

அக்னி
28-05-2007, 06:57 PM
தாய்க்குருவி சேய்களுக்கு உணவூட்டுவது, மனதைத் தொடுகிறது...

நன்றி மோகன் காந்தி...

மனோஜ்
28-05-2007, 08:03 PM
அனைத்து படங்கள் தகவல்கள் அருமை நன்றி காந்தி

mgandhi
29-05-2007, 07:36 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/fpn_mix.jpg
நன்றி தினமலர்

mgandhi
29-05-2007, 06:27 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/Pg20120tenkasi.jpg
குற்றாலத்தில் இந்த ஆண்டு குளுகுளு சீசன் நேற்று முதல் வங்கியது. இதமான காற்றும் மிதமான மழழையுமாக குற்றாலம் களை கட்டி வருகிறது. மெயின் அருவியில் நேற்று மாலை முதல் தண்ணீர் ஆர்ப்பரித்து விழத் தூவங்கியுள்ளது. குறைந்த அளவு தண்ணீரிலும் சுற்றுலாப் பயணிகள் குதூகலமாய் குளித்து மகிழ்கின்றனர்
நன்றி தமிழ் முரசு

mgandhi
03-06-2007, 08:30 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DN_03-06-07_E1-04-0220CNI.jpg
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் தர்மமுனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நேற்று நடந்தது. தேவிபட்டினத்தில் இருந்து 5 கடல் மைல்கள் சென்று திரும்பும் இந்த போட்டியில் 13 படகுகள் பங்கேற்றன.
நன்றி தினகரன்

mgandhi
06-06-2007, 11:52 AM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_05-06-07_E1_08-1520CNI.jpg
அதிகரிக்கும் வெப்பத்தால் உருகும் இமயமல.http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_05-06-07_E1_08-0220CNI.jpg
அன்டார்டிகா கடல் பகுதியில் உருகும் பனிமலை
நன்றி தமிழ் முரசு

mgandhi
07-06-2007, 06:21 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/CNI1PAGE3.jpgநன்றி தனதந்தி

mgandhi
08-06-2007, 06:43 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_08-06-07_E1_06-0620CNI.jpg
நாசாவின் அட்லான்டிஸ் விண்கலம் ஏழு வீரர்களுடன், அமெரிக்காவின் புளோரிடா ஏவுதளத்திலிருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

அறிஞர்
08-06-2007, 06:49 PM
நாசாவின் புது ஆராய்ச்சி வெற்றி பெறட்டும்.

mgandhi
09-06-2007, 05:35 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_09-06-07_E1_08-0120CNI.jpg
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் அய்யனின் பாதத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்தார்.
நன்றி தமிழ் முரசு

விகடன்
09-06-2007, 05:40 PM
திருக்குறல் படிக்கத்தான் நேரமில்லை. திருவள்ளுவர் பாதம் பணியவாவது அம்மனிக்கு கிடைத்ததே.... நேரம்!

mgandhi
10-06-2007, 05:15 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_10-06-07_E1_02-0420CNI.jpg
வறட்சி காரணமாக இடம் பெயர்ந்து போன யானகள், இப்போது மீண்டும் முதுமலக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. கார்குடி அருகே நேற்று மாலை தங்களை அலட்சியப்படுத்திவிட்டு துணிச்சலாக பைக்கில் சென்ற இருவரை ஒரு யானை ஆவேசத்டன் துரத்கிறது.
நன்றி தமிழ் முரசு.

mgandhi
13-06-2007, 05:34 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_13-06-07_E1_08-0620CNI.jpg
நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இதையட்டி அவரது ரசிகர்கள் பல இடங்களில் பேனர் வைத்துள்ளனர். திருச்சி உறையூரில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ருபாய் நோட்டில் காந்தியின் உருவ படத்திற்கு பதில் ரஜினி படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ரஜினியை ரஜினிகாந்தி என்று குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி தமிழ்முரசு

அறிஞர்
14-06-2007, 03:30 PM
இந்த வயதிலும் கலக்கும் ஒருவருக்கு இன்னும் எத்தனை இரசிகர்கள்....

mgandhi
14-06-2007, 05:30 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/fpn_mix01.jpg
தன்றி தினமலர்

mgandhi
17-06-2007, 05:47 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_17-06-07_E1_02-0220CNI.jpg

''நல்ல வேளை.. ரெண்டு நாளா லேசா மழை பெஞ்சதால பீச் பக்கம் யாரையும் காணோம். நாம ஃப்ரீயா குளிக்க வேண்டியதான்...'' பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று தன்னந்தனியாக உலா வந்த குதிரை
நன்றி தமிழ் முரசு.

mgandhi
19-06-2007, 06:59 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/TM_19-06-07_E1_06-0320CNI.jpg
தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை கண்டித்தும் ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதை வலியுறுத்தி தலைநகர் பாங்காக்கில் நடந்த இசை நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் சிலையை மேடையில் நாற்காலி மீது வைத்து விழிப்புணர்வு பாடல்களை பாடுகிறார் ஒரு கலைஞர்.
நன்றி தமிழ் முரசு