PDA

View Full Version : மொபைல் எடு... பேப்பர் படி!



mgandhi
21-10-2006, 07:17 PM
நாளிதழ்கள் எல்லாம் இப்போது ஆன்லைனில் Сஇபேப்பர்Т வடிவத்தை எடுத்து வருகின்றன. தமிழில் உள்ள முக்கிய நாளிதழ்கள் எல்லாம் இந்த Сஇபேப்பர்Т வடிவத்துக்கு வந்துவிட்டன. ஒரு நாளிதழை எப்படி நீங்கள் பார்க்கிறீர்களோ, அப்படியே கம்ப்யூட்டரில் Сஇபேப்பர்Т வடிவிலும் பார்க்க, படிக்க முடியும். அதே லே-&அவுட், அதே டிசைன், அதே அனுபவம்!

இதன் அடுத்தகட்டம்தான் சுவாரஸ்ய மானது. குறிப்பாக, இப்போது உலகமே செல்போன் பின்னால்தான் போய்க் கொண்டிருக்கிறது. இளைஞர்களுடைய மீடியமே இன்று செல்போன்தான் என்று ஆகிவிட்டது. செல்போனிலேயே பாட்டு, படம், எல்லாம் வந்தபிறகு நாளிதழ்கள் இல்லாமல் இருந்தால் எப்படி? அதுவும் வந்துவிட்டது... Сமொபைல் பேப்பர்Т என்று பொருள்படும் Сஎம்&பேப்பர்Т என்ற பெயரில்! Сமொபைல் போன்களில்தான் ஏற்கெனவே செய்திகள் வருகின்றனவே, இது என்ன புதுசாய்Т என்று கேட்கிறீர்களா?

இன்று இருக்கும் செல்போன் தொழில்நுட்பத்தில் எல்லாம் டெக்ஸ்ட் மெஸேஜ்தான். அதுவும் செல் போனில் அடங்கக்கூடிய 160 எழுத்துக்குள் மட்டுமே உங்களுக்கான செய்திகள் துண்டும் துணுக்குமாக வந்துசேரும். அதுவும் தலைப்புச் செய்திகள் மட்டுமே. பல சமயங்களில் இதில் தலையும் புரியாது, காலும் புரியாது.

இதையெல்லாம் உடைத்துவிட்டு அடுத்தகட்டத்துக்குப் போவதுதான் Сஎம்&பேப்பர்Т. இது ஒரு சின்ன செல்போன் மென்பொருள். இந்த மென்பொருளை உங்கள் செல்போனில் டவுன்லோட் செய்துகொண்டால் போதும். அதன்பிறகு நீங்கள் விரும்பும் நாளிதழுக்குச் சந்தா செலுத்திவிட வேண்டும். அன்றாடம் காலை எத்தனை மணிக்கு நாளிதழ்கள் அப்டேட் செய்யப்படுகின்றனவோ அப்போதே உங்கள் செல்போனிலும் புதிய செய்திகள் வந்து விழுந்து விடும்!



Сஎம்&பேப்பТரில் இருக்கும் அழகே அதன் வடிவமும் துல்லியமும்தான். பேப்பர் படிப்பது போலவே பல்வேறு பகுதிகள் இதிலும் இருக்கும். உங்களுக்கு விருப்பமானது விளையாட்டுச் செய்திகள் என்றால், மெனுவில் போய் Сவிளை யாட்டுТ என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதன் கீழே அன்றைய செய்திகள் வண்ணப் படங்களோடு இடம்பெறும்.

மேலும் இது செல்போன் என்பதால், இங்கே வீடியோவையும் செய்திகளோடு இணைக்க முடியும். உதாரணமாக, ஆந்த்ரே அகாஸி டென்னிஸில் இருந்து ரிட்டையர் ஆகிறார் என்றால், அந்த நெகிழ்ச்சியான கணத்தை வீடியோவாகவும் சேர்த்தே பார்க்கலாம்.

Сஎம்&பேப்பТரில் இருக்கும் வசதிகளில் ஒன்று, அதற்கு இத்தனை எழுத்துக்கள்தான் இருக்க முடியும் என்ற கேரக்டர் லிமிட் கிடையாது. ஒவ்வொரு செய்தியும் மூன்று நான்கு பத்திகள் போகலாம். மேலும் இது செல்போனில் வரும் செய்தி. அதனால் செல்போனின் அத்தனை வசதிகளையும் இங்கே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உதாரணமாக, ஒரு செய்தியைப் படித்துவிட்டு உடனே நீங்கள் உங்கள் கருத்தை ஆசிரியருக்கு செல்போனிலேயே தட்டலாம். உங்கள் எண்ணத்தை அங்கே நடத்தப்படும் ஒரு வாக்கெடுப்பில் பங்கெடுத்துக்கொண்டு தெரிவிக்கலாம். அந்தச் செய்தியை அப்படியே இன்னொரு நண்பருக்கு அனுப்பி வைக்கலாம். அதை அப்படியே உங்கள் மொபைல் வலைப்பதிவில் (விஷீதீறீஷீரீ) வலையேற்றிவிட்டு, நீங்களும் உங்கள் நண்பர்களும் அதைப்பற்றி விவாதிக்கலாம்.

இங்கே ஒரு செய்தி என்பது, கறுப்பு& வெள்ளை பேப்பரில் சாதுவாக உட்கார்ந்துகொண்டிருப்பதில்லை. சட்டென அதற்கு கால்முளைத்து விடுகிறது. செல்போன் அதற்கு ஒரு வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது. ஒரு செய்தி இங்கே அதைச் சுற்றிய ஒரு செல்போன் சமூகத்தை உருவாக்கி விடுகிறது. அந்தச் செய்தியின் வீரியத்துக்கு ஏற்ப அது ரவுண்டு கட்டி அடிக்கும்.

நம்மைப் போலவே நாளிதழ்கள் படிக்கும் வழக்கம் குறைந்துவரும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. அதை எப்படியாவது உடைத்து, இளைய சமூகத்திடம் போய் சேர்த்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் அவர்கள் உருவாக்கியதுதான் இந்த Сஎம்&பேப்பர்Т. அங்கே உள்ள முக்கிய நாளிதழ்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, இந்த Сஎம்&பேப்பர்Т தொழில்நுட்பத்தை மேம்படுத்தும், பரவலாக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கியிருக்கின்றன. அந்த நிறுவனம்தான் இந்த Сஎம்&பேப்பர்Т மென்பொருளை உங்கள் செல்போனில் டவுன்லோட் செய்துகொள்ள அனுமதிக் கிறது. அதற்குப் பின் உங்களுக்கு விருப்பமான நாளிதழ்களுக்கு நீங்கள் சந்தா செலுத்திப் படித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இன்னொரு வசதி... இப்படி டவுன் லோட் ஆகும் செய்திகள் அப்படியே உங்கள் இன்பாக்ஸில் உட்கார்ந்துகொண்டு தொல்லைப்படுத்தாது. ஒவ்வொரு நாள் காலையும் புதிய செய்திகள் வந்து பழைய செய்திகளை அழித்துவிட்டு அதன்மேல் உட்கார்ந்துகொள்ளும்! அதனால் பெரிய அளவில் மெமரி தேவை என்ற பிரச்னையும் இங்கே இல்லை.

மேலும் இந்த Сஎம்&பேப்பர்Т, ஃபிளாஷ் என்ற மென்பொருளின் மூலம் செயல்படுவதால், இங்கே மொழி ஒரு தடையே இல்லை. நாளைக்கேகூட இங்கே இருக்கும் செல்போன் ஆபரேட்டர்கள் இந்த சேவையை மக்களுக்குக் கொடுக்க முடியும். உங்கள் மொழியில் உங்களுக்கு விருப்பமான பேப்பரை பஸ்ஸில் போய்க்கொண்டே படிக்கலாம். பறக்கும் ரயிலில் பறந்துகொண்டே படிக்கலாம்.

எல்லாம் டிஜிட்டல் தேவதையின் அருட்கடாட்சம்! பாப்புலர் நியூஸ் எது?

இன்றைக்கும் நீங்கள் ஜுனியர் விகடனை திறந்தால், முதலில் படிப்பது& சதா வாய் ஓயாமல் எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கும் கழுகாரைதான் இல்லையா? அப்புறம்தான் மற்ற பக்கங்களை நோக்கிப் போவீர்கள். உங்கள் பார்வையில் இதுதான் டாப் ரேட்டட் ஸ்டோரி.

பத்திரிகைகளுக்கு வாசகர்கள் எந்த பகுதியை படிக்க அதிகம் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பத்திரிகைகளுக்கு அது ஒருவகையில் முக்கியம் என்றால், வாசகர்களுக்கோ அது வேறோரு வகையில் முக்கியம். உலகம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது, படிக்கும் சுவைகள் எப்படி மாறிக்கொண்டிருக்கின்றன, எல்லாரும் என்ன படிக்க விரும்புகிறார்கள், என்ன புதிய துறைகள் மக்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது என்று உரசிப் பார்த்துக்கொள்வது அவசியம். அதற்கு ஓர் அரிய வாய்ப்பு இருக்கிறது. இதை கலெக்டிவ் இன்டலிஜென்ஸ் என்கிறார்கள்.

இணையத்தில் Сவலை 2.0Т இதை இன்னும் எளிமைப் படுத்தி இருக்கிறது. சுலபப்படுத்தி இருக்கிறது. Сடிக் டாட் காம்Т (http://digg.com/) என்ற வலைதளம் இணை யத்தில் பாப்புலர் கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றை வரிசைப்படுத்துகிறது. எப்படி?

அந்தக் கட்டுரையைப் படிக்கும் நீங்கள்தான் அதற்கு ஓட்டுப் போடப் போடப்போகிறீர்கள். இந்த வார மிஸ்டர் கழுகு பக்கத்தை இணையத்தில் படித்தீர்கள். நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறதா? உடனே பக்கத்தில் இருக்கும் Сடிக்Т சுட்டியை அழுத்துங்கள்.

உங்களைப் போல் மிஸ்டர் கழுகு கட்டுரையை பல ஆயிரம் பேர் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்தால் அதுதான் அன்றைய நாளின் சூப்பர் ஹிட் ஸ்டோரி. அதேபோல் அந்த வாரத்தின், அந்த மாதத்தின், அந்த ஆண்டின் சூப்பர் ஹிட்கள் எவை என்று அறியப்படுகிறது. இப்படி உருவாகும் ஒரு வலைசமூகத்துக்கு Сசோஷியல் நியூஸ் கம்யூனிட்டிТ என்று பெயர்.

பெரிய பெரிய மார்க்கெட்டிங் சர்வேக்கள் எல்லாம் வைத்து, படிப்பவர்களின் தேவைகள் என்ன, சுவை என்ன என்று மண்டையை உடைத்துக் கொள்வதைவிட, Сடிக் டாட் காம்Т வலைதளத்தைத் தொடர்ந்து பார்த்து வந்தாலே போதும். படிப்பவர்களின் பல்ஸ் புரிந்து விடும்!

இதேபோல் புகழோடு இருக்கும் மற்ற பாப்புலாரிட் டியை அளவிடும் வலை 2.0 தளங்கள்:

1. டிக்டாட்.யூஸ் (http://diggdot.us/)
2. காப்பர் (http://gabbr.com/)
3. ரெட்டிட் (http://reddit.com/)
நன்றி ஜுனியர் விகடன்

роЗройро┐ропро╡ройрпН
22-10-2006, 04:59 AM
நல்ல தகவல் தந்த காந்திக்கு ஒரு ஜே....

роУро╡ро┐ропро╛
23-10-2006, 07:58 PM
நல்ல விசயம்தான்

நன்றி ஜுனியர் விகடன்
நன்றி மோகன் காந்தி.