PDA

View Full Version : ஹைக்கூ- 01 - காளான்

meera
18-10-2006, 09:58 AM
யாரை பாதுகாக்க
நீ
குடை பிடிக்கிறாய்?
-காளான்.

Mano.G.
18-10-2006, 10:07 AM
என் இன விருத்திக்கா
ஒற்றை காலில்
நிற்கிறேன்

அதோடு காற்றடித்து
அடியோடு சாய்ந்தும்
மடிகிரேன்

-காளான்

meera
18-10-2006, 10:22 AM
என் இன விருத்திக்கா
ஒற்றை காலில்
நிற்கிறேன்

அதோடு காற்றடித்து
அடியோடு சாய்ந்தும்
மடிகிரேன்

-காளான்

நன்றி மனோ அண்ணா.

நல்ல கவிதை தொகுப்பு.

தாமரை
18-10-2006, 02:00 PM
யாரை பாதுகாக்க
நீ
குடை பிடிக்கிறாய்?
-காளான்.

உற்றுப் பார் பெண்ணே!
அது குடை அல்ல
கருத்தரித்த
என் வயிறு
..
..
இப்படிக்கு
காளான்.

ஓவியா
18-10-2006, 08:20 PM
யாரை பாதுகாக்க
நீ
குடை பிடிக்கிறாய்?
-காளான்.

தன்னை ;)

ஓவியா
18-10-2006, 08:46 PM
என் இன விருத்திக்கா
ஒற்றை காலில்
நிற்கிறேன்

அதோடு காற்றடித்து
அடியோடு சாய்ந்தும்
மடிகிரேன்

-காளான்

இடி இடிக்க
பயந்த வானத்து நச்சத்திரம்
ஒளிந்து கொள்ள தேடிய ஒரு குகை தான் புமியோ

ஆனால் இப்படி என் கண்ணில் பட்டு
குழம்பில் கொதிக்கின்ராயே....

பென்ஸ்
23-10-2006, 08:59 AM
யாரை பாதுகாக்க
நீ
குடை பிடிக்கிறாய்?
-காளான்.

வான் பொழிந்திட்ட
முத்த ஈரம்
காயாதிருக்கவோ ..!!!!:rolleyes: :rolleyes: :D :D

தாமரை
23-10-2006, 09:24 AM
வான் பொழிந்திட்ட
முத்த ஈரம்
காயாதிருக்கவோ ..!!!!:rolleyes: :rolleyes: :D :D

முகில் பொழிந்த
ஈர முத்தத்தில்
சிலிர்தெழுந்தன
என் ரோமங்கள்
காளான்கள்..
சொன்னது
பூமி

பென்ஸ்
23-10-2006, 11:42 AM
முகில் பொழிந்த
ஈர முத்தத்தில்
சிலிர்தெழுந்தன
என் ரோமங்கள்
காளான்கள்..
சொன்னது
பூமி

பொழிந்த முத்தத்தில்
வழிந்தோடும் தண்ணிர்
ஆனந்த கண்ணீரோ..!!!:rolleyes: :rolleyes: :D

அல்லிராணி
23-10-2006, 11:46 AM
பொழிந்த முத்தத்தில்
வழிந்தோடும் தண்ணிர்
ஆனந்த கண்ணீரோ..!!!:rolleyes: :rolleyes: :D
வளப்பமான பூமியைக் கண்டு
கருத்த மேகம்
விட்ட ஜொள்ளு
மழை..

தாமரை
23-10-2006, 12:03 PM
வளப்பமான பூமியைக் கண்டு
கருத்த மேகம்
விட்ட ஜொள்ளு
மழை..

ஜொள்ளு விட்டதால் தான்
முகிலின் சாயம்
வெளுத்து விட்டதோ!!!:confused: :confused: :confused:

பென்ஸ்
23-10-2006, 12:16 PM
வளப்பமான பூமியைக் கண்டு
கருத்த மேகம்
விட்ட ஜொள்ளு
மழை..

ஜொள்ளை துடைக்க
பூமி கொடுத்த
வண்ண கைக்குட்டை ..!!!
---வானவில்..

பென்ஸ்
23-10-2006, 12:18 PM
ஜொள்ளு விட்டதால் தான்
முகிலின் சாயம்
வெளுத்து விட்டதோ!!!:confused: :confused: :confused:

ஜொள்ளு மீண்டும் மீண்டும் விடு என
பூமி தளிர்விட்டு
பச்சை கொடி காட்டுகிறதோ..!!!:D :D :D

தாமரை
23-10-2006, 12:23 PM
ஜொள்ளை துடைக்க
பூமி கொடுத்த
வண்ண கைக்குட்டை ..!!!
---வானவில்..

பூமிக்கு
ஃபிலிம் காட்டுகிறது மேகம்
வானவில்
(வான வில் பூமியினால் உருவாவதில்லை..)

பென்ஸ்
23-10-2006, 12:38 PM
சூரியன் தந்த
இரவல் சட்டைய்ல்
பூமிக்கு ஃபிலிம் காட்டுகிறது
மேகம்
வானவில்
(வான வில் பூமியினால் உருவாவதில்லை..)

வெள்ளை கறுப்பு மேக பருத்தியில்
வண்ண சேலை பின்னுகிறாள்
பூமித்தாய்..!!!

வானவில்...

தாமரை
23-10-2006, 12:46 PM
ஜொள்ளு மீண்டும் மீண்டும் விடு என
பூமி தளிர்விட்டு
பச்சை கொடி காட்டுகிறதோ..!!!:D :D :D

மரமாய் உயர்ந்த
பச்சைக் கொடிவெட்டி
கான்கிரீட் குத்தீட்டிகள் நடப்பட்டன..
பயத்தில்
வெளுத்தது மேகமுகம்..

தாமரை
23-10-2006, 12:51 PM
வெள்ளை கறுப்பு மேக பருத்தியில்
வண்ண சேலை பின்னுகிறாள்
பூமித்தாய்..!!!

வானவில்...

வெள்ளொளி பிரிந்து
வண்ணம் பிறந்தது
வானவில்

மக்கள் பிரிந்து
வர்ணம் பிரிந்தது
சாதி

பென்ஸ்
23-10-2006, 01:09 PM
மரமாய் உயர்ந்த
பச்சைக் கொடிவெட்டி
கான்கிரீட் குத்தீட்டிகள் நடப்பட்டன..
பயத்தில்
வெளுத்தது மேகமுகம்..

சூரியனுக்கு கரும்புகை கொடிகாட்டி
சிரித்த கான்கிரீட் குத்தீட்டிகளை
முகம்கறுத்த முகில் காறிதுப்பியது..
--- ஆசிட் மழை

தாமரை
23-10-2006, 01:17 PM
சூரியனுக்கு கறும்புகை கொடிகாட்டி
சிரித்த கான்கிரீட் குத்திட்டிகளை
முகம்கறுத்த மூங்கிலின் காறிதுப்பியது..
--- ஆசிட் மழை

மேகம் லஞ்சம் வாங்கியது
வெள்ளி ஐயோடைடு
கறுப்புச் சந்தையில் மழை

http://www.hinduonnet.com/thehindu/seta/2002/05/30/stories/2002053000190300.htm

meera
23-10-2006, 03:45 PM
அடடா, மூன்று நாள் சரியா மன்றம் பக்கம் வரமுடியல.இங்க என்ன நடக்குது யாராவது கொஞ்சம் சொல்லகூடாதா?

meera
23-10-2006, 03:47 PM
செல்வா அண்ணா,பென்ஸ் போட்டி கவிதை சூப்பரா இருக்கு தொடருங்கள்.

gragavan
24-10-2006, 05:45 AM
அடடா, மூன்று நாள் சரியா மன்றம் பக்கம் வரமுடியல.இங்க என்ன நடக்குது யாராவது கொஞ்சம் சொல்லகூடாதா?என்ன நடக்குது! பெஞ்சு கவித கவிதயா எழுதித் தள்ளுறாரு.......கவிராயர் பெஞ்சமின்னு அப்படீன்னு பட்டந் தர வேண்டியதுதான். அதுலயும் "ஞாலமேவும் காதற் கவியராய நாகர்கோயில் பெஞ்சமின்"னு பட்டம் கொடுக்கனுமே!:D:D:D

பென்ஸ்
24-10-2006, 06:07 AM
என்ன நடக்குது! பெஞ்சு கவித கவிதயா எழுதித் தள்ளுறாரு.......கவிராயர் பெஞ்சமின்னு அப்படீன்னு பட்டந் தர வேண்டியதுதான். அதுலயும் "ஞாலமேவும் காதற் கவியராய நாகர்கோயில் பெஞ்சமின்"னு பட்டம் கொடுக்கனுமே!:D:D:D

அப்பிடின்னா என்னான்னு சொல்லும்...
நல்லதா பட்டால் நான் வச்சுகிறென்...
இல்லைனா தாமரைக்கு கொடுத்திடலாம்....
என்னை எழுத தூண்டுவதே அவர்தானே....

gragavan
24-10-2006, 06:27 AM
அப்பிடின்னா என்னான்னு சொல்லும்...
நல்லதா பட்டால் நான் வச்சுகிறென்...
இல்லைனா தாமரைக்கு கொடுத்திடலாம்....
என்னை எழுத தூண்டுவதே அவர்தானே....எல்லாம் நல்லதுதானய்யா........இன்னைக்கெல்லாம் நல்லதோ கெட்டதோ பட்டமில்லாம இருக்குறது சட்னி சாம்பார் இல்லாத இட்டிலி மாதிரி...யாரும் தொட மாட்டாங்க. பேசாம ஏத்துக்கோங்க. தாமரைக்கு வேற பட்டம் கொடுத்திரலாம்.
"புறா இறா சுறா கிளி கிழித்துக் கொண்டான் தாமரைச் செல்வன்" அப்படீன்னு கூட பட்டம் குடுக்கலாம். :D:D:D:D:D:D:D

பென்ஸ்
24-10-2006, 06:31 AM
எல்லாம் நல்லதுதானய்யா........இன்னைக்கெல்லாம் நல்லதோ கெட்டதோ பட்டமில்லாம இருக்குறது சட்னி சாம்பார் இல்லாத இட்டிலி மாதிரி...யாரும் தொட மாட்டாங்க. பேசாம ஏத்துக்கோங்க. தாமரைக்கு வேற பட்டம் கொடுத்திரலாம்.
"புறா இறா சுறா கிளி கிழித்துக் கொண்டான் தாமரைச் செல்வன்" அப்படீன்னு கூட பட்டம் குடுக்கலாம். :D:D:D:D:D:D:D

சூப்பரப்பு....:D :D :D :D

பென்ஸ்
24-10-2006, 07:13 AM
இரவு முழுவதும்
நிலவுடன் அலைந்ததால்
வேர்க்கிறாயோ மேகமே..!!!!

அல்லிராணி
24-10-2006, 10:14 AM
என்ன நடக்குது! பெஞ்சு கவித கவிதயா எழுதித் தள்ளுறாரு.......கவிராயர் பெஞ்சமின்னு அப்படீன்னு பட்டந் தர வேண்டியதுதான். அதுலயும் "ஞாலமேவும் காதற் கவியராய நாகர்கோயில் பெஞ்சமின்"னு பட்டம் கொடுக்கனுமே!:D:D:D

உங்களைக் கவுத்தணும் திட்டம் போடறார் ராகவன்.. புரிந்து கொள்ளுங்கள் பென்ஸூ...

ராகவா!

கவிராயரா... கவியராயரா.. கவ்வியராயரா.. கவிழ்ந்தராயரா

என்ன சொல்ல நினைச்சீங்களோ... தெளிவா சொல்லிடுங்க..

பென்ஸ்
24-10-2006, 10:21 AM
ஏதோ ஒன்னு... நல்லதா நினைச்சார்...
இரவின் பூவே.. இது இயல்பான பொறாமைதானே???

அல்லிராணி
24-10-2006, 10:26 AM
ஏதோ ஒன்னு... நல்லதா நினைச்சார்...இரவின் பூவே.. இது இயல்பான பொறாமைதானே???

இங்கே ஒரு கேள்விக்குறி காணவில்லை

அல்லிராணி
24-10-2006, 10:33 AM
ஏதோ ஒன்னு... நல்லதா நினைச்சார்...
இரவின் பூவே.. இது இயல்பான பொறாமைதானே???

பட்டம் கண்டு பொறாமையா
அல்லித் தண்டு
அவள் உள்ளம் போலவே
உள்ளீடற்றது..

அறிஞர்
24-10-2006, 01:11 PM
செல்வன், பென்ஸ் போட்டிக்கவிதைகள் அருமை.... புது பட்டம் பெற்றுள்ள கவிராயருக்கு வாழ்த்துக்கள் (ராயர் என்றால் என்ன? :rolleyes: :rolleyes: :rolleyes: )

தாமரை
24-10-2006, 03:21 PM
என்ன நடக்குது! பெஞ்சு கவித கவிதயா எழுதித் தள்ளுறாரு.......கவிராயர் பெஞ்சமின்னு அப்படீன்னு பட்டந் தர வேண்டியதுதான். அதுலயும் "ஞாலமேவும் காதற் கவியராய நாகர்கோயில் பெஞ்சமின்"னு பட்டம் கொடுக்கனுமே!:D:D:D

ஆகாயத்தில் மிதந்து கொண்டிருப்பவருக்கு எப்படி ஞாலமேவும் என பட்டம் தருவது... (ஓஓஓ.. அந்தக் கதை உங்களுக்குத் தெரியாதா?:rolleyes: :rolleyes: :rolleyes: )

தாமரை
24-10-2006, 03:24 PM
எல்லாம் நல்லதுதானய்யா........இன்னைக்கெல்லாம் நல்லதோ கெட்டதோ பட்டமில்லாம இருக்குறது சட்னி சாம்பார் இல்லாத இட்டிலி மாதிரி...யாரும் தொட மாட்டாங்க. பேசாம ஏத்துக்கோங்க. தாமரைக்கு வேற பட்டம் கொடுத்திரலாம்.
"புறா இறா சுறா கிளி கிழித்துக் கொண்டான் தாமரைச் செல்வன்" அப்படீன்னு கூட பட்டம் குடுக்கலாம். :D:D:D:D:D:D:D

ஆடு, மாடு, கோழி, ஆமை, முயல், மான், பன்றி, காடை, கௌதாரி, காட்டுக்கோழி, நத்தை, ஆக்டோபஸ், சிப்பி, வான்கோழி, வௌவால் இன்ன பிற ஜீவன்கள் என்ன பாவம் செய்தன ராகவன்? அவற்றையும் சேர்க்கலாமே!!!:D :D :D

meera
24-10-2006, 03:39 PM
ஆடு, மாடு, கோழி, ஆமை, முயல், மான், பன்றி, காடை, கௌதாரி, காட்டுக்கோழி, நத்தை, ஆக்டோபஸ், சிப்பி, வான்கோழி, வௌவால் இன்ன பிற ஜீவன்கள் என்ன பாவம் செய்தன ராகவன்? அவற்றையும் சேர்க்கலாமே!!!:D :D :D
அட,இது ரொம்ப நல்லா இருக்கே!!!!!!!!!!

ராகவன் இதையும் கொஞ்சம் பரிசீலனை பண்ணக்கூடாதா???

பென்ஸ்
24-10-2006, 05:25 PM
அட,இது ரொம்ப நல்லா இருக்கே!!!!!!!!!!

ராகவன் இதையும் கொஞ்சம் பரிசீலனை பண்ணக்கூடாதா???

அதேல்லாம் இருக்கட்டும்...:rolleyes: :rolleyes:

உங்கள் கவிதைகளை படித்து விமர்சனம் மட்டுமே எழுதி
கொண்டிருந்த நானே கிறுக்க ஆரம்பித்தாயிற்று... :rolleyes: :rolleyes:
ஆனால் மீரா பதிப்பது குறைந்துள்ளதே???:confused: :confused:
பணி பளுவா????:rolleyes: :rolleyes:
மீராவின் கவிதைகளை எதிர்பாக்கிறேன்....:) :)

meera
25-10-2006, 11:13 AM

நன்றி நண்பரே,

முதலில் நீங்கள் கவிராயர் ஆனதற்கு என் வாழ்த்துகள்.

வேலை பளு ஒன்றும் இல்லை தீபாவளியை முன்னிட்டு 5 நாள் விடுமுறை.அதனால் தான் பதிவுகள் குறைந்துவிட்டது நாளை முதல் பதிவுகளை தொடர்கிறேன்.

பென்ஸ்
25-10-2006, 11:17 AM
முதலில் நீங்கள் கவிராயர் ஆனதற்கு என் வாழ்த்துகள்..

கவிராயரா....!!!???? :rolleyes: :p :p :D :D :eek: :eek: (விவேக் ஸ்டைலில் வாசிக்கவும்)

அட போ பிள்ளை... :p
பிளச்சு போ..., :rolleyes:
எதோ ராகவன் தெரியாம சொல்லிபொட்டாரு... :D :D
இதை எல்லாம் பெருசா எடுத்துகிட்டு...!!!
ஐயோ ஐயோ.. உங்களை எல்லாம் பாத்தா...
(இப்பதான் பழைய வடிவேல் ஸ்டைலுக்கே வந்திருக்கிறென்)

தாமரை
25-10-2006, 11:40 AM
ஆடு, மாடு, கோழி, ஆமை, முயல், மான், பன்றி, காடை, கௌதாரி, காட்டுக்கோழி, நத்தை, ஆக்டோபஸ், சிப்பி, வான்கோழி, வௌவால் இன்ன பிற ஜீவன்கள் என்ன பாவம் செய்தன ராகவன்? அவற்றையும் சேர்க்கலாமே!!!:D :D :D

நிஜமாவே அத்தனையும் சாப்பிட்டிருக்கேன்.. கூடவே ஈசல், சுறா, இறால், லாப்ஸ்டர் இன்னும் பலவும் உண்டு...

பென்ஸ்
25-10-2006, 12:13 PM
சிலை பிளக்க காத்திருக்கும் தேவதை
கால்லாய் போனதோ கண்ணன் நெஞ்சம்...
குறிபாத்து சொல் கிளியே..!!!

--மீரா

கிளி .. மீரா... நல்ல காம்பினேசன் இல்லையா செல்வரே...

meera
26-10-2006, 04:38 AM
சிலை பிளக்க காத்திருக்கும் தேவதை
கால்லாய் போனதோ கண்ணன் நெஞ்சம்...
குறிபாத்து சொல் கிளியே..!!!

--மீரா

கிளி .. மீரா... நல்ல காம்பினேசன் இல்லையா செல்வரே...

சிலை
தேவதை
கல்
கண்ணன்

என்ன இது சின்ன புள்ளதனமா?????:confused: :confused: :confused:

கிளிக்கு ஒன்னும் புரியல

கொஞ்சம் தெளிவா சொன்னா கிளி குறிபாத்து சொல்ல முயற்சி செய்யுமில்ல :eek: :eek: :eek:

பென்ஸ்
26-10-2006, 07:15 AM
கண்ணன் சிலை பிளந்து மீராவை தன்னுள் அடக்கி கொண்டதாய் எப்போதோ வாசித்த நியாபகம்....
அந்த நியாபகத்துல எழுதி போட்டேன்....

கதை அறியா
கிளி மேல்
எதற்க்கு பழி...!!!!

meera
26-10-2006, 08:33 AM
கண்ணன் சிலை பிளந்து மீராவை தன்னுள் அடக்கி கொண்டதாய் எப்போதோ வாசித்த நியாபகம்....
அந்த நியாபகத்துல எழுதி போட்டேன்....

கதை அறியா
கிளி மேல்
எதற்க்கு பழி...!!!!

ஓ அப்படியா!!!!!!!!!!!!!!! இந்த கதை எனக்கு தெரியாது ஹி ஹி:D :D :D :D

அல்லிராணி
26-10-2006, 04:04 PM
கண்ணன் சிலை பிளந்து மீராவை தன்னுள் அடக்கி கொண்டதாய் எப்போதோ வாசித்த நியாபகம்....
அந்த நியாபகத்துல எழுதி போட்டேன்....

கதை அறியா
கிளி மேல்
எதற்க்கு பழி...!!!!

அதாவது மீராவின் பாடல் கேட்டு கண்ணனின் நெஞ்சே வெடித்தது என சொல்லுகிறீரா??

கனிந்தது.. இளகியது.. திறந்தது என்று எத்தனயோ பதங்கள் இருக்க வெடித்தது என்று சொல்லக் காரணம் என்ன?

gragavan
26-10-2006, 05:45 PM
ஆகாயத்தில் மிதந்து கொண்டிருப்பவருக்கு எப்படி ஞாலமேவும் என பட்டம் தருவது... (ஓஓஓ.. அந்தக் கதை உங்களுக்குத் தெரியாதா?:rolleyes: :rolleyes: :rolleyes: )தெரியாதய்யா தெரியாது. கொஞ்சஞ் சொல்லுங்களேன்

ஓவியா
26-10-2006, 06:47 PM
சிலை பிளக்க காத்திருக்கும் தேவதை
கால்லாய் போனதோ கண்ணன் நெஞ்சம்...
குறிபாத்து சொல் கிளியே..!!!

--மீரா

கிளி .. மீரா... நல்ல காம்பினேசன் இல்லையா செல்வரே...

அழகான வரிகள் பெஞ்சு
கவிழ்ந்த குடத்தில் நீர் இருக்காது......அப்படியா

meera
27-10-2006, 05:05 AM
அதாவது மீராவின் பாடல் கேட்டு கண்ணனின் நெஞ்சே வெடித்தது என சொல்லுகிறீரா??
கனிந்தது.. இளகியது.. திறந்தது என்று எத்தனயோ பதங்கள் இருக்க வெடித்தது என்று சொல்லக் காரணம் என்ன?

இப்படி எல்லாம் ஏதாவது ஆகும்னு தெரிஞ்சுதான் நான் பாட்டு பாடரது இல்ல.:rolleyes: :rolleyes:

தாமரை
27-10-2006, 07:22 AM
அழகான வரிகள் பெஞ்சு
கவிழ்ந்த குடத்தில் நீர் இருக்காது......அப்படியா

தண்ணீரில் கவிழ்ந்த குடத்தில் தண்ணீர் இருக்குமா இருக்காதா?:eek: :eek: :eek:
குடம் நிரம்பி வழியுதா இல்லை நீங்கள் அசடு வழிகிறீகளா பார்ப்போம்:D :D :D

ஓவியா
27-10-2006, 06:28 PM
தண்ணீரில் கவிழ்ந்த குடத்தில் தண்ணீர் இருக்குமா இருக்காதா?:eek: :eek: :eek:
குடம் நிரம்பி வழியுதா இல்லை நீங்கள் அசடு வழிகிறீகளா பார்ப்போம்:D :D :D

:D :D :D
பதில் போட தெரியவில்லை

ஓவியா
27-10-2006, 06:33 PM
சிலை பிளக்க காத்திருக்கும் தேவதை
கால்லாய் போனதோ கண்ணன் நெஞ்சம்...
குறிபாத்து சொல் கிளியே..!!!

...

பெஞ்சு,

ஆண்களுக்கு கல் நெஞ்சம்னு சொன்ன ஏத்துகவா போறங்க...:cool:

எதோ நீங்களாவது உண்மையை சொனீங்களே....
கண்ணனுக்கு கல் நெஞ்சம்னு...

தாமரை
28-10-2006, 01:33 AM
பெஞ்சு,

ஆண்களுக்கு கல் நெஞ்சம்னு சொன்ன ஏத்துகவா போறங்க...:cool:

எதோ நீங்களாவது உண்மையை சொனீங்களே....
கண்ணனுக்கு கல் நெஞ்சம்னு...

அற்பமான இந்தக்கல்
சிற்பமானது..
இன்னும் ஏன் உன் விழிகளால்
செதுக்கிக் கொண்டிருக்கிறாய்..

தாமரை
28-10-2006, 01:41 AM
தெரியாதய்யா தெரியாது. கொஞ்சஞ் சொல்லுங்களேன்

அடுத்த ஃபாரம் மால் சந்திப்பில்......"சந்தி"யைச் சிரிக்க வைத்தால் தித்திப்பாக இருக்குமல்லவா!!!

பென்ஸ்
28-10-2006, 06:58 AM
அற்பமான இந்தக்கல்
சிற்பமானது..
இன்னும் ஏன் உன் விழிகளால்
செதுக்கிக் கொண்டிருக்கிறாய்..

தாமரை என்ன சுட்டவாசனை வருதே....
இது என்னோடது...
விழியே,
நீ செதுக்கிய
சிலை நான்..
உளியே,
ஓய்ந்து போகதே...
உடைந்து போவேன்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5812

தாமரை
28-10-2006, 08:28 AM
stselvan][/B]
அற்பமான இந்தக்கல்
சிற்பமானது..
இன்னும் ஏன் உன் விழிகளால்
செதுக்கிக் கொண்டிருக்கிறாய்..

தாமரை என்ன சுட்டவாசனை வருதே....
இது என்னோடது...
விழியே,
நீ செதுக்கிய
சிலை நான்..
உளியே,
ஓய்ந்து போகதே...
உடைந்து போவேன்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5812 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5812)

வித்தியாசம்
1. உங்கள் கவிதையில் கல் நீங்கள்
என் கவிதையில் கல் கல்தான்
2. உங்கள் கவிதையில் செதுக்குவதை நிறுத்தாதே என்கிறீர்கள்
என் கவிதை நிறுத்து என்கிறது

நான் சொல்வது என்னவென்றால்.... க்கும்... அதாவது கல்லையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணே உன் பார்வையை கொஞ்சம் திருப்பு
நீங்கள் சொல்லுவது என்னவென்றால் என்னை சிற்பமாக்கிய பெண்ணே என்னை பார்ப்பதை நிறுத்திவிடாதே என்று...
வித்தியாசம் இருக்கில்லையா.. (இதைப் பார்த்துட்டு என் வீட்டு வாசலில் தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை கட்டி நிக்கப் போறாங்க.. அவங்களுக்கும் கதை காப்பியில்லைன்னு சமாளிஃபிகேஷன் சொல்ல ஐடியா வேணுமில்ல...:D :D :D )

பென்ஸ்
28-10-2006, 02:13 PM
[/i]
இதைப் பார்த்துட்டு என் வீட்டு வாசலில் தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை கட்டி நிக்கப் போறாங்க.. அவங்களுக்கும் கதை காப்பியில்லைன்னு சமாளிஃபிகேஷன் சொல்ல ஐடியா வேணுமில்ல...:D :D :D )

செல்வரே முதல் ஆள் நான் தான்....:rolleyes: :rolleyes:
ஓசியில் சொல்லி தருவதாக இருந்தால்...:D :D

ஓவியா
29-10-2006, 01:54 PM
[/I]
வித்தியாசம்
1. உங்கள் கவிதையில் கல் நீங்கள்
என் கவிதையில் கல் கல்தான்
2. உங்கள் கவிதையில் செதுக்குவதை நிறுத்தாதே என்கிறீர்கள்
என் கவிதை நிறுத்து என்கிறது

நான் சொல்வது என்னவென்றால்.... க்கும்... அதாவது கல்லையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணே உன் பார்வையை கொஞ்சம் திருப்பு
நீங்கள் சொல்லுவது என்னவென்றால் என்னை சிற்பமாக்கிய பெண்ணே என்னை பார்ப்பதை நிறுத்திவிடாதே என்று...
வித்தியாசம் இருக்கில்லையா..

:D :D :D )

(செல்வன் அண்ணா/ பெஞ்சு) இரண்டு கவிதையும் அருமை....
இரண்டுமே இரண்டு திசையை நோக்கி....
ஆனால் எதோ ஒன்று, அதனுள் வித்தியாசம் இல்லாமல்.....

ஓவியா
29-10-2006, 02:03 PM
[/I]

நான் சொல்வது என்னவென்றால்.... க்கும்... அதாவது கல்லையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
பெண்ணே உன் பார்வையை கொஞ்சம் திருப்பு

நீங்கள் சொல்லுவது என்னவென்றால் என்னை சிற்பமாக்கிய
பெண்ணே என்னை பார்ப்பதை நிறுத்திவிடாதே என்று...

:D :D :D

:) :)

meera
30-10-2006, 03:49 AM
:D :D :D
பதில் போட தெரியவில்லை

ஓவியா, நீங்களும், நானும் செல்வா அண்ணாவோடு பேச முடியாம அடிக்கடி இப்படி மாட்டிக்கறோம்.

ஒரு ஐடியா: பக்கத்துல வாங்க, நாம ரெண்டு பெரும் நல்லா பேச தெரிஞ்சவங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கலாம்.அப்பறம் செல்வா அண்ணாகிட்ட பேசலாம். என்ன ஓவியா ஓகே வா?? :eek: :eek: :eek:

தாமரை
02-11-2006, 12:17 PM

இவ்வளவு நாளா நான் ட்ரெய்னிங் தானே கொடுத்திட்டு இருக்கேன்

அல்லிராணி
02-11-2006, 12:35 PM
[/I]

வித்தியாசம்
1. உங்கள் கவிதையில் கல் நீங்கள் என் கவிதையில் கல் கல்தான்
2. உங்கள் கவிதையில் செதுக்குவதை நிறுத்தாதே என்கிறீர்கள்
என் கவிதை நிறுத்து என்கிறது

நான் சொல்வது என்னவென்றால்.... க்கும்... அதாவது கல்லையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணே உன் பார்வையை கொஞ்சம் திருப்பு
நீங்கள் சொல்லுவது என்னவென்றால் என்னை சிற்பமாக்கிய பெண்ணே என்னை பார்ப்பதை நிறுத்திவிடாதே என்று...
வித்தியாசம் இருக்கில்லையா.. (இதைப் பார்த்துட்டு என் வீட்டு வாசலில் தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை கட்டி நிக்கப் போறாங்க.. அவங்களுக்கும் கதை காப்பியில்லைன்னு சமாளிஃபிகேஷன் சொல்ல ஐடியா வேணுமில்ல...:D :D :D )

கல் - பென்ஸ் :rolleyes: :rolleyes: :rolleyes:
கல்லைப் பார்க்கும் பெண்
-- பென்ஸைப் பார்க்கும் பெண்:eek: :eek: :eek:

அதாவது பென்ஸைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணை உங்களை பார்க்கச் சொல்றீங்க.. அப்படித்தானே...:angry: :angry: :angry: :angry:

நாராயணா.. நாராயணா:D :D :D :D

மதி
02-11-2006, 12:49 PM
அல்லிராணியாரே...
பென்ஸ் நல்லாயிருப்பது பிடிக்கவில்லையா..
இல்லை தாமரை நல்லாயிருப்பது தான் பிடிக்கவில்லையா..?

பாவம் பென்ஸ்...!

ஓவியா
02-11-2006, 04:34 PM
ஓவியா, நீங்களும், நானும் செல்வா அண்ணாவோடு பேச முடியாம அடிக்கடி இப்படி மாட்டிக்கறோம்.

ஒரு ஐடியா: பக்கத்துல வாங்க, நாம ரெண்டு பெரும் நல்லா பேச தெரிஞ்சவங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கலாம்.அப்பறம் செல்வா அண்ணாகிட்ட பேசலாம். என்ன ஓவியா ஓகே வா?? :eek: :eek: :eek:

அந்த முதல் பரிசு செல்வன் அண்ணகிட்டதான் இருக்கு.........:D

meera
03-11-2006, 04:13 AM
இவ்வளவு நாளா நான் ட்ரெய்னிங் தானே கொடுத்திட்டு இருக்கேன்

அண்ணா அது தான் விஷயமா??மீராவுக்கு கொஞ்சம் வாய் அதிகமயிருச்சுனு ஊருக்குள்ள பேசிக்கறாங்க.

(வாய் அதிகமா?எல்லாருக்கும் ஒரு வாய்தானே இருக்குனு கேக்கபடாது. சரியா அண்ணா?வாய் அதிகம்னா,பேச்சு அதிகம்னு அர்த்தம் -க்கும்ம்ம்ம்ம்ம்):cool: :rolleyes: :)

அல்லிராணி
18-03-2008, 07:55 AM
அல்லிராணியாரே...
பென்ஸ் நல்லாயிருப்பது பிடிக்கவில்லையா..
இல்லை தாமரை நல்லாயிருப்பது தான் பிடிக்கவில்லையா..?

பாவம் பென்ஸ்...!

இப்போ மதி நல்லா இருப்பதுதான் பிடிக்கல.. :lachen001::lachen001::lachen001:

மதி
18-03-2008, 08:36 AM
இப்போ மதி நல்லா இருப்பதுதான் பிடிக்கல.. :lachen001::lachen001::lachen001:

இதென்ன புது கலாட்டா..
நான் யார் வம்புக்கும் போவதில்லையே :eek::eek::eek::eek::eek::eek:

Narathar
24-05-2008, 08:56 AM
நேற்றுப்பெய்த மழையில்
இன்று முழைத்த காளானே என்று
அற்பர்களை திட்டுவதை நிறுத்துங்கள்
எங்கள் ஆயுள் சிரிதானாலும்
பலர் ஆயுளை வளர்க்க உதவுகிறோம் நாங்கள்

ஓவியன்
07-07-2008, 07:32 AM
ஆடு, மாடு, கோழி, ஆமை, முயல், மான், பன்றி, காடை, கௌதாரி, காட்டுக்கோழி, நத்தை, ஆக்டோபஸ், சிப்பி, வான்கோழி, வௌவால் இன்ன பிற ஜீவன்கள் என்ன பாவம் செய்தன ராகவன்? அவற்றையும் சேர்க்கலாமே!!!:D :D :D

அடடே நம்ம உவ்வே (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=363494#post363494) திரிக்கு செல்வன் அண்ணாதான் முன்னோடியா...?? :D:D:D

ஷீ-நிசி
08-07-2008, 01:47 AM
யாரை பாதுகாக்க
நீ
குடை பிடிக்கிறாய்?
-காளான்.

ம்ம்ம்ம்..... நல்லாருக்கே!

எனக்கும் தோன்றியது உங்கள் ஹைக்கூவிலிருந்து....

உன் மீது மட்டுமென்ன......
மழை பொழிந்துகொண்டே இருக்கிறதா?!
வெயில் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறதா?!

ஓவியன்
08-07-2008, 01:57 AM
உன் மீது மட்டுமென்ன......
மழை பொழிந்துகொண்டே இருக்கிறதா?!
வெயில் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறதா?!

இல்லை, பொல்லா
மனிதர்களிடமிருந்து
விலக, குடைக்குள்
ஒளிந்து கொண்டிருக்கிறேன்...

ஷீ-நிசி
08-07-2008, 02:01 AM
இல்லை, பொல்லா
மனிதர்களிடமிருந்து
விலக, குடைக்குள்
ஒளிந்து கொண்டிருக்கிறேன்...

எப்பொழுதாவது ஒளிந்துகொள்....
எப்பொழுதுமே ஒளிந்துகொள்ளாதே!