PDA

View Full Version : நிதானிப்பதற்குள்....

guna
18-10-2006, 03:22 AM
கனவுகளோடு
வாழ்வு ஆனந்தம்
வாழ்கையோடு
கனவு துன்பம்..

புள்ளி வைத்து
கோடு போடுவதற்குள்
புயல் காற்று...

அன்பு வைத்து
ஆசை வைத்து
ஏனோ..
தைரியம் தொலைந்தது
நிதானிப்பதற்குள்
நிம்மதியும் தொலைந்தது...

அழுதிடாதே
அழுதிட மாட்டேன்

அழுவது ஆனுக்கு
அழகல்ல
அமைதி இழப்பது
பெண்ணுக்கு
அழகல்ல...
_______________________________________________________________
குணா :)

meera
18-10-2006, 08:18 AM

குணா அழகான கவிதை.அருமையான,உண்மையான வரிகள் அமைதி இழப்பது பெண்ணுக்கு அழகல்ல.

தாமரை
18-10-2006, 08:37 AM
கனவுகளோடு
வாழ்வு ஆனந்தம்
வாழ்கையோடு
கனவு துன்பம்..

கனவு வாழ்க்கையானால் இன்பம்
வாழ்க்கை கனவானால் துன்பம்

புள்ளி வைத்து
கோடு போடுவதற்குள்
புயல் காற்று...

வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க மறந்ததை.... இயற்கை..

அன்பு வைத்து
ஆசை வைத்து
ஏனோ..
தைரியம் தொலைந்தது
நிதானிப்பதற்குள்
நிம்மதியும் தொலைந்தது...

எல்லாவற்றிற்கும் முன்னால் தொலைந்தது இதயம்..

அழுதிடாதே
அழுதிட மாட்டேன்

அழுவது ஆனுக்கு
அழகல்ல
அமைதி இழப்பது
பெண்ணுக்கு
அழகல்ல...
_______________________________________________________________
குணா :)

அழகைக் கண்டு வருவது காதலல்ல..:rolleyes: :rolleyes: :rolleyes:

guna
18-10-2006, 08:54 AM
கனவு வாழ்க்கையானால் இன்பம்
வாழ்க்கை கனவானால் துன்பம்

வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க மறந்ததை.... இயற்கை..

எல்லாவற்றிற்கும் முன்னால் தொலைந்தது இதயம்..

__________________________________________________________________________

அழகைக் கண்டு வருவது காதலல்ல..:rolleyes: :rolleyes: :rolleyes:

அழுவது ஆனுக்கு
அழகல்ல
அமைதி இழப்பது
பெண்ணுக்கு
அழகல்ல...

இந்த வரிகள்ல குணா வெளி அழகை சொல்ல இல்லை..

கோழையா அழுகற ஆனின் குணத்தையும்..
அமைதி இழந்து ஆர்பாட்டம் பண்ற பெண்ணின் குணத்தையும் தான் சொன்னேன்..

தாமரை செல்வன் சார், ஓவியாவை போலே குணாவும் உங்களை அண்ணா'னு கூப்பிடலாமா?

_______________________________________________________________
குணா:)

guna
18-10-2006, 08:59 AM
குணா அழகான கவிதை.அருமையான,உண்மையான வரிகள் அமைதி இழப்பது பெண்ணுக்கு அழகல்ல.

மீராவின் விமர்சனம், என்னை இன்னும் இன்னும் எலுத தூண்டுகிறது..
நன்றி மீரா..
_______________________________________________________________
குணா:)

தாமரை
18-10-2006, 09:16 AM
அழுவது ஆனுக்கு
அழகல்ல
அமைதி இழப்பது
பெண்ணுக்கு
அழகல்ல...

இந்த வரிகள்ல குணா வெளி அழகை சொல்ல இல்லை..

கோழையா அழுகற ஆனின் குணத்தையும்..
அமைதி இழந்து ஆர்பாட்டம் பண்ற பெண்ணின் குணத்தையும் தான் சொன்னேன்..

தாமரை செல்வன் சார், ஓவியாவை போலே குணாவும் உங்களை அண்ணா'னு கூப்பிடலாமா?

_______________________________________________________________
குணா:)

அண்ணா என்றூ அழைக்கப்படுவது எனக்கு விருப்பமானது. (சித்தப்பான்னு கூப்பிடாம இருந்தா போதும்..)
ஒரு ஆண் இருவரிடம் மட்டுமே அழ முடியும் - அன்னை, அன்புக்காதலி
ஒரு பெண் தன் காதலனிடம் மட்டுமே அமைதியை இழக்கலாம்..
அந்த வகையில் சொன்னேன்... அழகாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.. உண்மையாய் இருந்தாலே போதும்..

guna
18-10-2006, 09:22 AM

நன்றி அண்ணா..

உங்கள் கருத்துக்களையும் ஏற்கிறேன்..
_______________________________________________________________
குணா:)

பென்ஸ்
23-10-2006, 08:49 AM
இருமுறை விமர்சணம் எழுதி பதிக்கமுடியாமல் போனதால் இந்த தாமதம்.... (நான் இன்னும் மன்ற பக்கத்தின் அடியில் இருக்கும் யூனிகோட் கண்வர்ட்டரைதான் உபயோகிக்கிறேன்)...

நிதானமற்று செய்யும் ஒரு சிறு தவறினால்
வரும் விளைவு கடினமானது
நிதானித்து செய்யும் தவறோ
மிக மிக கொடியது...

மண்ணொடு கலைந்த பொடியை தேடி போக வேண்டாம்
முற்றத்தின் குப்பையை தூர் வாங்கிவிட்டு (நன்றி: மீரா)
புது புள்ளி, புது கோலமிடலாமே....

காதலில் நிதானமே திருமணத்தின் போது மட்டும் தானே... அன்பும் ஆசையும் வைத்து கொண்டே இருங்கள்...
நிதானிக்க தைரியம் வரும்
(பாருங்கள் கேள்விகளே பதில்களாய்)

ஆண்கள் அழக்கூடாதா....???
தாமரையின் கருத்தை இங்கு ஆமோதித்து

வாழ்த்துக்கள் சுகுனா....

தாமரை
23-10-2006, 09:25 AM
அவசர அவசரமாய் எப்படி
நிதானிப்பது???

ஓவியா
23-10-2006, 08:02 PM
குணா,
கவிதை சூப்பர்

செல்வன் அண்ணவின் விமர்சனம்...
மீராவின் ஊக்கம் மற்றும் பெஞ்சுவின் விமர்சனம் ......அருமை

(என்னையும் கவர்ந்தது)

அழுவது ஆனுக்கு
அழகல்ல
அமைதி இழப்பது
பெண்ணுக்கு
அழகல்ல...

வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க மறந்ததை.... இயற்கை..

காதலில் நிதானமே திருமணத்தின் போது மட்டும் தானே...
அன்பும் ஆசையும் வைத்து கொண்டே இருங்கள்...
நிதானிக்க தைரியம் வரும்
(பாருங்கள் கேள்விகளே பதில்களாய்)

நண்பா பெஞ்சு ...உண்மையிலே விமர்சனம் தூள்

guna
28-10-2006, 07:01 AM
விமர்சனமே கவிதை-யாய்.
நன்றி பெஞ்ஜமின்..

ஓவியாவின் கருத்துக்கும் நன்றி..
_______________________________________________________________
குணா