PDA

View Full Version : இருளோடு பேசும் மின்மினிகள்!



ப்ரியன்
16-10-2006, 05:59 AM
நீளும் கரிய இரவில்
கண்சிமிட்டி சிமிட்டிப் பேசுகிறாய்!
இருளோடு பேசும்
மின்மினிகள் போல்!

*

உனது கிளைகளில்
எப்போதும்
இசைச் சொல்லித் திரியும்
குயில் நான்!

*

உன் அலங்கார அறையை
முன் அநுமதியின்றி எட்டிப்பார்த்தேன்;
ஒரு காதில் சூரியனையும்
மறு காதில் சந்திரனையும்
அணிந்து அழகுப் பார்த்திருந்தாய் நீ!

*

காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!

*

வலையோடு காத்திருக்கிறேன்
விண்மீனான உனைப்
பிடித்துவிடும் ஆசையோடு!

- ப்ரியன்.

தாமரை
16-10-2006, 06:04 AM
நீளும் கரிய இரவில்
கண்சிமிட்டி சிமிட்டிப் பேசுகிறாய்!
இருளோடு பேசும்
மின்மினிகள் போல்!

*

உனது கிளைகளில்
எப்போதும்
இசைச் சொல்லித் திரியும்
குயில் நான்!


- ப்ரியன்.
கரிய இரவு நீளுவது
கண்மணியை
காணாததால்..
கண்ணே நீ வந்த பின்
இரவுகள் இருப்பதில்லை
மனமெல்லாம் வெளிச்சமாய்..
நீ பெயர் கேட்டாயாம்
குயில்
கூ.. கூ என
பெயரைக் கூட சொல்ல முடியாமல்
திக்குகிறது..

அக்னி
28-02-2008, 05:20 PM
ப்ரியன் அவர்களின் அசத்தல் கவிதை...
செல்வரின் அற்புதக் கவிதை...

தூரத்தில் கண்சிமிட்டும் தார(காரி)கையே,
என் அருகில் வந்து என் நில(உற)வாகிடு...
புதிய பூமிக் குடும்பமாகிட...

வசீகரன்
01-03-2008, 12:44 PM
அற்புதம் நண்பரே..... தாங்களின் கவிதையை நான் இப்பொழுதான் பார்க்கிறேன்....
வரிகளில்... நிறைய வனப்பு பாய்ச்சி இருக்கிறீர்கள்..... தெள்ளிய தமிழில்
தென்றலாக வருடுகிறது வார்த்தைகள்.... இரவின் அழகில்..... என் இதயமும் இயம்புகிறது நண்பரே,,,,,தொடர்ந்து எழுதுங்கள்.....

யவனிகா
01-03-2008, 03:52 PM
நீ பெயர் கேட்டாயாம்
குயில்
கூ.. கூ என
பெயரைக் கூட சொல்ல முடியாமல்
திக்குகிறது..

கிளியிடம் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்.
சரியாகச் சொல்லக் கூடும்.