PDA

View Full Version : கற்றதை பகிர்கிறேன் - மோகன்

leomohan
15-10-2006, 11:40 AM
தெலுங்கு நண்பர் ஒருவருக்கு நான் தமிழில் தட்டச்சு செய்வதை கண்டு ஒரு ஆர்வம்.

எனக்கு தெலுகு தட்டச்சு முறை வராதே என்றார். நான் அவருடைய Windows XP, Regional Languages, Add Support for Right to Left Script, Add Support for East Asian Languages, Add Telugu Keyboard செய்து கொடுத்து அவருடைய பெயரை ஒரு புதிய கோப்பு திறந்து அடித்துக் காட்டினேன்.

அவர் அசந்து போய்விட்டார். உங்களுக்கு தெலுகு தெரியுமா என்று கேட்டார். நான் சொன்னேன், Microsoft, யுனிகோட் முறையில் அனைத்து இந்திய மொழிகளை அமைத்துவிட்டதால் நான் தமிழில் அடிப்பதாக நினைத்துக் கொண்டே உங்கள் பெயரை தட்டினேன் என்றேன்.

மேலும் எனக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் என்று மொத்தம் 5 மொழிகளில் தட்டச்சு செய்ய்த் தெரியும் அனைத்தும் யுனிகோட் முறையினால் கற்றவை என்றதும் அவருடைய வியப்புக்கு அளவில்லை.

இப்போது நான் தெலுகு கன்னடம் பயிலுகிறேன். ஏனென்றால் யுனிகோட் முறை இதை எளிதாக்குகிறது. புதிய மொழியை எழுதினால் நமக்கு ஜாங்கிரி மாதிரி தெரியலாம். ஆனால் தட்டச்சு மூலமாக நேரடியாக கற்பது சுலபம்.

ஆக மன்றத்தாருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்களும் போனிடிக் ஒலி முறையில் தமிழ் தட்டுவது தவிர்த்து எந்த ஒரு மென்பொருள் உதவியுடன் தமிழ் தட்டுவதும் தவிர்த்து யுனிகோட் முறையை பயின்றால் மிகவும் நல்லது. மேலும் பல இந்திய மொழிகளை சுலபமாக கற்கலாம். மேலும் பிழை திருத்தும் வசதியை பயன்படுத்தலாம்.

நீங்களும் யுனிகோட் லதா எழுத்தருவில் பயில்வீர். பலன் பெறுவீர். 15 நிமிடங்களில் கற்கலாம்.

leomohan
15-10-2006, 11:42 AM
காரில் பாட்டு கேட்கலாம் புது முறையில் கார் உள்ளதா உங்களிடம்.
காரில் பாட்டு கேட்கும் பழக்கம் உடையவரா நீங்கள்.
காஸெட் மற்றும் குறுந்தட்டுகள் வாங்கி அலுத்துவிட்டதா.

கவலை வேண்டாம். ஒரு 1 ஜி பி ஃப்ளாஷ் தட்டு வாங்குங்கள். அதில் வேண்டிய எம்பி3 பாடல்கள் இறக்கிக் கொள்ளுங்கள்.

சுமார் 750 ரூபாயில் உங்களுக்கு இந்த எம்பி3-எஃப்எம் மாடுலேட்டர் கிடைக்கும். வாங்கி அதில் ஃப்ளாஷ் தட்டை நுழையுங்கள். இந்த மாடுலேட்டரை உங்களி காரின் சிகரெட் பற்ற வைக்கும் குழாயில் நுழையுங்கள்.

பிறகு உங்கள் காரின் வானோலியில் எதாவது ஒரு அலைவரிசையை தேர்ந்தெடுங்கள். அதே அலைவரிசையை மாடுலேட்டரிலும் தேர்ந்தெடுங்கள். பிறகென்ன உங்கள் ஃப்ளாஷ் தட்டிலிருக்கும் பாட்டை காரின் ஒலி பெருக்கி மூலம் கேட்டு மகிழுங்கள்.

http://blog.galvintan.com/wp-images/fm_feature.jpg

பென்ஸ்
15-10-2006, 12:40 PM
நல்ல துவக்கம் மோகன்...
நாம் கற்றதை பகிர்தலில் கிடைக்கும் இன்பம்... அது தனிதான்...
வாசிக்கும் போது இன்னும் மேலாக...

pradeepkt
16-10-2006, 07:21 AM
காரில் பாட்டுக் கேட்பதை விடுங்கள். எம்பி3 பாடல்களை வீட்டிலும் கேட்க சிறந்த வழி (ஸிஸ்டம் இல்லாவிட்டால்)
இது இந்தியாவில் எங்கே கிடைக்கும் என்று அறிந்தால் மகிழ்வேன்.

pradeepkt
16-10-2006, 07:24 AM
தெலுங்கு கன்னடம் என மற்ற மொழிகளிலும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் மோகன்.

இப்போது மைக்ரோஸாப்டில் microsoft phonetic input tool என்று ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யுமாறு இது உருவாக்கப் பட்டிருக்கிறது. நானும் இப்போது அதைத்தான் உபயோகிக்கிறேன். சீக்கிரம் வெளியுலகிற்கும் இந்த பீட்டா வெர்ஷன் கிடைக்கும்.

leomohan
16-10-2006, 07:24 AM
இந்த மாடுலேட்டர் வைத்துக் கொண்டு வீட்டில் கேட்க முடியாது ப்ரதீப். அதற்கு சாதாரண எம்ப3 ப்ளேயர்கள் வெளி ஒலி பெருக்கி இணைப்பான்களுடன் வருகிறது.

ஆம். இப்போதெல்லாம் ஒலி நாடாவிலும் குறுந்தட்டுகளிலும் கேட்பதே மிகவும் சிரமமாகவிட்டது.

leomohan
16-10-2006, 07:27 AM
தெலுங்கு கன்னடம் என மற்ற மொழிகளிலும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் மோகன்.

இப்போது மைக்ரோஸாப்டில் microsoft phonetic input tool என்று ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யுமாறு இது உருவாக்கப் பட்டிருக்கிறது. நானும் இப்போது அதைத்தான் உபயோகிக்கிறேன். சீக்கிரம் வெளியுலகிற்கும் இந்த பீட்டா வெர்ஷன் கிடைக்கும்.

தகவலுக்கு மிக்க நன்றி ப்ரதீப். இந்த வழியில் மைக்ரோஸாஃப்டின் சேவையை பாராட்ட வேண்டும். கணினியுடன் கலந்தால் தான் மொழிகள் நிலைக்கும் என்றாகிவிட்ட நிலையில் நம் இலக்கியங்களையும் கவிதை கட்டுரை புதினங்களையும் கணினி மூலம் இணையத்தில் ஏற்றி ஓலை காகிதங்களின் சொற்ப வயதை கடந்து விட்டோம் என்றே சொல்லவேண்டும்.

பென்ஸ்
16-10-2006, 07:37 AM
தெலுங்கு கன்னடம் என மற்ற மொழிகளிலும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் மோகன்.

இப்போது மைக்ரோஸாப்டில் microsoft phonetic input tool என்று ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யுமாறு இது உருவாக்கப் பட்டிருக்கிறது. நானும் இப்போது அதைத்தான் உபயோகிக்கிறேன். சீக்கிரம் வெளியுலகிற்கும் இந்த பீட்டா வெர்ஷன் கிடைக்கும்.

என்ன மார்க்கெட்டிங்கா???:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

pradeepkt
16-10-2006, 07:45 AM
என்ன மார்க்கெட்டிங்கா???:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D
யோவ் எதையுமே கொஞ்சம் கிருத்துவமாத்தேன் பாப்பீகளோ... :angry: :angry:

பென்ஸ்
16-10-2006, 07:53 AM
யோவ் எதையுமே கொஞ்சம் கிருத்துவமாத்தேன் பாப்பீகளோ... :angry: :angry:

கோச்சுக்காத ராசா..!!!:D :D :D

leomohan
16-10-2006, 08:03 AM
ப்ரதீப் குறிப்பிட்ட மென்பொருளை இங்கே பதிவு செய்தால் பெறலாம்.

http://bhashaindia.com/phonetictool/

pradeepkt
16-10-2006, 11:01 AM
மக்கா

ஏதாச்சும் ஒரு நல்ல எப் எம் டிரான்ஸ்மீட்டர் இருந்தாச் சொல்லுங்களேன். நான் பெங்களூர் நேஷனல் மார்க்கெட்டுல ஒண்ணு வாங்கினேன். அது பல அலைவரிசைகளில் வருது. அடுத்த அறைக்கு அனுப்பவே திணறுது. இப்ப அதை மாத்தியே ஆகணும்.

தாமரை
16-10-2006, 12:21 PM

செல்வன்
:D :D :D :D :D

pradeepkt
16-10-2006, 12:55 PM
செல்வன்
:D :D :D :D :D
எனக்கு எங்க வீட்டுக்குள் டிரான்ஸ்மிட் செய்யுமளவு திறன் இருந்தால் போதும். உலகெங்கும் டிரான்ஸ்மிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை :D :D :D

மதி
16-10-2006, 02:24 PM
எனக்கு எங்க வீட்டுக்குள் டிரான்ஸ்மிட் செய்யுமளவு திறன் இருந்தால் போதும். உலகெங்கும் டிரான்ஸ்மிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை :D :D :D
எதுக்குங்க இவ்ளோ பெரிய சுயவிளக்கம்...?:confused: :confused: :confused:

pradeepkt
17-10-2006, 04:33 AM
ஏலே... ரொம்பப் பேசாதே...
செல்வனின் இந்தத் திறன் நாம் அறிந்தது. அதை மன்றம் முழுமையும் அறியச் செய்வது நம் கடனன்றோ...???

மதி
17-10-2006, 06:29 AM
ஏலே... ரொம்பப் பேசாதே...
செல்வனின் இந்தத் திறன் நாம் அறிந்தது. அதை மன்றம் முழுமையும் அறியச் செய்வது நம் கடனன்றோ...???
கடன் குடுத்ததா வாங்கினதா?

பென்ஸ்
17-10-2006, 07:14 AM
ஏலே... ரொம்பப் பேசாதே...
செல்வனின் இந்தத் திறன் நாம் அறிந்தது. அதை மன்றம் முழுமையும் அறியச் செய்வது நம் கடனன்றோ...???

செல்வனை பத்தி உலகதமிழர்கள் முழுவது செய்தி டிரான்ஸ்மிட் பன்னும் பிரதிப்பா இப்படி விட்டுகுள்ளமட்டும் டிரான்ஸ்மிட் பண்ணும் ஒரு பொருளை தேடி போவது???:confused: :confused:

இதேல்லாம் ஓவரு சாமியோவ்... :rolleyes: :rolleyes: :D :D

தாமரை
17-10-2006, 08:16 AM

வீட்டுக்குள்ள மாத்திரம் ட்ரான்ஸ்மிஷனா? மனைவியைப் பத்தி சொல்றீயளா? அப்ப ஓ.கே:D :D :D

leomohan
17-10-2006, 12:26 PM
ப்ரதீப் குறிப்பிட்ட மென்பொருளை இங்கே பதிவு செய்தால் பெறலாம்.

http://bhashaindia.com/phonetictool/

இந்த மென்பொருளை என்னுடைய தளத்தில் (http://www.confusionclub.net/theni/MSPhi-Setup.EXE) ஏற்றி இருக்கிறேன். பயன் பெறவும்.

அறிஞர்
17-10-2006, 12:41 PM
ப்ளாஷ் தட்டுக்கு ஆங்கிலத்தில் பெயர் என்ன மோகன். ஆன்லைனில் கிடைக்குதா... கொஞ்சம் விவரம் கொடுங்கள்

leomohan
17-10-2006, 02:45 PM
ப்ளாஷ் தட்டுக்கு ஆங்கிலத்தில் பெயர் என்ன மோகன். ஆன்லைனில் கிடைக்குதா... கொஞ்சம் விவரம் கொடுங்கள்

என் கணினியில் விண்டோஸ் இடைமுகம் தமிழில் வைத்துள்ளேன். அது நான் எப்போது ப்ளாஷ் தட்டை வைத்தாலும் அகற்றப்படக்கூடிய வட்டு என்று சொல்கிறது. அதாவது ரிமூவபில் டிஸ்க். மேலும் தகவல் கிடைத்தால் பரிமாறுகிறேன்.

ஓவியா
17-10-2006, 06:26 PM
மக்கா
ஏதாச்சும் ஒரு நல்ல எப் எம் டிரான்ஸ்மீட்டர் இருந்தாச் சொல்லுங்களேன். நான் பெங்களூர் நேஷனல் மார்க்கெட்டுல ஒண்ணு வாங்கினேன். அது பல அலைவரிசைகளில் வருது. அடுத்த அறைக்கு அனுப்பவே திணறுது. இப்ப அதை மாத்தியே ஆகணும்.

செல்வன்
:D :D :D :D :D

எனக்கு எங்க வீட்டுக்குள் டிரான்ஸ்மிட் செய்யுமளவு திறன் இருந்தால் போதும். உலகெங்கும் டிரான்ஸ்மிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை :D :D :D

:D :D :D :D .....அண்ணா,
இப்படி ஒரு விசயம் இருக்கா....செய்தியில் போட்டாச்சா

ஓவியா
17-10-2006, 06:43 PM
மோகன்,
அருமையான ஆரம்பம்,

நமது அன்பு நண்பர்கள் இப்படிதான் ஏதாவது கலக்கலா பதிவு வைப்பார்கள்,
(தயிர் சாதத்தில் ஊறுகாய் போல்,)

ஆனால் உங்களுடன் இணைந்து இருப்பார்கள்.....கோவிக்காமா நீங்கள் தொடரவும்....:)

pradeepkt
18-10-2006, 04:58 AM
மோகன்,
அருமையான ஆரம்பம்,

நமது அன்பு நண்பர்கள் இப்படிதான் ஏதாவது கலக்கலா பதிவு வைப்பார்கள்,
(தயிர் சாதத்தில் ஊறுகாய் போல்,)

ஆனால் உங்களுடன் இணைந்து இருப்பார்கள்.....கோவிக்காமா நீங்கள் தொடரவும்....:)
அவரே கோவிக்கலைன்னாலும் நீங்க எடுத்துக் கொடுப்பீங்க போல... :D
நாரதி(தர்) ஓவியா... :D

leomohan
18-10-2006, 07:24 AM
அவரே கோவிக்கலைன்னாலும் நீங்க எடுத்துக் கொடுப்பீங்க போல... :D
நாரதி(தர்) ஓவியா... :D

எனக்கும் ஹாஸ்ய உணர்வு அதிகம் தான். நன்றாக கலாய்க்கலாம். ஒரு குழப்பமும் இல்லை.

ஓவியா
18-10-2006, 08:35 PM
அவரே கோவிக்கலைன்னாலும் நீங்க எடுத்துக் கொடுப்பீங்க போல... :D
நாரதி(தர்) ஓவியா... :D

மலை அரசன் அவர்களே,

தங்கள் பதிவில் ஒரு வரி தொலைந்து விட்டது....அதையும் எடுத்து கொடுகின்றேன்

மன்றத்து செல்ல (நன்றி: இளசு)
நாரதி(தர்) ஓவியா... :D

நாராயணா, ..........நாராயணா

mukilan
19-10-2006, 04:49 AM
அது என்னவோ எனக்கு பிரதீப் உங்களுக்கு வழங்கியிருக்கும் பட்டம் மட்டுமே நினைவில் இருக்கிறது நாரதிதர் ஓவியா!

ஓவியா
19-10-2006, 05:28 PM
அது என்னவோ எனக்கு பிரதீப் உங்களுக்கு வழங்கியிருக்கும் பட்டம் மட்டுமே நினைவில் இருக்கிறது நாரதிதர் ஓவியா!

அதுசரி.....:D :D

முகி,

நீங்க ரொம்ப பீசினு நினைத்தேன்....
இதேன்ன உயிர் தோழனுக்கு உதவியா.....;)

siva
02-11-2006, 03:43 PM
தெலுங்கு நண்பர் ஒருவருக்கு நான் தமிழில் தட்டச்சு செய்வதை கண்டு ஒரு ஆர்வம்.

எனக்கு தெலுகு தட்டச்சு முறை வராதே என்றார். நான் அவருடைய Windows XP, Regional Languages, Add Support for Right to Left Script, Add Support for East Asian Languages, Add Telugu Keyboard செய்து கொடுத்து அவருடைய பெயரை ஒரு புதிய கோப்பு திறந்து அடித்துக் காட்டினேன்.

அவர் அசந்து போய்விட்டார். உங்களுக்கு தெலுகு தெரியுமா என்று கேட்டார். நான் சொன்னேன், Microsoft, யுனிகோட் முறையில் அனைத்து இந்திய மொழிகளை அமைத்துவிட்டதால் நான் தமிழில் அடிப்பதாக நினைத்துக் கொண்டே உங்கள் பெயரை தட்டினேன் என்றேன்.

மேலும் எனக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் என்று மொத்தம் 5 மொழிகளில் தட்டச்சு செய்ய்த் தெரியும் அனைத்தும் யுனிகோட் முறையினால் கற்றவை என்றதும் அவருடைய வியப்புக்கு அளவில்லை.

இப்போது நான் தெலுகு கன்னடம் பயிலுகிறேன். ஏனென்றால் யுனிகோட் முறை இதை எளிதாக்குகிறது. புதிய மொழியை எழுதினால் நமக்கு ஜாங்கிரி மாதிரி தெரியலாம். ஆனால் தட்டச்சு மூலமாக நேரடியாக கற்பது சுலபம்.

ஆக மன்றத்தாருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்களும் போனிடிக் ஒலி முறையில் தமிழ் தட்டுவது தவிர்த்து எந்த ஒரு மென்பொருள் உதவியுடன் தமிழ் தட்டுவதும் தவிர்த்து யுனிகோட் முறையை பயின்றால் மிகவும் நல்லது. மேலும் பல இந்திய மொழிகளை சுலபமாக கற்கலாம். மேலும் பிழை திருத்தும் வசதியை பயன்படுத்தலாம்.

நீங்களும் யுனிகோட் லதா எழுத்தருவில் பயில்வீர். பலன் பெறுவீர். 15 நிமிடங்களில் கற்கலாம்.

எப்படி என்று கொஞ்சம் விளக்குங்கள். நானும் முயற்சித்துப் பார்கிறேன்

leomohan
02-11-2006, 04:57 PM
http://theni.etheni.com/unicode1.jpg

leomohan
02-11-2006, 04:58 PM
http://theni.etheni.com/unicode2.jpg

leomohan
02-11-2006, 04:59 PM
http://theni.etheni.com/unicode3.jpg

leomohan
02-11-2006, 04:59 PM
http://theni.etheni.com/unicode4.jpg

leomohan
02-11-2006, 05:00 PM
http://theni.etheni.com/unicode5.jpg

leomohan
02-11-2006, 05:00 PM
http://theni.etheni.com/unicode6.jpg

leomohan
02-11-2006, 05:02 PM
http://theni.etheni.com/unicode7.jpg

leomohan
02-11-2006, 05:02 PM
http://theni.etheni.com/unicode8.jpg

leomohan
02-11-2006, 05:04 PM
முதலில் கன்ட்ரோல் பேனல் அடையுங்கள்.

பிறகு ரீஜின்ல் லாங்வேஜ் அன்ட் செட்டிங்ஸ் தேர்ந்தெடுங்கள்.

பிறகு லாங்வேஜஸ் டாபில் முதல் உருப்படியை தேர்ந்தெடுங்கள். விண்டோஸ் சிடி கேட்கும். தாருங்கள்.

பிறகு டீடைல்ஸ் அழுத்துங்கள்.

பிறகு தமிழ் கீப்போர்டை தேர்ந்தெடுங்கள்.

மென்பொருள் மாற்றங்கள் முடிந்தவுடன் உங்கள் டெஸ்க் டாப்பில் லாங்வேஜ் பார் தோன்றும். அதில் தமிழ் மொழிக்கு மாறலாம். பிற மொழிகளின் கீப்போர்டும் தேர்வு செய்யலாம்.

பிறகு வேர்ட் திறவு செய்யுங்கள். லாங்வேஜ் பாரில் தமிழ் தேர்ந்தெடுத்தவுடன் உங்களுக்கு லதா எழுத்தரு தென்படும். சற்று நேரம் விளையாடுங்கள். அனைத்து எழத்துக்களும் பழகிவிடும்.

இப்போது நீங்கள் யுனிகோட் முறையில் எந்த ஒரு எழுத்துருவோ மென்பொருளோ இல்லாமல் தமிழில் அடிக்க கற்றுக் கொண்டீர்கள்.

இப்போது நீங்கள் தமிழில் உங்கள் பெயரை அடிப்பதாக நினைத்துக் கொண்டு பிற மொழியை லாங்வேஜ் பாரில் தேர்ந்தெடுத்தவிட்டு அடித்தால் நீங்கள் அந்தந்த மொழியில் தட்டெழுத்து செய்வதாக ஆகிவிடும்.

இது தான் யுனிகோடின் சிறப்பு.

மயூ
24-11-2006, 04:52 AM
என்ன மார்க்கெட்டிங்கா???:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

அதுதானே!!! மைக்ரோசாப்ட் என்றால் அண்ணாச்சி முன்னாடி வந்திடுவாரு:D :D

மயூ
24-11-2006, 04:58 AM
முதலில் கன்ட்ரோல் பேனல் அடையுங்கள்.

பிறகு ரீஜின்ல் லாங்வேஜ் அன்ட் செட்டிங்ஸ் தேர்ந்தெடுங்கள்.

பிறகு லாங்வேஜஸ் டாபில் முதல் உருப்படியை தேர்ந்தெடுங்கள். விண்டோஸ் சிடி கேட்கும். தாருங்கள்.

பிறகு டீடைல்ஸ் அழுத்துங்கள்.

பிறகு தமிழ் கீப்போர்டை தேர்ந்தெடுங்கள்.

மென்பொருள் மாற்றங்கள் முடிந்தவுடன் உங்கள் டெஸ்க் டாப்பில் லாங்வேஜ் பார் தோன்றும். அதில் தமிழ் மொழிக்கு மாறலாம். பிற மொழிகளின் கீப்போர்டும் தேர்வு செய்யலாம்.

பிறகு வேர்ட் திறவு செய்யுங்கள். லாங்வேஜ் பாரில் தமிழ் தேர்ந்தெடுத்தவுடன் உங்களுக்கு லதா எழுத்தரு தென்படும். சற்று நேரம் விளையாடுங்கள். அனைத்து எழத்துக்களும் பழகிவிடும்.

இப்போது நீங்கள் யுனிகோட் முறையில் எந்த ஒரு எழுத்துருவோ மென்பொருளோ இல்லாமல் தமிழில் அடிக்க கற்றுக் கொண்டீர்கள்.

இப்போது நீங்கள் தமிழில் உங்கள் பெயரை அடிப்பதாக நினைத்துக் கொண்டு பிற மொழியை லாங்வேஜ் பாரில் தேர்ந்தெடுத்தவிட்டு அடித்தால் நீங்கள் அந்தந்த மொழியில் தட்டெழுத்து செய்வதாக ஆகிவிடும்.

இது தான் யுனிகோடின் சிறப்பு.

அறிந்த தகவலுக்குள் ஒரு புதுத்தகவலையும் அறிந்து கொண்டோம். நன்றி லியோ மோகன் அவர்களே!!!

leomohan
14-12-2006, 10:02 AM
மைக்ரோஸாஃப்டின் தமிழ் விசை பலகை அமைப்பை காண இங்கு செல்லுங்கள்

http://www.microsoft.com/globaldev/keyboards/kbdintam.htm

மற்ற மொழிகளின் அமைப்பை காண இங்கு செல்லுங்கள்

http://www.microsoft.com/globaldev/reference/keyboards.mspx

leomohan
21-12-2006, 08:23 PM
நீங்கள் XP language Settings-ல் தமிழை புகுத்தி தமிழில் எழுதுபவரா..

எழுத மற்றுமொரு முறை.

select run command from Start.
Type OSK
Press Enter..

தட்டச்சியிலும் Browser-லும் தமிழை தேர்ந்தெடுக்க வேண்டும்.

On-Screen Keyboard

இளசு
21-12-2006, 08:39 PM
கற்பித்தலே கற்றலின் முழுமை..

அரிய பணிக்கு பாராட்டுகள் மோகன்!

leomohan
21-12-2006, 08:47 PM
கற்பித்தலே கற்றலின் முழுமை..

அரிய பணிக்கு பாராட்டுகள் மோகன்!

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி இளசு.

leomohan
22-12-2006, 03:51 PM
10 ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் இணைய தளம் இருந்ததா.

அதற்கு பிறகு பல மாற்றங்கள் செய்துவிட்டீர்களா.

பழைய தளம் எப்படி இருந்தது என்று இங்கு சென்று பாருங்கள்

http://www.archive.org/index.php (http://www.archive.org/index.php)

உதாரணமாக இங்கே சென்று www.hotmail.com (http://www.hotmail.com/) or www.leomohan.net (http://www.leomohan.net/) அடித்து பாருங்கள்.

leomohan
22-12-2006, 03:53 PM
வெப் 2.0வின் புரட்சி. உங்கள் தளங்கள் அதிக பேரை சென்றடைய

http://www.socialsubmit.com/register.php

sujeendran
26-12-2006, 08:31 AM
THANK YOU FOR YOUR TECH

மயூ
26-12-2006, 10:31 AM
THANK YOU FOR YOUR TECH
தமிழில் பதியுங்கள் நண்பா!! :)

தாமரை
26-12-2006, 10:33 AM
இந்த மாடுலேட்டர் வைத்துக் கொண்டு வீட்டில் கேட்க முடியாது ப்ரதீப். அதற்கு சாதாரண எம்ப3 ப்ளேயர்கள் வெளி ஒலி பெருக்கி இணைப்பான்களுடன் வருகிறது.

ஆம். இப்போதெல்லாம் ஒலி நாடாவிலும் குறுந்தட்டுகளிலும் கேட்பதே மிகவும் சிரமமாகவிட்டது.
பாடல்களைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கி, குறுந்தகடு மற்றும் நினைவான்களில் பதிந்து அப்பா! இதுதான் மிகப்பெரிய வேலை,, இந்தச் சோம்பேறிக்கு எஃப் எம் போதும்.. யாராவது பாட்ட போட்டா கேட்டுக்குவோம்.. அம்புட்டுதான்

leomohan
26-12-2006, 10:34 AM

செல்வன், அதைவிட சுலபம், மனதிலே பாடிக்கொள்வது தான். :)

vijay-dk
26-12-2006, 09:05 PM
அருமையான தகவல்களை எம்முடன் பகீர்த்து கொண்டமைக்கு மிக்க நண்றி மோகன் அவர்களுக்கு. உங்களின் தளமும் அருமையாக உள்ளது.

leomohan
27-12-2006, 05:24 AM
அருமையான தகவல்களை எம்முடன் பகீர்த்து கொண்டமைக்கு மிக்க நண்றி மோகன் அவர்களுக்கு. உங்களின் தளமும் அருமையாக உள்ளது.

நன்றி விஜய்.

praveen
27-12-2006, 02:21 PM
மோகன் அவர்களே மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் தளம், நீங்கள் தமிழில் தரும் விசயங்களும் நன்று. இவ்வளவு நாள் இந்த தளத்திற்கு வராமல் போனேனே? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

வாழிய பல்லாண்டு.

leomohan
27-12-2006, 03:13 PM
மோகன் அவர்களே மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் தளம், நீங்கள் தமிழில் தரும் விசயங்களும் நன்று. இவ்வளவு நாள் இந்த தளத்திற்கு வராமல் போனேனே? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

வாழிய பல்லாண்டு.

நன்றி அஷோ. நீங்களும் பங்களிக்கலாம். நல்வரவு

leomohan
23-01-2007, 02:26 PM
http://www.glassgiant.com/ascii/ (http://www.glassgiant.com/ascii/)

இதோ என் படம், ஆஸ்கியில் இப்படித்தான்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~::::::~::::::::::::::::::::::::::::::::::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~::::::::::::::::::::::::::~~~:::::::::::::::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~::::::::::::::~::::::::$7=?+$I:~~=~~~~:::::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~::::::::::::::::::~:I$8DNNNMNNNN7~7?I+:+=~:::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~:::::::::::::::~:7MNNNNNNNNNNNNNDD87Z$?:+=:::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~:::::~:~=7NNNDNNNNNNNNMNNNDDNDNI77+~+~:::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~:::~:http://www.muthamilmantram.com/images/smilies/icon_confused.gifNNNNMNNNNMMMMMNMNNNNNNDNNN8ZI+::~:::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~:~:~~DMMMNMMMMMMMMMMMMMNNNNMNNMMNDD$+~=~~::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~::~~DMMMMMMMMMMMMMMMMMMMMNNMMMMMMMNMND7?:::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~:::::~NMMMMMMMMMMMMMMMMMMMNNMMMMMMMMMMNNNDOI~:::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~:::::OMMMMMMMMMMMMNNNNNNNNMMNNNMMNMMMMNNDNDOO~::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~INMMMMMMMMMMND888888DDNNNNNNNNMMMMMMNNDNZ$~:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~::~?ONMMMMMNN888OOOZZOOO888DDDDDDMMMMMMMMNDND$$:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~OMNMMMNN88OOOZZZ$$$$$$$$$$$Z8DNNMMMMNMNNNNZO:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~NMMMMND8OOOOZZZZ$$7777777777$O8NMMMMMNMNNDNI:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~:~?NNMMN8OOOZZOZZZZZ$77777IIII77$ODNMMMNMMNNND$:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~NMNM8OOOOZZZZZ$$$$$$7777IIIII77$8DNNMMNMNMNDD:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~7DDNN8OOOOZZ$$$$$7777777777777II77$ZODNNMMMMMND8:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~8DDNNOOOO8DDD8Z$$777III777777777II77$O8NNNNNMNNNN:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~O88NDZZZ8DD888DN8Z$$7IIIII7II77777777$$ODNNMMNNDDI:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~Z8DNDZZ$ZO8ND8OO8NNDZ$7IIIII777777777$$$ZO8NNNNND8?:::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~7OONDOZ$7$Z8DDZNMDDDNDDZ77IIIIIIIII77$$$$$ZONNNNNDD::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ODDD8OZ$777Z888DNNDNDD8OZ$77IIIIIII77$$$$$Z8NNNNN8~::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~+OOO8OZ$$7777$888OOONNNNDOZ$$777IIII777$$$$ZDNNMNN=:::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~Z88OOOZ$$7IIII7$ZZO88DN8Z$7ZOOO8Z$77777$$$$ONNNNN8::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~=O8O888OZ$$7IIIII77$ZOOO7II788DDDDNDO$777$7ZNNMND=:::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~==OO888OOZ$77II???7$ZZZ$I+I$8DDNDD8DDDO$$$$8NNNN8~:::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~O88888OO$$777I7$O8ZZ7I?I7$888ZNNNOZO8D$77NNMMO~::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~+O88888OOOOZZ$$$OOZ$II??I77$$OZ8DO$DO$Z$7NDND,~:::::::::
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~788888OOO88OZ$$OD88$I??I77II7$ZOZO888ZZ$ZNN:~:::::::::::
=~=~~~~~~~~~~~~~~~~~~~~~O88888OZOD8OZ$$O8DNO$7II7$7I?I7$$$$7$$$7DD$~::::::::::::
=~=~~~~~~~~~~~~~~~~~~~~?O8D888OZZDNDOZZO88D8OZO$7$$I???IIII777778O?:::::::::::::
=~=~=~~~~~~~~~~~~~~~~~~88DDDDD8OO8DDND88O888OOOO7$Z7II??IIIII77DZ?::::::::::::::
==~~=~=~~~~~~~~~~~~~~~$DDDDDD888OO8D8OOD8OZ$$$777$Z$7IIIIII777DZ+~::::::::::::::
=====~=====~~~~~~~~~~+8DDDDDDDD8O888DO7I$88OOZ7$$$OZ$7777I777DO?~:::::::::::::::
==============~=~=~+D8DDDDDDDD88OOO88DZ$7I?$8DO$ZZOZZZ$$7777ZZ=:::::::::::::::::
I7ZO88888DDDDDDNM8DNDDDDDDDNDDD88OZZO8DDOZ$$$ZO8DOOZZZ$$$77II:::::::::::::::::::
8888888DDDDDDDN8O8NNNDDDDDDDNNDD88OZ$$Z8888OZZZZZZZZZZZ$777~~:::::::::::::::::::
88888DDDDDNDNDNOONNNNDDDDNNNNNNDD88OOO$$$$$ZZZZOZZZZZZ$7?~::::::::::::::::::::::
88888D8DDDDDDDN8DDNNNDDD8DDNNNNNDD8888OZZZ$$ZZOOOOZZZ$7~~~:::~::::::::::::::::::
888D88DDDDDDDDN8ONNNNNDDDDDDNNDDDDDDD88OZZZZOO8OOOOZZ~~::~~:::::::::::::::::::::
8D888DD88DDDDDD8O8NNNNNDD8DDDDDDDDDDDDDD888888888OZ=:~~~~~~:::::::::::::::::::::
D88DDD888DNDDDDNOZ7NNNNDD8DDDDDDDDDDD8D8D888888OOZ?~~~~~~~~:::::::::::::::::::::
8DDD88888DD8DDDDNZZ8DNNNND888DDDDDDDDDDD888888OOZ~~~~~~~~~::::::::::::::::::::::
DD8888888DD8DDNDNNOOZZNNNND8888888888D88888OOOZZO~~~~~~~~~::::::::::::::::::::::
D88888888DD8DDDDDMNO$8DNNNNN888888888888OOOOZZ8OZ8+~~~~~~~::::::::::::::::::::::
88888888DD88D8DDDNDNZZO8NDMNN88888888888888DD88Z?DOZ~~~~~~::::::::::::::::::::::
88888888DD8888DDDNZ$Z8$$O7ODDOOOOOOOOOOO8DD888II888OO$~~~~::::::::::::::::::::::
8D888888DD8888DD8NDZD8D$Z$Z8OOOOZOOOOOO8D88OZ+78D88OO8Z:~~::::::::::::::::::::::
88888888DD8888DD8NNDD88D8IZZZZOOOOOOO8DND8+I$788888O8888~~~:::::::::::::::::::::
8888888DDD88DDDDDDNNND888$777$$$$$ZO88DDDI7O8888888888D8O?::::::::::::::::::::::
GlassGiant.com
__________________

leomohan
23-01-2007, 02:27 PM
http://www.network-science.de/ascii/ (http://www.network-science.de/ascii/)

___ ___ ___ ___ ___
/\__\ /\ \ /\__\ /\ \ /\__\
/::| | /::\ \ /:/ / /::\ \ /::| |
/:|:| | /:/\:\ \ /:/__/ /:/\:\ \ /:|:| |
/:/|:|__|__ /:/ \:\ \ /::\ \ ___ /::\~\:\ \ /:/|:| |__
/:/ |::::\__\ /:/__/ \:\__\ /:/\:\ /\__\ /:/\:\ \:\__\ /:/ |:| /\__\
\/__/~~/:/ / \:\ \ /:/ / \/__\:\/:/ / \/__\:\/:/ / \/__|:|/:/ /
/:/ / \:\ /:/ / \::/ / \::/ / |:/:/ /
/:/ / \:\/:/ / /:/ / /:/ / |::/ /
/:/ / \::/ / /:/ / /:/ / /:/ /
\/__/ \/__/ \/__/ \/__/ \/__/

leomohan
23-01-2007, 02:28 PM
http://www.littlefunny.com/Google.aspx (http://www.littlefunny.com/Google.aspx)

http://leomohan.etheni.com/109.gifhttp://leomohan.etheni.com/111.gifhttp://leomohan.etheni.com/104.gifhttp://leomohan.etheni.com/97.gif

leomohan
23-01-2007, 02:28 PM
http://www.chami.com/html-kit/services/favicon/ (http://www.chami.com/html-kit/services/favicon/)

உலாவியின் முகவரி பகுதியில் உங்கள் விருப்பதிற்கு ஏற்ப பேஃவைகான் அமைக்கலாமே

http://leomohan.etheni.com/favicon.ico

leomohan
23-01-2007, 02:29 PM
http://www.myfirstfont.com/images/fontcreator.gif

http://www.myfirstfont.com/ (http://www.myfirstfont.com/)

leomohan
23-01-2007, 02:34 PM
http://artpad.art.com/artpad/painter/

அறிஞர்
23-01-2007, 03:05 PM
மோகன் கொடுத்த தளங்கள் அருமை...

தங்களின் படம் வெகு சிறப்பாக உள்ளது.

leomohan
23-01-2007, 04:44 PM
மோகன் கொடுத்த தளங்கள் அருமை...

தங்களின் படம் வெகு சிறப்பாக உள்ளது.

நன்றி அறிஞரே. இங்கு ஒரு ப்ராஜெக்டில் மாட்டிக் கொண்டேன். நிறுவனம் திரும்பவும் நியூ ஜெர்ஸிக்கு விடுவதாக இல்லை. எப்படி இருக்கிறது குளிர் அங்கே.

அறிஞர்
23-01-2007, 07:01 PM
நன்றி அறிஞரே. இங்கு ஒரு ப்ராஜெக்டில் மாட்டிக் கொண்டேன். நிறுவனம் திரும்பவும் நியூ ஜெர்ஸிக்கு விடுவதாக இல்லை. எப்படி இருக்கிறது குளிர் அங்கே. குளிர் நன்றாக இருக்கிறது... இந்த வாரம் முழுவதும் மைனஸில் தான் ஓடுகிறது.... (முகிலன் இருக்கும் இடத்தை இது பரவாயில்லை)

ஓவியா
23-01-2007, 07:42 PM
குளிர் நன்றாக இருக்கிறது... இந்த வாரம் முழுவதும் மைனஸில் தான் ஓடுகிறது.... (முகிலன் இருக்கும் இடத்தை இது பரவாயில்லை)

லண்டனில் இப்ப -1 டிகிரி

leomohan
25-01-2007, 03:59 PM
http://www.sophists.com/Led/LedLineIt/Download.asp (http://www.sophists.com/Led/LedLineIt/Download.asp)

பாரதி
25-01-2007, 04:33 PM
சிறப்பான பணி மோகன். பாராட்டுக்கள்.

LedLineIt என்பது முதலில் வந்த LedIt என்ற மென்பொருள்தானா..? லெட்இட் ஒருங்குறியில் தட்டச்ச உதவும்.

மதுரகன்
27-01-2007, 05:24 PM
நன்றி மோகன் அத்தனை தகவல்களும் அருமை...
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு..
தொடருங்களேன்.. காத்துக்கொண்டிருக்கிறேன்...

leomohan
28-01-2007, 03:08 PM
http://webapps.uni-koeln.de/tamil/

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் அகராதி.

tamil81
28-01-2007, 03:55 PM
மோகனின் குறிப்புகள் அனைத்தும் அருமை அவரது கவிதைகளை போலவே

மதுரகன்
28-01-2007, 04:00 PM
மோகன் பிறமொழகளை கற்பிக்கும் தளங்கள் பற்றி தெரியுமா...
சமஸ்கிருதம்,பிரெஞ்ச் கற்க ஆசை...

மதுரகன்
28-01-2007, 04:01 PM
மேலும் லினக்ஸ் கற்பிக்கும் அல்லது லினக்ஸ் தொடர்பாக கேள்விகளுக்கு விடையளிக்கும் தளங்கள் பற்றி ஏதும் தெரியுமா..?

leomohan
28-01-2007, 04:35 PM
மோகன் பிறமொழகளை கற்பிக்கும் தளங்கள் பற்றி தெரியுமா...
சமஸ்கிருதம்,பிரெஞ்ச் கற்க ஆசை...

ஓ பல தளங்கள் உள்ளன. விரைவில் தருகிறேன். உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.

leomohan
28-01-2007, 04:35 PM
மோகனின் குறிப்புகள் அனைத்தும் அருமை அவரது கவிதைகளை போலவே

நன்றி உங்கள் பின்னூட்டங்கள் மேலும் தகவல்கள் தர உற்சாகப்படுத்துகின்றன.

மதுரகன்
28-01-2007, 04:39 PM
லினக்ஸ் கற்பிக்கும் அல்லது லினக்ஸ் தொடர்பாக கேள்விகளுக்கு விடையளிக்கும் தளங்கள் பற்றி ஏதும் தெரியுமா..?

இதையும் மறந்து விடாதீர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்...

leomohan
28-01-2007, 04:41 PM
இதையும் மறந்து விடாதீர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்...

அவசியம்.

leomohan
09-03-2007, 08:28 AM
கணினி புத்தக குவியல்

Index
http://top-resource.blogspot.com (http://top-resource.blogspot.com/)
Java 93 books
http://more-java.blogspot.com (http://more-java.blogspot.com/)
Unix/Linux 76 books
http://more-unix-linux.blogspot.com (http://more-unix-linux.blogspot.com/)
C++ 56 books
http://more-cpp.blogspot.com (http://more-cpp.blogspot.com/)
C 31 books
http://more-c.blogspot.com (http://more-c.blogspot.com/)
C# 20 books
http://more-csharp.blogspot.com (http://more-csharp.blogspot.com/)
PhP 28 books
http://more-php.blogspot.com (http://more-php.blogspot.com/)
DotNet 37 books
http://more-dotnet.blogspot.com (http://more-dotnet.blogspot.com/)
Compilers 21 books
http://more-compiler.blogspot.com (http://more-compiler.blogspot.com/)
Shell Programming 26 books
http://more-shell.blogspot.com (http://more-shell.blogspot.com/)
Database (oracle, mssql, mysql, db2) 50 books
http://more-database.blogspot.com (http://more-database.blogspot.com/)
Networks 60 books
http://more-networking.blogspot.com (http://more-networking.blogspot.com/)
1000Free/Downloadable/IT/ebooks/sap/mainframe
SAP/ABAP - 50 books
www.sapebook.blogspot.com (http://www.sapebook.blogspot.com/)
mainframe ebooks 198 ebooks
www.mainframeebook.blogspot.com (http://www.mainframeebook.blogspot.com/)
Cisco Certified exam ebooks
CCIE, CCNA, CCIP, CCNP, CCDP, and CCSP 21 ebooks
And 100 reference of ebooks downloadable
www.ciscoebook.blogspot.com (http://www.ciscoebook.blogspot.com/)
Javascript, XML, CGI, CSS, HTML ebooks 80 Nos
www.javascript-css-xml-cgi-ebook.blogspot.com (http://www.javascript-css-xml-cgi-ebook.blogspot.com/)
Data structure and algorithms through java, c, c++, c # and various algorithms 21 ebooks
www.datastructureebook.blogspot.com (http://www.datastructureebook.blogspot.com/)
Computer Graphics, Photoshop, VRML, OpenGL - 28 ebooks
www.computergraphicsebook.blogspot.com (http://www.computergraphicsebook.blogspot.com/)

Java, c, c++, php, sql, oracle, mysql, networking, C#, asp.net, vb.net, vc.net, vb, compiler design linux, unix, Shell programming, etc
www.top-resource.blogspot.com (http://www.top-resource.blogspot.com/)

kavitha
09-03-2007, 10:09 AM
கணினி புத்தகங்கள் படிக்கும் அனைவருக்கும் மிக உதவியாக இருக்குன். நன்றி மோகன்.

அறிஞர்
09-03-2007, 12:45 PM
வாவ் என்னது இது ஒரு பெரிய களஞ்சியமே இங்கு இருக்கிறது.

நன்றி மோகன்.

jasmin
18-03-2007, 12:32 PM
c++ a to z வரை கற்க எதவது வலைதலம் இருக்கிறதா?

leomohan
18-03-2007, 12:34 PM
c++ a to z வரை கற்க எதவது வலைதலம் இருக்கிறதா?

http://www.softlookup.com/tutorial/c++/index.asp

அறிஞர்
19-03-2007, 02:41 PM
அருமையான C++ கற்க கூடிய தளம்.. நன்றி.. மோகன்

leomohan
12-07-2007, 08:28 AM
சுலபமாக கரன்ஸி மாற்று மற்றும் தற்போதைய மதிப்புகளை அறிய

http://www.xe.com

இணைய நண்பன்
12-07-2007, 11:22 AM
பயனுள்ள தகவல்கள்.நன்றி

அறிஞர்
13-07-2007, 02:37 PM
சுலபமாக கரன்ஸி மாற்று மற்றும் தற்போதைய மதிப்புகளை அறிய

http://www.xe.com

பல வருடங்களுக்கு நான் பார்த்த தளம்...

மோகனின் இந்த பதிவு இன்னும் வளரட்டும்...

தெரிந்ததை இன்னும் கொடுங்கள் மோகன்.

அரசன்
13-07-2007, 02:40 PM
சுலபமாக கரன்ஸி மாற்று மற்றும் தற்போதைய மதிப்புகளை அறிய

http://www.xe.com

நல்ல தளம் தான் மோகன். பலருக்கும் கண்டிப்பாக பயனளிக்கும். மேலும் பல நல்ல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

விகடன்
29-07-2007, 03:36 AM
மிக்க நன்றி நண்பரே.
இதற்கு முதலில் அந்த மொழியில் பேசத்தெரிந்திருக்க வேண்டுமல்லவா?
அப்படிப்பார்த்தால் முதலில் கற்கவேண்டியது பேச்சு மொழி. பின்னர் எழுத கற்கத்தேவையில்லை.

leomohan
05-08-2007, 11:15 AM
இசை பயில்பவரா நீங்கள். அடிக்கடி நோட்ஸ் எடுக்க நோடேஷன் பக்கம் தேவைப்படுகிறதா.

வேண்டிய வகையில் வடிவமைத்து இணையத்திலிருந்தே பிரெண்ட் செய்துக் கொள்ளலாம்

http://www.blanksheetmusic.net/

பாரதி
05-08-2007, 11:51 AM
மிக அருமையான சுட்டிகள் நண்பரே..! மிக்க நன்றி.

அரசன்
07-08-2007, 04:46 AM
http://www.littlefunny.com/Google.aspx (http://www.littlefunny.com/Google.aspx)

http://leomohan.etheni.com/109.gifhttp://leomohan.etheni.com/111.gifhttp://leomohan.etheni.com/104.gifhttp://leomohan.etheni.com/97.gif

இந்த தளத்தினை பயன்படுத்தி பார்த்தேன். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். ஆனால் இதில் ஒரு பெயரை கொடுத்து பின் எவ்வாறு அந்த பெயரை மட்டும் காப்பி செய்வது?

leomohan
07-08-2007, 06:27 AM
Right Click every image and save

ஒவ்வொரு எழுத்துக்கும் தனியாக ஒரு உருவ கோப்பு உள்ளதால், அதை தனித்தனியாக சேமிக்க வேண்டும்.

leomohan
09-08-2007, 10:34 AM
இலவச கோப்பு ஏற்றுமதி இறக்குமதி தளங்களின் பட்டியல்

Lumunon FileShare - http://fileshare.lumunon.com/ (10MB)
FileUpYours - http://fileupyours.com/ (Unlimited)
SendThisFile - http://www.sendthisfile.com/info.jsp (2GB)
DataPickup - http://www.datapickup.com/ (1.5GB)
YouSendIt - http://www.yousendit.com (1GB)
FileFront - http://freespace.filefront.com/1 (1GB)
Free-Webster - http://www.free-webster.com/index.php?action=enter (600MB)
SpreadIt - http://www.spread-it.com (500MB)
BigUpload - http://www.bigupload.com (300MB)
UpDownloadServer - http://www.updownloadserver.com/ (250MB)
ShareBigFile - http://ww8.sharebigfile.com/ (250MB)
BonPoo - http://app02.bonpoo.com/ (250MB)
Updownload - http://dl2.updownloadserver.de/ (250 MB)
UploadStore - http://www.uploadstore.com/ (100MB)
Dropload - http://www.dropload.com (100MB)
Megaupload - http://www.megaupload.com (100MB)
SaveFile - http://www.savefile.com/filehost/ (60MB)
RapidShare - http://rapidshare.de (50MB)
UploadHut - http://www.uploadhut.com/ (50MB)
Turbo Upload - http://www.turboupload.com (50MB)
QuickFile - http://srv9.qfile.de/operator.php?sysm=file_transfer&sysf=upload (50MB)
ShareFiles - http://sharefiles.ru (50MB)
GigaShare - http://www.gigashare.com/index.php (50MB)
StorageFun - http://storagefun.com/ (50MB)
Ripway - http://www.ripway.com/ (30MB)
30MB - http://www.30mb.com (30MB)
SwiftDesk - http://www.swiftdesk.com/ (30MB)
UltraShare - http://www.ultrashare.net/ (30MB)
UploadTemple - http://www.uploadtemple.com/ (30MB)
Sendmefile - http://www.sendmefile.com (30MB)
Upload2 - http://upload2.net/ (25MB)
MyFileStash - http://myfilestash.com/ (25MB)
MyTempDir - http://www.mytempdir.com/ (25MB)
WebFile - http://www.webfile.ru (20MB)
FileUploadManager - http://www.da_insane.boo.pl/d/upload/index.php (10MB)
FileCabi - http://www.filecabi.net/ (10MB)
Filesupload - http://www.filesupload.com (10MB)

leomohan
09-08-2007, 10:39 AM
rapidshare, megupalod தளங்களில் தேடும் தேடுபொறி

http://www.rapidexplorer.net/

மலர்
09-08-2007, 03:13 PM
ஒவ்வொரு எழுத்துக்கும் தனியாக ஒரு உருவ கோப்பு உள்ளதால், அதை தனித்தனியாக சேமிக்க வேண்டும்
ஓரெ வார்த்தையாக சேமிக்க வழி உண்டா...

leomohan
09-08-2007, 05:57 PM
ஓரெ வார்த்தையாக சேமிக்க வழி உண்டா...

அதை சேமித்து விட்டு Microsoft Paintல் இணைக்கலாம்.

மாதவர்
10-08-2007, 04:48 AM
கற்றதும் கற்றுகொடுப்பதும் மிக அருமை

மலர்
10-08-2007, 08:33 AM
நன்றி மோகன் நான் முயற்சி செய்து பார்க்கிறேன்...

leomohan
13-08-2007, 03:23 PM
நன்றி மலர். நன்றி மாதவர்.

எதை செய்தாலும் நாம் எதையாவது மறந்துவிடுகிறோம் அல்லது விட்டுவிடுகிறோம். அதனால் எப்போதுமே மேலாளர்கள் ஒரு check list வைத்துக்கொள்ளேன் என்று அறிவுறுத்தியிருப்பார்கள். அப்பேற்பட்ட செக் லிஸ்டிலும் எதையாவது விட்டுவிட்டால்.

பிரச்சனையில்லை இதோ இந்த தளம் இருக்கிறது

http://www.checklists.com/

leomohan
13-08-2007, 03:24 PM
ஆங்கில இலக்கணத்தில் பிரச்சனையா. யாராவது சோதித்து பார்த்து நாம் தேறுவோமா மாட்டோமா என்று பரிட்சிப்பார்களா என்ற ஏக்கமா. கவலை வேண்டாம் இதோ இந்த தளத்தில் பாருங்கள்

http://www.prenhall.com/bluepencil/bluepencil.html

சாம்பவி
15-08-2007, 08:36 PM
தகவலுக்கு ஒரு தென்கச்சி ஸ்வாமிநாதன்.
சிரிப்புக்கு ஒரு க்ரேஸி மோகன்.
நம் தளத்துக்கு ஒரு லியோ மோகன்.

உபயோகமான தகவல்கள்.
நன்றிகள் பல.

அன்புரசிகன்
16-08-2007, 03:04 AM
ஆங்கில இலக்கணத்தில் பிரச்சனையா. யாராவது சோதித்து பார்த்து நாம் தேறுவோமா மாட்டோமா என்று பரிட்சிப்பார்களா என்ற ஏக்கமா. கவலை வேண்டாம் இதோ இந்த தளத்தில் பாருங்கள்

http://www.prenhall.com/bluepencil/bluepencil.html

மோகன் எனக்கு ஒரு உதவிதேவை. நம்மிடம் ஆங்கிலத்தில் உள்ளவற்றின் எழுத்துப்பிழை இலக்கணப்பிழை என்பவற்றை அறிய ஏதாவது இலவச மென்பொருள் அல்லது இணையம் உண்டா???

leomohan
16-08-2007, 08:08 AM
தகவலுக்கு ஒரு தென்கச்சி ஸ்வாமிநாதன்.
சிரிப்புக்கு ஒரு க்ரேஸி மோகன்.
நம் தளத்துக்கு ஒரு லியோ மோகன்.

உபயோகமான தகவல்கள்.
நன்றிகள் பல.

நன்றி காளியாத்தா.

leomohan
16-08-2007, 08:09 AM
மோகன் எனக்கு ஒரு உதவிதேவை. நம்மிடம் ஆங்கிலத்தில் உள்ளவற்றின் எழுத்துப்பிழை இலக்கணப்பிழை என்பவற்றை அறிய ஏதாவது இலவச மென்பொருள் அல்லது இணையம் உண்டா???

Microsoft Word 2003/2007 ல் இந்த வசதி உள்ளது அன்புர ரசிகன் அவர்களே. Dictionary பகுதியில் போய் UK English தெரிவு செய்துக் கொண்டால் உங்கள் எழுத்து பிழைகள் சிவப்பு கோடுகளாலும் இலக்கண பிழைகள் பச்சை கோடுகளாலும் காட்டப்படும். வலது கிளிக் செய்தீர்கள் என்றால் என்ன பிழை அதற்கு சரியான மாற்று எது என்பதும் தருமே.

ipsudhan
16-08-2007, 02:57 PM
நன்றி மோகன்,

சில வாரங்களுக்கு முன்( front cover .ஜெயம் ரவி) சுஜாதா விகடனில் மூன்று நல்ல வெப்சைட்களை குறிப்பிட்டுருந்ததாக கேள்விபட்டேன்,
நண்பர்கள் யாருக்காவது நினைவுள்ளதா?

leomohan
22-08-2007, 07:45 AM
புதிய எளிய முறையில் உங்களுடைய அல்லது உங்கள் வாடிக்கையாளர்களுடைய network documentation செய்ய இதோ சில கோப்புகள்.

NetworkDNA Full Library zip file - http://www.network-documentation.com/files/NetworkDNA_FullLibrary_10.zip
NetworkDNA Checklist in PDF Format - http://www.network-documentation.com/files/NetworkDNA_Network_Documentation_Checklist.pdf - http://www.network-documentation.com/files/NeworkDNAbinder_22_ForWeb_Excel.zip
NetworkDNA Small Bizz in Excel Format (zipped)

leomohan
23-08-2007, 11:20 AM
பெரும்பாலானோர் டை அணிய விருப்பம் இல்லாதவர்கள். சிலருக்கு அணிய வேண்டிய கட்டாயம். சிலருக்கு டை அணிய கற்றுக் கொள்வதில் பொறுமை இல்லை. அதனால் யாராவது கட்டித் தந்தால் பல மாதங்கள் அப்படியே வைத்து அதை மீண்டும் மீண்டும் அணிந்து செல்வார்கள்.

டை அணிய கற்க விரும்புபவர்களுக்கு சுலபமான வழி

இதோ Windsor Knot

http://necktieaficionado.com/AnimationWindsor.gif

leomohan
23-08-2007, 11:21 AM
http://necktieaficionado.com/Four-in-hand-1.gif

http://necktieaficionado.com/Four-in-hand-2.gif

http://necktieaficionado.com/Four-in-hand-3.gif

http://necktieaficionado.com/Four-in-hand-4.gif

http://necktieaficionado.com/Four-in-hand-5.gif

http://necktieaficionado.com/Four-in-hand-6.gif

leomohan
23-08-2007, 11:25 AM
நேர்முகத்தேர்வுகளுக்கு உடை அலங்காரம் எப்படி செய்துக் கொள்ள வேண்டும்

http://www.necktieaficionado.com/Dress-For-Interview.html

மாதவர்
24-08-2007, 03:21 AM
மிக நல்ல உதவி

மாதவர்
24-08-2007, 03:36 AM
நல்ல தகவல்களை தொடர்ந்து அளிக்கும் மோகனுக்கு வாழ்த்துக்கள்

leomohan
25-08-2007, 12:24 PM
இது கணினி பகுதியில் வரும் தலைப்பாக இருந்தாலும் இணையத்தகவல்களும் சேர்ந்து கொடுக்கிறேன்.

http://www.buildeazy.com/coffeetable.html

வீட்டிலே அனைத்தும் செய்து பழகியவரா நீங்கள்.

இதோ மரவேலை செய்து நீங்களே வீட்டில் உள்ள பொருட்களை அமைக்கலாம்.

http://www.buildeazy.com/coffeetable.gif

செய்முறையும் தேவையான பொருட்களும் படங்களுடன் அழகாக விளக்கியிருக்கிறார்கள். இதுபோல பல நூறு projects உண்டு

http://www.buildeazy.com/coffee_plan.gif

மீனாகுமார்
27-08-2007, 05:55 PM
மிகவும் பயனுள்ள அரிய தகவல்களைத் தரும் மோகன் அவர்களுக்கு என் நன்றி.... நான் இந்த தமிழ் மன்றத்தில் நீங்கள் தரும் தேன்களைப் பருகும் ஒரு தேனீ... உங்கள் சேவை வாழ்க...

slwaran
02-09-2007, 08:44 AM
அண்ணா இன்று காரில் பாட்டு கேட்பதெல்லாம் பழை கதை, வீடியோவே பார்கலாம், சிவாஜி படத்தில் கவணியுங்கள்.

ஓவியா
02-09-2007, 10:27 AM
வரன், அது பின் சீட்டில் ஜாலியாக வரும் எசமானுக்கு,

பாட்டு கேட்பது ஓட்டுனர்.

த*க*வ*லுக்கு ந*ன்றி.

ஓவியா
02-09-2007, 10:29 AM
இது கணினி பகுதியில் வரும் தலைப்பாக இருந்தாலும் இணையத்தகவல்களும் சேர்ந்து கொடுக்கிறேன். ...............

மோ, சின்ன வயசுலே எனக்கு பள்ளியில் தச்சன் வேலை கற்றுக்கொடுத்தார்கள். பெணகளும் இதுபோல் சில விசயங்களை பழகி வைத்துக்கொள்ளனுமாம்.

மிகவும் பயனுல்ல தகவல்.

நன்றி.

leomohan
02-09-2007, 11:13 AM
மோ, சின்ன வயசுலே எனக்கு பள்ளியில் தச்சன் வேலை கற்றுக்கொடுத்தார்கள். பெணகளும் இதுபோல் சில விசயங்களை பழகி வைத்துக்கொள்ளனுமாம்.

மிகவும் பயனுல்ல தகவல்.

நன்றி.

நன்றி ஓவியா. ஆம் அனைவருக்கும் பயன்படும் ஒரு கலை தச்சுவேலை.

இணைய நண்பன்
02-09-2007, 11:18 AM
நன்றி..மோகன் மிகவும் பயனுள்ள தகவல்

அக்னி
12-09-2007, 12:42 AM
மிகவும் பயன் தரும், சுவாரசியமான தகவல்களைப் பெற்றுக்கொண்டேன்.
முன் பக்கங்களின் சில படங்கள் தென்படவில்லை. நேரம் கிடைக்கையில் சரிப்படுத்திவிடுங்கள்.
என்றும் உங்கள் பகிர்வு தொடர்ந்து வரட்டும்.

நன்றி லியோமோகன்...

leomohan
14-09-2007, 06:25 AM
ஊக்கத்திற்கு நன்றி இக்ராம், அக்னி.

சிவா.ஜி
14-09-2007, 07:03 AM
மிகப் பயனுள்ள தகவல் மோகன். தச்சுவேலைக்குத் தேவையான எல்லா டூல்ஸ்ஸும் என்னிடமிருக்கிறது.இதுவரை நானாக ஏதாவது செய்து கொண்டிருந்தேன்..இனி உங்களின் உதவியால் முறையாக செய்யலாம்.மிக்க நன்றி மோகன்.

leomohan
14-09-2007, 04:25 PM
மிகப் பயனுள்ள தகவல் மோகன். தச்சுவேலைக்குத் தேவையான எல்லா டூல்ஸ்ஸும் என்னிடமிருக்கிறது.இதுவரை நானாக ஏதாவது செய்து கொண்டிருந்தேன்..இனி உங்களின் உதவியால் முறையாக செய்யலாம்.மிக்க நன்றி மோகன்.

நீங்கள் ஒரு சகலகலாவல்லவர் சிவா. அனைத்து துறைகளிலும் ஆர்வமும் செலுத்தி அதை பழகியும் வருகிறீர்கள். வாழ்த்துகள்.

leomohan
28-09-2007, 10:38 AM
நீங்கள் தயாரித்த PowerPoint Presentations இணையத்தில் பகிர்ந்துக் கொள்ள வேண்டுமா? இதோ இந்த தளத்திற்கு செல்லுங்கள்

http://www.slideshare.net/

ஓவியன்
28-09-2007, 10:49 AM
அன்பான மோகன் இந்த திரியிலே பல பயந்தரும் தகவல்கள் எனக்கு கிடைத்தன...

சின்ன சின்ன தகவல்களாயினும் ஒரு தேவைக்காக அந்த தகவல்களுக்காகத் தவிக்கையில் தான் தெரியும் அந்த தகவலின் அருமை....

அவ்வாறான தகவல்களைத் தொகுத்துத் தரும் உங்கள் பணி மேன் மேலும் சிறக்கட்டும்....

leomohan
28-09-2007, 11:16 AM
நன்றி ஓவியன்.

உங்களுடைய Microsoft documents கோப்புகளை இணையத்தில் நேரடியாக ஏற்ற மென்பொருள் இல்லாமல் இணையத்தின் மூலமே பார்க்க உதவும் தளம்.

http://www.scribd.com/

அக்னி
28-09-2007, 11:41 AM
தொடருங்கள் மோகன்...
வேறுபல விடயங்களும் எல்லாமாகச் சேர்ந்து வருவது இன்னமும் சிறப்பு...
நன்றிகளும் வாழ்த்துக்களும்...

ipsudhan
28-09-2007, 02:54 PM
அன்பான மோகன் இந்த திரியிலே பல பயந்தரும் தகவல்கள் எனக்கு கிடைத்தன...

ஒரு முறை படித்து விட்டு குழம்பி விட்டேன் பின் சிரித்தேன்.

மாதவர்
29-09-2007, 03:48 AM
பயமா இருக்கும் போல

leomohan
01-10-2007, 01:37 PM
நீங்கள் எழுத்தாளரா? வெளியீட்டாளர் கிடைக்கவில்லை என்ற வருத்தம் வேண்டாம். நீங்கள் உங்கள் புத்தகத்தின் வெளியீட்டாளராகலாம்.

Self-publishing Solutions

http://www.lulu.com

ஜெயாஸ்தா
02-10-2007, 05:54 AM
ரொம்ப நாள் இந்தத்திரியை பார்வையிடாமலேயே இருந்துவிட்டேனே.... அருமையான தொகுப்பு லியோ..... இப்போது மட்டுமல்ல எப்போதும் தேவைப்படக்கூடிய விசயங்களை தொகுத்து தந்திருக்கிறீர்ள். எக்கச்சக்கமான கணிணி நூல்கள் வேறு தந்திருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டவற்றில் 'கரன்சி கன்வெர்டர்' அடிக்கடி நான் உபயோகப்படுத்தி வருகிறேன். இணையப்பக்ககங்கள் வடிவமைப்பர்களுக்கும் அருமையான தகவல்கள் இதில் உள்ளது. தொடருங்கள் லியோ உங்களின் உபயோகமான பங்களிப்பை...!

நேசம்
05-10-2007, 08:09 PM
ஆங்கில இலக்கணத்தில் பிரச்சனையா. யாராவது சோதித்து பார்த்து நாம் தேறுவோமா மாட்டோமா என்று பரிட்சிப்பார்களா என்ற ஏக்கமா. கவலை வேண்டாம் இதோ இந்த தளத்தில் பாருங்கள்

http://www.prenhall.com/bluepencil/bluepencil.html

எப்ப*டி அய்யா இவ்வ*ள*வு த*க*வ*ல் த*ர முடியுது .நான் இந்த* வ*ளைத்த*ள*த்திற்கு சென்றேன். ஆனால் ஒளி கேட்க* வில்லை.(என*து க*ணீணியில் எந்த* குறையுமில்லை.) ஏன். சொல்லுங்க*ள் அறிவு சுட*ரே

leomohan
06-10-2007, 02:04 PM
https://www.mediamax.com

கோப்புகள் பாதுகாப்பாக பகிர்ந்துக் கொள்ள ஒரு தளம். 25 ஜிபி அளவு.

ஆதவா
06-10-2007, 02:13 PM
இன்று காலையில் மீண்டும் பார்த்தேன்.... நல்ல தொகுப்புகள் அனைத்தும்....

leomohan
16-10-2007, 06:17 PM
http://உதாரணம்.பரிட்சை என்று தமிழில் தட்டிப்பாருங்கள்.

ஆம். ICANN இப்போது தமிழில் domain பெயர்களை சோதனை செய்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மோகன்.காம் காணலாம்.

....
மாதிரி (example.test) கூர்ந்தாய்விற்கு தங்களை வரவேற்கிறோம்
IDN (ஐ.டி.என்.) மேல்நிலை டொமெயினிற்கான கூர்ந்தாய்வுப் பகுதிக்கு வரவேற்கிறோம். 11 மொழிகளின் வழியே குறிப்பிடக்கூடிய IDN ஆய்வின் example.test அனைத்தும் ICANN's IDNwiki நோக்கியே நடத்தப்படுகிறது. அதாவது உங்களது பிரௌசரில் IDN டைப் செய்வதாலோ அல்லது IDN தொடர்பை கிளிக் செய்வதாலோ தங்களை IDNwiki கூர்ந்தாய்வு பகுதியில் அழைத்து வந்திருக்கிறது. தமிழ் பகுதியில் நுழைந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் !

இந்த குறிப்பிட்ட பகுதிக்குள் தங்களை இணைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளன. ஆகவே பல வகை வழிகள் தங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கும். இந்த பக்கத்தினை அடையவோ அல்லது பங்கேற்கவோ உங்களது பிரௌசர் IDN உடன் முழுவதுமாக ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக கீழ்கண்ட இணைப்புகளுடன் ஒவ்வொன்றும் இந்த பக்கத்தையே அடையுமாறு உங்களது பணியின் சூழல் தகுதியை நீங்களே ஆய்வு செய்து கொள்ளலாம். IDN பிரௌசரின் விலா வரியில் பொருத்தியும் ஆய்வு செய்யலாம். உங்களது பிரௌசர் IDNறேகான முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இந்த பக்கத்திற்கு நுழைய முடியும். ஆயினும் முதல் இரண்டு பத்திகளுக்கான இணைப்புகள் எந்த பிரௌசரினை கிளிக் செய்தாலும் வேலை செய்யும் (பிரசன்டேஷன் பார்மேட்டுகள் இடையே உள்ள வித்தியாசங்கள் IDNwiki அடிப்படை முறைகளை பற்றிய ஆங்கிலமொழி பகுதியில் உள்ள தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. அதைச்சார்ந்த மேல் விவரங்களும் அந்தப் பகுதியில் காணப்படும்இ தமிழ் மொழியில் இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை.

விக்கியிலிருந்து.....

leomohan
18-10-2007, 12:04 PM
யாஹூ இந்திய முக்கிய நகரங்களின் உள்ளூர் செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் முதலியவற்றை இந்த தளத்தில் தொகுத்து வழங்குகிறது.

இதோ சென்னைக்கான தொடுப்பு

http://in.ourcity.yahoo.com/Chennai

ஓவியன்
18-10-2007, 12:12 PM
மோகன் இந்த தளத்தில் இந்திய நகரங்களின் தகவல்கள் மட்டும் தானே இருக்கிறது, எனக்கு வேற்று நாட்டு நகரங்களின் தகவல்கள் இதே போன்று தேவையெனின் என்ன செய்யலாம்...??

leomohan
18-10-2007, 12:19 PM
மோகன் இந்த தளத்தில் இந்திய நகரங்களின் தகவல்கள் மட்டும் தானே இருக்கிறது, எனக்கு வேற்று நாட்டு நகரங்களின் தகவல்கள் இதே போன்று தேவையெனின் என்ன செய்யலாம்...??

Yahoo International எனும் தொடுப்பை தட்டி அவர்கள் பட்டியல் கொடுத்துள்ள அனைத்து நாடுகளில் இருந்து உங்களுக்கு வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த தொடுப்பு WWW.YAHOO.COM எனும் தளத்தின் அடிப்புறத்தில் காணலாம்.

ஓவியன்
18-10-2007, 12:20 PM
அட....!!

நன்றி மோகன்!

அக்னி
18-10-2007, 12:25 PM
எப்போதும் பயன் தரக்கூடிய தகவல்களை பகிர்ந்து கொள்கின்றீர்கள்...
மிக்க நன்றி...

யவனிகா
22-10-2007, 02:05 PM
மிகவும் பயனுள்ள தகவல்கள்.அளித்தமைக்கு நன்றி லியோ மோகன் அவர்களே.தொடரும் உங்கள் சேவை, எங்களுக்குத் தேவை.

leomohan
27-11-2007, 05:32 AM
Project Delivery Framework

ஒரு ப்ராஜெக்டை துவக்கம் முதல் முடிவு வரை எப்படி நிறைவேற்றுவது, அதற்கு தேவையான கோப்புகள் என்னென்ன, மாதிரி கோப்புகள் என்று அனைத்து விபரங்களையும் அடங்கியுள்ளது இந்த தளத்தில்

http://www.dir.state.tx.us/pubs/framework/

ப்ராஜெக்ட் மேலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தளம்.

மேலும் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்டை பற்றி அறியவும் அதில் பட்டம் பெறவும் இந்த தளத்திற்கு செல்லுங்கள் http://www.pmi.org

leomohan
27-11-2007, 05:35 AM
கணினி துறையில் உள்ளவர்கள் அதிக நேரம் செலவிட்டு பல Network Diagrams பிணைய வரைபடங்கள் வரைய வேண்டி இருக்கிறது. அதற்கு இலகுவாக பல மாதிரி கோப்புகள் கிடைக்கின்றன templates என்பார்கள். அப்படிப்பட்ட கோப்புகள் நம் வேலையை எளிதாக்கிவிடும்.

இதோ Microsoft ன் தளம்

http://office.microsoft.com/en-us/templates/CT101431051033.aspx

தினமும் பல்தேய்த்து குளிப்பது எப்படி ஒரு வழக்கமோ அதுபோல இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த தளத்திற்கு சென்றுவிடுவேன். பலரும் இலவசமாக இவ்வாறான templates ஏற்றி வைப்பார்கள் தினமும்.

mgandhi
27-11-2007, 05:36 AM
தகவலுக்கு நன்றி மோகன்

நேசம்
27-11-2007, 06:22 AM
பலருக்கு பயன் தரும் தகவல்களை தரும் மோகனுக்கு மனமார்ந்த நன்றி

மாதவர்
27-11-2007, 03:38 PM
நல்ல தகவல்கள்

reader
08-04-2008, 01:18 PM
நல்ல உபயோகமான தகவல்கள் தான்..

sunson
10-07-2008, 03:41 PM
எங்கெங்கெல்லாமோ அலைந்து தேடித் தேடி அடைய வேண்டிய தகவல்கள் அனைத்தையும், இணைய சுட்டிகளுடன் விளக்கமும் தந்து பதிந்து வரும் உங்களுக்கு பல்லாயிரம் நன்றிகள். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

தீபா
10-07-2008, 03:44 PM
இதத ஏன் தொடராமல் வைத்திருக்கிறீர்கள் மோகன்?

ஸ்ரீதர்
11-07-2008, 05:49 AM
நண்பர் லியோமோகன் அவர்களுக்கு ,

தங்களின் திரியைக் கண்டேன். மிகவும் பயனுள்ளதாகவும் , ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் , உபயோகமானதாகவும் இருந்தது. மிக்க நன்றி. தங்களின் அடுத்த பதிவைக்காண ஆர்வத்துடன் இருக்கிறேன்.

நன்றி

nada
09-10-2008, 03:05 AM
மோகனின் குறிப்புகள் அனைத்தும் அருமை,மிக்க நன்றி.

leomohan
09-10-2008, 04:42 AM
தகவலுக்கு நன்றி மோகன்

நன்றி காந்தி ஐயா.

leomohan
09-10-2008, 04:43 AM
பலருக்கு பயன் தரும் தகவல்களை தரும் மோகனுக்கு மனமார்ந்த நன்றி

மிக்க நன்றி நேசம்.

leomohan
09-10-2008, 04:44 AM
நல்ல தகவல்கள்

நன்றி மாதவர், ரீடர், சன்சன்.

leomohan
09-10-2008, 04:44 AM
நண்பர் லியோமோகன் அவர்களுக்கு ,

தங்களின் திரியைக் கண்டேன். மிகவும் பயனுள்ளதாகவும் , ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் , உபயோகமானதாகவும் இருந்தது. மிக்க நன்றி. தங்களின் அடுத்த பதிவைக்காண ஆர்வத்துடன் இருக்கிறேன்.

நன்றி

நன்றி ஸ்ரீதர் அவர்களே. விரைவில் மீண்டும் தொடர்கிறேன்.

leomohan
09-10-2008, 04:45 AM
இதத ஏன் தொடராமல் வைத்திருக்கிறீர்கள் மோகன்?

விரைவில் தென்றல் அவர்களே.

leomohan
09-10-2008, 04:46 AM
மோகனின் குறிப்புகள் அனைத்தும் அருமை,மிக்க நன்றி.

மிக்க நன்றி நாதா.

மாதவர்
09-10-2008, 02:39 PM
ஆங்கிலத்தில் சொல்வார்கள்
LEARNING இதில் L மட்டும் எடுத்துவிட்டால் EARNING
இதை தான் லியோ மோகன் மிக அற்புதமாக ,நமக்கு கற்றுக்கொடுகிறார்!

leomohan
21-10-2008, 08:20 AM
நன்றி கிஷோர். வேலை பளூவினால் பங்களிப்புகள் குறைந்துவிட்டன. விரைவில் தொடர்கிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி.

sujan1234
17-12-2008, 04:05 PM
தமிழில் தட்டச்சு செய்ய இ-கலப்பை எனும் மென்பொருள் இணையத்தில் உள்ளது நன்பர்களே

leomohan
09-06-2009, 01:21 PM
நீங்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தை போல வேறு தளங்கள் இணையத்தில் உள்ளனவா என்பதை அறிந்துக் கொள்ள இந்தி சிறிய மென்பொருளை உங்கள் உலாவியில் நிறுவுங்கள்.

http://www.similarweb.com/images/similar-web-logo.png

http://www.similarweb.com/

leomohan
09-06-2009, 01:23 PM
விரைவாக அழகாக இலவசமாக இணையதளம் அமைத்துக் கொள்ள

http://www.moogo.com/

நேசம்
09-06-2009, 01:26 PM
மீண்டும் மோகனை காண்பதில் மகிழ்ச்சி.தொடர்ந்து வாருங்கள்.

சிவா.ஜி
09-06-2009, 03:00 PM
நீண்டநாட்களுக்குப் பிறகு பல்துறைவித்தகர் மோகனை மன்றத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மோகன்.

நூர்
09-06-2009, 03:03 PM
மிக்க நன்றி அய்யா.

அமரன்
09-06-2009, 03:08 PM
வாங்க மோகன். நலமா?

மீண்டும் உங்கள் பகிர்வுகள் கிடைப்பதில் மன்றம் மகிழ்கிறது.