PDA

View Full Version : சாம்பியன் டிராபி



அறிஞர்
15-10-2006, 12:47 AM
கிரிக்கெட் மினி உலக கோப்பை ஆரம்பகிறது......


அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பைக்கு முன்னோடியாக மினி உலக கோப்பை இன்று ஆரம்பமாகிறது.


விளையாடும் போட்டிகளின் அட்டவணை



அக்டோபர் 15 - இந்தியா-இங்கிலாந்து
அக்டோபர் 16 - தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து
அக்டோபர் 17 - பாகிஸ்தான் - இலங்கை
அக்டோபர் 18 - ஆஸ்திரேலியா-மேற்கு இந்தியா

அக்டோபர் 20 - நியூசிலாந்து-இலங்கை
அக்டோபர் 21 - ஆஸ்திரேலியா-இங்கிலாந்து
அக்டோபர் 24 - இலங்கை-தென் ஆப்பிரிக்கா
அக்டோபர் 25 - நியூசிலாந்து-பாகிஸ்தான்

அக்டோபர் 26 - இந்தியா-மேற்கு இந்தியா
அக்டோபர் 27 - தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான்
அக்டோபர் 28 - இங்கிலாந்து-மேற்கு இந்தியா
அக்டோபர் 29 - இந்தியா-ஆஸ்திரேலியா

நவம்பர் 1 - அரையிறுதி -1
நவம்பர் 2 - அரையிறுதி -2

நவம்பர் 5 - இறுதி போட்டி

அறிஞர்
15-10-2006, 01:04 AM
இன்றைய போட்டியில் இந்தியா ஜொலிக்குமா..... டெண்டுல்கரின் சிறந்த விளையாட்டு அணிக்கு பலம்.

அறிஞர்
16-10-2006, 01:22 AM
இந்தியா இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து 125 ரன்களை எடுத்தது. இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முனாப் படேல்... சிறந்த வீரர்.

பரஞ்சோதி
16-10-2006, 03:47 AM
நேற்று இந்தியா ஆடிய ஆட்டத்தை பார்த்தால் தேறுவது கஷ்டம் தான். பார்க்கலாம் இந்தியா எப்போவும் எதிரணிக்கு இணையாக ஆடுவாங்க.

மதி
16-10-2006, 03:54 AM
நேற்று இந்தியா ஆடிய ஆட்டத்தை பார்த்தால் தேறுவது கஷ்டம் தான். பார்க்கலாம் இந்தியா எப்போவும் எதிரணிக்கு இணையாக ஆடுவாங்க.
இது வஞ்சக புகழ்ச்சி அணி இல்லியே..?:confused: :confused:

அறிஞர்
16-10-2006, 01:42 PM
இது வஞ்சக புகழ்ச்சி அணி இல்லியே..?:confused: :confused: எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா இந்தியாவை கண்டு பயப்படும்.
இந்தியா சிம்பாவேயை கண்டு பயப்படும்.. இது தான் இந்தியா....

தேறுமா எனப்பார்க்கலாம்.

அறிஞர்
16-10-2006, 01:43 PM
பாகிஸ்தானுக்கு பேரிழப்பு...

வேகப்பந்து வீச்சாளர்கள் சோயப் அக்தர், ஆசிப் நீக்கப்பட்டுள்ளனர்......

அறிஞர்
16-10-2006, 01:45 PM
தாய் நாட்டிற்காக ஓட்டுப்போடும்... நம்மாட்களின் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது....

ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ஓட்டையும் காணோம்

leomohan
16-10-2006, 02:10 PM
தாய் நாட்டிற்காக ஓட்டுப்போடும்... நம்மாட்களின் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது....

ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ஓட்டையும் காணோம்

ஒரு நப்பாசை தான்.

பரஞ்சோதி
16-10-2006, 05:48 PM
நான் இலங்கை அணியே வெல்லும் என்று நம்புகிறேன். காரணம் இந்தியா தவிர வேற அணிகளோடு மோதுவதால் அவர்களுக்கு தனி பலம், மேலும் சுழல்பந்து வீச்சும் எடுபடும்.

ஓவியா
16-10-2006, 07:43 PM
ஆஸ்திரேலியா கொஞ்சம் பலமாக இருப்பது போல் தெரிகிறதே

மதி
18-10-2006, 05:17 PM
ஆஸ்திரேலியா அணிக்கு வைத்துவிட்டார்களே ஆப்பு..! மேற்கு இந்திய தீவு அணியினருக்கு வாழ்த்துக்கள்..!

தாமரை
19-10-2006, 12:15 AM
ஆஸ்திரேலியா அணிக்கு வைத்துவிட்டார்களே ஆப்பு..! மேற்கு இந்திய தீவு அணியினருக்கு வாழ்த்துக்கள்..!

நான் அறிஞரானேன்!!!:rolleyes: ;) :confused:

crisho
19-10-2006, 12:15 PM
அதிகமானோர் மேற்கு இந்திய தீவுகள் அணியினருக்கே ஆதரவு கொடுத்தார்கள்.....
ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி...
பலே... பலே... மேற்கு இந்திய தீவுகள் அணியினருக்கு வாழ்த்துக்கள்.

அறிஞர்
19-10-2006, 12:27 PM
நான் அறிஞரானேன்!!!:rolleyes: ;) :confused::mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டம். டெய்லரின் ஹாட்ரிக் விக்கெட்டுகளால்.... ஆஸ்திரேலிய கனவுகள் தகர்ந்தது:rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
19-10-2006, 05:42 PM
:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டம். டெய்லரின் ஹாட்ரிக் விக்கெட்டுகளால்.... ஆஸ்திரேலிய கனவுகள் தகர்ந்தது:rolleyes: :rolleyes: :rolleyes:


ஓட்டு போட்ட எனக்கும் அதே கதிதான்...B) :angry:

மதி
19-10-2006, 07:25 PM
அந்த ஒரு ஓட்டு போட்ட ஆளு நீங்க தானா..?

ஓவியா
19-10-2006, 07:55 PM
அந்த ஒரு ஓட்டு போட்ட ஆளு நீங்க தானா..?


:D :D :D :D :D
:D :D :D
:D

அறிஞர்
19-10-2006, 10:26 PM
ஓட்டு போட்ட எனக்கும் அதே கதிதான்...B) :angry: இதுக்கே இப்படி இடிஞ்சு போயிட்டா எப்படி.... :eek: :eek: :eek:
திரும்பி வருவாங்கன்னு எதிர்பாருங்கள்.. :rolleyes: :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
24-10-2006, 05:41 PM
இன்று இலங்கையில் தோல்வியால் அந்த குருப் ஆட்டங்கள் சூடு பிடிக்கும்.

ஓவியா
25-10-2006, 05:39 PM
இதுக்கே இப்படி இடிஞ்சு போயிட்டா எப்படி.... :eek: :eek: :eek:
திரும்பி வருவாங்கன்னு எதிர்பாருங்கள்.. :rolleyes: :rolleyes: :rolleyes:


அப்படியே ஆகட்டும்

அறிஞர்
25-10-2006, 08:46 PM
இலங்கையில் அரையிறுதி வாய்ப்புகள் மங்கிவிட்டது.....

நியூசிலாந்தின் ஆட்டம் அருமை. பாகிஸ்தான் இன்றைய தோல்வி.. பெரிய ஏமாற்றமே.

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
---
இந்தியா மேற்கு இந்தியா, ஆஸ்திரேலியாவை சந்திக்கவேண்டும். ஏதாவது ஒரு போட்டியில் வென்றால் தான். அரையிறுதிக்கு வாய்ப்பு உண்டு.

இந்தியா மேற்கு இந்தியாவை வெற்றிகொண்டு, ஆஸ்திரேலியாவிடம் தோற்றால். கடுமையான போட்டி நிலவும். யார் அரையிறுதிக்கு செல்வது என....

இங்கிலாந்தும் வாய்ப்பை இழந்துள்ளது.

அறிஞர்
26-10-2006, 12:55 PM
மேற்கு இந்தியா பலமாக உள்ளது.
-----
இன்றைய போட்டியில் இந்தியா 223/9 ரன்களை எடுத்துள்ளது.

அடுத்து விளையாடும் மேற்கு இந்தியா இந்த ரன்னை எடுக்குமா..... நல்ல போட்டி...

இந்தியா பந்துவீச்சில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.