PDA

View Full Version : ஹைக்கூ 03 - கல்யாணம்.

meera
13-10-2006, 05:16 AM
சிறகுகளின் பாதுகாப்பில்
சிரித்து மகிழ்ந்த குஞ்சுகளுக்கு
சிறை தண்டனை
-கல்யாணம்.

பின்குறிப்பு:

இது தாமரை அண்ணா மாதிரி நல்லவர்களுக்கு அல்ல.

தாமரை
13-10-2006, 05:25 AM
சிறகுகளின் பாதுகாப்பில்
சிரித்து மகிழ்ந்த குஞ்சுகளுக்கு
சிறை தண்டனை
-கல்யாணம்.

பின்குறிப்பு:

இது தாமரை அண்ணா மாதிரி நல்லவர்களுக்கு அல்ல.

கல்யாணம் சிறைத்தண்டையானால்
மூணு வேளை சாப்பாடு
உறுதியா..:confused: :confused: :confused:

கல்யாணம் சிறையானால்
தேனிலவு என்ன?:confused: :confused: :confused:

தாமரை
13-10-2006, 04:14 PM
சிறகுகளின் பாதுகாப்பில்
சிரித்து மகிழ்ந்த குஞ்சுகளுக்கு
சிறை தண்டனை
-கல்யாணம்.

பின்குறிப்பு:

இது தாமரை அண்ணா மாதிரி நல்லவர்களுக்கு அல்ல.
மணி அடிச்சா சோறு
என் மனைவி பெயர்
மணி

பென்ஸ்
13-10-2006, 05:38 PM
அம்மிணி.. இங்கேயும் சில திருமணங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~`
தலைமுறை வளர்க்க
தலை கொடுக்கும்
வெட்டுகிளி....

~~~~~~~~~~~~~~~~~~~

விரித்த வலை
கட்டியவீடு அல்ல,
காதல் கல்லறை

meera
14-10-2006, 04:37 AM
அம்மிணி.. இங்கேயும் சில திருமணங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~`
தலைமுறை வளர்க்க
தலை கொடுக்கும்
வெட்டுகிளி....

~~~~~~~~~~~~~~~~~~~

விரித்த வலை
கட்டியவீடு அல்ல,
காதல் கல்லறை
பென்ஸ்,அழகான கவிதை தொகுப்பு.

meera
14-10-2006, 04:40 AM
மணி அடிச்சா சோறு
என் மனைவி பெயர்
மணி
அண்ணா,உண்மைய ஒத்துக்கவும் தைரியம் வேணும்.:D :D :D

crisho
14-10-2006, 07:18 AM
திருமண பந்தத்தில் இணையுமுன்னே ஏனோ இத்தனை கசப்பு?

meera
14-10-2006, 08:36 AM
திருமண பந்தத்தில் இணையுமுன்னே ஏனோ இத்தனை கசப்பு?

எல்லாம் அனுபவசாலிகள் சொன்னதால் தான்.எல்லாம் பய மயம்

crisho
14-10-2006, 09:12 AM
தவரான விளக்கம் கொடுத்திருக்கிரார்கள் மடையர்கள்!!

வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள பழகு...
கணவனுடன் விட்டுக்கொடுகும் பாங்கை ஏற்படுத்திக்கொள்...
ஓர் இரு முறை விட்டுக்கொடு
மேலும் மேலும் அவன் விட்டுக் கொடுப்பான்!!
நீ விட்டுக் கொடுக்க அவசியம் இல்லை...

நண்பனாக பழகு...
சிறை இருக்க அவசியமில்லை....

சிறந்த பண்புள்ளவனை தேர்ந்தெடு...
மணப்பந்தத்தை தைரியமாக ஏற்றுக்கொள்...
வாழ்க வளமுடன்.... சந்தோஷமாக!!

வாழ்த்துக்கள்.... பிரார்த்தனைகளுடன்.

meera
14-10-2006, 09:50 AM

நன்றி நண்பா நன்றி

கணவரை நண்பராக ஏற்றுக்கொள்ள நானும் சித்தமாய் இருக்கிறேன்.

தங்களின் பிரார்த்தனைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

தாமரை
15-10-2006, 03:08 AM
தவரான விளக்கம் கொடுத்திருக்கிரார்கள் மடையர்கள்!!

வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள பழகு...
கணவனுடன் விட்டுக்கொடுகும் பாங்கை ஏற்படுத்திக்கொள்...
ஓர் இரு முறை விட்டுக்கொடு
மேலும் மேலும் அவன் விட்டுக் கொடுப்பான்!!
நீ விட்டுக் கொடுக்க அவசியம் இல்லை...

நண்பனாக பழகு...
சிறை இருக்க அவசியமில்லை....

சிறந்த பண்புள்ளவனை தேர்ந்தெடு...
மணப்பந்தத்தை தைரியமாக ஏற்றுக்கொள்...
வாழ்க வளமுடன்.... சந்தோஷமாக!!

வாழ்த்துக்கள்.... பிரார்த்தனைகளுடன்.

ஓர் இரு முறை விட்டுக்கொடு
மேலும் மேலும் அவன் விட்டுக் கொடுப்பான்!!
நீ விட்டுக் கொடுக்க அவசியம் இல்லை...

விட்டுக் கொடுப்பதை விட்டுக்கொடுக்க முடியுமா?

மணவாழ்க்கை மகிழ்வுக்கு ஆலோசனைகள் இலவசம் அணுகவும் - நவீன நாரதர்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6607

franklinraja
24-10-2006, 03:06 PM
மாட்டு சந்தை போல
மாப்பிள்ளைக்கு விடுகிறார்கள் ஏலம்
-வரதட்ச்சணை

அறிஞர்
24-10-2006, 08:59 PM
மாட்டு சந்தை போல
மாப்பிள்ளைக்கு விடுகிறார்கள் ஏலம்
-வரதட்சணை அருமை ப்ராங்களின்.. தொடருங்கள்....

அறிஞர்
24-10-2006, 09:01 PM
சிறகுகளின் பாதுகாப்பில்
சிரித்து மகிழ்ந்த குஞ்சுகளுக்கு
சிறை தண்டனை
-கல்யாணம். கண்டிப்பில்
வளர்க்கப்பட்ட கன்னிகளுக்கு
விடுதலை
-கல்யாணம்.

அமரன்
14-06-2007, 03:49 PM
மணி அடிச்சா சோறு
என் மனைவி பெயர்
மணி
மணி அடிச்சா
வீக்கம்
லஞ்சம்

அமரன்
14-06-2007, 03:51 PM
கல்யாணம் சிறைத்தண்டையானால்
மூணு வேளை சாப்பாடு
உறுதியா..:confused: :confused: :confused:

கல்யாணம் சிறையானால்
தேனிலவு என்ன?:confused: :confused: :confused:
ரத்து

ஆதவா
14-06-2007, 04:00 PM
மணி அடிச்சா சோறு
என் மனைவி பெயர்
மணி

இதைப் படித்ததும் (உண்மையில் கேட்டதும்..) ஒரே சிரிப்பு.. நான் இருந்த இடத்தில் அத்தனை பேரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்....

டைமிங்க் காமெடி + அருமையான அர்த்தமுள்ள ஹைகூ...

செல்வண்ணா.. வீட்டில் அண்ணீகிட்ட இதுதான் நடக்குதா?

அமரன்
14-06-2007, 04:15 PM
அம்மிணி.. இங்கேயும் சில திருமணங்கள்

விரித்த வலை
கட்டியவீடு அல்ல,
காதல் கல்லறை
(சிறகு)விரித்தவளுக்கு
கட்டிய வீடும்
கல்லறை

அறிஞர்
14-06-2007, 04:33 PM
மணி அடிச்சா
வீக்கம்
லஞ்சம்
என்ன சொல்ல வர்றீங்க.. அமரன்.. கொஞ்சம் புரியலையே..

அமரன்
14-06-2007, 04:38 PM
என்ன சொல்ல வர்றீங்க.. அமரன்.. கொஞ்சம் புரியலையே..
வீக்கம் என்றால் சந்தோசம் என்றும் பொருள்படும்.
வாங்குபவர் முகத்திலும் கொடுப்பவர் முகத்திலும் இருக்குமல்லவா.
மாட்டுப்பட்டா முதுகிலும் வீக்கம்.
(நான் படித்த உங்கள் முதல் கவிதை இங்கே. தொடர்வதில்லையே நீங்கள்)

தாமரை
14-06-2007, 04:45 PM
மணி அடிச்சா
வீக்கம்
லஞ்சம்

உன்னைக் கண்டதும்
மணி அடித்தது
மனதுக்குள்

நான் தான் புரிந்து கொள்ளவில்லை
அது எச்சரிக்கை மணி என்று

அமரன்
14-06-2007, 04:51 PM
உன்னைக் கண்டதும்
மணி அடித்தது
மனதுக்குள்

நான் தான் புரிந்து கொள்ளவில்லை
அது எச்சரிக்கை மணி என்று
உன்னைக் காண்பதுக்கு
மணிஅடித்தேன்
வாசலில்

எனக்குத் தெரியவில்லை...
நாய்க்கு காது கூர்மை என்று

அறிஞர்
14-06-2007, 04:54 PM
வீக்கம் என்றால் சந்தோசம் என்றும் பொருள்படும்.
வாங்குபவர் முகத்திலும் கொடுப்பவர் முகத்திலும் இருக்குமல்லவா.
மாட்டுப்பட்டா முதுகிலும் வீக்கம்.
(நான் படித்த உங்கள் முதல் கவிதை இங்கே. தொடர்வதில்லையே நீங்கள்)

சந்தோசம் என பொருள்படுமா.. அது எனக்கு தெரியாது..

அது என்ன முதல் கவிதை...
தங்களை போன்றோர் முன் சும்மா கிறுக்குவது... எல்லாம் கவிதையாகுமா...

அமரன்
14-06-2007, 04:57 PM
சந்தோசம் என பொருள்படுமா.. அது எனக்கு தெரியாது..

அது என்ன முதல் கவிதை...
தங்களை போன்றோர் முன் சும்மா கிறுக்குவது... எல்லாம் கவிதையாகுமா...
:confused: :confused: :confused: :confused:

ஷீ-நிசி
14-06-2007, 05:04 PM
சந்தோசம் என பொருள்படுமா.. அது எனக்கு தெரியாது..

அது என்ன முதல் கவிதை...
தங்களை போன்றோர் முன் சும்மா கிறுக்குவது... எல்லாம் கவிதையாகுமா...

முன் வந்து காப்பாற்றியது! இல்லாவிட்டால்.....

அக்னி
14-06-2007, 05:04 PM
சந்தோசம் என பொருள்படுமா.. அது எனக்கு தெரியாது..

அது என்ன முதல் கவிதை...
தங்களை போன்றோர் முன் சும்மா கிறுக்குவது... எல்லாம் கவிதையாகுமா...
இப்படிச் சொல்லல் தகுமா?

பிச்சி
15-06-2007, 05:51 AM
சூபர் அக்கா. மூனுவரியில நம்மலோட சோகம் சொல்லி அசத்திரீங்க

ஓவியன்
24-06-2007, 07:19 PM
உன்னைக் கண்டதும்
மணி அடித்தது
மனதுக்குள்

நான் தான் புரிந்து கொள்ளவில்லை
அது எச்சரிக்கை மணி என்று

எச்சரிக்கையோ
அச்ச அறிக்கையோ
எல்லாவற்றிற்கும்
மணியை அடித்தால்
மணிதான் என்னே
செய்யும்?:icon_hmm:

அரசன்
25-06-2007, 06:27 AM
சூபர் அக்கா. மூனுவரியில நம்மலோட சோகம் சொல்லி அசத்திரீங்க

சோகமா, பிறகு ஏன் திருமண பேச்சை எடுத்தவுடன் வெட்கப்படுகிறீர்கள்.

சூரியன்
25-06-2007, 06:39 AM
மூன்று வரியில் நல்ல கவிதை