PDA

View Full Version : குஷ்புவுடன் ஒரு கற்பனை பேட்டி



leomohan
12-10-2006, 01:26 PM
வணக்கம். நான் லியோ.

ஐயோ....

ஐயோ இல்லை. லியோ.

ஓ லியோவா. எனக்கு டமிள் அவ்வளவா வராது. குட் மார்னிங்.

ஐயோ லியோ ஆங்கிலம் தான்.

என்ன திமிங்கிலமா?

சரி அதை விடுங்க. நீங்க தமிழ் பெண்களுக்கு கற்ப்பு இல்லைன்னு ஒரு பேட்டி கொடுத்தீங்களாமே?

ஐயோ கற்ப்புன்னா என்னன்னே தெரியாதுங்க எனக்கு. நான் தமிழ் பெண்கள் கறுப்புன்னு சொன்னேன். அதை யாரோ மாத்தி எழுதிட்டாங்க.

அது சரி நீங்கள் ஜெயா டிவிலே இருந்துட்டு
கலைஞரோட பாராட்டு விழாக்கு எப்படி வந்தீங்க?

நீங்க வேற. இந்த தமிழ் பெண்கள் பேட்டி பிரச்சனையில பயந்து ஓடி ஓடி வந்தேன்னா நேரு ஸ்டேடியத்துல நுழைஞ்சிட்டேன். ட்க்குன்னு மைக் கொடுத்து பேச சொல்லிட்டாங்க.

ஒரு வெளிநாட்டு பத்திரிகை உங்களை அசிங்கமா படம் போட்டாங்களே என்ன செஞ்சீங்க?

அதுக்குத்தான் காசு வாங்கிட்டேனே.

காசு வாங்கனா மானம் திரும்பி வந்துடுமா?

மானம் போனா திரும்பி வராது தான். ஆனா வேண்டாம்னு சொன்னா அவங்க காசு திருப்பி எடுத்துட்டு போயிடுவாங்களே.

பெரியார் படத்தில நீங்க பெரியாரோட மனைவியா நடிக்கிறீங்களாமே?

ஐயோ. பெரிய ஆறு பக்கத்தில சின்ன ஸ்கர்ட் போட்டுட்டு ஆடனும்னு சொல்லி கால்ஷீட் கேட்டாங்க. சரின்னு கொடுத்தேன். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது.

அப்ப நீங்க நடிக்கப் போறதில்லையா?

நடிப்பேன். எனக்கும் மார்கெட் போயிடுத்துல்ல.

அப்ப என்ன பண்ணப் போறீங்க?

ஒத்து ரூபா கொடுத்தா ஓடப் பக்கம் வருவேன். பத்து ரூபா கொடுத்தா படத்தில நடிப்பேன்.

நீங்க சொல்றது எதுவும் புரியலை. ஆளை விடுங்க.

அறிஞர்
12-10-2006, 04:10 PM
மற்ற பேட்டிகளிலிருந்த விறுவிறுப்பு இல்லையே அன்பரே,......

ஓவியா
12-10-2006, 06:02 PM
நன்றி லியோ
நன்றி குஷ்பு

படித்தேன், சிரித்தேன்

புன்னகையுடன்
ஓவியா