PDA

View Full Version : சிதைந்த காதல்meera
12-10-2006, 05:22 AM
தூர்வாரப்பட்டது மனம்
தூக்கி எறியப்பட்டது குப்பை
அதில் காணாமல் போனது
அவன் நினைவும்......

மதி
12-10-2006, 07:52 AM
நிகழ்வை சொல்லியிருக்கறீங்க..
ஆனால் தூர்வாருதலுக்கான காரணம் ஏனோ? தூர்வாரியது யாரோ..?
காரணம் சொல்வீரோ????

guna
12-10-2006, 08:52 AM
ஒரு தூர்வாருதல் ல வீட்டை சுத்தம் செய்து விடுவதை போலவும்..
தினமும் ஒரு குளியல்'ல உடம்புல இருகும் அலுக்கையும் அலுப்பையும் சுத்தம் செய்துகொள்றதை போலவும் , மனதையும் சுத்தம் செய்துக்க முடிஞ்ஜா நிம்மதியை தேடனும் என்ற அவசியமே இருகாதுல மீரா?

_______________________________________________________________
குணா

மன்மதன்
12-10-2006, 08:55 AM
கண்டிப்பாக அவன் நல்லவனாக இருக்க முடியாது.. குப்பை என முடிவு செய்த பிறகு தூர் வாருவதில் தப்பில்லை எனலாம்...

meera
12-10-2006, 08:57 AM
நிகழ்வை சொல்லியிருக்கறீங்க..
ஆனால் தூர்வாருதலுக்கான காரணம் ஏனோ? தூர்வாரியது யாரோ..?
காரணம் சொல்வீரோ????

அய்யா சாமீங்களா இது எதுவும் எனக்கு நடக்கல.உண்மைய தான் சொல்றேன் நம்புங்கபா.:rolleyes: :rolleyes: :rolleyes:

தூர்வாருவதற்க்கு காரணமா இல்ல.ஜாதி,மதம்,பணம்,அந்தஸ்த்து இப்படி சொல்லீட்டே போகலாம் இல்லயா?

ஒவ்வோரு காதலும் வீட்டில் தெரியும் போது கண்டிப்பா பெற்றோர் தூர்வாருவாங்க தானே

தாமரை
12-10-2006, 09:04 AM
இதயத்தைச் சுரண்டி
ரணங்களுடன்
காதல் ஓவியம்
கலைக்கப்பட்டதோ!
சுரண்டப்பட்ட வர்ணம்
குப்பையானது
காதலனுக்கு
குட் பை யானது.
மீரா உங்கள் கவிதைகளில் ஒரே உணர்வு மேலோங்குகிறதே! என்ன விஷயம்.. ?

meera
12-10-2006, 09:18 AM
இதயத்தைச் சுரண்டி
ரணங்களுடன்
காதல் ஓவியம்
கலைக்கப்பட்டதோ!
சுரண்டப்பட்ட வர்ணம்
குப்பையானது
காதலனுக்கு
குட் பை யானது.
மீரா உங்கள் கவிதைகளில் ஒரே உணர்வு மேலோங்குகிறதே! என்ன விஷயம்.. ?
அடடா தாமரை அண்ணா ஏதோ சொல்றாரே! அண்ணா என்ன சொல்லவறீங்க தெளிவா சொல்லுங்க.

பாவம் மீரா, சின்ன பொண்ணு அதுக்கு ஒன்னும் தெரியாது. சந்தேகமா பாக்காதீங்க, மனோ அண்ணாவ கேளுங்க,நம்ம தலை மணியா சார் கேளுங்க,மன்மதனை கேளுங்க நான் சொன்னது உண்மைபா. :p :p :p :p

தாமரை
12-10-2006, 09:28 AM
ஒண்ணும் தெரியாதவங்களுக்கு நான் பார்ப்பது எப்படி தெரியுது:confused: :confused: :confused: :confused: :confused: :confused:

meera
12-10-2006, 09:34 AM
ஒண்ணும் தெரியாதவங்களுக்கு நான் பார்ப்பது எப்படி தெரியுது:confused: :confused: :confused: :confused: :confused: :confused:

கடியர் அண்ணா, நான் சின்ன பொண்ணு இப்படி கடிச்சு குதறுனா மன்றத்து பக்கம் எப்படி வரது:confused: :confused: (காலாலனு சொல்லாதீங்க அது எனக்கு தெரியும்.):eek: :eek: :eek:

மன்மதன்
12-10-2006, 09:37 AM
அடடா தாமரை அண்ணா ஏதோ சொல்றாரே! அண்ணா என்ன சொல்லவறீங்க தெளிவா சொல்லுங்க.

பாவம் மீரா, சின்ன பொண்ணு அதுக்கு ஒன்னும் தெரியாது. சந்தேகமா பாக்காதீங்க, மனோ அண்ணாவ கேளுங்க,நம்ம தலை மணியா சார் கேளுங்க,மன்மதனை கேளுங்க நான் சொன்னது உண்மைபா. :p :p :p :p

உண்மைபா .. :rolleyes: :rolleyes: :D

தாமரை
12-10-2006, 09:37 AM
இந்த மன்றத்துக்கு கையாலயே வரலாமே.. விசைப் பலகையை காலால ஏன் உதைக்கிறீங்க.. உங்க எலி என்ன பாவம் பண்ணினது

பென்ஸ்
12-10-2006, 09:43 AM
கவிதை நன்று...
பாராட்டுகள்

meera
12-10-2006, 09:52 AM
இந்த மன்றத்துக்கு கையாலயே வரலாமே.. விசைப் பலகையை காலால ஏன் உதைக்கிறீங்க.. உங்க எலி என்ன பாவம் பண்ணினது
கடியர் அண்ணா கடிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே என்பதை தங்கள் தங்கை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறாள்.;) ;) ;)

meera
12-10-2006, 09:55 AM
கவிதை நன்று...
பாராட்டுகள்
நன்றி பென்ஸ்

தாமரை
12-10-2006, 09:56 AM
கடியர் அண்ணா கடிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே என்பதை தங்கள் தங்கை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறாள்.;) ;) ;)

இப்போ ஏத்துக்குவீங்க.. திடீர் என்று தூக்கி எறிவீங்க.. வேணாம் இந்த வம்பு..
சாட்டையடி மண் சுமந்த சிவனுக்கு விழ்ந்தாலும் தழும்புகள் எல்லார் முதுகிலும்..

gragavan
12-10-2006, 04:05 PM
தூர் வாரனும்னு சொல்லிக் கவிதை ஒன்னு....அதுக்குள்ளயே நூறு வாட்டி தூரு வார்ரீங்களேய்யா!

பென்ஸ்
12-10-2006, 04:19 PM
தூர்வாரப்பட்டது மனம்
தூக்கி எறியப்பட்டது குப்பை
அதில் காணாமல் போனது
அவன் நினைவும்......

சட்டேன அதிர்ந்து போனேன் மீரா...
எவ்வளவு எளிதாக வாசித்துவிட்டேன்...
அதுவும் எவ்வளவு ஒரு பெரிய விஷயத்தை...

சின்ன வரிகளில் மனம் கொள்ளை கொண்டு விட்டீர்...

மீரா... இதை இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர் பார்த்தேன்...

ஹைக்கு விதிகளுக்கு உட்பட்டு கவிதை எழுத ஆரம்பிக்கலாமே..
எழிதாக வரும் உங்களுக்கு...
மன்றத்தில் "ப்ரியன்" எப்பவோ அதை பத்தித நியாபகம்... தெடி பாருங்கள் கிடைக்கும்...

இப்போ இந்த கவிதையில் கூட மூன்றாவது வரி தேவையா????

மன்மதா...
அவன் கெட்டவனாகதான் இருக்க வேண்டிய தேவை இல்லை,
சூழ்நிலைகள் கூட இந்த நிலைக்கு தள்ளலாம்....

ஓவியா
12-10-2006, 05:38 PM
தூர்வாரப்பட்டது மனம்
தூக்கி எறியப்பட்டது குப்பை
அதில் காணாமல் போனது
அவன் நினைவும்......

மீரா,
அழகான கவிதை,

ஆனால் எனக்கு பொருந்தவில்லையே...............

எவ்வலவு தூர்வாரப்பட்டாலும்
மனம் தூக்கி எறிய மறுகின்றது
அவன் குப்பை நினைவுகளை.......:)

பென்ஸ்
12-10-2006, 05:56 PM
மீரா,
அழகான கவிதை,

ஆனால் எனக்கு பொருந்தவில்லையே...............

எவ்வலவு தூர்வாரப்பட்டாலும்
மனம் தூக்கி எறிய மறுகின்றது
அவன் குப்பை நினைவுகளை.......:)

அப்படியே நல்லா பினாயில் விட்டு கழுவவும் செய்யனுமாம்...
அப்படிதானே மீரா???

மதி
13-10-2006, 03:31 AM
அப்படியே நல்லா பினாயில் விட்டு கழுவவும் செய்யனுமாம்...
அப்படிதானே மீரா???
தூக்கி எறியப்பட்ட குப்பை
உரமானது
அவன் முகத்தில்..!

தாமரை
13-10-2006, 04:29 AM
தூர் வாரனும்னு சொல்லிக் கவிதை ஒன்னு....அதுக்குள்ளயே நூறு வாட்டி தூரு வார்ரீங்களேய்யா!

காதலை தூர் வாராம காலங் காத்தாலெ போயி ஒரு ஏரி குளம்னு தூர் வாரி இருந்தா தண்ணி பஞ்சமாவது தீரும்..
ஆகா!!!

குளத்தை தூர் வாரினால்
நல்ல தண்ணிர்
காதலை தூர் வாரினால்
உப்புக் கண்ணிர்...

தாமரை
13-10-2006, 04:33 AM
தூக்கி எறியப்பட்ட குப்பை
உரமானது
அவன் முகத்தில்..!

குப்பையினால்
மின்சாரம் தயாரிக்கலாம்..
இந்தக் குப்பையோ
காதல்
கரண்ட் கட் ஆனதினால்

meera
13-10-2006, 04:37 AM
அப்படியே நல்லா பினாயில் விட்டு கழுவவும் செய்யனுமாம்...
அப்படிதானே மீரா???
கரீட்டுப்பா:D :D :D :D

பென்ஸ்
13-10-2006, 04:41 AM
குப்பையினால்
மின்சாரம் தயாரிக்கலாம்..
இந்தக் குப்பையோ
காதல்
கரண்ட் கட் ஆனதினால்

என்னயா இது...

கரண்ட் கட்...
காதல்....
குப்பைதொட்டி...

பண்பட்டவர்பகுதிக்கு மாத்தாம விடமாட்டிங்களோ???

meera
13-10-2006, 04:41 AM
காதலை தூர் வாராம காலங் காத்தாலெ போயி ஒரு ஏரி குளம்னு தூர் வாரி இருந்தா தண்ணி பஞ்சமாவது தீரும்..
ஆகா!!!

குளத்தை தூர் வாரினால்
நல்ல தண்ணிர்
காதலை தூர் வாரினால்
உப்புக் கண்ணிர்...
அண்ணா மெய்யாலுமா?:confused: நீங்க அழுவுனீங்கலா?:confused:
நம்ப முடியலயேப்பா:eek: :eek:

பென்ஸ்
13-10-2006, 04:44 AM
அண்ணா மெய்யாலுமா?:confused: நீங்க அழுவுனீங்கலா?:confused:
நம்ப முடியலயேப்பா:eek: :eek:

இந்த முதலை எத்தனை தூர் வாங்கிய குழத்தை கடல் நீராக்கியதோ???

தாமரை
13-10-2006, 11:00 AM
அண்ணா மெய்யாலுமா?:confused: நீங்க அழுவுனீங்கலா?:confused:
நம்ப முடியலயேப்பா:eek: :eek:

ஆனந்தக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீர்னு ஒண்ணு இருக்கு கேள்விப்பட்டிருக்கீங்களா?
அதுவும் உப்பாய்த்தான் இருக்கும்..
பென்ஸூ-
குளம் கடலானால் பரவாயில்லை.. பட்டா போடப்படு காணாமல் போனால் தான் தப்பு

தாமரை
13-10-2006, 03:57 PM
என்னயா இது...

கரண்ட் கட்...
காதல்....
குப்பைதொட்டி...

பண்பட்டவர்பகுதிக்கு மாத்தாம விடமாட்டிங்களோ???

தலைகீழா பாத்தாலும் கவிதை நல்லாத்தான் இருக்கு.

ஓவியா
13-10-2006, 06:17 PM
என்னதான் நடக்குது...

காதலை இப்படி தூரு வார்ரீங்களேய்யா...:D

franklinraja
24-10-2006, 02:49 PM
அலை

கடற்கரை மணலில்
என் காதலை எழுதிவைத்தேன்.

அலை வந்து
அடித்து செல்லவில்லை...

மாறாக

படித்து சென்றது..!

தாமரை
24-10-2006, 03:20 PM
அலை

கடற்கரை மணலில்
என் காதலை எழுதிவைத்தேன்.

அலை வந்து
அடித்து செல்லவில்லை...

மாறாக

படித்து சென்றது..!

ஓ நீங்கள்தானா அது
கடலை இப்படி
அலைபாய வைத்தது...

.................................

காதலர்களின்
கால்சுவடுகளை கழுவி
பாதபூஜை செய்யும்
கடல்...

பென்ஸ்
24-10-2006, 05:35 PM
அலை

கடற்கரை மணலில்
என் காதலை எழுதிவைத்தேன்.

அலை வந்து
அடித்து செல்லவில்லை...

மாறாக

படித்து சென்றது..!

மனதில் காதல் ஒன்று விதைத்து வைத்தேன்
முளைக்கும் முன்
தண்ணீராய் அம்மாவின் கண்ணீர்
பட்டு போனது காதல்...

அந்த காதல் வலிகளை
கரையொன்றில் எழுதி வைத்தேன்
அலையாய் வந்து
அந்த வரிகளை அழித்து சென்றது
காதலியின் கண்ணீர்...

அறிஞர்
24-10-2006, 09:03 PM
மனதில் காதல் ஒன்று விதைத்து வைத்தேன்
முளைக்கும் முன்
தண்ணீராய் அம்மாவின் கண்ணீர்
பட்டு போனது காதல்...

அந்த காதல் வலிகளை
கரையொன்றில் எழுதி வைத்தேன்
அலையாய் வந்து
அந்த வரிகளை அழித்து சென்றது
காதலியின் கண்ணீர்...
கண்ணீருக்கு தான்
எத்தனை வலிமை.....

அருமை பெண்ஸ்.....

meera
25-10-2006, 11:29 AM
மனதில் காதல் ஒன்று விதைத்து வைத்தேன்
முளைக்கும் முன்
தண்ணீராய் அம்மாவின் கண்ணீர்
பட்டு போனது காதல்...

அந்த காதல் வலிகளை
கரையொன்றில் எழுதி வைத்தேன்
அலையாய் வந்து
அந்த வரிகளை அழித்து சென்றது
காதலியின் கண்ணீர்...

மனதில்
எழுதப்பட்டவை அல்ல
காதல்
கண்ணீரில் கரைந்து போக
அவை
இதயத்தில் பொறிக்கப்பட்டவை.

பென்ஸ்
25-10-2006, 11:37 AM
மனதில்
எழுதப்பட்டவை அல்ல
காதல்
கண்ணீரில் கரைந்து போக
அவை
இதயத்தில் பொரிக்கப்பட்டவை.

மீரா..
மன்னிக்க...
இதயத்திற்க்கும் , மனதிற்க்கும் என்ன வித்தியாசம்???:confused: :confused:

meera
25-10-2006, 11:42 AM
மீரா..
மன்னிக்க...
இதயத்திற்க்கும் , மனதிற்க்கும் என்ன வித்தியாசம்???:confused: :confused:

பென்ஸ்,மனதிற்க்கும்,இதயத்திற்க்கும் வித்தியாசம் ஒன்றும் இல்ல.

முதல் வரியில் மனமென்று குறிப்பிட்டதால் கடைசி வரியில் இதயம் என்று குறிப்பிட்டேன்.
(சும்மா எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா முயற்சி பண்ணலாமேனுதான் ஹி ஹி ஹி:D :D :D :D )

பென்ஸ்
25-10-2006, 11:49 AM
மனதில்
எழுதப்பட்டவை அல்ல
காதல்
கண்ணீரில் கரைந்து போக
அவை
இதயத்தில் பொரிக்கப்பட்டவை.

மனசு வெந்து போறது இதுனாலதானோ???:rolleyes: :rolleyes: :D :D

தாமரை
25-10-2006, 11:52 AM
Originally Posted by meera
மனதில்
எழுதப்பட்டவை அல்ல
காதல்
கண்ணீரில் கரைந்து போக
அவை
இதயத்தில் பொரிக்கப்பட்டவை.
)

என்னோட போட்டி போட முயற்சி செய்யும் போதே நினைத்தேன்.. இப்படித்தான் ஆகுமென்று...:rolleyes: :rolleyes: :rolleyes:

மனதில் எழுதவில்லை.. இதயத்தில் பொரிக்கப்பட்டது...

பொறித்தல் : பதித்தல்
பொரித்தல் : எண்ணெயில் பொரித்தல்..:eek: :eek: :eek:

இதயத்தில் பொரித்தல் : இதயம் நல்லெண்ணெயில் பொரிக்கப்பட்டது..
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=158782&postcount=42

கிளியை இதயம் நல்லெண்ணெயில் பொரிக்க வேண்டுமாம்.. சரியா பென்ஸூ:cool: :cool: :cool:

சரிதானே மீரா...:D :D :D

பென்ஸ்
25-10-2006, 12:08 PM
கல்லறையில் நீ வைத்து சென்ற பூ
இன்று செடியாய் பூத்து குலுங்குது
அதை சூடவாவது இங்கு வந்து போ பெண்ணே...

meera
26-10-2006, 04:51 AM
என்னோட போட்டி போட முயற்சி செய்யும் போதே நினைத்தேன்.. இப்படித்தான் ஆகுமென்று...:rolleyes: :rolleyes: :rolleyes:

மனதில் எழுதவில்லை.. இதயத்தில் பொரிக்கப்பட்டது...

பொறித்தல் : பதித்தல்
பொரித்தல் : எண்ணெயில் பொரித்தல்..:eek: :eek: :eek:

இதயத்தில் பொரித்தல் : இதயம் நல்லெண்ணெயில் பொரிக்கப்பட்டது..
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=158782&postcount=42

கிளியை இதயம் நல்லெண்ணெயில் பொரிக்க வேண்டுமாம்.. சரியா பென்ஸூ:cool: :cool: :cool:

சரிதானே மீரா...:D :D :D

அடடா கிளிக்கு வந்த சோதனையா இது?
(ஒரே ஒரு எழுத்துல இப்படி மாட்டீட்டயே:eek: :eek: :eek: )

செல்வா அண்ணா இதுக்கெல்லாம் கிளி அசையாது ஆமா:angry: :angry: :angry:

பென்ஸ்
26-10-2006, 07:20 AM
அடடா கிளிக்கு வந்த சோதனையா இது?
(ஒரே ஒரு எழுத்துல இப்படி மாட்டீட்டயே:eek: :eek: :eek: )

செல்வா அண்ணா இதுக்கெல்லாம் கிளி அசையாது ஆமா:angry: :angry: :angry:

அதானே... B) B)
பொரிச்ச கிளி எப்படி அசையும்....:rolleyes: :rolleyes: :rolleyes:
இருப்பினும் வாயில் அசை போட படுமே.. :D :D :D
(இதுதான் மாடு மாதிரி தின்னுறது என்று சொல்லுவது):eek: :eek:

meera
26-10-2006, 08:40 AM
அதானே... B) B)
பொரிச்ச கிளி எப்படி அசையும்....:rolleyes: :rolleyes: :rolleyes:
இருப்பினும் வாயில் அசை போட படுமே.. :D :D :D
(இதுதான் மாடு மாதிரி தின்னுறது என்று சொல்லுவது):eek: :eek:

கிண்டலா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:rolleyes: :rolleyes: :rolleyes:

பொரிக்கப்பட்டதால்
அசையாமல் இல்லை
இந்த கிளி
கூண்டில் அடைக்கப்பட்டதால்.....

பென்ஸ்
26-10-2006, 09:08 AM
கூண்டு திறக்கப்பட்டது
வேளியே வந்தது கிளி
துண்டை தேடி எடுத்து
பட்டாணியை பதிலுக்கு வாங்கி
மீண்டும் கூட்டுனுள் காத்திருகிறது
இன்னும் ஒரு பட்டாணிக்காய்....

தாமரை
26-10-2006, 03:01 PM
கூண்டு திறக்கப்பட்டது
வேளியே வந்தது கிளி
துண்டை தேடி எடுத்து
பட்டாணியை பதிலுக்கு வாங்கி
மீண்டும் கூட்டுனுள் காத்திருகிறது
இன்னும் ஒரு பட்டாணிக்காய்....

கிளியே கிளியே
பச்சை கிளியே
பெஞ்சமின் பேருக்கு
சீட்டொண்ணு எடு..
...
...
அல்லிராணி வந்திருக்காக
...
...

அல்லிராணி
26-10-2006, 03:24 PM
கூண்டு திறக்கப்பட்டது
வேளியே வந்தது கிளி
துண்டை தேடி எடுத்து
பட்டாணியை பதிலுக்கு வாங்கி
மீண்டும் கூட்டுனுள் காத்திருகிறது
இன்னும் ஒரு பட்டாணிக்காய்....

ஜோசியக்காரனே ஜோசியக்காரனே
இருபது வருடமாய் ஜோஸியம் சொல்லியும்
இன்னும் ஏன் புத்தகம் பார்த்தே படிக்கிறாய்

இத்தனை முறை படித்துமா
மனப்பாடம் ஆகவில்லை..

ஆகியிருந்தால்
நீ ஏன் மரத்தடியில்....!!!

ஓவியா
26-10-2006, 06:14 PM
மனதில் காதல் ஒன்று விதைத்து வைத்தேன்
முளைக்கும் முன்
தண்ணீராய் அம்மாவின் கண்ணீர்
பட்டு போனது காதல்...

அந்த காதல் வலிகளை
கரையொன்றில் எழுதி வைத்தேன்
அலையாய் வந்து
அந்த வரிகளை அழித்து சென்றது
காதலியின் கண்ணீர்...

பெஞ்சு

கவிதையை பாராட்ட வார்த்தைகள் இல்லை...
பாராட்டாமலும் இருக்க முடியவில்லை......அருமை

வார்த்தைகளை ரசித்தேன்....
வலியை எப்படி ரசிக்க முடியும்.....

ஓவியா
26-10-2006, 06:30 PM
என்னோட போட்டி போட முயற்சி செய்யும் போதே நினைத்தேன்.. இப்படித்தான் ஆகுமென்று...:rolleyes: :rolleyes: :rolleyes:

மனதில் எழுதவில்லை.. இதயத்தில் பொரிக்கப்பட்டது...

பொறித்தல் : பதித்தல்
பொரித்தல் : எண்ணெயில் பொரித்தல்..:eek: :eek: :eek:
இதயத்தில் பொரித்தல் : இதயம் நல்லெண்ணெயில் பொரிக்கப்பட்டது..
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=158782&postcount=42

கிளியை இதயம் நல்லெண்ணெயில் பொரிக்க வேண்டுமாம்.. சரியா பென்ஸூ:cool: :cool: :cool:

சரிதானே மீரா...:D :D :D

குருவே சமயைலானந்தா......:eek: :eek: ...விளக்கம் 'தூள்' ..:D

தாமரை
28-10-2006, 01:40 AM
குருவே சமயைலானந்தா......:eek: :eek: ...விளக்கம் 'தூள்' ..:D

தூள் தானே!

மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் அரை தேக்கரண்டி
சீரகத்தூள் அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் அரை தேக்கரண்டி
உப்பு உங்கள் நாவின் சுவைக்கேற்ப
எலுமிச்சை உப்பு (லைம் சால்ட்) ஒரு சிட்டிகை
கறுப்பு உப்பு ஒரு சிட்டிகை
இளஞ்சிவப்பு வண்ணமூட்டி அரை சிட்டிகை..

ஒரு கிளியை பொரிக்க இந்தத் தூள் போதும்...

இவற்றை சிறிதே தண்ணீர் விட்டு பிசைந்து, சுத்தப்படுத்தப் பட்ட கிளியின் மேல் தடவி, 1 மணி நேரம் ஊற வைத்து இதயம் நல்லெண்ணையில் பொன்நிறமாய் பொரிக்கவும்..

:D :D :D :D :D

ஓவியா
29-10-2006, 01:36 PM

அண்ணா நான் 'தூள்' அப்படினு எழுதும்பொழுதே நினைத்தேன்....இப்படிதான் ஒரு பதிவு வரும்னு....அப்படியே 100% உண்மையகிட்டிங்களே...

எங்க அண்ணானா அண்ணாதான்....:D :D :D :D .

meera
30-10-2006, 03:35 AM
தூள் தானே!

மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் அரை தேக்கரண்டி
சீரகத்தூள் அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் அரை தேக்கரண்டி
உப்பு உங்கள் நாவின் சுவைக்கேற்ப
எலுமிச்சை உப்பு (லைம் சால்ட்) ஒரு சிட்டிகை
கறுப்பு உப்பு ஒரு சிட்டிகை
இளஞ்சிவப்பு வண்ணமூட்டி அரை சிட்டிகை..

ஒரு கிளியை பொரிக்க இந்தத் தூள் போதும்...

இவற்றை சிறிதே தண்ணீர் விட்டு பிசைந்து, சுத்தப்படுத்தப் பட்ட கிளியின் மேல் தடவி, 1 மணி நேரம் ஊற வைத்து இதயம் நல்லெண்ணையில் பொன்நிறமாய் பொரிக்கவும்..

:D :D :D :D :D

அண்ணா,உலகமே மாறினாலும் நீங்க கிளிய பொரிக்கற விஷ்யத்துல இருந்து மாறமாட்டீங்களா????:confused: :confused: :confused: