PDA

View Full Version : சாட்டையடி

meera
11-10-2006, 09:20 AM
அவன் கை பிடித்து
கடல் மணலில் நடந்து
கதைகள் பலபேசி
காலம் கடந்து வீடு வந்தபோது
அப்பாவின் குரல் யாரிடமோ
"என் மகள் அப்படியல்ல
காதல் என்ற அற்ப விஷயத்துக்காய்
என்னை ஏமாற்றுபவள் அல்ல"
வார்த்தைகளின் சாட்டையடி
அங்கே உடைந்து போனது
அவள் உள்ளம் மட்டுமல்ல
காதலும்..

தாமரை
11-10-2006, 09:23 AM
உன் கை பிடித்து
கடல் மணலில் நடந்து
கதைகள் பலபேசி
காலம் கடந்து வீடு வந்தபோது
அப்பாவின் குரல் யாரிடமோ
"என் மகள் அப்படியல்ல
காதல் என்ற அற்ப விஷயத்துக்காய்
என்னை ஏமாற்றுபவள் அல்ல"
வார்த்தைகளின் சாட்டையடி
இங்கே உடைந்து போனது
அவள் உள்ளம் மட்டுமல்ல
காதலும்..

நிலை மாறுகிறீர் இவ்விடம்..
தன்னிலை படர்க்கையாகி விட்டது.
தன்னிலை மறந்தது ஏனோ..
பாசம்தானோ

meera
11-10-2006, 09:30 AM
நிலை மாறுகிறீர் இவ்விடம்..
தன்னிலை படர்க்கையாகி விட்டது.

என்ன மாட்டிவிடறதுல அப்படி ஒரு சந்தோஷம் ம்ம்ம்ம்ம் விடமாட்டீங்களேB) B) B) B) B) B)

மதி
11-10-2006, 11:55 AM
உன் கை பிடித்து
கடல் மணலில் நடந்து
கதைகள் பலபேசி
காலம் கடந்து வீடு வந்தபோது
அப்பாவின் குரல் யாரிடமோ
"என் மகள் அப்படியல்ல
காதல் என்ற அற்ப விஷயத்துக்காய்
என்னை ஏமாற்றுபவள் அல்ல"
வார்த்தைகளின் சாட்டையடி
இங்கே உடைந்து போனது
அவள் உள்ளம் மட்டுமல்ல
காதலும்..

நிச்சயமான சாட்டையடி தான்.. இத்தனை வருடம் வளர்த்த அப்பாவின் மனமறிந்தால் இந்நேரம் காதலே வந்திருக்காதே..? பின் அவ்வார்த்தைகள் சாட்டையடியாவும் இருந்திருக்காதே..!

சில வாரங்கள் முன்பு "அரட்டையரங்க"த்தில் கேட்டது:
" 20 வருசம் உன்னை பெத்து வளர்த்த பெற்றோரோட மனதை புரிஞ்சிக்காத நீ 2 மாசம் மட்டுமே தெரிஞ்ச பொண்ணுக்காக தற்கொலை வரைக்கும் போற".

புரிதலில் இருக்கும் தவறு தான் என்ன?

மீரா...இது காதலன்/காதலியின் தோழமை காதலனிடம் சொல்லுமாறு எழுதியிருக்கீங்களா..? ஏன்னா.."உன்"னில் ஆரம்பித்து "அவளி "ல் முடிகிறதே??

meera
11-10-2006, 12:11 PM
உன் கை பிடித்து எடுத்துவிட்டு அவன் போட்டா சரியா இருக்குமா ராஜேஷ்.

தாமரை
11-10-2006, 12:36 PM
நிலை மாறுகிறீர் இவ்விடம்..
தன்னிலை படர்க்கையாகி விட்டது.
தன்னிலை மறந்தது ஏனோ..
பாசம்தானோ

ஆரம்பித்தில் காதலை உடைக்கும் காதலனிடம் பேசுவதாக ஆரம்பித்தீர்கள்..
அப்படியே கொண்டு செல்ல வேண்டுமானால் கீழ்கண்டபடி மாறும். (தன்னிலை)

உன் கை பிடித்து
கடல் மணலில் நடந்து
கதைகள் பலபேசி
காலம் கடந்து வீடு வந்தபோது
அப்பாவின் குரல் யாரிடமோ
"என் மகள் அப்படியல்ல
காதல் என்ற அற்ப விஷயத்துக்காய்
என்னை ஏமாற்றுபவள் அல்ல"
வார்த்தைகளின் சாட்டையடி
அங்கே உடைந்து போனது
என் உள்ளம் மட்டுமல்ல
நம் காதலும்..

படர்க்கை

யாரோ ஒரு பெண் என்று கொண்டு வரவேண்டுமானால்

அவன் கை பிடித்து
கடல் மணலில் நடந்து
கதைகள் பலபேசி
காலம் கடந்து வீடு வந்தபோது
அப்பாவின் குரல் யாரிடமோ
"என் மகள் அப்படியல்ல
காதல் என்ற அற்ப விஷயத்துக்காய்
என்னை ஏமாற்றுபவள் அல்ல"
வார்த்தைகளின் சாட்டையடி
அங்கே உடைந்து போனது
அவள் உள்ளம் மட்டுமல்ல
காதலும்..

மதி
11-10-2006, 12:48 PM
உன் கை பிடித்து எடுத்துவிட்டு அவன் போட்டா சரியா இருக்குமா ராஜேஷ்.

அது எனக்கு தெரியலீங்க..உங்க பார்வைய பொறுத்தது. அதான் இது ஒரு தோழன்/தோழி கூற்றான்னு கேட்டேன்...!

ஆமா..! இதுல ஏதும் வம்பில்லேல..:confused: :confused: :confused:

மதி
11-10-2006, 12:50 PM
செல்வரே...கலக்கிட்டீங்க போங்க...மறந்து போன இலக்கணமெல்லாம் இப்ப தான் ஞாபகத்துக்கு வர்றது...!

meera
11-10-2006, 01:04 PM
தாமரை அண்ண நன்றி.இப்போது மாற்றிவிட்டேன்.இதுக்கு தான் உங்கள மாதிரி ஒரு அறிவாளி(யாரும் நம்பாதீங்கோ!!!!!) பக்கத்துலயே இருக்கனும்கறது:D :D :D :D :D :D

மதி
11-10-2006, 02:21 PM
தாமரை அண்ண நன்றி.இப்போது மாற்றிவிட்டேன்.இதுக்கு தான் உங்கள மாதிரி ஒரு அறிவாளி(யாரும் நம்பாதீங்கோ!!!!!) பக்கத்துலயே இருக்கனும்கறது:D :D :D :D :D :D
உண்மையிலேயே அவர் அறிவாளி..சொல்லப் போனா சகலகலாவல்லவர்...:angry: :angry: :angry:

தாமரை
11-10-2006, 02:23 PM
உண்மையிலேயே அவர் அறிவாளி..சொல்லப் போனா சகலகலாவல்லவர்...:angry: :angry: :angry:

சொல்லாம போனா??:rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
11-10-2006, 02:34 PM
அத நீங்க தான் சொல்லணும்..! சொன்னா தானே தெரியும்...

ஓவியா
11-10-2006, 06:02 PM
மீரா,
கவிதை நன்று.

எது சரி எது தவறு என்று புரிய சில அனுபவங்கள் தேவையே...

பருவதில் வரும் மாற்றமே ஒருவரின் காதலுக்கு அடிப்படை தளமாகும்.

எண்ணங்கள் முதிர்ச்சியடைய மனங்களும் தெளிவடையும்.......

meera
12-10-2006, 04:43 AM
உண்மையிலேயே அவர் அறிவாளி..சொல்லப் போனா சகலகலாவல்லவர்...:angry: :angry: :angry:
அதே தான் நானும் சொல்றேன்.மீராக்கு அண்ணா நிச்சயம் அறிவாளி தான்.தாமரை அண்ணா சரியா???:confused: :confused:

:eek: :eek: (சரி சரி ஏதோ சொல்றீங்க எது சொன்னாலும் இந்த கூட்டத்துல வேண்டாமே plssssss) :D :D :D :D

மதி
12-10-2006, 07:56 AM
அதே தான் நானும் சொல்றேன்.மீராக்கு அண்ணா நிச்சயம் அறிவாளி தான்.தாமரை அண்ணா சரியா???:confused: :confused:

:eek: :eek: (சரி சரி ஏதோ சொல்றீங்க எது சொன்னாலும் இந்த கூட்டத்துல வேண்டாமே plssssss) :D :D :D :D
இது பத்தி எனக்குத் தெரியாது..ஆனா நான் சொன்னது உண்மை..

மன்மதன்
12-10-2006, 08:53 AM
இப்பவெல்லாம் பெற்றோர்களே காதலை ஆதரிக்க தொடங்கி விட்ட நிலையில் 'காதல் ஒரு அற்ப விஷயம் என்று சொல்லி விட்டீர்களே.. எதுக்கும் வீட்டிலே ஒரு தடவை பேசிப்பாருங்க மீரா... காதல் ஒரு அற்புத விஷயம் என தெரிய வரும்..ஹிஹி

meera
12-10-2006, 09:03 AM

என்னத்த பேசறது மன்மதன்.அப்படி ஒரு விஷயம் உண்மைல இல்ல.
அட நம்புங்கப்பா:D :D :D :D :D :D

தாமரை
12-10-2006, 09:06 AM
என்னத்த பேசறது மன்மதன்.அப்படி ஒரு விஷயம் உண்மைல இல்ல.
அட நம்புங்கப்பா:D :D :D :D :D :D

நம்பியாச்சு..
அப்பாவி

meera
12-10-2006, 09:09 AM
இது பத்தி எனக்குத் தெரியாது..ஆனா நான் சொன்னது உண்மை..

ம்க்கும் இந்த லொல்லு தானே வோணான்றது.:angry: :angry: :angry: :angry:

தாமரை
12-10-2006, 09:14 AM
முதலில் அப்பனை
பின் காதலனை
அதற்குப் பின் காதலை
அதற்குப் பின் காதால் கேட்பவர்களை
கடைசியில் தன்னைத் தானே

பென்ஸ்
12-10-2006, 09:40 AM
கவிதை நன்று...
பின்னுட்டக்களும் நன்று...

பென்ஸ்
12-10-2006, 07:51 PM
மீரா....

உலக தாய் தந்தையர்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை "காதல்".

அது என்னவோ தான் செய்த தவறுகளை இவர்கள் செய்யகூடாது என்பதாலோ????

இல்லை தன் கசப்பான எண்ணக்களின் நுனியில் தன் பிள்ளைகளையும் பார்ப்பதாலா...

நம்பிக்கைனா என்னான்னு தெரியுமா, சந்தேகபடாத மாதிரி நடிக்கிறது... :rolleyes: :rolleyes: :D :D

நமது மனம் நம் மனதுக்கு பிடித்தவர்கள் நமக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளுமாறு அமைது கொள்ள வைக்கும் ஒரு "ஈகோ டிபன்ஸ்"... சில ஆழ்மன சிந்தனைகளை கேள்விகளை ஆழ்மனதிடம் கேட்டுபார்த்தால் புரியும்... எல்லாம் வேஷம். தன் ஈகோ காயபடகூடாது என்ரு நம்மை சுற்றி ஏற்படுத்திகொள்ளும் நம்மை அறியாத போலி நாடகங்கள்....

இதில் நம்ம அப்பா, அம்மாமார் கைதேர்ந்தவர்கள்..

தன் பிள்ளை சிகரெட் குடிப்பான் என்று தெரிந்தாலும், தன் மகன் உள்ளே இருப்பதை தெரிந்துஅம், பக்கத்து வீட்டு பெண்ணிடம் "என் பையன் சொக்க தங்கம், பீடி சிகரேட் எல்லாம் பிடிப்பது கிடையாது".. என்று கூறுவது...

என் பிள்ளைகள் அப்படி கிடையாது, இப்படி கிடையாது என்று சும்மா, அதுவும் பிள்லைகள் காதுபட (அனேகமாக) கூறுவார்கள்....

மீரா இடு எல்லாம் சும்ம பவ்லாதான்.. கண்டுக்காதிங்க... நீங்க பீச் போங்க, பார்க் போங்க, பாக்காம போங்க... அதை எல்லாம் பார்த்த பிறகும் அப்பா இப்படிதான் "என் பொண்னு ரொம்ப நல்லவா.." என்று சொல்லுவார்...

மதி
13-10-2006, 03:28 AM
மீரா....

அது என்னவோ தான் செய்த தவறுகளை இவர்கள் செய்யகூடாது என்பதாலோ????

ஏன் இப்படி கூட இருக்கலாமே..? நான் மட்டும் சின்ன வயசுல காதலிக்கல...இவன் மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கலாம்னு ஒரு பொறாமையா கூட இருக்குமோ???:D :D :D :D

மீரா இடு எல்லாம் சும்ம பவ்லாதான்.. கண்டுக்காதிங்க... நீங்க பீச் போங்க, பார்க் போங்க, பாக்காம போங்க... அதை எல்லாம் பார்த்த பிறகும் அப்பா இப்படிதான் "என் பொண்னு ரொம்ப நல்லவா.." என்று சொல்லுவார்...
இதை தான் பிஞ்சு மனசுல நஞ்சை விதைக்கறதுன்னு சொல்லுவாங்க....!

meera
13-10-2006, 04:46 AM
மீரா இடு எல்லாம் சும்ம பவ்லாதான்.. கண்டுக்காதிங்க... நீங்க பீச் போங்க, பார்க் போங்க, பாக்காம போங்க... அதை எல்லாம் பார்த்த பிறகும் அப்பா இப்படிதான் "என் பொண்னு ரொம்ப நல்லவா.." என்று சொல்லுவார்...

ஆக மொத்தம் எல்லாருமா சேர்ந்து முடிவே பண்ணிட்டீங்க?:confused: :confused:

பென்ஸ்
13-10-2006, 04:56 AM
இதை தான் பிஞ்சு மனசுல நஞ்சை விதைக்கறதுன்னு சொல்லுவாங்க....!

பிஞ்ச மனசு
நஞ்சு போகும்தான்
கொஞ்சமும் இதை பத்தி
பெஞ்சு பேசலைனா....

pradeepkt
13-10-2006, 06:23 AM
ஹேய் திடீர் விஜய டி ஆர் பெண்ஸூ எங்க இருந்துய்யா முளைச்சு வந்தாரு????

crisho
13-10-2006, 07:13 AM
உலக தாய் தந்தையர்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை "காதல்".

சாரி போ த பிரேக்!!

மேல் கூறிய பெற்றோர் இக் காலத்தவராய் இருக்க சாத்தியமில்லை!!

ஒட்டு மொத்தமா பெற்றோருக்கு காதல்னா பிடிக்காது என்பதை ஏற்க முடியாது - அதுவும் "உலக தாய் தந்தையர்களுக்கு" என்று சொல்வது முற்றிலும் தப்பு!!!

meera
13-10-2006, 07:22 AM
வாங்க கிஷோர் எங்க ரொம்ப நாளா ஆளே காணோம்....

crisho
13-10-2006, 07:43 AM
நன்றி மீரா....

மன்றத்தில ரொம்ப மிஸ் பண்ணீட்டன்....

ஆபீஸ்ஸில போட்டு கொன்னு எடுக்குரானுங்க அசைய முடியல.. அப்ப அப்போ 5, 10 நிமிஸம் நேரம் கிடைக்கும்போ மன்றம் வந்து வாசிப்பேன், ஆனா பதிப்புகள் இட நேரம் இல்லை.

எது எப்படி இருந்தாலும் அப்ப அப்போ மன்ற பக்கம் வர கிடச்ச தா என்னோ... சந்தோஷம்! :D