PDA

View Full Version : மேற்கே செல்லும் விமானம் தொடர் கதை



leomohan
09-10-2006, 04:35 PM
மேற்கே செல்லும் விமானம் தொடர்கதை
முன்னுரை:
ஒரு தமிழ் இளைஞன் அமெரிக்கா செல்கிறான். அவன் கலாச்சாரம் பண்பாட்டு தெய்வ பக்தியும் கொண்ட ஒரு இளைஞன். அவன் மேல் ஒரு அமெரிக்க பெண்மணி காதல் வயப்படுகிறாள். அவனும் அவளை விரும்புகிறான். ஆனால் அவன் பெற்றோரும் சமுதாயமும் இந்த காதலை ஏற்காது என்பதை உணர்கிறான். அவன் சமுதாயத்தை எதிர்த்து எதையும் செய்ய விரும்பவில்லை. இந்நிலையில் இந்த அமெரிக்க பெண்மணி அவனுடைய தாயகம் சென்று தமிழ் சமஸ்கிருதம் படித்து அவன் பெற்றோர்களை வசப்படுத்துகிறாள். இவனுக்காக புகைப்பதை குடிப்பதை நிறுத்துவிடுகிறாள்.
அவர்கள் காதல் திருமணத்தில் முடிகிறதா? என்ன திருப்பங்கள். இதுவே கதை. உங்கள் ஆதரவு தேவை. நன்றி
-மோகன்.

ராஜகோபால் வானத்தில் மிதந்து கொண்டிருந்தான். அமெரிக்காவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனம் அவனுக்கு நேர்முக தேர்வுக்கானஅழைப்பு விடுத்திருந்தது. அந்த நிறுவனத்தின் தேர்வுக்குழு அடுத்த வாரம்சென்னைக்கு வருகிறார்கள். அவனுடைய விண்ணப்பத்தை ஏற்றுஅவர்கள் முதலிலேயே தொலைபேசி மூலம் பேட்டி எடுத்து அவனை
முதல் சுற்று தேர்வு செய்துவிட்டனர். அவனுடைய பட்டம் பட்டயங்கள் வேலை அனுபவம் என்று அவர்களுக்கு அனைத்தும் பிடித்திருந்தது.

நேர்முக தேர்வில் வென்றுவிட்டால் பிறகு அமெரிக்க பயணம் தான். ஆஹா அமெரிக்கா! கனவுகளின் தேசம். பிச்சைக்காரரும் பணக்காரன் ஆகலாம் திறமை இருந்தால். 'பூவோ இது வாசம். போவோம் இனி காதல் தேசம்" என்று இளையாராஜா பாட்டு அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

சென்னையில் பணிபுரிந்தாலும் வாரம் ஒரு முறை தந்தை தாயை பார்க்க விழுப்புரம் வந்துவிடுவான். இந்த செய்தி வந்தபோதும் விழுப்புரத்தில் தான் இருந்தான். அவன் நண்பன் முரளி தொலைபேசி மூலம் இந்த விஷயத்தை கூறினான்.

அப்பா அம்மாவிடம் விவரத்தை கூறியதும் அவன் அம்மா பூஜையறைக்கு சென்று குங்குமம் கொண்டு வந்து நெற்றியில் இட்டாள். அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவன் தந்தைக்கு அவன் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் நாட்டம் அதிகம். உடனே செய்தி தாள் எடுத்து 'ஒரு டாலரின் மதிப்பு இன்னிக்கு 45 ரூபாய்" என்றார். உள்ளே சென்று பழைய பெட்டிகளை உருட்டி பிரட்டி அவன் எப்போதோ பயன்படுத்திய உலக வரைப்படத்தை எடுத்து வந்து வட அமெரிக்கா பக்கத்தை புரட்டி 'எந்த ஊர்ல இருப்பே நீ" என்ற
கேட்டார். ராஜகோபாலும் ஆர்வத்துடன் 'ஈஸ்ட் கோஸ்ட் பா. நியூ ஜெர்ஸியில்". என்றான்.
உடனே அவர் இன்னும் சில பக்கங்களை புரட்டிவிட்டு 'அப்பா குளிர்அதிகமாக இருக்கும் போலிருக்கே. நீ மறக்காம கம்பளி ஸ்வெட்டர்எல்லாம் எடுத்திட்டுப்போ" என்றார்.

'அப்பா இன்னும் நேரம் இருக்குப்பா அதுக்கெல்லாம்" என்றுவிட்டு
தன்னுடைய கைநெடிக் ஹோண்டாவை எடுத்துக் கொண்டு வெளியேசென்றான்.

காந்தி சாலையில் வழக்கமாக செல்லும் தேனீர் விடுதிக்கு முன்
வண்டியை நிறுத்தினான். அங்கே கிருஷ்ணன் ராஜூ பாலா என்று அவன் நண்பர்கள் கூட்டம் காத்திருந்தது. கிருஷ்ணனும் ராஜூவும் சென்னையில் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறார்கள். அவர்களும் ராஜகோபாலைப் போல மாதம் ஒரு முறையோ முடிந்தால் வாராவாராமோ வந்து விடுவார்கள். பாலா விழுப்புரத்திலேயே ஒரு கொரியர் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறான். சுமார் 15 வருட நட்பு இவர்களுடையது.

'என்னடா மச்சான் இன்னிக்கு உன் ட்ரீட் தான்" என்றார்கள் குதுகலத்துடன். பிறகு பல மணிநேரம் அவர்களுடன் அமெரிக்கா பற்றி வாத விவாதங்கள். வீட்டிற்கு வரும்போது இரவு 12 மணி.

leomohan
09-10-2006, 04:36 PM
தட் தட் என்று சத்தம்கேட்டதும் திடுக்கென்று எழுந்தான் ராஜகோபால். இப்போது நடந்தது போல இருந்த இந்த நினைவுகள் ஈஸ்ட் ப்ரன்ஸ்விக் நியூ ஜெர்ஸியில் தற்போது இருக்கும் இவனை வந்து தொந்தரவு செய்வதுண்டு.

அவனுடைய அமெரிக்க நண்பனும் உடன் பணிபுரிபவனுமான க்ரிஸ் தான் கதவை தட்டியது.

'கமான் மேன் வி நீட் டு கோ" என்றான் அவசரமாக.

ஞாயிற்றுக்கிழமை மதியம் இப்படி தூங்குவது உண்டு.
'கிவ் மி 2 மினிட்ஸ"; என்று அவனிடம் கூறிவிட்டு குளியலறைக்கு சென்று ஒரு அவசர குளியல் போட்டுவிட்டு ஓடிச்சென்று அலமாரியில்
வைத்திருந்த மாரியம்மனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு குங்குமத்தை எடுத்து சற்றே நெற்றியில் வைத்துவிட்டு பிறகு அதை அழித்துவிட்டு ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு கருப்பு நிற குளிருக்கான ஜாக்கெட் எடுத்து அணிந்து வெளியே வந்தான்.

க்ரிஸ் ஆர்வமாக 'அலமாரியை நோக்கி என்ன செய்தாய்?" என்று கேட்டான்.

ராஜகோபால் அவனிடம் அது விழுப்புரத்தின் செல்லியம்மன் படம் என்றும் அந்த மாரியம்மன் எவ்வளவு சக்திவாய்ந்த தெய்வம் என்றும் சிறிய
வயதிலிருந்தே அவன் வேண்டியது அனைத்தும் அந்த அம்மா தந்தவள் என்றும் விளக்கினான்.

21ம் நூற்றாண்டிலும் இன்னும் அங்கிமிங்குமாக ஒட்டிக்கொண்டிருக்கும் இறை நம்பிக்கையும் கூட இல்லாத இளைஞர் சமுதாயம் அமெரிக்காவில்.

கிண்டல் பார்வை இல்லாவிட்டாலும் சற்றும் அவனை நம்பாதது போல் ஒரு பார்வை பார்த்தான் க்ரிஸ்.

'இநதியர்களின் பழக்க வழக்கங்கள் வியக்கதத்க்கது. நீ ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். நீயுமா இதையெல்லாம் நம்புகிறாய்?" - க்ரிஸ்.

'க்ரிஸ். இது ஒரு சிக்கலான விஷயம். பல விஷயங்கள் இந்தியாவில் பொது அறிவுடனோ தர்க்க சாஸ்திரப்படியோ நடப்பதில்லை. அங்கு ஒரு குழந்தை பிறந்த முதலிருந்து அவனுடைய சமுதாயம் பல விஷயங்களை அவனுக்கு கற்றுத்தருகிறது.

அவனுடைய விருப்பமோ இல்லையோ பல செய்திகள் அவனுடைய இளம் நெஞ்சில் பதிந்துவிடுகின்றன். சில சமயம் அவனுடைய வளர்ச்சிக்கு ஏற்ப்ப சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் மாறிவிடும். சில மாறாமல் அவனுடன் நின்றுவிடும்".

'பிறகு குங்குமம் வைத்துவிட்டு ஏன் அழித்துவிட்டாய்? யாராவது அதை பார்த்து சிரிப்பார்கள் என்றா?"
'இல்லை க்ரிஸ். இந்து மதம் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம். வேறு ஒரு மதத்தை அழித்தோ இல்லை பயத்தாலோ பணத்தாலே மதம் மாற்றியதாலோ இந்து மதம் உருவாகவில்லை. இந்தியா எந்த நாட்டின் மீதும்
இதுவரை படை எடுத்ததில்லை. ஆனாலும் இந்தியாவின் மீது பல நாடுகள் படை எடுத்திருக்கின்றன.

பயம் பணம் கொடுங்கோல் ஆட்சி இவை மூலம் இந்தியாவில் பல முறை மத மாற்றம் நடந்தாலும் இன்னும் 80 சதவிகிதம் இந்தியாவில் இந்து மதம் தான். ஆனாலும் மதப்பற்றை வெளிப்படையாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

அதே சமயம் நான் வேறு ஒரு நாட்டில் இருக்கும் போது அவர்களுடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப ஒரு சில சரிப்பாடுகள் செய்யவேண்டியது தான் நியாயம்".

'அப்பா எது கேட்டாலும் பெரிய சொற்பொழிவு ஆற்றிவிடுகிறாயே?" என்று சிரித்தான் க்ரிஸ்.

ராஜகோபால் மீண்டும் பழைய நினைவுகளுக்கு திரும்பினான். அவன் அதிலிருந்து மீண்ட போது ஒரு மதுவிடுதியில் வண்டி நின்றிருந்தது.

'கமான் இன்' என்று அழைத்தான் க்ரிஸ். உள்ளே நுழைந்ததும் ஒரு புது உலகத்தை கண்டான். டெக்ஸாஸ் எனும் மாகாணத்தில் வாழ்பவர்கள்
போல உடை அணிந்திருந்த பணி பெண்கள் ஆண்கள். குதிரைப்படங்கள் துப்பாக்கிகள் என்று ஒரு 18ம் ஆண்டு கிராம விடுதியை அப்படியே சித்தரித்திருந்தார்கள்.

'மீட் சிலியா" என்று திடீரென்று ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினான் க்ரிஸ். ஒரு நிமிடம் கண் மூடி கண் திறந்தான் ராஜ். சின்டெரல்லா கதையை கேட்டிருக்கிறான். ஸ்நோ வொயிட் கதையை கேட்டிருக்கிறான்.

ஆனால் வானத்து தேவதைகள் தமிழ் படத்திலும் கூட சுமாராகத்தான் இருப்பார்கள். இவளோ ரம்பை ஊர்வசி என்ற அவனே பார்த்திராத ஒரு கற்பனை கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு வியந்தான்.

நீலமான கண்கள் (ஓ அமெரிக்காவில் அனைவரும் கான்டாக்ட் லென்ஸ் அணிவார்களே) நீளமான கூந்தல் பொன் நிறத்தில் (இங்கே எல்லாரும் டை தான்) உதடுகளோ சிவந்த நிறம் (லிப்ஸ் டிக்காக இருக்குமோ) வி போன்ற ஸ்வெட்டர் சிவப்பு நிறத்தில் நீல நிறத்தில் ஒரு ஜீன்ஸ் வெள்ளை நிறத்தில் ஒரு ஹை ஹீல்ஸ்.
'ஹாய்' என்று கை நீட்டியது அந்த தேவதை.

இவனோ நிஜமா நிழலா என்று தெரியாமல் எங்கோ கை நீட்டினான். அவள் அவன் கையை தேடி தன்னுடைய மென்மையான கைகளால் கை குலுக்கினாள். மயிலிறகு அவனை வருடிச் சென்றது போல் இருந்தது.

அவர்கள் மூவரும் உயரமான மூன்று முக்காலிகள் மேல் அமர்ந்தனர். ஒரு பணிப்பெண் அவர்களிடம் வந்து 'மே ஐ கெட் சம் டிரிங்ஸ் ஃபார் யூ" என்று கேட்டாள்.

'ஒன் ஹெனிக்கன் ப்ளீஸ்" - க்ரிஸ்.

'ஐ வில் கோ வித் ஹிம் " - சிலியா.

அவள் மேல் வைத்திருந்த கண்ணை அகற்றாமல் 'ஒன் டையட் கோக் ப்ளீஸ்" என்றான்.

'வாட்? யூ வில் நாட் கோ ஃபார் ஹெனிக்கன்? யூ வான்ட் டு ட்ரை சம்திங் ஹார்ட்?" என்றான் க்ரிஸ் ஆச்சர்யத்துடன்.

'இல்லை க்ரிஸ் எனக்கு குடி பழக்கம் இல்லை". (டேய் ராஜு நீ அமெரிக்கா போய் குடிக்கிற பழக்கம் மாமிசம் சாப்பிடற பழக்கம் எல்லாம் கொண்டு வருவதா இருந்தா நீ இங்கிருந்தே வேலை செஞ்சா போதும்டா" - அம்மா என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு")

என்ன? குடிக்க மாட்டாயா? என்ன கதையாக இருக்கிறது? கல்லூரியில் படித்திருக்கிறாய். கம்யூட்டர் துறையில் பணிபுரிகிறாய். குடிப்பதில்லை என்றால் எப்படி நம்புவது? - க்ரிஸ்.

ஆஹா. க்ரிஸ் இதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் உன்னுடைய விருந்து வைபவம் கெட்டுப்போயிடும். பிறகு சொல்கிறேன்.
அதுவரை ஏதோ ஒரு இந்திய நண்பனை அழைத்து வந்திருக்கிறான் என்று நினைத்த சிலியா அவன் மீது ஆர்வமானாள்.

5.11 அடி. 70 கிலோ. தினம் ஓடி உடலை கச்சிதமாக வைத்திருந்தான். சிறிய வயதிலிருந்து தந்தை சொல்லி வளர்த்த பழக்கம். அவன் தந்தை இந்த அரசாங்க உத்தியோகத்திற்கு முன்பு பட்டாளத்தில் இருந்தவர்.

அமைதியான முகம். கருப்பு தான். துரு துரு கண்கள். உண்மையே பேசுவதாலும் ஏதையும் சுலபமாக எடுத்துக் கொள்வதாலும் முகத்தில் எந்த வித சுருக்கங்களும் இல்லை. கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறான் என்று சிலியா நினைத்தாள்.

க்ரிஸை நோக்கி 'அவனுக்கு வேண்டாம் என்றால் கட்டாயப்படுத்தாதே. எனக்கு சில இந்தியர்களை தெரியும். அவர்கள் குடிப்பதே இல்லை".

தோளை குலுக்கி ஓகே என்றான் க்ரிஸ். அவனுக்கு ராஜ் எது செய்தாலும் ஆச்சர்யமாகவே இருந்தது.

என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி சிலியா என்றான் ராஜ்.
ஏ அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்றாள் அவள் அழகாக சிரித்தப்படியே.

பிறகு பல மணி நேரம் அமெரிக்க இந்திய வாழ்கை முறையிலிருந்து இன்றைய ஈராக் ஈரான் பிரச்சனை வரை அனைத்தும் பேசினார்கள். ராஜ் இரண்டு கோக்கில் நின்றுவிட்டான். எப்படித்தான் இந்த கருமத்தை லிட்டர்
கணக்காக இவர்கள் குடிக்கிறார்கள்? நம்ம ஊரிலும் இந்த சனியன் வந்துவிட்டது என்று கோக் பெப்ஸிகளை வைதான் மனதுக்குள்ளே.

சுமார் 12 மணிக்கு க்ரிஸ் தன்னுடைய கார் சாவியை எடுத்து ராஜிடம் நீட்டினான். 'ப்ளீஸ் ட்ராப் அஸ்". குடித்துவிட்டு ஓட்டினால் நியூ ஜெர்ஸியில் ஜெயில் தான்.

'நாட் அ ப்ராப்ளம்". என்று கார் நிறுத்தியிருந்த இடத்திருக்கு மூவரும் சென்றார்கள்.

க்ரிஸ் பின்னால் அமர்ந்துக்கொள்ள ஓட்டுனராக ராஜ் அவன் அருகில் சிலியா அமர்ந்து கொண்டாள்.

தான் அளவுக்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதாக தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

முதலில் க்ரிஸை அவன் வீட்டில் விட்டுவிடு ராஜ். பிறகு என்னை என்றாள் சிலியா.

மெதுவாக வண்டியை எடுத்து ரூட் 18 பிடித்து சில மைல் ஓட்டிய பிறகு ரூட் 1 பிடித்து ஓமேகா டைனர் எனும் ரோட்டோர விடுதியிலிருந்து வலப்புறம் திருப்பி நார்த் ஓக்ஸ் எனும் குடியிருப்பில் வண்டியை நிறுத்தினான்.

க்ரிஸ் உன் வீடு வந்துவிட்டது. இறங்கு என்றான்.
நன்றி ராஜ். நாளைக்கு காலை அலுவலகத்திற்கு அழைத்துப் போக நீதான் வரவேண்டும் ப்ளீஸ் என்றான் க்ரிஸ்.

ஒன்றும் பிரச்சினையில்லை. நல்லா தூங்கு என்று சொல்லி அங்கிருநது விலகினான்.

leomohan
09-10-2006, 04:37 PM


உன்னை எங்கே டிராப் பண்ணனும் சிலியா? என்று அவளைப் பார்த்து கேட்டான்.

வெல். நான் வழி சொல்றேன். நீ மறுபடியும் ரூட் 18க்கே போ. என்றாள்.

உன்னைப்பற்றி கொஞ்சம் சொல்லேன் என்றான் ராஜ்.
என்னைப்பற்றி என்ன சொல்ல? நான் 13 வயதிருக்கும் போதே என் தந்தை வேறு ஒரு பெண்மணியை மணந்துக் கொண்டு போய்விட்டார். அப்போதிலிருந்து நான் வாரம் ஒரு முறை தான் அவரை பார்க்க முடிகிறது. கடந்த சில வருடங்களாக அதுவும் இல்லை.

என் தாயும் சில வருடங்களுக்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார். 18 வயது வரை அந்த வீட்டில் நான் இருந்ததே ஒரு பெரிய சாதனை தான். பிறகு பகுதி நேர வேலை செய்து கொண்டே பட்டப் படிப்பை முடித்தேன்.

இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். தந்தை தாயுடன் சேர்ந்திருந்த நாட்கள் அடிக்கடி நினைவுக்கு வந்து போவதுண்டு. ஆனால் அமெரிக்காவில் பெரும்பால குடும்பத்தில் இந்த கதையை பார்க்கலாம். நீங்கள் இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

என்னுடைய தோழியின் தந்தை 50 வயது ஆனவர் அவர் இன்னும் அவருடைய தாய் தந்தையுடன் இருப்பதாக கூறினாள். சில சமயம் இந்தியனாய் பிறந்திருக்கலாமோ என்று நினைப்பதுண்டு. அவள் குரல் நெகிழ்ந்திருந்தது.

அவள் தன் பையிலிருந்து மார்ல்பரோ அல்ட்ரா லைட்ஸ் எடுத்து பற்ற வைக்க முயன்றாள். சட்டென்று நிறத்தி 'ராஜ் நீ சிகரெட் குடிப்பியா?" என்றாள்.

என்ன விளையாடுகிறாயா? என் அம்மா என்னை கொன்றே விடுவாள் என்றான் சிரித்தப்படியே.

ஆ. இப்போது உன் அம்மா உன் அருகில் இல்லையே! என்றாள்.

சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் யாரும் முன்னே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றான்.

அமேஸிங். உன்னை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கிறது. அதே சமயம் மிகவும் நன்றாக இருக்கிறது. நான் பல இந்திய குடும்பங்களை பார்க்கும் போது ஏன் அமெரிக்காவில் இந்த கலாச்சாரம் இல்லை என்று வருந்துவதுண்டு.

அவள் சிகரெட்டை எடுத்து உள்ளே வைத்தாள.

ஹேய் நான் பிடிக்க மாட்டேன் என்று சொன்னேனே தவிர நீ பிடிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.
பரவாயில்லை. பிறகு என்று விட்டு அமைதியானாள்.

சட்டென்று அவள் 'ராஜ் உன் ரூமை எனக்கு காண்பிக்க மாட்டாயா?' என்றாள்.

அவனுக்கோ தூக்கமாக இருந்தது. இருந்தாலும் அவளுடன் இருப்பது ஆறுதலாக இருந்தது. நாளை வேறு க்ரிஸை அழைக்க செல்ல வேண்டும். அலுவலகம் வேறு போகவேண்டும். கடிகாரத்தை பார்த்தான். 1 மணி ஆகியிருந்தது.

அவன் கடிகாரத்தை பார்த்ததை கவனித்த சிலியா உனக்கு நேரமாகிவிட்ட தென்றால் பிறகு ஒரு நாள் என்றாள்.

இல்லை பரவாயில்லை என்று விட்டு ஒரு ஆல் டேர்ன் எடுத்து எக்கர்ஸ் தெருவை கடந்து டைலர் அவன்யூவில் வண்டியை நிறத்தினான்.

ப்ளீஸ் வா சிலியா. இது தான் என்னுடைய குடிசை என்றான்.
சில நிமிடங்கள் கண்களால் நோட்டம் விட்டவள் 'வாவ்" என்று விட்டு சோபாவில் அமர்ந்தாள். உட்கார்ந்த உடனே அவள் கண்ணுக்கு பட்டது 'ஹூஸ் அவுட் சைட்" என்று அறிவிப்பு தான்.

ஐயாம் ஸோ ஸாரி என்று சொல்லிவிட்டு வெளியே வைத்திருந்து காலணி பெட்டியில் தன் ஹை ஹீல்ஸை விட்டு அழகான வெள்ளை கால்களுடன் மெத்தென்று உள்ளே நுழைந்து மறுபடியும் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

பையிலிருந்து மீண்டும் புகைப்பெட்டியை எடுத்தவள் 'நோ ஸ்மோக்கிங்" எனும் இன்னொரு அறிவிப்பை பார்த்துவிட்டு சலித்தப்படியே உள்ளே வைத்தாள். இது என்ன வீடா இல்லை பள்ளிக்கூடமா என்று வியந்தாள்.

எளிமையான அறை. அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அழகான விளக்குகள். ஒரு பெரிய விவேகானந்தர் படம். ஒரு புத்தக அலமாரி. பல புத்தகங்கள். அகராதிகள். ஆங்கிலம் ஸ்பானிஷ் ப்ரென்ச் என்று மொழி கற்கும் புத்தகங்கள். யோகா புத்தகங்கள்.

உன் வீட்டை சுற்றிப்பார்க்கலாமா என்று கேட்டுக் கொண்டே வலப்புறம் இருந்த படுக்கையறைக்குள் நுழைந்தாள். அசந்து போனாள். ஒரு திருமணமாகாதவனின் வீட்டிற்கு வந்த சுவடே இல்லை. எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது.
துணிமணிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. படுக்கை அருகே பகவத் கீதை புத்தகம். ஒரு வானோலி பெட்டி. ஒரு குறிப்பேடு. ஒரு பேனா.

உன் வீடு மிகவும் எளிமையாகவும் நன்றாகவும் இருக்கிறது என்றாள்.

நன்றி. என்ன குடிக்கிறாய் நீ?

எதுவும் வேண்டாம். இன்னும் பீயர் வயிற்றிலேயே இருக்கிறது என்றாள்.

பிறகு ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டாள்.

சிலியா நான் சைவம். உனக்கு அரிசி ரொட்டியை தவிர வேறு எதுவும் கிடைக்காது என்றான் சிரித்தபடியே.

எது இருந்தாலும் பரவாயில்லை. கொடு என்றாள்.

குழந்தை போல இருந்த அவளை பார்த்து ரசிச்துக் கொண்டே ரொட்டியை சுட வைத்தான்.

அவள் தன்னுடைய கைத்தொலைபேசியை எடுத்து யாரிடமோ பேசினாள். பிறகு மெதுவாக சமையலறைக்குள் நுழைந்து அவன் பின்னால் நின்றுக் கொண்டே 'ராஜ் ஒரு சின்ன் பிரச்சனை.

என்னுடைய தோழி இன்னும் வீடு வரவில்லை. நானும் வீட்டுச் சாவி எடுத்துவரவில்லை. உனக்கு பிரச்சனை இல்லையென்றால் நான் இன்று இரவு மட்டும் இங்கு தங்கலாமா?" என்றாள்.

ஓ. ஒன்றும் பிரச்சனை இல்லை. இந்த வீடு இரண்டு படுக்கையறை கொண்டது. நீ முதலில் சாப்பிடு என்றான்.

அவள் தன்னுடைய ஸ்வெட்டரை தலைக்கு மேலாக கழற்றி சோபாவின் மேல் வைத்தாள். அவளுடைய உடல் கட்டு இன்னும் நன்றாக தெரிந்தது.

அவன் ஆர்வமானான்.

எதிர்புறத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்துக் கொண்டே தொலைகாட்சி பெட்டியை துவக்கினான்.

அவள் தன்னுடைய சட்டையின் மேல இரண்டு பித்தான்களை தளர்த்திவிட்டு சட்டையை முழங்கை வரை சுருட்டிவிட்டு சாப்பிட துவங்கினாள்.

அவனுடைய கண்கள் தன் சட்டைக்குள் நுழைவதை கண்டு 'இன்று இரவு என்னிடம் வருவான் பார்" என்று தன்னிடமே சொல்லிக் கொணட்டாள்.

அமெரிக்க தொலைகாட்சிகள் மிகவும் தரங்கெட்ட நிலமையில் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியும் யாரையும் திட்டாமல் கேவலப்படுத்தாமல் இருக்காது. மதங்களையும் மனிதர்களும் நிறத்தையும் வைத்து தான் இவர்களுடைய நகைச்சுவை உணர்வே. இல்லாவிட்டால் அளவில்லாமல் காமக் கேளிக்கைள். அதை அணைத்து விட்டு அவளைப் பார்த்து 'சாப்பாடு எப்படி" என்று கேட்டான்.

இது கூட கிடைக்காவிட்டால் நான் இருக்கும் பசியில் உன்னையே சாப்பிட்டிருப்பேன் என்றாள சிரித்தப்படியே. அழகு தேவதை. அவளின் அழகு அரிதார அழகா என்று நாளை தெரிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டான்.

அவள் உண்டு முடித்ததும் அவளுடைய படுக்கை அறையை காண்பித்துவிட்டு விளக்குகள் அணைத்துவிட்டு தன் படுக்கை அறைக்கு செல்லும் அலமாரியில் இருந்த தெய்வங்களை வணங்கிவிட்டு உறங்கச் சென்றான்.

leomohan
10-10-2006, 05:51 AM
காலையில் 6 மணிக்கு அலார்ம் வைக்காமலேயே எழுந்தான். காலைக் கடன்களை முடித்துவிட்டு தேனீர் கலந்து அவள் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான். அவள் எழுந்தபாடு இல்லை.
குழந்தை போல் அவள் உறங்குவதை பார்த்து ரசித்தான். முகத்தில் களை கொஞ்சமும் குறைய வில்லை. சாயம் போட்ட உதடுகள் இல்லை. இல்லையென்றால் 12 மணி நேரத்தில் எந்த சாயமும் கரைந்துவிடும். சுற்று முற்றும் பார்த்தான் கான்டாக் லென்ஸ் பெட்டிகள் தென்படவில்லை.

சிலியா என்றான் மெதுவாக அவளை எழுப்பு மனமில்லாமல்.
அவள் மெதுவாக கண்விழித்து பார்த்தாள். விடிந்திருந்தது. எழுந்து அமர்ந்து உடலை சிலிர்த்துக் கொண்டாள். இரவு அவன் வரவில்லை. வெகு நேரம் அவன் ஏதாவது காரணம் சொல்லி கதவை தட்டுவான் என்று காத்திருந்துவிட்டே அவள் தூங்கச் சென்றாள். இதுவே ஒரு அமெரிக்க நண்பனின் வீட்டில் தங்கயிருந்தால் என் படுக்கையிலிருந்து தான் அவன் எழுந்திருப்பான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு எழுந்தாள்.

மெதுவாக புன்னகைத்துக் கொண்டே அவனிடமிருந்து தேனீர் கோப்பையை வாங்கிக் கொண்டாள்.

நீ தயாராகு. நானும் குளித்துவிட்டு தயாராகிறேன் என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் தன் படுக்கையறையில் இருந்த குளியலறை நோக்கி சென்றான்.

அவளும் எழுந்து தயாரானாள். அழகான சுகந்தம் அவள் மூக்கை தொட்டது. தன் அறையை விட்டு வெளியே வந்தவள் ராஜ் இடுப்பில் ஒரு வெள்ளை உடையை உடுத்திக் கொண்டு கண் மூடி தியானத்தில் இருப்பதை பார்த்தாள். எதிரே ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.

மிகுந்த ஆர்வத்துடன் ஒரு முக்காலியை எடுத்து அவனுருகில் போட்டுக் கொண்டு அவனை உற்று கவனித்தாள்.
கட்டுக்கோப்பான உடல். மார்பின் குறுக்காக ஒரு வெள்ளை நூல். நெற்றியில் சிவப்பு பொட்டு. எதிரே சில தெய்வப்படங்கள். இவனைப் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

சந்தியாவந்தனம் செய்துவிட்டு ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லிவிட்டு ஹனுமான் சாலிஸா படித்துவிட்டு நமஸ்கரித்து எழுந்த ராஜ் சிலியா தன்னையே பார்ப்பதை பார்த்து "ஹே வாட் ஆர் யூ லுக்கிங் அட்" என்று கேட்டான்.

ராஜ் நீ செய்வதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நீ என்ன செய்தாய்?

இது சந்தியாவந்தனம். இதை மூன்று முறை ஒரு நாளைக்கு செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலேனோர் இரண்டு முறை செய்கிறார்கள். பிறகு நான் சூரியனையும் ஹனுமானையும் வணங்கினேன்.

ஹனுமான்? தட் மங்கி காட் என்று கேட்டாள்.

ஆம். அவர் திருமணம் செய்துக் கொள்ளாமல் ராமருக்காக தன் வாழ்கையை அற்பணித்து கொண்டவர். திருமணமாகதவர்கள் தங்களுடைய மனோபலத்திற்காக அவரை வணங்குவர்.

ஒரு நாள் சந்திவன்டனம் செய்யாவிட்டால் என்ன ஆகும் என்று கேட்டாள் மிகவும் ஆர்வத்துடன்.

ஒன்றும் ஆகாது. தண்டனைக்காக பயந்து எதையும் எங்கள் மதத்தில் செய்வதில்லை. பிறகு ஒரு நாள் இதை விளக்கமாக சொல்கிறேன். இப்போது நீ தயார் என்றால் நான் உன்னை வீட்டிற்கு கொண்டு விடட்டுமா? என்று கேட்டான் அவசரத்துடன்.

ராஜ் நீ கவலைப்படாதே. என் தோழி இன்னும் சில நோடிகளில் வந்து விடுவாள். என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவளுடைய கைத்தொலைபேசியின் மணி ஒலித்தது.

ஓகே. ஐயாம் கம்மிங் ரைட் அவே. என்று அணைத்துவிட்டு 'ராஜ் நீ செய்த உதவிக்கு மிகவும் நன்றி என்றுவிட்டு அவன் சற்றும் எதிர்பார்காத சமயத்தில் அவனை அணைத்து அவன் கன்னத்தில் மெல்லிய முத்தமிட்டு பறந்தாள்.

சில நொடிகள் அதை ரசித்தவாரே நின்றிருந்த அவன் உடலை சிலிர்த்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்.

leomohan
10-10-2006, 05:52 AM
5

டேய். அதிர்ஷ்டக்காரன்டா நீ. இன்னிக்கு ஹிந்தி க்ளாஸில் ப்ரியா உன் பக்கத்தில உட்கார்ந்திருந்தாளாமே! - கிருஷ்ணன் அரசு மேல் நிலை பள்ளியின் கூடை பந்து மைதானத்தில் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் கேட்டான்.

போடா. பக்கத்திலே உட்கார்ந்தா பெரிய விஷயமா? ராஜகோபால் முகம் சிவக்க கேட்டான்.

டேய். எங்க பக்கத்திலே உட்கார்ந்தாளா? உன் பக்கத்திலே தானே உட்கார்ந்தா! நான் சொல்லலே! உன்னை அவள் லவ் பண்றாடா!

ஹாய் மேன் அந்த அழகி சிலியா உன் வீட்டிலேயே தங்கிவிட்டாளாமே நேற்று. நன்றாக கூத்தடித்தீர்களா! என்றான் க்ரிஸ் வண்டிக்குள் நுழைந்த உடனேயே!

இல்லை க்ரிஸ். நீ நினைப்பது போல் எதுவும் இல்லை. நாங்கள் தனித்தனி அறையில் தான் உறங்கினான்.

டேய். பொய் சொல்லாதே!

நிஜமா க்ரிஸ்.

நீ என்ன இம்பொடென்டா?

வி கால் இட் செல்ஃப் டிஸிப்ளின் பாக் ஹோம் க்ரிஸ் என்றான் காட்டமாக.

ஐயாம் ஸாரி. தப்பா எடுத்துக்காதே ராஜ்.

அடுக்குமாடி கார் நிறுத்தும் கட்டிடத்தில் இரண்டாம் தளத்திலிருந்த ஒரு காலியிடத்தில் வண்டியை நிறத்தினான். இருவரும் அலுவலகம் நோக்கி நடந்தார்கள்.

ஏய் சிலியா என்ன முதல் நாளே அவனோட தங்கிட்டே? அவளுடைய தோழி ஜுடி கேட்டாள்.

என்கிட்ட சாவி இல்லை அதனாலே தங்க வேண்டியதா போச்சு!

ஏய். கதைவிடாதே. என்ன பண்ணீங்க இரண்டு பேரும்.

ஒன்னும் இல்லை. ராஜ் ஒரு வித்தியாசமான மனிதன்.

அவன் என்ன கையாலாகாதவனா என்றாள் ஜூடி பெரிதாக சிரித்துக் கொண்டே.

ஐ எக்ஸ்பெக்ட் அன் அபாலெஜி ஜூடி என்றாள் சிலியா கோபத்துடன்.

ஐயாம் சாரி. என்னாச்சின்னு சொல்லு என்றாள் ஆர்வத்துடன்.

ஜூடி. இது உண்மை. எங்க இரண்டு பேருக்கும் நடுவிலே ஒன்னும் நடக்கவில்லை. அவன் என்னை தொடக்கூட இல்லை. நான் தான் காலையில் வரும் போது அவனை அணைத்து முத்தம் கொடுத்தேன்.

அவனுடைய கலாச்சாரம் என்னை வியக்க வைக்கிறது. ஒரு நாள் முழுக்க உன்னைப்போல ஒரு செக்ஸியான பெண்ணுடன் எப்படி?

ஜூடியின் கருத்து ராஜ் மேல் அவளுக்கு இருந்த மதிப்பை இன்னும் கூட்டியது.

leomohan
10-10-2006, 05:53 AM
6

சனிக்கிழமை ஈஸ்ட் ப்ரன்ஸ்விக் நூலகத்தில். வாராவாரம் வந்துவிடுவான். 3-4 மணி நேரம் புத்தகங்களுடன் கழிப்பான். அன்றும் நேரம் கழித்துவிட்டு வெளியே வரும் போது எதிர்ப்பட்டாள் சிலியா.

ஹாய் சிலியா. எப்படி இருக்கே!

நான் நல்லா இருக்கேன். ராஜ் எப்படி இந்த பக்கம்.

நான் சனிக்கிழமையானா இங்கே தான்.

அப்படியா. நான் எப்போதும் வெள்ளிக்கிழமை வருவதுண்டு. அடுத்த வாரத்திலிருந்து நானும் சனிக்கிழமையே வருவேன் என்று அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

அவனும் அவள் கண்ணுக்குள் நோக்கியபடியே 'நான் படிக்க வருகிறேன்" என்றான். அவளும் சளைக்காமல் 'நான் உன்னை படிக்க வருவேன்" என்றாள்.

இருவரும் கார் நிறுத்தியிருந்த இடம் வரை கூடவே நடந்து சென்றார்கள். கார் அருகே வந்தவுடன் "என்ன புத்தகங்கள் எடுத்தாய்" என்று கேட்டான்.


Encylopaedia of Ancient Indian Culture by N.N. Bhattacharyya,
Encylopaedia of Indian Culture by R. N. Saletore, Facets of Indian culture
by P.C. Muraleemadhavan.

ஹேய் என்ன இது இந்திய கலாச்சாரத்தை பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்கிறாயா? என்று கேட்டான்.

இல்லை. எனக்கு இந்தியர்களை பற்றி நிறைய தெரியனும். அதுக்காகத்தான்.

வியந்தபடியே என்னோட ஒரு மணி நேரம் தினமும் இருந்தினா நிறையா சொல்வேன் என்றான்.

ஒரு மணி நேரத்திற்கு மேலேயே இருந்தேன்னா? என்றாள் புதிர் போடுபவள் போல.

ஒரு மணிக்கு மேலா?

ஆம். உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா உன் வீட்டில் நான் தங்கலாமா? ஆகும் செலவை பகிர்ந்துக் கொள்வோம். ஏன்னா நான் இருந்த அறையோட ஓப்பந்தம் முடிவுக்கு வருது.

இதை சற்றும் எதிர்பாராத ராஜ் தயங்கியபடியே..

சிலியா நீ அமெரிக்கன். நான் இந்தியன்.
நீ கிறிஸ்துவ பெண். நான இந்து.
அசைவம் சாப்பிடுபவள். நான் சுத்த சைவம். எ
ன் வீட்டில் நீ இயல்பாக இருக்க முடியாது. பல கட்டுப்பாடுகள் இருக்கும். நானும் தினமும் காலையில் பூஜை செய்வேன். உனக்கு தொந்திரவாக இருக்கும். என் வீட்டில் நீ புகை பிடிக்க முடியாது. குடிக்க முடியாது.

நீ அன்று என் வீட்டில் மங்கி காட் பார்த்தாயல்லவா? அவரை பூஜிப்பவர்களின் வீடு மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். நீ தப்பா நினைத்துக் கொள்ளாதே. உனக்கு சரிப்பட்டு வராது.

ராஜ். நான் உன் வீட்டில் இருக்க ஆசைபடறேன். உங்க கலாச்சாரத்தை உன்னோட கூட இருந்து தெரிஞ்சிக்க விரும்பறேன். இந்தியாவை பற்றியும் இந்துத்துவம் பற்றியும் நிறைய தெரியனும் எனக்கு. உன் வீட்டில் நான் குடிக்க மாட்டேன் புகைபிடிக்க மாட்டேன் அசைவம் சாப்பிட மாட்டேன். சரியா?

பட் சிலியா. எதுக்கு இவ்வளவு கஷ்டப்படனும் நீ. தினமும் 1 மணி நேரம் நாம் நூலகத்தில் சந்திப்போம். நான் எனக்கு தெரிந்த எல்லா விஷயத்தையும் உனக்கு சொல்றேன் என்றான் குழப்பத்துடன்.

அவள் கோபித்துக்கொண்டே ராஜ் உனக்கு பிடிக்கலைன்னா விட்டுடு. சும்மா காரணம் சொல்லவேண்டாம்.

சரி. உன்னோ பொருட்களை எடுக்க எப்ப உன் வீட்டுக்கு போகலாம் என்றான் ராஜ் ஒரு முடிவுடன்.

அவள் கண்களில் சந்தோஷத்துடன் அவனை ஒரு நொடி அணத்துவிட்டு நாளை சாயங்காலம் நானே வர்றேன்.

சரி. ஒரு போன் பண்ணிட்டு வா என்று அங்கிருந்து விலகினான் யோசனையுடன்.

தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் நல்லவர்கள் என்று சொல்லி விட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இல்லாது தப்பு செய்யாதவர்களும் நல்லவர்கள் என்று சொல்லி விட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இருந்தும் தப்பு செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுடன் இருப்பவர்களே நல்லவர்கள்.

ராஜூ கண்ணா. நம்ம சாதியிலே நம்ம கலாச்சாரத்திலே நடக்கற கல்யாணம் கூட இப்ப விவாகரத்தில போய் முடிஞ்சிடுது. எங்க முன்னாடி நாங்க சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கனும் ஆசை படறோம்.

ஆனால் அந்த பொண்ணை உனக்கும் பிடிச்சிருக்கனும். உனக்கு பிடிக்கிற பொண்ணு கிடைக்கிற வரைக்கும் நாங்க தேடிகிட்டு இருப்போம்.

ஆனா வேற நாட்டுப் பெண்ணையோ வேற மதத்து பெண்ணையோ கொண்டு வராதப்பா. மதம் சாதி இதுக்கு மீறி யோசிக்கிறவன் தான் நானும். ஆனா பல ஆண்டுகாலாம தப்போ ரைட்டோ ஏதோ ஒரு வழியிலே நம்ப கலாச்சாரம் போயிகிட்டு இருக்கு.

அதை மாத்தினா குழப்பம் தான் வரும். உன் அக்கா டைபிங் க்ளாஸ் போகும் போது நீ அவளுக்கு துணையா கூட போற! ஏன்? ரௌடி பசங்க தொந்திரவு பண்ணக்கூடாதுங்கறதுக்காக. நீ இன்னொத்தனோட தங்கச்சியை பார்த்தா அவன் அண்ணனுக்கு எப்படி இருக்கும்?
நான் சொல்றதை நீ என் இடத்தில இருந்து யோசிச்சிப்பார்த்தா உனக்கு தெரியும்.

அப்பா உங்க மதிப்புக்கும் மரியாதைக்கும் எந்த குழப்பம் வராமல் நான் பார்த்துக்கறேன் என்று சொல்லிக் கொண்டான் தனக்குத்தானே.

leomohan
10-10-2006, 05:53 AM
7

அவள் அழைக்காவிட்டாலும் அவள் வீட்டிற்கு சென்று அவளுடைய பொருட்களை எடுத்து வர ராஜ் சென்றான். வண்டியில் அனைத்தையும் நிரப்பி அவன் வீட்டிற்கு வந்தவுடன் காரை நிறுத்திவிட்டு வண்டியிலேயே அமர்ந்திருந்தான்.

என்ன வண்டியிலேயே உட்கார்ந்திருக்கே. சாமான் இறக்கவேண்டாமா? என்று கேட்டாள் சிலியா.

இறக்கலாம். என் வீடு நோ ஸ்மோகிங் ஸோன். இல்லையா! அதனால் நீ புகைப்பிடித்துவிட்டு வா நான் இங்கே காத்திருக்கிறேன்.

நான் புகைப்பிடிப்பதை நிறத்திவிட்டேன்.

என்ன? சிலியா! நான் வீட்டில் தான் புகைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். உன்னை நிறுத்த சொல்லவில்லை.

தெரியும் நானாகத்தான் நிறுத்திவிட்டேன்.

குடிப்பதையும் நிறத்திவிட்டாயா ? என்று சிரித்தபடியே கேட்டான்.
ஆம்.

என்ன? கிண்டலா?

இல்லை. நிஜமாகத்தான்.

எதுக்கு?

சும்மா என்று சொல்லி கண்ணடித்தாள்.

அவள் செய்கை எதுவும் புரியாமல் வண்டியிலிருந்த அவளுடைய பொருட்களை எடுத்து வீட்டிற்கு சென்று அதை சரியாக அடுக்க அவளுக்கு உதவிசெய்தான். தொண தொணவென்று எதாவது கேட்டுக் கொண்டே இருந்தாள். அவனும் பொறுமையாக எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டே வந்தான்.

பிறகு குளித்துவிட்டு வேஷ்டியுடன் இறைவன் முன் அமர்ந்து ஓம் என்று சொல்லிவிட்டு தியானம் செய்யத் தொடங்கினான்.

அதைப்பார்த்த சிலியா அவன் அருகில் வந்து அமர்ந்து அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள்.

சில விநாடிகள் சீராக அவனிடமிருந்து சுவாசம் வந்துக் கொண்டிருந்தது. பிறகு அதுவும் நின்றுவிட்டது. மரக்கட்டை போல் அவன் உடம்பு ஆகிவிட்டது.

வியப்புடன் அவள் கடிகாரத்தை பார்த்தாள். 15 நிமிடத்திற்கு பின் அவன் உடல் தளர்ந்து சகஜ நிலைக்கு வருவதை பார்த்தாள். உலக அதிசயத்தை கண்டது போல் வியந்தாள். அவனுடைய மார்பும் தோளும் அவளை ஈர்த்தது.

இறைவனை கும்பிட்டுவிட்டு எழுந்து அவன் ஹேய் மறுபடியும் என்னை பார்க்க ஆரம்பித்துவிட்டாயா? நான் என்ன ஆராய்ச்சி பொருளா என்று சிரித்தபடியே கேட்டான்.

அவள் எதுவும் பேசவில்லை. மெதுவாக எழுந்து அவன் பின்னால் சென்று அவனை இறுக அணைத்தாள். அவன் உடலில் பல மாற்றங்கள். நிறம் இல்லா திரவம் அவன் உடலுள் அங்கும் இங்கும் ஓடியது. அவளுடைய கைகளை மெதுவாக அவன் விடுவித்துக் கொண்டான்.

ஒரு அரை கை சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டு தொலைக்காட்சி பெட்டியை துவக்கினான். ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

சிலியா அவன் அருகில் வந்து அவன் இடக்கையை அவளுடைய வலக்கையால் இறுக்கிப் பிடித்தாள். ஐயாம் ஸாரி ஐயாம் ஸாரி என்று அரற்றினாள்.

பரவாயில்லை சிலியா என்றுவிட்டு மறுபடியும் அவளுடைய கையை விடுவித்தான்.

சிலியா ஐயாம் நாட் இன்டெரஸ்டட் இன் அ ஷார்ட் டேர்ம் ரிலேஷன்ஷிப்.

நானும் தான் ராஜ். நான் உன்னுடனேயே இருக்க விரும்புகிறேன்.

அது நடக்காது சிலியா.

ஏன் ராஜ்? நான் அழகா இல்லையா?

இல்லை. நீ ஒரு அழகு தேவதை.

நான் கன்னித்தன்மை இழந்தவள் என்று நீ நினைக்கிறாயா?

இல்லை சிலியா. விஷயம் அதுவில்லை.

நீ வேறு யாரையாவது காதலிக்கிறாயா?

இல்லை.

வேறு என்ன பிரச்சினை உனக்கு.

நாம் இருவரும் எல்லா விதங்களிலும் வேறுபட்டவர்கள். ஏதோ ஒரு ஈர்ப்பில் நாம் திருமணம் செய்து கொண்டாலும் அது சில வருடங்களுக்கு மேல் நீடிக்காது.

ஏன் அப்படி நினைக்கிறாய் நீ?

இந்தியாவில் திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் நடப்பதில்லை. அது இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடப்பது. நீங்கள் சுதந்திரமாக வளர்ந்து பழக்கபட்டுவிட்டீர்கள். நாங்களோ தியாகம் செய்தே வளர்ந்தவர்கள். சகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. அதனால் தான் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாங்கள் விவாகரத்து செய்வதில்லை.


Marriages are meant to be long term in our country. It will not work-out
with us.

நான் எக்காரணத்தை கொண்டும் உன்னை விவாகரத்து செய்ய மாட்டேன் ராஜ்.

அது இல்லை சிலியா. உனக்கு எப்படி புரியவைப்பேன். உன்னை முத்தமிட்டால் எனக்கு சிக்கன் வாசம் வரும். அசைவத்தை கண்டாலே மூக்கை அடைத்தே பழகவிட்டவர்கள் நாங்கள்.

நான் நிரந்தரமாக சைவமாகிவிட்டால்?

ஐயோ. யூ ஆர் கிரேஸி. திங் ப்ராக்டிக்கல்லி சிலியா. பல தியாகங்கள் செய்தாவது ஏன் நீ என்னை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும்?

ராஜ். ஆண் பெண் சமம் என்று சொல்வார்கள் அமெரிக்காவில். இதுவரை ஏதாவது ஒரு பெண் ஜனாதிபதியாக முடிந்தததா?

இப்போது தான் சிபிஸி சானலில் ஒரு முழு நேர பெண் தொகுப்பாளர் ஆக முடிந்தது. இந்த நாட்டில் பெண்கள் ஒரு காம கேளிக்கை பொருள் தான். உடலின் ஈர்ப்பு முடிந்ததும் ஆண் விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் போய்விடுகின்றான். அவள் அவனுடைய குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலையும் செய்து கொண்டு அல்லாடுகிறாள். அவள் சோர்ந்து போனால் கேட்பதற்கு ஆளிலில்லை வீட்டில். இந்த சமுதாயத்தில் பிள்ளைகளும் அவர்கள் தேவை முடிந்ததும் ஓடிவிடுகின்றனர்.

ஆனால் இந்தியர்கள் அப்படி இல்லை. மனைவியுடன் சாகும் வரை இருக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோர்கள் சாகும் வரை கூடவே இருக்கிறார்கள். எனக்கு அந்த அன்பு தேவை. அரவணைப்பு தேவை. பாதுகாப்பு தேவை. என்னுடைய அழகு அழிந்த பின்னும் நீ என்னை கைவிடமாட்டாய். எனக்கு நீ தேவை ராஜ்.

அவள் கண்களில் கண்ணீர் தேம்பி நின்றிருந்தது.

சிலியா!

அவள் அமைதியாக இருந்தாள்.

குளிர்சாதனப்பெட்டியிலிருந்த குடி நீர் எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் தலையை லேசாக கோதினான். அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் பிடிப்பை தளர்த்தினான்.

சிலியா. நான் சொல்வதை கேள். நாமிருவரும் சந்தித்து 2 வாரம் தான் ஆகிறது. இதைப்பற்றி இன்னும் சில நாட்கள் கழித்து பேசுவோமா?

அவளும் சரியென்று தலை ஆட்டினாள்.

வெளியே சென்று சாப்பிடுவோமா?

அதற்கும் சரியென்று தலை ஆட்டினாள்.

இருவரும் வண்டியில் அமர்ந்து டைலர்ஸ் அவென்யூ விடுத்து எக்கர்ஸ் தெருவிலிருந்து வலப்புறம் எடுத்து ரூட் 18 பிடித்து பர்கர் கிங்-ன் பார்கிங்கில் காரை நிறத்திவிட்டு உள்ளே நுழைந்தனர்.

ஓலா என்று ஸ்பானிஷ் மொழியில் அங்கிருந்த மெக்ஸிக்கன் பெண்ணிடம் கூறிவிட்டு 'ஒன் வெஜி வாப்பர் ப்ளீஸ்" என்றுவிட்டு சிலியாவைப் பார்த்தான் அவள் செல்லமாக முறைத்ததை பார்த்துவிட்டு "டூ" என்றான்.

இரண்டு வார பழக்கத்தில் தான் கண்ட அமெரிக்க பெண்மணிகளிலேயே அரிதாரம் இல்லாத அழகி இவள் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டான்.

நீ மட்டும் ஐயங்காராய் பிறந்திரந்தால் அம்மா முன் கொண்டு நிறத்தியிருப்பேனடி பெண்ணே! என்றான் மனதுக்குள்ளே.

அவளுடைய மென்மையான கைகளை உணர்ந்த அவனுடைய கைகள் மீண்டு அவற்றை வேண்டியது. அவள் அலட்சியமாக அமர்ந்து விரல்களால் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.

இரண்டு ரொட்டிகள். அதன் நடுவே ஏகப்பட்ட காய்கறிகள். இதுதான் வெஜி வாப்பர். கடவுளே இந்த இலை தழைகளை எத்தனை நாள்தான் தின்பது? நன்றாக இட்லி சாம்பார் சாப்பிட்டால் என்ன? இவளை கல்யாணம் செய்து கொண்டால் இவளால் பர்கர் தான் செய்யமுடியும். தமிழ் அம்மணி போல் ஆகுமா? ஆனால் தமிழ் பெண்மணிகள் இத்தனை அழகாக இருப்பதில்லையே! உணவா காமமா என்று போட்டி வைத்தால் எது ஜெயிக்கும். இவ்வாறாக நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தது அவனுள்ளே!

வாட் ஆர் யூ திங்கிங். என்றாள் சிலியா.

ஐ விஷ் ஐ கான் சேன்ஜ் யூ டூ அ டமிள் ப்ராமின் கேர்ள்.
நிஜமாகவா?

ஆம். இன்னும் சில நாட்கள் உன்னுடன் இருந்தால் நானே உன்னை காதலித்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன் என்றான்.

காதலியேன்!

சரிதான். வீட்டில் அடி விழும்.

தமிழ் ப்ராமண பெண்மணியாகவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

அது கஷ்டம் சிலியா.

நீ சொல்லேன் என்றாள்.

ம். சரி. முதலில் நீ புகை குடி மாமிசம் இதையெல்லாம் விடவேண்டும்.

அதை தான் விட்டுவிட்டேனே!

பிறகு நீ தமிழும் சமஸ்கிரதமும் பயில வேண்டும்.

அது எதுக்கு?

ஏனென்றால் என் அம்மாவை கவரவேண்டும் என்றால் நீ எல்லா தமிழ் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் சொல்லவேண்டும்.

அது கஷ்டமா?

கஷ்டமா? சமஸ்கிருதம் பயின்ற எனக்கே பல ஸ்லோகங்கள் தெரியாது.

பிறகு?

இந்து பண்டிகைகளையும் அதன் பாரம்பர்யத்தையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்புறம்?

சேலை உடுத்த தெரிய வேண்டும். பஞ்ச கச்சம் போடவேண்டும்.
அப்படியென்றால்.

அது ஒரு ஃபாஷன் என்று வைத்துக் கொள்ளேன்.

பிறகு?

உன் பெயரை மாற்ற வேண்டும்

என்ன பெயர்?

சிந்து என்று மாற்றிவிடலாம்.

சிந்து என்றால்?

அது ஒரு நதியின் பெயர்.

ம். நான் இந்துவாக மதம் மாறவேண்டுமா?

இந்து மதத்தில் மதம் மாறும் வழக்கம் இல்லை.

அப்படியா? மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதே!

ஆம்.

பிறகு என்ன செய்யவேண்டும்.

ஹேய். என்ன நிஜமாகவே சொல்கிறேன் என்று நினைத்தாயா! நான் ஏதோ விளையாட்டிற்கு சொல்கிறேன். நடக்கிற வேலையை பாரு. இதெல்லாம் நடக்காத காரியம்.

நடத்திக் காட்டிவிட்டால்!

வேண்டாம் சிலியா. நாம் அநாவசியமாக நம் மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.

ராஜ். உன்னை அடைய நான் என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்கிறேன்.

சிலியா!

அவன் கைகளை இறுக பிடித்தாள். இவள் சொல்வதெல்லாம் நடக்குமா? நடந்துவிட்டால் அப்பா அம்மாவை சமாளிக்க முடியுமா என்று கற்ப்பனையில் கோட்டை கட்டினான்.

leomohan
10-10-2006, 05:54 AM
8
சுமார் ஒரு வாரம் இப்படியாக ஓடியது. தினமும் க்ரிஸ் என்ன நடந்தது என்று ராஜை கேட்க ஜூடியோ தினமும் சிலியாவுக்கு போன் செய்து என்ன நடந்தது என்று கேட்க இருவரும் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நிறங்களையும் மீறி மதங்களையும் மீறி சைவ அசைவ கட்டுப்பாடுகளுக்கும் மீறி ஒரு அழகான புனிதமான காமத்தை அடிப்படையாக கொள்ளாமல் ஒரு காதல் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தது.

சில முறைகள் கைகள் கோர்த்துக் கொள்வது பல முறை அதை விடுவித்து விட்டு வருத்தபடுவதுமாக ராஜ் இரு தலை கொள்ளியாக சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான்.

அவனால் அம்மா அப்பாவை விடமுடியாது சிலியாவையும் மறக்க முடியாது என்ற நிலை.

கடைசி இரண்டு நாட்களாக குட் நைட் கிஸ் வேண்டும் என்று அவள் அடம் பிடித்து தன் நெற்றியில் அவன் உதடுகளை பதிக்க வைத்திருந்தாள். அதுவே அவளுக்கு பெரிய வெற்றியாக இருந்தது.
இந்த ஒரு வாரத்தில் ராமாயணத்தை முழவதுமாக அறிந்திருந்தாள். ராமர் ராஜ் தான் என்ற முடிவுக்கே வந்துவிட்டாள்.

அது எப்படி பல மனைவிகள் கொண்ட தந்தைக்கு பிறந்த பின்னும் ஒரு மனைவிக்காக ராமன் வாழ்ந்தான் என்பது வியப்பாக இருந்தது.
இந்த வாரம் அவள் படித்த கல்லூரியில் ராமாயணத்தை பற்றி பேசப்போவதாக கூறினாள். அதற்காக ராஜிடமிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டாள். ராமாயணத்தை ஏற்று நடந்தால் அமெரிக்கா சொர்கம் ஆகிவிடும் என்று நினைத்தாள்.

லட்சுமனின் கதாபாத்திரமும் அவளை வெகுவாக ஈர்த்திருந்தது. அண்ணனுக்காக தன் இளமை காம தேவைகளையும் அடக்கிக் கொண்டு ஒருவன் இருந்தான் என்பது அவளை பைத்தியம் அடித்துவிட்டது.

அவளும் ராஜூடன் சேர்ந்து ஹனுமான் சாலிஸா படிக்கத் தொடங்கியிருந்தாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு சில முறை அவனே திக்கு முக்காடி போய்விட்டான்.

சீதை தன் கணவனை போல துறவறம் ஏற்று சென்றவள் ராவணன் கடத்திக் கொண்டு சென்றபோது நகைகைள எப்படி தூக்கி எறிய முடிந்தது? துறவறம் என்றால் வெறும் காவியுடை மட்டும் தானே!
ராஜ் தன் தந்தையை கேட்டு சொல்வதாக மழப்பிவிட்டான்.

அன்று தன் பழைய கல்லூரியில் காலட்சேபம் முடித்துவிட்டு வந்தவள் நேராக ராஜின் அறைக்கு சென்றாள். அவன் அப்போது தான் உறங்க சென்றிருந்தான்.

ராஜ் நான் இன்னிக்கு உன்னோடு படுத்துக்கப் போறேன்.

சிலியா. என்ன இது விளையாட்டு.

இல்லை. நான் உன்னோடதான் படுப்பேன்.

வேண்டாம் சிலியா. இதுவரை நம்மோட நெருக்கமே என்னை பாதிச்சிகிட்டு இருக்கு. இது விபரீத விளையாட்டு.

உன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா?

இருக்கு.

என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. தள்ளிப்படு என்று கூறிவிட்டு அவன் போர்வைக்குள் நுழைந்தாள்.

இன்னிக்கு நான் செத்தேன் என்று நினைத்தான்.

அவனுடைய வலப்புறம் படுத்த அவள் அவன் மேல் உருண்டு அவனுடைய இடப்புறத்தில் வந்து படுத்தாள். அவளுடைய உடல் படக்கூடாத இடங்களில் பட்டு அவனை துவம்சம் செய்தது.

சிலியா. நாம அபாயகரமான நிலையில் இருக்கோம்.

இல்லை. ஒன்னும் இல்லை. நீ படு என்றுவிட்டு அவனுடைய இடக்கையை இறுக்கி பிடித்தாள்.

வேண்டாம் சிலியா என்றான் பலவீனமாக. அவனுக்கு அதை தேவைபட்டது. கடைசியா ஒரு முறை ஹிந்தி க்ளாசில் ப்ரியாவை இடித்தது ஞாபகம் வந்தது. பிறகு சென்னையில் அந்த பெண்.

தினமும் ஏதாவது கேட்கும் சாக்கில் இவன் மீது வந்து விழுவாள். ஒரு முறை அவளுடைய கோட் கம்பைல் செய்ய உதவும் போது அவளுடைய கம்ப்யூட்டரின் மௌசின் மேல் அவன் கை இருக்க அதன் மேல் அவள் கைவைத்ததும் "ஐயாம் நாட் ஃபார் திஸ் பேபி" என்றுவிட்டான்.

இந்த நெருக்கத்தில் ஒரு பெண் அதுவும் இத்தனை குறைந்த ஆடைகளுடன். ஜமாய் என்றான் உள்ளே இருந்த காமன். அபாய சங்கு ஊதியது அவன் பண்பாடு.

அவள் அவனுடைய தோளில் தன் தலையை வைத்தாள். பெண்களின் கூந்தல் திருவிளையாடல் வசனம் ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது. நீ என்ன வேண்டுமானாலும் செய்யடி பெண்ணே இந்த விசுவாமித்திரனின் தவம் கலையாது என்று சொல்லிக் கொண்டான். ஐயோ விசுவாமித்திரனின் தவமும் ஒரு முறை கலைந்துவிட்டதே என்று வருந்தினான்.

அவள் அவளுடைய இடது கையை அவன் மார்பில் வளைத்தாள்.
உடலை மரக்கட்டயாக ஆக்கிக் கொண்டான். ஆழ்ந்து மனமுவந்து மனதில் வந்த ஸ்லோகங்களை சொல்ல ஆரம்பித்தான்.

அவள் அதற்கு மேல் படரவில்லை. அவனை அணைத்துக் கொண்டு உறங்கத்துவங்கினாள். அவளுடைய மனம் அமைதியடைந்திருந்தது.

ராமாயணத்தை பற்றி பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றாள். அங்கிருந்த ஒரு இந்திய ஆசிரியர் அவளை உச்சி மோர்ந்து என் நாட்டு காவியத்தின் பெருமையை உன்னால் அறிய முடிந்தது என்று கூறி அழுதே விட்டார். செய்தித்தாள் தொலைகாட்சி நிருபர்கள் என்று அவளை அனைவரும் சூழ்ந்துக் கொண்டனர்.

பல கேள்விகளுக்கு விடை கொடுத்த பிறகு ஒரு கேள்வி அவளை பாதித்தது.


Ramayana is a fact or fiction?

How does it matter? We need to learn what we need to. Whether its from
the facts or fiction, history or mere imagination, how does it matter?

Do you think its possible in this century that a man can be just a onewoman person?

Yes. Its possible. If a man doesn't want his girl to sleep with many he
needs to follow that himself too.

Do you know somebody who lives like Ram?


Yes I know.

Who is it?

இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு நகர்ந்தாள்.
ஒரே படுக்கையிலிருந்து அவள் இன்று இவனுக்கு வைத்தது ஒரு பரீட்சை. அதில் அவன் நூற்றுக்குநூறு வாங்கியதில் அவளுக்கு ஆனந்தம்.

அவளுக்கு அவன் உடல் தேவைப்பட்டது. ஆனால் அவசரம் இல்லை. அவனை ஆயுள் முழுக்க தனதாக்கி கொள்ள நினைத்தாள். தன்னுடைய இனத்தில் அவள் கண்டிராத கேட்டிராத ஒரு குணம்.

ராஜிடம் இருந்த அந்த சக்தி. பலம். கட்டுப்பாடு. இவனே என் ராமன்.
ராமனுக்காக 14 வருடம் தான் அந்த சீதையால் இருக்க முடிந்தது. இவனுக்கா நான் 28 வருடம் கூட காத்திருப்பேன்.

அந்த அமெரிக்க பெண் தன்னுடைய பெண்மையை முதன் முறையாக உணர்ந்தாள். க்ரிஸை மானசீகமாக புகழந்தாள்.

அவனை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டு உறங்கினாள்.

காணாமல் போன குழந்தைக்கு மீண்டும் அம்மா கிடைத்துவிட்டால் மறுபடியும் எங்கே அம்மா தொலைந்துவிடுவாளோ என்ற பயம் இருக்கும் இல்லையா? தானே அம்மாவை கட்டி அணைத்து அவளிடம் இருந்து இனி பிரியாமல் இருக்கவேண்டும் என்று அந்த குழந்தை நினைக்கும் அல்லவா? அது போன்ற அணைப்பு அது. காமம் இல்லை. ஒரு பெருமை. ஒரு மகிழ்ச்சி. ஒரு சாதனை. தான் கண்ட ராமனை அவள் இழக்கத் தயாராகவில்லை.

இங்கு ராமாயண காலட்சேபம் அங்கோ ஒரு மகாபாரதப்போர். அவன் அங்கங்கள் சூடேறியிருந்தன. உடல் அனலாக பற்றியெரிந்தது. வேண்டும் வேண்டாம் என்ற மனப்போராட்டம்.

எத்தனை நேரம் இப்படியிருந்திருப்பான் என்று தெரியவில்லை. அவனுக்கு தெரிந்த எல்லா ஸ்லோகங்களையும் சொல்லி முடித்துவிட்டு உறங்கச் சென்றான்.

leomohan
10-10-2006, 05:55 AM
9

காலையில் அவன் குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு வந்தவனுக்கு ஒரு ஆச்சர்யம். உணவு மேசையின் மீது பருப்பு சாதம் தயாராக இருந்தது. பக்கத்திலே இந்திய சமயலைப்பற்றி ஒரு புத்தகம். இவள் என்னை உண்டு இல்லையென்று ஆக்காமல் விடமாட்டாள் போலிருக்கிறதே!


ராஜ். நல்லா இருக்கியா? என்றாள் மழலை தமிழில்.


வாட். சிலியா? யூ ஆர் லேர்னிங் டமிள்?


ஆம் என்றாள்.


ராஜ் எனக்கு ஒரு உதவி செய்கிறாயா?


என்ன?


அவள் மெதுவாக அவன் அருகில் வந்து அமர்ந்து அவன் கைகளை எடுத்து அவளுடைய நெஞ்சில் பதித்துக்கொண்டாள். என்னடா இது காலையிலும் இந்த கூத்து தொடங்கிவிட்டதே இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தவாறே இருந்தான்.

இடது கையிலிருந்த யூ எஸ் ஏ டுடேவை புரட்டி நான் நேற்று கொடுத்த நிகழ்ச்சியை பற்ற செய்தி வந்திருக்கிறது என்றாள் குழந்தையின் குதுகலத்துடன்.


அதை படித்த அவன் வாவ் சிலியா நீ என்னை பெருமைக்குள்ளாக்கிவிட்டாய் என்று அவளை அனைத்துக் கொண்டான்.


சொல் என்ன உதவி வேண்டும் என்று சொல் என்றான்.


நான் உங்க வீட்டுக்கு போகனும்.


என்ன?

ஆம்.

அதெப்படி முடியும் சிலியா?

ராஜ். நான் சொல்வதை கேளு. நானும் என்னுடைய தோழியும் உங்க ஊருக்கு போறோம். அவள் நிஜமாகவே இந்தியாவைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்போறா. ஆனா நான் உங்க அப்பா அம்மாவுடன் பழகப் போறேன். ஒரு வேளை அவங்களுக்கு பிடிச்சிருந்தா நம்ம கல்யாணம் சுலபமாக நடக்கும் இல்லையா?

என்னடா வம்பாக இருக்கே? நாம் நினைத்ததைவிட இந்த பெண் உறுதியாக இருக்கிறாளே!

சரி. நான் எங்க அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதறேன். ஆனா ஒன்னு நீ எனக்கு தெரிஞ்சதாகவோ என் வீட்டில் இருக்கறதாகவோ சொல்லக் கூடாது. அது ரொம்ப பிரச்சினையாகிடும்.

மூச் என்றாள் புன்னகையுடன். பிறகு இந்தியாவுக்கு விசா பயணத்திற்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கினாள்.
விளையாட்டாக அவனுடன் அன்று படுத்தவள் தினமுமே அவன் அறையில் படுக்கத்தொடங்கினாள்.

ஒவ்வொரு நாளும் தன் கன்னித்தன்மைக்கு பங்கம் வராததை கண்டு அவள் பூரித்து போனாள். அவள் தோழிகள் எல்லாம் ராஜூடைய இந்திய நண்பர்கள் யாராவது இருந்தால் தனக்கும் அறிமுகபடுத்தி வை என்று அவளை நச்சரிக்கத் துவங்கிவிட்டார்கள்.

வால் மார்ட் பாத் பார்க் என்று வீட்டு சாமான்கள் வாங்க கடை வீதிக்கு செல்லும் போதெல்லாம் தொலைபேசியில் தன் தோழிகளை அழைத்து அங்கே வரச்சொல்லிவிடுவாள்.

பிறகு ஏதேர்சையாக சந்திப்பது போல் ராஜை அவள் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வைப்பாள். இதுவே ஒரு வழக்கமாகிவிட்டது.
இவள் இந்திய பெண்ணாக மாறுவதைப் பார்த்து அவளுடைய தோழிகளும் புகை குடியை நிறுத்தி சைவமாக மாற முயன்றுக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் அப்படி மாறியபிறகு தாங்கள் சொர்கத்தில் இருப்பதாக உணர்ந்தனர். சத்தமில்லாமல் சிலியா நியு ஜெர்ஸியின் அந்த சிறிய நகரமான ஈஸ்ட் ப்ரனஸ்விக்கில் ஒரு கலாச்சார புரட்சி செய்துக் கொண்டிருந்தாள்.

அவனோ ஒவ்வொரு நாளும் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த அந்த அழகு பதுமையுடன் வெறும் கனவில் உடலுறவு கொண்டிருந்தான். ஆனாலும் அவன் தன்னுடைய மனோபலத்தை இழக்கவில்லை. 15 நிமிட தியானம் 30 நிமிடமாக மாறியிருந்தது.

leomohan
15-10-2006, 11:49 AM
சென்னை விமானத்தில் தோழி ரீடாவுடன் வந்திறங்கினாள் சிலியா. வியாழன் காலை. முரளி வந்திருந்தான். அவர்களை அழைத்துச் சென்று கோடம்பாக்கம் பார்க் ராயல் ஓட்டலில் தங்க வைத்தான்.
வெள்ளி இரவு கிருஷ்ணனும் ராஜூவும் விழுப்புரம் செல்லும் போது அழைத்து செல்வதாக திட்டம்.

முரளி விடைபெறுவதற்கு முன்பு சிலியா அவனை நிறுத்தினாள். முரளி உங்களுக்கு காயத்திரியை தெரியுமா என்றாள்.

எந்த காயத்திரி?

ம். அவனுடன் வேலை செய்த பெண். அவன் மௌஸில் கை வைக்கும்போது அவளும் வைத்தாளாமே? அந்த பெண்.

ஓ அவளா. தெரியும். இப்போது ஒரு கால் சென்டரில் தான் வேலை செய்கிறாள். அவளுக்கென்ன?

அவளை பார்க்க வேண்டுமே?

என்ன? குழப்பமாக பார்த்தான்.

ஆமாம்.

சரி. என்ன சொல்லி உங்களை அழைத்து போக என்று யோசிக்கிறேன்.

ஏதாவது காரணம் சொல்லுங்கள் என்றாள்.

அன்று மதியம் ஏதோ வெளிநாட்டு கம்பெனி நேர்முக தேர்வு நடத்துவதாக சொல்லி காயத்திரியை ஓட்டலுக்கு அழைத்து ரீடாவிற்கும் சிலியாவுக்கும் அறிமுகப்படுத்தினான்.

ஒரு சில கேள்வி கேட்டபிறகு, காயத்திரி நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? என்று கேட்டாள் சிலியா.

இது என்ன மென்பொருள் கம்பெனியா இல்லை திருமணம் நடத்தும் நிறுவனமா? என்று நினைத்தாள் காயத்ரி.

ஆம்.

இப்போது உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?

ஆம்.

நீங்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டீர்களா?

இல்லை.

ஏன்?

நான் காதலித்தவன் என்னை காதலிக்கவில்லை.

அவருடைய பெயரை தெரிந்துக் கொள்ளலாமா?

ஷங்கர்.

ராஜகோபால் என்று பதில் சொல்வாள் என்று எதிர்பார்த்தவளுக்கு இந்த பதில் குழப்பமாக இருந்தது.

சரி நீங்கள் போகலாம். இமெயிலில் உங்களுக்கு தகவல் அனுப்புகிறோம்.

காயத்திரி விடைபெற்று சென்றாள். போகும்போது முரளியிடம் என்னப்பா கம்ப்யூட்டர் பத்தி ஒன்னுமே கேட்கலையே என்றாள்.

அதுவா அவர்கள் ஹெச் ஆர் இன்டர்வ்யூக்காக வந்திருக்கிறார்கள் என்று மழுப்பினான்.

உள்ளே வந்த முரளியை பார்த்து என்ன முரளி அவள் ஏதோ ஷங்கர் பெயரை சொல்றாளே? அவள் ராஜகோபாலை காதலிக்கவில்லையா?

ஹா ஹா அவள் எங்கள் ஆபீஸில் காதலிக்காத ஆளே இல்லை. கடைசியாக அவள் வலை வீசியது ஷங்கருக்கு என்றான் சிரித்தபடியே.

என்ன நீங்கள் இந்திய பெண்களும் அமெரிக்க பெண்கள் மாதிரிதானா? நான் என்னமோ நினைத்து வந்தேன்.

ஆம் சிலியா. இந்தியாவில் கலாச்சாரம் மாறிக் கொண்டிருக்கிறது. கால் சென்டர் பிபிஓ வெளிநாட்டு கம்பெனிகள் மல்டிப்லெக்ஸ் வேலை கை நிறைய சம்பளம் வெளிநாட்டு டெலிவிஷன் சேனல்கள் அதிகமான கல்யாண செலவுகள் பொறுப்பில்லாத பெற்றோர்கள் பெற்றோர்கள் பேச்சை கேட்காத பிள்ளைகள் திருமணத்திற்கு முன்பே உடல் உறவுகள் என்று பெரிய அளவில் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கர்களிடத்திலிருந்த அறிவு திறமை கடின உழைப்பு பொறுப்பு சுதந்திர பாங்கு இவைகளை கற்காமல் அவர்களுடைய உணவு உடை செக்ஸ் கலாச்சாரம் இதைத்தான் இவர்கள் கற்றிருக்கிறார்கள் என்று பொரிந்து தள்ளினான் முரளி.

இதை கேட்டு அதிர்ந்து போனாள் சிலியா.

ஆனால் ராஜகோபால்?

ஆஹா. அவனா? இந்திய கலாச்சாரம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்றால் அவனைப் போல சில ஆட்களால் தான்.
இன்னும் கேட்டால் எங்கள் குருப்பே இப்படித்தான். பொது நல சேவை இரத்த தானம் கோவில் குளம் விவேகானந்தர் யூத் க்ளப் என்று வித்தியாசமானவர்கள் நாங்கள். சின்ன வயதில் சைட் அடித்தாலும் காதலித்தவளையே கட்டுவது இல்லை கட்டினவளை காதலிப்பது என்று எடுக்காத ஒரு சபதத்தையே எடுத்ததாக காப்பாற்றி வருகிறோம்.

இதை கேட்டு அசந்து போனாள் சிலியா. சைட் என்றால் என்ன?

டேட்டிங்கா?

ஆஹா அப்படியெல்லாம் இல்லை சிலியா. தூரத்திலிருந்த பார்ப்பதை தான் சைட் என்போம்.

ஹா ஹா அப்படியென்றால் எங்களை பொருத்தவரை நீங்கள் கற்கால மனிதர்கள். எங்கள் ஊரில் 13 வயதில் பெண்களுக்கு கருகலைப்பு நடந்துவிடுகிறது.

இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவும் அப்படி ஆகிவடும்.

நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இந்தியா ஒரு புனித பூமி. ராமர் பிறந்த நாடு. அது போல ஆகவே கூடாது.

அமெரிக்கப் பெண்மணி ராமரைப் பற்றி பேசுவது முரளிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

முரளி உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?

ஆம்.

காதல் திருமணமா? தப்பா நினைக்காதீர்கள். உங்கள் நண்பனாக நினைத்து சொல்லுங்கள்.

இல்லை. இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கிறது. காதல் திருமணம் தான். முதலில் 6ம் வகுப்பில் அவளைப் பார்த்தேன். பிறகு 12ம் வகுப்பு வரை சேர்ந்து படித்தோம் பழகினோம். நான் 4 வருடம் இன்ஜினியரிங் படிக்க பெங்களுர் போய்விட்டேன். அவளோ திருச்சியில் பிஎஸ்ஸி படிக்க போய்விட்டாள். மீண்டும் பார்த்தபோது திருமணத்தில் முடிந்தது.

உங்கள் காதலை எப்போது சொன்னீர்கள்?

முகம் சிவக்க இன்னும் சொல்லவில்லை என்று சொன்னான் முரளி.

அப்படியா?

அவள் சொன்னாளா?

இல்லை.

அப்படியென்றால்?

சிலியா இதைப்பற்றி பேசவேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

அவள் வேறு யாரையாவது காதலித்திருந்தால்?

அவள் என்னைத்தான் காதலிக்கிறாள் என்று எனக்கு உறுதியாக தெரியும்.

அப்படியா?

இதெல்லாம் மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது சிலியாவிற்கு. தினமும் ஐ லவ் யூ சொன்னால் தான் பல திருமணங்கள் விவாகரத்தில் முடியாமல் இருக்கின்றது என்பது அமெரிக்க நம்பிக்கை.

இங்கோ 16 வருட காதல். ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை.

நான் உங்கள் மனைவியை பார்க்கலாமா?

ஓ தாராளமாக. இன்னும் கேட்டால் இன்று இரவு எங்கள் வீட்டில் தான் உங்களுக்கு விருந்து. நான் 8.30 மணிக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.

முரளி விடைபெற்று சென்ற சில மணி நேரம்வரை இந்திய அமெரிக்க கலாச்சாரங்களைப்பற்றி பேசித்தீர்த்தார்கள் தோழிகள் இருவரும்.

8.25க்கு முரளி ஆஜர். டொயோட்டா குவாலிஸ் எடுத்து வந்திருந்தான். கோடம்பாக்கம் பாலத்தை கடந்து ஜெமினியை கடந்து சந்து பொந்துக்களில் சென்று மயிலாப்பூர் தெப்பக்குளத்தின் ஒரு இருண்ட தெருவில் வண்டியை நிறுத்தினான்.

மன்னிக்கவேண்டும். சென்னையில் மக்கள் தொகை அதிகம். இன்னும் சாலை வசதிகள் அதிகம் முன்னேறவில்லை.

ஓ கவலை வேண்டாம். நியூ யார்க்கும் இப்படித்தான் இருக்கிறது. அங்கும் தெருக்கள் சுத்தம் இல்லை. அமெரிக்காவைப் பற்றி நீங்கள் கேட்டதையெல்லாம் நம்பவேண்டாம்.

அப்படியா என்றான் முரளி ஆச்சர்ய்த்துடன். ஒரு முறை பயிற்சிக்காக கலிபோர்னியா சென்று வந்தான். அது நன்றாக இருந்ததாகத்தான் நினைத்தான். அமெரிக்கா பெரிய நாடு. மக்கள் தொகை உலகில் மூன்றாவது இடம். பிரச்சனைகளும் அதிகம் தான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

பழைய வீடு. சிறிய திண்ணைகள். தாழ்வாரம். குனிந்து செல்ல வேண்டிய உயரம் தான்.

இந்த திண்ணைகள் எதற்கு என்று கேட்டாள் ரீடா.

ஓ இதுவா அந்த காலத்தில் வழிபோக்கர்கள் வந்தால் உறங்கி செல்வதற்கு.

அப்படியா? யாரென்றே தெரியாமல் உங்கள் வீட்டில் தங்க விடுவீர்களா?

ஹா. அது அந்தக்காலம். திருட்டு பயமோ இந்த பணப்பைத்தியமோ இல்லாத காலம். இப்போது வயதானவர்கள் உட்கார்ந்து வெட்டி பேச்சு பேசத்தான் பயன்படுகிறது.

முரளியின் அப்பா அம்மாவை பார்த்ததும் இரண்டு கை கோர்த்து வணக்கம் தெரிவித்தாள் சிலியா.

புதுமை செய்யப்பட்ட பழைய வீடு. சோபா கலர் டிவி வாஷிங் மெஷிpன் கம்ப்யூட்டர் கேபிள் டிவி.

கருப்பாக இருந்தாலும் அழகாக இருந்தாள் முரளியின் மனைவி ப்ரவீனா. கையில் ஒரு குழந்தை.

இந்திய மணத்துடன் கூடிய ஆங்கிலத்தில் 'வெல்கம்" என்றாள்.
அவளை அணைத்துக் கொண்டு கொண்டு வந்த பூக்களை கொடுத்தாள். அந்த குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு கொஞ்சினாள்.

ப்ரவீனா சமயல் அறைக்குள் நுழைந்தாள். சிலியா முரளியை பார்த்து நான் உள்ளே போகலாமா என்று கேட்டாள்.

தாராளமாக என்றான் முரளி. பிறகு ரீட்டாவை அழைத்துக் கொண்டு வீட்டை சுற்றி காட்டினான். அவள் தான் எடுத்து வந்திருந்த காமிராவை எடுத்து சில புகைப்படங்களை எடுத்தாள். தன்னுடைய குறிப்பேட்டில் ஏதோ குறித்துக் கொண்டாள்.

உள்ளே நுழைந்து சிலியா ப்ரவீனாவைப்பார்த்து 'நீங்கள் காதல் திருமணம் புரிந்துக் கொண்டீர்களா? என்றாள்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ப்ரவீனா வெட்கத்தில் முகம் சிவந்து ஆம் என்றாள்.

யார் முதலில் காதலை சொன்னது?

யாரும் இல்லை.

யாரும் இல்லை? முரளி வேறு யாரையாவது காதலித்திருந்தால்?

இல்லை. முடியாது.

எப்படி?

விழுப்புரம் சின்ன ஊர். என் தோழிகளில் யார் எங்களுடைய ஆள் என்று பேசிக்கொள்வோம். அதில் யாரும் முரளியை பார்க்கவில்லை. பிறகு அவர் செல்ல ஹிந்தி க்ளாஸ் பாட்டு க்ளாஸ் இல்லையென்றால் கோவில். இதில் எல்லா இடத்திலும் நான் இருந்தேன். இன்னும் கேட்டால் நான் இருந்ததால் தான் அவர் வந்து சேர்ந்தார். என்னைப் பார்க்கவே தினமும் முன்னதாக வந்துவிடுவார்.

பிறகு கல்லூரி. காதல் வந்தால் கல்லூரியில் வேறு யாரையும் பார்க்க முடியாது. அதனால் கல்லூரியில் அவர் யாரையும் காதலித்திருக்க முடியாது. என்னுடைய தோழியும் அவர் படித்த கல்லூரியில் தான் படித்தாள். அதனால் அவரைப்பற்றி தகவல் வந்து கொண்டே இருக்கும்.

கண்களை அகலமாக்கிக் கொண்டே இந்த கதையெல்லாம் கேட்டாள் சிலியா.

பிறகு எப்போது திருமண பேச்சு நடந்தது?

நாங்கள் இருவரும் என்னுடைய தோழியின் திருமணத்தில் சந்தித்துக் கொண்டோம். எங்கள் இருவரையும் வருபவர்களை வரவேற்பதற்காக வெளியே நிறுத்தி விட்டார்கள். சில மணி நேரம் பேசாமல் இருந்தோம். பிறகு என்னைப்பார்த்து நம் கல்யாணத்தில் யாரை வரவேற்பில் நிறுத்தலாம் என்று கேட்டார்.

நம் கல்யாணமா? எப்போ என்று கேட்டேன்.

அடுத்த மாதம் என்றார்.

அவர் சொன்னது போல அதற்கு அடுத்த மாதமே திருமணம் நடந்தது.

என்ன சொல்கிறாய். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு முறை கூட நீங்கள் சேர்ந்து வெளியே செல்லவில்லையா? சினிமா பார் என்று எங்குமே?

நீங்கள் உங்கள் விருப்ப வெறுப்பை பற்றி எதிர்காலத்தைப்பற்றி இப்படி எதுவுமே பேசாமல் எப்படி?

சிலியா. நீங்கள் அமெரிக்கர். உங்களுக்கு இதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். ஒரு சராசரி இந்திய பெண்ணுக்கு இன்னும் சொல்லப்போனால் தமிழ் பெண்ணுக்கு தனக்கு கணவனாக வருபவன் புகைப்பிடிப்பவனா குடிப்பவனா என்பதைவிட தன்னை மட்டுமே நினைப்பவனாக தனக்கு உரியவனாக இருக்கவேண்டும் என்றே நினைக்கிறாள். அப்படி பார்த்தால் முரளி என்னை முதல் நாள் பார்த்திலிருந்து இன்று வரை வேறு யாரையும் பார்த்ததில்லை.

முரளி ப்ரவீனாவின் காதல் கதையில் லயித்துபோனாள். பிறகு அவர்கள் டைனிங் டேபிளில் அமரச்சொன்னாலும் கேட்காமல் தரையில் அமர்ந்து அவர்களுடன் உணவு உண்டு ஒரே கோலாகலம் தான்.

முரளியின் பெற்றோருக்கு சிலியாவை மிகவும் பிடித்துவிட்டது. முரளியின் அம்மா அவள் நெற்றியில் பொட்டுவைத்தாள். உனக்கு நல்ல கணவன் கிடைப்பான் என்றாள்.

அதை முரளி மெழி பெயர்த்தான். அதை கேட்டதும் சிலியா மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தாள். முரளியின் அம்மாவின் மெலிந்த கைகளுக்கு முத்தமிட்டாள்.

பிறகு ஒரு பிரியா விடை பெற்று சென்றாள். முரளி அவர்களை இறக்கி விட்ட மறுநாள் கிருஷ்ணனுடன் வருவதாக உறுதி கூறி விடைப் பெற்றான்.

சுமார் 11 மணி இருக்கும். நியூ ஜெர்ஸியில் மதியம் 2 மணி. ராஜ் உன்னுடைய நண்பன் முரளி ஒரு ஜெம். அவனுடைய மனைவி ப்ரவீனா வாட் அ வொன்டர்ஃபுல் கெர்ல் ஷி இஸ். ஒரு அழகான குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு தந்ததற்கு மிகவும் நன்றி. நாமும் அவர்களை போல ஒரு அழகான தம்பதியாவோமா?

இரண்டு நாளில் அவள் குரலை கேட்காமல் ஏங்கிபோயிருந்த ராஜ்க்கு அவளுடைய பேச்சு உற்சாகமூட்டியது. நிச்சயமாக பெண்ணே!. நீ போய் எங்க அப்பா அம்மாவை இம்பிரஸ் செய் என்றான் ஆனந்தமாக.

leomohan
15-10-2006, 11:51 AM
கிருஷ்ணன் உயரமாக ஸ்மார்டாக இருப்பான். பேச்சிலும் ஸ்மார்ட் தான். ராஜகோபால் அவர்களுடைய உறவைப் பற்றி ஏதும் சொல்லாவிட்டாலும் சிலியாவின் பேச்சிலேயே விஷயத்தை கண்டுபிடித்துவிட்டான்.

முரளி ரீட்டா சிலியா கிருஷ்ணன் ராஜூ இவர்களை ஏற்றிக் கொண்டு டெயோட்டா குவாலிஸில் விழுப்புரம் நோக்கி சென்றது.


Are you in love with Raj?

Well. Not really. mm. Yes, yes Krish. I am in love with Raj.

முரளிக்கே அது புது செய்தியாக இருந்தது. காயத்ரியை அவள் பார்க்க வேண்டும் என்றபோதே சற்று சந்தேகமாக இருந்தது. இப்போது உறுதியாகிவிட்டது.

ராஜூ சிலியாவிடம் நீங்கள் ஒரு நல்ல பெண்மணி. ராஜகோபால் மிகவும் அதிர்ஷ்டசாலிதான். ஆனால் அவன் குடும்பம் மிகவும் கன்ஸர்வேடிவ். எப்படி உங்கள் திருமணம் நடக்கும் என்பது தான் எங்களுக்கு ஆவலாக இருக்கிறது. அவன் தன் குடும்பத்தை எக்காரணம் கொண்டும் விடமாட்டானே?

ஆம். ராஜூ. நானும் அவன் தன் குடும்பத்தை எதிர்த்து என்னை திருமணம் புரிவதை விரும்பவில்லை. நான் இன்னும் தொலை தூரம் செல்ல வேண்டும். உங்கள் அனைவரது உதவியும் தேவை எனக்கு.
கிருஷ்ணன் நீஙகள் பள்ளிப்பருவத்தில் நந்தினிக்கு லவ் லெட்டர் கொடுத்த கதையை எங்களுக்கு சொல்லுங்களேன்.

அடப்பாவி நம்ம எல்லோருடைய கதையும் இவளுக்கு சொல்லிட்டான் போலிருக்கேடா என்றான் கிருஷ்ணன்.

அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். இப்படியாக மூன்று மணி நேரம் பழைய கதைகளை பேசி கழித்தனர். கிருஷ்ணன் நந்தினிக்கு கடிதம் கொடுத்து ராஜூ பெண்ணாக வேடம் போட்டு நாடகத்தில் நடித்தது கவிதை எழுதியது சிவா ரத்தத்தால் காதல் ஓவியம் வரைந்தது முரளி ப்ரவீனாவை நினைத்து கவிதைகள் எழுதி தள்ளியது அனைவரும் சேர்ந்து பெண்களை சைட் அடிக்கவே ஹிந்தி க்ளாஸ் சேர்ந்தது ராஜகோபால் புது சைக்கிளை உடைத்துவிட்டு அவன் தந்தையிடம் பெல்டால் அடி வாங்கியது. ஒரு கதையும் பாக்கி இல்லை.

இரவு 10 மணிக்கு போய் சேர்ந்தனர்.

டேய் அவங்களை நம்ம வீட்ல எப்படிடா தங்க வைக்கிறது?

அப்பா அது தான் மூனு ரூம் இருக்கே.

அது சரிடா. நாம மடி ஆசாரமானவங்க.

அப்பா அவங்களும் சைவம் தான்.

என்னடா சொல்றே. அமெரிக்கர்கள் எப்படிடா சைவமா இருக்க முடியும்.

அப்பா சில மாசம் தானேப்பா. ஏதோ ஆராய்ச்சிக்காக வந்திருக்காங்க. அதுக்கு பணமும் கொடுக்கறாங்க.

அதில்லைடா. உங்கம்மா ஏதோ லட்சுமி பூஜை பண்றா. வீடு சுத்த பத்தமா இருக்கனும்.

ஒன்னும் ப்ரச்சினை இருக்காதுப்பா.

ஆமா யார் இவங்க.

என் பாஸூக்கு தெரிஞ்சவங்க.

உனக்கு தெரிஞ்சவங்களா?

நான் பார்த்ததில்லை. ஆனா ரொம்ப நல்ல மாதிரி.

இல்லைடா. கல்யாணம் ஆகாத இரண்டு பொண்ணுங்க அதுவும் வெளிநாட்டு பொண்ணுங்க ஏதாவது ஏடாக்கூடமா ஆச்சுன்னா? உனக்கு இன்னும் கல்யாணம் வேற ஆகலை. ஏதாவது பேச்சு வந்திடக்கூடாது.

அப்பா ஏதாவது பிரச்சினை வந்தா வெளியே அனுப்பிடுங்க. விழுப்புரத்தில நல்ல ஓட்டல் கூட இல்லை. எங்க தங்க வைக்கிறது அவங்களை?

சரி. வரட்டும். நீ வாரம் ஒரு முறை போன் பண்ணிடு.

சரிப்பா. அவங்களை நல்லா பாத்துக்கோங்க.

அவர்கள் வண்டி வந்து பாரதி நகர் விழுப்புரத்தில் நின்றது.

வாடா கிருஷ்ணா ராஜூ எங்கே இந்தப்பக்கமே வரதில்லை. ராஜகோபால் இல்லைன்னா யார் வர்றீங்க.

இல்லை மாமா வேலை ரொம்ப பிஸி.

ஆமா பெரிய ஆளுங்களாயிட்டீங்கப்பா.

இல்லை மாமா என்று வழிந்துக் கொண்டே உள்ளே கொண்டு வைத்தார்கள் ரீட்டா சிலியாவின் பைகளை.

வெல்கம் யங் லேடீஸ் என்று ராஜகோபாலின் அப்பா கலக்கினார்.
ராஜகோபாலின் அம்மாவும் அவருக்கு தெரிந்த ஆங்கலத்தில் கம் இன்ஸைட் என்று ஒரு போடு போட்டார்.

முரளி, மாமி நல்லா இருக்கீங்களா? என் குழந்தையை பார்க்க கூட நீங்கள் வரவில்லை. இதோ இருக்கு மெட்ராஸ் என்றான் செல்லக் கோபத்தில்.

எங்கப்பா நாங்க எங்க போறது. நீங்கள் வந்தால் நல்லா இருக்கும். ஒரு எட்டு குழந்தையையும் ப்ரவீனாவையும் அழைச்சிகிட்டு வரலாம்ல!

சரி மாமி. நான் போய் கிருஷ்ணன் ராஜு இவங்களை விட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு முரளி கிளம்பினான்.

மாடியில் பின்புறம் கொல்லை பார்த்தவாறு இருக்கும் படுக்கையறை சிலியாவிற்கும் முன்புறம் பார்த்தவாறு இருக்கும் அறை ரீடாவுக்கும் கீழ் படுக்கையறை வழக்கப்படி ராஜின் பெற்றோர்க்கும் என்று முடிவானது. முரளி இன்று மட்டும் இருப்பான் என்பதால் அவனுக்கு சோபா தான் படுக்கை என்று முடிவானது.

முரளி எப்போது வந்தாலும் சோபாவில் தான். இரவு முழுவதும் டிவி ஓடிக் கொண்டே இருக்கவேண்டும் அவனுக்கு. ஒன்றும் இல்லாவிட்டால் கூட டெலிஷாப்பிங்கில் உடம்பு இளைக்கும் பெல்ட் எப்படி என்று பார்த்து கொண்டிருப்பான்.

சிலியாவுக்கு கிடைத்த அறை ராஜகோபாலுடையது. அவனுக்கு எழுந்தவுடன் சூரியனை பார்க்கவேண்டும். பிறகு துளசி மாடத்தை நோக்கி ஒரு கும்பிடு. அனைத்தும் அறிந்திருந்தாள் சிலியா. அவள் ஒரு இனம் புரியாத கிளர்ச்சியில் இருந்தாள்.

அவனுடைய அறை நியூ ஜெர்ஸியில் அவனுடைய வீட்டை விட அழகாக இருந்தது. அவனுடைய தந்தை அவன் சிறு வயதிலிருந்து உபயோகப்படுத்திய புத்தகம் துணிமணி விளையாட்டு பொருட்கள் முதல் அனைத்தையும் வயது வாரியாக அடுக்கி வைத்திருந்ததை கண்டு மிகவும் ஆச்சர்யமானாள்.

தேடிப்பிடித்து அவனுடைய டைரியை எடுத்தாள். புரட்டி புரட்டி படித்தாள். அவளுக்கு 24 மணி நேர பயணமோ இல்லை சென்னையிலிருந்து 3 மணி நேர பயணமோ ஒரு களைப்பை தரவில்லை. இமாலயத்தை ஏறியவர் களைப்படைவதுண்டா?


July 16, 2005
Leaving for the US. What's in store for me there?

June 1, 2005
Encountered a chaotic person in life. What difference it makes for
somebody what they do to achieve fame and fortune? For me, yes
methodology makes a difference too.

January 1, 2005
This year is for a change. Let me mark this year as "Year of Changes"

December 31, 2004
My friends forced me to drink beer during the new year celebrations. I
don't want to lose my consciousness and nothing can affect my firmness.
Guys the pleasure is a perception of mind. I can derive whatever pleasure
I want without these external influences. For a cleaner society everybody
should quit smoking. For a safer society people should quit alcohol.

March 13, 2003
Miss G tried to hold my hand today. I need to tell her, I am not for this
baby. I felt bad. But I couldn't avoid it. She is after every guy in the
office. What makes girls run behind men? or vice versa. Are they
searching for partners for life or partners in sex. I really wonder what is
the big difference in sleeping with a prostitute and a woman who is lusty.
Will she wait for me forever? She can't. She will now go after somebody
else.

இன்னும் பல டைரிகள். ஒன்று விடாமல் படிக்கப் போகிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். எல்லா விஷயங்களைப் பற்றியும் எழுதியிருந்தான். பள்ளிக்கூடத்தில் நடந்தது கல்லூரியில் நடந்தது அலுவலகத்தில் நடந்தது டிவியில் பார்த்தது வானோலியில் கேட்டது அரசியில் பொருளாதாரம் கணிப்பொறி என்று ஒரு அகராதியே இருந்தது.

பிறகு அவனுடைய விளையாட்டுப் பொருட்கள். ஒன்று கூட உடையாத நிலையில்.

தூக்கம் கண்களை சொக்க உறங்கச் சென்றாள்.

மச்சான் ராஜ் விவகாரம் கேட்கவே த்ரில்லிங்கா இல்லை? - முரளி.

இது ஏதோ வம்புல போய் முடியப்போகுது. - கிருஷ்ணன்.

வெளிநாட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதுல என்னடா தப்பிருக்கு? இது ஒன்னும் புதுசு இல்லையே? - ராஜூ.

மச்சான் எந்த ஒரு புரட்சியும் நம்ம வீட்டில நடந்தாதான் அதிர்ச்சியா இருக்கும். இவனுக்கு என்ன மர கழண்டு போச்சா. நம்ம ஊர்லே பொண்ணா இல்லை? அந்த வாத்தியார் பொண்ணு லட்சுமி இன்னும் இவன் மேல பைத்தியமா இருக்கா. இதுவரை 7 வரன்களை தட்டி கழிச்சிட்டா. நான் எப்ப போனாலும் ராஜகோபாலை பத்தித்தான் பேச்சே. அவளுக்கு என்ன குறைச்சல். நல்ல பொண்ணு.

முரளி நம்மளை யாரு லவ் பண்றாங்கறது முக்கியம் இல்லைடா. நாம யாரை லவ் பண்றோம் அது தான் முக்கியம். நான் சைட் அடிக்காத பொண்ணே இல்லை. ஆனால நான் அரேஞ் மேரெஜ் செஞ்சி சந்தோஷமா இல்லையா?

ராஜ் கல்யாணம் மட்டும் நடந்தது நான் ரீடாவோட ஒதுங்கிடுவேன். செம கட்டைடா மச்சி - கிருஷ்ணன்.

டேய் இவனைப் பாத்தியா நிச்சயதார்த்தம் ஆனவன் மாதிரி பேசறானா? இரு சுருதிக்கு போன் போட்டு சொல்றேன். - முரளி.

டேய் நீ வேற. சும்மா தமாஷ் பண்ணேன்டா. சுருதிகிட்ட சொல்லி என்னை வம்புல மாட்டாதே.

இவ்வாறாக கதை அடித்துவிட்டு காமராஜ் சாலையோரு கடையில் மசாலா பால் குடித்துவிட்டு ஒவ்வொருவரையும் இறக்கிவிட்டு ராஜகோபாலின் வீடு வந்து சேர்ந்தான். முன்பே சாவி எடுத்துக் கொண்டு சென்றதால் நேராக கதவை திறந்து கொண்டு வைத்திருந்து வேட்டியை கட்டிக் கொண்டு டிவியை துவக்கிவிட்டு சோபாவில் படுத்துக் கொண்டான்.

இந்த முரளி பையனோட சேர்ந்து நீ கெட்டு குட்டிச்சுவரா ஆகப்போறே!. - ஒரு நாள் முரளி அவன் வீட்டில் நுழையும் போது ராஜின் அப்பா திட்டிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
பூவிழி வாசலிலே. அவர்களுடைய கல்லூரி விடுமுறையில் இந்த படத்தை பார்க்க டிக்கெட் வாங்கியிருந்தார்கள். அதற்காக கிளம்பும்போது தான் ராஜகோபாலுக்கு இந்த பாட்டு.
சட்டென்று உள்ளே நுழைந்து முரளியைப் பார்த்ததும் மௌனமாகிவிட்டார் அவன் தந்தை.

இப்போது அவன் வந்தால் ராஜ மரியாதை தான். வேட்டியும் ஒரு சொம்பில் தண்ணியும் அவர் எடுத்து வைத்திருந்தார். மாமாவுக்கு என் மேல ஒரு தனி அன்புதான் என்று நினைத்துக் கொண்டான்.

மெல்ல கண்கள் அவனை தூங்கச் சொல்ல டிவியை அணைத்துவிட்டு தூங்கச் சென்றான்.

Joe
16-10-2006, 07:01 AM
அன்பு லியோ..

தங்களின் இரு தொடர்கதைகளும் மிக நன்றாகவே இருக்கின்றன... அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டும் விதமாக எழுதியிருப்பது.. மிகவும் அருமை..

தொடர்ந்து எழுதுங்கள்..

ஜோ

leomohan
16-10-2006, 07:10 AM
ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஜோ. இன்னும் சில பதிவுகளை இன்று தருகிறேன்.

pradeepkt
16-10-2006, 07:13 AM
நீங்க முழுசா எழுதினவுடனே படிக்கிறேன். ஹி ஹி... தீபாவளி லீவு நெருங்கிருச்சுல்லா... கொஞ்சம் வேலை அதிகம்...

leomohan
16-10-2006, 07:18 AM
12

அமெரிக்கா. உலகத்தில் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மூன்றாவது நாடு. வல்லரசு. 50 மாநிலங்கள். ஒவ்வொரு மாநிலமும் பல கவுன்டிகளாக பிரிக்கப்டுள்ளது. நகராட்சி வரி மாகாண வரி மாநில வரி மத்திய வரி என்று பல வரிகள் கட்டியே வரிகுதிரைகளாகிவிட்ட மனிதர்கள்.

1776 சுதந்திரம் பெற்ற நாடு. ஆங்கிலேய வெள்ளையர் ஆப்ரிக்க கருப்பர் தென் அமெரிக்கர் மெக்ஸிகன் இந்தியர் மத்திய கிழுக்கு சீனா என்று அனைத்து நாட்டு மக்களும் இணைந்து உருவாக்கிய ஒரு நாடு.

அமெரிக்கா ஒரு சிறிய உலகம் என்று சொல்லலாம்.
நியூ ஜெர்ஸி மாநிலம் நியூ யார்க் மாநிலத்திற்கு அருகில். ஜெ எஃப் கே விமான தளத்திலிருந்து ஈஸ்ட் ப்ரன்ஸ்விக் சுமார் ஒன்றரை மணி நேர தூரம்.

நியூ யார்க் செல்ல வசதியாகவும் ஒரு அளவு செலவு குறைவாக இருப்பதாலும் பலர் இங்கிருந்து டிரெயின் பஸ் மூலம் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இயற்கை தன் எல்லா வரங்களையும் இங்கே தந்திருக்கிறது. கோடை காலம் மழைக்காலம் இலை உதிர் காலம் கார் காலம் குளிர்காலம் என்று நாம் படித்திருக்கலாம். ஆனால் எல்லா காலங்களும் சரியான நேரத்தில் இங்கு தான் வந்து போகிறது.

சில சமயம் இயற்கை சீற்றத்தில் காட்டுத்தீ வருவதுமுண்டு கத்ரீனா வருவதுமுண்டு. இயற்கை இல்லாமல் செயற்கையாக மதம் பெட்ரோல் போர் என்று பல சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் மக்கள்.
கலாச்சார சீரழிவும் வேகமாகதான் நடக்கிறது.

ஆனால் ஈஸ்ட் ப்ரன்ஸ்விக் ஒரு அழகான நகரம். இயற்கை கொஞ்சும். அவென்யூ டிரைவ் புலவர்ட் என்று பல பெயர்களில் தெருவை கூறிக்கின்றனர்.

குளம் குட்டை ஏரி உயர்ந்த ஓக் மரங்கள் பசுமை எங்கெங்கும். இரண்டு பக்கம் மரங்கள் இருந்தால் அது புலவர்ட். அப்படிப்பட்ட ஒரு புலவர்டை தாண்டிப் போனால் டைலர்ஸ் அவென்யூ வரும்.
இப்படி பேரழகும் பேரமைதியும் கொண்டு இந்த நகரத்தில் அமைதியில்லாத ஒரே ஜீவன் ராஜகோபால் தான்.

இரண்டு நாட்களாக சிலியாவின் உடல் படாமல் தூக்கம் வரவில்லை. அவள் அருகில் இருந்தால் ஏதோ சொர்கத்தில் இருப்பது போல ஒரு மயக்கம். மனப்போராட்டங்களையும் மீறி அவளை கட்டி அணைப்பதும் அவளுடைய அழகான சிறிய நெற்றியில் அந்த தங்க கூந்தலை அகற்றி முத்தமிடுவதும் அவனுடைய வாடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. 'அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே" என்று பாலசுப்ரமணியம் காதில் பாடிச் சென்றார்.

அவனால் தூங்க முடியவில்லை. செல்லும் பாதை சரியா தவறா என்று தெரியவில்லை. ஆண் உடலின் உபாதைகள் அவனை செயல்குலைந்து போகச் செய்திருந்தது.

க்ரிஸ் நாம வெளியே எங்கேயாவது போகலாமா? என்று தொலைபேசியில் கேட்டான்.

என்ன சிலியாவை மிஸ் பண்றியா?

ஆமாம். ரொம்ப டிப்ரஸ்டா இருக்கு.

கவலைப்படாதே இன்னும் இரண்டு மணிநேரத்தில் உன் வீட்டில் இருப்பேன் என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தான் க்ரிஸ்.
இரண்டு மணிநேரமாக என்ன செய்வது. விவேகானந்தரின் ராஜ யோகத்தை கையில் எடுத்தான். ஒரு வரிகூட அவனால் படிக்க முடியவில்லை.

டேப்ரிக்கார்டரில் கந்த சஷ்டி கவசம் போட்டான். கண்ணை மூடிக் கொண்டு கூடவே பாடினான். பாடிக்கொண்டே வந்தவன்

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க


என்ற வரிகள் வந்ததும் அழுதே விட்டான். அவனுடைய கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் தூள் தூள் ஆவதை பார்த்தான்.
டயரியை எடுத்து


Who defines sexual boundaries? What is right and what is wrong in sex?
Can anybody sleep with anybody? Is it all fake when we say we love a soul and not the body?
Will my frustration be solved by any woman?

Do I love Ceilia? Or I just want her body?

Help me God to make a decision.

கிறுக்கலாக எழுதிவிட்டு தூக்கி எறிந்தான் டயரியை.

காத்துத் தேவர்கள் கடுஞ்சிரை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்ப கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா


சிலியா நீ எங்கிருக்கிறாய்?

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

நான் உன்னை காதலிக்கிறேனா?

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

Yes. I love you.

எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டான். தலை சீவி தயாரானான். க்ரிஸ் வந்து இவனை ஸ்டார் ஸ்டீக் பாருக்கு அழைத்துச் சென்றான்.

ஒன் ஹெனிக்கன். ஒன் டயட் கோக். என்று பணிப்பெண்ணிடம் சொல்லிவிட்டு 'சொல்லு ராஜ் என்ன ப்ராப்ளம் உனக்கு?"

நான் சிலியாவை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன்.

ஓ இது நல்ல விஷயம் தானே. அவளிடம் சொல்லிவிட்டாயே!

சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அவளுக்கு தெரியும்.

அவள் சரியென்று சொல்லிவிட்டாளா?

ஆம் என்று தலையாட்டினான்.

ஓ அப்படின்னா பார்டிதான்.

இல்லை க்ரிஸ் பிரச்சனை அதுவில்லை.

பின்?

எங்க வீட்டை எதிர்த்து நான் அவளை கல்யாணம் செய்து கொள்ள முடியாது. என் ரத்தத்தில் ஊறிவிட்டது. நான் ஒர சாதாரண இந்தியன். என் அப்பா அம்மா அக்கா தம்பி அனைவரும் வேண்டும். அவர்களை விட்டு என்னால் எங்கும் போகமுடியாது.

வீட்டில் பேசிப்பாரேன்.

இல்லை. தொலைபேசியில் பேசினால் பெரிய பிரச்சனையாகிடும்.

ஒரு வாரம் விடுப்பில் சென்று பேசி விட்டு வா!

இது நடக்குமா என்றே தெரியவில்லை க்ரிஸ். நான் அநாவசியமாக குழம்பி சிலியாவை குழப்புகிறேன் என்று தோன்றுகிறது. எனக்காக அவள் என் வீட்டாரை சந்திக்க போயிருக்கிறாள்.

ஓஹோ இத்தனை நடந்திருக்கிறதா? அது தான் அவள் ஆராய்ச்சி என்று இந்தியா போயிருக்கிறாளா? ஏய் நீங்கள் இரண்டு பேரும் என்னிடம் மறைத்திவிட்டீர்களே என்று கோபித்துக் கொண்டான்.

ஹேய் க்ரிஸ் வாட்ஸ்ஸப் மேன் என்று ஒரு உருவம் வந்து இவர்கள் அருகில் அமர்ந்தது. பார்த்தவுடனேயே இந்தியன் என்று தெரிந்தது. கருப்பு நிற டி ஷர்ட் அதன் மேல் ஒரு ஜாக்கெட் கருப்பு நிற ஜீன்ஸ் ஒரு கவ் பாய் தொப்பி கையில் புகைந்து கொண்டிருந்த சுருட்டு ஒரு பெரிய க்ளாஸில் மாலிபு. ஒரு பத்து ரவுண்டு அடித்தவன் போல் மிதப்பில் இருந்தான்.

ஹேய் நாரி. திஸ் ஈஸ் ராஜ்.

ராஜ்?

ராஜகோபால் என்று சொல்லி கைகொடுத்தான் ராஜ்.

தமிழா? ஐயங்காரா? என்று தடாலடியாக சொல்லிக் கொண்டே கை கொடுத்தான். இவனைவிட ஒரு ஐந்து வயது அதிகம் இருக்கும்.

நீங்க நாரி?

நாரியாவது. பூரியாவது. நரசிம்மன்-பா. இவங்க வாயில நுழையுமா? அதனால நாரி. அப்புறம் எத்தனை வருஷமா யூஎஸ்? க்ரீன் கார்ட் ஆச்சா? சிடிசனா?

ஹா இல்லை. இப்ப தான். முதல் வருஷம். நீங்க?

என்ன நீங்க வாங்க! கமான் மேன். நீ வா போன்னே சொல்லு. நான் இங்க சிடிசென். 10 வருஷம் ஆச்சு.

ஏய் க்ரிஸ் யூவர் இன்டியன் ஃபிரன்ட் இஸ் ஆன் கோக். ஹா ஹா நானும் வந்த புதுசுல அதுதான். இப்ப பார்த்தியா? ஊருக்கு தகுந்த மாதிரி மாறனும் பிரதர்.

ம். பரவாயில்லை என்றான் சங்கடமாய். ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு ஆண்கள் கழிப்பறையை நோக்கி நடந்தான்.

க்ரிஸ் லெட் மி ஹாவ் ஃபன் என்று சொல்லிக் கொண்டே க்ரிஸ் தடுப்பதற்கு முன்பாக ராஜகோபாலின் கோப்பையில் சட்டென்று ஒரு பொடியை போட்டு கலந்துவிட்டான்.

க்ரிஸ் மிகவும் தர்ம சங்கடமான நிலையில். வேண்டாம் நாரி. அவனுக்கு இந்த பழக்கம் இல்லை. எதுக்கு கெடுக்கனும்.

ஹேய் க்ரிஸ் என்ன டென்ஷனாகரே? கொலையா பண்ணிட்டேன். உன் இந்திய நண்பன் சோகமாக இருக்கிறான். இதை கொடு சொர்க்கத்திற்கே போய்விடுவான்.

இரண்டு நிமிடத்தில் திரும்பிய ராஜ் சூடாகிகொண்டிருந்த கோக் கோப்பையை சட்டென்று ஒரு மடக்கில் குடித்தவிட்டு வைத்தான்.
என்னாகப்போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் க்ரிஸ்.

ஒரு சில நிமிடங்களில் ராஜூக்கு தலைசுற்றியது. வாட் த ஹெல் யூ கைஸ் ஆடட் இன் மை கோக் என்று கேட்டான்.

க்ரிஸ் நாரி இருவரும் அமைதியாக அவனைப்பபார்த்தனர்.

டிரை திஸ் என்று தன் கையிலிருந்த மாலிபு கோப்பையை அவனிடம் நீட்டினான் நாரி.

க்ரிஸ் சற்றும் எதிர்பார்க்காத விதமாக அதை எடுத்து ஒரு மடக்கில் குடித்தான் ராஜ்.

டேக் ஈட் இஸி ராஜ். முதல் முறையாக குடிப்பவர்கள் பொறுமையாக குடிக்கவேண்டும் என்ற வியாக்யானம் செய்தான் நாரி.

டு ஹெல் வித் யூ என்றுவிட்டு க்ரிஸிடம் இருந்த ஹெனிக்கனையும் எடுத்து ஒரு மடக்கில் குடித்தான். வயிற்றுக்குள் எக்ஸோனோரா வண்டி சென்றது போல ஒரு குப்பை உணர்ச்சி. எழுந்து கழிப்பறைக்கு போக அவன் முயல்வதற்கு முன் குப் என்ற வாந்தி எடுத்தான். பல பேர் சேர்ந்து மடேர் மடேர் என்று அடிப்பது போல ஒரு உணர்வு. மயங்கி கீழே விழுந்தான்.

கிழக்கு மேற்கே செல்லும் விமானத்தில் அமர்ந்துவிட்டது. அங்கோ கிழுக்கே நோக்கி போனது ஒரு மேற்கு மயில்.

விவேகானந்தர் வழுக்கிவிட்டார். ஆஞ்சனேயர் அடிபணிந்துவிட்டார்.

leomohan
16-10-2006, 07:20 AM
13

காலையில் எழுந்து காபி கொடுப்பதற்காக சென்ற ராஜகோபாலின் அம்மாவிற்கு ஒருஇன்ப அதிர்ச்சி. எளிமையான காட்டன் சேலையில் பச்சை நிறத்தில் அதே நிறத்தில் ப்ளவுஸ்அணிந்து தலைக்கு சடை பிண்ணி பூ வைத்து பெரிய குங்குமம் இட்டு வெள்ளை மகாலட்சுமியாககாட்சியளித்தாள் சிலியா.

நிறைய கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் ஆங்கிலத்தில் என்ன பேசுவது என்றகுழப்பத்தில் பங்கஜம் மாமி குட் என்றார்.

நன்றி என்று தடாலடியாக தமிழில் பதில் சொன்னாள் சிலியா.

அவர் அதிர்ச்சியை காட்டுவதற்கு முன் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தாள் சிலியா.

நல்லா இரும்மா.

கொஞ்சம் இங்கே வந்து பாருங்க என்று கணவனை அழைத்தார்.

அவரும் வந்து பார்த்துவிட்டு யூ லக் வெரி நைஸ் என்றார்.

நன்றி மாமா என்று அவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி.

அடேய் இங்கே பாரேன். நன்றி மாமா-ன்னு சொல்றா முரளி. நீ சொல்லிக் கொடுத்தியா?

இல்லை மாமா. அவங்க இங்க ஆராய்ச்சி பண்ண வர்றாங்கன்னு முன்னாடியிலிருந்தே தமிழ்கத்துகிட்டு இருக்காங்க.

பரவாயில்லை. அமெரிக்கா காராள் என்ன வேணா பண்றாள். நம்ம பசங்க இதையெல்லாம் பாத்துகத்துக்கனும்.

அவள் பங்கஜ மாமியிடம் மாமி நான் துளசி என்றுவிட்டு தமிழ் தட்டுப்பாட்டால்முரளியை பார்த்து ஐ வான்ட் டு ப்ரே துளசி என்றாள்.

அவன் அதை தமிழிலில் மொழி பெயர்க்க பேஷா பண்ணட்டும். ஆனா அவளுக்கு துளசின்னாஎன்னன்னு தெரியுமோ?

முரளி சிலியாவைப் பார்த்து உங்களுக்கு துளசி எதுக்காக கும்பிடறாங்கன்னுதெரியுமா?


Yes. It symobolizes purity. Women pray this to demonstrate their loyalty
to their husband and pray for their husband's long life and well being.
Tamil women prefer to die when their husbands are alive. That's .
sugam-sugamangali.

Ha, ha. that's sumangali.

என்றான் முரளி.

'சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு" என்று டி. ராஜேந்தர் பாலா மூலம்சென்னை வானோலியில் நிலையத்திலிருந்து பாடினார்.

மன்னிக்கனும். ஆமாம். சுமங்கலி.

என்னமா பேசறா இந்தப் பொண்ணு என்று அசந்துவிட்டார்கள் பெரியவர்இருவரும்.

பிறகு சுடச்சுட இட்லி சாப்பிட்டுவிட்டு காமகோடி பள்ளிக்கு அவளை அழைத்துச்சென்றனர் நண்பர் மூவரும். நாராயணன்ஜி அவர்களுடைய சமஸ்கிருத வாத்தியார். அவருக்குஒரு கடிதம் கொடுத்திருந்தான் ராஜ். அதில் இவர்கள் இருவரும் ஒரு ஆராய்ச்சிக்காகதமிழ் நாடு வந்திருப்பதாகவும் தமிழ் சமஸ்கிருதம் இவை இரண்டு மொழிகளையும் விரைவாககற்க விரும்புகிறார்கள் என்றும் எழுதியிருந்தான். ஆளுக்கு 200 டாலர் மாதம்தருவதாகவும் எழுதியிருந்தான். அவருக்கு வயதாகியிருந்தாலும் வெள்ளைக்கார பெண்தம்மிடம் மொழி கற்க வந்தது அவருக்கு பெருமையாக இருந்தது. பணம் அவருக்கு பெரியவிஷயமாக படவில்லை. இருந்தாலும் வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

பிறகு மூன்று நண்பர்களும் அந்த சிறிய பள்ளியை சுற்றிக் காட்டினர். எங்கேஉட்கார்ந்தோம் எந்த வகுப்பில் எப்போது என்ன செய்தோம் என்று மீண்டும் மலரும்நினைவுகள்.

எங்கள் கூட்டத்தில் குருன்னு ஒருபையன்.நல்ல சிவந்த நிறம். கலியபெருமாள்அகரம் எனும் பக்கத்து கிராமத்திலருந்து வரும் மாணவன். நல்ல கறுப்பு. ஒரு நாள் மழைகாரணமாக பள்ளியில் நன்றாக இருட்டிவிட்டது. அதனால் விளக்கு எரியவிட்டிருந்தனர்.மின்சாரம் போனதால் அந்த விளக்கும் இல்லாமல் நன்றாக இருட்டிவிட்டது. உடனே குருகலியபெருமாள் நீ எங்கே இருக்கே? என்று இருட்டில் தேடுவது போல அவன் கறுப்பு என்றுகிண்டல் அடித்தான்.

அதை கேட்டதும் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

கிருஷ்ணன் சிலியா ரீட்டா இருவரையும் காட்டி நீங்கள் தான் நிஜமாக சிவப்பு.இப்போது குருவை உங்கள் முன் கொண்டு வந்து நாங்கள் அவனை தேடுவதுபோல நடிக்கவேண்டும்என்று கூறினான்
அனைவரும் மீண்டும் சிரித்து மகிழ்ந்தனர்.

முரளி நாம் செல்லியம்மன் கோவில் போவோமா? என்று கேட்டாள் சிலியா.

ஓ போகலாமே என்று வண்டியை எடுத்து நாப்பாளயத் தெருவை கடந்து அமைச்சார் கோவில்தெரு கடந்து மந்தக்கரை தாண்டி கமலா நகரில் நுழைந்து 5 நிமிடத்தில் செல்லியம்மன்கோவில் முன் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினான்.

செல்லியம்மனை முதலில் பார்ப்பவர்கள் பயந்துவிடுவார்கள். சிவப்பான ஆடை கையில்வேல் எங்கும் குங்குமம். ஆனால் அவளை உற்று பார்பவர்களுக்கு அவள் அன்பின்திருவுருமாக காட்சியளிப்பாள். நினைத்ததை கொடுக்கும் அட்சயப்பாத்திரம் அவள். பெரியகோவிலோ பெரிய சொத்தோ இல்லாத அவள் தான் விழுப்புரத்தை காக்கும் தெய்வம்.உள்ளூர் மக்களுக்கே கூட அவளின் மகிமை தெரியாது. ஆனால்கமலா நகர் வாசிகளுக்கு அவள் கூடவே இருந்த காக்கும் ஒரு காவல் தெய்வம். ஏழ்மையானதெய்வங்கள தமிழ் நாட்டில் அதிகம் உண்டு. பணக்கார தெய்வங்களை மட்டுமே வணங்க பலஇடங்கள் போய் காசு கொடுத்து கடவுள் ஆசியை பெற முயல்பவர்கள் ஒரு முறை இங்கு வந்துசெல்ல வேண்டும்.

ராஜகோபாலின் இஷ்ட தெய்வம் இந்த செல்லியம்மன். சிலியா ஒரு முறை கேட்டாள் உன்கனவில் இந்த அம்மன் அடிக்கடி வரும் என்கிறாயே ஒரு முறை வந்த நீ சிலியாவை மறந்துவிடு என்று சொன்னால் என்னை மறந்துவிடுவாயா?

கட்டயாமாக. என் அம்மா சொன்னால் அதற்கு மறு பேச்சே கிடையாது என்றான்.

இதை கேட்டதும் தொய்ந்து போய்விட்டாலும் இந்த முறை இந்தியா செல்லும் போதுஇந்த அம்மனின் ஆசியை பெற்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள்.

சிறிய கோவில் என்பதாலோ என்னவோ இந்துக்கள் மட்டும் என்ற போர்ட் இல்லை.

செருப்பை வண்டியில் விட்டுவிட்டு அங்கிருந்த ஒரு குழாயடியில் காலைகழுவிவிட்டு மெதுவாக உள்ளே சென்றாள். நண்பர்கள் மூவரும் ரீட்டாவும் அம்மனைதரிசித்துவிட்டு வந்துவிட்டார்கள்.

கும்பல்இல்லாததால் அம்மனை அருகில் சென்று நோக்கினாள். அவள் அழகில்லயித்துவிட்டால். தான் கண்ட தெய்வங்களிலேயே இவளே சிறந்தவள். ராஜின் தெய்வம். அவன்தாய். இன்றிலிருந்து நீ எனக்கும் தாய். எக்காரணத்தை கொண்டும் என் மேல் கோபம்வேண்டாம் அம்மா. நான் அடுத்த முறை வரும் போது கணவன் மனைவியாக ராஜூடன் வர ஆசி புரிஅம்மா. அவள் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வந்தது. அவள் ஏதோ அம்மனிடமிருந்துஉறுதியளித்தால் தான் போவேன் என்பது போல எதற்காகவோ காத்திருந்தாள்.

பல மணிநேரம் ஆனது போல இருந்தது. சட்டென்று நினைவுக்கு வந்தவள் முகத்தைதுடைத்துக் கொண்டு வெளியே வந்தாள். உண்டியலில் ஒரு 5000 ரூபாய் போட்டாள். அந்தகோவிலுக்கு வருட வருமானமே அவ்வளவு இருக்கலாம். அம்மன் அவளைப் பார்த்துபுன்னகைத்தாள்.

ஹேய் யூ ஆர் கெட்டிங் எமோஷனல் என்றான் ராஜூ. கிருஷ்ணன் கண்ணடித்தபடியேYou were talking to the Mother about your marriage? என்றான்.

மெல்லியதா சிரித்து வெட்கப்பட்டு இந்தக்காலத்தில் இந்திய பெண்களிடம்பார்க்கமுடியாத அந்த அபூர்வ முகபாவனை செய்துக் கொண்டே வண்டியில் ஏறினாள்.

"அள்ளி முடிச்ச கொண்டையிலே நீ என் மனதை சொருகிவிட்ட பொன்மயிலே" குப்புசாமிபாடினார்.

பெண்கள் புடவையில் எத்துனை அழகாக இருக்கிறார்கள். அதுவும் தமிழ் பெண்கள்குங்குமம் வைத்ததும் ஒரு தெய்வீக களை வந்துவிடுகிறது. பொய்யாக கூட யாரும்வெட்கப்படுவதில்லை இக்காலத்தில். பெண்மையாக இருந்தால் ஏதோ பட்டிக்காடு என்று யாரோதவறாக சொல்லிவிட்டார்கள் பெண்களுக்கு.

ஆண்கள் புடவை அணிந்தால் நன்றாக இருக்குமா? பெண்கள் ஏன் ஜூன்ஸ் அணியவேண்டும்.

ஆண்கள் நீளமாக முடிவைத்தால் பைத்தியக்காரர் போல் இருப்பர். பெண்கள் ஏன்முடியை குறைத்துக் கொள்கிறார்கள்?

மில்லெனியம் பிறந்த பின்னே மெல்லினங்கள் உதவாது என்ற பாடலுக்கு ஜோதிகாவாயசைத்தார்.

இந்திய சமுதாயத்தில் பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் வீக்கர் செக்ஸ்என்றால் அது பொய். அவர்கள் ஆண்களை பைத்தியம் அடிக்கும் அளவிற்கு சக்திபடைத்தவர்கள். பெண்கள் தங்கள் உணர்வுகளை கட்டுபடுத்த அறிந்தவர்கள். ஆண்கள்அவர்களிடத்தில் பகடைக்காய் ஆகிவிடுவதுண்டு.

பேருந்தில் இடிப்படுவது வேலைசெய்யும் இடத்தில் ஆண்களால் தொல்லை கற்பழிப்புஎன்று பெண்கள் பல சோதனைகளை சந்தித்தாலும் இது ஆண் வர்க்கத்தின் இயலாமயையேகாட்டுகிறது. ஆண் தன் உந்துதல்களை கட்டுபடுத்தவில்லையென்றால் அவன் தானும்பிரச்சனைக்குள்ளாகி மற்றவர்களையும் தொந்திரவு செய்கிறான்.

ஒரு மேற்கத்திய பெண் இந்திய பெண்ணாக தமிழ் பெண்ணாக மாறிக்கொண்டிருந்தாள்.

மூன்று ஆண்களும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர்.

பிறகு பெருமாள் கோவில் செல்லவேண்டும் என்றாள்.

இந்துக்கள் மட்டும் என்று போர்டு கண்ணில் படவே சோகமானாள். ராஜூ அவள் காதில் ஏதோகிசுகிசுக்கவே கண்களில் ஒளியுடன் சரி என்று தலையாட்டினாள்.

leomohan
16-10-2006, 07:21 AM
14

சுமார் பதினொரு மணி இருக்கும். மண்டை கனத்து எழுந்தவனுக்கு எதிரே உட்கார்ந்து புகைபிடிக்கும் நரசிம்மன் கண்ணுக்குப்பட்டான்.

ஹேய் இது நோ ஸ்மோகிங் வீடு என்றான் காட்டமாக.

ச்சில் அவுட் மேன். இது என்ன பேச்சுலர் வீடா இல்லை கோவிலா? ஆமா மயக்கமாய் விழுந்த உன்னை யார் இங்கே அழைச்சிகிட்டு வந்ததுன்னு நினைக்கிறே? நான் தான் தெரியுமா? என்றான் நாரி.

நன்றி நாரி. எனக்கு உடம்பு சரியில்லை.

இதை குடி என்ற மாலிபுவை எடுத்து நீட்டினான்.

ஹேய் என்ன இது? என் வீட்டில் நீ புகைப்பிடிப்பதே தப்பு. இதில் குடிக்க வேற செய்யறியா?

இங்க பாரு ராஜ் நான் உன் வீட்ல தங்க வரலை. நீ அநாவசியமா ரூல் போடாதே. கண்டதை குடிச்சிட்டு வாந்தி எடுத்தே. இதை குடிச்சா சரியாயிடும்.

அவன் பேச்சை சிரமேற்று மாலிபுவை குடித்தான்.

சரி நீ சிலியா ரூமில் தூங்கு என்றான்.

சிலியாவா யாரும்மா அந்த பட்சி. பலே கில்லாடிப்பா நீ என்றான் நக்கலாக.

சிலியா என் ரூம்மேட். ஊர்ல இல்லை.

அவன் காலணியுடன் இருப்பதையும் நாரியும் காலணியுடன் இருப்பதையும் பார்த்து எதிரில் இல்லாத தாயை மேலே நோக்கி மன்னிப்புக் கேட்டான்.

அடித்து போட்டது போல தூங்கியவன் எழுந்து மணி பார்த்போது 10. தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு நாள் விடுப்பு சொன்னான். அலுவலக வரவேற்பாளர் இவனுக்கு உடம்பு சரியில்லை என்று கேட்டதும் பயந்துவிட்டாள். என்னாச்சு ராஜ்?

ஒன்றுமில்லை என்று விட்டு குளிக்கச் சென்றான்.

தொண்டையில் ஒரே எரிச்சல். கண்கள் அழுத்தியது. நேராக குளிர்சாதனப் பெட்டியை திறந்து ரொட்டி எடுத்து சுடவைத்து படேல் மார்கெட் ரெடி மேட் த்தாலை சுட வைத்து மளமளவென்று தின்று முடித்தான்.

குளித்தும் கும்பிடும் பழக்கம் இன்று விட்டுப்போனது.

அதை உணர்ந்த அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஏதோ நினைத்துக் கொண்டு மீண்டும் உறங்கிவிட்டான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டதும் எழுந்து சென்று கதவை திறந்தான். நாரி கையில் சில பொட்டலங்களுடன் நின்றிருந்தான்.

க்ரிஸைவிட நாரியை பார்த்தது ஆறுதலாக இருந்தது. தமிழில் யாரிடமாவது பேசலாம் இல்லையா?

வாங்க நாரி.

வா சொல்லு.

சரி வா.

எப்படி இருக்கே.

பரவாயில்லை. தொண்டை ஒரே எரிச்சலா இருக்கு.

ஒரு விஷயம் சொல்லு. நீ சிலியாவை காதலிக்கிறாயா?

எப்படி சொல்ற?

ஒரு ராமாயண புத்தகத்தில உன் போட்ல ராஜ் இஸ் மை ராம்-னு எழுதியிருக்கா சிலியா.

ஏய் நீ ஏன் அவள் பொருட்களை எடுத்தே?

ச்சில் மேன். சொல்லு?

அவதான என்னை காதலிக்கிறா!

நீ காதலிக்கலை?

இல்லை.

நிஜமா?

சரி சரி. நானும் தான். தன் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

நாரியிடம் அவன் வலுவிழுந்தான்.

இரண்டு கோப்பையில் மாலிபுவை நிரப்பினான். ஒன்றை எடுத்து ராஜிடம் கொடுத்தான். பூனைப் போல் வாங்கிக் கொண்டான்.

அவனுடைய பலவீனங்கள் அவன் பலத்தை உடைத்துக் கொண்டிருந்தன. தேக்கி வைத்த வெள்ளம் போல உடைய காத்திருந்தது அவன் உணர்ச்சிகள். அவமானம் தப்பு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி அவனை சரிபாதியா ஆக்கியிருந்தது.

சிகாரை எடுத்து பற்ற வைத்தான் நாரி. அவனால் தடுக்க முடியவில்லை. விவேகானந்தர் வெளியேறினார். ஆஞ்சனேயர் லங்கைக்கு சென்று விட்டார்.

இன்னொரு சிகாரை பற்ற வைத்து ராஜிடம் நீட்டினான்.

வேண்டாம் என்றான்.

ஓகே என்றுவிட்டு வெறுப்பேற்றுவது போல இரண்டு சிகாரையும் மாற்றி மாற்றி புகைத்தான் நாரி.

ஹே கம் ஆன் என்று விட்டு ஒன்றை மீண்டும் நீட்டினான்.

அவனுடைய வேலி மறைந்தது. எடுத்து பயத்துடன் மெதுவாக புகைத்தான். அந்த புகை அவன் உள்ளீரலில் சென்று இரத்தில் கலந்து மூளையை தொட்டது. லேசானான்.

மனிதன் தன் உணர்வை எப்போது இழக்கிறானோ அப்போது தான் அவன் தவறு செய்கிறான். அதனால் தான் பல மதங்கள் புகைப்பதையும் குடிப்பதையும் பெண்களின் நடனங்கள் பார்ப்பதையும் தடை செய்கின்றன. சில மதங்கள் இசை கேட்பதையே தடைசெய்கின்றன். இசையில் ஒரு ஆளை மயக்கும் சக்தி இருக்கிறது. மதங்கள் மனிதனின் வாழ்வை சீர்படுத்தவே உதவுகின்றன. எந்த மதமாக இருந்தால் எவன் ஒருவன் மதத்தின் கோட்பாடுகளை ஏற்று நடக்கிறானோ அவன் பெரும்பாலும் நல்ல மனிதனாகவே வாழ்கிறான். ஆனால் மதங்களின் கூற்றுகளை தவறாக பிரசங்கம் செய்து சில மனிதர்கள் அதனால் லாபம் அடைகின்றனர்.

லெட்ஸ் கோ என்றான் நாரி.

வேர்?

வா சொல்றேன் என்று அவனை இழுத்துக் கொண்டு காருக்கு சென்றான். 15 நிமிடங்களில் கோ பேபி கோ என்ற விளக்குகளின் வெள்ளப்பெருக்கான ஒரு இடத்திற்கு அழைத்து வந்தான்.

உள்ளே சென்றால் ஒரே கூட்டம். ஆண்களும் பெண்களும் அரை நிர்வாணமாய். உடை என்ற வார்த்தை இங்கே கெட்ட வார்த்தை.

வேண்டாம் நாரி. இங்கேல்லாம் நான் வந்ததில்லை.

ஹேய். நீ எந்த பெண்னோடும் உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம். சும்மா வா. உட்கார்ந்து பேசு. கை போடு. முத்தம் கொடு. அப்புறம் டான்ஸ் ஆடு. உன் கற்ப்பு ஒன்னும் கெட்டுப் போயிடாது.

நொடிகளில் அங்கிருந்த கூட்டத்தில் கலந்து விட்டான் நாரி. ஒன்றும் புரியாமல் ராஜ் ஒரு மூலையில் சென்று அமர்ந்தான். விடுதி பட்டியலை எடுத்து பார்த்தவனுக்கு இதுவரை கேள்விப்படாத உருப்படியாக இருந்தது அனைத்தும்.

ப்ளீஸ் பிரிங் மீ எனிதிங் வெஜிடேரியன் என்றான்.

ஓன்லி பிரெஞ்ச் ஃபிரைஸ் என்றாள் அந்த மெக்ஸிகன் பெண்மணி.

ஒகே.

எனிதிங் டூ டிரிங்.

இந்த கேள்வி வரும் என்று பயந்து கொண்டிருந்தான்.

'இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே.உள்ளம் பாமாலை பாடுதே- வேண்டாத நேரத்தில் இந்த பாலா".

எனிதிங் லைட்?

பீயர்?

ஓகே என்றான்.

சிறிய கால்சட்டையும் அதைவிட சிறிய மேல்சட்டையும் அணிந்த ஒரு பெண் வந்து அவனருகில் அமர்ந்தாள்.

வில் யூ பை மி அ டிரிங்?

அவன் சங்கடமாக ஓகே டூ பீயர்ஸ் என்றான்.

அவனருகில் அமர்ந்த அந்த பெண். டாக் டூ மி என்றாள் ஒரு காமப்பார்வையுடன்.

ப்ரியா சிலியா காயத்ரி என்று அனைவரும் கண் முன் வந்து சென்றனர்.

டேய். அதிர்ஷ்டக்காரன்டா நீ. இன்னிக்கு ஹிந்தி க்ளாஸில் ப்ரியா உன் பக்கத்தில உட்கார்ந்திருந்தாளாமே! - கிருஷ்ணன்

நான் சொல்றதை நீ என் இடத்தில இருந்து யோசிச்சிப்பார்த்தா உனக்கு தெரியும் - அப்பா.

என் இடுப்பு ஓரமா இருக்குதய்யா காரமா நண்டு நீயும் புடிச்சிட்டா எடுத்துகய்யா தாராளமா என்று த்ரிஷா ஆங்கிலத்தில் பாடினாள் எதிரே.

அவள் நாற்காலியை இன்னும் அருகாமையில் இழுத்தாள். அவன் கையை எடுத்து அவள் தொடை மீது வைத்துக் கொண்டாள். அவன் வழுக்கினான். அவள் இவனை அணைத்தாள் முத்தமிட்டாள். அவனுடைய ஆண்மையின் சின்னங்களுடன் விளையாடினாள்.
ராஜ் ராபர்டாகி கொண்டிருந்தான்.

மதி
18-10-2006, 08:51 PM
அப்பாடா..கஷ்டப்பட்டு ஒரே மூச்சில படிச்சு முடிச்சிட்டேன்...! விறுவிறுப்பா போகுது.....இனி முடிவை நோக்கி....

leomohan
19-10-2006, 11:57 AM
15

வெங்கடாச்சாரி பொறுமையாக ராஜூவிடம் சொன்னார். அம்பி உனக்கு தெரியாதா? அவா வேற மதம். நம்ம கோவிலோட புனிதத்துவம் கெட்டுவிடக்கூடாதில்லையா? புடவை கட்டினா நம்ம ஊரு பொண்ணாயிடுமா?

சிலியா அவர் காலில் விழுந்தாள். எழுந்து கைகூப்பிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

.

ஆர்தா விஷண்ணா ஸிதிலாஸச பீதா
கோரேஷூ ச வ்யாதிஷ வர்த்தமாநா
ஸங்கீர்தய நாராயண ஸப்த மாத்ரம்
விமுக்த துகா ஸூகினோ பவந்து


என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.

ராஜூ கிருஷ்ணணைப்பார்த்து பாத்தியா நம்ம டிரெயினிங்கை என்றான். ஒரு மாசத்திலே என்னஅருமையாக மனப்பாடம் செய்திட்டாடா!

ராஜ்-க்கா என்னவேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்காடா இவ. நம்ம ஊர்ல இந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கோவில் வைச்சி கும்பிடுவேன்டா நான் என்றான்.

வெங்கடாச்சாரி சிலிர்த்துவிட்டார். கோவிலின் தர்மகர்த்தாவாக அவர் குடும்பம் பரம்பரையாக அந்த கோவிலை பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மா போதும். உன்னை உள்ளே விடாட்டா அந்த பெருமாள் என்னை மன்னிக்க மாட்டார். உள்ளே போய் தரிசனம் செஞ்சிட்டு வா என்று வழிவிட்டார்.

அடுத்த மூன்று நாட்கள் கோவிலில் வருபவர்களுக்கெல்லாம் பிரசாதத்துடன் சிலியாவின் புராணம் தான்.

தன் புத்தகத்தை எடுத்து நவராத்திரியில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று குறித்துக் கொண்டாள். விழுப்புரத்தின் சிறப்பே லட்சதீபம் தான். அதுவும் கோடையில் வருவதால் அனைவருக்கும் லட்சதீபம் ஒரு மறக்கமுடியாத அனுபவம் தான். தெருவோரம் கடைகள். திருவிழா.ஆஞ்சனேயர் கோவில் குளம் முழுக்க விளக்குகள்.

கணேச சதுர்த்தி அன்று என்ன செய்யவேண்டும் என்று விவரமாக குறித்துக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்த ராஜ்-க்கு தான் ஏதோ தப்பு செய்துவிட்டோம் என்று தோன்றியது. உடனே வீட்டிற்கு போன் செய்தான்.

போனை எடுத்த அம்மா அவன் குரலில் இருக்கும் தொணியை புரிந்துக் கொண்டு என்னப்பா உடம்பு சரியில்லையா? என்றாள் வாஞ்சையுடனம். தாயுக்கும் பிள்ளைக்கும் ஒரு டெலிபதி.

இல்லைம்மா. ரொம்ப ராத்திரி. அதனால தூக்கம் வருது அவ்வளவுதான். உங்களையெல்லாம் பார்க்கனும் போல இருக்கும்மா? என்றான். இன்னும் பேசினால் அழுதுவிடுவான் போலிருந்தது.

வாயேன்பா. எங்களுக்கு நீ இல்லாம ஏதோ மாதிரிதான் இருக்கு. என்ன சம்பாதிச்சி என்ன ப்ரயோஜனம். கூப்பிட்டா வர்ற தூரத்திலையா நீ வேலை செய்யறே?

அம்மா அந்த வெள்ளைக்கார பெண்கள் எப்படி இருக்காங்க?

அவனுக்கு அப்பாவிடம் பேசத் தோணவில்லை.

பேசறியா? இதோ சிந்துவை கூப்பிடறேன். மீண்டும் டெலிபதி.

என்ன சிந்துவா?

ஆமான்டா. நான் அவளுக்கு சிந்துன்னு பேர் வெச்சிட்டேன். என்ன பொண்ணுடா அவ. நீ சரின்னு சொன்னின்னா உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுவேன். உங்கப்பாதான் ஒத்துக்க மாட்டார். என்னம்மா சமையல் பண்றா? கூட்டு செய்றாடா? ஸ்லேகாம் எல்லாம் ஒன்னுவிடாம சொல்றாடா. இரு கூப்பிடறேன்.

பாதி கிணறு தாண்டிவிட்டோம் என்று நினைத்தான்.

கார்டலஸ் போனை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடினாள் பங்கஜ மாமி.

சிலியா என்று சொன்னவனுக்கு நாதழுத்துவிட்டது. அழுதுவிட்டான்.

பேபி. வாட் ஹாப்பன்ட்? ஏன் அழுவறே ராஜ் என்றாள் அவன் அம்மா கேட்காதவாறு.

நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். நான் எப்படி உயிரோட இருக்கேன்னு உனக்கு தெரியாது என்றான்.

லவ், உனக்காக தான் நான் இங்கே இருக்கேன். இன்னும் இரண்டு மாசத்தில உன் கிட்ட இருப்பேன். உங்க அப்பா அம்மா மிகவும் நல்லவர்கள். அவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். அவர்களுடன் இருப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சனையே இல்லை. உனக்கு ஒன்னு தெரியுமா? நான் தினமும் செல்லியம்மனை தரிசனம் செய்யறேன். நீ எனக்கு வேணும்னு மனம் உருகி கேட்கறேன் தெரியுமா?

என்ன சொல்வது என்று தெரியாமல் அழுதான் ராஜ். அவன் குற்ற உணர்ச்சி அவனை கொன்று போட்டுவிட்டது.

சீக்கிரம் வா. உடனே வா.

சரி சரி. என்ன உனக்கு என் மேலே இவ்வளவு காதல் இன்னிக்கு?

நீ வா சிலியா. வந்து என்னை பாத்துக்க. நான் தப்பா ஏதும் செஞ்சிடக்கூடாது. உன் மடியில படுத்து அழனும் போலிருக்கு.

ஹேய் என்னப்பா. ராஜ் நீ ஏன் இப்படி பேசறே. இன்னும் கொஞ்ச நாள் பொறு. ஆமா நீ அப்பாகிட்டே பேசினாயா?

இல்லை என்று சொன்னபோது தான் அவன் அப்பாவிடம் பேச மறந்ததையே நினைத்தான். கையால் மேசை மீது தட்டினான்.

மாமா உங்க பையன் என்றால் மழலை தமிழிலில்.

வர்றேன் சிந்து என்று அவன் அப்பா சொன்னது காதில் விழுந்தது.

அப்பா எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன் பா. கண்ணுக்கு லேசர் சர்ஜரி செஞ்சிகிட்டேன். இப்ப கண்ணாடி இல்லாமலே நான் படிக்கிறேன். பட் யூ நோ வி ஓல்ட் பீப்பிள் ஹாவ் ராங் ஃபிலாஸஃபிஸ். நான் வெள்ளைக்கார பொண்ணங்க எல்லாமே தப்புன்னு நினைச்சேன். நீ அனுப்பிச்சியே சிலியா பொண்ணு என்ன தங்கமான பொண்ணு தெரியுமா? நீ பார்த்தின்னா உனக்கு புடிச்சிடும். ஐ டோன்ட் ஹாவ் எனி அப்ஜக்ஷன்ஸ். இப்ப இருக்கிற ஐயங்கார் பொண்ணுங்களை விட இந்த பொண்ணு எவ்வளவோ மேல். அவள் போட்டோ அனுப்பட்டுமா என்று கேட்டார் அப்பாவியாக.

முழு கிணறும் தாண்டிவிட்டாயடி பெண்ணே!

அப்பா அதெல்லாம் அப்புறம் பேசலாம்பா. நீங்க உடம்பை பார்த்துக்கோங்க என்று விட்டு போனை துண்டித்தான்.

காலணிகளை கழற்றிவிட்டு நடந்த நிகழ்ச்சிகளை யோசித்தான். பாட்டிலை எடுத்து ஒரு பெக் ஊற்றிக் கொண்டான். மார்ல்பரோ அவன் கையில். குற்ற உணர்ச்சியை தவிர்க பலர் குற்றங்கள் செய்து கொண்டே போவர்.அது ஒரு புதை மணல் போல. எழ முயற்சி செய்யாவிட்டால் உள்ளே இழுத்துக் கொண்டே போய்விடும்.

'மோகம் எனும் மாயப் பேயை கொன்று போடவேண்டும்" என்று யேசுதாஸ் சொன்னார். ஆனால் அந்த புகை மண்டலத்தில் அவருடைய குரல் கரைந்து போனது.

அழுது அழுது அவன் கண்கள் சிவந்திருந்தது. அரைமணியில் 5 சிகரெட் புகைத்திருந்தான்.

அலமாரி தெய்வங்கள் பல நாட்களாய் காற்று படாமல் உள்ளே மூச்சடைத்து போயிருந்தனர். ஏற்றாத ஊதுவத்தி ஏற்ற காத்திருக்கும் விளக்குகள் புகை படிந்து போன நோ ஸ்மோகிங் போர்ட். நரசிம்மர் இந்த அவதாரத்தில் அசுரனை அழிக்கவில்லை. இந்த அழகிய அசுரன் அத்து மீற ஆசைப்பட்டுவிட்டான்.

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே!
என்று நந்தகுமாரனுக்கு கமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

leomohan
19-10-2006, 12:03 PM
16

இன்னொரு சனிக்கிழமை. பெருமாள் கோவிலில் கதாகாலட்சேபம் கேட்க ராஜகோபாலின் அப்பாவும் அம்மாவும் சென்றிருந்தார்கள். சிந்து வீட்டில் இல்லை. அதனால் போகவில்லை.

ராஜூ சிந்து ரீட்டா கிருஷ்ணன் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

வாலியை பின்னால் நின்று ராமன் கொன்றது சரியா என்ற சிந்துவின் கேள்விக்கு ராஜூ பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

சற்றே ஆர்வம் இழந்துவிட்ட ரீட்டா கிருஷ்ணன் நீங்க என் ரூமுக்கு வாங்க நான் ஒரு பேட்டி எடுக்கறேன் உங்களை என்று அவனை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.

வாலி தன் முன் நின்று யார் கொன்றாலும் எதிரியின் பலத்தில் பாதியை தானே பெறுவதாக வரம் பெற்றிருந்தான். அதனால் அவனை முன் நின்று கொல்வது அசாத்தியமான காரியம்.

ராமனுக்குமா?

ஆம்.

ராமன் கடவுள் இல்லையா?

கடவுள் தான். ஆனால் அவர் ஏற்றிருப்பது ஒரு மனித அவதாரம். மனிதனுடைய வரம்புக்கு மீறி அவர் ஏதுவும் செய்யவில்லை.

விழுப்புரத்தில் தான் ராமர் வில்லெடுத்தார் என்று சொல்கிறார்களே?

ஆம். இது வில்லு புரம். ராமர் வில்லெடுத்த ஊர். இதன் அருகில் கண்டமானடி என்ற ஊர் இருக்கிறது. அங்கு தான் அவர் மானின் காலடியை கண்டார். பிறகு மானடிப்பட்டு என்ற ஒரு இடம். இப்போது மருகி மதகடிப்பட்டு என்றாகிவிட்டது. அங்கு தான் ராமரின் அம்பு பட்டு மாரீசனாக வந்த மான் அடிப்பட்டு விழுந்தது.

அப்படியா? சரி மேலே சொல்லுங்கள் என்றாள் சிந்து.

அதனால் வாலியை பின் நின்று கொல்வது அவசியமானது. ராமர் இதை சரியென்று சொல்லவில்லை. தண்டிக்கபடவேண்டியவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தான். எப்படி என்பது சூழ்நிலையை பொருத்திருக்கிறது.

சரி. சீதையை மட்டும் தீ குளிக்கச் சொன்னது சரியா?

இவர்கள் இவ்வாறாக பேசிக் கொண்டிருக்க மேலே ரீட்டா தன்னுடைய அழகை எத்தனை தாராளமாக காட்ட முடியுமா அத்தனை தாராளமாக காட்டிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய பேச்சும் நடத்தையும் கிருஷ்ணணை கலங்கடித்துக் கொண்டிருந்தது.

சற்றும் எதிர்பாராத விதத்தில் அவனை கட்டியணைத்தாள். அவனுடைய ஆடைகளை களைந்தாள். அவளும் பிறந்தமேனியானாள். மேற்கும் கிழக்கும் சங்கமித்தது.

ராமனும் தானே காட்டில் தனியாக இருந்தார். அவருடைய கற்ப்பைப்பற்றி யாரும் கேட்கவில்லையா? இது ஒரு ஆணாதிக்க கதையாகிவிட்டதே?

இல்லை சிந்து. அவள் அப்படித்தான் எல்லோரையும் கூப்பிட உத்திரவு இட்டிருந்தாள்.

இல்லை சிந்து. இந்தியாவில் பெண்கள் அடிமையாக இருப்பதாக ஒரு தவறான செய்தியை மேற்கத்திய நிருபர்களும் பத்திரிக்கையும் பரப்புகின்றன்.

இப்போது என் அம்மா கூப்பிட்டால் போதும் ஓடி போய் அவர் முன் நிற்பேன். என் மனைவியை கேட்காமல் நான் ஒரு காரியம் கூட செய்ததில்லை.

Woman's success is when she can make a man submissive to her willfully. When a man submits himself willfully either to his wife, mother or sister, he becomes that woman's slave. However, when a woman wants to get things by law or assumes a fundamental right, conflict occurs. Nothing has been achieved so far by reservation policies floated by government, special seats for ladies in the buses and trains, special quota for women in the government jobs.
India had Indira. Even Tamil nadu has a woman Chief Minister. All our neighboring countries which were once part of Greater India has, had or have women head of states. Can you say once such instance in the US?
Women in the US are struggling for their rights.
But here throughout centuries woman have dominated the proceedings.The rivers are in the name of women. We call our country as motherland.
Most of the Indians become speechless in front of their mothers or wives because of the love and affection and not because any law written on the white papers.

Its amazing என்றாள் சிந்து. நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் நாட்டில் இருப்பது பொய்யான ஒரு சமத்துவம். சரி நீங்கள் சொல்லுங்கள் ஏன் ராமர் தீக்குளிக்கவில்லை.

இதற்கு பல காரணங்கள் சொல்லலாம்.

ஒன்று ராமரை யாரும் சந்தேகப்படவில்லை.

இரண்டு இயற்கை ரீதியாக ஒரு பெண் செய்த தவறை கண்டுபிடிக்க இயலும் என்பதாலும் இருக்கலாம்.

மூன்றாவதாக ராமர் காட்டில் இருந்தாலும் அவர் தன்னையே காப்பாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தவர். ஆனால் சீதா இருந்ததோ ராவணன் என்று ராட்சஸனிடம்.

நான்காவது இது தான் நான் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். பொதுவாக ஒரு சமுதாயத்தை தினமும் சந்திக்க வேண்டியவள் ஒரு பெண்தான். அவள் தினமும் வெளியே செல்லும் போதோ இல்லை விழாக்களில் கலந்துக் கொள்ளும் போதோ மக்களை சந்திக்கிறாள். அவர்கள் முன் அவள் புனிதமானவள் என்று காட்டவே ராமர் அவளை தீக்குளிக்க சொல்லியிருக்க வேண்டும்.

எங்கள் வழக்கத்தில் வளைகாப்பு என்று ஒன்று செய்வார்கள். இது கணவன் வீட்டார் நடத்தும் ஒரு விழா. பெண் கற்பிணியாக இருக்கும் 7வது மாதம் இதை செய்வார்கள். கணவன் தன் குடும்பத்துடன் அனைவரையும் அழைத்து செய்யும் விழா. மக்களே, என் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை என்னுடையதுதான். எனக்கும் என் மனைவிக்கும் இதில் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உலகெங்கும் நான் தெரிவிக்கிறேன் - என்பதுதான். அவளுடைய கற்ப்பில் சந்தேகம் இருந்தால் இந்த விழா நடக்கவே நடக்காது. ஏனென்றால் அவள் கெட்ட பெயர் பெறப்போவதும் சமுதாயத்தில் இருக்கும் மற்ற பெண்களால் தான். ஆண் அவளை தள்ளி வைத்துவிட்டு வேறு வேலை பார்க்க சென்றுவிடுவான்.

ராஜூ நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி இத்தனை விஷயங்களை சேகரித்து வைத்திருக்கிறீர்கள்?

ஹா நான் சொல்வது வெறும் பத்து சதவிகிதம் தான். ராஜகோபாலை கேட்டால் 4 மணி நேரம் பேசுவான்.

ராஜூ நீங்கள் இன்னொரு விஷயம் தெரிந்துக் கொள்ளுங்கள். ராமர் பிறந்தது விழுப்புரத்தில் தான் என்றாள்.

வாட்?

ஆம். ராஜ் தான் என் ராமன் என்றாள் கண்ணடித்தபடியே.

அங்கே இரு உடல்கள் கலந்து பிரிந்திருந்தது. இவர்கள் பேச்சு சத்தம் நின்றது கேட்டதும் இருவரும் அவசரமாக ஆடை அணிந்து முகம் சரி செய்து கொண்டு கீழே இறங்கி வந்தனர்.

ராஜூவுக்கும் சிந்துவுக்கும் அவர்கள் வந்த கோலத்தை பார்த்ததுமே தெரிந்துவிட்டது. ஏதோ தப்பு நடந்திருக்கிறது.

இதைப்பற்றி யாரும் பேசவிரும்பவில்லை. அவர்கள் விடைபெற்று சென்றனர்.

சாந்தி தியேட்டர் அருகே வண்டியை நிறுத்திவிட்டு ராஜூ கிருஷ்ணா என்னடா பண்ணே? என்று கேட்டான்.

தப்பு பண்ணிட்டேன்டா. சுருதிக்கு துரோகம் பண்ணிட்டேன்டா! என்றான் குற்ற உணர்ச்சியுடன். அவன் கண்கள் கலங்கியிருந்தது.

டேய் ராஜகோபால் கொன்னுடுவான்டா நம்பளை. நம்மை நம்பித்தானே இரண்டு பொண்ணுங்களையும் அனுப்பியருக்கான்டா அவன். என்ன காரியம்டா செஞ்சிட்டே?

இல்லைடா. அவள் கட்டாயப்படுத்தி பண்ணாடா!

டேய் அவள் அமெரிக்காடா. உனக்கு எங்க போச்சு புத்தி. உனக்கு நிச்சியதார்த்தம் ஆயிடுத்து தெரியுமா? சுருதி இப்படி செஞ்சா நீ ஒத்துப்பியா?

இல்லைடா?

என்ன இல்லைடா? உனக்கு ஒரு ரூல் சுருதிக்கு ஒரு ரூலா?

என்னை மன்னிச்சிடுடா.

டேய் நான் மன்னிச்சி என்ன பிரயோஜனம். சரி விடு இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம். இனிமே ஒன்னும் வம்பு பண்ணாதே!

சரி என்று வண்டியின் பின் அமர்ந்தான்.

leomohan
19-10-2006, 12:07 PM
17



What the hell you were doing Rita?

I slept with him?

Whaaaat?

Yes.

Have you gone crazy? Didn't I tell you that Raj took several assurances before sending us here?

Yes.

Then how can you do this to me?

I want to carry an Indian's baby?

What the hell are you talking? Do you know Krish is already engaged to Shruthi?

Do you want to spoil their lives?

No baby, I don't want to marry Krish. I just want his baby.

Have you gone mad Rita? How can this be done?

Honey, you leave this to me. I love Krish. But I will not spoil his life. I just want his baby. That's all. Now you don't go wild. Go to sleep.

சிந்து குறுகிப் போனாள். அவள் ரீட்டாவை அழைத்து வந்ததற்காக வெட்கப்பட்டாள். ராஜிடம் என்ன சொல்வது என்று எண்ணி திணறினாள். இப்போது அவளுக்கு அழவேண்டும் என்று தோன்றியது. எப்படியாவது இந்த மாதம் தமிழ் சமஸ்கிருத பாடங்களை சீக்கிரமாக முடித்துவிட்டு கிளம்பவேண்டும் என்று முடிவு செய்தாள்.

leomohan
19-10-2006, 12:10 PM
18

என்னம்மா 6 மாசம் இருப்பேன்னு சொல்லிட்டு சீக்கிரமே போறே என்றாள் பங்கஜ மாமி. அவளுக்கு வீட்டின் மகாலட்சுமியே போது போல ஒரு நினைப்பு.

அவன் அப்பாவும் மிகவும் வருத்தப்பட்டார். இன்னும் கொஞ்சம் நாள் இருக்கலாமே என்றார். நிரந்தரமாக வீட்டில் மருமகளாக வைத்துக் கொள்ள அவருக்கும் ஆசைதான்.

ராஜகோபாலுக்கு வேண்டிய தின்பண்டங்கள் செய்திருந்தார் மாமி.
போகும் போது பூஜையறைக்கு சென்று நமஸ்கரித்தாள் சிந்து. மாமா மாமியின் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.

நான் இங்கேயே இருக்க ஆசைபடறேன் மாமி என்றாள் நெகிழ்ச்சியுடன்.

ஆமான்டி செல்லம். நீ அமெரிக்கா போய் என் பையனைப் பாரு. உனக்கு கட்டாயம் பிடிக்கும். அவன் ஒரு மாணிக்கம். அவனுக்கு உன்னை பிடிச்சிட்டா கல்யாணம் உடனே. யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லை. மாமாவே ஓகே சொல்லிட்டாரு என்றாள் உணர்ச்சி பெருக்கில்.

மாமி ராஜகோபால் எப்படி இருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்க தயார். எனக்கு இப்படிப்பட்ட அம்மா அப்பா கிடைக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்யத்தயார். நான் இங்கே இருக்கனும் அதான் என் ஆசை.

கவலைப்படாதே கொழந்தே! செல்லியம்மனை வேண்டிக்கிட்டே இல்லையா அவ பாத்துப்பா. அவ யார் எது கேட்டாலும் கொடுப்பா.

முரளி குவாலிஸ் எடுத்து வந்திருந்தான். வண்டி சென்னை நோக்கி பிரயாணம் ஆனது. யாரும் பேசவில்லை. ஒரு இறுக்கம் வண்டியில்.

அவர்கள் ஊருக்கு போன பிறகு கிருஷ்ணன் சமாச்சாரத்தை முரளிக்கு சொல்லலாம் என்று விட்டுவிட்டான் ராஜூ.

முரளி 'ஏன் எல்லாம் அமைதியா இருக்கீங்க. ராஜகோபாலை கல்யாணம் பண்ணிகிட்டு சிந்து இங்க தானே வரப்போறா" என்றான் கலகலப்பாக.

நான் உங்க மூன்று பேரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். நீங்கள் அவசியம் நியூ ஜெர்ஸிக்கு வரனும் என்றாள் சிந்து.

கட்டாயம்.

விமானதளத்தில் கிருஷ்ணன் தன்னுடைய சிறிய போட்டோவை ரீட்டாவிடம் கொடுத்து நமக்கு பிறக்கப்போகும் மகனுக்கோ மகளுக்கோ தன் தந்தை யாரென்று தெரிந்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. அப்படி ஒரு கேள்வி வந்தால் இந்த போட்டோவை காட்டு என்று ஆங்கிலத்தில் சொன்னான். இருவரும் ஒருவரை ஒருவர் இறுக கட்டிக் கொண்டனர்.

முரளி புரியாமல் பார்த்தான்.

ராஜூ அப்புறம் சொல்றேன் என்று ஜாடை காட்டினான்.

மூன்று பேரிடமும் கட்டி அணைத்து விடைபெற்றாள் சிந்து.

சிறிய காகிதத்தில் அழகான குண்டு குண்டு எழுத்தில் 'இந்த தங்கையை மறக்க வேண்டாம். இந்த காகிதம் தான் நான் உங்களுக்கு கொடுத்துப் போகும் பரிசு. அதற்கு மேல் அளவற்று அன்பை தருகிறேன்" சிலியா என்று எழுதி அடித்து சிந்து என்று எழுதியிருந்தது.

முரளி அழுதேவிட்டான். அவளை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு உன் கல்யாணத்தை ஓஹோவென்று நடுத்துகிறோம் இந்த மூன்று சகோதரர்களும் என்றான்.

ராஜூ சிரித்துக் கொண்டே எங்கள் ஊரில் நிறைய வரதட்சணை தரவேண்டும் தெரியுமா? எத்தனை அதிகம் அண்ணண்மார்கள் உண்டோ அத்தனை நல்லது என்றான்.

கிருஷ்ணன் ஹாவ் அ சேஃப் ஜர்னி. வி ஆர் கோயிங் டூ மிஸ் யூ போத் என்றான்.

guna
30-10-2006, 04:11 AM
11 நாட்களாக, கதையில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை..
என்ன ஆச்சு மோகன்?
அடுத்த பதிப்பு எப்போ?

ஆவலுடன்,
குணா

meera
30-10-2006, 10:34 AM
மோகன்,
அடுத்த பதிவு எப்போது சீக்கிரம் தர முயன்றால் நல்லா இருக்கும்.

விரைவில் தொடருங்கள் நண்பரே!!

leomohan
30-10-2006, 10:34 AM
11 நாட்களாக, கதையில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை..
என்ன ஆச்சு மோகன்?
அடுத்த பதிப்பு எப்போ?

ஆவலுடன்,
குணா

அப்பா. யாராவது படிக்கிறாங்களான்னு பார்த்தேன். ரொம்ப நன்றி. இன்னிக்கே போட்டுடறேன்.

leomohan
30-10-2006, 10:43 AM
19
தான் வருவதை யாரும் ராஜகோபாலுக்கு சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள். திடீரென்று போய் அவனை அசத்தவேண்டும் என்று நினைத்தாள்.

விமானத்தில் அமர்ந்தவுடன் ரீட்டா ஏதோ எழுதினாள். சிந்து அதை வாங்கிபடித்தாள். பக்கங்களை புரட்டப்புரட்ட ஆவலானாள்.


I have not seen a temple as holy as Raj's house.

People here don't keep perishable things in their refrigerators. Often
their refrigerators are filled with only water bottles. They cook for the
day and finish the food the same day. Only they try to preserve their
perishable thoughts.

Average south Indian man loves his wife often after 40 years when she has lost her youth, glamour and sex appeal. This love for his wife lasts till his last breathe. This form of love is crazy. But imaginable.

I have seen Raj's parents go together wherever they go. They don't miss
each other at all on any occasion.

I have seen Raj's father bringing small sweets, jasmine flowers when he
goes out, for his wife. He ensures that she wears the flower and eats the
sweets in front of him. What an affectionate couple?

Raj's grandmother died on August 10th 1990. His grandfather died within
2 weeks of her death. Raj's father told that his father used to stare at his


wife's photo for hours together before he died of grief. They were
married for 60 years. And he was 88. What a fantastic love story this is?
Will my husband die within weeks of my death grieving for me?

I have seen from the families nearby that often men want to present their
wives as fools in front of visitors. They scold their women and mock their
women. But essentially it seems every major decision in their houses are
the women's final words.

First time in my life I saw a man shivering while having sex. Krishnan, this
sweet fellow I met didn't enjoy his sex. He was guilty. Because he was
engaged to a sweet girl called Shruthi. Can our men learn something from
this?

Krishnan talks a lot about Shruthi. He said he met her only for 20 minutes
before the engagement and they got engaged. He says they know more
about each other only after the engagement. Isn't it crazy?

Krish wants to know what will be the name of our baby. I asked him why
he wants to know that. He says I have taken a oath that my first baby will have my father's name or my mother's name. Technically this is my first baby. Will you name after my parents? He asked me innocently.

We decided to settle down for Ram or Lalitha. Indians are sentimental.
Emotional. But it seems the sentiments and emotions make this country
survive the impacts from other cultures.


India is a populous country. But it seems babies are not born here as an
alternative to Christmas turkeys. Every baby is born as a result of
passionate love between a man and a woman. Unlike us where baby
process is often considered irritable.

Today Raju showed me a small gold chain. He says it belongs to his
mother. His father had to sell it off because of short of cash. But he
retrieved it after he earned his first salary. What type of people they are?
How can such a small thing can become a focus of their lives?

Murali's wife Praveena is a wonderful lady. How its possible that
somebody has not declared their love for 16 years and still get married to
the person they loved? Praveena talks a lot. Murali says she used to be
the chatterbox in the school. But she never spoke a word with Murali
before her marriage. WoW!

I want to carry Krish's baby. I want to bring him up with the same
emotions as an Indian's. Is it possible? We teach to dial 911 to call police
if our parents beat us. But here in India I heard Raj's father used to whack
Raj with a leather belt during his childhood days. But Raj still loves his
father. How its possible?

We change men in our lives as our clothes. When I saw Raj's father has kept all of Raj's clothes, books and toys right from his first year, I was
appalled. We revolve around money. They revolve around love.

What if my son grows-up to be an American?

America has money. But no love. India has no money. But love is
everywhere.


I know I am pregnant.

I know its the small Krish inside.

God Am I crazy to think Krish's marriage should break-up and he should
marry me. No. I am sorry Shruthi. Krish is yours.

I slept with Krish for 3rd time. He is passionate with me now. After my
relationship with him I don't feel like having sex with anybody else in my
life again.

Will my son be with me forever? I want him to be. When I hold his hands
and teach him walking; when I hold his hand walking as a faint old lady
with him!

Today Krish gave me his photograph before we left. He told me every
baby has a right to know his father. If our son ever asks for his dad, tell
him that its me.

Few minutes back I asked him whether he told about our relationship to
Shruthi. To my surprise, he said yes. Another thing he told me astonished
me. He told me that it was Shruthi who asked him to give that
photograph to me. Hats off Shruthi.

ரீடா என்னை மன்னித்துவிடு. உன்னுடைய காதலும் என்னுடையது போல் புனிதமானது தான். நீ காமத்தில் செய்த களியாட்டம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது தான் புரிகிறது.

இல்லை சிலியா. நீ நினைத்ததில் தப்பே இல்லை. இது விளையாட்டாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் முதல் முறையாக என்னுடன் உடலுறுவு கொண்ட கிருஷ் என்ன சொன்னான் தெரியுமா? என்று கேட்டுவிட்டு சிரித்தாள்.

என்ன? என்று கேட்டாள் ஆவலுடன்.

என்னை மன்னித்துவிடு ரீட்டா என்றான். அப்போது தான் அவன் மேல் எனக்கு காதலே ஏற்பட்டது. ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உடலுறுவு கொண்ட பிறகு மன்னிப்பு கேட்பதை முதல் முறையாக கேள்விப்படுகிறேன். உடலுறுவில் பெண் மட்டுமே பாதிக்கப்படுகிறாள் என்று இந்தியர்கள் நினைக்கிறார்கள். அது மட்டுமல்ல திருமணத்திற்கு முன்பு உடலுறுவு என்பதை நினைத்துக் கூட பார்க்க பயப்படுகிறார்கள்.

ஆம் ரீட்டா. இந்த இந்தியப் பயணம் என்னைப் பொருத்தவரையில் ஒரு புனிதப்பயணம். ஊருக்கு போனதும் நான் என்னையே ராஜூக்கு தருவேன். என் உடலும் உள்ளமும் அவனுடையது.

சிலியா நான் இனி என் குழந்தைக்காக வாழப்போகிறேன்.

அதுமட்டுமல்ல இன்னொரு கிருஷ்க்காக நான் காத்திருப்பேன்.

இரு தோழிகளும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

ஆண்கள் கட்டியணைத்தால் ஹோமோ செக்ஸ்ஷூவல் என்றும் பெண்கள் கட்டியணைத்தால் லெஸ்ப்பியன் என்றும் சொல்லும் சமுதாயத்திலிருந்து வந்த இரு பெண்கள் இந்தியாவிலிருந்து காதல் பாடம் கற்றுக் கொண்டு காதல் பட்டதாரிகளாய் பறந்தனர்.

leomohan
30-10-2006, 10:44 AM
20

நெவார்க் ஏர்போர்டில் இறங்கி டாக்ஸி பிடித்தனர் தோழியர். நெவார்க் நகரம் நியூ யார்க் நியூ ஜெர்ஸியின் நடுவே அமைந்திருக்கும் ஒரு நகரம். ஈஸ்ட் ப்ரன்ஸ்விக் அரை மணி தூரம் தான்.

சிந்துவை இறக்கிவிட்டு டாக்ஸி ரீட்டாவை இறக்கிவிட மேலும் பயணித்தது.

தன்னிடமிருந்த சாவி போட்டு ஆவலாக கதை திறந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ராஜகோபாலின் வீடா என்று கேட்டும் அளவிற்கு குப்பை. காலணிகள் உள்ளே. மேசையின் மீது ஆஷ் டிரே. பாதி குடித்த சுருட்டுகள். சிகரெட் துண்டுகள். மாலிபு பக்கார்டி பாட்டில்கள். அதிர்ந்து போனாள்.

பைகளை உள்ளே வைத்துவிட்டு ராஜின் கட்டிலில் சென்று படுத்தாள். அவனிடமிருந்து சாராய நெடி மூக்கை துளைத்தது.

இப்போதே எழுப்பி கேட்கலாமா என்ற நினைப்பை தவிர்த்தாள்.

தூக்க கலக்கத்தில் ஹேய் சிலியா எப்போ வந்தே? என்றான்.

இப்போது தான் என்றாள் காட்டமாக.

ஏன் என்கிட்டே சொல்லலை?

நீ குடிச்சிருக்கியா ராஜ்?

ஆமாம். பேபி. உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். அதான் கொஞ்சம் குடிச்சேன்.

அவள் சுக்கு நூறாக உடைந்தாள். மேல் அவனிடம் பேச விருப்பமில்லை அவளுக்கு. அமைதியாக படுத்தாள்.

அவன் இவள் மேல் தன் வலது கையை போட்டு அணைத்தான். அவள் ஒன்றும் செய்யாமல் உறங்க முயன்றாள்.

அவன் அவளுடைய கண்களில் முத்தம் இட்டான். அவனுடைய பிடிப்பை விடுவித்தாள்.

கமான் பேபி. இத்தனை நாள் கழித்து வந்திருக்கிறாய். லவ் மீ என்றான்.

அவன் அவளுடைய முகத்தை தன் பக்கம் இழுத்து மேல் உதட்டில் தன் உதடுகளை பதித்தான்.

பல காலமாக அவனிடமிருந்து முத்தம் கிடைக்காதா என்று ஏங்கிய அவளுக்கு இன்று அது கிடைக்கும் போது வெறுப்பாக இருந்தது.

அவன் உள்ளே தூங்கியிருந்த மிருகம் அந்த ராட்சத திரவத்தின் அட்டூழியம் தொடங்கியது. அவளுடைய ஆடைகளை வெறித்தனமாக கழற்றினான்.

வேண்டாம் ராஜ். எனக்கு களைப்பாக இருக்கிறது என்றாள் அவள்.

கமான். கமான். என்று கட்டாயமாக அவள் உடலில் ஊடுருவினான். அவளை துவம்சம் செய்தான். பிறகு அடங்கி உறங்கிப்போனான்.

எத்தனை நேரம் அவள் அழுதிருப்பாள் என்று அவளுக்கே தெரியாது. அவள் இன்று கற்பழிக்கப்பட்டாள். தான் நேசித்த பைத்தியமாக விரும்பிய காதலித்த ராமன் இன்று ராவணன் ஆகிவிட்டான்.

காலையில் எழுந்ததும் அவள் அங்கங்கள் வலிப்பதை உணர்ந்தாள். உதடுகளை கடித்திருந்தது அந்த மிருகம். குளித்து புடவை உடுத்தி அலமாரிக்கு வந்தாள்.

பல நாள் திறக்காத கதவுகள். தூசி படிந்த விளக்குகள். அனைத்தையும் சுத்தம் செய்தாள்.

எழுந்து குளித்துவிட்டு ராஜ் படபடவென்று பாட்டில்களை எடுத்து தூக்கியெறிந்தான். சிகரெட்துண்டுகளை அகற்றிவிட்டு குளித்து முடித்து இறைவன் முன் நின்று பிராத்தித்தான்.

பிறகு சிலியாவை பின்புறமாக வந்து கட்டியணைத்தான்.

உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன்னு தெரியுமா என்றான் கொஞ்சலாக.

எதுக்கு?

கல்யாணத்துக்கான ஏற்பாடு செய்யத்தான்.

யார் கல்யாணத்துக்கு?

நம்ம கல்யாணம்தான் டியர். இது என்ன கேள்வி?

ராஜ் நான் கொஞ்சம் பேசனும். என் மேலேர்ந்து கையை எடுக்கறியா?

விலகி குழப்பத்துடன் எதிரே சென்று அமர்ந்தான்.

ராஜ் ஐ திங் எவ்ரி திங் இஸ் ஓவர் என்றாள் மெதுவாக.

வாட்? என்ன சொல்ற சிலியா?

ஆமாம் ராஜ். நேத்து நீ என்னுடைய விருப்பம் இல்லாம என்னை கெடுத்துட்டே.

என்ன சொல்ற சிலியா? நமக்கு கல்யாணம் ஆகப்போகுது. ஐ லவ் யூ டார்லிங்.

குடிக்க வேற ஆரம்பிச்சிட்டே.

நீ வந்தவுடனே விட்டுட முடிவு செஞ்சிட்டேன் பா.

இல்லை ராஜ். நான் வெறித்தனமா காதலிச்ச ராமன் நீ இல்லை. உன்கிட்ட ராவணன் வந்திட்டான். நான் கடந்த 7 மாசமா தவம் இருந்தது ராமனுக்காக. உனக்காக நான் எல்லாத்தையும் விட்டேன். ஐயங்கார் பொண்ணு என்னவெல்லாம் பண்ணுவாளோ அதெல்லாம் கத்துகிட்டேன். நான் கிழக்கே போய் இந்தியனா வந்திருக்கேன். ஏன்னா எனக்கு இந்திய கணவன் தான் வேண்டும்.

ஆனா நீ அமெரிக்கனாயிட்டே. அமெரிக்கனை கல்யாணம் செய்துக்க நான் இவ்வளுவு கஷ்ட பட்டிருக்கத் தேவையில்லை. நான் மேற்கில் இருந்தேன். உனக்காக கிழக்கு நோக்கி வந்தேன். நான் கிழக்கே போனேன். நீ மேற்கே போனாய். நாம் இருவரும் எப்படி சேருவது?

சிலியா. என்னை புரிந்துக்கொள். நீ இல்லாம நான் பைத்தியமாயிட்டேன். அதனால தான் இதெல்லாம் நடந்தது. நீ வந்திட்ட பிறகு நான் இதையெல்லாம் தொடக்கூட மாட்டேன். ப்ளீஸ் சிலியா எனக்கு ஒரு வாய்ப்பு கொடு.

ராஜ் என்னை மன்னிச்சிடு. நீ ஒரு அவதாரப்புருஷன் எனக்கு. நீ தான் என்னோடு ராமன். நான் உன்னோட சீதா. அவதாரப்புருஷன் தப்பு செய்யக்கூடாது.

நான் நேற்று கன்னித்தன்மையை மட்டும் இல்லை உன்னையும் இழந்திட்டேன்.

மாமா மாமிக்கு என்னுடைய நமஸ்காரங்கள். இந்த சிந்து எப்பவுமே உங்க வீட்டுக்கு வரமாட்டான்னு சொல்லிடு.

அவள் தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

தூரத்தில் அவள் புள்ளியாகும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். அலமாரியிடம் சென்று மண்டியிட்டான். அழுதான்.


I can derive whatever pleasure I want without these external influences
என்றோ டைரியில் எழுதியது நினைவுக்கு வந்தது.

செல்லியம்மனை பார்த்து அம்மா உன் பிள்ளையை மன்னிக்கமாட்டாயா என்று புலம்பினான்.

சிந்து போயேவிட்டாள்.

செல்லியம்மனிடம் பிரார்த்தனை செய்தும் நிறைவேறாத ஒரு சில பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று.

விவேகானந்தர் உள்ளே வந்தார். ஆஞ்சநேயர் அவன் கண்களை துடைத்தார்.

ஆனால் செல்லியம்மன் சிலையாகிவிட்டாள்.

முற்றும்.

meera
30-10-2006, 10:54 AM
மோகன் நல்ல முடிவு.நான் இதை எதிர்பார்த்தேன்.

உங்க படைப்பு எல்லாம் அருமையாய் இருக்கிறது.சிறந்த கதாசிரியராய் வர வாழ்த்துகள் நண்பா.

leomohan
30-10-2006, 11:50 AM
மீரா, சொல்ல மறந்துட்டேனே. பாகம் 2 இருக்கு.

meera
30-10-2006, 01:52 PM
அட, வேகமா போடுங்க மோகன்.

நான் ரெடி படிக்க,நீங்க ரெடியா? பதிவை தொடர.


ம்ம்ம்ம் சீக்கரம் ரெடி ஆகுங்க.

guna
31-10-2006, 02:23 AM
என்ன மோகன் இது, இப்படி முடிச்சுடீங்க?
ராஜ் அவனோட, அடிப்படை குணாதிசயங்களை இழந்தது தவறுதான், தவறு செய்வது மனித இயல்புன்னு சொல்லி அவன் தவறுகளை நியாயப்படுத்தல, ஆனாலும் ராஜ் சூழ்னிலையில இருந்து பார்கறச்ச, சிந்து கொடுத்த தண்டனை கொஞ்ஜம் அதிகம்னு தோணுது..

அதே சமயம், ராஜ்காக அவளது individuality (தனித்தன்மை) தியாகம் செய்த சிந்துவின் முடிவும் சரிதான்னு மனசுக்கு படுது..

இருந்தாலும், காதல்ன்னு வந்துட்டாலே, மறக்கர்தும் மண்னிக்கர்தும் இயல்பாகிடுமே மோகன்..

தனகுரியவர்ன்னு முடிவு செய்த பிறகு, அது கணவரோ இல்லை காதலரோ, அவரின் நிழலை கூட வேரு ஒரு பெண் தொடுவதை பெண்மை அனுமதிக்காது..கிருஷ்ணா..., தெரிந்தே மூன்று முறை, ஸ்ருதி-வியக்கதக்கவள்..

ரீடா, முரளி, ப்ரவினா,மறக்காமல் மல்லிகைப் பூ வாங்கி வரும் ராஜின் அப்பா, அம்மா, ராஜுன்னு கதையில வர அனைத்து கதபாத்திரங்களும், மனசும் உறுதியும் இருந்தா எல்லாம் சாத்தியமேன்னு உணரவச்சிருக்காங்க..

அழகான கதை மோகன், நன்றி + வாழ்துக்கள்

இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்கும்

குணா

leomohan
31-10-2006, 12:22 PM
மிக்க நன்றி குணா. இதோ பாகம் இரண்டு வருகிறது. ஒரு வேளை உங்களுக்கு பிடித்த முடிவு இதில் வரலாம். :)

leomohan
31-10-2006, 12:32 PM
செல்லியம்மன் சிலையாகி மூன்று மாதங்கள் இருக்கும்.

ராஜின் வீட்டிலிருந்து அந்த பொண்ணைப்போயி பாருடா என்று பல தடவை சொல்லிவிட்டார்கள் அவன் அப்பாவும் அம்மாவும். வேலை அதிகமா இருக்கு என்ற மழுப்பிக் கொண்டிருந்தான்.

ஒரு படி மேலே போய் சிலியாவிற்கே போன் செய்து பேசினர் அவன் பெற்றோர். தான் ஒரு கல்லூரியில் லெக்சரர் ஃபார் ரிலீஜியஸ் ஸ்டிடீஸ் வேலைக்கு சேர்ந்துவிட்டதாகவும் அது நெவார்க் நகரத்தில் இருப்பதால் ராஜை சந்திக்க முடியவில்லை என்றும் கூறினாள். தான் இந்து மதத்தைப்பற்றி இங்கு அமெரிக்கர்களுக்கு போதிப்பதாகவும் கூறியதை கேட்டு அவன் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

அவன் நண்பர்களும் மாற்றி மாற்றி இமெயிலில் சிலியாவைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தனர்.

ராஜா மாதிரி இருந்த ராஜ் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டான். அவனால் சிலியாவைவிட்டு இருக்க முடியவில்லை. அவன் செய்த தவறுகள் அவனை துண்டு துண்டாக ஆக்கியிருந்தன.

ஆனால் அவன் மேலும் மேலும் தவறான பாதையில் போகவில்லை. அடிக்கடி நாரியை சந்தித்தாலும் அவன் அவனாகவே இருந்தான்.
இன்னும் அதிக ஆன்மீகத்தையும் தெய்வ பக்தியையும் நாடினான்.

எப்போதாவது அவளுக்கு வந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்று வருவான்.

அப்போதெல்லாம் மணக்கும் ஒரு தென்னிந்திய காப்பி கொடுத்து ஹலோ ஹாயுடன் வழியனுப்பி விடுவாள் சிலியா.

அவனால் மறுபடியும் அந்த பேச்சை எடுக்க முடியவில்லை. அவளோ அது மாதிரி எதுவும் நடக்காதது போல நடந்துக் கொண்டாள்.

திடீரென்று இந்து மதத்தை பற்றி ஏதாவது கேட்பாள். அவள் ராஜூ சொன்னதை மறக்கவில்லை. "நான் 10 சதவிகிதம் தான். ராஜகோபாலைக் கேட்டால் 4 மணி நேரம் பேசுவான்".

ஒரு முறை கர்ணன் துரியோதனனின் மடியை இழுத்ததுபற்றியும் அதைக் கண்ட துரரியோதனன் ஒன்றுமே நடக்காதது போல் இருந்ததைப்பற்றி பேச்சு வந்தது.

இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்து தன் கருத்தக்களின் ஊடே தன்னுடைய சொந்தக் கதையும் சொல்ல நினைத்தான்.

சிலியா ஒரு நட்பு என்பது ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் தொடங்குகிறது. ஒரு நிலையில் நட்பு 'நட்பு" என்ற இலக்கணத்தையும் மீறி ஒரு வெறித்தனமான நம்பிக்கை பக்தி பாசமாக மாறுகிறது. ஓதெல்லோவில் நம்பிக்கையின் ஆதாரம் சரியில்லாததால் தான் குழுப்பமே.

ஒரு வேளை கர்ணன் துரியோதனின் மனைவியுடன் உடல் உறவு கொள்வதை அவன் பார்த்திருந்தால் கூட தன் கண்களில் ஏதோ குழப்பம் வந்துவிட்டது என்று தான் துரரியோதனன் நினைத்திருப்பான்.

ஒருவர் மேல் நம்பிக்கை வைத்தால் அதை காப்பாற்றும் பொறுப்பு இருவருக்கும் உள்ளது.

ஆனால் அந்த நம்பிக்கை மேல் யார் முதலில் சந்தேகப்படுகிறாரோ அவரே அந்த நட்பு உடைய காரணமாகிறார்.

நட்பில் தவறை மன்னிக்கவும் மறக்கவும் வாய்ப்பு இருக்க வேண்டும். தவறு செய்யாத மனிதர்களே இல்லை. நண்பன் நல்லவனா கெட்டவனா தனக்கு பிடித்ததை செய்கிறானா என்று பார்த்து நட்பு வருவது கிடையாது.

காதலும் நட்பை போலத்தான். காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய காதலன் மேலோ காதலி மேலோ இருந்த நம்பிக்கை இருக்கும் வரை அவர் செய்யும் தவறை நாம் பாராமுகமாக இருக்க வேண்டும் என்றான்.

போதும் ராஜ். நீ எங்கே வருகிறாய் என்று எனக்கு தெரிகிறது. இதை நாம் இத்தோடு நிறுத்திக் கொள்வோம் என்று விட்டாள் சிலியா.

அவன் ஏக்கத்தோடு அவளைப் பார்த்தான். அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். அவளுக்குள்ளும் பெரிய போராட்டம் போய் கொண்டுத்தான் இருந்தது.

ராமாயணம் போதிக்கும் போதெல்லாம் அமெரிக்க மாணவ மாணவியர்கள் ராமனுக்கு 100 மதிப்பெண் போடும் போதும் 'என் ராமா நீ எங்கிருக்கிறாய்" என்று கேட்டு ஏங்குவாள்.

அவளுடைய வீடு எந்த பிராமணரின் வீட்டுக் குறைந்ததில்லை. சிலுவை செல்லியம்மனாக மாறியிருந்தது. பைபிளின் இடத்தை பகவத் கீதை எடுத்துக் கொண்டது. எப்போதுமே புடவையில் காணப்பட்டாள் சிலியா. அவள் சிந்துவாகவே வாழ்கிறாள். ராஜின் தவறுக்காக அவள் தான் கற்றுக் கொண்டு நல்ல கருத்துக்களை மறுக்கவோ மறக்கவோ தயாராக இல்லை.

அவ்வபோது முரளி கிருஷ்ணன் பாலா ராஜூ இவர்களுக்கு போன் போட்டு பேசுவாள். ராஜின் பெற்றோரிடமும் பேசுவாள். மாமி மாமா போய் அம்மா அப்பா என்றே அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

ஒவ்வொரு சமயம் அவர்களுடன் பேசிய பிறகு பல மணி நேரம் அழுது தீர்த்தாள். சட்டென்று ஓடி ராஜின் மடியில் விழ வேண்டும் என்று தோன்றும் அவளுக்கு.

ரீட்டாவும் பல முறை சிலியாவை கேட்டுக் கொண்டாள். ராஜ் செய்தது ஒரு பெரிய தவறே இல்லை. அதை மறந்து அவனுடன் சேர்ந்து நல்ல வாழ்க்கை நடத்து என்று.

ஒரு முறை பல கல்லூரிகளிலிருந்து உலக சமயங்களைப் பற்றி ஒரு மாநாட்டிற்கு சொற்பொழிவாளர்கள் வந்திருந்தனர். சிலியாவுக்கு இந்து மதத்தை பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது. பல மணி நேரம் தயார் செய்த பிறகும் அவள் அத்தனை பெரிய மாநாட்டில் பேச தயாராக இல்லை.

மறுநாள் சொற்பொழிவு. இரவு 1.30 மணிக்கு ராஜ்-க்கு போன் செய்தாள்.

அவளுடைய தொலைபேசி எண்ணை அவன் பார்த்ததும் உணர்ச்சி பொங்க எழுந்து 'சிலியா?" என்றான்.

ராஜ் என்னை மன்னிக்கனும்.

(சொல் பெண்ணே. உன்னுடைய இந்த போனுக்காக நான் தவமாய் தவமிருந்தேனடி - உள் குரல்).

பரவாயில்லை சிலியா. சொல்.

நாளைக்கு ஒரு மாநாடு. என்னால் பேச முடியாது. பயமாய் இருக்கிறது. நீ வந்து பேசினால் நன்றாக இருக்கும்.

என்ன நாளைக்கேவா?

ஆம்.

எத்தனை மணிக்கு?

10.30 - 12.30.

இரண்டு மணி நேரமா?

ஆம்.

தலைப்பு?

இந்து மதமும் பெண்களும்.

என்ன சிலியா. விளையாடறியா? இது சாதாரண தலைப்பு இல்லை. ரொம்ப காராசாரமான தலைப்பு. அதுக்கு நிறைய தயார் பண்ணணும். இப்ப மணி 2. எப்படி முடியும்?

ராஜூ சொன்னானே நீ எந்த தலைப்பிலும் எப்ப வேண்டுமானாலும் பேச முடியும் என்று?

(பசங்களா என்னைப்பத்தி நல்லாதான சொல்லியிருக்கீங்க)

ம். சரி. நாம 7 மணிக்கு என் வீட்டில் சந்திப்போம் என்றுவிட்டு போனை வைத்தான்.

ஒரு குவளை தண்ணீர் குடித்து விட்டு இறைவனை மீண்டும் வணங்கிவிட்டு உறங்கச் சென்றான்.

6 மணிக்கே அவன் வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளுக்கும் ஏன் என்று காரணம் புரியவில்லை. அவள் உள் மனதிற்கு 6 மணிக்கு ராஜ் என்ன செய்கிறான் என்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது போலும்.

கதவு பூட்டாமல் இருந்தது. பல மாதங்களுக்கு பிறகு வருகிறாள். அன்று சென்றவள் தான்.

நோ ஸ்மோகிங். நோ ஜோக்ஸ் என்று புதிய பிரின்ட் அவுட் ஒட்டப்பட்டிருந்தது. காலணிகள் வெளியேவும் புதிய நிறத்தில். ஓரத்தில் பகார்டி பாட்டில் ஒன்று தற்கொலை செய்து கொண்டது போல் தொங்கவிட்டிருந்தான். வீடு அவள் முதலில் பார்த்தது போல கருவறையாக மாறியிருந்தது.

அலமாரியின் முன்னே அமர்ந்து அந்த வாலிப விவேகானந்தன் தியானம் செய்துக் கொண்டிருந்தான்;.

மிகவும் அவசரப்பட்டுவிட்டோமோ? ஒரு வாய்ப்பு தந்திருக்கலாமோ? இந்த இனியவனை இழந்து நாம் ஏன் கஷ்டப்படுகிறோம் என்று பல நினைவுகள் அவளை தாக்கிச் சென்றன.

ரோஜாப்பூவின் நிறத்தில் ஒரு கைத்தறி புடவை அணிந்திருந்தாள். சணலால் செய்த ஒரு கைப்பை. 4-5 கிலோ இடை இழந்திருந்தாள். அவள் கண்களின் கீழ் கருவளையங்கள் அவள் எத்தனை சோகத்தில் இருக்கிறாள் என்று காட்டியது. ஆனால் இயற்கையான அழகை எது என்ன செய்ய முடியும். அவள் இன்னமும் உலக அழகியாகத்தான் இருந்தாள். அந்த வரிசையான பற்கள் பேச வாய் திறக்கும் போது கூட மனிதரை கோமாளியாக்கிவிடும்.

காலணிகளை வெளியே விட்டு இறைவனை வணங்கிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தாள்.

அவன் ஏன் 7 மணி என்று சொன்னான் என்று அவளுக்கு புரிந்தது. சாதாரணமாக அறை மணி செய்யும் பூஜை ஒரு மணியாகியிருந்தது. விஷ்ணு சகஸ்ரநாமமும் நாராயண பஞ்சட்சரமும் ஹயிகிரி நந்தினியும் அவனுடைய பூஜை லிஸ்டில் சேர்ந்திருந்தது.

இருப்பு கொள்ளாமல் அவள் இருந்த அறையை திறந்து உள்ளே சென்றாள். அவள் எடுத்துச் சென்ற சில பொருட்களைத் தவிர்த்து அவளுடைய மற்ற பொருட்கள் அனைத்தும் அங்கேயே வைத்தது வைத்தபடி இருந்தன.

அங்கே சுவரில் 'சிலியா எனும் தாய்க்காக இங்கே ஒரு குழந்தை காத்துக் கொண்டிருக்கிறது" என்று பெரிய எழுத்தில் பிரின்ட் செய்து ஒட்டப்பட்டிருந்தது. இன்று ஒட்டியது போல் இல்லை. பல நாட்களாக இருக்கும் போலிருக்கிறது.

தாய்க்குப்பின் தாரம். தாரத்திற்கு பின் தாய். என்ன வித்தியாசம் என்றால். முதலில் ஒரு ஆண்மகனை ஈன்றெடுத்த தாய். பிறகு அவன் திருமணம் புரிந்து கொள்ளும் பெண் - தாரம். மீண்டும் அந்த தாரமே அவனுக்கு தாயாகிறாள். ஒரு மனிதன் தன் மனைவியை காலையில் அண்ணணாக இருந்து காக்கிறான். மதியம் தந்தையாக இருந்து அன்பை பொழிகிறான். மாலையில் நல்ல நண்பனாக இருந்து அவளை வழி நடுத்துகிறான். அவன் இரவில் மட்டும் அவளுடைய படுக்கையின் நாயகனாகிறான். எந்த ஒரு உறவும் இந்த அடிப்படையில் நடந்தால் அதில் சண்டையேது. சச்சரவு ஏது. விவாகரத்து ஏது?

மனைவியோ தன் கணவனுக்கு மனைவியாக இருக்கும் நேரத்தை விடுத்து மற்ற நேரங்களில் அவன் தாயாகவே இருக்கிறாள். இந்த அன்பின் புனிதத்துவம் ஒரு ஆண்மகனை ஒரு பெண்ணுடன் இறக்கும் வரையில் இருக்கச் செய்கிறது.

அவள் அழகிழந்து போகலாம். வலுவிழுந்து போகலாம். அவள் அகோரமாய் ஆகியிருக்கலாம். ஆனால் இந்த உறுவின் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட அன்பு ஆதாரமாக அவனுடைய பசுமையான நினைவில் என்றென்றும் கைதாகிவிடுகிறது.

சிலியா அப்பேர்பட்ட ஒரு பாசத்தைத் தான் ராஜின் பெற்றோர்களிடம் கண்டாள். அவன் தந்தை அவன் தாயை அம்மா என்றே அழைப்பதை கண்டாள்.

ஒரு முறை மனைவியை அம்மா என்று அழைப்பது சரியா என்று அவன் தந்தையிடம் கேட்க அவர் சொன்ன விளக்கம் தான் மேலே கொடுக்கப்பட்டது.

அழுகை அவள் கண்களை பிளந்துக் கொண்டு எரிமலையாக வெளியே வந்தது. நேராக குளியறைக்கு சென்று கிடைத்த டிஷ்யூ காகிதங்களால் கண்களை மூடிக்கொண்டாள்.

என் ராமனே நீ என்னை இவ்வளவு நேசிக்கிறாயா? அப்படியென்றால் ஏன் அந்த தப்பை செய்தாய். உன்னைப்பற்றி நான் தெய்வத்திற்கு மேலாக நினைக்கவில்லையா? நீ ஏன் அப்படிச் செய்தாய்? என்று வாய்விட்டுக் கேட்டுக் கொண்டாள்.

முகம் துடைத்து வெளியே வந்தவள் ராஜ் தயாராகிவிட்டதைக் கண்டாள். வெள்ளை முழுக்கை சட்டை நீல நிற கோட் கால் சட்டை பாலீஷ் செய்யப்பட்ட பெல்ட் கருநீல நிற டை அழகாக இடது கை பாக்கெட்டின் மேல் வைக்கப்பட்ட கைக்குட்டை பாராசூட் க்ரீம் போட்டு வாரிய தலை முகத்தில் குளிர் க்ரீம் தடவி சற்றே பான்ட்ஸ் பவுடர் இட்டிருந்தான். இது ஒவ்வொரு தென்னிந்திய ஆணுக்கும் உள்ள பழக்கம் - முகத்திற்கு பவுடர் இடுவது. பார்க்க சினிமா நடிகன் போல் இருந்தான். ஆக்ஸ் எஃப்க்ட் பர்ஃப்யூம்.

நீ ரொம்ப அழுகாக இருக்கே - என்றாள் நிஜமாக.

நீ கூட எந்த ஒரு இந்திய பெண்ணையும் தோற்கடிக்கும் அளவிற்கு இருக்கே - என்றான்.

நன்றி என்று சொல்லிவிட்டு உணவு மேஜையின் மேல் அமர்ந்தாள்.

ஏய் நான் இன்று ஒன்னும் சமைக்கவில்லை - என்றான் மன்னிப்பு கேட்கும் குரலில்.

அவள் தான் கொண்டுவந்திருந்த உணவு பொட்டலங்களை பிரித்தாள். இடியாப்பம் குருமா. அமெரிக்காவில்.

வாவ் என்று ஆவலாக பிரித்து சாப்பிட்டான்.

நான் ஒன்னு சொல்வேன் நீ பதிலுக்கு ஏதுவும் சொல்லக்கூடாது என்று பீடிகை போட்டான்.

சொல் - என்றாள்.

இது எங்கம்மா செய்தது போலவே இருக்கு. ரொம்ப நன்றி - என்றான் நாதழுக்க.

மௌனமானாள்.

சரி நாம இன்னிக்கு பேசப்போறதை பத்தி கொஞ்சம் யோசிப்போமா - என்றான்.

ம்.

என்னுடைய அனுகும் விதம் இன்னிக்கு வித்தியாசமா இருக்கப்போகுது - அவன் உற்சாகமாக விவரித்தான். நானே இன்னிக்கு விவகாரங்களை கிளப்பிவிடப்போகிறேன். பிறகு நானே அதற்கு இந்து மதம் மூலமாக விடையும் சொல்லப் போகிறேன்.

இது சரிப்பட்டு வருமா? சாதாரணமாக பேசினாலே விவகாரம் செய்வார்களே?

ஆமாம். அதனால நாமே விவகாரத்தை ஆரம்பிப்போம். அப்போது தான் நாம் நினைத்தபடி அவர்களை கேள்வி கேட்க வைத்து நமக்கு தெரிந்த விஷயங்களை சொல்ல முடியும் - என்றான்.

ஓ. இது நல்ல அனுகுமுறை. புதிதாக வரும் கேள்விகளை சமாளிப்பதை விட இது நல்ல முறை. (என்ன இருந்தாலும் நீ புத்திசாலிடா ராஜ் என்று மனதுக்குள் அவள் பாரட்டியதை அவளாலே தடுக்க முடியவில்லை).

இடியாப்பம் செய்த கைகளுக்கு ஒரு முத்தம் தரலாமா? என்று சந்தடிசாக்கில் கேட்டான். கடலில் வழி தொலைந்து போனவர்கள் பல மாதங்களுக்கு பிறகு உணவைக் கண்டால் என்ன செய்வார்கள்?

அவனை முறைத்துப் பார்த்தாள்.

சரி. வேண்டாம். ஒரு விளையாட்டுக்குத் தான் கேட்டேன் - என்று வழிந்தான்.

மறுபடியும் அவள் முறைத்தாள்.

சரி சரி. மதுரை எரித்த கண்ணகி என்னை எரிக்காதே - என்றான் சிரித்துக் கொண்டே.

அவள் சகஜமானாள்.

இந்து மதத்தில் ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. வேதங்கள் தான் இந்து மதத்தின் ஆதாரம். பிறகு அதற்கு எழுதப்பட்ட பாஷ்யங்கள். ராமாயணமும் மகாபாரதங்களும் இரு மகாகாவியங்களே. அதை மதநூலாக யாரும் படிப்பதில்லை. அதிலிருந்த கற்க வேண்டியவைதான் பல விஷயங்கள்.

இந்துக்கள் மத நூலாக ஆதாரமாக கருதுவது பகவத் கீதையைதான். அதிலிருந்த கருத்துக்களை வைத்து தான் த்வைதம் அத்வைதம் விசிஷ்டா த்வைதம் என்று மூன்று வழிகள். கடைசியாக வந்தது தான் த்வைதம். அதை நிறுவியவர் மத்வாச்சார்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இவை மூன்றுமே பகவத் கீதையை அடிப்படையாக கொண்டு அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை வைத்தே வித்தியாசமான பார்வையால் ஒரு மத வழியை ஏற்படுத்தினர் ஆதி சங்கரர் ராமானுஜர் மற்றும் மத்வாச்சாரியர். பிறகு ஆழ்வார்களும் நாயண்மார்களும் இன்னும் பல குருமார்களும் மதவழிகளை பாடல்கள் மூலம் பரப்பினர் - என்றான்.

இவையெல்லாம் அவள் முன்பே அறிந்திருந்தாலும் அவன் பேசுவதை கேட்டு லயித்துப் போனாள். அவன் பேசிக்கொண்டே இருக்கட்டும் நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அப்படியே இறப்பு வந்துவிட்டால் என்ன என்று நினைத்தாள்.

நாம் இன்று சக்தி என்ற பெண் தெய்வத்தை பற்றி பேசுவோம். அர்த்த நாரீஸ்வரர் என்று சிவனே தன் உடலில் பாதியை கொடுத்ததைப் பற்றி பேசுவோம். கதையோ நிஜமோ இது பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்தது என்று வைத்துக் கொண்டால் ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி அப்போதே பேசியிருக்கிறார்கள்.

ஏன் 9 அவதாரம் எடுத்த கடவுள் ஒன்று கூட பெண் அவதாரமாக எடுக்கவில்லையே என்று கேள்வி எழுப்புவோம்.

நாராயணனின் காலைப்பிடித்துவிட்டப்படியே இருக்கும் லட்சுமி அவருக்கு வேலைக்காரியா? பணிப்பெண்ணா? என்று ஒரு பிரச்சனையை கிளப்புவோம்.

சங்கரரோ மத்வரோ ராமானுஜரோ ஒரு பெண் இல்லையே? ஒரு பெண் ஒரு மதவழியை உண்டாக்கியிருந்தால் இத்தனை பேர் அதன் வழி நடந்திருப்பார்களா என்று ஒரு குண்டைத்தூக்கிப் போடுவோம்.

அவன் கண்களை அகலமாக்கி இடைவிடாது பேசிக் கொண்டிருந்தான்.

இவையாவும் அவள் அறிந்திராதவை. படித்திருந்தும் யோசிக்காதவை. ராஜ் எனும் குருகுலத்தில் இடியாப்பம் எனும் குரு தட்சிணையை வைத்துவிட்டு சிலியா எனும் கிறிஸ்துவ மாணவி சனாதன தர்மம் கற்றுக் கொண்டிருந்தாள்.

அவன் பல மேடைகளை கண்டிருக்கிறான். மதங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்வதும் படிப்பதும் தான் அவனுடைய பொழுது போக்கு. அவனுக்கு ஒரு பெரிய விஷயமாக படவில்லை. ஆனால் அவளுடன் இருப்பதே ஒரு பாக்கியமாக கருதினான். கடவுளின் சரணடியில் இருப்பதை போன்று ஒரு இன்பம் ஒரு அமைதி அவனுக்கு.

leomohan
31-10-2006, 12:34 PM
9.30 மணிக்கு வண்டி ரட்கர்ஸ் சர்வகலாசாலையில் வந்து நின்றது. அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தான். 50 ஏக்கர் பரப்பளவில் ஒரு பல்கலைகழகம். இடத்திற்கு பஞ்சமா என்ன என்று நினைத்தான்.

அதிக கூட்டமில்லை. ஒரு 50-100 பேர் வருவார்களா? ஜமாய்த்துவிடலாம். நானும் மேடையில் பேசி பலகாலம் ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டான்.

சிலியா நேராக அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
காபி என்று கேட்டாள்.

இந்த ஊரு மெஷிpன் காப்பியை ஏவன் குடிப்பான் - என்றான் நக்கலாக.

அவள் டிராவைத் திறந்து நரசுஸ் காபியை எடுத்தாள்.

ஏய் இது எங்கே கிடைச்சுது உனக்கு? என்றான் உலக அதிசயத்தை கண்டது போல.

உன் அப்பா அனுப்பி வெச்சார்.

ஏய் நீ அவர்களோட தொடர்புல இருக்கியா?

ஆம். நான் உன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் அவர் தான் என் ஃபாதர்-இன்-லா என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல்.

நிஜமாக உனக்கு அவர் மாமனார் ஆவது எப்போது என்றான் கெஞ்சியபடி.

வேண்டாம் ராஜ் மறுபடியும் நீ அந்த பேச்சை ஆரம்பிக்காதே!

சரி சரி என்றான். அவளுடன் இருப்பதற்காக மௌனியாக தயாராகிருந்தான்.

ரெண் என்று ஏதோ சொன்னான்.

தெரியும். உனக்கு இரண்டு ஷூகர். என்று சொல்லி இரண்டு ஸ்பூன் சக்கரைப் போட்டு ஒரு அழகான டிக்காக்ஷன் காபியை கொடுத்தாள்.
(நீ என் பொண்டாடிதான். இன்னிக்கு இல்லைன்னாலும் என்னிக்காவது)

பிறகு இருவரும் ஒரு பெரிய லாபியைக்கடந்து ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தனர். சட்டென்று நுழைந்தவனுக்கு திக்கென்றது.
ஒரு 3000 பேர் அமர்ந்திருந்தார்கள். எத்தனை முறை மேடை ஏறினாலும் அவனுக்கு பயம் இருக்கும். அதுதான் தனது சக்தியே என்று அவன் நினைத்தான். சட்டென்று அம்மனை வேண்டிக் கொண்டான்.

இப்போது இந்து மதமும் அதில் பெண்களின் பங்கும் என்ற தலைப்பில் செல்வி சிலியா ஜோன்ஸ் பேசுவார் என்று பல்கலை கழகத்தின் முதல்வர் அறிவித்து அமர்ந்தார்.

அனைவருக்கும் வணக்கம். இது ஒரு கடினமான வேலை எனக்கு. இந்து மதம் ஒரு சமுத்திரம். அதை நான் வெளியாளாக இருந்து பேசுவதை விட எனக்கு அனுமதி தந்தால் என் நண்பர் ராஜகோபாலன் சந்தானத்தை இங்கு பேச அழைக்கிறேன் என்று கூறி அவள் முதல்வரை பார்த்தாள். அவரும் தலையசைக்கவே "மிஸ்டர் சந்தானம்" என்று அவனை நோக்கி அழைத்தாள்.

மெதுவாக மேடையை நோக்கி சென்றவன் ஹயகிரி நந்தினி நந்தித்த மேதினி என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே மேடையை அடைந்தான்.

அழகான அமெரிக்க ஆங்கிலத்தில மெதுவாக பேசத் தொடங்கினான். சில நிமிடங்களில் புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டான். இங்கும் அங்கும் நடப்பதும் மைக்கை கையில் எடுத்துக் கொண்டு வந்தவர்களிடம் சென்று கேள்வி கேட்பதும் அவ்வபோது ஸ்பானிஷில் சில வார்த்தைகள் சொல்வதுமாக ராஜ் அங்கே மக்களை வென்றுக் கொண்டிருந்தான். இதற்கு முன் பேசியவர்கள் நின்ற இடத்திலே பேசிவிட்டு சென்றிருந்தனர்.

சபைக்கு இவை மிகவும் புதிதாக இருந்தது. 5 நிமிடத்திற்கு ஒரு முறை கைதட்டியவர்கள் ஓய்ந்து போய் அமைதியாக அவன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அவன் பேசும் போது 3000 மாக இருந்த கூட்டம் ஏறி 3500 ஆகியிருந்தது. பல பேர் நின்றுக் கொண்டிருந்தனர். மற்ற வகுப்பு மாணவர்களும் கூட ஆரம்பித்திருந்தனர். அவன் பேசிக் கொண்டே இருந்தான்.

திருவாசகம் விஷ்ணு புராணம் சமஸ்கிருத ஸ்லோக எடுத்துக் காட்டு அதை மீண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஸ்பானிஷில் மொழி பெயர்த்து புரியாத விஷியங்களை கதையுடன் மீண்டும் சொல்லி சொல்லி புரட்சி செய்துக் கொண்டிருந்தான்.

இடையிடையே டு வி ஹாவ் டைம் என்று கேட்க யாருமே மறுக்காததைக் கண்டு தொடர்ந்தான். 2 மணி நேரம் 2.30 ஆகி 3 ஆகி 3.30 மணியில் வந்து முடிந்தது. யாரும் மதியஉணவிற்கு கூட போகாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். சரஸ்வதி அவன் நாக்கில் தாண்டவம் ஆடினாள். பைபிளும் குரானும் பகவத் கீதையின் ஸ்லோகங்களும் அவன் நாக்கிலிருந்து மாறிமாறி வந்தது.

இத்தனைக்கும் அவன் கையில் ஒரு காகிதம் கூட இல்லை. ஒரு குறிப்பு கூட இல்லை.

சிலியாவிடம் யார் இவன் எப்படி இவனுக்கு உன்னை தெரியும் என்று கேட்காதவர்களே இல்லை. அனைவருக்கும் பிறகு சொல்கிறேன் என்று கூறிக்கொண்டிருந்தாள்.

ஐயாம் ஸாரி ஐ ஹாவ் ஸ்டோலன் சம்படிஸ் டைம் என்று கூறி வாய்ப்பு அளித்ததற்கு நன்றி கூறி விடைபெற்றான்.

ஒரு இரண்டு நிமிடங்கள் அமைதிக்கு மின் விண்ணை பிளக்கும் அளவிற்கு கரகோஷம் எழும்பியது. அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.


Mr. Santhanam has delivered a stunning speech. We consider ourselves to be lucky enough to be present today. We are grateful to Ceilia for bringing this young man today. Nobody has ever spoken about the great religion Hinduism in such a great details in our university. We have a good insight about your religion, young man, and thanks to your detailed lecture. We look forward to hearing you again in near future.

என்று பாமாலையை சூட்டினார் முதல்வர்.

அவனுக்கு பசித்தது. அவளுக்கு தெரியும். 12.30 மணி என்றால் அவனுக்கு பசிக்கும் என்று. ஒரு பொட்டலத்தில சாதமும் ஒரு யோகர்ட் பெட்டியும் எடுத்து வைத்திருந்தாள்.

அவளுடைய அறைக்கு சென்றதும் 'எனக்கு பசிக்குது" என்றான் குழந்தைப் போல.

அவள் அவனை இறுக கட்டியணைத்தாள். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு முதல் முறையாக. அவனும் அவளை கட்டியணைத்தான். அவள் மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டு 'இந்த அணைப்பு உன்னுடைய பேச்சிற்கு மட்டும் தான்" என்று கூறிவிட்டு உணவு பொட்டலத்தை எடுத்து அவன் முன் வைத்தான்.

அவன் எதுவும் பேசாமல் அதை சாப்பிட்டான்.

திரும்பி வரும் வழியில் இருவரும் பேசவில்லை. அவனுக்கு தலை வலித்தது. கால்களும் வலி எடுத்தன.

சிலியா எனக்கு ஒரு சின்ன உதவி?

சொல்.

எனக்கு தலைவலிக்கிறது. தையலம் தேய்த்துவிட முடியுமா?

தேய்த்துவிடுகிறேன். ஆனால் நீ ..

கமான் சிலியா. வேண்டாம் விட்டு விடு. நீ என்னை ரேபிஸ்ட் மாதிரி நடுத்துவது என் மனதை புண்படுத்துகிறது. உனக்கு என்னை புண்படுத்தாமல் பேசத் தெரியாதா? நீ என்ன நினைக்கிறாய்? நீயாக வந்து என்னைக் கூப்பிட்டாய்? நான் என்றைக்காவது உனக்கு போன் செய்தேனா? உனக்குத் தெரியும் இல்லையா நான் பசி தாங்கமாட்டேன் என்று? அதனால் எனக்கு நிஜமாக தலைவலி. உன்னால் முடியாவிட்டால் நான் ஏதாவது மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்குகிறேன். போ - என்றான்.

அவனை பார்க்கும் போது குழந்தை மதிய உணவு பெட்டியை தொலைத்துவிட்டு அம்மாவிடம் கதை சொல்வது போல இருந்தது அவளுக்கு. பெண் அல்லவா? உருகினாள். மருகினாள.

சரிப்பா சரி. என்னை மன்னிச்சிக்கோ என்றாள்.

அவன் ஒன்றும் பேசாமல் வண்டியை விட்டு இறங்கி காலணிகளை அகற்றிவிட்டு கதவை திறந்து கோட்டை வீசி எறிந்துவிட்டு படுக்கையில் சென்று விழுந்தான்.

வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்த அவள் முகம் கை கால் அலம்பிவிட்டு இறைவன் முன் சென்று வணங்கிவிட்டு அவன் டிராவிலிருந்து அவன் இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருந்த அமிர்தாஜன் பாட்டிலை எடுத்து வந்து அவனருகில் அமர்ந்தாள்.

குழந்தை டை பெல்ட் அவிழ்க்காமல் படுத்துவிட்டது பார் மனதில் கொஞ்சியபடியே அவன் அருகில் சென்று குனிந்து அவனுடைய டையை கழற்றினாள். அவளுடைய கூந்தல் அவன் மேல் விழுந்து அவனை திக்முக்காட செய்தது. வேண்டாம் ராஜ் இன்னொரு தப்பு செய்தால் அவள் உன்னை கொன்றே விடுவாள் என்று சொல்லிக் கொண்டான்.

(அடக்கு அடக்கு)

பிறகு அவன் அங்கியை தளர்த்தினாள். அவனுடைய கேசத்தை பின்னுக்கு தள்ளி அவன் தலையில் தைலம் தடவினாள். அவன் அமைதியடைந்திருந்தான். அவளுக்கு அவனுடைய உடலின் சூடு ஆறதல் அளித்தது. அவளுக்கு இன்னும் அது தேவைப்பட்டது.
எத்தனை நிமிடம் என்று தெரியாது அவள் அவன் தலையை பிடித்துக் கொண்டிருந்தாள். அவன் உறங்கியிருந்தான்.

அவனுடைய உணர்ச்சிகளை கரைபுரள செய்ய இன்று உள்ளே எந்த அரக்கனும் இல்லை.

அவள் தன்னிலை இழந்துக் கொண்டிருந்தாள். அவளும் களைத்திருந்தாள். அவனருகிலே அப்படியே படுத்து உறங்கிவிட்டாள்.

leomohan
31-10-2006, 12:34 PM
3
கண்விழித்த போது 6 மணியாகியிருந்தது. அவன் முகம் கழுவி தியானத்தில் இருந்தான். அவள் எழுந்து அங்கேயே தூங்கியதற்கு தன்னையே கடிந்து கொண்டாள்.

ஒரு சிறிய காகிதத்தை எடுத்து 'எல்லாவற்றிற்கும் நன்றி ராஜ்" என்று எழுதிவிட்டு அங்கிருந்த கிளம்பினாள்.

தியானம் முடித்து எழுந்தவனுக்கு கடுங்கோபம். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போனால் என்ன இவளுக்கு?

சோகமும் துக்கமும் அவன் தொண்டையை அடைத்தது. கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. நான் ஏன் வேறுயாரையாவது காதலிக்க கூடாது? இவளிடம் ஏன் இப்படி அடிமையாக வேண்டும்?

அவளுடைய அறைக்கு சென்றான். சிலியா எனும் தாய்க்காக விரல்களை அதன் மேல் ஓடவிட்டான்.

அழுகை வந்தது. அழவிரும்பவில்லை அவன். நான் ஆண். எனக்கு எந்த பலவீனமும் இல்லை. காதல் தோல்விகள் இல்லையா? என்னுடைய காதலும் தோற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறேன். இனி சிலியா பக்கம் தலைவைத்து படுக்க மாட்டேன்.

இப்படி அவன் முடிவு செய்த சில வாரங்கள் ஆகியிருந்தது. ஒவ்வொரு முறையும் போன் மணி ஓலிக்கும் போது அவளா என்று ஏங்கிய மனதை கண்டித்து அடக்கிக் கொண்டிருந்தான்.


Vivekananda Junior arrives in town - USA Today
எனும் பத்திரிக்கை அவனுக்கு புகழாரம் சூட்டியிருந்தது. அவனுடைய புகைப்படம் கையில் வலது கையில் மைக்குடனும் இடது கை கூட்டத்தை நோக்கியும் உதடுகள் திறந்து வண்ணம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அந்த பக்கத்தை எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டாள் சிலியா.

அன்று அதிகாலை 5.30 மணிக்கு மறுபடியும் ஒரு போன்.

ஏய் மச்சான் முரளி பேசறேன்டா.

ஏய் முரளி எப்படிடா இருக்கே?

நான் நல்லா இருக்கேன்டா மாப்பிள்ளை. எனக்கு நியூ யார்க்கில் ஒரு டிரெயினிங். இப்ப தான் செய்தி வந்தது. இன்னும் 15 நாள்ல விசா டிக்கெட் எல்லா அரேன்ஜ் ஆயிடும். அங்க இருப்பேன்டா நான். ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்றோம் என்றான் மகிழ்ச்சியுடன்.

ஆமாம் டா. எத்தனை வாரம் டிரெயினிங்.

மூனு வாரம்.

ப்ரவீனாவையும் குழந்தையும் அழைச்சிகிட்டு வாடா.

கட்டாயம் டா. அவளுக்கு பாஸ்போர்டு பண்ணி வெச்சதிலேர்ந்து எங்கேயும் கூட்டிக்கிட்டு போகலை.

ஓகேடா. வா பார்ப்போம்.

சிலியா எப்படி இருக்கா?

இருக்காடா!

என்னடா விட்டேத்தியா பேசறே?

அப்புறம் சொல்றேன்டா.

டேய். இப்ப சொல்லு.

சரி நீ இன்னும் மூனு மணி நேரத்தில சாட்லே வா சொல்றேன் என்று விட்டு வைத்தான்.

காமிராவை ஆன் பண்ணுடா முண்டம் - முரளி.

வேணான்டா - ராஜ்.

ஆன் பண்றா தடியா - என்றான் முரளி அதட்டலாக.

வெப் காமிராவில் அவன் முகத்தை பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. அவன் களை இழந்து காணப்பட்டான்.

மச்சான் என்னடா ஆச்சு? சொல்லுடா.

நடந்தவைகளை அப்படியே ஒப்பித்தான் ராஜ். அவனுக்கும் யாரிடமோ சொல்ல வேண்டும் போல் இருந்தது.

முரளி அவனை ஆசுவாசப்படுத்தினான். நான் பேசறேன்டா சிலியாகிட்டே.

வேண்டாம் என்று சொல்ல நினைத்தான் ராஜ். அவனால் முடியவில்லை. காதலில் யாருடைய உதவியும் தேடக்கூடாது தான். ஆனால் காதலர் நடுவே ஒரு பணிப்போர் வந்தால் நல்ல மனமுடைய நடுவர் இருவர் மேலும் அக்கறை உடைய ஒருவர் இருவரிடமும் மதிப்பை பெற்ற ஒருவர் பேசினால் பல தடைகள் அகலும்.


ராஜ்-க்கு ஒரு நப்பாசை. முரளி சொன்னால் கேட்பாள் என்று. அவள் ஊரில் நடந்த பல வி~யங்கள் இவனிடம் சொல்லவில்லை. எப்படி சொல்வாள் வந்த உடனே பிரிந்துவிட்டார்களே? முரளி சொல்லித்தான் விமானத்தில் ஏறுவதற்கு முன் கொடுத்த அந்த காகிதத்தை பற்றி தெரியும். முரளியை அண்ணணாக நினைக்கிறாள். அவன் சொன்னால் கேட்பாள்.

மறுபடியும் ஒரு நம்பிக்கை அவனுள் தோன்றியது. அவன் அவனுக்காக விதித்து கொண்ட தடைகள் சுக்கு நூறானது. முரளியின் வரவை ஆவலாக ஏதிர் நோக்கினான். ஐல் பி தேர் ஃபார் யூ என்று அவன் நண்பன் ஃபிரண்ட்ஸ் தொடரின் ராகத்தில் பாடியது போல் இருந்தது.

leomohan
31-10-2006, 12:36 PM
இரண்டு நாட்களுக்கு பிறகு சிலியாவிடமிருந்து போன் வந்தது.

என்ன வேண்டும் என்று வேண்டா வெறுப்பாக கேட்பது போல் கேட்டான்.

முரளி வர்றான் தெரியுமா?

அவன் எனக்கு முதல்ல நண்பன். அப்புறம் தான் உனக்கு அறிமுகம் என்றான் கடுப்பாக.

சரி. அவனுக்கு நமக்குள்ளே நடந்தது எல்லாம் தெரியுமா?

முந்தாநேத்து அவன்கிட்டே சொன்னேன்.

ஓ. மௌனமானாள்.

அதுக்கு என்ன இப்போ!

நீ சொல்லியிருக்க கூடாது ராஜ்.

ஏன்?

அவங்க நாம சந்தோ~மாக இருக்கறதா நினைச்சிகிட்டு இருக்காங்க!

அதுக்கு நானா காரணம்? நாம ஏன் சேர்ந்து சந்தோ~மா வாழக்கூடாது.

ராஜ். அவங்க வரும்போது அட்லீஸ்ட் நடிச்சிருக்கலாம். அவங்களை சந்தோ~ப்படுத்த.

ஏதுக்கு பொய் சொல்லனும். அவன் என் உயிர் நண்பன். அவனுக்கு சொல்லனும் போல் இருந்தது. சொன்னேன். நான் இனிமே யார்கிட்டே பேசனாலும் உன்கிட்டே கேட்கனுமா?

சரி விடு. சாயந்திரம் ஃப்ரீயா இருக்கியா?

ஏன்?

வெளியே போலாமா?

நீ கூப்பிடறியா?

ஆமாம்.

நீ நினைச்சா கூப்பிடுவே. நினைச்சா வாரக்கணக்கா பேசமாட்டே. நீ என்ன நினைச்சிகிட்டு இருக்க சிலியா? நீ என் உணர்ச்சிகளோட விளையாடறே!

ராஜ். அவங்க வர்றாங்க இல்லை. அவங்களுக்கு சில பொருட்கள் வாங்கனும். அதுக்கத்தான் கேட்கறேன்.

அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.

ராஜ் ப்ளீஸ். நம்ம பிரச்சனையை கொஞ்சம் தள்ளி வைப்போமா?

சிலியா. உனக்கு ஒன்னும் புரியலை. உன்னை பார்த்தா நான் பலவீனமா ஆயிடறேன். உன்னோடு இருந்தா நான் வீக்கா ஃபீல் பண்றேன். நீ என் வாழ்கையிலே வர்றே போறே. உன்னால நான் பல பாதிப்பகளுக்கு ஆளாறேன்.

ராஜ். எனக்கு எல்லாம் தெரியும் ராஜ். நீ கத்தி சொல்றே. நான் சொல்ல முடியலை. நீ என்னை பார்க்காட்டா பலமாயிடறே இல்லையா? ஆனா நீ என்மேல ஏற்படுத்தின பாதிப்பு இன்னும் 100 வரு~ம் இருக்கும். உன்னை பாரக்கறேனோ இல்லையோ.

ராஜ் மௌனமானான்.

ராஜ் ராஜ்

சொல்லு

எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் ராஜ். நீ எந்த அளவுக்கு என் மனசிலே நல்ல பாதிப்பை ஏற்படுத்தினியோ அதே அளவுக்கு அன்னிக்கு என் மேலே கெட்ட பாதிப்பை ஏற்படுத்திட்டே. எனக்கு கொஞ்சம் டைம் கொடு.

எத்தனை நாள் மாசம் வாரம் வரு~ம்?

தெரியலை.

சிலியா என்னை என்ன பைத்தியம்னு நினைச்சியா? உன்னை காதலிச்சதுக்காக நான் பைத்தியமா அலையனுமா?

ராஜ். நீ எனக்காக காத்திருக்காதே. வேற பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கோ.

அதை நீ சொல்லத் தேவையில்லை சிலியா.
அவள் அழுவது போல் இருந்தது.

குரலை மென்மையாக்கிக் கொண்டு 'சிலியா ஐ லவ் யு_ பேபி. ஐ ஜஸ்ட் கான்ட் லிவ் வித்அவுட் யூ. டு யூ அன்டர்ஸ்டாண்ட் தட்"

எனக்கு தெரியும் ராஜ். நீ என்னை நேசிப்பதைவிட நான் உன்னை பல மடங்கு நேசிக்கிறேன்.

பின்னே நமுக்குள்ளே என்ன தடை ஹனி? உனக்கு திரும்பி வர ஈகோ ப்ரப்ளமா?

உன்கிட்டே எனக்கு என்ன ஈகோ ப்ராப்ளம் ராஜ்.

பின்? நான் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கட்டுமா?

உளராதே ராஜ்.

பின்னே என்ன ஹனி வேணும் உனக்கு? ஓவ்வொரு நாளும் எனக்கு 1 வரு~ம் மாதிரி இருக்கு. உன்னை பார்க்கனும். பார்த்துகிட்டே செத்துப்போயிடனும் சிலியா.

ராஜ் வேண்டாம் ராஜ் என்னாலை தாங்க முடியலை. நீ போனை வை. சாயந்திரம் 6 மணிக்கு பாத் மார்க் வா. நீ வரலைன்னா நான் 15 நிமி~ம் காத்திருந்திட்டு போயிடுவேன் - என்று சொல்லி போனை துண்டித்தாள்.

சிலியா சிலியா சே என்றுவிட்டு போனை தூக்கியெறிந்தான்.

(என்னடா கேட்கறா இவ? ஆண்டவா இன்னும் எத்தனை நாள் இவளுக்காக நான் காத்திருக்கனும்)

6 மணி. சரியாக இருவரும் சந்தித்தார்கள். அவள் ஒரு ஜீன்ஸ் டி-~ர்ட் அணிந்திருந்தாள். களை இல்லை. அந்த பெரிய புன்னகை இல்லை. நேராக வந்து அவனிடம் முரளிக்கு ப்ரவீணாவுக்கு குழந்தை ப்ரஜித்துக்கு என்னென்ன வாங்கனும்னு எழுதியிருக்கேன் நீ பாரு என்று ஒரு காகிதத்தை கொடுத்தாள்.

சோர்ந்துப் போய் காரில் வந்து அமர்ந்தான். அவளும் வந்து அமர்ந்தாள்.

இருவரும் ஏதுவும் பேசவில்லை. பிறகு அவன் பேனா எடுத்து சில உருப்படிகளை அடித்தான்.

பாக்கியெல்லாம் வாங்கிட்டு வா நான் வண்டியிலே உட்கார்ந்திருக்கேன் என்றான்.
வா ராஜ் ப்ளீஸ். உன் நண்பனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு உனக்கு தானே தெரியும்.

அவன் தான் உன் அண்ணணாச்சே.

வா ராஜ்.

எனக்கு உடம்பு சரியில்லை சிலியா. நீ போ!

என்ன உடம்புக்கு என்று அவன் கழுத்தையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தவள் நடுநடுங்கிப் போனாள். அவனுக்கு உடல் கொதித்துக் கொண்டிருந்தது.

ஓ மை காட். உனக்கு டெம்பரேச்சர். வா டாக்டர்கிட்டே போகலாம்.

வேண்டாம் சிலியா. எனக்கு பழக்கம் இல்லை. வீட்டுக்குப் போய் மருந்து சாப்பிட்டா சரியாப்போயிடும்.

ஆண் உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் மட்டுமே பலவீனமாக இருப்பதில்லை. அவன் மனம் சரியில்லாமல் இருந்தால் அவன் மைக் டைசனாக இருந்தாலும் நொடிந்துவிடுகிறான். அப்போது அன்பு காட்ட யாராவது இருந்தால் இன்னும் பலவீனமாகிவிடுகிறான். அந்த நிலையில் தான் இன்று ராஜ் இருந்தான்.

சரி வா வீட்டுக்கு போகலாம். நாளைக்கு ~hப்பிங் போறேன் நான்.

வேண்டாம் என்றான் அவன் சொன்னது அவன் காதிலேயே விழவில்லை.

வீட்டிற்கு அழைத்து வந்து அவனை படுக்க வைத்தாள். சுடு நீர் வைத்து மருந்து கொடுத்தாள. அதை உண்டு அவன் உறங்கினான்.

அவள் பல மணி நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


When this deadlock will become wedlock Mother?
என்று தமிழ் கடவுளிடம் ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆ. கடவுளுக்கு என்ன மொழி பிரச்சனை.

அவளால் அழ முடியவில்லை. அவள் மனம் பதறியிருந்தது. அவனுக்கு ஒரு நாள் கூட உடம்பு சரியில்லாமல் போனதில்லை. அளவான உணவு நல்ல தேகப்பயிற்சி நல்ல குணங்கள் இருந்தது அவனுக்கு. அவனுடைய நட்பிற்கு பிறகு அவள் கற்றுக் கொண்ட முதல் வி~யம் சாதாரண நோய்க் கெல்லாம் மருந்து உட்கொள்ளக் கூடாது என்பது தான். ஒவ்வொருவரின் உடலிலும் எந்த நோயையும் தடுக்கும் சக்தி இருப்பதாக அவன் நம்பினான்.

இந்த காதல் நோயுக்குமா மருந்து வேண்டாம் ராஜ் என்று உறங்கிப் போன அவனைப் பார்த்து கேட்டாள்.



You are my medicine darling.

leomohan
31-10-2006, 12:37 PM
முரளி குடும்பத்தை அழைத்துக் கொண்டு சவுத் ரிவர் கரைக்கு சென்றனர் அனைவரும்.

கரையின் அருகே ப்ரவீணாவையும் ராஜகோபாலையும் பேசவிட்டு முரளி சிலியாவிடம் சென்றான்.

சிந்து இங்கே வா என்று புல்வெளியில் அமர்ந்து கொண்டு அவளை அருகில் அமர்த்தினான்.

அவளும் யாராவது தன் பிரச்சனையை தீர்த்து வைத்தால் பரவாயில்லை என்று நினைத்தாள்.

உனக்கு என்ன வயசு?

ஏன் என்பது போல பார்த்தாள்.

சரி அதைவிடு.

உனக்கு கல்யாணம் என்றால் உன் குடும்பத்திலிருந்து யாரை கூப்பிடுவாய்?

கிரு~;ணன் ராஜூ பிறகு நீங்கள்.

முட்டாளா நீ?

ஏன்.

நாங்கள் தான் உன் கல்யாணத்தை ஏற்பாடு செய்வோம். எங்களுக்கே நீ அழைப்பு கொடுப்பாயா?

மன்னிக்கவும். என் நண்பர்களை அழைப்பேன்.

உன் அம்மா?

அம்மாவுக்கு சொல்வேன். அவள் கணவன் அனுமதித்தால வருவாள்.

உன் அப்பா?

அவருடன் தொடர்பே அறுந்துவிட்டது.

யாருடன் நீ நெருக்கம்?

ரீடா ஜூடி. அவ்வளவுதான்.

அதற்கு பிறகு?

நீங்கள் எல்லாம் தான்.

நான் சொன்னால் கேட்பியா?

ம்.

உனக்கும் ராஜூக்கும் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும்.

..

அவன் செய்தது தப்பு தான். மன்னிக்க முடியாத தப்பு தான். அதை சரியென்று சொன்னால் நான் தப்பு.

..

உன்னை எனக்கு நன்றாக தெரியும். நீ இளகிய மனம் கொண்டவள். உன்னால் வேறொருவனை காதலிக்க முடியாது. சரியா?

ஆமாம்.

ராஜ் வேறு திருமணம் செய்துக் கொள்வான் என்று நீ நினைக்கிறாயா?

ம். மாட்டான்.

அவன் திருமணம் செய்தக் கொள்ளவில்லையென்றால் அவன் அப்பா அம்மா மிகவும் க~;டப்படுவார்கள். சரியா?

ஆம்.

அவர்களுக்கும் வயதாகிறது. சரியா?

ஆம்.

நீ அவர்களை உன்னுடைய சொந்த தாய் தந்தைகயாக நினைக்கிறாய் சரியா?

ஆம்.

அவர்கள் மன வருத்தம் அடைந்தால் பரவாயில்லையா?

இல்லை.

உங்களுக்குள் இந்த பிரச்சனை இல்லையென்றால் இந்த திருமணம் நடந்திருக்கும் அல்லவா?

ஆம்.

அது தான் இல்லை பெண்ணே!

நீ வேறு மதம். வேறு நாடு. சாதி. அசைவம். ராஜகோபால் தமிழ் பிராமணன். இந்து. சைவம். உன்னை ஒரு போதும் அவர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஆனால் உன்னுடைய கடின உழைப்பால் மன உறுதியால் ஒரு இமய மலையை உடைத்திருக்கிறாய். இது பெரிய சாதனை தெரியுமா?

..

இப்போது அனைவரும் உங்கள் இருவர் திருமணத்தையே எதிர்பார்த்திருக்கின்றனர். உன் மனம் மாறும். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது மாறும். நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வீர்கள். சரிதானே?

ஆம்.

நீ வாழ்கை முழுவதும் இப்படியே இருக்கப்போவதில்லையே?

இல்லை.

அவனும் வாழ்கை முழுவதும் இப்படியே இருக்கப்போவதில்லையே?

இல்லை.

ஒரு வேளை உன் மேல் உள்ள காதலால் அவன் தற்கொலை செய்துக் கொண்டால்?

இல்லை. ராஜ் அது மாதிரி எதுவும் செய்யமாட்டான்.

அவனுக்கு உடல் சரியில்லாமல் போனதை இதற்கு முன் பாத்திருக்கிறாயா?

இல்லை.

அவன் எவ்வளவு சோர்ந்து போயிருக்கிறான் தெரியுமா?

ஆம்.

இந்த மனநிலையில் அவன் செத்துப்போனால்.

இல்லை. அவன் அப்படி செய்யமாட்டான்.

செய்யமாட்டானோ செய்வானோ செய்துவிட்டால்.?

அவள் யோசிக்கத் தொடங்கினாள். யாரும் இதைப்பற்றி அவளிடம் சொல்லவில்லை. அதை பற்றி யோசிக்கவே அஞ்சினாள். கண்களிலிருந்து நீர்துளிகள்.

அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு முரளி அன்பா சொன்னான் - கண்ணா நீ என் தங்கச்சி தானே? அண்ணா சொன்னா கேட்கனும். நீங்க இரண்டு பேரும் சந்தோ~மா இருந்தா நாங்க எல்லோரும் சந்தோ~மா இருப்போம். நாளைக்கு மாறப்போற மனம் இன்னிக்கே மாறனதா நினைச்ச நீ அவனோடு சேர்ந்திடும்மா. உனக்கும் அவனுக்கும் இது தான் நல்லது.

அவள் அவன் தோளில் சாயந்து அழுத் தொடங்கிவிட்டாள். அவளை ஆற்றங்கரையில் தனியே விட்டு ப்ரவீணாவிடம் சென்று கண்களால் ஜாடை காட்டினான்.

ப்ரவீணா சிலியாவின் அருகில் வந்து அமர்ந்தாள். ஒரளவு ஆங்கிலத்தில் சிந்து நீ இன்னும் தமிழ் பெண்ணா மாறவில்லை என்றாள் தடாலடியாக.

என்ன? இன்னும் என்ன செய்யவேண்டும் என்று அழுகை மாறாமல் கேட்டாள் அந்த அமெரிக்க குழந்தை.

நான் என்ன சொன்ன உனக்கு? நீ சென்னை வந்தப்போ? ஒரு சராசரி பெண் தன் புரு~ன் குடிகாரனா புகைப்பிடிக்கிரானா என்று பார்ப்பதில்லை. அவன் தன்னையே நினைக்கிறானா என்று தான் பார்க்கிறாள்? நான் சொன்னது நினைவிருக்கிறதா?

ஆம்.

ராஜ் உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறான் சரியா?

ஆம்.

அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இல்லை ப்ரவீணா. அவன் என்னை உயிரளவிற்கு நேசிக்கிறான் என்று எனக்கு தெரியும். ஆனல் என்னை அவன் அன்றிரவு மிருகத் தனமாக கெடுத்துவிட்டான். என் விருப்பம் இல்லாமல். நான் என்னையே தர தயாரக இருந்தேன். ஆனால் இந்த முறையில் அல்ல.

ப்ரவீணா பொறுமையிழந்தாள். பொரிந்து தள்ளினாள்.

சரி நீ இந்திய பெண். தமிழ் பெண். நான் ஒத்துக் கொள்கிறேன். எந்த தமிழு; பெண்ணாவது ஒரு ஆணுடைய அறையில் திருமணதிற்கு படுப்பாளா? நீ எண்ணையை தூண்டிவிட்டு நெருப்பு எரிகிறது என்றால் என்ன நியாயம்? அவன் குடித்திருக்கிறான் என்று தெரிந்தவுடனே நீ உன் அறையில் சென்று படுத்திருக்க வேண்டியது தானே?

முரளியின் கோணத்தை விட ப்ரவீணாவின் கோணம் தடாலடியாக இருந்தது.

leomohan
31-10-2006, 12:39 PM
5 தொடர்ந்து அதிர்ந்து நின்றாள் சிலியா.

சிந்து அவனோட பலவாரம் நீ படுத்தே. என்னிக்காவது உன்னுடைய உணர்ச்சிகளுக்கு எதிரா அவன் நடந்தானா?

இல்லை.

அப்போதெல்லாம் அவன் ஏதாவது செய்யமாட்டானா என்று நீ ஏங்கியதுண்டா?

ஆம்.

அப்போதே நீ மனதால் கெட்டுவிட்டாயடி தோழி.

என்ன?

ஆமாம். நீ இல்லாததால் தான் அவன் கோட்பாடுகளை மீறினான். நீ அவனுக்கு சரியான பொருத்தம் இல்லை.

என்ன? இது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

நீ விழுப்புரத்தில் இருக்கும்போது அவன் போன் செய்து இன்றே வந்துவிடு என்று கெஞ்சினான் இல்லையா?

ஆமாம்.

நீ மட்டும் அவனை நிஜமாக அறிந்தவளாக இருந்தால் அவன் மனநிலையை புரிந்து அன்றே ஊருக்கு சென்றிருக்க வேண்டும்.

அவன் விளையாட்டாக சொன்னான் என்று நினைத்தேன்.

சிந்து ஆண்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அழமாட்டார்கள். அவன் அன்று உன்னிடம் அழுதான் என்றால் பிரச்சனை எத்தனை பெரியது என்று நீ உணர்ந்திருக்க வேண்டும். நீ எப்படி உணர்வாய். நீ ஒரு அமெரிக்க பெண்மணி. உன் வாழ்கை முறை வேறு. அவன் வாழ்கை முறை வேறு. இதுவே ஒரு இந்தியப் பெண்ணாக இருந்தால் அனைத்தையும் விட்டு அவனிடம் போயிருப்பாள் அன்றே!

வாயடைத்துப் போனாள் சிலியா.

ஆம் சிந்து. நீங்கள் கலாச்சாரத்தை மீறிய ஒரு புரட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இதில் இரண்டு புறமும் தவறு நடக்க வாய்பிருக்கிறது. நீ அவனை சந்தித்த சில வாரங்களிலே அவனிடம் வந்து படுத்ததை நினைத்து அவன் உன்னை கற்பிழந்தவள் காரெக்டர் இல்லாதவள் என்று முடிவுக்கு வந்தால் உனக்கு சம்மதமா?

ம். இல்லை. கட்டாயம் இல்லை.

அவன் உன்னை நம்பினான். உன்னை மதித்தான். உன் உணர்வுகளை மதித்தான். நீயும் அவன் உணர்வுகளை மதிப்பவளாக இருந்தால் இந்த வி~யத்தை மறந்து அவனுடன் உன் வாழ்கையை துவக்கு. இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை.

ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்கு தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.

ப்ரவீணா வைத்தியம் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.

ஒருவேளை அன்றே நான் போயிருந்தால்? ஒரு வேளை அவன் குடித்திருக்கிறான் என்று தெரிந்ததும் என் அறையில் சென்று படுத்திருந்தால்? என்னை சராசரி அமெரிக்க பெண்ணாக அவன் நினைத்திருந்தால்?

ஒருவேளை அவன் தற்கொலை செய்துக் கொண்டால்? இந்த நினைப்பு அவளை வாட்டியது. அதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஓடிச் சென்று முரளி ப்ரவீணாவை கட்டியணைத்தாள். மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

leomohan
31-10-2006, 12:40 PM
முரளியும் ப்ரவீணாவும் இன்னும் ஒரு முறை சிலியாவைப் பார்த்து பேசியிருந்தால் அவர்களின் திருமணமே நடந்திருந்திருக்கும்.

ஆனால் சிலியா வேலை நிமித்தமாக கலிபோர்னியா போகவேண்டியதாயிற்று.

முரளியும் பயிற்சி முடிந்து ஊர் சென்று விட்டான்.

இரண்டு வாரமாகியும் சிலியாவிடத்திலிருந்து எந்த தகவலும் இல்லை.

சிலியாவின் மனதை மாற்றுவது கடினம் என்று நினைத்தான் ராஜ்.

அப்போது ஒரு நாள் திடீரென்று ஊரிலிருந்து ஒரு தகவல். அவன் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று. பதறிப்போய் ஊர் கிளம்பினான்.

க்ரிஸ் விமானதளம் வரை வந்து வழியனுப்பினான். கவலை;படாதே ஒன்னும் ஆகாது என்று ஆறதல் சொன்னான். நாரியும் வந்திருந்தான்.

கூல் மேன். என்றான்.

விமானம் கிளம்பும் வரை சிலியாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று இரண்டு மனதில் இருந்தான். கிளம்புவதற்கு சில விநாடிகளுக்கு முன் அம்மாவின் உடல் நிலை சரியில்லை. அவசரமாக ஊருக்கு போகிறேன் - ராஜ் என்று ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிவிட்டு தொலைபேசியை அணைத்தான்.

இந்த செய்தி கிடைத்ததும் துடிதுடித்தாள் சிலியா. உடனே ராஜ்-க்கு போன் போட்டாள். ஆனால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு வேளை விமானத்தில் ஏறிவிட்டானோ?

உடனே ரீட்டாவுக்கு போன் செய்தாள். அவளும் தன் குழந்தையுடன் வர தயாரானாள்.

3-4 நாட்களில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு சென்னை வந்து அடைந்தாள். யாருக்கும் தகவல் சொல்லவில்லை. அவளே வாடைக வண்டி அமர்த்தி விழுப்புரம் சென்றடைந்தாள்.

பாரதி நகர் அடைந்த அவள் வெளியில் முரளியின் குவாலிஸ் கிருஷ்ணனின் ஹோண்டா ராஜூவின் டிவிஎஸ் என்று நிற்பதைப்பார்த்து பதறிவிட்டாள்.

திண்ணையில் சுருதி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் ராஜூவின் மனைவி சுதா. முரளியும் ராஜகோபாலும் ஒரு ஓரத்தில் நின்றிருந்தனர்.

வாட் ஹாப்பென்ட். வாட் ஹாப்பென்ட் டு ஆன்ட்டி என்று கதறிக் கொண்டே உள்ளே சென்றாள். பதட்டத்தில் தாய் மொழி வருவது சகஜம் தானே. என்ன தமிழ் படித்திருந்தால் என்ன.

உள்ளே படுக்கையறையில் ராஜின் அம்மா படுத்திருந்தார். அவர் அருகில் அவருடைய இடக்கையை தன் வலக்கையில் பிடித்தவாறு அவன் தந்தை. சாதாரணமாக வந்த காய்ச்சல் இரண்டு வாரமாக நீடித்துவிட்டதாம். மருத்துவர் இன்னும் 24 மணி நேரம் வரை ஒன்றும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்.

நேராக சென்று மாமியின் அருகில் உட்கார்ந்து அவள் வலக்கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள். மாமா அவளைப் பார்த்தும் கண்ணில் நீர் வழிந்தது அவருக்கு.

சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு கண்விழித்தாள் மாமி. கொழந்தே சிந்து வந்திட்டியா நீ.

வலதுபுறம் மருமகள். இடது புறம் கணவன். வேறென்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு? உணவைத்தேடும் எலி போல ஒரு பெண் தன் மகனுக்கு பெண் தேடுகிறாள். தன் பராம்பர்யத்தை கட்டிக் காக்கும் ஒரு பெண்ணாக தன் கணவனை மதிக்கும் ஒரு பெண்ணாக தன் மகனை பாதுகாக்கும் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதே இந்த அலைச்சல். அப்படிப்பட்ட பெண் கிடைத்ததும் அவளுக்கு மகன் தேவைபடுவதில்லை. மகனைக் கூட மருமகள் வழியாக பார்க்கிறாள். இன்று மாமிக்கு அந்த ஒரு நிம்மதி. வெள்ளைக்காரப் பெண்ணாக இருந்தால் மேற்படி அனைத்து தகுதியும் சிந்துவிற்கு இருப்பதாக அவள் நம்பினாள்.

மெதுவாக அவள் பேசினாள். இரண்டுவாரம் வெறும் நீராகாரம் தான். பல கிலோ இடை இழந்திருந்தாள்.

சிந்து மாமாவுக்கு ரொம்ப மறதி. பேப்பர் படிச்சிட்டே காபி குடிக்க மறந்திடுவார். வேளைக்கு சாப்பிட மாட்டார். அவருக்கு காஸ் டிரபிள் வேற! நீ அவரை நன்னா பார்த்துக்கனும். என்னமோ ஒரு அதிகாரி வேலைவிட்டு போகும் போது இன்னொரு அதிகாரிக்கு தன் பணிகளை ஒப்புவிப்பது போல ஒப்புவித்துக் கொண்டிருந்தார் மாமி.

அதோ அந்த கதை திற. அந்த மஞ்சள் டப்பாவை எடுத்து வா.

அவர் சொல்படி செய்தாள் சிலியா.

இதுல நாட்டு மருந்து இருக்கு. உன் மாமாவுக்கு தினமும் தேன்ல கலந்து கொடு என்ன?

என்னமோ சிலியா வீட்டோடு தங்கிவிட்டதைப் போல வேலைகள் ஒப்படைத்தாள் அந்தத் தாய்.

இந்த ஆத்தை நீ நன்னா பார்த்துக்கணும். சரியா?

அவள் சொல்வதற்கெல்லாம் சரி சரி என்றாள் சிலியா. அவள் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக.

அழாதடி கொழந்தே! நீ வந்திட்டில்ல. எனக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் தூங்கச் சென்றாள்.

சுருதியை முதன் முதலாக பார்த்த ரீட்டாவுக்கு கண்களில் கண்ணீர்.

ஐயாம் ஸாரி சுருதி என்றாள்.

முதுகலை படித்த சுருதி ஆங்கிலத்தில் அழகாக பதில் சொன்னாள் -

Rita
I know love is indivisible. But definitely its multipliable

அவளை கட்டியணைத்து முத்தமிட்டாள் ரீட்டா.

என்ன பெயர் குழந்தைக்கு என்று கேட்டாள்.

ராம்.

ஓஹோ. சரிதான்.

மொட்டை மாடியில் நண்பர்கள் உறங்க ஒரு படுக்கையறையில் ரீட்டாவும் அவள் குழந்தையும் சுருதி ப்ரவீணா குழந்தை ஒரு படுக்கையறையிலும் சுதா ஹாலிலும் என்று முடிவாயிற்று. மாமா மாமியைவிட்டு அகலவில்லை. சிலியாவும் துணி கூட மாற்றாமல் அங்கேயே இருந்தாள்.

நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பல வி~யங்கள். எப்போதும் கிரு~;ணன் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்வான். ராஜகோபாலும் தான். முரளி தான் தீர்த்து வைப்பான். ராஜூவின் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள். கேலி செய்வார்கள். ஆனால் அவன் அறிவுரைபடி தான் கடைசியில் எல்லாம் நடக்கும். சமயோசிதமான அறிவுரைகளை அள்ளி வீசுவான்.

மச்சான் நாளைக்கு நாம செல்லியம்மன் கோவில் போறோம்டா என்றான் ராஜூ.
அம்மா இப்படி இருக்கற நிலமையில எப்படிடா? - ராஜ்.

டேய். மருமக வந்திட்டால்ல நாளைக்கு பாரு மாமி எழுந்திரிச்சு உட்கார்ந்திடுவாங்க.

டேய். முரளி ப்ரவீணா அவ்வளவு சொன்ன பிறகும் அவ கேட்கலைடா.

டேய். நாளைக்கு நாம எல்லாரும் போறாம். அவ்வளவுதான் என்றான் ராஜூ தீர்க்கமாக.

பிறகு கிருஷ்ணனும் ராஜகோபாலும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

முரளியை மட்டும் தனியாக கூப்பிட்டு ஏதோ கிசுகிசுத்தான் ராஜூ. சரியென்று இருவரும் கிளம்பினர்.

டேய் எங்கடா போறீங்க?

தம் அடிக்க?

சரி போங்க என்றுவிட்டு சம்பாஷணையை தொடர்ந்தான் கிரு~;ணன்.

கீழே வந்த சுதாவிடம் பணம் கொடு என்று கேட்டான். ராஜூ சம்பள கவரை அப்படியே சுதாவிடம் கொடுத்துவிடும் பழக்கம். மனைவி வேலை செய்யவில்லையென்றால் அவர்கள் தான் வீட்டை நடுத்துகிறார்கள் என்ற உணர்வை கொடுக்க பணம் அவசியம். அது மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் அவளிடம் பணம் பெற்று செல்லும் போது கணவனின் மீது அவளுடைய நம்பிக்கை அதிகரிக்கிறது. பொய்யாக கணக்கு கேட்பதும் என்ன வீண் செலவு என்று கண்டிப்பதும் அவளுக்கு குடும்பத்துடன் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. இது ராஜூவின் தத்துவம்.

சுதாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.

பிறகு இருவரும் வண்டியை சற்று தூரம் தள்ளிக் கொண்டு வந்து பாண்டி ரோட்டிலிருந்து வண்டியை துவக்கி கண்ணன் தியேட்டர் அருகே உள்ள சிறிய பெட்டிக் கடையில் நிறுத்தினர்.

இரண்டு கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்.

வாங்கி புகைத்துவிட்டு வண்டியை நேராக பெரிய கடைவீதி தெருவுக்கு எடுத்துச் சென்று சீத்தாராம் தியேட்டருக்கு அருகில் உள்ள பூக்கடையில் நிறுத்தினான்.

அங்கே கடைக்காரனுக்கு பணம் கொடுத்து ஏதோ விவரங்களை கூறினான்.

leomohan
31-10-2006, 12:40 PM
காலையில் மாமா கண்விழித்து பார்த்த போது மாமி இல்லை. சிலியாவும் உட்கார்ந்தபடியே தூங்கியிருந்தாள். அவளை எழுப்பி

வேர் இஸ் மாமி என்று கேட்டார்.

மாமி குளித்து முடித்து துளசிக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள்.

மாடியிலிருந்து கீNழு பார்த்த ராஜகோபால்

அம்மா எப்படி இருக்கே? என்று கேட்டான்.

நான் நல்லா இருக்கேன்டா.

அம்மா எங்களை எல்லாம் இப்படி பயப்படுத்திட்டியே?

டேய் பகவான் இருக்கான்டா. எதுக்கு பயம். சீக்கிரம் கீழே இறங்கி வா. கோவிலுக்கு போலாம் என்றாள்.

ராஜூ சுதா முரளி ப்ரவீணா சுருதி என்று அனைவரும் தயாராக இருந்தனர். மனோரமா ஓட்டலிருந்து அனைவருக்கும் இட்லி சாம்பார் பொங்கல் முரளி ஸ்பான்ஸர்.

மனைவியை இப்படி பார்த்த மாமாவுக்கு ஒரு பெரிய பலம்.

எல்லாரும் கிளம்புங்க என்ற அனைவரையும் அவசரப்படுத்தி குளிப்பாட்டி தயார் செய்தார் மாமா. மிலிட்டரி மேன் இல்லையா? எல்லாம் முறைப்படி நடக்கவேண்டாமா?

குவாலிஸ் என்றால் குவாலிஸ்தான். இன்னும் எத்தனை பேர் வந்தாலும் ஏற்றிச் செல்லும்.

முரளி வண்டி ஓட்ட அவனருகில் ராஜகோபால் ராஜ் கிரு~;ணனன் என்று நண்பர்கள் பட்டாளம். பின்னால் இருந்த சீட்டில் சிலியா சிவப்பு பட்டுப்புடவையில் மாமா மாமியுடன். எதிர்எதிரே இருக்கும் கடைசி சீட்டில் ஒரு புறம் ரீட்டா தன் குழந்தையுடன் ப்ரஜித் அருகில் சுதாவும் ப்ரவீணாவும் சுருதியுடன்.

நேராக சீத்தாராம் தியேட்டரின் அருகில் நின்றது வண்டி. ராஜகோபால் என்ன் என்ன என்று கேட்டான்.

முரளி சாமிக்கு பூ என்றான்.
பூக்காரனோ பெரிய பொட்டலங்களை வண்டியின் மேல் இருந்த லக்கேஜ் காரியரில் போட்டான்.

வண்டி நேராக செல்லியம்மன் கோவில் முன் நின்றது.

அனைவரும் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். அம்மன் இன்று அன்புருவாய் காட்சியளித்தாள். அழகான மஞ்சள் பட்டு சேலை. புதிதாக பறித்த வேப்பிலை. எலும்பிச்கை பழம். பெரிய குங்குமம். இந்த கண்கொள்ளா காட்சியை அனைவரும் அருகில் நின்று மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சுருதியும் சுதாவும் ஆளுக்கு ஒரு மாலை எடுத்து வந்து ராஜகோபாலிடம் ஒன்றும் சிலியாவிடம் ஒன்றும் கொடுத்தனர்.

சுருதி ராஜகோபாலிடம் இம் அவங்களுக்கு மாலை போடுங்க என்றாள்.

என்னா?

ஆமாம். இன்னிக்கு உங்களுக்கு கல்யாணம்?

என்ன? என்றான் ராஜ் குழப்பத்துடன்.

ஆமாம்பா எங்களுக்கு காலையிலேயே ராஜூவும் முரளியும் சொல்லிட்டாங்க. கோ அஹெட் என்றார் அப்பா.

சிந்து அவன் பயப்படறான் நீ போடு மாலையை என்றாள் அம்மா.

சிலியா திகைத்து நின்றிருந்தாள்.

ராஜ் பயத்துடன் அவளைப் பார்த்து போடுட்டுமா என்ற பார்வையைப் பார்த்தான. அவள் கண்களை அசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

அவன் அவளுக்கு மாலையிட்டான். சிந்துவும் அவனுக்கு மாலையிட்டாள்.

ராஜூ தன் கையில் வைத்திருந்த மஞ்சள் கயிற்றை பூசாரியிடம் கொடுத்து இதை அம்மன் காலடியில் வைத்து கொடுங்க என்று சொல்ல அவரும் அப்படியே செய்தார்.

ராஜ் அதை பயபக்தியுடன் எடுத்து அவள் கழுத்தில் கட்டினான். ராஜ் திணறிப்போயிருந்தான். அம்மாவின் உடல் நன்றாக ஆனதும் அம்மனின் அருள் கிடைத்ததும் அவனை திக்குமுக்காடி செய்திருந்தது.

ராஜூவை முதலில் இறுக்கி அணைத்தான். தாங்க் யூ டா என்றான். டேய் உதைபடுவ என்றான் ராஜூ பதிலுக்கு.

பிறகு முரளியையும் கிரு~;ணனையும் அணைத்து தாங்க்ஸ் என்றான்.

பிறகு இருவரும் மாமா மாமியின் காலடியில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.

அம்மன் காலடியில் விழுங்க கொழைந்தகளா என்றனர் பெரியோர்.

ராஜ்-ம் சிந்துவும் சா~;டாங்கமாக அந்த அம்மனை விழுந்து வணங்கினார்கள். சிந்துவின் கண்களில் தாரைதாரையாக தடையின்றி நீர் கொட்டியது. தாங்க் யூ மதர் என்றாள் பல முறை.

கவலைப்படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேர்த்து வைப்பா கவலைப்படாதே சகோதரா என்று தேவா வானோலியின் ஏதோ அலைவரிசையிலிருந்து பாடிக் கொண்டிருந்தார்.

கையிலிருந்த சிறு காகிதத்தை எடுத்து ராஜிடம் சிந்து காட்டினாள். இது தான் அம்மனிடம் எனது அடுத்த கோரிக்கை என்று சொன்னாள்.

என்ன குழந்தை வேண்டும்னா? என்று கேட்டபடியே அதை வாங்கி பிரித்து படித்தான்.

அம்மா நான் சாகும்போது சுமங்கலியாக சாகவேண்டும் என்று எழுதியிருந்தது.

மிகவும் நெகிழ்;ந்து போய் அங்கே அவளை இறுக அணைத்தான். ஆனால் அவளை உண்டியலில் போடவிடாமல் தடுக்க முயன்றான். அவள் அவனுடைய கைகளை அகற்றிவிட்டு அந்த வேண்டுதலை உண்டியலில் போட்டாள்.

அம்மன் புன்னைகயுடன் பார்த்தாள். கடல் போன்ற அன்பை தன்னுள் வைத்து வருபவர்களையெல்லாம் நலமாக்கி வளமாக்கி ஆசி புரியும் அம்மா அன்று ஒரு அமெரிக்க பெண்ணின் மனமாற வேண்டுதலையும் நிறைவேற்றி வைத்தாள்.

'உன் கோரிக்கை கேட்டவுடன் அம்மன் மனதுக்குள்ளே சிரிப்பாள்
இந்த குழந்தை கேட்டதை ஓடோடி கொண்டு வந்து தருவாள்"

செல்லியம்மன் சிலையாகவில்லை. அப்படி சிலையானாலும் அவள் செவிடாவதில்லை.

அறிஞர்
31-10-2006, 12:48 PM
உங்கள் அனுபங்களை கொடுத்து இருக்கிற மாதிரி தெரியுது.

இதை கொஞ்சம் பொறுமையாக தான் படிக்கனும் போல.. படித்துவிட்டு.... கருத்துக்களை தருகிறேன்....

மதி
31-10-2006, 01:16 PM
முழுமூச்சா படிச்சுட்டேன்...!
முதல் பாகமும் சரி...இரண்டாம் பாகமும் சரி..அருமையோ அருமை...!
வாழ்த்துக்களும்..பாராட்டுக்களும்...!

leomohan
31-10-2006, 01:27 PM
உங்கள் அனுபங்களை கொடுத்து இருக்கிற மாதிரி தெரியுது.

இதை கொஞ்சம் பொறுமையாக தான் படிக்கனும் போல.. படித்துவிட்டு.... கருத்துக்களை தருகிறேன்....

ஐயோ இல்லை ஐயா என் அனுபவம் இல்லை. அப்படி பார்த்தா கடைசி பேட்டி கூட என் அனுபவம்னு சொல்லிடுவீங்க போலிருக்கு. :)

leomohan
31-10-2006, 01:28 PM
முழுமூச்சா படிச்சுட்டேன்...!
முதல் பாகமும் சரி...இரண்டாம் பாகமும் சரி..அருமையோ அருமை...!
வாழ்த்துக்களும்..பாராட்டுக்களும்...!

நன்றி ராஜேஷ். ஆனா பாகம் மூன்றும் இருக்கே. அதையும் படிச்சிட்டு உங்களுக்கு பிடிச்ச பாகம் எதுன்னு சொல்லுங்க.

முதல் பாகத்தில் உங்களுக்கு பிடிச்ச பாத்திரம் எது.

meera
01-11-2006, 06:18 AM
மோகன்.

கதை அருமை.இது தவிர சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

leomohan
01-11-2006, 06:59 AM
1
ஒருவேளை அவன் தற்கொலை செய்துக் கொண்டால்? இந்த நினைப்பு அவளை வாட்டியது. அதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஓடிச் சென்று முரளி ப்ரவீணாவை கட்டியணைத்தாள். மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

குறிப்பு
கதை ப்ரவீணாவும் முரளியும் சிலியாவை அமெரிக்காவில் சந்தித்துவிட்டு வந்த பிறகு தொடர்கிறது. ஆக நீங்கள் இரண்டாம் பாகம் படித்ததையே மறந்துவிட்டு படியுங்கள். தொடர்சிக்காக கடைசி இரண்டு பத்திகளை கொடுத்திருக்கிறேன்.








1

நமக்கு ஒரு புதிய ப்ராஜெக்ட் கிடைத்திருக்கிறது. நமக்கு சில .நெட் டெவலெப்பர்ஸ் தேவைப் படுது. நீங்கள் சென்னை சென்று நேர்முகத் தேர்வை நடத்தி சில பேரை தேர்ந்தெடுத்து வரவேண்டும் என்று ராஜின் மேலாளர் சொன்னார் ஒரு நாள்.

ஆஹா நல்ல வாய்ப்பு. அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு அம்மனையும் பார்த்துவிட்டு வரலாம்.


சரி என்றான்.


சென்னை வந்திறங்கியதும் முரளியுடன் பேசினான். அவன் தவிர்க்க நினைத்தை கேள்வி வந்தது.


சிலியா உன்னோடு பேசினாளா?


இல்லைடா.


என்ன? என்ன அழுத்தக்கார பொண்ணா இருக்காடா இவள்? இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு பெண்ணா?


விடுடா. எனக்கு மூன்று நாள் இண்டிர்வ்யூ இங்கே. முன்னாலே விளம்பரம் கொடுத்துட்டோம். வெள்ளக்கிழமை ராத்திரி ஊருக்கு போறேன். நீயும் வரியா?


வர்றேன்டா. நாம கிருஷ்ணன் ராஜூ எல்லாம் சேர்ந்து போவோம்!
சரி என்றான்.

பல பேர் வந்திருந்தனர். அனைவரிடமும் தொடர்ந்து பேசியதில் களைப்பாக இருந்தான். கடைசியில் மாலினி.

மாலினி. 10வது 12வது மாநிலத்திலே முதல் மதிப்பெண். பிஎஸ்ஸி கம்ப்யூட்டர். எம் சி யே. அனைத்திலும் தங்கப்பதக்கம்.

எந்த கம்பெனியில் நீங்கள் பணிபுரிகிறீர்கள்?

நான் ஹூய்க்ஸில் வேலை செஞ்சேன். இப்ப விட்டுட்டேன். வேலை தேடிக்கிட்டு இருக்கேன்.

ஏன் வேலையை விட்டீங்க?

நான் இன்னும் சாலேன்ஜிங் ப்ராஜெக்ட்ஸ் பண்ணனும் நினைக்கிறேன் சார். இங்க அத்தனை வாய்ப்பு இல்லை.

வேலை கொடுத்தால் எப்போது வர இயலும்?

உடனடியாக சார்.

எங்கள் வேலை மிகவும் அவசரமாக இருப்பதால் முதலில் உங்களை பி1 விசாவில் தான் அழைத்து செல்ல முடியும். சரியா?

பரவாயில்லை சார்.

சரி ஒரு மெனு டிரவன் ப்ரோகிராமில் ஆப்செஜ்க்ட்ஸ் எப்படி ரீயூஸ் பண்ணுவீங்கன்னு ஒரு உதாரணம் செய்து காட்ட முடியுமா?

தாராளமா சார்.

நீங்க சார் சொல்லும் பழக்கத்தை விடுங்க. என்னை ராஜகோபால் ராஜ் இல்லை கோபால் இப்படி கூப்பிடலாம்.

சரி சார்.

தன்னுடைய லாப்டாப்பில் மைக்ரோஸாஃப்ட் விஷூவல் .நெட் ப்ரோகிரமை இயக்கி அவள் பக்கம் திருப்பினான். அவள் எழுத தொடங்கவே அவளை அளக்கத் தொடங்கினான்.

எளிமையாக இருந்தாள். ஏழை குடும்பமாக இருக்கலாம். கண்கள் சுறுசுறுப்பாக லாப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தது. அவளுடைய மென்மையான கைகள் வேகமாக ஏதோ தட்டிக் கொண்டிருந்தன. ஒரு கையில் மட்டும் வளையல். தன்னைப் போலவே வலது கையில் கடிகாரம் அணிந்திருப்பதை கண்டான். வெள்ளைநிற சுடிதாரில் பளிச் சென்று இருந்தாள். கழுத்தில் ஒரு மெல்லிய செயின். நெற்றியில் சிறிய விபூதி பட்டை. தமிழ் பெண்மணி!

உதடுகளை அடிக்கடி ஈரப்படுத்திக் கொண்டிருந்தாள். பதட்டத்தில் இருக்கிறாள் போலும். சிறிய உதடுகள். சிவந்திருந்தன இயற்கையாக. அவளிடம் மெல்லிய வேர்வை வாடை. பஸ் பயணம் போலும். இன்றைய பெண்மணிகள் சந்திக்கும் ஒரு தினசரி போர். பஸ் பயணம்.

லாப்டாப்பை அவன் பக்கம் திருப்பி ஆச்சு சார் என்றாள்.

மாலினி. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கங்க. நான் இப்ப இந்த ப்ரோகிராமை கம்பைல் பண்ணப்போறேன். ஒரு எர்ரர் இருந்தாலும் உங்களுக்கு வேலை கிடைக்காது. சரியா?

கட்டாயமா சார். நான் கொஞ்சம் மெதுவாக தான் வேலை செய்வேன். ஆனா என் ப்ரோகிராமில் எந்த எர்ரரும் வர வாய்பே இல்லை.

அவளுடைய தைரியம் மன உறுதி தன்னம்பிக்கை அவனை ஈர்த்தது.

அவனுக்கு மெதுவாகவும் அதே சமயத்தில் சரியாகவும் வேலை செய்பவர்களே வேண்டும். இதற்கு முன் வேலைக்கு எடுத்த சிலர் கார் ரேஸ் போல வேலை செய்துவிட்டு நான்கு நாட்கள் அமர்ந்து தவறை சரி செய்ய தலையை பிய்த்துக் கொள்வார்கள்.

அவன் மெதுவாக எஃப் 5 பட்டனைத் தட்டினான். 0 எர்ரர்ஸ் சக்சஸ்ஃபுல்லி கம்பைல்ட் என்று வந்தது.

யூ காட் யூவர் ஜாப் யங்க லேடி என்று கைகுலக்கினான். மற்ற விபரம் இந்த கவரில் இருக்கிறது. உங்களுக்கு பி1 விசாவுக்கான ஏற்பாடுகள் செய்றோம். முதல் விமானத்தில் ஊர் வந்து சேருங்கள். உங்களுக்கு சேரவிருப்பமில்லை என்றால் இது என்னுடைய அமெரிக்கா ரோமிங் மொபைல். மாலைக்குள் உங்கள் முடிவை சொல்லுங்க. நான் சாயங்காலம் என்னுடைய சொந்த விஷயமாக விழுப்புரம் போகவேண்டியிருக்கும்.

மிகவும் நன்றி சார். விழுப்புரமா? என் மாமா அங்குதான் மின்சாரத்துறையில் வேலை செய்கிறார். விழுப்புரத்தில் எங்கே?

பாரதி நகர். பாண்டி ரோடு.

ஓ. என் மாமாவும் அங்குதான் இருக்கிறார்.

அப்படியா? அவர் பெயர் என்ன?

சிவகுமார்.

வாட் அ ஸ்மால் வேர்ல்ட். அவர் என் வீட்டின் மூன்றாவது வீட்டில் தான் இருக்கிறார். சரி மாலினி. மீண்டும் வாழ்த்துக்கள். பை என்று சொல்லி விடைப் பெற்றான்.

leomohan
01-11-2006, 07:01 AM
2



ஊர் செல்லும் வழியில் அனைத்தையும் பேசி தீர்த்தனர் நண்பர்கள் நால்வரும். ராஜூ எல்லா திரைப்படப்பாடல்களையும் குழப்பி புதிய பாடல்கள் எழுதுவான். அவனை மீண்டும் அதை பாடிக்காட்டச் சொல்லி மகிழ்ந்தனர்.

முரளி ப்ரவீணாவிற்காக எழுதிய கவிதைகளை மனப்பாடமாக எடுத்துவிட்டான்.

பாலா கொரியர் கம்பெனியில் கலக்குகிறான் என்றும் அவன் அண்ணன் ஓட்டல் பிசினஸில் கலக்குகிறான் என்றும் சொன்னார்கள். பாலாவுக்கு சமீபத்தியில் திருமணம் நடந்தது. அனைத்து நண்பர்களும் சேர்நதிருந்தனர் - இவனைத் தவிர.

வெளிநாட்டில் வேலை செய்வதால் கிடைக்கும் லாபத்தை விட நஷ்டங்களே அதிகம். வருடம் முழுக்க வரும் பண்டிகைகள் இழக்க வேண்டியிருக்கிறது. கோவில் குளம். பழகிய நண்பர்கள். தந்தை தாய். போனில் ஆயிரம் செலவு. வருடம் ஒரு முறை வரும் போது சேமித்து வைத்த எல்லா காசையும் போட்டு ஊருக்கெல்லாம் ஏதாவது வாங்கி வரவேண்டியது.

முரளி முதலிலேயே சொல்லிவிட்டான். யாரும் சிலியா பற்றி பேசக் கூடாது என்று. அதனால் யாரும் அதைப் பற்றி மூச்ச விடவில்லை. இன்னும் கேட்டால் மூன்று மணி நேரம் அனைவரும் 10 வருடத்திற்கு முன் நடந்த பேச்சைத்தான் பேசிக் கொண்டிருந்தனர்.

திடீரென்று ராஜூ 'உன் ஆளு" என்று ஏதோ சொல்ல முரளி வேணான்டா என்றான்.

டேய் இருடா. நான் அபிதகுஜாம்பாள் பத்தி பேசறேன்.

ஆஹா என்று அனைவரும் சிரித்தனர்.

யாருடா அது என்றான் ராஜ் ஏதோ நினைவாக.

டேய் இந்துமதி-டா. ஞாபகம் இருக்கா இந்தி க்ளாஸில் அவளுக்கு யாரோ லவ் லெட்டர் கொடுத்திட்டு நான் ஐந்து எழுத்து பேர் கொண்டவன் என்று எழுதி நம்மையெல்லாம் டீச்சர் போட்டு விசாரித்தாளே என்றான்.

ஹா ஆமாம். ரா ஜ கோ பா ல் நான் தான் ஐந்து எழுத்து என்னை புடிச்சி உலுக்கினாங்க. நான் கி ரு ஷ் ண ன் - தான் ஐந்து எழுத்து சொல்லி இவனை மாட்டி விட்டேன் என்றான் ராஜ்.

ஹா ஹா என்று அனைவரும் சிரித்தனர்.

டேய் என்னை வேற யாரோட சேர்த்து பேசினாலும் பரவாயில்லை. அந்த இந்துமதி. சரியான அழு மூஞ்சி. அந்த பிரச்சனையிலிருந்து வர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து.

இவ்வாறாக நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டே அவர்கள் ஊர் வந்து சேர்ந்தனர். அவன் அம்மாவுக்கு தலை கால் புரியவில்லை. என்னடா ஒரு போன் கூட போடாமல் வந்திட்டே.

அவன் அப்பாவிற்கு மகிழ்ச்சி அளவில்லாமல். ஓடிச் சென்று சேட்டுக் கடையிலிருந்து அவனுக்கு பிடித்த திண்பண்டங்கள் வாங்கி வந்தார்.

நண்பர்கள் அனைவரும் விழுப்புரத்தை ஒரு அங்குலம் விடாமல் சுற்றித் தீர்த்தனர்.

அம்மனை தரிசிக்க சென்றவன் ஒன்றுமே கேட்காமல் திரும்பி வந்தான். ஒரு நூறு ரூபாய் நோட்டை உண்டியலில் போட்டான்.

அவன் 1500 சம்பாதிக்கும்போதும் 100 தான் 3 லட்சம் சம்பாதிக்கும் போதும் 100 தான். அம்மனை காசால் ஏமாற்ற முடியுமா? இல்லை தன் செல்வத்தை அவளிடம் தான் காட்ட முடியுமா? உலகத்திற்கு செல்வத்தையும் செழிப்பையும் தருபவள் அவள்.

அவள் என்ன காசில்லாமலா இந்த சிறிய கோவிலில் வந்து அமர்ந்திருக்கிறாள்? பணம் இருக்கும் இடத்தில் பக்தி இருப்பதில்லை. பணம் மனதை விரிவடைய செய்வதில்லை. அவள் இந்த ஏழைகளின் மத்தியில் ஆனந்தமாக இருந்தாள்.

அவளுக்கு அவர்கள் வேண்டும். அவர்களுக்கு அவள் வேண்டும். சிறப்பு வரிசை 1500 தரிசனம் 1000 கிட்டே நின்று பூஜை செய்ய 10000 என்று பக்தியை யாரும் ஏலம் போடுவிதில்லை. இங்கு வருபவர்கள் பாம்பு புற்றில் பாலை ஊற்றி விட்டு 50 பைசா சூடம் ஏற்றி அவள் காலில் சரணைடகிறார்கள். இந்த ஏழகைளை அவள் தன் அன்பால் அணைக்கிறாள். அதனாலே அவர்கள் சுபிட்சம் அடைகிறார்கள். இது அவனுக்குத் தெரியும். அவன் அன்று சாதாரணமானவன். இன்றும் அவன் அம்மாவின் முன்பு சாதாரணமானவன் தான். அவனிடம் ஒன்றும் மாற்றம் இல்லை. அவன் அவள் மேல் வைத்திருந்த அன்பிலும் ஒரு மாற்றமும் இல்லை.


எல்லாம் அறிந்த அந்த தாய் அதனையும் அறிந்திருந்தாள். தன் பிள்ளை ஒன்றுமே கேட்காமல் செல்வதை நினைத்து புன்னகைத்தாள்.

leomohan
01-11-2006, 07:02 AM
3

அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு விமானதள நுழைவாயில் பாதுகாவலிரிடம் தன் பயணச்சீட்டைக் காட்டிவிட்டு உள்ளே நுழைந்து தன் பைகளை பாதுகாப்பு சோதனை எந்திரத்தில் போட்டு எடுத்து நீளமான வரிசையில் போர்டிங் கார்ட் பெற நின்றிருந்தான். 10 நாள் விழுப்புர வாசம் பாமரனாய் சென்ற அவனை பண்டிதனாக மாற்றியிருந்தது. உடலில் ஒரு புதிய தெம்பு.

அவன் அம்மா அப்பா சிலியா பேச்சை எடுத்ததும் அதிக ஆர்வமில்லாதவன் போல் காட்டிக் கொண்டான். அவர்களும் அப்பாவியாக இன்னும் அவளை பார்க்கவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஹேய் மாலினி நீங்களும் இந்த விமானத்தில் தான் வருகிறீர்களா?

ஆமாம் சார். அவளுக்கு தன் மேலாளருடன் பயணிக்கின்றோமே என்று ஒரு பயம். ஆனால் முதன் முறையாக விமானப்பயணம். முதல் பயணமே மேல்நாடு பயணம். 18 மணி நேர பயணம். இதில் துபாயில் வேறு விமானம் மாற்ற வேண்டும். இதெல்லாம் அவள் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்தது. தெரிந்தவர் (எவ்வளவு தெரிந்தவர்) கூட வருவது ஆறதலாக இருந்தது.

நல்லதா போச்சு. எனக்கு விமானப் பயணத்தில் தூங்கி பழக்கம் இல்லை. எப்படிடா 18 மணி நேரம் கழிக்கப் போகிறோம் என்று நினைத்தேன். உங்க டிக்கெட் கொடுங்க அடுத்தடுத்த சீட் கேட்கலாம்.
அவளும் மகிழ்ச்சியும் டிக்கெட் எடுத்து கொடுத்தாள்.

போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு சுங்க சோதனையை கடந்து வரி விலக்கு கடை அருகில் வந்தனர்.

சார் ஒரு நிமிடம் ஒரு புத்தகம் வாங்கிட்டு வந்திடறேன் என்றாள் மாலினி.

ஏய் நில்லுங்க நானும் வர்றேன்.

இருவரும் ஒரு 20 நிமிடம் கழித்த பிறகு வெளியே வந்தனர். அவன் ரோரி ஸ்டுவர்ட் எழுதிய தி ப்ளேசஸ் இன் பிட்வீன் என்ற புத்தகம் வாங்கியிருந்தான்.

அவளோ டிராவெல் டு அமெரிக்கா என்ற புத்தகத்தை வாங்கியிருந்தாள்.

ஹேய் இந்த புத்தகம் வேஸ்ட். நான் முதல்ல அமெரிக்கா போகும் போது இது தான் வாங்கினேன். அதுல சொல்லியிருக்கிற மாதிரி ஒரு விஷயம் கூட அமெரிக்காவில் இல்லை என்றான்.

அவள் மன்னிப்பு பார்வை ஒன்று பார்த்தாள். அவள் இந்த புத்தகத்தை முன்பே வாங்க முடிவு செய்திருந்தாள். ஆனால் தன்னுடன் ஒரு அனுபவஸ்தன் வருவதை மறந்து அவனை கேட்காமல்
வாங்கிவிட்டோமே என்று வருந்தினாள்.


இருவரும் விமானத்திற்குள் சென்று இருக்கை தேடி அமர்ந்தனர்.
சார் இந்த பெல்ட் போடவரலை என்றாள் சங்கடமாக.

அவன் அவள் பக்கம் குனிந்து அதை சரி செய்தான். ஆக்ஸ் எஃபெக்ட் தன் முதல் பலி வாங்கிவிட்டது.

உங்களுக்கு சினிமா பாட்டெல்லாம் பிடிக்குமா?

என்ன சார் இப்படி கேட்டுட்டீஙக. வாலி வைரமுத்து கண்ணதாசன் பாட்டெல்லாம் எனக்கு அத்துப்படி.

அப்படியா பரவாயில்லையே.

உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.

எனக்கு வைரமுத்து. கண்ணதாசனைவிட சட்டுல் செக்ஸ் வரிகளை வைமுத்து நன்றாக கையாள்வார்.

ஓ. எனக்கும் வைரமுத்து தான். திருடா திருடா தான் அவருக்கு கம் பேக். நீங்க ராசாத்தி என்னுசுரு என்னுதில்லை கேட்டதுண்டா?

இல்லாமலா? காரவீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கயிலே மஞ்சள அரைக்கும் முன்னே மனசை அரைச்சவளே! வாட் அன் இமாஜினேஷன். வைரமுத்து அட் ஹிஸ் பெஸ்ட்.

அப்புறம் அந்த தாஜ் மஹால்ல ஒரு பாட்டு. ஆ.

நீயிங்கே நீயிங்கே பூச்சுடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா?

அந்த வரி - தாலி கட்ட கழுத்து அரிக்குதே. சான்ஸே இல்லை சார். வைரமுத்து வைரமுத்துதான்.

வாவ். நீங்க அமேஸிங்க. எல்லா வரியையும் சொல்றீங்க. எனக்கு நல்லா பொழுது போகும் அமெரிக்காவில என்றான் ராஜ். சிலியாவுக்கு வைரமுத்துவைப் பற்றி என்ன தெரியும். சிலியா லேண்டாகி விட்டிருந்தாள். மாலினி டேக் காஃப்.

உங்களுக்கு நடிகர்கள்ல யாரைப் பிடிக்கும் சார்? - மாலினி.

மாலினி என்னை சார்ன்னு சொல்லறதை நிறுத்துங்க முதல்ல.

சரி. சரி. கோபால். ராஜ் என்று சொன்னால் ரொம்ப நெருக்கம் போல் இருக்குமோ என்று நினைத்து கோபால் என்று சொன்னாள்.

ஹா. கோபால். யாரும் என்னை இதுவரை இப்படி அழைத்ததில்லை என்று நினைத்துக் கொண்டான்.

எனக்கு மோகன் சிவகுமார் முரளி சுரஷ்-நதியா கார்த்திக் படங்கள் ரொம்ப பிடிக்கும். எப்ப வேண்டுமானாலும் பார்க்கற மாதிரியான படங்கள்.

அவள் தலையை வேகமாக ஆட்டினாள்.

என்ன உங்களுக்கு பிடிக்காதா மாலினி?

கோபால் நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க. ஏதோ பாஸை குஷிபட்டுத்தறேன்னு நினைப்பீங்க.

ஹே நான் உங்க பாஸ் இல்லை. டான் ஸிடில் தான் நம்ம எல்லோருக்கும் பாஸ். நீங்க தைரியமா சொல்லுங்க.

நீங்க சொன்ன அத்தனை நடிகர்களும் என் ஃபேவரைட்.

ஓ. நமக்குள்ள இத்தனை ஒற்றுமையா? ஆச்சர்யமா இருக்கு. மௌன ராகம் பார்த்திங்களா?

பத்து தடவை கோபால். மோகனுடைய நடிப்பு வாவ். பாட்டும் சூப்பர்ப். மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ? வாலிக்கு ஒரு வணக்கம் என்றாள்.

உங்க குடும்பத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றான்.
சில நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு நாங்க மூன்று சகோதரிகள். ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்டு எல்லாம் பெண். அக்கா லவ் மேரேஜ்.

சிங்கப்பூர்ல இருக்கா. தங்கச்சி 10த். நீயும் யாரையாவது காதலிச்சுக்கோன்னு எங்க வீட்ல சொல்லாத குறை தான். அப்பா ரீடயர்ட். லேயர் மிட்டில் க்ளாஸ் குடும்பம். அவங்களை பொருத்த வரையும் காதல் கல்யாணம்னா காலணா செலவு இல்லைன்னு நினைப்பு. அவள் சைகையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

மென்மையான குரல் என்றாலும் குரல் அதிகரித்தது.

இரவு நேர பயணம். அனைவரும் தூங்கியிருந்தனர். அவள் குரல் தொந்திரவாக இருக்கக் கூடாது என்று நினைத்தான்.

மாலினி எல்லோரும் தூங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். நாம ஒரு சின்ன விளையாட்டு விளையாடுவோம். யாருக்கும் தொந்திரவு இருக்காது. நாங்க பள்ளிக் கூடத்தில விளையாடுவோம். நான் ஒரு கதையோட முதல் வரி எழுதுவேன். நீங்க இரண்டாவது வரி எழுதனும். நாம கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கிட்டே போகலாம் என்ன? என்று கேட்டவாறே காபின் விளக்கை ஏற்றிவிட்டு காகிதங்களைத் தேடினான்.

அருமையான யோசனை இந்தாங்க என்று ஒரு பழைய ஒரு குயர் நோட்டு புத்தகத்தை தந்தாள்.

என்ன இன்னும் பள்ளிக்கூட பசங்க மாதிரி என்றான் கிண்டலாக.
இது என்னோட 20 வருஷமா இருக்கு. மனசுல வர்றதெல்லாம் எழுதுவேன் இதுல.

நான் படிக்கலாமா? என்று கேட்டான்.

அவள் தயங்கினாள்.

வேண்டாம் பரவாயில்லை என்றுவிட்டு காலி பக்கத்தை தேடினான்.
ஒரு காலி பக்கத்தின் எதிர்புறத்தில் பத்தாம் பசலியா நான் என்ற தலைப்பில் ஏதோ எழுதியிருந்தாள்.

நாம விளையாட்டை ஆரம்பிக்கும் முன்னே இதை மட்டுமாவது படிக்கலாமா? என்று அனுமதி கேட்டான்.

அவள் வெக்கத்துடன் சரி என்று தலையாட்டினாள்.

பத்தாம் பசலியா நான்?

ஐந்து மணிக்கு வேலை முடிந்து ஆறு மணிக்கு வீடு வந்தால் - நான் பத்தாம் பசலியாம்
மொபைல் போனில் இரவு முழுக்க ஆண்களுடன் பிதற்றாவிட்டால் - நான் பத்தாம் பசலியாம்
ஆண்களின் ஆடையணிந்து அங்கங்கே கிழிக்கவில்லையென்றால் - நான் பத்தாம் பசலியாம்
ஆடை மாற்றுவது போல் ஆடவரை மாற்றாவிட்டால் - நான் பத்தாம் பசலியாம்
உதட்டுக்கு மேல் சாயம் போட்டு தினம் நடிகையாவில்லையென்றால் - நான் பத்தாம் பசலியாம்
ஆடவர் போல் மீசை வளர்த்து இவர்கள் போகும் பார்லர் போகவில்லையென்றால் - நான் பத்தாம் பசலியாம்
கற்பத்தை தினம் கலைத்து கருவறையை பிணவறையாக மாற்றவில்லையென்றால் - நான் பத்தாம் பசலியாம்
கட்டினவன் ஒருவனிருக்க கண்டவனுடன் உறவு கொள்ளும் வேசியாகாவிட்டால் - நான் பத்தாம் பசலியாம்
ஏனடி பெண்ணாக நீ இல்லை என்று கேட்டால் என்னையே நீ பெண்ணா எனும் இவர்களுக்கு - என்றும் நான் பத்தாம் பசலிதான்!

அருமையான கருத்து. அழகான கவிதை. தைரியமான வெளிப்பாடு என்று மனமாற பாராட்டினான். நீங்கள் ஏன் இதை பிரசுரிக்க கூடாது?

கோபால் என்னுடைய கருத்துகள் எல்லாமே காலத்திற்கு ஒவ்வாதவையாகவே இருக்கிறது. இவையெல்லாம் நானும் என்னுடைய புத்தகமும் மட்டுமே பராமரிக் கொள்பவை.

ஒரு வரி ஒருவர் கதை எழுதும் விளையாட்டு துவங்கியது. அவர்கள் நெவார்க் சென்று அடையும் வரை அது தொடர்ந்து.

இடையில் இலக்கிய பரிமாற்றங்கள். காரல் மார்க்ஸ் விட்மன் ரூசோ ஜேன் ஆஸ்டின் பாலகுமாரன் சாண்டில்யன் இந்து மதம் கண்ணதாசன் வாலி வைரமுத்து என்று இரு ஒத்த கருத்துக்களும் ஒத்த அறிவும் படைத்த இரண்டு அறிவு ஜீவிகள் இதுவரை காணாத ஒரு நட்பை ஒரு ஒத்த அலைவரிசையை கண்டு விட்ட மகிழ்ச்சியில் பேசி விவாதித்து வாதித்து அரற்றி கூக்குரலிட்டு சங்கமித்து கொண்டிருந்தனர்.

guna
01-11-2006, 07:41 AM
இரண்டாம் பகுதி - சுபமான முடிவு..
நன்றி மோகன்..

கதை முடிஞ்சுடுசுன்னு நினச்சா, மீண்டும் திருப்பம்..
சுவாரஷ்யமா இருக்கு மோகன்..
தொடருங்கள்....

குணா

leomohan
01-11-2006, 09:18 AM
இல்லை குணா. நான் உருவாக்கிய பாத்திரங்கள் என்னை கதையை முடிக்க விடவில்லை. அதனால் தான் பாகம் மூன்று. தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுகிறேன்.

leomohan
02-11-2006, 12:34 PM
4

வெறும் தொழில் முறை விசாவில் வருபவர்களுக்கு வீடு வாடைக்கு கிடைக்காது. அதனால் மாலினி ரமதா ஓட்டலில் தங்கியிருந்தாள். அலுவலத்திலிருந்து சுமார் 20 நிமிட தொலைவு.

கோபால் அவளுடைய கார் ஓட்டுனன் ஆக மாறியிருந்தான். தினமும் அவளை அலுவலகத்திற்கு அழைத்து வருவது. பிறகு மாலை விடுதியில் கொண்டு விடுவது. இடையில் பட்டேல் மார்கெட்டில் அவளுக்கு வேண்டிய உணவு பொருட்களை வாங்கி கொடுப்பது என்று பொழுது கழிந்து கொண்டிருந்தது.

தினமும் அவளிடமிருந்து குட் மார்னிங் என்று ஒரு இமெயில் வரும். அழகான ரோஜாப்பூ படங்களுடன். இவளுக்கு எங்கிருந்து இத்தனை ரோஜாப்பூக்கள் கிடைக்கிறது? நானும் தான் இன்டெர்நெட்டில் பார்க்காத இடமே இல்லை! முதல் இரண்டு நாள் ஏதோ அனுப்புகிறாள் என்று நினைத்தவன் அது வாடிக்கையாகிவிட்டதை உணர்ந்தான். தினமும் காலையில் அதை எதிர்பார்கத் தொடங்கினான்.

சிலியா தூரத்தில் நிழலாக ஆகிக் கொண்டிருந்தாள். மாலினி நிழலிருந்து நிஜமாகிக் கொண்டிருந்தாள். அவனுக்கு இப்படிப்பட்ட நட்பு தேவைப்பட்டது. அடிவாங்கிய பூனை. பல நாளாக அறிவுப்பசிக்கும் சோறு இல்லாமல் இருந்ததல்லவா?

ஒரு சனிக்கிழமை இங்கே கோவில் ஏதாவது இருக்கா என்று கேட்க அவனும் அவளை நெவார்க் அவென்யூ ஜெர்ஸி நகரத்திலிருந்த சிவாலயத்திற்கு அழைத்துச் சென்றான். வேண்டுதல் முடிந்ததும் கையிலிருந்த ஒரு இனிப்பு பண்டத்தை அவனிடம் கொடுத்தாள். இன்னிக்கு என் பிறந்த நாள் என்றாள்.

ஹேய் ஏன் இதை முதல்லே சொல்லலே என்று கோபித்துக் கொண்டான். பிறகு அவளை பாம்பே லார்ட்ஸ் இந்திய உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்தான்.
வாரரவாரம் கோவிலுக்கு வருவதும் வெளியே உண்பதும் வழக்கமகியிருந்தது. இந்த பழக்கம் அவர்களை நெருக்கமாக்கியிருந்தது.

ஒரு நாள் மாலினி, வெளியே சாப்பிட்டு என் நாக்கு செத்துப் போச்சி கோபால். நீங்க எனக்கு சீக்கிரம் விசா ஏற்பாடு செய்தால் நான் ஒரு வீடு எடுத்து சமைச்சி சாப்பிடுவேன். உங்களுக்கு புண்யமா போகும் என்றாள்.

மாலினி நீங்க கம்ஃபர்டபிளா நினைச்சீங்கன்னா என் வீட்ல ஒரு அறை காலியா இருக்கு. நீங்க பேயிங் கெஸ்டா வரலாம் என்றாள்.
அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்றாள்.

(குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்)


அவள் வருவதற்கு முன் சிலியாவின் அறையை சுத்தம் செய்து அவளுக்காக ஏங்கி நின்ற போஸ்டரையும் அகற்றினான். மாலினி சிலியாவின் இடத்தை பிடிக்கிறாளோ இல்லையோ அதற்கு சிலியாவின் நினைவுகள் தடையாகக் கூடாது என்று நினைத்தான்.

இதனிடையே சிலியா ராஜை தொடர்பு கொள்ள முயன்றாள். அவன் விழுப்புரத்தில் இருந்த நேரம். அவன் தொலைபேசி வேலை செய்யவில்லை. ஆனால் அவளோ ராஜ் தன் மீது கோபமாக இருக்கிறான். அதனால் தொலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டான் என்று நினைத்தாள்.

ஒரு முறை க்ரிஸிடம் ராஜ் எப்படியிருக்கான் என்று கேட்க. ஓ அவன் நன்றாக இருக்கிறான். அவனுக்கு ஒரு புது நட்பு கிடைத்திருக்கிறது என்று சொன்னான். அது ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை. கேட்க இவளுக்கு மனமும் வரவில்லை.

ஏதாவது காரணத்தை கொண்டு அவனை பார்க்கவேண்டும் என்று முடிவுசெய்தாள். காரணம் தானாக அவளைத் தேடி வந்தது. அவளுடைய பல்கலைகழகத்தின் ஆண்டு பத்திரிக்கையின் சிறப்பு அம்சமாக ராஜ் வந்து பேசியதை குறிப்பிட்டு அவனுடைய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர். அந்த பத்திரிக்கையின் ஒரு பிரதியை எடுத்துக் கொண்டு ராஜின் வீட்டிற்கு புறப்பட்டாள்.

மாலினி வந்த சில நாட்களிலேயே குடும்பத் தலைவியாக மாறியிருந்தாள். வீட்டை சுத்தம் செய்வதும் அவனுக்காக சமைப்பதும் காலையும் மாலையும் அவனுடன் சேர்ந்து பூஜை செய்வதும் பிறகு பல மணி நேரம் பேசுவதும் இணைந்து வேலைக்கு செல்வதுமாக ஒரு தாலி கட்டாத உடல் உறவு இல்லாத குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

கதவைத் தட்டிய சிலியாவுக்கு ஒரு அழகான எளிமையான இந்திய பெண் கதவை திறந்ததும் தலை சுற்றியது. ஒரு வேளை அவனுக்கு திருமணம் ஆகிவிட்டதோ. முரளி கூட ஒன்றும் சொல்லவில்லையே? ராஜின் பெற்றோர்களிடம் பேசி பல வாரங்கள் ஆகிவிட்டது. அவர்களிடம் என்ன பேசுவது? எப்போதும் என் திருமணத்தை பற்றியே பேசுகிறார்கள்.

ராஜை நிரந்தரமாக இழந்துவிட்டேனோ?. அவள் தான் கீழே விழுந்துவிடப்போகதாகவே நினைத்தாள்.

மாலினி கதைவத் திறந்து யார் வேண்டும் என்று கேட்டாள்.
யாரா? இது என் வீடடி பெண்ணே. நீ யார் என்று கேட்க வேண்டும் போலிருந்தது.

நான் ராஜுடைய தோழி. அவரை பார்க்க வேண்டும் என்றாள்.


இது யாரடா அவனுடைய தோழி என்று நினைத்தபடியே மாலினி உள்ளே வந்து அமருங்கள். அவர் தியானத்தில் இருக்கிறார் என்றாள்.
இன்னும் தியானம் செய்கிறாயா நீ. யார் இந்தப் பெண்? அவள் என் அறைக்குள் ஏன் செல்கிறாள்? அவள் என் அறையில் மட்டும் தான் இருக்கிறாளா இல்லை உன் இதயத்திலும் குடி புகுந்து விட்டாளா? என்று பல கேள்விகள் ராஜை உலுக்கி கேட்கத் தோன்றியது.
ராஜின் உடல் தளர்ந்து மெல்ல சகஜ நிலைக்கு வந்தது. ஓம் என்று சொல்லிவிட்டு இறைவனை வணங்கிவிட்டு திரும்பியவனுக்கு சிலியாவைப் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. அவன் என்ன நினைத்தான் என்று சொல்வதும் சற்று கடினம் தான்.

இவள் ஏன் வந்தாள்?

இவள் ஏன் இத்தனை நாளாக வரவில்லை?

இவள் வராமலே இருந்திருக்கலாமே?

அப்பாடா இப்போதாவது வந்தாளே. எங்கே வராமல் போய்விடுவாளோ என்று நினைத்தேன்.

இப்படியெல்லாம் நினைத்த அவனுக்கு அவளை ஓடி சென்று கட்டிப் பிடிக்கத் தோன்றியது. மாலினி வீட்டில் என்று நினைத்துக் கொண்டு வா சிலியா உட்கார் என்றான்.

அவள் அவன் தன்னை ஓடி வந்து கட்டியணைப்பான் என்று எதிர்பார்த்தாள். அவன் அப்படி செய்திருந்தால் அவனை அணைத்து அவன் கண்களில் நெற்றியில் மார்பில் தோளில் முத்தமிட்டு முரளி ப்ரவீணா சொன்னது எனக்கு உறைத்துவிட்டது வேலையின் காரணமாக கலிபோஃர்னியாவில் மாட்டிக் கொண்டேன் இனி உன்னைவிட்டு எக்காரணம் கொண்டும் பிரிய மாட்டேன் என்று கதறத்தயாராக இருந்தாள்.

ஆனால் அவனுடைய வா சிலியா என்று உணர்ச்சி இல்லாத ஒரு வார்த்தை அவளை கொன்று போட்டது. சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தாள்.

சொல்லு சிலியா என்ன விஷயம்?
(எப்படி இருக்கேன்னு நீ கேட்டியா?)

அவள் அவனை ஒற்றுப் பார்த்தாள். அந்த வெறித்தனமான காதல் எங்காவது தென்படுகிறதா என்று. அவன் முகத்தில் சலனமில்லாமல் இருந்தான்.

எப்படி இருக்கே ராஜ்?

நல்லா இருக்கேன் சிலியா. நீ?

நான் நல்லா இருக்கேன். ஆனா கொஞ்சம் வேலை அதிகம்.

அப்படியா?

உன்னை பல முறை போனில் தொடர்பு கொண்டேன் என்றாள்.


(பொய் சொல்கிறாயா பெண்ணே?)
அப்படியா? எப்போ?

ஒரு இரண்டு மாசத்திற்கு முன்.

ஓ அப்போ நான் விழுப்புரத்தில் விடுமுறையில் இருந்தேன்.

(என்னிடம் சொல்லாமல் எப்படி போனாயடா?)
விடுமுறையா?

இல்லை. வேலை நிமித்தமாக போனேன். அப்படியே அப்பா அம்மாவை பார்த்து வந்தேன்.

யூ மெட் யூவர் மதர்?

ஆம்.

யூ மெட் மை மதர்? அவள் கண்கள் அந்த ராமனைத் தேடியது.
அவனால் அவள் பார்வையை சந்திக்க முடியவில்லை.

ஆம். செல்லியம்மனையும் தரிசித்து வந்தேன்.

என்ன கேட்டாய்?

ஒன்றும் இல்லை.

ஒன்றுமே கேட்கவில்லையா?
(என்னை கேட்டிருந்தால் இப்போது உன்னிடம் சரணமடா நான்)

அமைதியானான் ராஜ்.

மாலினி அவள் அறையிலிருந்து வெளி வருவதைப் பார்த்த ராஜ் மாலினி இவள் சிலியா என் தோழி
(வெறும் தோழியா நான் உனக்கு?)

இவள் மாலினி என்னுடன் பணிபுரிகிறாள். இப்போது என்னுடயை பேயிங் கெஸ்ட்.

(அடேய் அவளை எப்படி என் அறையில் தங்கவிட்டாய்? அவனை அப்படியே கடித்து குதறிவிடுவதைப் போல பார்த்தாள்).

மாலினியின் முன் தன் பிரத்யேக பேச்சை அவள் பேசவிரும்பவில்லை.

ராஜ் உங்க போட்டோ எங்க கல்லூரியின் ஆண்டு விழா பத்திரிக்கையில் பிரசுரம் ஆயிருக்கு அதை கொடுத்துவிட்டு போக வந்தேன்.

(கள்ளி. வெறும் அதற்கு மட்டும் தான் வந்தாயா. மீண்டும் அமைதியாக சென்றுக் கொண்டிருந்த என் வாழ்கையில் ஒரு அதிரடி தந்துவிட்டாயே?)

வாவ். கோபால் உங்க போட்டோவா என்று அவன் வாங்கும் முன்னே
அவள் வாங்கிப் படித்தாள்.

வாழ்த்துக்கள் என்று அவன் கையை குலுக்கினாள்.
(ஏய் அது எனக்கு சொந்தமான கை)

சரி ராஜ் நான் கிளம்பறேன் என்று அவன் பதிலுக்கு காத்திராமல் அவள் கிளம்பிச் சென்றாள்.

மாலினியோ 'உங்களை நான் ராஜ் என்று கூப்பிடட்டுமா" என்று கெஞ்சலாக கேட்டாள்.

கூப்பிடேன் என்று சொல்லிவிட்டு அவன் தன் அறைக்கு சென்றுவிட்டான். (அமெரிக்கப் பெண்ணையே ஏற்றுக் கொண்டுவிட்ட பெற்றோர் ஒரு ஐயர் பெண்ணையா மறுக்கப் போகிறார்கள்)

அந்த பிரதியை எடுத்து அவனுடைய புகைப்படத்தை உற்று பார்த்தாள். இதுவரையில் நான் பார்க்காத ஒரு கதாபாத்திரம். அறிவு அழகு திறமை கண்ணியம் எல்லாம் கொண்ட ஒரு ரேர் ப்ரீட். பல பேர் காதல் கடிதம் கொடுத்தும் ஒருவர் கூட தன்னுடைய கற்பனை கணவனின் அருகில் கூட வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தவள். ராஜ் ராஜ் என்று சொல்லிப் பார்த்தாள்.

என் தேடல் முடிந்துவிட்டதா?

அவள் தன் ஒரு குயர் நோட்டுப் புத்தகத்தை தேடினாள்.

leomohan
02-11-2006, 12:34 PM
5


நியூ ஜெர்ஸியில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. பனிமழை பெய்வதும் மதியம் 4 மணிக்கே இருட்டிவிடுவதுமாக ஒரு சோர்வான காலம். சூரியன் சோம்பலாக அப்போது இப்போது என்று வந்து சென்றுக் கொண்டிருந்தான். பல மணிநேரம் வீட்டிலேயே கழிக்க வேண்டிய நிலை.

சிலியா அவனைப் பார்க்கவே தயங்கினாள். மாலினி அவளுக்கு பெரிய தடையாக தோன்றியது. க்ரிஸ் மூலம் அவர்களிக்கிடையே ஒன்றுமில்லை என்று அறிந்தும் கூட அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஆண் பெண் திருமணமாகதவர் ஒரிடத்தில் பண்புரிபவர் சேர்ந்திருப்பது அமெரிக்காவில் சகஜமில்லையோ? அவள் மணம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ராஜ் ஒரு காந்தம். அவனிடம் சில நொடிகள் பழகியவர்கள் கூட அவன் மேல் காதல் வயப்படுவது சகஜம். பல்கலைகழகத்தில் அவன் பேச்சை கேட்டு மயங்காதவர்களே இல்லை. அவன் பேசினால் அவன் ரம்பை ஊர்வசியை தன் வசமாக்கும் சக்தியிருப்பதாக நினைத்தாள்.


மாலினி அதே காந்தத்தின் மூலம் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அவளோ ஒரு மூலையில்
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்வாய்


என்று மனதில் பாடினாள்.

இன்னொரு அறையில் அவனோ


உனக்காக பரிசு ஒன்று கொண்டேன் நான் மழையல்லவே
நீ ஏன் ஒதுங்கி நின்றாய்


என்று பாடிக் கொண்டிருந்தான். அவன் மன நிலையை வைத்து யாருக்காக பாடினான் என்று சொல்ல முடியவில்லை.


அவனுடைய புத்தக அலமாரியிலிருந்து பட்டினத்தார் பாடல்கள் என்ற தொகுப்பை எடுத்து புரட்டினாள். சட்டென்று கண்ணில் பட்ட ஒரு பாடலை உறக்கப் படித்தாள்.

நாறும் உடலை நரிப்பொதி
சோற்றினை நான்தினமும்
சோறும் கறியும் நிரப்பிய
பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமும்
சோரும் குழியில்விழாது
ஏறும்படியருள் வாய்இறை
வாகச்சி ஏகம்பனே!

ராஜ் இதுக்கு என்ன அர்த்தம்?

இதுவா! இது நீ படிக்க வேண்டாம் மாலினி (நீங்கள் நீ ஆகியிருந்தது).


எதுக்கு?

அதுக்கு மனசு திடமாக இருக்கனும்.

என் மனசு திடமில்லைன்னு சொல்றீங்களா?

இல்லம்மா. இந்த பாட்டு கொஞ்சம் கஷ்டமானது.

அதுக்குத்தான் உங்ககிட்ட விளக்கம் கேட்கறேன்.

கஷ்டம்னு நான் சொன்னது தமிழுக்காக இல்லை. அதனுடைய விளக்கத்திற்காக!

தயவு செய்து சொல்லுங்களேன்.

நான் சொல்றேன். ஆனா நீ மூட் அவுட் ஆகக் கூடாது. சரியா?


ஓகே. சொல்லுங்கள். அவள் மாணவியானாள். அவன் குருவானான். பல மாதங்களுக்கு முன் சிலியா இருந்த இடத்தில் இன்று மாணவி மாலினி. மாலினி எந்த சிலியாவுக்கும் குறைந்தவளில்லை. அழகில் வேண்டுமானால் அந்த தேவதைக்கு ஈடில்லை. ஆனால் அறிவில் அடக்கத்தில் கண்ணியத்தில் ராஜின் மீது கொண்ட மதிப்பில் இருவரும் சரிசமம்.

இதுக்கு என்ன விளக்கம்னா வேண்டாம் மாலினி. ரொம்ப அசிங்கம்.

நான் ஒரு அடல்ட்.

அதில்லம்மா. நம்ம வயசில இருக்கறவங்க படிக்கக் கூடாத விஷயம்.

ஏன்?

வாழ்கையே வெறுத்துப் போயிடும்.

அப்ப அறிவுக்காக புத்தகங்கள் படிக்கறது தப்பா?

தப்பில்லை பெண்ணே. ஆனா எந்த புத்தகம் படிக்கிறோம் அதுல தான் பிரச்சனையே!

நீங்க மட்டும் படிக்கலாமா?

சரி நான் சொல்றேன்.

நாறும் உடல் நான் தினமும் சோறும் கறியும் நிரப்பிய பாண்டம் - இதை இப்படி படிக்கனும்.

'நாம தினமும் சோறு போட்டு இந்த உடம்பை வளர்க்கிறோம் ஆனா"
நரிப்பொதி சோற்றினை
'நாம செத்துட்டா இந்த சோத்து மூட்டை நரிகள் வந்து தின்னத்தான்"


தோகையர்தம் கூறும் மலமும் இரத்தமும் சோரும் குழி
'பெண்ணோட அந்த அங்கம் வெறும் மலம் ரத்தம் கொண்ட சிறுநீர் கழிக்கின்ற இடம்"

குழியில் விழாது ஏறும் படி அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே
அந்த மாதிரி ஒரு கேவலமான மட்டமான குழியில் விழாமல்
என்னை காப்பதுப்பா கச்சியில் இருக்கும் சிவனே.

இதுதான் அர்த்தம்.

அவளுக்கு வாந்தி வரும் போல் இருந்தது. ஓடிச்சென்று பாத்மூமில் நுழைந்தாள். சில நிமிடங்களில் முகம் கழுவி வெளியே வந்தாள்.
ஒரு பெண்ணின் அந்தரங்க பாகம். ஒரு உயிரை உலகுக்கு கொண்டுவரும் புனித இடம். அந்த இடத்தை இதுவரை இவ்வளவு கேவலப்படுத்தி யாரும் எழுதியதில்லை. அப்படி எழுதியிருந்ததை அவள் படித்ததும் இல்லை. அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

அவள் அதிர்ந்து போயிருந்தாள். கவிதையோ கட்டுரையோ கதையோ அதில் லயித்து போயிருக்க வேண்டும். அதன் ஊடே இருந்து படிக்க வேண்டும். திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி வந்தால் சிரிக்க வேண்டும். சோக காட்சி வந்தால் அழவேண்டும். நல்ல காட்சியமைப்பில் நாம் அழமாட்டோம் என்று அடம்பிடித்து உட்காரக்கூடாது. காட்சியின் வலிமை கவிதையின் உள்ளர்த்தம் அதை உணர்ந்து படிப்போருக்கு பல வகையான உணர்வுகள் வந்து போகு ஏதுவாகிறது. அந்த பல உணர்ச்சிகள் நிஜமாகவே அனுபவிக்காமல் பெறவதற்கே கதை கவிதை படிப்பது.


அந்த உள்ளர்த்தத்தை உணர்ந்து அவள் கலங்கிப்போனாள். இதை படித்தபிறகு எந்த ஆண்மகனும் உடலுறுவு கொள்வதை கேவலமாக நினைப்பான்.

அவள் கண்கள் கலங்கியருந்தன. அவன் அருகில் சென்று அமர்ந்தான். அவள் கைகளைப்பிடித்தான். மாலினி இதை சீரியஸா எடுத்துக்காதே. இது காலம்காலமா கவிஞர்கள் சொல்லி வருவதுதான். பெண்கள் மோகம் வேண்டாம்னு எழுதாத கவிஞர்களே இல்லை. ஆனா அவங்கள்ல பெரும்பாலானோர் கல்யாணம் ஆனவங்க. அவங்க சொல்றதையெல்லாம் யார் கேட்கறா?

அப்ப ஆண் பெண் உறவு புனிதமானது இல்லையா?

இல்லை மாலினி. ஆணக்கு பெண் ஒரு காமப்பொருள்தான். அவன் பசி அடங்கியதும் அவன் ஒரு பெண்ணை வேலைக்காரியாகத்தான் நினைக்கிறான்.

அப்ப குழந்தை பிறத்தலும் கேவலம் தான் இல்லையா?

ஆம்.

என்ன சொல்றீங்க?

ஆமாம் மாலினி. ஒரு ஆணும் பெண்ணும் காமத்திற்காக தன் சுயநலத்திற்காக உடலுறுவு கொள்கிறார்கள். அது எப்படி பெரிய தியாகமாகும்?

அப்ப தாய்மை?

தாய்மையோட அடிப்படையே மிருக உணர்ச்சிதான். அந்த காமம்தான். ஒரு பெண் தன்னுடைய உணர்வுகளை இன்னும் 30 விநாடி அடக்கியிருந்தால்? அப்படியிருக்க தாய்மை எப்படி புனிதமாகும்?

என்ன சொல்றீங்க ராஜ். இது உங்களோட கருத்தா?

இல்லை மாலினி. இது என்னோடு கருத்து இல்லை. மனிதனோட பெரிய துயரம் பெண்தான். அந்தக்குழியில் அவன் விழாவிட்டால் உலகத்தில் அவன் பல சாதனைகள் செய்யமுடியும் இறைவன் அருளை பெறமுடியும் அப்படிங்கறது தான் இந்த பாடலோட கருத்து.


நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?

இது தேவையில்லாத கேள்வி என்று நினைத்தான். ஆம் என்று சொல்லி மாலினி அருகில் வர தடைகளை உண்டாக்க அவன் விரும்பவில்லை. இல்லை என்று பொய் சொல்ல அவனுக்கு மனதில் தெம்பில்லை. அமைதியாக இருந்தான்.

சொல்லுங்க?

எதுக்கு கேட்கறே?

இல்லை நீங்கள் காதிலிக்கறீங்களோ இல்லையோ நாளைக்கு உங்களுக்கு திருமணம் ஆகும். நீங்க உங்க மனைவியோட உறவை எப்படி மதிப்பீங்க?

மாலினி. இந்த மாதிரி புத்தகங்கள் படிக்கறதால என்னோட அறிவையும் பேச்சுத்திறனையும் வளர்த்துக்கறேன். எல்லா கருத்துக்களையும் படிக்கிற தைரியமும் மனப்பக்குவமும் வேண்டும். ஒருத்தர் பெரிய எழுத்தாளர், அதனால அவர் சொல்ற எல்லா கருத்துக்களையும் ஏத்துக்கனும்னு அவசியமில்லை. எனக்குன்னு சொந்த கருத்துகள் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் இருக்கும். இருக்கனும்.

உங்க கருத்தைத் தான் நான் கேட்டேன்.

நான் பெண்களை மதிக்கிறேன் மாலினி. தாய்மையை புனிதமா நினைக்கிறேன். மனைவியை என்னில் ஒரு பாதியா நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமா ஆணுடைய சிறுநீர் உறுப்பும் பெண்ணுடைய சிறுநீர் உறுப்பும் சேர்ந்தா தான் மனித இனம் வளரும். இது ஆண்டவன் படைப்பு. அதை நாம ஏத்துக்கனும். மதிக்கனும். விவாதம் செய்ய முடியாது. நம்ம சமுதாயத்தையே எடுத்துக்கோயேன்? காலையிலே மாமி மடி ஆசாரம்னு சொல்றா. மாமா எச்சி பண்ணிக்குடிக்காதேன்னு சொல்றார். தனி தட்டு தனி டம்ளர். மலம் கழிக்க போகும் போது கூட பூணூல் கண்ட இடத்தில படக்கூடாதுன்னு காதில் சுத்திக்கிறோம். ஆனா? ராத்திரியில்? ஒரு ஆண் ஒரு பெண்ணின் உதடுகளை கடித்து அவன் எச்சிலை உண்கிறான். அவனுடைய வாய் அவள் உடலில் படாத இடங்களே இல்லை. அவளுடைய சிறுநீர் குழியை அவன் ராஜ கிரீடமாக அணிகிறான். அப்போது எங்கே போயிற்று இந்த மடி ஆசாரம் தீட்டு எல்லாம்? அவன் பூணூலை கழற்றிவிடுகிறானா? அந்த புனித நூல் அவளுடைய அந்தரங்களில் படுவதில்லையா?

அவள் அமைதியானாள். அவனுடைய விளக்கம் அவளை வியக்க செய்தது. ஒருவன் எந்த அளவுக்கு யோசிக்க முடியும்? அறிஞர்கள் என்று புத்தகத்தில் படித்ததோடு சரி. இப்போது தான் ஒரு அறிவு ஜீவியை நேராக பார்க்க முடிந்தது.

என் தேடலும் முடிந்தது. இவனுக்காகத்தான் இத்தனை நாளும் காத்திருந்தேன்.

அவன் சில நிமிடங்களில் அவள் கையை விட்டிருந்தான். அவள் மீண்டும் அந்தக் கையை பிடித்துக் கொண்டாள்.

மாலினி நீ அமைதியாயிட்டேன்னா இன்னொரு பாடல் படிக்கிறேன் கேளு.

வேண்டாம் ராஜ். இத்தனை கடினமான கருத்துக்களை ஏத்துக்கற பக்குவம் வரவில்லை எனக்கு.

இல்லை. இது கொஞ்சம் எளிமையானது.

சரி.

வேதத்தின் உள்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம் அது ஆம் பொழுது
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

அவன் அழுகான உச்சரிப்பில் பிரித்து படித்தான். அவள் புரிந்துக் கொண்டாள்.

ராஜ் இத்தனை நாளும் நான் பலபேரோட பழகியிருக்கேன். என் தோழிகள் எல்லாம் எனக்கு காதல் உணர்வேயில்லைன்னு முடிவு பண்ணிட்டாங்க. நான் என்னை ஒரு முக்கிய பிறப்பா நினைக்கிறேன். அதனால என் வாழ்கையில் வருபவன் ஒரு சிறந்த ஆண்மகனாக இருக்கனும். அப்படித்தான் நான் நினைச்சு இத்தனை நாளும் காத்திருந்தேன்.

இப்போ கிடைச்சிட்டானா?

ஆமாம்.

யாரு?

சொல்ல நினைக்கிறேன். ஆனா பயமா இருக்கு?

என்ன பயம்?

அவன் எட்டாத தூரத்தில் இருக்கிறான்.

யாருமே எட்டாத தூரத்தில் இல்லை மாலினி.

அப்ப சொல்லலாம்னு சொல்றீங்களா?

ஆஃப் கோர்ஸ்.

அவள் தரையில் அமர்ந்து அவன் இரு கைகளையும் எடுத்துக் கொண்டாள்.

ராஜ் ராஜ்

அவளால் பேச முடியவில்லை.

என்னை உங்க வாழ்கையின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்வீங்களா? அவள் சொல்லி முடித்ததும் அவன் பதிலுக்கு காத்திராமல் அவள் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.

எது நடந்துவிடுமோ என்று பயந்தவனுக்கு அது நடந்தே விட்டது என்று உணர்வு வந்தது. நெஞ்சம் கனத்தது. சிலியா நெஞ்சில் முள்ளாய் தைத்தாள். மாலினி தன் வாழ்கையில் வேகமாக நுழைய எல்லா முயற்சியும் எடுத்த ராஜுக்கு அவளே தன் காதலை சொல்லியும் கூட ஏற்றுக் கொள்ள பெரிய தடைக்கல்லாக எது இருக்கிறது என்று அவனாலே புரிந்துக் கொள்ள முடியவில்லை.

பட்டினத்தாரின் பக்கங்களை புரட்டினான். ஏதோ அதில் பதில் கிடைக்கும் என்பது போல.

வாய் நாறும் மூழல் மயிர் சிக்கு நாறிடும்
மைஇடும் கண் பீநாறும் அங்கம் பிணவெடி நாறும்
பெருங்குழி வாய் சீநாறும் யோனி அழல் நாறும்
இந்திரியச் சேறு சிந்தி பாய் நாறும் மங்கையர்க்கோ
இங்ஙனமே மனம் பற்றியதே!

அவனுக்கு வாந்தி வரும் போலிருந்தது.

leomohan
02-11-2006, 12:36 PM
6

குளித்து முடித்து இறைவனடியில் அமர்ந்திருந்தான். அவளும் அன்று பூத்த மலராய் குளித்து முடித்து அவனருகில் வந்து அமர்ந்தாள். இத்தனை நாளும் இருவரும் சேர்ந்து அமர்ந்து இறைவனை வணங்கியபோதும் இன்று அவள் வந்த அமர்ந்ததும் அவனுள்ளே வேதியியல் மாற்றங்கள் தொடங்கியது.

அவளுடைய ஈர கூந்தலும் சோப்பின் மனமும் அவனை கிறங்க செய்தன. அவனுடைய கவனத்தை இறைவனிடமிருந்து திசை திருப்பின. சட்டென்று நடுவிலே எழுந்து உணவு மேசையருகில் வந்து அமர்ந்துக் கொண்டான்.

அதை பார்த்த அவளும் அவசரஅவசரமாய் சுலோகங்களை சொல்லி முடித்து அவனருகில் வந்தாள்.

அவன் தலையில் கை வைத்து அவனுடைய கேசங்களை கோதினாள்.

ராஜ் என்னை மன்னிசிடுங்க. உங்க மனசுல நான் இருக்கேனான்னு தெரியாம என் காதலை சொன்னது தப்பு தான்.

அதில்லை மாலினி. உன் மேல தப்பு இல்லை. காதலிச்சா சொல்லித்தான் ஆகனும்.

நீங்க என்னை காதலிக்கனும்னு அவசியம் இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்கவும் நான் கேட்கவில்லை. அதனால் நீங்கள் எந்த நெருக்கடியிலும் வரவேண்டாம்.

இல்லை மாலினி.

நான் உங்களை காதலிக்கிறேன். அது உண்மை. நீங்கள் உங்கள் பதிலை இப்பவே சொல்லனும்னு அவசியம் இல்லை. எத்தனை நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க.

இல்லை மாலினி. நான் உன்கிட்டே சொல்வேண்டியது நிறைய இருக்கு.

உங்களுக்கு எப்ப சொல்லத்தோணுதோ அப்ப கேட்க நான் தயாராக இருக்கேன். இப்ப ஆபீஸ்க்கு போகலாம் வாங்க என்றாள்.

அமைதியாக உண்டுவிட்டு வண்டியில் இருவரும் பேசாமல் அலுவலகம் வந்து சேர்ந்தனர்.

இன்னு அவளிடமிருந்து ரோஜாப்பூவுடன் 'என்னை மன்னித்துவிடுங்கள்" என்று வந்திருந்தது.

அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்படி அவனுக்கு ஆனதே இல்லை. சிலியா அவனை விட்டுப்போயிருந்தபோதும் அவன் வேலையில் கவனம் சிதறியது இல்லை. ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களில் யார் என்று முடிவு செய்யப் போகும் தருணம் தான் அவன் வாழ்கையிலேயே ஒரு கடினமான நேரமாக இருக்க வேண்டும்.

ஒரு காதலின் மதிப்பு இன்னொரு பெண்ணைப்பற்றி முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் தான் தெரிகிறது.

அவன் சிலியாவா மாலினியா என்று குழப்பத்தில் இல்லை. சிலியாவும் அவன் வாழ்கையில் வர மறுத்து மாலினியிடம் உண்மை சொல்லி அவளும் விலகிவிட்டால் அவனுக்கு இன்னொரு காதல் கதையை துவக்கும் அளவிற்கு தெம்பிருக்கவில்லை.

இருவரையும் இழந்து தனிமரமாகிவிடுவேனோ என்று தவித்தான்.

சிலியாவின் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்காமலேயே இன்னொரு கதையை துவக்க அவன் தயாராக இல்லை.

பொய்களின் அடிப்படையில் மாலினி கதையை துவக்கவும் தயாராக இல்லை.

இப்படி இரு தலை கொள்ளியாகிப்போனான்.

அவன் குழப்பத்தில் இருந்தால் அவன் நாடுவது பகவத் கீதையை தான். ஏதாவது ஒரு பக்கத்தில் அவன் பிரச்சனைக்கு ஒரு விடை கிடைக்கும். இதை பல முறை அவன் அனுபவித்தும் இருக்கிறான்.

கணினியை இயக்கி பகவத் கீதையின் பிடிஎஃப் கோப்பை திறந்தான்.

இன்று அவனுக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் ஒரு வழி கிடைத்தது.

இப்ப அமெரிக்காவில் பகல். இந்தியாவில் இரவு. கால் சென்டரில் ராஜூ இருப்பான். அவனுடைய அமெரிக்க எண்ணில் ஒரு போன் போட்டான். அது இன்டெர்நெட் மூலம் இந்தியாவில் அவன் மேசை மேல் இருந்த போனில் ஓலித்தது.

ராஜூ போனை எடுத்தான்.

மச்சான் ராஜ் பேசறேன்டா.

ஏய் எப்படிடா இருக்கே?

இருக்கேன்டா என்றான் சுரத்தில்லாமல்.

ஆருயிர் தோழன் அவஸ்தையில் இருக்கிறான் என்று தெரிந்தது.

என்ன பிரச்சனை மச்சான்.

நீ ஃப்ரீயாதான் இருக்கே?

உனக்காக எப்பவும் ஃப்ரீதான் சொல்லு.

ப்ரவீணா கிருஷ்ணன் வந்து போனதிலிருந்து மாலினி கைபிடித்து தன் காதலை சொன்னதுவரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.

ராஜூ இவனைப்போல புத்தகங்களை கரைத்து குடித்தவனில்லை. ஆனால் வாழ்க்கை எனும் பாடத்தில் அவன் பி ஹெச் டி. ராஜகோபால் வெறும் ஒன்னாங் க்ளாஸ்.

மச்சான் உன் ஹார்ட் டிஸ்க்கில் இடம் இல்லை. ஒரு ஃபயில் அங்கே இருக்கு. அதை டெலிட் பண்ணாம இன்னொரு ஃபயிலைப் போட்டால் அது எப்படி காபியாகும்?

ராஜூ எந்த ஒரு பிரச்சனையும் தன் உதாரணங்களால் பல முறை சுலபமாக்கியருக்கிறான்.

டேய் முதல்ல சிலியான்ற ஃபயிலை எரேஸ் பண்ணு. அப்புறம் மாலினின்ற ஃபயிலை காப்பி பண்ணு. ரொம்ப சுலபம்டா.

ராஜகோபால் தன் நண்பனின் அறிவை மெச்சினான்.

ஆனா என் அபிப்ராயம் கேட்டீன்னா. சரி விடு என் அபிப்ராயதிற்கு என்ன வேலை.

ஏய். சொல்லு. உன் அபிப்ராயம் என்ன? அதை கேட்கத்தானேடா போன் செஞ்சேன்.

டேய் மச்சான். சிலியா இல்லாததாலேதான் நீ மாலினிகிட்டே நெருங்கினே. அது உன் தேவைக்கு நீ தேடிக்கிட்ட ஒரு மாற்று ஏற்பாடு. மாலினியோட எதிர்பார்ப்புப்படி நீ இருந்ததாலே உன்னை காதலிக்கிறா. ஆனா சிலியா உனக்காக குதிரை கூட்டத்தைவிட்டுட்டு மான் கூட்டத்தில வந்து சேர்ந்திட்டா. மான் கூட்டத்திற்காக தன்னுடைய குணங்களை எல்லாம் மாத்திகிட்டா. இப்ப மறுபடியும் குதிரை கூட்டத்திலே அவளால போக முடியாது. மான் கூட்டம் அவளை ஒதுக்கிடுத்துன்னா அவ நடுத்தெருவில தான் நிக்கனும். அவ செஞ்ச யாகம் தியாகம் தவம் எல்லாம் அர்த்தமே இல்லாம போயிடும்டா. இது தான் என்னோடு அபிப்ராயம்.

ரொம்ப நன்றிடா ராஜூ.

டேய். நன்றிகின்றி எல்லாம் சொன்ன உதைபடுவே!

நான் அப்புறம் பேசறேன் மாப்பிள்ளை என்று சொல்லி போனை வைத்தான்.

தெளிவு கிடைத்திருந்தது. விடை கிடைத்திருந்தது.

மதி
02-11-2006, 01:09 PM
இதானே வேணாங்கறது....இப்படி சஸ்பென்ஸுல முடிச்சுட்டா...
சீக்கிரமா அடுத்த பாகத்த போடுங்க மோகன்..

leomohan
02-11-2006, 01:15 PM
7



அடுத்த சில நாட்களில் அவளுக்கு விசா கிடைக்கவே மாலினி காலேனியல் வில்லேஜ் என்ற இடத்தில் வீடு பார்த்திருந்தாள். வீட்டில் தன்னுடைய பொருட்களையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு ராஜிடம் நான் கிளம்பறேன் என்றாள்.

அவன் போ என்றும் சொல்லவில்லை. இரு என்றும் சொல்லவில்லை. அவளை பொறுமையாக நின்று நோக்கினான்.

அவள் அவனருகில் வந்து அவனை எட்டி பிடித்து அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள். அவள் கண் கலங்கியிருந்தது.

ஹேய் நீ இப்பவே எனக்கு விடை கொடுக்க வேண்டாம். நான் உங்க வீட்டுக்கு வந்து எல்லாம் அடுக்கி வைக்க உதவி செய்யறேன் என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் எடுத்து வண்டியில் ஏற்றினான்.

15 நிமிட பயணத்தில் போருக்கு பின் வரும் அமைதி. வீடு சென்று அடைந்தபிறகு பம்பரமாய் சுழன்று வீட்டை தயார் செய்தாள் மாலினி. அவனும் முடிந்த அளவு உதவி செய்தான்.

அனைத்தையும் முடித்துவிட்டு அவள் தன் படுக்கையின் ஓரத்தில் வந்து அமர்ந்தாள். அது ஒரு ஸ்டுடியோ அப்பார்ட்மென்ட். படுக்கையறை ஹால் சமையல் அறை எல்லாம் ஒரே இடத்தில். அவன் எதிர் மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.

அவள் தன் கூந்தலை அவிழ்த்துவிட்டு பறக்கவிட்டிருந்தாள். அது அவளுடைய இடது முகத்தை மறைத்திருந்தது. சில நிமிடங்கள் யாரும் ஒன்றும் பேசவில்லை. அவன் அவளருகில் சென்று அமர்ந்தான். அவள் கூந்தலை விலக்கிவிட்டான். அவளுடைய முகவாயை தன் பக்கம் திருப்பினான். அவன் தன்னுடைய வலது கையால் அவள் பின் கழுத்தை பிடித்து அவளை அருகில் கொண்டு வந்து மெதுவாக கூறினான்.

மாலினி நீ அழகான பெண்.

..

மாலினி நீ அறிவுள்ள பெண்.

..
(சீக்கிரம் சொல்லுங்க என்று ஆவலாக அவனை நோக்கினாள்)

உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம்.

..

உன்னோடு பேசிகிட்டே இருக்கலாம்.

..

ஒரு நாள் முழுவதும் உன்னோடு இருக்கனும்னு சொன்னா கூட அதை என் பாக்கியமா தான் நினைப்பேன்.

(நாள் முழுவதுமா? வாழ்நாள் முழுவதும் என்று சொல்லுங்கள்)

ஆனா என்னால உன்னோட 22 மணி நேரம் தான் இருக்க முடியும்.

அவள் குழப்பமாக பார்த்தாள்.

குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது என் மனைவியோட இருக்கனும் இல்லையா? என்று சொல்லிவிட்டு சட்டென்று எழுந்தி திரும்பினான். அவன் கண் கலங்குவதை அவளுக்கு காட்ட அவன் விரும்பவில்லை.

அவனுடைய வலது கையை பிடித்து சட்டென்று நிறுத்தினாள்.

நீங்கள் யாரையாவது காதலிக்கிறீங்களா?

ஆமாம் திரும்பாமலே விடை சொன்னான்.

அவங்க உங்களை காதிலிக்கிறாங்களா?

தெரியலை. கண்களில் நீர் வழிந்தது.

அவங்க உங்களை காதலிக்கலைன்னு சொன்னா வரிசையில் நான் இரண்டாவது ஆளா நிற்கிறேனா? ஏக்கத்துடன் கேட்டாள்.


அவன் திரும்பி அவளுடைய இரண்டு தோள்களையும் தன் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு - நீ அழகான புத்திசாலியான தோழி மட்டும் எனக்கு. ஏன்னா இந்த வரிசையில் ஒரே ஒரு டோக்கன் தான். அதை அவளுக்கு எப்போதோ தந்துவிட்டேன். அந்த டோக்கனை அவள் பயன்படுத்தாவிட்டாலும் வேறு டோக்கன் இல்லை என்னிடம். புரிந்ததா?

அவள் ஒரு நிமிஷம் என்று சொல்லி உள்ளே போனாள். சிவாலய விபூதியை எடுத்து அவன் நெற்றியில் இட்டு ஊதினாள். ஒரு ஐயர் பெண் நாமமே இட்டு வளர்ந்த அந்த ஐயங்காரின் நெற்றியில் விபூதியின் மூலம் தன் முடிவை தெரிவித்திருந்தாள்.
Raj, you are the best. I will treasure the time I spent with you till my death.


You are a wonderful person Malini. I had some memorable time with you. You deserve the best partner. Unfortunately its not me. Bye


Bye


அவன் மெதுவாக நடந்து வெளியே சென்று தன் காரை துவக்கி ரோட்டில் நுழைந்தான். அவன் மனம் தெள்ளத்தெளிவான நீரோடையில் போல் இருந்தது.

குதிரை கூட்டதைவிட்டு அது மான் கூட்டத்தில வந்துடுத்து ராஜ்.

மான் கூட்டம் அவளை ஏத்துக்கலைன்னா ராஜ் அவ நடுத் தெருவில.

நீ மாலினி கிட்ட சிலியாவின் மாற்றை பார்த்தே. அப்படின்னா நீ சிலியாவைத்தான் இன்னும் தேடிக்கிட்டு இருக்கே.

என் நண்பன் ஒரு மாமேதை. இந்த நாட்டில் குடும்ப கவுன்சிலர் என்று போர்ட்டு போட்டுக் கொண்டு மக்களின் பிரச்சனையை கேட்கவே பல ஆயிரம் டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். அவர்களால் மக்களின் பிரச்சனை தீர்கிறதா என்று தெரியவில்லை.
Raju you are the best psychiatrist in the world என்று நண்பனை புகழ்நதான். சிலியாவின் ஃபயிலை டெலிட் செய்யவில்லை அவன். மாலினியின் ஃபயிலை காபி செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.

leomohan
02-11-2006, 01:17 PM
8


கிருஷ்ணனும் சுருதியும் அமர்ந்து கொண்டு இந்த விடுமுறைக்கு எங்கே போகலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள்.

சைப்ரஸ் என்றான் கிருஷ்ணன். அங்கே விநாயகம் இருக்கான் போய் பார்க்கலாம். அவன் எல்லா இடத்தையும் சுத்தி காண்பிப்பான்.

வேண்டாம்.

துபாய்? கோவிந்தராஜன் இருக்கான். அவன்கிட்ட இன்னோரு வீடு காலியா இருக்கு ஓட்டல் செலவு கூட இல்லை. என்ன சொல்றே?

வேண்டாம்.

பஹ்ரைன்? பாலாவோட தம்பி பாஸ்கர் இப்பதான் வேலை கெடைச்சி போயிருக்கான். சொன்னா விசா ஏற்பாடு பண்ணித்தருவான்?

வேண்டாம்.

வேறே எங்க சுருதி நீயே சொல்லு. சுவிட்சர்லாந்தா?

நியூ ஜெர்ஸி என்றாள்.

எதுக்கு?

உங்க நண்பர் ராஜகோபாலையும் சிலியாவையும் பார்த்துவரலாம். வின்டர் அங்கே. பனி அழகாக இருக்கும். அப்படியே. என்று வேண்டும் என்றே இழுத்தாள்.

அப்படியே. அவன் ஆர்வத்துடன் பார்த்தான்.

அப்படியே உங்க குழந்தையையும் முதல் பொண்டாட்டியையும் பார்த்து வரலாம்.

ஏய் நீ தான் என் முதல் பெண்டாட்டி என்று சொல்லி அவளை இறுக அணைத்தான். ஐ லவ் யூ சுருதி. யூ ஆர் த பெஸ்ட்.

திருமணம் ஆகி இன்று வரை ஒரு நாள் கூட ரீட்டாவைப் பற்றியோ அவன் செய்த தப்பைப் பற்றியோ அவள் பேசியதே இல்லை. இது அவள் மேல் அவன் கொண்ட காதலையும் மதிப்பை கூட்டியிருந்தது. ரீட்டா மாதாமாதம் எழுதும் கடிதங்கள் சுருதி பெயருக்கே வந்தன. அவை நீ நல்லா இருக்கியா கிருஷ் நல்லா இருக்கானா. என் குழந்தையோட போட்டோ இணைச்சிருக்கேன் என்று சாதாரணமான கடிதங்கள் தான்.

என்ன தான் தவறான உறவாக இருந்தாலும் ஒரு ஆணுக்கு தன்னுடைய மகன் மகள் என்ற ஒரு பாசம் இருக்கத்தான் செய்யும் அல்லவா? எங்கோ வளர்ந்து கொண்டிருந்த தன் முதல் வாரிசை பார்க்க அவனுக்கும் ஆவலாக இருந்தது. அதை எப்படி சுருதியிடம் சொல்வது என்று ஏங்கித்தவித்தான். சுருதி அவனுடைய மனநிலை புரிந்தவளாய் இந்த விடுமுறைக்கு நியூ ஜெர்ஸிதான் என்ற முடிவை எடுத்தாள்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ரீட்டாவிற்கும் தகவல் கூறினார்கள். அவள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். என் வீட்டில் தான் வந்து இறங்க வேண்டும் தங்க வேண்டும் என்று அடம் பிடித்தாள். ரூட் 1ல் ஒரு 10 மைல் ஓட்டினால் ரீகல் சினிமா காம்ப்லெக்ஸ் வரும். அதன் பின்னால் ஆல்பர்ரி வே. அதில் ஒரு டவுன் ஹவுசில் தனியாக இருந்தாள் ரீட்டா.

அழகான வீடு. முன்னாலும் பின்னாலும் பச்சை பசேல் புல்வெளி. மரங்கள். கீழே சமையல் அறை ஒரு பெரிய ஹால். மேலே மூன்று படுக்கை அறை. மிக அழகாக அலங்கரித்திருந்தாள். ஒரு பெரிய தஞ்சாவூர் தட்டு ஒரு தலையாட்டி பொம்மை அவளுடைய வீட்டில் சற்றே இந்திய மணத்தை வீசி தெளித்தது. சமையல் அறையில் குளிர்சாதனப் பெட்டியின் மேல் மூன்று படங்கள். ஒன்று கிருஷ் இன்னொன்றில் அவள் குழந்தையுடன். மற்றொன்றில் அவள் குழந்தை மட்டும்.

சுருதியை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்.
Shruthi darling. You are the best in the world

என்றால் இன்பத்துடன்.
I know

என்றாள் சுருதி சிரித்துக் கொண்டே.

ரீட்டா குழந்தையயும் அவள் எடுத்த பல புகைப்படங்களையும் காட்டிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் ராஜ் தன் வேலையை முடித்துக் கொண்டு ரீட்டாவின் வீட்டிற்கு கிருஷ்ணன் சுருதியை பார்க்க வந்தான்.

ராஜ் எனக்கு இந்த இடம் சுத்தி காண்பிங்க என்று ராஜை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள் சுருதி. கிருஷ்ணனுக்கும் ரீட்டாவுக்கும் தனிமை தேவைப் படலாம் இல்லையா?

சுருதி நீ கெட்டிக்கார பெண். கிருஷ்ணன் உன் கிட்டே அவன் செஞ்ச தப்பை சொன்னதும் நீ கல்யாணத்தை நிறுத்தியிருந்தா உன் எதிர்காலமே பாதிக்கப்படிருக்கும். உங்க அப்பா அம்மா மனசு நொடிஞ்சி போயிருப்பாங்க. கிருஷ்ணனோடு அப்பா அம்மா அவனை கொன்னே போட்டிருப்பாங்க. அவனோடு வாழ்க்கையும் வீணா போயிருக்கும். உன்னோட ஒரு முடிவாலே இவங்க எல்லோருடைய வாழ்கையையும் சொர்க்கமாக்கிட்டே என்று தன் நண்பனின் மனைவியை பாராட்டினான் மனமார.

இல்லை ராஜகோபால். ஒரு ஆண் வீட்டை விட்டு வெளியே போனதும் அலைந்து திரிகிறான். அவன் பல பெண்களை சந்திக்கிறான். பல பேரோடு உறவு கொள்கிறான். ஆனால் அவன் இரவில் வீடு திரும்பிறானா? இது தான் கேள்வி. கோவலன் மாதிரி மாதவியின் வீட்டிலே இருந்துவிட்டால் தான் பிரச்சனை. எப்போ வந்து கிருஷ்ணன் என்கிட்டே இந்த விஷயத்தை சொன்னானோ அப்பவே அவனுக்கு என் மேலே ஏதோ பிடிப்பு இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன். ரீட்டாவுடன் நடந்தது ஒரு விபத்து. அது நிரந்திரமில்லாதது. நான் தான் நிரந்தரம்.

அதுமட்டுமல்ல. நான் ஒரு வேளை அவனை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் இந்த நிரந்திரமில்லாத உறவை நிரந்திரம் ஆக்க அவன் முயற்சி செய்திருப்பான். அதனால் எல்லோருக்குமே தொல்லைதான்.

இப்போது கூட நான் உங்களை வெளியே அழைச்சிகிட்டு வந்ததே அவங்க இரண்டு பேரும் தனியாக இருக்கத்தான். அவர்கள் உடல் உறவு கொண்டாலும் எனக்கு கவலையில்லை. வருடம் ஒரு முறை அவர்கள் சந்திப்பதையோ சேர்நதிருப்பதைப் பற்றியோ எனக்கு கவலையில்லை. வீட்டைவிட்டு கிருஷ்ணனாய் போய் ராமனாய் திரும்பி வந்தால் போதும்.

அவளை வியப்புடன் பார்த்தான் ராஜ்.





- - -

அங்கோ கிருஷ்ணன் தன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தான்.

ரீட்டா நீ கல்யாணம் பண்ணிக்கோ? நான் வேண்டுமானால் குழந்தையை எடுத்து போய் வளக்கறேன். எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்லை.

வேண்டாம் கிருஷ். எனக்கு என் குழந்தை போதும்.

அப்ப உன் நினைப்பு முழுக்க குழந்தைக்கு மட்டும் தானா? எனக்கு இல்லையா?

இருக்கு கிருஷ்.நீ 2 சதவிகிதம். குழந்தைக்கு 98 சதவிகிதம்.

2 சதவீதம் தானா?

ஆம். நீ கொடுத்த அந்த ஒரு உயிர்துளியில் நான் இந்த அன்புக் கடலை உருவாக்கியிருக்கிறேன்.

நீ இங்க மாசமா இருக்கும் போது எனக்கு உன் நினைப்பு தான் ரீட்டா. நீ இங்கே எவ்வளவு கஷ்டப்படறியோன்னு நெனைச்சி நான் துடிதுடிச்சி போயிட்டேன். எனக்கு நீதான் முக்கியம். நீ தான் 98 சதவீதம் எனக்கு. குழந்தை 2 சதவீதம் தான்.

ஹா ஹா எனக்கு 98 சதவிகிதம் கொடுத்திட்டா சுருதிக்கு ஒன்னும் இல்லையா?

வேண்டாம் ரீட்டா. இந்த கேள்வி மட்டும் என்கிட்டே கேட்காதே. என்னால் பதில் சொல்ல முடியாது என்றான் கிருஷ்ணன்.

leomohan
02-11-2006, 01:18 PM
நிறைவுப் பகுதி
சுருதி நீ அவனுக்கு என்ன சுதந்திரம் தந்திருக்கன்றதை கேட்டா எனக்கு சந்தோஷமா இருக்கு. ஆனால் நான் என் நண்பனைப் பத்தி சொல்றதை கேளு. அவன் ரீட்டாவை தொடக்கூட மாட்டான்.

சுருதி மெல்ல சிரித்தாள்.

வா இப்பவே போய் பார்ப்போம்.

வேண்டாம் ராஜகோபால்.

வா நீ என்று கட்டயமாக அழைத்துச் சென்றான்.

கதவு திறந்தே இருந்தது. 4 அடி தள்ளி இருவரும் அமர்ந்திருந்தனர். கிருஷணனின் கையில் குழந்தை. எதிரே ரீட்டா. ஏதோ ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தாள். செந்தமிழும் நாப்பழக்கம். என்னதான் தமிழ் படித்தாலும் பேச யாரும் இல்லையென்றால் எப்படி வரும் பழக்கம்.

ராஜகோபாலுக்கு ஒரு வெற்றி. சுருதிக்கு கிருஷ்ணன் மேல் இன்னும் மதிப்பும் அன்பும் கூடியது. ராஜ் சுருதியைப் பார்த்து பார்த்தாயா என் நண்பனை என்பது போல ஒரு ஜாடை செய்தான். அவள் கண்களாலேயே நன்றி கூறினாள்.

ஹேய் சுருதி இந்த குழந்தை உன்ன மாதிரியே இருக்கு என்றான் கிருஷ்ணன் நகைச்சுவையாக.

உங்களுக்கும் ரீட்டாவுக்கும் பிறந்த குழந்தை என்னை மாதிரி எப்படி இருக்கும்? கிண்டலா என்று கேட்டாள் பொய் கோபத்துடன்.

இல்லை சுருதி. நான் ரீட்டாவோடு சேரும்போதே நீ எனக்குள்ளே தான் இருந்தே என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

அவனை அணைத்துக் கொண்டாள் சுருதி. ரீட்டா ஆனந்தம் பொங்க கண்ணீர் மல்க அவர்களை பார்த்தாள்.

அரை மணி நேரம் கழித்து சிலியா வந்தாள். சுருதியை கட்டி தழுவிவிட்டு ரீட்டாவிற்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு கிருஷ்ணின் கை குலக்கினாள்.

ராஜை பார்த்து எப்படி இருக்கே என்று கேட்டாள்.

உன் முன்னாடி எப்படி இருக்கேனா அப்படிதான் இருக்கேன் என்றான் விரக்த்தியாக.



ரீட்டா அனைவருக்காகவும் சமைக்க சமையல் அறையில் ஏதோ போட்டு உருட்டிக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் ராஜ் என்னுடைய சிங்க் அடைத்துவிட்டது. தண்ணீர் நிரம்பி வழிகிறது கொஞ்சம் சரி செய்ய முடியுமா? ஆண்கள் இல்லாமல் பெண்கள் தனியே வாழமுடியும். பலரும் அப்படித்தான் வாழ்கிறார்கள். ஆனால் வீட்டில் ஒரு ஆண் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்பது இந்த மாதிரி சில சமயங்களில் தான் பெண்களுக்கு புரிகிறது. அமெரிக்காவில் இது போன்ற சிறிய வேலைகள் நாமாகவே செய்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் 100-200 டாலர்கள் தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.

ஓ. நான் பார்க்கறேன் என்று சொல்லி விட்டு ஒரு ஸ்க்ரூ டிரைவரை கையில் எடுத்துக் கொண்டு சிங்க்கை நோட்டம் விட்டான். அந்த கீழ் தட்டை திறந்தால் தான் என்ன அடைப்பு என்று பார்க்க முடியும் என்று சொல்லிக் கொண்டே திருப்பளியை வைத்து அதை நெம்பினான்.

அவன் சற்றும் எதிர்பாரதா வண்ணம் அந்த ஸ்டீல் தட்டு சட்டென்று எழும்பி அதன் கூரிய விளிம்பு அவன் கட்டை விரலை அறுத்தது.

ஆ என்று கத்தினான். சிலியா ஓடி வந்தாள். அவன் விரல் துண்டாகியிருந்தது. இன்னும் நன்றாக கிழித்திருந்தால் விரல் தனியே கீழு விழுந்திருக்கும்.

என்னாச்ச ராஜ்? என்றவள் ரத்த சிதறல்களைப் பார்த்து பதறினாள். சட்டென்று தன் கைகுட்டைய எடுத்து அவன் விரல்களில் கட்டிவிட்டு அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு காரை நோக்கிச் சென்றாள்.

கிருஷ்ணன் ஓடி வந்து நான் வரட்டுமா என்று கேட்க வேண்டாம் என்று கத்திக் கொண்டே வண்டியை ராபின்ஸன் மருத்துவமனைக்கு ஓட்டினாள்.

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

மருத்துவர் அவனைப்பார்த்து இது மட்டும் பின்புறமாக கிழித்திருந்தது என்றால் உன் விரல் உனக்கு இல்லை என்றார். பிறகு ரத்தத்தை துடைத்து மருந்திட்டு 10 தையல் போட்டு அந்த விரலை உடலுடன் சேர்த்தார்.

என் கையை சரி செய்ததற்கு நன்றி டாக்டர். இது ஒரு அழகான தேவதையின் கைகளை பிடிக்க வேண்டிய பெரும் பணிக்காக காத்திருக்கிறது என்று அவளை பார்த்துக் கொண்டே மருத்துவரிடம் கூறினான்.

அவள் அவனை உற்றுப் பார்த்தாள். அதில் எல்லையில்லாத காதலைப் பார்த்தாள். ஏக்கத்தை பார்த்தாள். பொறுமையை பார்த்தாள்.

அவனை காரில் அமர்த்தி வண்டியை துவக்கினாள்.

உனக்கு சிங்க் சரி பண்ணத் தெரியுமா? தெரியாத வேலையெல்லாம் ஏன் செய்யறே என்று கத்தினாள்.

சிலியா தெரியாத பல வேலை செஞ்சிருக்கேன் நான். கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன். அமெரிக்கா வந்தேன். புகை பிடிச்சேன் சாராயம் குடிச்சேன். டிஸ்கோ போனேன். ஒரு அழகான தேவதையின் மேல் காதல் கொண்டேன். அவளை நினைத்து பைத்தியமானேன். அவளை பிரிந்து நடை பிணமானேன். அவளுக்காக அழுதேன். புலம்பினேன். இது எல்லாமே முதல் முறை செஞ்ச காரியங்கள் தானே?

அவள் மௌனமானாள்.

நாம ஒரு காபி குடிக்கலாமா?

கிருஷ்ணன் சுருதி அங்கே காத்திருக்காங்க? என்ற அவள் சொன்னாலும் அவனுடன் இன்னும் சில நேரம் தனிமையில் இருப்பதையே விரும்பினாள்.

ரீட்டா பாத்துப்பா. நீ வண்டியை ஓட்டு.

ப்ரன்ஸ்விக் ஸ்கொயர் மாலில் பார்ன்ஸ் அன்ட் நோபில் எதிரே வண்டியை அணைத்தாள். ஒவ்வொரு பார்ன்ஸ் அன்ட் நோபில் புத்தக கடையிலும் ஒரு ஸ்டார் பக்ஸ் காபி கடை உண்டு.

ஒன் காஃபே லாட்டே அன்ட் ஒன் எஸ்பிரஸ்ஸோ என்று விட்டு அவன் அருகில் வந்த அமர்ந்தாள். காபி அமெரிக்காவில் எப்போதுமே பெரிய கோப்பைகளில் தான். குடிக்கவே 20 நிமிடம் ஆகும். அன்று 30 நிமிடம் ஆனது.

இரு ஆன்மாக்கள் பேசிக் கொள்ளாமல் அருகாமையில் இருப்பதே சொர்க்கம் என்று நினைத்திருந்தன.

காபி குடித்த பிறகு நான் ஒரு புத்தகம் வாங்கவேண்டும் என்றான்.

சரி என்று சொல்லி அவளும் கூட வந்தாள். கட்டுப்பட்ட கையை எங்கேயாவது இடித்துவிட போகிறான் என்ற கவலை அவளுக்கு. இன்னும் 15 நிமிடங்களை கழித்தான்.

பிறகு ஒரு பெரிய புத்தகத்தை கையில் எடுத்தான். அவளிடம் காட்டினான்.

குழந்தை வளர்க்க 1000 யோசனைகள் என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி ஒரு அழகான பிஞ்சின் போட்டோ போட்டிருந்தது.

யாருக்கு இந்த புக் சுருதிக்கா? அவ முழுகாம இருக்காளா?

இல்லை சுருதிக்கு இல்லை.

பின்னே ரீட்டாவிற்கா?

இல்லை.

பின்னே யாருக்கு?

உனக்கு.

என்ன? எனக்கு எதுக்கு?

நமக்கு அடுத்த மாசம் கல்யாணம் ஆயிட்டா அடுத்த வருஷம் உன் கையில் குழந்தையிருக்கும் இல்லையா?

அவனை இறுக கட்டி உதட்டோடு உதடு முத்தமிட்டாள். பல நிமிடங்கள் அவனை அணைத்து முத்தமிட்டபடியே இருந்தாள்.

இத்தனை நாள் என்னை விட்டுட்டு எங்கே போயிட்டே ராஜ்?

நான் எங்கேயும் போகலை சிந்து. உன்னோடு தான் இருந்தேன். உன்னோடு தான் வாழ்ந்தேன். நீதான் என்னைவிட்டுட்டு போயிட்டே.

இனிமே போகமாட்டேன் ராஜ். என் உயிருள்ளவரை போகமாட்டேன் என்று கண்களில் நீர் மல்க சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள்.

இருவரும் புத்தகத்திற்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர். அவள் தன் வலது கையால் அவன் இடது கையை பிடித்துக் கொண்டு அவன் தோள்களில் சாய்ந்தவாறே நடந்து வந்தாள்.

சிந்து உனக்கு இன்னொரு விஷயம் சொல்றேன். என் அம்மன் கிட்டே வரம் கேட்கறதுக்கு நான் விழுப்புரம் போகவேண்டிய அவசியமில்லை. நான் எங்கிருக்கிறேனோ அங்கே வந்து என் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றி வைப்பாள் அவள்.

ராஜ் இன்னிக்கு நானும் இங்கே வரதுக்கு முன்னேஅவள் கிட்டே கெஞ்சி கேட்டுட்டுதான் வந்தேன்.

மேற்கு கறுத்திருந்தது. ஆனால் இந்த புது கிழக்கின் சங்கமத்தில் மேற்கில் ஒரு புது உதயம் ஆரம்பமாகியிருந்தது.






முற்றும்

leomohan
02-11-2006, 01:19 PM
இதானே வேணாங்கறது....இப்படி சஸ்பென்ஸுல முடிச்சுட்டா...
சீக்கிரமா அடுத்த பாகத்த போடுங்க மோகன்..

ஐயோ அப்படி இல்லையண்ணா. ஒரே நாள்ல கொடுத்தா யாரும் படிக்காம போயிடக்கூடாது பாருங்க. கொஞ்சம் வேலையும் செய்யனும்ல. :)

மதி
02-11-2006, 01:21 PM
ஐயோ அப்படி இல்லையண்ணா. ஒரே நாள்ல கொடுத்தா யாரும் படிக்காம போயிடக்கூடாது பாருங்க. கொஞ்சம் வேலையும் செய்யனும்ல. :)
அதுவுஞ் சரி தான்..:D :D

pradeepkt
03-11-2006, 04:35 AM
அத்தோட ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் முந்தைய அத்தியாயத்துக்கும் முடிவில் அடுத்த அத்தியாயத்துக்கும் ஒரு லிங்க் கொடுங்க மோகன்.
என்னை மாதிரி அப்பப்போ வந்து மொத்தமாப் படிக்கிறவுங்களுக்கு உபயோகமா இருக்கும்...

leomohan
03-11-2006, 04:43 AM
அத்தோட ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் முந்தைய அத்தியாயத்துக்கும் முடிவில் அடுத்த அத்தியாயத்துக்கும் ஒரு லிங்க் கொடுங்க மோகன்.
என்னை மாதிரி அப்பப்போ வந்து மொத்தமாப் படிக்கிறவுங்களுக்கு உபயோகமா இருக்கும்...

அவசியம் ப்ரதீப்.

guna
03-11-2006, 05:34 AM
நிறைவான முடிவு மோகன்..

இதே மாதிரி ஒரு தாக்கத்தை எற்படுத்தற வேரு ஒரு கதையை படிக்கும் வரை இந்த கதையின் தாக்கம் குணாவை விட்டு அகலாதுனு நினைக்கறேன்..

அழகான எத்தனை எத்தனை காதல்கள் இந்த கதையில, நன்றி மோகன்..

குணா

meera
03-11-2006, 05:48 AM
ஒரு வழியா முற்றும் போட்டச்சா?.

மோகன் அருமையான கதை.சிலியாவின் கேரக்டர் ஏனோ என்னை மிகவும் கவர்ந்தது.

மேலை நாட்டாரின் மீது ஒரு நல்ல எண்ணத்தை உண்டக்கியது இந்த கதை

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகாய் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிதான் நான் நினைக்கிறேன்.

leomohan
03-11-2006, 06:10 AM
நிறைவான முடிவு மோகன்..

இதே மாதிரி ஒரு தாக்கத்தை எற்படுத்தற வேரு ஒரு கதையை படிக்கும் வரை இந்த கதையின் தாக்கம் குணாவை விட்டு அகலாதுனு நினைக்கறேன்..

அழகான எத்தனை எத்தனை காதல்கள் இந்த கதையில, நன்றி மோகன்..

குணா

நன்றி குணா. எனக்கும் சற்று பயமாகவே உள்ளது. ஏனென்றால் பல நுட்பமான காதல்களை இங்கு சொல்லிவிட்டேன். இப்போது ஒரு புது கரு தோன்றியது. ஆனால் காதல் அடிப்பட்டுவிடுமோ என்று சற்று தயங்கி நிற்கிறேன்.

leomohan
03-11-2006, 06:10 AM
ஒரு வழியா முற்றும் போட்டச்சா?.

மோகன் அருமையான கதை.சிலியாவின் கேரக்டர் ஏனோ என்னை மிகவும் கவர்ந்தது.

மேலை நாட்டாரின் மீது ஒரு நல்ல எண்ணத்தை உண்டக்கியது இந்த கதை

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகாய் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிதான் நான் நினைக்கிறேன்.

நன்றி மீரா. சொல்லமுடியாது பாகம் 4 வந்தாலும் வரும்.

guna
03-11-2006, 06:40 AM
நன்றி குணா. எனக்கும் சற்று பயமாகவே உள்ளது. ஏனென்றால் பல நுட்பமான காதல்களை இங்கு சொல்லிவிட்டேன். இப்போது ஒரு புது கரு தோன்றியது. ஆனால் காதல் அடிப்பட்டுவிடுமோ என்று சற்று தயங்கி நிற்கிறேன்.

எல்லா விசயங்கலும் பல பலமாதிரி, இன்னும் சொல்ல போனால் நாம் எதிர்பார்காத கோணங்கள்ல எல்லாம் உருவெடுப்பது இயற்கை தானே மோகன்?

காதல் எப்பவுமே அழகாவா இருக்கும்?
அழகான காதலை ரசிச்சாச்சு, அது அடிபடர்தை பார்கவும் குணா தயார்..

மீரா கிட்ட சொன்ன மாதிரி பாகம் 4 இருந்தால் சந்தோசமே..
தொடருங்கள் மோகன்.

குணா

மதி
03-11-2006, 07:16 AM
கதாபாத்திரங்களை நீங்கள் கையாண்ட விதம் அருமை மோகன். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்...

ஸ்ருதி..!

leomohan
03-11-2006, 03:32 PM
அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று தொகுப்பையும் இம்மன்றத்தில் மின் புத்தகப் பகுதியில் ஏற்றியுள்ளேன்.

ஓவியா
13-01-2007, 09:31 PM
அனைத்து பாகங்களையும் ரசித்தேன்

எல்லா கோனத்திலும் ரசனைத்தேன் சொட்டுகிறது

அம்மன், சிந்து, மாலினி, சுருதி, பிரவீனா, ரீட்டா, அனைவருக்கும் அருமையான கேரேக்டர்

சிறந்த எழுத்தாளர் மோகனை பாராட்டுகிறேன்

புத்திசாலியா இருகீங்களே சார்,

leomohan
14-01-2007, 04:14 PM
மேற்கே செல்லும் விமானம் பாகம் 4
எழுத்து மோகன் கிருட்டிணமூர்த்தி



1

ராஜகோபால் தன்னுடைய நியூ ஜெர்ஸி வேலையை விட்டுவிட்டான். ஆனாலும் அவர்கள் அவனை விடுவதாய் இல்லை. சென்னை டைடெல் பார்க்கில் ஒரு புதிய நிறுவனம் துவங்கி மென்பொருள் தயாரிக்கும் பகுதியின் தலைமை அலுவலராக அவனை ஆக்கி வழி அனுப்பினார்கள்.

தன்னிடமிருந்த சேமிப்பை வைத்து அடையாரில் ஒரு வீடு வாங்கினான். ஒரு மாருதி 800 வாங்கினான். சிலியாவை திருமணம் செய்துக் கொண்டு விழுப்புரம் வீட்டை காலி செய்ய சொல்லி பெற்றோர்களையும் கூடவே அழைத்து வந்துவிட்டான்.

எல்லாம் சரியாக செல்வது போல் தோன்றியது. தன் ஆத்மார்த்த காதலியை துணைவியாக அடைந்ததில் ஒரு பெரிய சந்தோஷம் அவனுக்கு. வெள்ளைகாரி மருமகளாக வந்தாலும் தாங்கள் விரும்பியவாறு வந்ததற்கு பெரிய திருப்தி அடைந்தனர் அவன் பெற்றோர்.

அவளுடைய குடியுரிமையை மாற்ற பல அலுவலகங்களுக்கு இன்னும் அலைந்த வண்ணம் இருந்தான் ராஜ். முரளி தான் அவர்கள் சென்னையில் செட்டிலாக உதவிக் கொண்டிருந்தான். ராஜூவும் கிருஷ்ணனும் கூட முற்றிலுமாக சென்னைக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள்.

5 நாட்கள் அலுவலகம் என்றிருந்தாலும் வேலை பளு இந்தியாவில் அதிகம் என்பதை உணர்ந்தான்.

காந்தி நகரை கடந்து ஒரு யூ வளைவு எடுத்து மத்திய கைலாஷ் கோவிலை கடக்கும் போது தன்னையும் அறியாமல் பாம்பு படம் காட்டுவது போல் வலது கையை குவித்து உதட்டின் கீழ் இரண்டு முறை கொத்திக் கொண்டான்.

சனி விடுமறை. ஆனால் பல மணி நேரம் தூங்கி கழித்துவிடுவான்.

சிலியா வந்த புதிதில் அனைத்தும் என்ன என்ன என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவளிடத்தில் ஒரு மாற்றத்தை கண்டான் ராஜ். அவள் பேசுவதை குறைத்திருந்தாள். தனிமையில் இருக்கவே விரும்பினாள்.

காதல் கணங்கள் குறைந்து வருவதை கவனித்தான் ராஜ். நேராக தன்னுடைய அறைக்கு சென்று அமர்ந்ததும், தொலைபேசியை எடுத்து முரளி ராஜ் பேசறேன்டா என்றான்.

சொல்லுடா.

சிலியா ரொம்ப டிப்ரெஸ்டா இருக்கற மாதிரி தோனுது டா என்றான்.

ஏன் என்னாச்சு என்றான் முரளி பதட்டத்துடன்.

தெரியலை.

அவளை எங்காவது வெளியே அழைச்சிகிட்டு போறியா.

சனி டயர்டாக தூங்கிடறேன்டா. ஞாயிறு கர்நாடிக் இசை கச்சேரி, எஸ்வி சேகர் கிரேஸி மோகன் டிராமா, லக்ஷ்மன் சுருதி, கோவில் இப்படி எங்க போனாலும் எல்லாரும் சேர்ந்து தான்டா போறோம்.

டேய் முட்டாள். அவ அமெரி்க்கா பொண்ணுடா. உன்னை காதலிச்சான்றத்துக்காக நீ ரசிக்கிற எல்லா கருமத்தையும் அவளும் ரசிக்கனும்னு எதிர்பார்க்கிறியா. எஸ்விசேகர், கிரேஸி டிராமா மெட்ராஸ்ல பொறந்து வளர்ந்தவங்களுக்கே புரியறதில்லை.

என்னடா சொல்றே.

சாப்பாடு.

முழு வெஜிடேரியனா மாறிட்டாடா.

போடா ம...ரு, நாளைக்கு என்ன கிழமை. வியாழன். சரி. லீவ் போடு. சத்யம் இல்லாட்டா மாயாஜால் அழைச்சிகிட்டு போ. ஹாலிவுட் படம் காண்பி. அப்புறம் ஏதாவது அமெரிக்கன் ரெஸ்டாரெண்ட் அழைச்சிகிட்டு போ. அப்பப்ப அவள் அமெரி்க்கன் அப்படிங்கறதை மறக்காதே. புரிஞ்சுதா.

ம்.

என்ன ம்ம்.

செய்றேன் டா. சரி அப்புறம் போன் செய்யறேன் என்றான்.

leomohan
14-01-2007, 04:19 PM
2

மறுநாள் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தில் எழுந்திரிக்கவில்லை ராஜ். அவன் பெற்றோர்கள் சிலியா அனைவரும் பூஜை செய்து முடித்திருந்தனர். அவள் காபியோட அவன் அறைக்கு வந்தாள்.

எழுந்திரி ராஜ். என்ன டயர்டா. 8 மணியாகுது என்றாள் சிந்து.

படுத்தவாறே அவளை நோக்கி இடது கையை நீட்டினான். அவள் கை கொடுக்க அவளை அருகில் இழுத்து அமர்த்தினான்.

இன்னிக்கு ஆபீஸ் லீவ் என்றான்.

என்ன. எதுக்கு லீவ். என்னாச்சி. உடம்பு சரியில்லையா என்றாள்.

இல்லை. இன்னிக்கு முழுசும் உன்னோட நேரம் செலவிடப்போறேன். முதல்ல ஒரு சினிமா. அப்புறம் டின்னர் என்றான்.

என்ன திடீர்னு என்றாள் சுரத்தில்லாமல்.

சும்மா தான்.

என்ன படம்.

நீ வாயேன்.

சரி என்று சொல்லி விலகினாள்.

அவன் யோசனையில் ஆழந்தான்.

சுமார் 11 மணி அளவில் கிளம்பி திருவான்மயூக் கடந்து ஈஸ்ட் கோஸ்ட் ரோடு பிடித்து மாயாஜாலை சென்று அடைந்தான். டிக்கெட் வாங்கிக் கொண்டு திரையரங்கில் நுழைந்தனர் இருவரும். நல்ல மசாலா ஆங்கில படம்.

பார்த்து வெளியே வந்ததும் சற்று தூரம் காரை ஓட்டி வந்து அந்த அமெரி்க்க உணவு சங்கிலியின் பிரபல கடையில் நிறுத்தினான்.

பிடிக்கிறதோ பிடிக்கலையோ அவர்கள் போடும் முரட்டு ரொட்டியில் தூவியிருக்கும் கண்ட வகை காய்கறிகளை கொழுப்பு சத்தோடு தின்றுவிட்டு தண்ணீரில் கலர் போட்டு அதை வாய்க்கு வந்தவிலைக்கு விற்பதையும் உணராமல் வாங்கி குடித்தவாறே நுனிநாக்கில் யு சி என்று ஆங்கிலத்தில் அலட்டிக் கொள்ளும் மேற்காக மாறிவரும் தமிழக கூட்டம் ஒன்று திரிந்துக் கொண்டிருந்தது. ராஜ் இங்கெல்லாம் போக மாட்டான். அவனுக்கு சரவணபவன், சங்கீதா, ஆனந்த பவன், கீதா பவன் தான். தனியாக இருந்தால் எந்த சிறிய கடைக்குள்ளும் நுழைந்துவிடுவான்.

ஒரு சிக்கன் நக்கெட்ஸ், ஒரு ஹாம்பர்க்கர் என்று சொன்னான்.

அதுவரை அமைதியாக இருந்த சிலியா யாருக்கு என்று கேட்டாள் காட்டமாக.

உனக்குதான் சிலியா. நீ ரொம்ப நாளா நான்-வெஜ் சாப்பிடலை. ஹாலிவுட் படம் பார்க்கலை. அதனால தான் இந்த ட்ரீட்.

நான் வெஜிடேரியனாயிட்டேன்னு உனக்கு தெரியாதா.

எனக்காக நீ பண்ண தியாகம் போதும் சிலியா. நீ இயல்பா இரு.

புல் ஷிட் என்றுவிட்டு விரைவாக வெளியே சென்று காரின் கதவின் மேல் சாய்ந்து நின்றாள்.

ஆர்டர் கான்ஸெல் என்றான் ராஜ்.

இல்லை சார் சொல்லியாச்சு ஏற்கனவே என்றார் பரிமாறும் இளைஞர்.

சட்டென்று பர்ஸிலிருந்த இரண்டு 100 ரூபாய் தாட்களை எடுத்து கொடுத்து விட்டு ஓடிச் சென்று அவளருகில் நின்றான்.

மெதுவாக தன் வலது கையால் அவள் இடது கையை பிடித்தான். அவள் சட்டென்று அவன் மேல் சாயந்து அழ ஆரம்பித்தாள்.

அவளுடைய மன கலக்கம், மன அழுத்தம் இதற்கான காரணம் என்ன என்று ஒன்றும் விளங்காமல் கலங்கினான்.

அவள் எந்த ஆடைகள் அணியவும் முழு சுகந்திரம் கொடுத்திருந்தார்கள் அவன் பெற்றோர். அவளும் சில நாள் டீ ஷர்ட் ஜீன்ஸ் அணிந்துவருவாள்.

இவன் வழக்கமாக செல்லும் கோவில்களில் அவளை அனுமதிக்கிறார்கள்.

யாரும் அவளை தனியாக நடத்தியதில்லை.

அவனுக்கு வேலை அதிகம். ஆனாலும் அவன் அவள் மேல் வைத்திருந்த அன்பு கொஞ்ம் கூட குறையவில்லை. அப்படியிருக்க இவளுக்கு என்ன டிப்ரெஷன் என்று அவனுக்கு புரியவில்லை.

ஒன்றும் பேசாமல் அவளை கைபிடித்து காரை சுற்றி வந்து கதவை திறந்து அவளை அமரச் செய்தான். பிறகு நேராக பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்று வண்டியை நிறுத்தினான்.

அவளை அழைத்து சென்று அலைகள் தொட்டுச் செல்லும் விளிம்பில் சென்று அமர்ந்தான்.

சில நிமிடங்கள் இருவரும் பேசவில்லை.

சிலியா, என்று மெதுவாக அவளை இழுத்து தன் தோள்களில் சாய்த்துக் கொண்டான் ராஜ்.

சிலியா... உனக்கு என்ன பிராப்ளம் என்று கேட்டான்.

தெரியலை. அவள் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் தேம்பினாள்.

உடம்பு கிடம்பு ஏதாவது சரியில்லையா.

இல்லை. நல்லாதான் இருக்கேன்.

அப்பா அம்மா ஏதாவது சொன்னாங்களா.

சே. அப்படியெல்லாம் இல்லை.

பின்னே ஏன் நீ டல்லா இருக்க. முன்னவெல்லாம் துருதுருன்னு இருப்பியே.

தெரியலை.

நீ வேலைக்கு போக ஆசைப்படறியா. ஏதாவது பல்கலைகழகத்தில அப்ளை பண்றியா.

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

சூரியன் கடலுக்குள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் ஒரு முறை வெளியே சட்டென்று வந்து சென்றது போல் இருந்தது அவனுக்கு.

சரி நாளைக்கு அம்மாவை பார்க்க போகலாமா என்றான் ராஜ்.

அவள் கண்ணுக்குள்ளும் அந்த சூரியன் சட்டென்று வந்து மறைந்தான்.

சரி என்றாள்.

அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்.

மாடிக்கு சென்று கஸ்தூரிபாய் நகர் மாடி ரயில் போகும்வரை காத்திருந்துவிட்ட முரளிக்கு போன் செய்தான் ராஜ்.

மச்சான் வொர்க் அவுட் ஆகலைடா. அவளுக்கு படமும் பிடிக்கலை. பர்கரும் வேண்டாம்னு சொல்லிட்டாடா.

ம். ஒரு குழப்பமா இருக்கே.

நாளைக்கு அவளை விழுப்புரம் அழைச்சிகிட்டு போகலாம்னு இருக்கேன்.

அம்மனை தரிசனம் செய்யறதுக்கா.

ஆமாம்.

சரி போயிட்டுவா. அதுக்குள்ளே நான் என்னோட ஹோம் மினிஸ்டிரியோட பேசிட்டு என்ன பண்ணலாம்னு சொல்றேன் என்றான்.

வீட்டுக் கணினியை தட்டி அமெரிக்காவில் இருக்கும் தலையகத்திற்கு இன்னும் ஒரு நாள் விடுப்பு தேவை என்று எழுதிவிட்டு சென்று உறங்கினான்.

leomohan
15-01-2007, 05:50 PM
3

மறுநாள் காலையில் பெற்றோர்களிடம் சொன்ன உடனேயே அவர்கள் நிலைமை புரிந்துக் கொண்டு சென்று வா என்றார்கள்.

வண்டியில் பெட்ரோல் முழுவதுமாக நிரப்பிக் கொண்டு, குடிநீர், நொறுக்குத்தீணி எடுத்துக் கொண்டு கிளம்பினர் சிந்துவும் ராஜீம்.

சிலியா, உன்னோட சந்தோஷம் தான் என்னோட சந்தோஷம். இது உனக்கு தெரியுமா என்றான்.

தெரியும் என்றான்.

நீ சந்தோஷமா இருக்கியா.

தெரியலை.

நீ அமெரிக்காவை மிஸ் பண்றியா.

தெரியலை.

வேணும்னா நீ 1 மாசம் நியூ ஜெர்ஸி போயிட்டுவர்றியா.

உன்னை விட்டு தனியா இருப்பேன்னு நினைக்கிறியா.

சரி. நானும் வர்றேன். இரண்டு பேரும் போயிட்டு வருவோமா.

வயசான காலத்தில உங்க அப்பா அம்மாவை தனியா விட்டுட்டு போகனும்னு சொல்றியா.

ரீட்டாவை வேணும்னா இங்க வரச் சொல்லலாமா.

தேவையில்லை.

உங்க குடும்பத்தில யாரையாவது மிஸ் பண்றியா.

நீ, உங்க அப்பா-அம்மா இவங்க தான் என் பேமிலி.

சிலியா, அழகு தேவதையே அமெரி்க்காஸ் என்வி, நீ இந்தியாஸ் ப்ரைட் என்றான்.

என்ன கவிதையா.

ஒரு முயற்சி தான். நிறைய கவிதை எழுதியிருக்கேன்.

அப்படியா. எனக்கு காட்டவே இல்லையே.

அதெல்லாம் தோல்வி கவிதைகள். நீ என்னோட இல்லாதப்ப எழுதினேன். இப்பத்தான் நீ எனக்கு கிடைச்சிட்டியே.

எனக்கு ஏன் காட்டலை.

விடு.

சரி.

சிலியா, நீ வேலைக்கு போகனும்னு ஆசைப்பட்டா போகலாம். எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை.

நீ யாரு ஆட்சேபனை செய்ய என்றாள்.

மெல்ல சிரித்தான் ராஜ்.

நீ தான் என் உயிரை. என்னை இயக்க வைக்கும் சக்தி சிலியா என்றான் மென்மையாய், ஆறுதல் அளிக்கும் வகையில்.

தாங்கஸ். ஐ லவ் யூ ராஜ் என்றாள் சிலியா.

காபி சாப்பிட போகலாமா என்பது போல சாதாரணமான, உணர்ச்சிகளற்ற வார்தை போல் இருந்தது அவள் சொன்ன ஐ லவ் யூ. ஆசை இல்லை, காதல் இல்லை, அன்பு இல்லை. கடமை போல் இருந்தது. ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாள். அதை வாய் திறந்து சொல்ல முடியாத குழந்தை போல் இருக்கிறாள். அவளுடைய frustration, depression இவற்றிற்கு காரணம் அறியாமல் திணறினான்.

முண்டியம் பாக்கம் கடந்து ராவுத்தர் மில்லிலிருந்து இடது கை பக்கம் சிறிய சந்தில் வண்டியை ஓட்டிச் சென்று செல்லியம்மன் கோவிலின் அருகில் நிறுத்தினான்.

மதியம் ஆகியிருந்தது. கோவில் சாத்தியிருந்தது. ஆனால் கம்பி கதவுகளின் இடையே அம்மனை காண முடிந்தது. அம்மனுக்கு அலங்காரம் இல்லை. அவள் முகத்தில் புன்னகை இருந்தது. ஆனால் களை இல்லை.

திரும்பி சிலியாவை பார்த்தான். அவள் முகத்திலும் களை இல்லை.

அம்மா, உன் முகத்திலிருந்த களையோட உன் குழந்தை முகத்திலிருந்த களையும் காணாமல் போய்விட்டதே. அவளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அவள் முகத்தில் களை கொண்டு வா. உன் முகத்தில் தானாக களை வரும் என்று வேண்டிவிட்டு கம்பிக்கு இடையில் கை விட்டு குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டான்.

செல்பேசி ஒலித்தது. சட்டென்று வெளியே சென்று போனை எடுத்தான். முரளி தான். மச்சான் இன்னிக்கு ராத்திரி எத்தனை மணியானாலும் வீட்டுக்கு வா. ப்ரவீணா ஒரு யோசனை சொல்லியிருக்கா என்றான்.

சரி என்றுவிட்டு வைத்தான்.

சிலியா கும்பிட்டுவிட்டு வந்தாள்.

யாரையும் விழுப்புரத்தில் பார்க்கும் நிலையில் அவன் இல்லை. அவன் வந்துவி்ட்டு பார்க்காமல் சென்றான் என்று தெரிந்தால் பாலாவும் சத்யாவும் நல்ல பாட்டு கொடுப்பார்கள். ஆனால் சிலியாவை அதிகம் தொந்தரவு செய்ய விரும்பாம்ல் வண்டியை எடுத்து செல்வன் ஹோட்டலில் லேசாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள்.

வரும் வழியில் பேசாமல் வந்தனர் இருவரும்.

பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல் இருந்தது. அவன் பெரும் குழப்பத்தில் இருந்தான். சாதி விட்டு, மதம் விட்டு, நாடு விட்டு திருமணம் புரிந்துக் கொண்டது தவறோ. இப்படி ஒட்டில்லாமல் இருக்கிறாளே. என்ன செய்வது. அவளுக்கும் சந்தோஷம் இல்லாமல் மற்றவர்களுக்கும் சந்தோஷம் இல்லாமல் என்ன வாழ்கை இது.

மறுபடியும் அமெரி்க்காவே போய்விடலாமா. அங்கு ஒருவேளை நிம்மதியாக இருப்பாளா. இங்கு வேலைக்கு சேர்ந்தால் சந்தோஷப்படுவாளா.

வண்டியை ஒரு ஒரத்தில் ஒரு பெட்டிக் கடையின் அருகில் நிறுத்தினான். ஒரு சிகரெட் வாங்கி வாயில் வைத்தான். அவள் அமைதியாக இருந்தாள். பிறகு பற்ற வைத்தான். அவள் ஒன்றும் சொல்ல வில்லை. சே ஏதாவது வெறுப்பேற்றலாம் என்று பார்த்தால் அமைதியாக இருக்கிறாளே என்று நினைத்துக் கொண்டே புகைக்காமல் அதை தூக்கி எறிந்துவிட்டு வண்டியை துவக்கினான்.

அவள் மெல்ல புன்னகைத்தாள். பல வாரங்களில் முதல் புன்னகை. மெதுவாக அவள் கையை பிடித்தான். 4வது கியிரில் வண்டியை போட்டுவிட்டு சீரான வேகத்தில் ஓட்டினான்.

சிலியா, வசுதேவனுக்கு 7வது பிறந்து குழந்தை தான் பலராமர் தெரியுமா. 8வது குழந்தையால் தான் தனக்கு சாவுன்னு தெரிஞ்சாலும் விஷ்ணு ஏதாவது மாயையை செய்து பிறந்துவிடுவாருன்னு சொல்லிட்டு கம்சன் தேவகியோட எல்லா குழந்தைகளையும் கொல்ல சொல்றான். பலராமரை கொல்ல வரும்போது ஒரு பாம்பா மாறி அவனை பயம் புறுத்தராரு. 8வது குழந்தையா கிருஷ்ணரும் பொறக்கறாரு. எத்தனை முயற்சி பண்ணாலும் அவனால அவதார கிருஷ்ணனை கொலை பண்ண முடியலை. பூத்னா அப்படின்னு ஒரு ராட்சஸி அனுப்பறாரு. அவ தன்னுடைய மூலையில் விஷம் நிரப்பி கிருஷ்ணனுக்கு பால் கொடுத்து கொல்ல முயற்சி பண்றா. ஆனா கிருஷ்ணன் அவளை கொல்றாரு. இன்னும் எத்தனையோ முயற்சி செய்தும் தோத்து போறான். அப்ப கம்ஸனோட நண்பன் ஒரு பயங்கரமான ஆயுதத்தை உபயோகிக்க சொல்றான். இப்படி சொல்லிவிட்டு சற்றே நிறுத்தினான் ராஜ்.

என்ன ஆயுதம் என்றாள்.

அவள் ஆர்வம் காட்டுகிறாளா என்பதற்காகவே அப்படி நிறுத்தினான் இடையில்.

அந்த ஆயுதத்தின் பெயர் தான் காத்திருக்கும் ஆயுதம்.

அப்படின்னா.

அப்படின்னா நாம் செய்ய போற காரியத்துக்கு ஏற்ப சுழல் அமையலைன்னு தெரிஞ்சும் மீண்டும் மீண்டும் ஒரு காரியம் செய்ய முயற்சி பண்ணி தோற்றுப்போறது முட்டாள்தனம். அப்ப நாம் காத்திருக்கறது தான் நல்ல ஆயுதமா பயன்படுத்தனும். உனக்கு என்ன பிரச்சனை அப்படின்னு எனக்கு தெரியலை. ஆனா நம்பிக்கை விட்டுடாதே. காத்திரு. எல்லாம் சரியாயிடும்.

நல்லா கதை சொல்றே என்றாள்.

வீட்டில் அவளை இறக்கிவிட்டு, நான் முரளியை பார்த்திட்டு வர்றேன் என்றான் ராஜ்.

என்ன விஷயம்.

தெரியலை கூப்பிட்டான்.

எப்ப.

நீ கோவில்ல இருக்கும் போதும் போன் வந்தது.

அப்படியா. எங்கே காட்டு என்றாள்.

ஒரு அமெரிக்க பெண். ஒருவருடைய தனிமைப்பட்ட விஷயங்களில் தலை இடக்கூடாது என்று அறிந்தவள். இதுவரையில் இவனுக்கு வந்த கடிதங்களை படிக்காதவள். மொபைலில் யாருக்கு போன் செய்தான், யாரிமிருந்து போன் வந்தது எனும் பார்க்கும் பழக்கம் இல்லாதவள், அவனே தன் மின்னஞ்சல் பெட்டியை திறந்து வைத்திருந்தாலும் அந்த கணினி பக்கத்தை மூடிவிட்டு தன் வேலையை செய்வள் அன்று முதல் முறையாக அவன் சொன்ன விஷயத்தை நம்பாமல் அவனிடம் செல்பேசி கேட்கிறாள்.

செல்பேசியை எடுத்து முரளி போன் செய்த நேரத்தை காட்டினான். அவள் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள்.

இவள் சராசரியாக இல்லை. ஏதோ ஒரு பாதுகாப்பின்மை அவளை ஆட்கொண்டிருந்தது. அவன் மனதை இருள் கவ்வியது. யோசனையுடன் முரளி வீட்டுக் சென்றான்.

leomohan
15-01-2007, 05:58 PM
4
மறுநாளும் விடுமுறை. ஆனால் சரியான நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு செய்தி தாளை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான்.

முரளி சரியாக 8 மணிக்கு வந்தான். ராஜின் பெற்றோர்களை அழைத்து சென்றான் மைலம் கோவில் செலவதற்கு.

வீட்டில் சிலியாவும் ராஜீம் மட்டும்.

தன் அறைக்கு சென்று ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டான். சில அசைவுகள் எனும் தலைப்பு. எடுத்து படிக்க துவங்கினான். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அறைக்கு வந்தாள் சிலியா.

அருகில் வந்து அமர்ந்தாள். அவனிடமிருந்து புத்தகத்தை பிடுங்கி கீழே எரிந்தாள்.

என்னம்மா ...

என் கிட்டே பேசு.

என்ன பேசனும்.

எதாவது பேசு.

ஒரு கதை சொல்லட்டுமா.

ம்.

கிருஷ்ணன் கதை.

ம்.

சரி. ஒரு நாள் குட்டி கிருஷ்ணன் என்ன பண்ணாரு....

நீ எனக்கு அறிவுரை தர்ற மாதிரி கதையெல்லாம் வேண்டாம்.

இல்லை. இந்த கதை கேளு.

ம்.

வெண்ணெய் வேணும்னு கேட்டாரு யசோதாவை. அவள் தரமாட்டேன் என்று சொல்ல, கெஞ்சி கேட்கிறார். ஒன்றும் வேலைக்காகாமல் போகவே ஒரு கழியை எடுத்து தாழியை உடைத்துவிடுகிறார். அவள் தலை மேல் இருந்ததால் பானை உடைந்து வெண்ணெய் அவள் மேல் விழுகிறது. கோபம் கொண்ட யசோதா அவரை அடிப்பதற்கு துரத்துகிறாள். அவர் கோகுலம் முழுக்க ஓட, தளர்ந்து போன யசோதா அவரை கயிறு எடுத்து உரலுடன் கட்டிவிட முயல்கிறாள்.

எத்தனை பெரிய கயிறை எடுத்தாலும் இரண்டு அங்குலம் குறைவாகவே ஆகிவிடுகிறது.

அப்போது இதை பார்த்துக் கொண்டிருந்த நாரதர் தாயே இறைவனை அகங்காரத்தால் கட்ட முடியாது. பல பெரிய மகான்களும் ரிஷிகளும் கோபத்தாலும் அகங்காரத்தாலும் இறைவனை கட்ட முயன்று தோற்றுவிட்டார்கள். ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இந்த இரண்டு அங்குலம் தான் தூரமாக கடைசி வரை நின்றுவிடுகிறது. இந்த இரண்டு அங்குல தூரத்தை கடந்து இறைவனை அடைந்தவர் மிக சொற்ப மனிதர்களே. எப்போது அகம்பாவத்தை விட்டு கோபத்தை விட்டு அவனை சரணடைகிறோமோ அப்போது தான் அவனை
அடையமுடியும். அது கூட நாம் அடைய முடியாது. அவனே உவந்து நம்மை அணைத்தால் தான் அவனுடன் சங்கமமாகிறோம்.

இது காதில் விழுந்தது போல யசோதா என்னால் உன்னை கட்ட முடியவில்லை கண்ணா. நான் தோற்றுவிட்டேன். நீயே சொல். உன்னை எப்படி கட்டுவதென்று என்று கயிறை கீழே போடுகிறாள்.
அவள் சிறியது என்று கீழே போட்ட கயிறை எடுத்து தன்னை தானே கட்டிக் கொள்கிறாள் கிருஷ்ணர். அவள் வியந்து பார்க்கிறாள்.
இப்படி கதை சொல்லிவிட்டு ஒரு நிமிடம் மௌனமானான் ராஜ்.

அவ்வளவு தானா கதை.

அவள் அருகில் வந்து, மெல்ல அவள் கைகளை பிடித்துக் கொண்டு, சிலியா, நீ தான் எனக்கு கிருஷ்ணன். நான் உன் அன்புக்கு ஏங்கும் யசோதா. நீயாக விரும்பினால் தான் நான் உன்னை அறிய முடியும். எனக்கும் உனக்கும் இன்னும் அந்த இரண்டு அங்குல இடைவெளி இருப்பதாகவே உணர்கிறேன். நீ தான் உன்னை புரிந்துக் கொள்ள எனக்கு உதவவேண்டும் என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

அவள் அமைதியாக அவனை பார்த்தாள். அவளுடைய helplessness அவள் கண்ணில் தெரிவதை பார்த்தான்.

அவளை இறுக அணைத்தான். அணைத்தவாறே சிலியா, ஒரு நல்ல தேவனும் ஒரு அழகான தேவதையும் சேர்ந்தால் ஒரு நல்ல அழகான தேவதை உருவாளா என்று கேட்டாள்.

இல்லை.

பிறகு?

அந்த தேவனை போல ஒரு அழகான தேவன் உருவாகுவான் என்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் இறுக அணைத்துக் கொண்டனர்.

விரைவில் ஒரு குட்டி தேவதை அந்த வீட்டில் வர விதை விதைக்கப்பட்டது.

guna
16-01-2007, 06:32 AM
குணா படிக்க ஆரம்பித்து விட்டேன், தொடருங்கள் மோகன்.

leomohan
16-01-2007, 07:55 AM
5

கிருஷ்ணனுக்கு சென்ற ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது. முதலில் அவன் தந்தை 78 வயது இளைஞ்ர் இறைவனடி சேர்ந்தார். முதல் நாள் வரை சுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டிருந்தவர்.

ராஜ் முரளி ராஜூ இவர்கள் கூட்டம் அவரிடம் சிறுவயதில் நன்றாக திட்டு வாங்கியிருக்கிறார்.

அவங்களோட சேர்ந்து தான் நீ கெட்டு போறே என்று கிருஷ்ணனுக்கு நல்ல டோஸ் விழும். ஆனால் இவர்கள் அனைவரும் வாழ்கையில் நல்ல முன்னேற்றம் கண்டதும் அதை கண்டு சந்தோஷப்பட்டவரும் அவர் தான். வீட்டுக்கு வந்தால ராஜ மரியாதை.

அவர் இறந்தது நண்பர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருந்தது.

சில மாதங்களிலே அவனுடைய அண்ணனை பார்க்க ஆஸ்திரேலியா சென்ற அவன் தாயார் முன்னால் அமர்ந்து காரில் செல்ல ஒரு ஹெட் ஆன் கொலிஷனில் கார் விபத்துக்குள்ளாக அந்த இடத்திலேயே உயிரை விட்டார்.

இது இன்னொரு அடி.

அவனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து மிகவும் மகிழச்சி நிலவிய அவர்கள் குடும்பத்தில் இப்படி இரட்டை துக்கம்.

இதிலிருந்து மீண்டு வருவதற்கள் சளி அதிகமாகி மூச்சுவிடமுடியாமல் உறங்கச் சென்ற அவனுடைய இரட்டை குழந்தைகளில் ஒன்று பிறகு எழுந்திரிக்கவே இல்லை.

இது கிருஷ்ணனுக்கும் சுருதிக்கும் பெரிய அடியாக இருந்தது.

வேலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வந்த கிருஷ்ணனுக்கு இவையெல்லாம் பேர் இடியாக இருந்தது.

நண்பர்கள் அனைவரும் அவனை ட்வின்ஸூக்கு அப்பா என்றே கூப்பிடுவார்கள். இந்த தகுதியை அவன் இழந்திருந்தான்.

நண்பர்களை பார்ப்பதும் குறைத்துக் கொண்டான். இறை பக்தியில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்தான். தடாலடியாக ஒரே வருடத்தில் தனிமை பட்டுவிட்டது போல அவன் நினைத்தான்.

அவன் எப்போதும் ராசா ராசா என்று இவனை கிண்டலாக கூப்பிடுவான்.

ராசா ராசா என்று ஒலித்தது. சட்டென்று நினைவலைகளில் இருந்து வெளியே வந்த ராஜ் தான் சிலியாவின் செக்கப்பிற்காக மருத்துவமனை வந்திருப்பதையும் கிருஷ்ணன் வருவதாக சொல்லியிருப்பதையும் அதனால் கிருஷ்ணனை பற்றி நினைக்க தொடங்கியிருந்ததையும் உணர்ந்தான்.

என்னடா மச்சான். என் பொண்ணா ஆணான்னு கனவா என்றான் கிருஷ்ணன். அதே மாதிரி எப்போதும் ஸ்மார்ட்டாக இருந்தான்.

எப்படா வந்தே கிருஷ் என்றான் ராஜ்.

சரியா போச்சி போ. தூரத்திலேர்ந்து என்னை பார்த்திட்டேன்னு நினைச்சேன். கிட்டே வந்து 500 டெசிபல்ஸ் காட்டு கத்தா கத்திகிட்டிருக்கேன்.

சாரிடா.

எங்கே சிலியா.

உள்ளே போயிருக்கா.

என்னடா விஷமமா.

ஹா ஹா. ஆமாம். எல்லாம் முரளியோட யோசனை.

என்னடா உனக்கு குழந்தை பிறக்க அவன் யோசனை கொடுத்தான்னா. அவன் என்ன டாக்டர் மாத்ருபூதமா என்றான் கிருஷ்ணன் நக்கலாக.

இல்லைடா. சிலியா ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தா. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியலை. அப்ப முரளி வீட்டுக்கு போனேன். ப்ரவீணா தான் முரளி கிட்டே சொல்லியிருக்கா. குழந்தைக்கு ப்ளான் பண்ணு அப்பத்தான் சிலியாவுக்கு வாழ்கையில் ஒரு பற்றுதல் கிடைக்கும்னு. அதான்.

நல்ல அட்வைஸ் தான். ரீட்டாவுக்கு குழந்தை பிறந்தது இல்லே. அதை பார்த்துட்டு வந்ததிலேர்ந்து சுருதியும் டிப்ரெஸ்டா இருந்தா. ஒரு வகையான இன்செக்யூரிட்டி. அவளுக்கு குழந்தை பிறந்ததும் தான் அவ சகஜ நிலமைக்கு வந்தா. நான் என்னமோ அவளை விட்டுட்டு போயிடுவேன்னு ஒரு பயம் இருந்தது போல அவளுக்கு.

அப்படியா.

ஆமான்டா. எல்லாம் சரியாயிடுத்து நினைக்கும்போது தான் இந்த அடுத்தடுத்த மரண அடி.

அவனை அணைத்துக் கொண்டு, கிருஷ், ஒரு அமெஸிங்க் விஷயம் என்ன தெரியுமா. நாம் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சந்திக்க கூடிய சஸ்டைனிங்க பவர் நமக்கு கொடுத்திருக்கான் ஆண்டவன். எனக்கு உன்னை பத்தி தான் கவலை. நீ ஒரு குழந்தை. சுருதி பத்தி எனக்கு கவலையே இல்லை. ஷி இஸ் ப்ரில்லியண்ட். ரீட்டா விஷயத்தை அவள் கையாண்ட விதத்திலேயே தெரிஞ்சி போச்சு. அவ தான் உன்னை கண் கலங்காம பார்த்துக் போறான்னு என்றான் ராஜ்.

ஆமான்டா. அவ தான் என்னை பாத்துக்கறா. அதோ சிலியா வர்றா என்றான் கிருஷ்ணன்.

சிலியா வந்ததும் கிருஷ்ணனை பார்த்து புன்னகைத்தாள். ஹாவ் இஸ் ப்ரீத்தி டூயிங் என்றாள்.

ஓ. அவ மகாராணி மாதிரி இருக்கா.

அடுக்கடுக்கா சோதனைகள் உங்கள் வீட்டில். ஹோப் ஷி ஹாஸ் கம் அவுட் ஆஃப் இட் என்றாள்.

ஆம். கொஞ்ச கொஞ்சமாக தான்.

ராஜ் எழுந்து சிலியா என்ன விஷயம் என்றான்.

நாளைக்கு சொல்வாங்களாம் என்றாள். நீ போய் ரிப்போர்டு வாங்கிட்டு வர்றியா.

ஆம். அதைவிட எனக்கு என்ன வேலை என்றான் கண்ணடித்தபடியே.

கிருஷ்ணன் அவர்களை வாழ்த்தி விடைபெற்றான்.

leomohan
16-01-2007, 07:55 AM
6


மாலையில் அதிக நேரம் வேலை செய்யும் பழக்கம் ராஜூக்கு. ஏனென்றால் அமெரிக்கா முழுவதும் இயங்க தொடங்கியதும் வரும் மின்னஞ்சல்களை பார்த்துவிட்டு போவது வழக்கம்.

மணி 9.00 ஆகியிருந்தது. கடைசியாக சில மின்னஞ்சல்களுக்கு பதில் சொல்லிவிட்டு கிளம்பும் நேரத்தில் அந்த மின்னஞ்சல் வந்தது. அவனுக்கு ஏற்பட்டது ஆச்சர்யமா அதிர்ச்சியா என்று அவனால் சொல்ல முடியவில்லை.

டான் ஸ்டில் அவனுடைய மேலாளர் எழுதியிருந்தார். மாலினி வேலை விட விரும்பியதாகவும் ஊருக்கு திரும்பி செல்ல விரும்பியதாகவும், அவள் திறமை மிக்க மென்பொருள் வல்லுனராதலால் அவளை விட முடியாது என்றும் அதனால் அவளை மேற்பதவி கொடுத்து சென்னைக்கு மாற்றல் செய்யதாகவும் இன்னும் 5 நாட்களில் அவள் வேலைக்கு சேருவாள் என்றும் அவளுக்கான காபின் வசதிகள் செய்து தரச் சொல்லியும் தகவல் வந்திருந்தது.

இரு முறை படித்துவிட்டு ப்ரன்ஸ்விக்கு இரண்டுமுறை மனதால் பயணம் செய்துவிட்டு ஷூர் என்று ஒரு வார்த்தையில் பதில் எழுதிவிட்டு வீடு திரும்பினான்.

இதை சிலியாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது அவனுக்கு. இப்போதிருக்கும் அவள் மனநிலையில் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியவில்லை அவனுக்கு.

நேராக ஆஸ்பத்திரி சென்று ரிப்போர்ட் வாங்கிக் கொண்டான். அங்கிருந்த நர்ஸ் நல்ல விஷயம் தான் வாழ்த்துக்கள் என்றாள். புன்னகையோடு வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

சிலியாவுக்கு தெரியும் அவன் இன்று ரிப்போர்டோடு வருவான் என்று. ஆவலாக காத்திருந்தாள்.

உள்ளே போனதும் ஹாலில் இருந்த சோபாவின் மேல் அமர்ந்தான். அவனது தாய் தண்ணீர் டம்ளருடன் வந்து என்ன, டாக்டர்கிட்டே போனியா என்றார் ஆவலாக.

சிலியா ஆவலுடன் அவன் அருகில் வந்து அமர, அவள் தலையில் கைவத்துக் கொண்டு அம்மா சீக்கிரம் ஒரு பேத்தி வருவா உனக்கு, ரூமை ரெடி பண்ணி வை என்றான்.

அவன் அம்மா உள்ளே ஓடிச் சென்று சக்கரை எடுத்து வர அவன் தந்தை அவன் கையை பிடித்து கங்கிராஜூலேஷன்ஸ் மை பாய் என்றார். அவன் அம்மா சிலியாவை கட்டிக் கொண்டார்.

அவள் கண்களில் சுட்டித்தனமான அந்த சிலியா மீண்டும் வந்தாள். அந்த இழந்த களை திரும்பி வந்தது. அம்மனுக்கு களை வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான் ராஜ்.

மகிழ்ச்சி எங்கும் தாண்டவமாட மாலினி ஒரு ஓரத்தில் உறுத்தினாள்.

போன் கால் பறந்தன. அவன் ஒரு புரம் முரளி, ராஜூ, கிருஷ்ணன், சங்கர், பாலா, சத்யாவுக்கு போன் போட அவளோ ரீட்டாவுக்கு போன் போட்டு உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தாள். அவன் அம்மாவும் தன் தோழிகளுக்கு சொல் தந்தையோ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மூடியிருக்குமே இப்போது என்ற கவலையில் இருந்தார்.

ரீட்டாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது போன் இவனிடம் கொடுக்க அவளும் வாழ்த்துக்கள் தெரிவித்தாள்.

பிறகு இரு தோழியரும் அரை மணிக்கு மேலாக பேசி மகிழ்ந்தனர்.

ப்ரவீணாவிடம் போனில் ராஜ் சொன்னா, ப்ரவீணா நீ ஒரு தீர்க்கதரிசி என்றான்.

அவள் மிகவும் மகிழ்ந்தவாறே, அடடே நான் ஒன்னும் புதுசா சொல்லிடலையே. இதெல்லாம் ஊர்ல நடக்கறது தானே.

இருந்தாலும் உலகத்தில் நடக்கற விஷயத்தை கூட நம்மவர்கள் யாராவது சொன்னால் தானே உறைக்கிறது என்றான் ராஜ் நன்றியுணர்ச்சியுடன்.

leomohan
16-01-2007, 07:55 AM
7

மாலினி ராஜின் அறைக்குள் நுழைந்ததும் ஒரு புதிய நறுமணம் நுழைந்தது கூடவே. நிறைய மாறியிருந்தாள். நகரம் மாநகரமாயிருந்தது. சுருள் முடி. ஜீன்ஸ் பாண்ட், டி-ஷர்ட். உதட்டில் மெல்லிய சாயம். அது அவளுக்கு தேவையிருந்திருக்கவில்லை. முகத்தில் ஒரு அலட்சியம் வந்திருந்தது.

ஒரு அலுவலகத்தில் சேரும்போது அந்த அதிகாரியின் மேலாளரை சந்திப்பது சம்பிரதாயம் தானே.

ராஜ் எழுந்த கைகூலக்கி வரவேற்றான்.

என்ன மாலினி ஆளே மாறிட்டே.

மாறனது வெளி உருவம் மட்டும் தான், கோபால்.

கோபால். ஆ. வெகுநாட்களுக்கு பிறகு தன்னை அந்த பெயரில் அழைக்கிறார் ஒருவர். இதுவரையில் சென்னை வந்ததிலிருந்து சிலியாவை தவிர அவனை பெயர் சொல்லி யாரும் அழைக்கவில்லை. என்ன தான் மேல் நாட்டு கலாச்சாரம் வந்தாலும் இன்னும் இவனிடம் வேலை செய்யும் 20-25 பேர் அவனை சார் என்றே அழைக்கிறார்கள். இது ஆங்கிலேயர் விட்டுச் சென்ற அவலங்களில் ஒன்று.

அவன் இந்த சூழ்நிலையை தவிர்க்க விரும்பினான். வேறு வழியில்லை.

என்ன அமைதியாயிட்டீங்க கோபால். மாறனது வெளி உருவம் மட்டும் தான். உள்ள அதே மாலினி தான் என்றாள் அழுத்தமாக.

என்ன வேலைய விட முடிவு பண்ணிட்டே திடீர்னு. டான் அசந்து போயிட்டாரு. என்ன கல்யாணம் பண்ணிக்கிற திட்டமா.

இல்லை. கல்யாணத்தை பத்தி யோசிக்கவே இல்லை. எனக்கு அமெரிக்கா தனிமையாக பட்டது. ஒரு வெறுமை அதனால் வந்தேன். எனக்கு இந்த கிளையில் வேலை செய்யும் விருப்பம் இல்லை. ஆனால் டான் தான் வற்புறுத்தினார்.

ஆம். நீ எங்க கம்பெனிக்கு ஒரு பெரிய அசெட். ஆனா உனக்கு ஏன் விருப்பம் இல்லை. என்னோட வேலை செய்ய விருப்பம் இல்லையா.

இல்லை கோபால். பழசை நினைவுப்படுத்தற எல்லாரையும் எல்லா சூழ்நிலையையும் தவிர்க்க விரும்பறேன்.

ஏன் நீ புத்திசாலிப் பெண்.

புத்திசாலிகளும் காதல் தோல்வி அடைகிறார்கள் கோபால்.

அமைதியானான் ராஜ்.

மாலினி சேர்ந்த விஷயம் அலுவலகத்தில் பரவியிருந்தது. சிறிய பார்டிக்கு அடுத்த வாரம் ஏற்பாடு செய்திருந்தார்கள். மாலினி அழகி என்றும் பாசுடன் வேலை செய்தவள் என்றும் ப்ராஜெக்ட் மானேஜராக வந்திருக்கிறாள் என்றும் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

மாலினி வெளியே போனதும் அனைவரும் புன்னகைத்து கைகுலுக்கி வரவேற்றனர்.

ராஜ் அலைகழித்துக் கொண்டிருந்தான். ராஜூவுக்கு போன் அடித்தான். அவன் புதிய நிறுவனத்தில் சேர்ந்திருந்தான். அதனால் வேலை பளு அதிகம். மீட்டிங்க் மீட்டிங்க் என்று சொல்லிக் கொண்டிருப்பான். போனை எடுக்க வில்லை. கிருஷ்ணன். இல்லை. முரளியிடம் இதை பற்றி பேசலாமா.

சரியென்று முரளிக்கு போன் அடித்தான். எப்போதும் முதல் முறையில் எடுக்கும் ஒரு தொழிலதிபர் முரளி.

சொல்லுடா. இப்ப என்ன பிரச்சனை.

டேய். இது ஒரு பழைய பிரச்சனை. புது ரூபத்தில். மாலினி.

அடப்பாவி.

ஆமான்டா. என் பிரான்சில் சேர்ந்துட்டா.

ம். சரி நான் சொல்றத கேளு என்ற தன் வங்கியிலிருந்து அறிவுரைகளை அள்ளி வீசினான் ராஜின் குடும்ப ஆலோசகன்.

இதெல்லாம் நடக்கற காரியமாடா.

செஞ்சி பாரு. வொர்க் அவுட் ஆகலேன்னா கைவசம் நெறைய ஐடியா இருக்குடா.

சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டு யோசனையில் ஆழந்தான். மாலினி சேர்ந்ததை சிலியாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான்.

மதி
17-01-2007, 04:35 AM
ஹ்ம்ம்..
புது திருப்பங்கள்..புது குழப்பங்கள்...

தீர்ந்தனவா பிரச்சினைகள்...?

leomohan
17-01-2007, 09:57 AM
8

புதிய ப்ராஜெக்ட் கிடைத்திருந்தது. நிறைய பேர்களை அவசரமாக சேர்க்க வேண்டிய நிலை. ஆயிரமாயிரம் பயோ டேட்டாக்களை பார்த்து மனிதவள மேன்பாட்டு மேலாளர் 50 பேரை தேர்ந்தெடுத்திருந்தார். அதில் 11 பேர் வர இயலாது என்று தெரிவித்திருந்தனர். மற்ற 39 பேரில் சிலரை அவரே சந்தித்து அட்டிட்யூட் சரியில்லை என்று நிராகரித்திருந்தார். மீதி இருந்த 30 பேரில் சில மென்பொருள் வல்லுனர்களையும் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜரையும் தேர்ந்தேடுக்க வேண்டும்.

காலையில் 9 மணிக்கே வந்துவிட்டான் ராஜ். இன்றைய நாள் மிக நீளமான நாளாக போகிறது என்று நினைத்துக் கொண்டான். கான்பிரென்ஸ் அறையில் ராஜ், மனிதவள மேலாளர் ராஜாராம் மற்றும் மாலினி அமர்ந்திருந்தனர். அலுவலகத்தில் மாலினி சேர்ந்தவுடன் இதுவரை இன்ட்ர்வ்யூ எடுக்க கூப்பிட்டவர்களை கூட ராஜ் கூப்பிடவில்லையே என்று பேசிக் கொண்டனர்.

நேர்முகத் தேர்வு படலம் ஆரம்பமானது. மாலினி தொழில்நுட்ப ரீதியான கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, ராஜாராம் குணம், பொறுமை, அணுகுமறை போன்றவற்றை நோண்டிக் கொண்டிருக்கு, ராஜ் மட்டும் அங்குமிங்குமாக ஒரிரு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.

குமார். வயது 28 இருக்கும். 6 அடி உயரம். நல்ல சிவப்பு. சுருள் முடி. பெங்களூரில் பிறந்த வளர்ந்த தமிழன். பி.இ படித்துவிட்டு படிப்பின் ஊடே என்ஐஐடியில் 3 ஆண்டுகள் மென்பொருள் பாடம் படித்துவிட்டு, வெளிநாட்டில் ஒரு வருடமும் பயிற்சி முடித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தான். இரவு முழுவதும் பயணித்து வந்ததால் சற்று களைப்பாக இருந்தாலும் அவன் கண்களில் சுறுசுறுப்பு தோன்றியது.

ஒரு நேர்கோடில் அமர்ந்து பதிலளித்து கொண்டிருந்தார்கள் அனைவரும். இவனோ சகஜமாக சக்கர நாற்காலியில் மூன்று பேரை மாற்றி மாற்றி பார்த்தவாறே சுழற்றி பேசினான். நடுவில் விட்டுகள் அடித்தான். ராஜூக்கு பிடித்துவிட்டது. ராஜாராமுக்கும் பிடித்துவிட்டது. ஆனால் மாலினி ஒரு தொழில்நுட்ப வேட்டையில் அவனை சரமாரியாக கேள்விகளால் தாக்கிக் கொண்டிருந்தாள். ஏதோ தன்னைவிட அவன் முட்டாள் என்று நிரூபிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருப்பது போல். அவனும் சளைக்காமல் பேசினான்.

நடுவில் இருவரையும் வழிமறுத்திவிட்டு அவனுடைய குடும்பம் அவனுடைய விருப்ப வெறுப்புகள் என்று பல வேலை சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்டான்.

அவனை வெளியே அனுப்பிவிட்டு ராஜாராமை பார்த்தான். ப்ராஜெக்ட் மேனேஜருக்கு மிகவும் தகுதியான ஆள் என்றார் அவர். மாலதியை பார்த்தான். கோபால், எனக்கு என்னமோ இவரிடம் அதிக சரக்கு இல்லை என்று தோன்றுகிறது. நீங்கள் இவரை எடுக்க வேண்டாம் என்பது என்னுடைய சிபாரிசு என்றாள். ராஜ் ஆச்சர்யமானான். ராஜாராமும் ஆச்சர்யமானார்.

உங்கள் இருவருக்கும் என் நன்றிகள். நான் உங்கள் சிபாரிசுகளை ஏற்று ஒரு முடிவு எடுக்கிறேன் என்றான்.

leomohan
17-01-2007, 09:57 AM
9

சிலியா தாய்மையின் முதல் படியின் சுக-துங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மிகவும் உற்சாகமாக இருந்தாள். எத்தனை வேலையிருந்தாலும் ராஜ் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் மருந்துகள் வாங்கி வருவதும் அடிக்கடி போன் செய்து அலுவலகத்தில் இருந்து அவளிடம் பேசுவதுமாக இருந்தான்.

உன் குழந்தை வரப்போகுது, அதனால என் மேலே திடீரென்று இத்தனை அக்கறையா என்று நக்கலாக கேட்டாள் சிலியா. சிரித்து மழுப்பினான் ராஜ்.

டிவியின் கேபிள் இணைப்பை முற்றிலுமாக துண்டித்தான். பெற்றோர்களின் அறையில் மட்டும் கேபிள் இணைப்பு இருந்தது. வீட்டிற்கு வந்தால் தொலைகாட்சி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான். அவளுடன் பேசுவதும், மாடிக்கு சென்று அவளுடன் 7-8 சுற்று நடப்பதும், என்று அவள் மேல் அதிக கவனம் செலுத்தி வந்தான்.

-

மாலினி வரவேற்பு விருந்து குமாரின் வரவேற்பு விருந்தாகவும் மாறியிருந்தது. அந்த நட்சத்திர ஓட்டல் கோவளம் கடற்கரையில் அமைந்திருந்தது. இரவு முழுவதும் செல்லும் பார்டி என்பதாலும் கருவுற்ற நிலையில் அவளை அலைய வைக்கவேண்டாம் என்றும் சிலியாவை அழைத்துவரவில்லை ராஜ்.

அனைவரும் அவர்களுடைய குடும்பத்தினர், மற்றும் ஆண் பெண் நண்பர்களுடன் வந்திருந்தனர். பாட்டும், நகைச்சுவை நையாண்டியுமாய் ஒரு கூத்தாக இருந்தது.

தன்னிடம் வந்து புகைப்பெட்டியை நீட்டியவர்களிடம் தான் புகைப்பதில்லை என்றும், மதுபானம் நீட்டியவர்களிடமும் தான் குடிப்பதில்லை என்றும் அமைதியாக சொல்லி அனுப்பியவண்ணம் இருந்தான் ராஜ்.

பார்டிகளில் மேலாளருடன் பயமின்றி பேச ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் அவனிடம் சம்பளம் அதிகம் வேண்டும் என்றோ, அமெரிக்காவில் பணிபுரிய வாய்ப்பு வேண்டும் என்றோ, பதவி உயர்வு வேண்டும் என்றோ தன்னுடைய தேவைகளை சொல்லிக் கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ராஜ்.

அங்கோ குமார் கலக்கிக் கொண்டிருந்தான். ஒரு பீர் கோப்பை தலையில் வைத்துக் கொண்டும் வாயில் புகையுடனும் நடனமாடிக் கொண்டிருந்தான். புதிதாக சேர்நதவன் போல் இல்லை.

மாலினியின் கண்கள் ராஜை தொடர்ந்து கொண்டிருந்தவை, குமார் அடித்த கூத்தினால் அவன் மேல் சென்று நின்றன.

பல பேரை போல் நடித்துக் காட்டுவதும், உட்கார்ந்திருந்தவர்களை இழுத்து வந்து ஆடச் செய்வதுமாக இருந்தான்.

நேராக ராஜிடம் சென்று அவன் தோளில் கைபோட்டு வந்து ஆடச் சொல்லி வற்புறுத்தினான். ராஜூம் சிரித்தவாறு இரண்டு புறமும் கைகளை தட்டி இரண்டு மூன்று ஸ்டெப் போட்டுவிட்டு சிரித்தவாறு ஒரத்தில் சென்று நின்றான்.

ராஜ். சகஜமாக 2000-3000 பேர்களின் கூட்டத்திலும் தன்னை தனிமையாக காட்டும் சக்தி படைத்தவன். பாட்டு, ஆட்டம், கூட்டம் என்றெல்லாம் வந்தால் அவன் கலக்குவதை யாராலும் நிறத்தமுடியாது. அழகிலோ அறிவிலோ அவன் குமாரக்கு சற்றும் சளைத்தவன் அல்ல. அவன் குமார் முன் தோற்றுப்போகவில்லை அன்று. அவனுடைய உயர்ந்த பதவியும் அவனை தடுக்கவில்லை. ஆனால் அவன் போட்டியில் இல்லை. தான் ஓடுவதின் வேகத்தை குறைத்துக் கொண்டிருந்தான். குமார் முன்னே ஓடவிட்டிருந்தான். குமாரை ஜெயிக்கவிட்டிருந்தான். காரணம் இல்லாமல் இல்லை.

சுராங்கெனி சுராங்கெனி சுராங்கெனிக்கே மாலுக்கெனவா என்று உயர்ந்த குரலில் பாடிய குமார் பாட்டை மாற்றி சுராங்கெனி சுராங்கெனிக்கே மாலினிகென்னவா என்று பாடலை மாற்றி மாலினியை பார்த்து கை அசைத்தான். பிறகு ஆடிக் கொண்டே வந்தவன் சட்டென்று மாலினியின் இரு கைகளையும் பிடித்து ஆட வற்புறுத்தினான். அவள் சட்டென்று அவன் கைகளை உதறித்தள்ளிவிட்டு அலைகளினி விளிம்புற்கு சென்று நின்றாள். குமார் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆடிக் கொண்டிருந்தான்.

சில நொடிகள் அங்கிருந்துவிட்ட ராஜ் மாலினியிடம் சென்றான்.

என்னாச்சு மாலினி. ஏன் இப்படி நடந்துக்கறே.

அவன் செய்யறதே எனக்கு பிடிக்கலை.

ஹேய், இது பார்ட்டி தானே மாலினி.

அவனை ஏன் செலெக்ட் பண்ணீங்க. நான் வேண்டாம்னு சொன்னேனே.

மாலினி எனக்கும் ராஜாராமுக்கும் அவன் தகுதியானவன் என்று தோன்றியது. அதனால் எடுத்தோம்.

அப்ப என் வார்த்தைக்கு மதிப்பில்லையா.

நிறைய இருக்கு மாலினி. ஆனால் நமக்கு நேரம் இல்லை. அவசரத்தில் ஆள் எடுக்க வேண்டும். வந்தவர்களில் குமார் சிறந்தவன்.

அது சரி. நீங்க எப்ப என் ஃபீலிங்கை புரிஞ்சிகிட்டு இருக்கீங்க என்றாள் விரக்தியாக.

அவள் தலையை தட்டிவிட்டு, யூ வில் பி ஆல்ரைட் சூன் என்றுவிட்டு அகன்றான்.

நோ, ஐ வில் நெவர் பி ஆல்ரைட் வித்தவூட் யூ என்று கத்தினாள் பின்னாலிலிருந்து.

அவன் சிரித்துக் கொண்டே பார்டியில் கலந்துக் கொண்டான்.

guna
18-01-2007, 02:28 AM
மோகன், ப்ரீதியும் ஸ்ருதியும் ஒருவர் தானே?
பெயர் பலன் பார்த்து, ஸ்ருதி என்ற பெயர் சரியா இல்லை'னு மாத்திடீங்களா?

சுவரஷ்யமா இருக்கு, அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

leomohan
18-01-2007, 12:17 PM
மோகன், ப்ரீதியும் ஸ்ருதியும் ஒருவர் தானே?
பெயர் பலன் பார்த்து, ஸ்ருதி என்ற பெயர் சரியா இல்லை'னு மாத்திடீங்களா?

சுவரஷ்யமா இருக்கு, அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி குணா. இந்த பெயர் தவறுக்கு மன்னிக்கவும். சுட்டி காட்டியமைக்கு நன்றி.

leomohan
18-01-2007, 12:17 PM
10

குமார் மறுநாள் அலுவலகம் வந்ததும் மாலினியின் அறைக்கு சென்று மன்னிப்பு கேட்டான். அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் போகவே தன் அறைக்கு சென்றான் குமார்.

வந்த சில நாட்களில் அனைவருடைய நெஞ்சங்களில் பதிந்துவிட்டான் குமார். ஒவ்வொரு மேசைக்கு சென்று அனைவருடன் பேசுவதும், அவர்களுக்கு உதவுவதும், மென்பொருள் வல்லுனர்களுக்கு ப்ரோகம் எழுதி தருவதும், நெட்வொர்க்-பிணையத்தில் இருக்கும் கோளாறுகளை சரி செய்வதுமாக கலக்கிக் கொண்டிருந்தான்.

மாலினி தன் கீழ் வேலை செய்யும் பெண்களை கடந்து செல்லும் போது அவர்கள் குமாரை பற்றியே பேசுவதை பார்த்து எரிச்சல் அடைந்திருந்தாள். என்ன இருக்கிறது இவனிடம். ராஜ் மாதிரி அறிவு இருக்கிறது. அழகு இருக்கிறதா. அவனுடை முதிர்ச்சி இருக்கிறதா. சே. ராஜ் அன்று பார்டியில் எத்தனை கண்ணியமாக நடந்துக் கொண்டான். இவன் பரக்காவெட்டி மாதிரி குடித்ததும், புகைமண்டலமாக இருந்ததும். ராஜின் கால்தூசிக்கு வருவானா இவன். இந்த பெண்கள் என்ன பைத்தியமா ராஜ் இருக்கும் போது எப்படி இவர்கள் இவனை புகழுகிறார்கள். ராஜை பற்றி எனக்கல்லவா தெரியும். இப்படியெல்லாம் அவள் மனதில் எண்ணங்கள்.

தான் வேண்டாம் என்று சொல்லியும் குமாரை எடுத்ததால் கோபால் மீது கடுப்பில் இருந்தாள்.

வெள்ளிக்கிழமை மாலை நேராக குமார் மாலினியிடம் சென்றான். மாலினி நான் மெட்ராஸூக்கு புதுசு. பெங்களூரிலே இருந்துட்டேன் இத்தனை நாள். இந்த ஊர் கோவில்கள் சுற்றி காண்பிக்க முடியுமா.

ஏன். ஆபீஸில் வேறு யாரும் கிடைக்கலையா.

மாலினி, மத்தவங்கெல்லாம் என் ஜூனியர். அவங்களை அழைச்சிகிட்டு போனா அன்ட்யூ அட்வான்டேஜ் எடுத்துகிட்டு ஏதாவது உபகாரம் கேட்பாங்க. ராஜ் என் சீனியர். ராஜாராமை அழைச்சிகிட்டு போனா ஹெச்ஆர் ஜால்ரான்னு சொல்லிடுவாங்க. நீங்க மட்டும் தான் என்னோட சமமான க்ரேட். அதனால தான். அப்புறம் எனக்கு இன்னும் கார் வரல.

ம் என்று யோசித்தாள். பார்டியில் பண்ண ரகளைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டான். ராஜூம் ராஜராமும் சேர்ந்து 3ல் 2வர் சரியென்று சொன்னாலே வேலைக்கு எடுக்கலாம். அதனால் இவள் வேண்டாம் என்று வேறு யாரை சொல்லியருந்தாலும் அவர்கள் இருவரும் ஆமாம் என்று சொல்லியிருந்தால் அவர்களையும் எடுத்திருப்பார்கள். ஆக குமாருக்கு அவர்கள் இருவரும் ஏதோ உபகாரம் செய்ததாகவோ தன்னை அவமானப்படுத்தியதாகவோ நினைக்கத்தேவையில்லை. குமார் மீது தனக்கென்ன கடுப்பு. ஒன்றுமில்லையே.

என்ன மாலினி இத்தனை யோசிக்கிறீங்க.

போகலாம். நாளைக்கு காலையில் 8 மணிக்கு உங்களை பிக் பண்ணிக்கிறேன். எங்க தங்கியிருக்கீங்க.

பாச்சுலர் தானே. ஏதோ ஒரு ரூம் எடுத்து தங்கியிருக்கேன் நுங்கம்பாக்கத்தில்.

நுங்கம்பாக்கத்திலா ஏன் அத்தனை தூரம்.

நுங்கம்பாக்கத்தில் இருந்தா அத்தனை கலர்பூல் இடத்திற்கும் செல்ல வசதி என்றான் நகைச்சுவையுடன்.

சரி நாளைக்கு போகலாம் என்றுவிட்டு அவள் பேச்சை துண்டித்தாள்.

leomohan
18-01-2007, 12:18 PM
11

சரியாக எட்டு மணிக்கு தன் அறையிலிருந்து கீழே வந்தான். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் குமார்.

ஹா என்ன இந்த டிரெஸ் என்று கேட்டாள் மாலினி. அவள் இந்திய நாகரீகத்திற்கு மாறியிருந்தாள். எளிமையான வெள்ளை சுட்டிதாரில் அந்த பழைய விபூதியுடன். காரின் கதவை திறந்துவிட அவன் உள்ளே ஏறி அமர்ந்தான்.

கோவிலுக்கு போக தனி காஸ்ட்யூம். ஆனா வேட்டிக்கட்டினா நிக்காது, அதனால பெல்ட் போட்டிருக்கேன் பாருங்க என்றான்.

ஹா ஹா. நல்ல தமாஷூதான்.

முதலில் வண்டியை எடுத்துக் கொண்டு நங்கநல்லூர் ஆஞ்சநேய கோவிலுக்கு சென்றடைந்தனர்.

ஆஞ்சநேயரை ஆகாச-பூமியை சேர்ந்து ஒன்றாக சேர்ந்து நிற்கும் கோலத்தை கண்டு லயித்து நின்றான் குமார். பெரிதாக குங்குமம் எடுத்து இட்டுக் கொண்டான். அங்கு கொடுத்த தயிர் சாதத்தை வெளியே நின்று சாப்பிட்டனர் இருவரும்.
நடந்த வந்து ஸ்ரீ ராகவேந்திரர் மடத்தில் நுழைந்தனர். அங்கு அவருடைய குரு விஜேந்திரரின் ப்ருந்நாவனமும் வந்திருப்பதை விளக்கினாள் மாலினி. பிறகு வண்டியை எடுத்து 2 நிமிடங்களில் கேரள பாணி கிருஷ்ணர் கோவிலில் நுழைந்தனர். அங்கு கொடுத்த சந்தனத்தை உருண்டையாக செய்து நெற்றியில் இட்டுக் கொண்டான். பிறகு வெளியே வந்து நின்று அங்கு கிடைத்த பிரசாதம் சாப்பிட்டனர்.

சட்டை அணிந்து வண்டியில் வந்து உட்கார்ந்த குமாரை பார்த்து, என்ன இத்தனை பெரிசா குங்கும் சந்தனம் வெச்சிருக்கீங்க. யூத்தா இருக்கீங்க, யாராவது பார்த்தா கிண்டல் பண்ணமாட்டாங்களா.

மாலினி, நம்மை யாரும் பார்ப்பதே இல்லை. நீங்க ஒரு புது புடவை வாங்கி கட்டிகிட்டு வந்தீங்கன்னா உங்களை இந்த தெருவே பார்க்கற மாதிரி ஒரு உணர்வு ஏற்படும் உங்களுக்குள். ஆனால் யாரும் நம்மை சட்டை கூட செய்வதில்லை. அதுமாதிரி யாரையும் எனக்கும் தெரியாது, யாருக்கும் என்னையும் தெரியாது. நான் எப்படி இருக்கேன்னு யாரும் கவலைபடபோவதும் இல்லை. எங்கோ ஒரு புத்தகத்தில் படிச்சேன். உள்ளாடைகள் கிழியாமல் நன்றாக இருந்தால் வெளியேவும் அந்த நம்பிக்கை வெளிப்படும் என்று. தமாஷ். ஆனால் வித்தியாசமான சிந்தனை தான். கால்ல சாக்ஸ் கிழிச்சிருந்தா, நாம ஷூவை கழற்றவே மாட்டோம் இல்லையா என்றாள்.

அப்படின்னா அன்னிக்கி நீங்க பார்டியில் டான்சு ஆடி கூத்தடிச்சதை யாரு பார்த்திருந்தாலும் பார்க்காதிருந்தாலும் நீங்க செஞ்சிருப்பீங்களா.

கட்டாயமா. பார்டியில் வெறும் ஓஸி பீர் கிடைக்குது சாப்பாடு கிடைக்குதுன்னு மட்டும் குஷியாவதில்லை. வழக்கத்திலிருந்து மாறாக வேலை கஷ்டம் இல்லாமல் இருப்பதன் வெளிப்பாடே அது. நீங்கள் பாத்ரூமில் பாடுவீர்களா.

ஓ.

அது யாருக்காக. நீங்கள் பெட்ரூமில் தனியாக இருக்கும் போது டான்ஸ் ஆடியிருக்கீங்களா.

ஓ.

அப்ப யாரை கவர அந்த ஆட்டம். அது போலத்தான்.

அப்ப நீங்க ஏன் என்னை கிண்டல் பண்ணி பாட்டு பாடினீங்க. என் கையை பிடிச்சி இழுத்தீங்க நடனமாட.

நம் ரெண்டும் பேருக்குக்தானே அந்த பார்ட்டி. அதனால பாட்டை மாத்தி பாடனேன். ஆனால், நான் உங்களை பிடிச்சு ஆடல. ஆடிக்கிட்டே வந்து அங்கிருந்த யாராக இருந்தாலும் அவங்களை பிடிச்சு ஆடியிருப்பேன்.

இந்த பதிலை சற்றும் மாலினி எதிர்பார்க்கவில்லை. சற்றே குமாரின் மேல் ஆர்வமானாள்.

நீங்க என்ன புத்தகம் படிப்பீங்க.

புத்தங்களா. சே. அந்த பழக்கமே கிடையாது. எப்பயாவது படிப்பேன். பஸ்சுல ட்ரெயின்ல மட்டும்.

சினிமா.

ஓ. எல்லா ஆங்கில படங்களும்.

டாவின்சி கோட் பாத்தீங்களா.

சேசே. மசாலா படம் தான் பார்ப்பேன். அது சீரியஸ் படம். எனக்கு ஜேம்ஸ் பாண்டி, ஸ்டார் வார்ஸ் மாதிரி மூளையே யூஸ் பண்ணாத படமா இருக்கனும்.

சே. இவன் ராஜில்லை என்று நினைத்துக் கொண்டாள்.

தமிழ் ...


தமிழில் நல்ல எழுத்தாளர்களே இல்லை.

சாண்டில்யன், கல்கி....

என்னங்க, நான் 28, 58 இல்லை.

அப்ப பாலகுமாரன்.

பாலகுமாரன்லா ஒரு எழுத்தாளரா.

என்ன இப்படி சொல்லிட்டீங்க.

வைரமுத்து பாட்டாவது பிடிக்குமா.

வைரமுத்து காசுக்காக கண்டதை எழுதும் ஒரு வணிக எழுத்தாளர். அவரோட பாட்டை ரசிசக்கறதுக்கு நான் முன் சீட்டு ஆளாக இருக்கனும்.

என்னடா எதுக்கும் ஒத்து வரமாட்டேங்கறானே இவன்.

ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டா.

ஒ ராசி பலன் படிப்பேன்.

ராசி பலன் படிக்கறது ஆன்மீகம் இல்லை என்றாள் காட்டமாக.

ஹா ஹா. மாலினி எனக்கு பாக்ஸ்ட்ரீட் பாய்ஸ், ஸ்பெஸ் கேர்ல்ஸ், அக்வோ இப்படி கன்னாபின்னான்னு சவுண்ட் வர்ற பாட்டுக்கள் தான் பிடிக்கும்.


அமெரிக்கா எப்படி என்று கேட்டான்.

அமெரிக்கா அருமையான ஊர். அவரவர்கள் அவர்களது வேலையை பார்க்கிறார்கள். அநாவசியமாக இன்னொருவர் வாழ்வில் மூக்கை நுழைப்பதில்லை. இயற்கை கொஞ்சும் ஊர். மனதுக்கு மிகவும் அமைதி.

என்ன நீங்க. ராஜ் சாரை கேட்டா அவர் அமெரிக்காவை பற்றி பொரிஞ்சு தள்ளராரு. நீங்க சொல்றது வேற மாதிரி இருக்கே.

குமார், ராஜகோபால் ஒரு வித்தியாசமான மனிதர். அவருடைய சிந்திக்கும் விதம் முற்றிலும் வேறாக இருக்கும். அவர் ஒரு ஜீனியஸ். அவருடைய கருத்துக்கள் சரியாக இருக்கலாம். ஆனா, இது என்னோட கருத்து.

நீங்க சொல்றமாதிரியெல்லாம் அவர் இருக்கற மாதிரி தெரியலையே. ரொம்ப டல் மனுஷன் மாதிரிதான் இருக்காரு. தம் அடிக்கறதில்லை தண்ணி அடிக்கறதில்லை. பார்ட்டியில் மனுஷன் ஒரு ஓரமாயில்லை இருந்தாரு.

ஹா. குமார். நான் ராஜகோபாலை நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் மாறிவிட்டார். ஆனால் அவர் நினைச்சாருன்னா ஒரு கூட்டத்தையே கட்டுபடுத்த முடியும்.

அப்படியா என்று கேட்டான் ஆச்சர்யமாக. அவரு அமெரிக்காவே பிடிக்கலைன்னு சொல்லிட்டு அமெரிக்க பெண்மணியை கல்யாணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்திட்டாரு போலிருக்கு.

ஆமாம். அது ஒரு சுவாரஸ்யமான காதல் கதை என்றாள் மாலினி யோசனையுடன். சரியான நேரத்தில் கோபாலை சந்தித்திருந்தால் நான் இன்று திருமதி ராஜகோபால் இல்லையா என்று நினைத்தவாறே பெருமூச்சுவிட்டாள்.


இப்படியே பேசிக் கொண்டே வந்தவர்கள் நுங்கம்பாக்கத்தை அடைந்திருந்தார்கள்.

மாலினி, உங்களிடம் ஒரு கோரிக்கை. என் கையால ஒரு காபி. மேலே வர்றீங்களா.

என்ன என்றாள்.

பயப்படாதீங்க. நான் ரொம்ப நல்ல பையன் என்றான் பெரிதாக சிரித்துக் கொண்டே.

அவன் சிரிப்பே இவளுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு காபி தானே. சரியென்று நினைத்துக் கொண்டே, காரை நிறுத்துவிட்டு மேலே சென்றாள்.

உள்ளே நுழைந்ததும் க்ளாசிக் மைல்ட்ஸ பெட்டிகளும் புகை நாற்றமும் குப்பென்று அடித்தது. வந்து 15 நாட்களில் அவன் கொண்டு வந்த பெட்டிகள் அங்கங்கு கிடந்திருந்தன. டிவியின் மேல் அவன் பனியன் உலர்ந்துக் கொண்டிருந்தது.

அங்குமிங்கும் மென்பொருள் புத்தகங்கள், ஷூஸ், சாக்ஸ், காலி கோக் பெப்ஸி பாட்டில்கள், பீர் பாட்டில்கள் என்று ஒரு பேச்சுலரின் ரூமின் அனைத்து தகுதிகளும் இருந்தது. சே, ராஜின் அறை ஒரு கோவில் போல இருக்கும். அவனும் தான் அப்போது பேச்சுலர். இவனும் இருக்கிறானே. ராஜூக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் இவனுக்கோ எல்லா கெட்டபழக்கங்களும்.

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் அங்கு நிரம்பி வழியும் ஆஷ்ட்ரேவை பார்த்தவாறே கேட்டாள் மாலினி.

10-12, சில நாளைக்கு அதிகம்.

சில நாள்னா...

சனி, ஞாயிறு, அரை டஜன் படம் கொண்டுவந்து பார்க்கும் போது அதிகமாயிடும். ஹா ஹா என்று சொல்லி ஏதோ சாதனை போல் சிரித்தான்.

ஒரு முறை காதலில் தோற்றவர்கள் மற்றொருவரை சந்திக்க நேர்ந்தால் தன்னுடைய முதல் காதலுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அப்படி புதிதாக சந்தித்த நபர் தன்னுடைய முதல் காதலுடன் எல்லா விததத்திலும் அதிக தகுதி வாயந்திருந்தாலே அவர்கள் வாழ்கைக்குள் நுழைய விடுகிறார்கள். அப்படி இல்லையென்றால் அடுத்து அவர்கள் வாழ்கையில் வரும் நல்ல துணைகளையும் தன் முதல் காதல் போல் இல்லை என்று ஒதுக்கிவிடுகின்றனர். இது ஒரு மணப்போராட்டம். இது ஒரு கணிதம். இது மதிப்பெண் போடும் ஒரு பரீட்சை. இரண்டாவது முறை காதலிக்க முடியாது என்பதெல்லாம் இல்லை. ஒரு முறை காதல் கதைக்கு மட்டுமே பொருந்தும். நிஜ வாழ்கையில் இரண்டாவது மூன்றாவது காதல் சாத்தியமே. அதற்கான சாத்திய கூறுகளை சூழை ஏற்கும் மனப்பக்குவம் வரவேண்டும்.

முதல் காதலனைப்போலவே அல்லது முதல் காதலியைபோலவே என்று ஒப்பிட்டு பார்ப்பது தவறு. ஏனென்றால் இரு மனிதர்கள் ஒரே மாதிரி இருப்பது சாத்தியமே இல்லை. சில குணங்கள் ஒத்துப்போகலாம். எல்லாமும் ஒத்துப்போக முடியாது.

அவள் கண்கள் ஆணுறைகளை தேடியது.

என்ன பார்க்கறீங்க. அது மட்டும் கிடைக்காது.

அதிர்ச்சியுடன் எது மட்டும் கிடைக்காது என்றாள் மாலினி.

குடிக்கிற தண்ணிதானே தேடறீங்க. நமக்கு ஐஸ் வாட்டர் தான். இதோ எடுத்துட்டு வர்றேன். தப்பா எடுத்துக்காதீங்க. ரூம் சுத்தமா இல்லை. இன்னிக்கு மட்டும் இல்லை. என்னிக்கும் இப்படித்தான். இன்னிக்கு உங்களை மேல கூப்பிடுவேன்னு எனக்கே தெரியாது.

பரவாயில்லை குமார். காபி போடுங்க நான் கிளம்பனும்.

இப்படி பீர் சிகரெட்டுன்னு இருந்தும் ஃபிட்னெஸ் எப்படி மெயின்டைன் பண்றீங்க.

ஹா ஹா. அதுவா, அங்க பாருங்க என்று டென்னிஸ் ராக்கெட்டை காட்டினான்.

ஆர்வமாய் ஓடிச் சென்று அதை எடுத்தாள். ஓ டென்னிஸ் விளையாடுவீங்களா. எனக்கு கத்துக்கனும் ரொம்ப ஆசை என்றாள்.

கத்துக் குடுத்தா போச்சு என்றான் சகஜமாக.

அன்று மாலினியின் கணிதத்தில் குமார் பாஸ் மார்க்கூட வாங்கவில்லை. ஆனால் பெயிலும் ஆகவில்லை.

leomohan
20-01-2007, 06:50 PM
12

5 மாதங்களுக்கு பிறகு எங்கும் அலையவேண்டாம் என்று மருத்துவர் சொல்லியிருந்ததால் அடுத்த வாரம் விழுப்புரம் போய் வரலாம் என்று முடிவ செய்திருந்தனர் ராஜூம் சிந்துவும்.

சனிக்கிழமை அதிகாலையில் கிளம்பிவிட்டனர். சென்ற முறை மாதிரி அம்மனை கதவின் பின்னால் நின்று தரிசிக்க வேண்டாமே என்று.

அம்மன் தரிசனம் முடிந்ததும் நண்பர்களை சென்று சந்தித்தான் ராஜ். கம்பன் நகர் சென்று வீட்டை பார்த்தனர். அருகாமையில் இருந்த சிவகுமார் தான் வீட்டு வாடகை வசூல் செய்து வங்கியில் போட்டு வந்தார். அப்பாவின் நண்பர். மாலினியின் மாமா. அவரை போய் பார்த்து ஒரு நன்றி சொல்லிவிட்டு வரலாம் என்று அவர் வீட்டில் நுழைந்தனர் இருவரும்.

வாங்க வாங்க என்று அமோகமாய் வரவேற்று அமர வைத்தார் சிவகுமார்.

காபி கொண்டு வா மாலினி. யார் வந்திருக்காங்க பாரு என்றார்.

தக் கென்று இருந்தது ராஜ்க்கு. மாலினி வந்திருக்கிறாளா.

ஹாய் மாலினி எப்படி இருக்கே. எப்படி வந்தே என்று கேட்டான் ராஜ்.

சிலியாவுக்கு அங்கு மாலினியை பார்த்தது அதிர்ச்சியாக இருந்தது. அவளால் சம்பிரதாயத்திற்கு கூட சிரிக்க முடியவில்லை. ஹாய் மாலினி என்றாள் அதிக ஆர்வம் இல்லாதவளாய்.

நான் பஸ் பிடிச்சு வந்தேன்.

ஏன். எங்களோட வந்திருக்கலாமே.

எனக்கு நீங்க வர்றீங்கன்னு தெரியாது.

சிவகுமார் குறுக்கிட்டு என்ன ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறீங்க பேசி வச்சிக்கலையா விழுப்புரம் வந்ததை பற்றி.

சட்டென்று திரும்பி ராஜை பார்த்தாள் சிலியா. அவள் பார்வையை அலட்ச்சியம் செய்தவாறே ராஜ் மாலினியை பார்த்து, ஏன் மாலினி காரில் வந்திருக்கலாமே என்றான்.

அத்தனை தூரம் கார் ஓட்டி வர்றதுக்கு தயக்கமா இருந்தது என்றாள்.

ராஜகோபால் நீங்களாவது மாலினிக்கு சொல்லக்கூடாது. அவ கல்யாணமே செஞ்சிக்க மாட்டேங்கறப்பா என்றார் ஆதங்கத்துடன்.

மாமா........ என்று கண்களால் அவரை நிறுத்தினாள் மாலினி.

சற்று நேரம் பேசிவிட்டு, வர்றீங்களா சென்னையில் டிராப் செய்திடறேன் என்றான் ராஜ். சிலியா அதை சற்றும் விரும்பவில்லை.

இல்லை நான் திங்கள் காலையில் தான் கிளம்பி வரப்போறேன். நீங்க போங்க என்றாள் மாலினி. நிம்மதி பெருமூச்சு விட்டாள் சிலியா.

சற்று நேரம் பேசிவிட்டு வண்டியை எடுத்தான் ராஜ்.

சிறிது தூரம் சென்றதுமே ராஜை பார்த்து சிலியா, ராஜ் மாலினி உன் ஆபீஸ்ல வேலை செய்யற விஷயத்தை ஏன் என்கிட்ட மறைச்சே என்று கேட்டாள்.

வண்டியை சாலையோரமாக இருந்த அசோகர் காலத்து ஆலமரத்தின் கீழ் நிறுத்தினான். அவள் வசதியாக உட்காரவேண்டும் என்பதற்காக முன் இருக்கையை பின்னால் தள்ளியிருந்தான்.

திரும்பி இடக்கை பக்கமாக அவளை ஆழ்ந்து நோக்கினான். அவள் முகத்தில் விழுந்த பொன்னிற கூந்தலை மெதுவாக கைகளால் ஒதுக்கினான்.

சிலியா, நீ என் கூட கல்யாணத்துக்கு முந்தையே அதீத நம்பிக்கை வைத்து என் கட்டிலில் படுத்த அதே சிலியாதானா நீ என்று கேட்டான்.

அமைதியானாள் அவள்.

உனக்கு ஞாபகம் இருக்கா. கடைசி முறை விழுப்புரம் வந்தபோது முரளி நிஜமா போன் பண்ணானான்னு மொபைல்ல தேடிப்பார்த்தே. சிலியா நான் ஒரு மென்பொருள் வல்லுனர். எனக்கு வந்த மெயிலை நீ படிச்சா எனக்கு தெரியாதா. மாலினிக்கு மாற்றல் ஆனா மெயிலை நீ படிச்சிட்டேன்னு எனக்கு தெரியும். நீயா கேட்பேன்னு நான் இருந்தேன். ஆனா நானா சொல்றதா இல்லை. நீ இருக்கற நிலையில் அதை எப்படி எடுத்துப்பியோன்னு சொல்லாம விட்டுட்டேன்.

அவள் சற்றும் சகஜமாக வில்லை.

மெதுவாக அவள் கைகளை பிடித்துக் கொண்டான் ராஜ். சிலியா, நீ உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திச்சிகிட்டு வர்றே. நான் எப்போதுமே உன்னோட இருக்கேன் சிலியா. அழகான துருதுருவான சிலியாவா நீ இல்லேன்னா கூட உன் மேல நான் வெச்சிருக்கற காதல்ல எந்த மாற்றமும் வராது. ஒவ்வொருத்தரும் பல மாறுதல்கள் சந்திக்கிறோம். என் கண் முன்னாடி மாலினி இல்லை ஆயிரும் தேவதைகள் வந்தாலும் நான் முழுசும் உனக்காதத்தான். எனக்கு பொறுமை அதிகம். உனக்கே தெரியும். நீ சகஜமாக காத்திருக்கேன். நீ சகஜமாகாட்ட கூட காத்திருக்கேன்.

குழந்தைக்கு பிறப்பு கொடுக்கறது தாயுக்கு இரண்டாவது பிறப்புன்னு சொல்வாங்க. ஒரு வேளை நீயா குழந்தையான்னு வந்தா நீ தான் வேணும் எனக்கு. ஒரு வேளை நீ குழந்தை டெலிவரி பண்ற நேரத்தில செத்திட்டீன்னா அடுத்த நிமிஷம் நானும் உயிரோட இருக்க மாட்டேன். நீ இல்லாத ஒரு நிமிஷம் கூட இந்த உலகத்தில என்னால நினைச்சி பார்க்க முடியாது.

நீ இப்படித்தான் இருக்கனும் அப்படின்னு நான் சொல்லலை. ஆனால் நீ என் மேல வெச்சிருக்கற நம்பிக்கையை மட்டும் மாற விடாதே. அது உன்னை பாதிக்கும். நீ சந்தோஷமா இல்லேன்னா நானும் சந்தோஷமா இருக்க மாட்டேன்.

அவளை அணைத்து மாலினிக்கு ஒரு க்ளைமாக்ஸ் வெச்சிருக்கேன் கவலைப்படாதே என்று சொல்லி முரளி கொடுத்த ஆலோசனையை பற்றி சொன்னான்.

ராஜ் உனக்கு அருமையான நண்பர்கள்.

ஹா ஹா. அருமையான மனிதனுக்கு அருமையான நண்பர்கள் என்றான்.

அவள் மனம் நிம்மதி அடைந்திருந்தது.

காதல் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. காதல் நம்பிக்கை, அன்பு, பாசம், நட்பு, உறவு, உதவி என்று பல பரிமாணங்கள் எடுக்கிறது. காதலிப்பவன் காதிலிப்பவளிடம் நான் சொல்லாவிட்டால் கூட நான் அவள் மேல் காதல் கொள்கிறேன் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அவளாகவே உணரவேண்டும் என்று சொல்வதில் நியாயம் இல்லை. சில சமயம் அதை பேசி தெளிவு செய்ய வேண்டிய கட்டாயத்திலும் அவன் இருக்கிறான்.

சில விஷயங்கள் மறைப்பதும் தப்பில்லை. ஆனால், அவளாகவே அதை அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை எனும் பட்சத்தில். அவளாகவே தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் பக்குவமாக சொல்லி புரிய வைப்பதும் அவன் கடமை.

அங்கு ராஜ் அதைதான் செய்துக் கொண்டிருந்தான். காதலை பலப்படுத்துதல், reinforcement எப்போதும் செய்ய வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஒரு செயல். இது காதலை பலப்படுத்துகிறது. நம்பிக்கை உறுதி செய்கிறது. இதை செய்வதில் தப்பே இல்லை. மாறும் மனநிலைகளில் இது மிகவும் அவசியமாகிறது. ஒரு புயல் மழை வந்து சென்ற பிறகு வீட்டை பழுதுபார்த்தல் நியாயம் தானே. அங்கு அப்பேர்ப்பட்ட ஒரு பழுதுபார்க்கும் வேலை மனித உறவுகளுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

leomohan
20-01-2007, 06:50 PM
13

இரண்டு எதிர் துருவங்களுக்கு இடையே அங்கு நட்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. ஒரு பெண் தான் விரும்பும் விஷயங்களை ரசிக்கும் விஷயங்களை தன்னுடைய துணைவனும் விரும்ப வேண்டும் என்பது காதலின் ஒரு ரகம். சில சமயம் தன்னுடைய ரசனைக்கு முற்றிலும் எதிரான ஒருவனை அவள் விரும்புகிறாள். காரணம் அவள் தன்னுடைய உலகத்திலிருந்தும் சில நேரம் வெளியே செல்ல விரும்புகிறாள். அப்படி செல்லும் போது ஒரு பாதுகாப்புடனே செல்ல விரும்புகிறாள். அந்த வித்தியாசம் அந்த புதுமுயற்சி தன்னுடைய காதலனுடன் செய்வதில் அவள் அளவில்லா மகிழ்ச்சியும் அடைகிறாள்.

அலுவலகத்திற்கு வந்த குமார் அனைவருக்கும் ஹாய் சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று அமர்ந்தான். அந்த ஒரு சந்திப்பிற்கு பிறகு வேறு சந்திப்புகள் இல்லை. ஆனால் மதிய உணவு நேரம் வாய்ப்புகள் ஏற்படுத்தி தந்தன.

விடுமுறைகளில் டென்னிஸ் பயிற்சிக்கு சென்றாள் மாலினி. முதலில் வெறும் பார்வையாளராக இருந்தாள்.

குமார் சிக்கென்று டென்னிஸ் ஆடையில் நெற்றியில் வேர்வை உறிஞ்சும் பட்டை கட்டிக்கொண்டு கலக்கலாக இருந்தான். கோர்டின் விளிம்பில் நின்று அவன் குதித்து சர்வ் செய்தது பார்க்க நன்றாக இருந்தது.

அவனிடம் பேசுவதற்கு தலைப்புகளில் பஞ்சமே இல்லை. அரசியல், சினிமா, சமைப்பது என்று அனைத்தையும் பேசுவான். ஆனால் அவனிடம் பேசி முடித்த பிறகு எதாவது தகவல் கிடைத்ததா என்றால் ஒன்றுமே இருக்காது. ராஜிடம் அப்படியில்லை. அவன் தகவல் களஞ்சியம். பல விஷயங்கள் தெரிய வரும். அவனுடம் பேசும் போது மூளை பிரயோகத்தில் இருக்கும். ஆனால் குமாரிடம் பேச மூளை தேவையில்லை.

அவளை தொடாமலே டென்னிஸ் பயிற்சி சொல்லிக்கொடுத்தது அவன் கண்ணியத்தை காட்டியது. பீர் சிகரெட் அடிப்பவர்கள் எல்லாம் வில்லன்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை உணர்ந்தாள் மாலினி.

வேலைகளில் சூறப்புலி அவன். ஏதற்காக தான் விரும்பும் படமும் பாடல்களும் எழுத்தாளர்களும் அவன் விருப்பமாக இருக்கவேண்டும். அவசியம் இல்லையே என்ற ஞானோதயம் அவளுக்கு வந்தது.

தொலைபேசி ஒலித்தது. சொல்லுங்க குமார் என்றாள்.

சாயங்காலம் மாயாஜால் என்றான்.


அமைதியாக இருந்தாள்.

நான் வேணா ஜோசியம் பார்த்துட்டு வரட்டுமா.

எதுக்கு.

6.00 டூ 8.00 நல்ல நேரமா நீங்க என்கூட வர்றதுக்கு என்றான்.

ஹா ஹா. தேவையில்லை. போலாம் என்றாள்.

வாவ். இன்னிக்கு எனக்கு அதிர்ஷ்டம் போட்டிருந்தானே ராசிபலனில்.

ஒ ரொம்ப ஐஸ் வைக்க வேண்டாம் என்றுவிட்டு போனை வைத்தாள். என்றாவது அவன் அவளை வெளியே கூப்பிடுவான் என்று அவள் எதிர்பார்த்தது தான். ஆனால் அவன் எப்போதெல்லாம் கூப்பிடுவான் என்று அவள் நினைத்தாளோ அப்போதெல்லாம் அவன் கூப்பிடவில்லை. தன்னுடைய பிறந்த நாள் அன்று வெளியே கூப்பிட்டுச் சென்று பார்ட்டி கொடுப்பான் என்று எதிர்பார்த்தாள்.

பல சமயம் சிறிய எதிர்பார்ப்புகளும் அதில் ஏற்படும் தோல்விகளும் வாழ்கையின் சுவையை கூட்டுகின்றன. 9லிருந்து 1 மணி வரை என்னமோ அவன் சக அலுவலகரிடம் பேசுவது போல் பேசுவான். நகைச்சுவை கூட அலுவலகம் சம்பந்தப்பட்டதாய் இருக்கும். மதிய உணவு இடைவெளியில் மாமா பெண்ணிடம் பேசுவது போல் ஒரு உரிமை. மீண்டும் அலுவலக குமார். அவனுடைய செயல் வேடிக்கையாக இருந்தன.

பீர் குறைத்துக் கொள் சிகரெட் குறைத்துக் கொள் என்று எந்த வித கட்டுப்பாடுகளையும் அவள் வைக்கவில்லை. அதனாலே அவனுக்கு மிகவும் பிடித்து போயிருந்தது மாலினியை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதல் இருப்பதை இன்னும் சொல்லிக் கொள்ளவில்லை.

அதுவும் ஒரு எதிர்பார்ப்பை இருவரிடத்திலும் ஏற்படுத்தியிருந்தது.

ராஜ் மாலினியை அழைத்தான். சுமார் 5.30 மணி மாலையில். டான் ஒரு கான்பரென்ஸ் கால் இருக்குன்னு சொல்லியிருக்காரு. எங்கேயும் போயிடாதே மாலினி என்றான்.

அவள் விருப்பம் இன்றி சரி என்று சொல்லிவிட்டு சென்றாள். தன்னறைக்கு சென்றதும் குமாரிடம் போன் செய்து ப்ரோகிராம் கான்சல் என்றாள்.

ஏன்.

பாஸ் இருக்க சொல்லியிருக்காரு.

இன்னிக்கா அதிர்ஷ்ட நாளுன்னு போட்டிருக்கான். இரு தினமலருக்கு போன் செய்து அவங்களை ஒரு வழி பண்றேன் என்று விட்டு போனை வைத்தான்.

மறுநாள் செல்ல திட்டமிட்டனர்.

மறுநாளும் ஏதோ காரணம் சொல்லி அவளை நிறுத்தினான் ராஜ்.

இது மறுபடியும் தொடர்ந்தது.

கோபால், ஏன் தினமும் என்னை போகவிடாம செய்யறீங்க.

என்ன மாலினி. ஆபீஸ் விஷயமா தானே உங்களை இருக்க சொல்றேன்.

பொய் சொல்றீங்க கோபால். டான் போன் போடறதா ஒன்னும் சொல்லவே இல்லை. நான் அவர்கிட்டே சாட்ல பேசிட்டேன். எதுக்காக என்னை நிறுத்தறீங்க.

மாலினி, நீ குமாரோட பழகறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை.

அதை சொல்றதுக்கு நீங்க யாரு.

என்ன மாலினி நீ இப்படி சொல்றே. நீ என்னை உயிருக்குயிராக என்னை காதலிக்கறே. எனக்காக கல்யாணம் செய்துக்காம இருக்கே.


காதலிச்சேன் கோபால். இப்ப இல்லை.

என்ன சொல்றே மாலினி. உனக்காக நான் மனசை மாத்திகிட்டேன். உனக்கு விருப்பம் இருந்தா நான் உன்னை இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கறேன். இல்லைன்னா சிலியாவை விவாரத்து செய்யறேன்.

அப்ப சிலியாவோட பிள்ளை.

அதை பத்தி நாம் ஏன் கவலை படனும். மாலினி, இப்ப சொல்லு. எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.

கோபால் நீங்க இத்தனை கீழே போயிடுவீங்கன்னு நான் நினைக்கலை. உங்களை எத்தனை மதிச்சேன் நான். நீங்களா இப்படி பேசறது.

மாலினி உனக்கு என்ன பிரச்சனை.

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கோபால், நான் குமாரை காதலிக்கறேன். இத்தனை நாள் அதை அவர்கிட்டே சொல்லலை. நீங்க என் மனதை உறுத்திக்கிட்டு இருந்தீங்க. இப்ப நீங்க பேசனதால தெளிவாயிடுத்து. பட்டினத்தார் பேசறவங்க எல்லாம் சாமியாரும் இல்லை. விவேகானந்தர் படிக்கறவங்களெல்லாம் ஞானியும் இல்லை. நான் வர்றேன் என்று விட்டு விரைவாக ஓடிச் சென்று குமாரின் அறைக்குள் நுழைந்தாள்.

பல சமயம் சரியாக துண்டிக்கப்படாத பழைய காதல் வாழ்கையில் குறுக்கிட்டு பிரச்சனைகள் உண்டாக்குகின்றன. சரியாக முடிவுரை கொடுக்கப்படாத கதைகளின் நிலமையும் படிப்பவர்களை பல விவாதங்கள் செய்யதூண்டுகின்றன. ராஜ் இந்த முற்றும் போடாத காதலுக்கு சரியாக முற்றும் போட்டான் இன்று.

குமார், நான் உங்களை விரும்பறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களா என்று தடாலடியாக கேட்டாள்.

குமார் எதுவும் பேசாமல் மேஜையிலிருந்த தினமலரை புரட்டி ராசி-பலன் பக்கத்தை எடுத்தான். மாலினி, இன்னிக்கு திருமணங்கள் டைடல் பார்க்கில் நிச்சியிக்கப்படுகின்றன போட்டிருக்கான் என்றான்.

அவள் கோபமாக அவனை அடிக்க வர அப்படியே அவளை கைகளுக்குள் அடக்கிக்கொண்டான்.

ராஜ் முரளிக்கு போன் செய்து வொர்க் அவுட் ஆச்சிடா மச்சான் என்றான்.


சும்மாவா என் ஐடியாவச்சே.

நீ ஒரு ஜீனியஸ்.

புதுசா எதாவது ஒரு விஷயம் இருந்தா சொல்லு என்றுவிட்டு போனை வைத்தான் முரளி.

சரியான நண்பர்கள் தரும் சரியான ஆலோசனைகள் வாழ்கையை சீராக்குகின்றன. ராஜ் அந்த விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டக்காரன் தான்.

சிலியாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னான். ராஜ் யூ ஆர் ப்ரில்லியன்ட் என்றாள்.

அந்த ஆத்மார்த்தமான காதல் ஜோடி விரைவில் வீட்டில் ஒரு குட்டி தேவதையின் ஜனனத்திற்கான தயாரிப்புகளை மும்முரமாக செய்யத் தொடங்கியது.



முற்றும்.

guna
22-01-2007, 04:20 AM
அழகான முடிவு, வாழ்த்துக்கள் மோகன்.

SathishVijayaraghavan
22-01-2007, 08:54 AM
சுவையான சம்பவங்கள். அழகான கதை... அடுத்த பாகம் படிக்க ஆவலாக உள்ளது.

சிலியா-ராஜ் குழந்தை எப்போழுது பிறக்கபோகிரது?

omnlog03
22-01-2007, 11:19 AM
இது யார் எழுதியது?

leomohan
22-01-2007, 12:30 PM
இது யார் எழுதியது?

அடியேன் தான் ஐயா.

மனோஜ்
23-01-2007, 02:50 PM
உன்மைய செல்ரேன் நான் தொடர்கதைஎல்லாம் அவ்வளவா படிப்பது கிடையாது ஆனா உங்களின் இந்த கதை என்னை உன்மையில் தொடர்ந்து படிக்க வைத்தது
கதை முடிந்ததும் ச முடிஞ்சதா என்று நினைப்பதற்குள்
பாகம் இரண்டு என்றது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மிகமிக நன்றி
எதிர்பார்ப்புடன்.......

leomohan
23-01-2007, 02:57 PM
உன்மைய செல்ரேன் நான் தொடர்கதைஎல்லாம் அவ்வளவா படிப்பது கிடையாது ஆனா உங்களின் இந்த கதை என்னை உன்மையில் தொடர்ந்து படிக்க வைத்தது
கதை முடிந்ததும் ச முடிஞ்சதா என்று நினைப்பதற்குள்
பாகம் இரண்டு என்றது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மிகமிக நன்றி
எதிர்பார்ப்புடன்.......


மிக்க நன்றி மனோ. முதலில் பாகம் ஒன்று மட்டும் தான் எழுதினேன். பிறகு நான் படைத்த கதாபாத்திரங்கள் என்ன உறுத்திய வண்ணம் இருந்தன. இன்னும் எனக்கு வேலை கொடு என்று கேட்பது போல் தோன்றியது.

அதனால் பாகம் 2, 3 வந்தது. மாலினி என்று 3ம் பாகத்தில் அறிமுகப்படுத்திய கதாபாத்திரம் அம்போ என்று நின்றது போல் இருந்தது. அதனால் பாகம் 4 வந்தது.

5வது பாகம் வருமா என்று இப்போது சொல்வதற்கில்லை.

ஆதரவிற்கும் உங்கள் நேரத்திற்கு நன்றி.

Mathu
25-01-2007, 05:36 PM
வாழ்த்துக்கள் மோகன்.....
உயிரோட்டமான பாத்திரங்கள் தெவிட்டாத நடை
நிறைந்த கற்பனை வளம், ஒரே மூச்சில் படிக்க தூண்டியது.

leomohan
25-01-2007, 05:46 PM
வாழ்த்துக்கள் மோகன்.....
உயிரோட்டமான பாத்திரங்கள் தெவிட்டாத நடை
நிறைந்த கற்பனை வளம், ஒரே மூச்சில் படிக்க தூண்டியது.

மிக்க நன்றி மதன்.

ஓவியா
28-01-2007, 04:33 PM
மோகன்

அனைத்து கதாபாத்திரங்களையும் அருமையான விதத்தில் அமைத்துல்லீர்கள், பலே.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

leomohan
28-01-2007, 04:42 PM
மோகன்

அனைத்து கதாபாத்திரங்களையும் அருமையான விதத்தில் அமைத்துல்லீர்கள், பலே.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

மிக்க நன்றி ஓவியா. ஆனால் சிலியாவுக்கு குழந்தை பிறந்ததும் அவள் சந்திக்கும் சோதனைகள் பாகம் 5 ஆக வெளி வரலாம். :D

ஓவியா
28-01-2007, 04:45 PM
மிக்க நன்றி ஓவியா. ஆனால் சிலியாவுக்கு குழந்தை பிறந்ததும் அவள் சந்திக்கும் சோதனைகள் பாகம் 5 ஆக வெளி வரலாம். :D

நல்லது தொடருங்கள்

முன் வாழ்த்துக்கள் :)