PDA

View Full Version : பெண்ணே உன் காதல்



leomohan
09-10-2006, 04:32 PM
Shakespeare ---
What is this? Is it a Prologue?
No. It is a brief My Lord.
Like a Woman's Love
----

ஒரு சிறந்த மேடை பேச்சு நிற்கும் நினைவில்
சில நாட்கள் மட்டும்
ஒரு மாசற்ற புன்னகை நினைவில்
சில நாட்கள் மட்டும்
ஒரு பாசமான கரிசனை வார்த்தை
சில நாட்கள் மட்டும்
ஒரு சிறந்த நட்பு
சில நாட்கள் மட்டும்
வெற்றி அடையும் குறிக்கோள்
சில நாட்கள் மட்டும்
ரோஜாப்பூவின் வாசம்
ஒரு நாள் மட்டும்
மழை கடவுளின் பன்னீர் தூவல்
சில மணி நேரம் மட்டும்
உயிரை கலக்கும் பூகம்பம்
சில நொடி மட்டும்
அந்தோ! வியந்தேன்
இந்த பெண்ணின் காதல்
இவை அனைத்தையும் விட சிறியதா
அறிகிலேன் நான்!

தாமரை
09-10-2006, 04:45 PM
கண்ணில் தூசு விழுந்து
கண்சிமிட்டியதை...
துடித்ததை
காதல் என்று எண்ணி விட்டீரோ?

பென்ஸ்
10-10-2006, 08:11 AM
விவாதங்கள் பகுதியில் "எது காதல்??" என்று ஒரு தலைப்பை
துவங்கி பதித்தீர்களானால், ஒரு மணி நேரத்தில் நூரு பதிவுகளை
அந்த திரி காணும்...
ஏன் என்றால் காதல் என்ரு சொல்லும் போது ஒவ்வொரு மனிதரும் அதை ஒவ்வொரு விதமாக பார்க்கிறாகள்....
முதலில் இந்த காதல் கத்தரிக்கா எல்லாம் வேறும் சப்பை மேட்டரு..
கார்மோன்களின் விளையாட்டு, உடலின் தேவை...
வேதியல் ஒத்து போகும் போது , கணக்கு பண்ணி, உயிரியல் பாடம் படிப்பது....
அப்படி செய்யாதவ்ன் வரலாற்றில் வந்துடுறான்...

என்ன மோகன்...
பெண்களை மட்டுமே இதில் பழிக்கிறீர்கள்...
இதில் ஆண்கள் அப்பாவிகளா என்னா....???

இந்த காலத்து பசங்க காதல் தோக்கனுன்னா , காதலை முறிப்பது இல்லை...
காதலியை நச்சரிக்க ஆரம்பிக்கிறாகள்...
அதுனால பொண்ணுங்களே இவங்களை விட்டுடு போயிடுறாங்க...
இவனுக்கும் காதலை உடச்ச மாதிரி ஆச்சு,
அவளுக்கும் "அவ்ன் என்னை ஏமாத்தலை, நான் தாம் அவனை பிரேக் பண்ணினேன்னு ஒரு திருப்ப்தி"...

எல்லாம் சரியாகவே போகுது.. யாரை குறை சொல்ல முடியலை....

leomohan
10-10-2006, 11:08 AM
உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் நண்பரே. இது ஒரு நண்பரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்வத்தை அடிப்படையாக கொண்டது. நீங்கள் சொல்வது போல காதலில் பங்கு ஆண் பெண் இருவருக்கும் சமமானதே.

ஓவியா
10-10-2006, 07:05 PM
Shakespeare ---
What is this? Is it a Prologue?
No. It is a brief My Lord.
Like a Woman's Love
----

ஒரு சிறந்த மேடை பேச்சு நிற்கும் நினைவில்
சில நாட்கள் மட்டும்
ஒரு மாசற்ற புன்னகை நினைவில்
சில நாட்கள் மட்டும்
ஒரு பாசமான கரிசனை வார்த்தை
சில நாட்கள் மட்டும்
ஒரு சிறந்த நட்பு
சில நாட்கள் மட்டும்
வெற்றி அடையும் குறிக்கோள்
சில நாட்கள் மட்டும்
ரோஜாப்பூவின் வாசம்
ஒரு நாள் மட்டும்
மழை கடவுளின் பன்னீர் தூவல்
சில மணி நேரம் மட்டும்
உயிரை கலக்கும் பூகம்பம்
சில நொடி மட்டும்
அந்தோ! வியந்தேன்
இந்த பெண்ணின் காதல்
இவை அனைத்தையும் விட சிறியதா
அறிகிலேன் நான்!

தூள் மக்கா


காதலை காதல் இருக்கும் இடத்தில் தேடுங்கள்
அப்பொழுது அதன் ஆழம் அறியாமல் தின்டாடுவீர்....

அங்கேயும் இந்த வரிகள் தோன்றும்..........அந்தோ வியந்தேன்

crisho
14-10-2006, 07:56 AM
காதல் என்று சொல்லும் போது ஒவ்வொரு மனிதரும் அதை அவரவர் வாழ்க்கையில் நடத்ததை கருவாக வைத்து சொல்கிறார்கள்... அதனால்தான் நமக்கு ஒவ்வொரு விதமாக தெரிகிறது.....

காதலை காதல் இருக்கும் இடத்தில் தேடுங்கள்
அப்பொழுது அதன் ஆழம் அறியாமல் தின்டாடுவீர்....

மெத்தச் சரியா சொன்னீங்க.... முழுமையா ஏற்றுக்கொள்ளக்கூடியது!!

பென்ஸ்
14-10-2006, 08:17 AM
காதலை காதல் இருக்கும் இடத்தில் தேடுங்கள்
அப்பொழுது அதன் ஆழம் அறியாமல் தின்டாடுவீர்....


தூள் வரிகள் மக்கா....

நிஜம்.. நிஜம்...
சுடும்
நிஜம் நிஜம்...

ஆனால்,

கையில் வெண்ணையை வைத்து கொண்டு
நெய்க்கு அலைபவனாய்
கையில் பணத்தை வைத்து கொண்டு
காதலுக்காய்...

crisho
14-10-2006, 08:27 AM
ஒரு சின்ன பிரச்சினை...
"காதல் உள்ள இடத்தில் தேடனும்" னு சிம்பிலா சொல்லிடலாம்
ஆனா காதல் உள்ள இடம் தானா? ன்னு
தெரிஞ்சிகிறது ரொம்ப சிக்கலாச்சே!! :D ;)

பென்ஸ்
14-10-2006, 08:33 AM
கிஷோர்...

தங்கம் புதைந்து தான் இருக்கும்,
எடுக்க எடுக்க சுரங்கமாய் போகும்
இருந்தாலும்
தான் இருக்கு இடத்தை சில பாறைகளில்
தன் உள்ளிருப்பை விட்டு செல்லும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல்...

crisho
14-10-2006, 09:18 AM
ம்ம்ம்... நன்றி பெஞ்ஜமின்.
இந்த விளக்கம் எல்லோருக்கும் உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்!

தாமரை
15-10-2006, 03:01 AM
காதலை காதல் இருக்கும் இடத்தில் தேடுங்கள்
அப்பொழுது அதன் ஆழம் அறியாமல் தின்டாடுவீர்....

!

உதைக்குதே!!
காதல் இருக்குமிடம் தெரிந்தால்
தேடல் ஏன்?
எனக்குக் காது குத்தியாச்சு..:rolleyes: :rolleyes: :rolleyes:

crisho
15-10-2006, 04:39 AM
சார் மேல் கூறிய கூற்று சகோதரி ஓவியா சொன்னது!

காதல் இருக்குமிடம் இடம் தெரிய....
பெஞ்ஜமின் விளக்கம் கொடுத்திருக்கிறார்ப்பா....

ஓவியா
21-11-2006, 05:49 PM
தூள் மக்கா


காதலை காதல் இருக்கும் இடத்தில் தேடுங்கள்
அப்பொழுது அதன் ஆழம் அறியாமல் தின்டாடுவீர்....

அங்கேயும் இந்த வரிகள் தோன்றும்..........அந்தோ வியந்தேன்



மெத்தச் சரியா சொன்னீங்க.... முழுமையா ஏற்றுக்கொள்ளக்கூடியது!!


நன்றி கிஷோர்





தூள் வரிகள் மக்கா....

நிஜம்.. நிஜம்...
சுடும்
நிஜம் நிஜம்...

ஆனால்,

கையில் வெண்ணையை வைத்து கொண்டு
நெய்க்கு அலைபவனாய்
கையில் பணத்தை வைத்து கொண்டு
காதலுக்காய்...

ஆமாம் பெஞ்சமீன்

பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது...
(இது எனக்கு பிடித்தமான வரிகளில் ஒன்று)