PDA

View Full Version : கூலி...தாமரை
09-10-2006, 06:18 AM
கூலி...

கடலில் ஒரு பாலம்
கட்டின குரங்குகள்..

சின்னஞ்சிறிய அணிலும்
சித்தாளாய் மண்சுமந்து
சீராய் பணி செய்ய..

மண் சுமந்த அணிலை
மலர்ந்த தன் கையில் எடுத்து
வருடினார்
முதலாளி இராமன்..


முதன் முதலாய்
முதுகில்
பட்டை நாமம்
தொழிலாளிக்கு கிடைத்த கூலி..

மதி
09-10-2006, 06:25 AM
அட அட..!
ராமாயணத்தை இப்படியெல்லாம் யோசிச்சு பாக்க உம்மால மட்டும் தான் முடியும்..!
ஆயினும் வானரங்களும் அணிலும் கூலிக்காய் பாலம் கட்டவில்லையே..!

தாமரை
09-10-2006, 06:35 AM
அட அட..!
ராமாயணத்தை இப்படியெல்லாம் யோசிச்சு பாக்க உம்மால மட்டும் தான் முடியும்..!
ஆயினும் வானரங்களும் அணிலும் கூலிக்காய் பாலம் கட்டவில்லையே..!

வானரங்கள் தன் மன்னனின் கட்டளைக்காய் செய்தன.. அணில் அப்படி அல்ல..
அணில் கூலிக்காக வேலை செய்ய வில்லைதான்,. ஆனால் இராமன் போன்ற ஒருவர், (தனக்கு உதவி செய்த எல்லோருக்கும் எதாவது ஒரு வகையில் கைமாறு செய்து...) அணிலுக்கு கொடுத்தது முதுகில் மூன்று வரிகள்.
(சுக்ரீவனுக்கு ஆட்சியும் மனைவியும், விபீடணனுக்கு பதவியும், ரங்க விமானன்மும், அனுமன் சிரஞ்சீவியாய் இருக்க, குகன் குடும்பத்தில் ஒருவனாகவே ஏற்றுக் கொண்டார்..)

தாமரை
09-10-2006, 07:13 AM
பிரம்படி பட்ட சிவனுக்கும் மண்சுமக்க பேசிய கூலி பிட்டு. ஒப்"பிட்டு" பாருங்கள்

meera
09-10-2006, 08:07 AM
தாமரை கலக்கறீங்க போங்க!!!!!!!!!!

ராமன் பாசமாய் வரைந்த கோலம். அது கூலியல்ல.
சிவன் வேண்டுமானால் கூலிக்காய் மண்சுமந்திருக்கலாம்.இந்த அணில் அப்படி இல்லையே

தாமரை
09-10-2006, 08:48 AM
கோடு போட்டது இராமர்.. மக்கள் ரோடு போட்டுட்டாங்களே

gragavan
09-10-2006, 03:44 PM
தாமரை கலக்கறீங்க போங்க!!!!!!!!!!

ராமன் பாசமாய் வரைந்த கோலம். அது கூலியல்ல.
சிவன் வேண்டுமானால் கூலிக்காய் மண்சுமந்திருக்கலாம்.இந்த அணில் அப்படி இல்லையேஅணில் கூலிக்குச் சுமக்கவில்லையெனில் அதற்கு இன்னும் நிறைய பெருமை செய்திருக்க வேண்டும். நாமம் போட்டா அனுப்புவது. அதுவும் அழியாத நாமம்.

meera
09-10-2006, 04:02 PM
அணில் கூலிக்குச் சுமக்கவில்லையெனில் அதற்கு இன்னும் நிறைய பெருமை செய்திருக்க வேண்டும். நாமம் போட்டா அனுப்புவது. அதுவும் அழியாத நாமம்.
மோதிர கையால் குட்டுபட வேண்டும் என்பார்களே அது போல நாமமானாலும் போட்டது ராமனல்லவா அதுவே பெருமை தானே

கண்மணி
09-10-2006, 04:32 PM
மோதிர கையால் குட்டுபட்டால் வலிக்காதா என்ன?
நானும்தான் மோதிரம் போட்டிருக்கேன்
உங்களைக் குட்டவா?

தாமரை
09-10-2006, 04:43 PM
மோதிர கையால் குட்டுபட்டால் வலிக்காதா என்ன?
நானும்தான் மோதிரம் போட்டிருக்கேன்
உங்களைக் குட்டவா?

அதானே! மோதிரம் போட்ட உடனே குட்டுகிற உரிமை வந்து விடுமா என்ன?

குட்டுற குட்டில் கையில் போட்டிருக்கும் வைர மோதிரத்தின் வைரம் தெறித்து விழும் என்ற நப்பாசையா?

சொல்லுங்க.. முன்னால் தாமரைகனி போட்டிருந்த சைஸில் மோதிரம் போட்டுக்க இந்தத் தாமரையும் ரெடி..

ஓவியா
09-10-2006, 06:08 PM
தாமரை அண்ணா,

சூப்பர் கவிதை....

அப்படியே ராமாயணத்தில்
நடந்த ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும்
இங்கே இப்படி குட்டி கவிதையாய் கொடுக்கலாமே....

meera
10-10-2006, 05:04 AM
மோதிர கையால் குட்டுபட்டால் வலிக்காதா என்ன?
நானும்தான் மோதிரம் போட்டிருக்கேன்
உங்களைக் குட்டவா?
கண்மணி உங்கள் சோதனைக்கு நான் தானா கிடைத்தேன்

தாமரை
10-10-2006, 06:59 AM
திமிரு சினிமாவில் வடிவேலுவின் கதியைப் பார்த்திருப்பீர்கள்.. பழமொழியையும் பக்கம் பார்த்து சொல்லணும்

meera
10-10-2006, 07:27 AM
திமிரு சினிமாவில் வடிவேலுவின் கதியைப் பார்த்திருப்பீர்கள்.. பழமொழியையும் பக்கம் பார்த்து சொல்லணும்
சரிங்கண்ணா இனிமேல் அப்படியே செய்கிறேன்.:D :D :D
என்ன இருந்தாலும் அண்ணா அளவுக்கு அனுபவம் இல்ல இல்ல அதான் அப்போ அப்போ இப்படி மாட்டிக்கறேன் என்ன செய்ய.

pradeepkt
10-10-2006, 07:57 AM
ஹ்ம்ம்... என்னா சிந்தனை...
காப்பிட்டலிஸ்ட் ராமனும் இன்னும் கம்யூனிஸ்ட் ஆகாத அணிலும் அப்படின்னு தலைப்பு வச்சு அடுத்து யாராச்சும் திண்ணைல கட்டுரை எழுதுவாங்க பாருங்க.

மதி
10-10-2006, 08:17 AM
பிரதீப்,
நீங்களே எழுதுங்களேன்..!

பென்ஸ்
10-10-2006, 08:25 AM
செல்வரே ...
எமாத்துறதுன்னா "பட்டை நாமம்தான்..." என்று சொல்லு சொல் இதில் இருந்துதான் வந்ததா... இல்லை அதற்க்கு எதாவதி கதை இருக்குதா???

தாமரை
10-10-2006, 12:17 PM
ஹ்ம்ம்... என்னா சிந்தனை...
காப்பிட்டலிஸ்ட் ராமனும் இன்னும் கம்யூனிஸ்ட் ஆகாத அணிலும் அப்படின்னு தலைப்பு வச்சு அடுத்து யாராச்சும் திண்ணைல கட்டுரை எழுதுவாங்க பாருங்க.

ஓகோ திண்ணையில அந்த பேர்ல எழுதறது நீங்கதானா???

தாமரை
10-10-2006, 12:20 PM
செல்வரே ...
எமாத்துறதுன்னா "பட்டை நாமம்தான்..." என்று சொல்லு சொல் இதில் இருந்துதான் வந்ததா... இல்லை அதற்க்கு எதாவதி கதை இருக்குதா???

இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. இன்று இரவு கொஞ்சம் புராணம் படிச்சு சரியான்னு பார்த்துட்டு சொல்றேன்.

தாமரை
10-10-2006, 12:23 PM
தாமரை அண்ணா,

சூப்பர் கவிதை....

அப்படியே ராமாயணத்தில்
நடந்த ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும்
இங்கே இப்படி குட்டி கவிதையாய் கொடுக்கலாமே....

குட்டு வாங்க ஓவியா தயார் போலிருக்கே!!!:D :D :D :D

meera
10-10-2006, 12:34 PM
ஓவியா வேண்டாம்.. தாமரை அண்ணா அவர் பலத்தை எல்லாம் உங்க தலைல காட்டிருவாரு

உஷார் உஷார் உஷார்

ஓவியா
10-10-2006, 06:29 PM
குட்டு வாங்க ஓவியா தயார் போலிருக்கே!!!:D :D :D :D

மறந்திராம குட்டுங்க அண்ணா......:D
மோதிர கையால் எத்தனை குட்டு வேனும்னாலும் வாங்களாம்...:D :Dஓவியா வேண்டாம்..
தாமரை அண்ணா அவர் பலத்தை எல்லாம் உங்க தலைல காட்டிருவாரு

உஷார் உஷார் உஷார்


மீரா,
செதுக்க செதுக்கதானே......கல் சிற்ப்பமாகும்.....செதுக்கட்டும்........
முடிவில் நான் ஒரு அழகிய சிலையாய்....:D

தாமரை
11-10-2006, 04:16 AM
மறந்திராம குட்டுங்க அண்ணா......:D
மோதிர கையால் எத்தனை குட்டு வேனும்னாலும் வாங்களாம்...:D :D

மீரா,
செதுக்க செதுக்கதானே......கல் சிற்ப்பமாகும்.....செதுக்கட்டும்........
முடிவில் நான் ஒரு அழகிய சிலையாய்....:D

நான் சிற்பியல்ல, கல்குவாரித் தொழிலாளி. என்கையால் உடைபட்டவர்கள் சல்லியாய்..
(ஆமாம்,
சல்லி கூட
சாலையாய்தானே !)

ஓவியா
11-10-2006, 05:23 PM
நான் சிற்பியல்ல,
கல்குவாரித் தொழிலாளி.
என்கையால் உடைபட்டவர்கள் சல்லியாய்..
ஆமாம், சல்லி கூட
சாலையாய்தானே!கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களேவா....

சரி நல்லாதான் இருக்கு கவிதை.......:)

பென்ஸ்
12-10-2006, 09:56 AM
கவிதையும்.. பின்னுட்டங்களும் மனதை கவருகின்ற்ன...

தாமரை
12-10-2006, 09:58 AM
பென்ஸூ உதை விழும்