PDA

View Full Version : இரத்தப்பரிசோதனை வேதனைகள்



karikaalan
07-10-2006, 10:25 AM
இந்த சிரிப்பு அஞ்சலில் வந்தது. முன்னரே பதிவாகிவிட்டிருந்தால், நீக்கிவிடவும்.

வீட்டில் தொலைபேசி அடித்தது. பெண்மணி எடுத்து, "ஹலோ", என்றார்.

மறுமுனையில் இருந்து: "திருமதி குமார் இருக்காங்களா?"
"பேசறேன்".

"வணக்கம். நாங்க புஷ்பம் மருத்துவ மனையிலிருந்து பேசுகிறோம். போன வாரம் தங்கள் கணவர் திரு K குமார் இரத்தப் பரிசோதனைக்காக வந்திருந்தார். சோதனை முடிவுகள் வந்திருக்கின்றன. தங்களது கருத்தில் முடிவு மோசமாகவும் இருக்கலாம்; மிக மிக மோசமாகவும் இருக்கலாம்."

"என்ன சொல்கிறீர்கள்?"

" அதுவந்து..... போன வாரம் உங்கள் கணவர் இரத்தம் கொடுத்தபோது, இன்னோர் திரு K குமாரும் தன்னுடைய இரத்தத்தைக் கொடுத்திருக்கிறார். சோதனை முடிவுகளின் போது சிறிது குளறுபடியாகிவிட்டது."

"என்ன குளறுபடி?"

"ஒருவருக்கு AIDS இருக்கிறது. இன்னொருவருக்கு Alzheimer's இருக்கிறது."

"ஐயையோ.... என்ன விபரீதம்.... எப்படி எது யாருக்கு என்று கண்டுகொள்வது? இன்னொருமுறை சோதனை செய்துவிடுங்களேன்."

"அது கொஞ்சம் கடினமானது மட்டுமில்லை... செலவும் அதிகமாகும்."

"என்ன செய்யலாம்?"

"உங்கள் கணவரை எங்காவது திக்குத் தெரியாத காட்டில் இறக்கிவிடுங்கள். அவராகவே வீட்டுக்குத் திரும்பிவிட்டால், அவருடன் இனிமேல் படுக்காதீர்கள்."

"??!!??"

===கரிகாலன்

paarthiban
07-10-2006, 10:38 AM
ஆ.. நல்ல ஜோக் சார்

ஓவியா
08-10-2006, 03:32 PM
அடடடா என்ன பின்னுட்டம் போடறதுனே தெரியவில்லையே..;)

தாமரை
08-10-2006, 03:42 PM
பின்னால் ஊட்டம் கொடுக்க மிடியாது.. ஓட்டைதான் போடமுடியும்..

காதுள்ள பின்னோ(ஊசி) ஓட்டையைத் தைத்து விடுகிறது..

அறிஞர்
11-10-2006, 01:54 PM
முன்பு எங்கோ படித்துள்ளேன் இதை........ மீண்டும் மன்றத்தில் படிப்பது சந்தோசம்... தொடர்ந்து கொடுங்கள் கரிகாலன்ஜி

ஓவியா
11-10-2006, 04:39 PM
அடடடா என்ன பின்னுட்டம் போடறதுனே தெரியவில்லையே..

மன்னிக்கவும் எழுத்துப்பிழை




பின்னால் ஊட்டம் கொடுக்க மிடியாது..
ஓட்டைதான் போடமுடியும்..

காதுள்ள பின்னோ(ஊசி) ஓட்டையைத் தைத்து விடுகிறது..


:D :D :D
சகலகலாவல்லவரே நல்லா குட்டுங்கோ.... :cool: