PDA

View Full Version : இவளின் விடுதலைமயூ
07-10-2006, 05:48 AM
http://www.gps.edu/photogallery/photo00007104/FA%20SAD%20GIRL.gif
யன்னலைத் திறந்தாள் விமலா. எதிரே கடற்கரை பரந்து கிடந்தது. கடற்கரை உப்புக் காற்று ஏற்கனவே கலைந்திருந்த அவள் கேசத்தை மேலும் கலைத்தது. திடீரென காற்று கொஞ்சம் வேகமாக வீசவே அது உப்பு மணத்துடன் சிறுது மணலையும் அள்ளிவந்து அவள் முகத்தில் தூற்றியது. சினப்பதற்குப் பதிலாக அவள் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை. தன் விரல்களால் நிதானமாக மண்ணைத் தட்டிவிட்டாள்.

பின்னே திரும்பிப் பார்த்தாள் அவளது மாமியார் சுயநினைவற்று படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவள் ஆதரவற்று நின்றபோது ஆதரவு தந்த உள்ளம் இது.

அம்மாவும் எனக்கு மண்ணள்ளி வீசி தூற்றினவதானே... இப்ப இந்த கடற்காற்றும் மண்ணை வாரி இறைச்சுத் தூற்றுது. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே அவள் கடகடவென வெளியே செல்கின்றாள். விறாந்தையில் நாகலிங்கம் அண்ணே நின்றுகொண்டு இருந்தார்.

வாங்கோ அண்ணே!

நாகலிங்கம் நல்ல கறுப்பு நிறம். சாரம் அணிந்து கையில் மீனுடன் அஜானபாகுவாக வெறும் மேலுடன் நின்றிருந்தான். முதற் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவர் அவன் கடலில் சென்று மீன் வேட்டையாடும் வேட்டைக்காரன் என்று. விமலாவிற்கும் யாழ்ப்பாணத்தின் வட கரையிலுள்ள இந்த மீனவ சமூகத்திற்கும் ஒரு பந்தம் ஏற்பட்டு இருந்தது.

பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது. கையில் இருந்த இரண்டு விள மீன்களை நீட்டினான். விமலாவும் வாங்கிக்கொண்டாள்.

சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு அவர் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படரத்தொடங்கியது.

அப்ப நான் வாறன்

சரி அண்ணே

விமலா மீனை எடுத்துக் கொண்டு குசுனிக்குள் போனாள். அவள் மீனை எடுத்து ஒரு மண்சட்டிக்குள் போட்டாள். என்னொரு சட்டிக்குள் சிறிது நீர் எடுத்து அதனுள் இந்த மீனை இட்டு நன்கு கழுவிக் கொண்டாள். அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தன் முன்னாள் வைத்தாள். லாவகமாக பெரிய கத்தி ஒன்றை விரல்களுக்கிடையில் செருகிவிட்டு நறுக் நறுக் என்று மீனை வெட்டத் தொடங்கினாள். நன்கு பழகிய கை தொடர்ந்து மீன்னை வெட்டிக்கொண்டு இருந்தது. இடைக்கிடை நெற்றியில் விழும் கூந்தலை தன் பிறங்கையால் மேவிக்கொண்டாள். இப்போ அவள் நினைவுள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகரத்தொடங்கியது.

அடியே வெக்கம் கெட்ட நாயே.. உனக்குப் போயும் போயும் அந்த மீன்பிடிக்கிறவனா கிடைச்சான்?? மங்களம் வெறி பிடித்தவள் போல சத்தம் இட்டுக் கொண்டு இருந்தாள்.

பாவம் மங்களம் தன் மகளின் எதிர்காலம் பற்றி பல கற்பனைக் கோட்டைகள் கட்டிக்கொண்டு இருந்தவளிற்கு அவளின் மகளின் நடத்தை அப்படிக் கோவத்தைத் தூண்டி விட்டுடிருந்தது.

முன் வீட்டு சுந்தரம் எத்தன தரம் உன்னப் பற்றி சொல்லேக்க நான் நம்பேல.. என்ற மேள் இப்படியெல்லாம் செய்யாள் எண்டு அவனுக்கு விடுக்கா உறைக்கிற மாதிரிச் சொன்னனான். இப்ப பார்த்தா.. அதற்கு மேல் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள் மங்களம்.

முன்னுக்கு விறாந்தையில் விமலாவின் தந்தையார் என்ன பேசுவது என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். சாய்மனைக் கதிரையில் காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல பொசிந்து கொண்டு இருந்தது. ஒரே ஒரு பிள்ளை எண்டு செல்லமா வளர்த்தன் இப்பிடிச் செய்வாள் எண்டு நான் கொஞ்சமும நினைக்கேலையே.. தனக்குள் புலம்பினார் அந்த பாசமுள்ள தந்ததையார்.

வாசலில் யாரோ சத்தமிடுவது கேட்கவே மூவரும வாசலிற்கு வந்து பார்தனர். அங்கே ரஞ்சன்.

விமலா.. நீ வா என்னோட.. இனியும் இவயளோட இருக்கலாம் எண்டு நினைக்கிறியே ! வாசலில் வந்து விடுக்காகச் சத்தமிட்டான் ரஞ்சன்.

அப்பாவியான விமலாவின் தந்தை குமரேசன் செய்வதறியாது திகைத்து நின்றார். அக்கம் பக்கத்து வீட்டுச் சனங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்த்தொடங்கிவி்ட்டது.

இந்த வேளையில் விமலா குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய முன்வீட்டுக்காரன் சுந்தரம் வெளியே வந்து குமரனுடன் வாக்கு வாதப்படத் தொடங்கினான். இருவரும் பேச்சு முத்தி கைகலப்பில் ஈடுபடத் தலைப்பட்டனர்.

இந்த வேளையில் விமலா ஒரு புதுமைப் புரட்சி செய்யத் தலைப்பட்டாள். சட சட வென்று வெளியே வந்தாள்.

ரஞ்சன் சயிக்கிள எடு நாங்க போவம்.. இங்க நிண்டு தேவையில்லாம சண்டை போடாத விடு விடு எனப் பேசி முடித்தாள்.

ஒரு கணம் அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களில் முதலில் சுதாகரித்துக் கொண்டது விமலாவின் தாயார்தான்.

முன் முற்றத்திற்குச் சென்று வாய்க்கு வந்த படி திட்டத்தொடங்கினாள். பின்ன என்ன அவளுக்கு வலிக்காதா. 21 வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த் தன் மகளை நேற்று வந்தவன் இப்படி அலேக்காக தூக்கி சயிக்கிளில ஏத்திக்கொண்டு போறத எந்தத் தாய்தான் பார்த்துக் கொண்டு இருப்பாள். கோபத்தின் உச்சக் கட்டமாக மண்ணை வாரி ரஞ்சனையும் விமாலாவையும் நோக்கி வீசி திட்டத்தொடங்கினாள்.

அன்றைக்குப் பிறகு தாயையும் தந்தையையும் விமலா சந்திக்கவில்லை. சில தடவை பருத்தித்துறை சந்தையில் கண்ட போதும் அவர்கள் இவளுடன் கதைக்கவில்லை. பின்னர் தற்போது அவர்களின் பெறா மகனின் உதவியுடன் கனடாவில போய் இருக்கினம் என்று அறிந்து கொணடாள். அவர்களும் இவளைத் தொடர்புகொள்ளவில்லை இவளும் அவர்களைத் தொடர்புகொள்ளவில்லை.

சிந்தனையில் மூள்கியவாறே சமையலில் ஈடுபட்டு இருந்தவளை வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு கனவுலகில் இருந்து மீண்டாள். வாசலில இருந்து கூப்பிட்டது ரஞ்சனின் அக்கா சிவரஞ்சினி.

வாங்கோ..மச்சாள்..

அம்மா என்னபாடு?? வழைமையான கேள்வி.

அதே நிலைமைதான் மச்சாள் இவளும் வழமையான பதிலைச் சொன்னாள்.

பெற்ற தாய் வருத்தத்தில் வருந்தும் போது புதிதாய் வந்த மச்சாளிடம் அதைப் பாரமாகக் கருதி விட்டுக்கொடுத்த பெருமை இந்த சிவரஞ்சினியைச் சேரும்.

தாய் இருந்த அறையினுள் சென்ற சிவரஞ்சினி தாயை ஒருக்கால் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். வழமை போலப் பின்னர் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.

அம்மா எப்பிடி யெல்லாம் இருந்தவ தெரியுமே??. அவர் ஒருக்கால் கூட மற்றயவளிட்ட ஒண்டும் கேக்கிறதில்லை இப்ப இப்பிடி இருக்கிறா விமலாவிற்கு இவையெல்லாம உறைக்கவில்லை காரணம் தினம் தினம் கேட்கும் புலம்பல் தான் இது.

ரஞ்சனக் கூட உன்ன மாதிரி நல்ல மனசிருக்கிற உன்னட்ட இருந்து..

இப்ப என்னத்துக்கு மச்சாள் தேவையில்லாம வேற விசயங்களக் கதைக்கிறியள் சிவரஞ்சினியின் புதிய அலட்டலைக் தன் அரட்டல் மூலம் கட்டுப்படுத்தினாள் விமலா.

ஒரு நாள் கடற்தொழிலுக்கு விமலாவின் கணவன் ரஞ்சன் சென்றான். கடலில் இலங்கை கடற்படையின் பீரங்கிப்படகின் சுடுகலனின் கோரப்பிடியில் இவர்கள் சென்ற படகு மாட்டுப்பட்டது. படகில் சென்ற அனைவரும் மீண்டு வந்துவிட்ட போதும் ரஞ்சன் மட்டும் வரவில்லை. இன்றுடன் ஆண்டுகள 4 கழிகின்றன. ஆயினும் விமலா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.

தற்போது சிவரஞ்சினி வேறுவிடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவளின் கடைசி மகனின் குறும்பு தொடக்கம் தென் இந்தியாவின் பொதிகை சானலில் நேற்று அவள் பார்த்த எம்.ஜி.ஆர் இன் படம் வரை புட்டுப் புட்டு வைத்தாள். விமலாவும சும்மா ஒப்புக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.

இந்த அம்மா மனுசி போய் துலைஞ்சுட்டுது எண்டா எனக்கும் விடுதலை கிடைச்ச மாதிரி. நானும் அடிக்கடி இங்க வந்து நேரத்த மினக்கடுத் தேவையில்ல கூறியவாறே விடைபெற்றாள் சிவரஞ்சினி.

சிறிது நேரத்தில் விடைபெற்றுக் கொண்டு சிவரஞ்சினி சென்று விட்டாலும் அவள் தொடங்கின கதை விமலாவின் மனக் கண்ணின் முன் ஓடத்தொடங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது.

மச்சாளிற்கு மாமி செத்தாத்தான் விடுதலை. எனக்கு மாமியும் செத்துப் போனால் யார் இருக்கினம்??. நானும் இந்தக் கடலில விழுந்து சாக வேண்டியதுதான்.

எனக்கு எண்டைக்கும விடுதலையில்லை. விடுதலை எண்டு நினைச்சு வீட்டில இருந்து நான் வெளிக்கிட்ட நாளில இருந்து விடுதலை இல்லாமப் போயிட்டுது. உண்மையான விடுதலை நான் வீட்டில அப்பா அம்மாவோட இருக்கேக்கதான் இருந்தது.

குசினியின் ஓரத்தில் இருந்து விமலாவின் விசும்பல் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. அடுப்பில் இருந்த மீன்கறி கருகத் தொடங்கி விட்டதை அறிவிக்கும் முகமாக அவ்விடத்தில தீய்ந்த வாடை அடிக்கத் தொடங்கியது.

mukilan
07-10-2006, 06:30 AM
வாவ். மயூரேசன் மிகத் தெளிந்த நடை. அவ்வப்பொழுது வரும் ஈழத்துச் சொற்கள். குசினி (அடுப்பறை), கதிரை (நாற்காலி) சரியா??. சிறு குழப்பம் ரஞ்சன், குமரன் இருவரும் ஒருவரா அல்லது தட்டச்சு செய்கையில் நேர்ந்த பிழையா? அருமையா எழுதியிருக்கீங்க.

மயூ
07-10-2006, 09:10 AM

நன்றி முகிலன் இரண்டு சொற்களும் நீங்கள் ஊகித்தது சரியே!!:D

குமரன் ரஞ்சன் ஒருவரே:eek: :eek: !! இப்போது மாற்றிவிடுகின்றேன். தட்டச்சுப் பிழைதான்....மன்னிக்கவும்.

மன்மதன்
07-10-2006, 09:19 AM
இலங்கை தமிழில் கதை படிப்பதே அலாதிதான்.. தொடர்ந்து நிறைய கதையுங்க...

மயூ
07-10-2006, 09:24 AM
இலங்கை தமிழில் கதை படிப்பதே அலாதிதான்.. தொடர்ந்து நிறைய கதையுங்க...
நன்றி மன்மதன் அவர்களே!
தொடர்ந்தும் எழுதத்தூண்டும் உங்களிற்கு நன்றி!!!:) :)

ஓவியா
08-10-2006, 04:25 PM
நன்றி மயூ,

கதையின் கரு உண்மை சம்பவமா?
கதை சுருக்கமாய் ஈழத்து தமிழில் அருமையாய் இருக்கு.

இன்னும் அதிகம் எழுதவும்... வாழ்த்துக்கள்

gragavan
08-10-2006, 04:46 PM
மயூரேசா, இந்தக் கதைக்கு என்னுடைய கருத்தைச் சொல்ல வேண்டுமா! :-) நீ அறிவாய். நல்ல கதை.

பென்ஸ்
08-10-2006, 07:29 PM
மயூரேசா....
சொல்லவந்த விஷயமும் விதமும் அருமை...
நல்ல படைப்பு இது....

ஒரு சில குறிப்புகள் மட்டும்...
கதையில் பேச்சு வார்த்தைகளை மட்டும் யாழ்ப்பான தமிழில் வைத்துவிட்டு மீதியை தூயதமிழில் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும்
பேச்சு வழக்கை கதையில் கொண்டுவருன்ம் போது சரியான இணைப்பை கொடு.
எழுத்து பிழை சரி செய்யவும்....

மற்றபடி ஓக்கே...
யப்பா ராகவா... நல்லாஇருக்குன்னு மட்டும் சொல்லாம ... நல்லா எழுதுறதுக்கும் உதவி பன்னலாமே...

செல்வரே இந்த பையனையும் கொஞ்சம் கடித்து குதறவும்...

தாமரை
09-10-2006, 05:48 AM
நாகலிங்கம் என்று ஒரு மனிதர் யார் அவர் என்ன உறவு? ஏன் தான் பிடித்த மீனை பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.
காலில் உள்ள சங்கிலி
கனத்தாலும்
வேலைக்கு உணவு
உண்டென்றால்
யானைக்கு விடுதலை
என்று கொள்ளலாமா?
சுற்றியுள்ள மானுடங்களை
கண்திறந்து பாராமல்
சொந்தங்கள் மட்டுமே
சொர்க்கங்கள் என்பது
மண் மறைத்த கண்
ஆதரவு நாடுவது
விடுதலை அல்ல
ஆதரவு தருவதே
விடுதலை
(பென்ஸு உமக்கு இப்ப நிம்மதியா?)

meera
09-10-2006, 06:42 AM
மயு கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா எனக்கு தான் இலங்கை தமிழ் புரிய கொஞ்சம் தாமதம் ஆச்சு.

தாமரை நீங்க சொன்ன மாதிரி எனக்கும் நாகலிங்கம் யாருனு கேள்வி இருக்கு.

மதி
09-10-2006, 07:17 AM
மயூரேசா...!
அழகான கதை...அற்புதமான நடை...!
வாழ்த்துக்கள்..!

மயூ
10-10-2006, 05:34 AM
நன்றி மயூ,

கதையின் கரு உண்மை சம்பவமா?
கதை சுருக்கமாய் ஈழத்து தமிழில் அருமையாய் இருக்கு.

இன்னும் அதிகம் எழுதவும்... வாழ்த்துக்கள்

நன்றி ஓவியாக்கா!
இது தனிப்பட்ட முறையி்ல் உண்மைக் கதையில்லை. ஆனால் இது போல ஆயிரம் கதைகளை யாழ்ப்பாணத்தில் காணலாம்.

மயூ
10-10-2006, 05:35 AM
மயூரேசா, இந்தக் கதைக்கு என்னுடைய கருத்தைச் சொல்ல வேண்டுமா! :-) நீ அறிவாய். நல்ல கதை.
நன்றி இராகவன் அண்ணா! உங்களைப் போன்ற ஒரு பண்பட்ட எழுத்தாளர் நிறைகளை விடுத்து குறைகளை எடுத்து இயம்புவீர்களானால் நான் என்னை மேலும் திருத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்குமே!!!

மயூ
10-10-2006, 05:38 AM
மயூரேசா....
சொல்லவந்த விஷயமும் விதமும் அருமை...
நல்ல படைப்பு இது....

ஒரு சில குறிப்புகள் மட்டும்...
கதையில் பேச்சு வார்த்தைகளை மட்டும் யாழ்ப்பான தமிழில் வைத்துவிட்டு மீதியை தூயதமிழில் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும்
பேச்சு வழக்கை கதையில் கொண்டுவருன்ம் போது சரியான இணைப்பை கொடு.
எழுத்து பிழை சரி செய்யவும்....

பென்ஸூ அண்ணா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொன்னது எனக்குப் புரிகின்றது. கதையில் பேச்சுத் தவிர்ந்த மற்றய இடங்களில் எழுத்துத் தமிழைப்பாவித்து இருக்கலாம். உண்மையில் நான் அப்படித்தான் எழுதத் தொடங்கினாலும் கதை எழுதத் தொடங்கியபின் ஈழத்தமிழ் என்னையும் மீறி எழுத்தில் நுழைந்து விட்டது. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு வீதம் சரியே!!! :p
மற்றபடி ஓக்கே...
யப்பா ராகவா... நல்லாஇருக்குன்னு மட்டும் சொல்லாம ... நல்லா எழுதுறதுக்கும் உதவி பன்னலாமே...

அதே! அதே!:)செல்வரே இந்த பையனையும் கொஞ்சம் கடித்து குதறவும்...
ஐயையோ!!!!!!!!!!!!!!!!!!!!:eek: :eek:

மயூ
10-10-2006, 05:39 AM
நாகலிங்கம் என்று ஒரு மனிதர் யார் அவர் என்ன உறவு? ஏன் தான் பிடித்த மீனை பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.
காலில் உள்ள சங்கிலி
கனத்தாலும்
வேலைக்கு உணவு
உண்டென்றால்
யானைக்கு விடுதலை
என்று கொள்ளலாமா?
சுற்றியுள்ள மானுடங்களை
கண்திறந்து பாராமல்
சொந்தங்கள் மட்டுமே
சொர்க்கங்கள் என்பது
மண் மறைத்த கண்
ஆதரவு நாடுவது
விடுதலை அல்ல
ஆதரவு தருவதே
விடுதலை
(பென்ஸு உமக்கு இப்ப நிம்மதியா?)

கருத்துக்களுக்கு நன்றி செல்வன் அண்ணா!
நாகலிங்கம் அதே கிராமத்தவன். கிராமத்து மக்கள் இவளுடன் இரண்டரக் கலந்து விட்டதைக்காட்டவே நாகலிங்கம் அண்ணாவின் வருகை. அத்துடன் அவள் வாழ்ந்து வருவது ஒரு மீனவக் கிராமம் என்பதை இந்த நாகலிங்கம் அண்ணா இன்னும் அழுத்தமாக வாசிப்பவர்களுக்குத் தெரிவிப்பார் என்பதாலேயே சேர்த்தேன். உங்கள் கவிதை வழமை போல நச்சுன்னு இருக்கு.

கடைசி நான்கு வரிகள் என்னவெல்லாமோ சொல்கின்றது.... பல சந்தர்ப்பங்களிற்குப் பலவாறு பொருந்தக் கூடிய வரி!!!

மயூ
10-10-2006, 05:42 AM
மயு கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா எனக்கு தான் இலங்கை தமிழ் புரிய கொஞ்சம் தாமதம் ஆச்சு.

தாமரை நீங்க சொன்ன மாதிரி எனக்கும் நாகலிங்கம் யாருனு கேள்வி இருக்கு.
நன்றி மீரா அவர்களே!
நாகலிங்கம் யாருன்னு சொல்லிட்டம்... அடுத்து உங்களிற்கு ஈழத்தமிழ் புரியாமை பற்றியது. இதில் கவலைப்படத் தேவையில்லை. நான் எழுதுவது உங்களிற்குப் புரிகின்றதல்லவா. அதுவே பெரும் புண்ணியம். நான் ஒரு தடவை இராகவன் அண்ணாவின் தூத்துக்குடி பேச்சு வழக்கில் அமைந்த கதையை வாசித்தேன் அதை வாசித்து முடிக்கையில் பெரும் துன்பப்பட்டு விட்டேன்.
:D :D
இச்சந்தர்ப்பத்தில் நான் ஒரு சம்பவத்தைக் கூற வேண்டும். எனது அம்மாவுடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் பரிசோதனைக் குளாய் முறையில் குளந்தை பெற்றுக்கொள்ள சென்னை வந்தார். அப்போது அவருடன் பேசுவதற்காக நாம் இங்கிருந்து தொலைபேசி அழைப்பு எடுப்போம். அனேகமாக நான்தான் அழைப்பை மேற்கொள்ளுவேன்.

இப்படித்தான் எங்களின் பேச்சு அமையும்
ஹல்லோ! நந்தினி ரீச்சரோட கதைக்கலாமே?

ஹல்லோ...? (மறுபக்கம் அவர்களிற்கு ஒன்றுமே புரியவில்லை)

ஹல்லொ... நாங்கள் ஸ்ரீ லங்காவில இருந்து..

(அரைவாசியில் இடை மறித்து)

ஆ... அப்டீங்களா பொறுங்க

ஸ்ரீ லங்கா என்றா வார்த்தையைக் கேட்டதும் அவர்கள் உசாராகி நந்தினி ரீச்சரைக் கூப்பிட்டு விடுவார்கள். ஒரு வருடம் கழிந்து நந்தினி ரீச்சர் இலங்கை வந்ததும் அவரிடம் நான் கேட்டேன் தமிழ்நாட்டில் நாங்கள் ஃபோன் பண்ணினா என்ன சொல்லுவாங்க என்று . அதற்கு அவர் சொன்னார் இதுதான் தமிழக அன்பர்களின் பதில் என்று

யாரே! தமிழ்ழ பேசறாங்க!! அனேகமா உங்க ஊரு காரங்களாத்தா இருக்கும். எனக்குன்னா ஒன்னுமே புரியல

pradeepkt
10-10-2006, 08:17 AM
கதை என்பது உன்போக்கில் வரவேண்டும். பின்னர் நீ கதையின் போக்கில் செல்ல வேண்டும். உன் வாய்மொழியில் நாங்கள் கதை கேட்பது போன்றே இருக்கிறது. இதுவே எனக்கும் பிடித்தம். எனவே நீ இப்போது போன்றே ஈழத் தமிழிலேயே எழுது. வசனங்கள் உட்பட!

பென்ஸூ, தூய தமிழ் என்று ஒன்று இருக்கிறதா என்ன? :D :D

ஓவியா
10-10-2006, 08:19 PM
யாரே! தமிழ்ழ பேசறாங்க!! அனேகமா உங்க ஊரு காரங்களாத்தா இருக்கும். எனக்குன்னா ஒன்னுமே புரியல

இங்கே லன்டனிலும் இப்படிதான் நடக்குது......:cool:
நாங்கள் பிரிடீஷ் தமிழ் என்று சொல்கின்றனர்...:D

மதி
11-10-2006, 05:11 AM
அடடா..தமிழ் நாட்டுக்குள்ள தான் இத்தன தமிழ்-னா..உலகமெல்லாம் ஒவ்வொரு தமிழா..?..

தாமரை
11-10-2006, 05:20 AM
கருத்துக்களுக்கு நன்றி செல்வன் அண்ணா!
நாகலிங்கம் அதே கிராமத்தவன். கிராமத்து மக்கள் இவளுடன் இரண்டரக் கலந்து விட்டதைக்காட்டவே நாகலிங்கம் அண்ணாவின் வருகை. அத்துடன் அவள் வாழ்ந்து வருவது ஒரு மீனவக் கிராமம் என்பதை இந்த நாகலிங்கம் அண்ணா இன்னும் அழுத்தமாக வாசிப்பவர்களுக்குத் தெரிவிப்பார் என்பதாலேயே சேர்த்தேன். உங்கள் கவிதை வழமை போல நச்சுன்னு இருக்கு.

கடைசி நான்கு வரிகள் என்னவெல்லாமோ சொல்கின்றது.... பல சந்தர்ப்பங்களிற்குப் பலவாறு பொருந்தக் கூடிய வரி!!!

வீட்டுக்குள் இருந்தபோது
உறவே ஊரானது.
வெளியே வந்தபோது
ஊரே உறவானது.
விடுதலை எதில்?

மயூ
11-10-2006, 06:27 AM
கதை என்பது உன்போக்கில் வரவேண்டும். பின்னர் நீ கதையின் போக்கில் செல்ல வேண்டும். உன் வாய்மொழியில் நாங்கள் கதை கேட்பது போன்றே இருக்கிறது. இதுவே எனக்கும் பிடித்தம். எனவே நீ இப்போது போன்றே ஈழத் தமிழிலேயே எழுது. வசனங்கள் உட்பட!

பென்ஸூ, தூய தமிழ் என்று ஒன்று இருக்கிறதா என்ன? :D :D

எழுத்தாளனின் தாக்கம் கதையில் தெரியும் தானே அது மாதிரித்தான் எங்க ஊருப் பேச்சு வழக்கு கதையில் அதிகம் செல்வாக்கு செலுத்து விட்டது.

தூய தமிழைப் பற்றித் தெரியாது ஆனால் செ.தமிழ் இருக்கின்றது.:D :D

மயூ
11-10-2006, 06:29 AM
மயூரேசா...!
அழகான கதை...அற்புதமான நடை...!
வாழ்த்துக்கள்..!
நன்றி மதி அண்ணா!!:D

மயூ
11-10-2006, 06:31 AM
இங்கே லன்டனிலும் இப்படிதான் நடக்குது......:cool:
நாங்கள் பிரிடீஷ் தமிழ் என்று சொல்கின்றனர்...:D
அவர்கள் தங்கள் தமிழ் அடயாளத்தை மறக்காதவரை என்ன தமிழராக இருந்தாலும் பரவாயில்லை.:)

மயூ
11-10-2006, 06:32 AM
அடடா..தமிழ் நாட்டுக்குள்ள தான் இத்தன தமிழ்-னா..உலகமெல்லாம் ஒவ்வொரு தமிழா..?..
தமிழ் ஒன்றும ஆங்கிலம் மாதிரி நேற்றுப் பிறந்த மொழி அல்லவே!!
இதில் இப்படி இருப்பதில ஆச்சரியம் இல்லை.

மயூ
11-10-2006, 06:35 AM
வீட்டுக்குள் இருந்தபோது
உறவே ஊரானது.
வெளியே வந்தபோது
ஊரே உறவானது.
விடுதலை எதில்?
நல்ல கேள்வி!!!!
வெளியே வந்தபின் இந்த ஊரே உறவானாலும்
அவள் தாயிடம் பெற்ற அன்பை இங்கே பெறவில்லை. எல்லாம் கிடைத்தாலும் எதுவும் கிடைக்காத நிலை என்பார்களே அதுதான் இவள் நிலை.
சில வேளையில் அக்கரைக்கு இக்கரை பச்சையாக இருக்கலாம்.....

தாமரை
11-10-2006, 08:28 AM

குதிரைக்கு கண்ணை பக்கவாட்டில் பார்க்க முடியாதவாறு கட்டி இருப்பார்கள். சில மனிதர்களும் அதே போல்.
அன்பு அன்னையிடம் தான் கிடைக்கும் என எதிர்பார்ப்பது
தன் குழந்தையிடம் மட்டுமே பாசமாய் நடந்து கொள்ளும் சுயநலம்
இரண்டுமே ஒரு வகை மூட நம்பிக்கை..
வீடு விட்டு வெளி வந்த பலர் நட்பு வட்டத்தை புது உறவுகளை உண்டாக்கிக் கொண்டு வாழுகிறோம். நாளை எங்கள் வீட்டில் ஒரு விஷேசமென்றால் என் வீட்டில் உறவினர்களை விட நண்பர் கூட்டமே மிக அதிகமாக இருக்கும்.
கதைகளில் இரு வகை உண்டு ஒன்று உண்மைக் கதை.. இவ்வகைக் கதைகளிலே சிந்தனைகள் மனித மனத்தை சார்ந்தவை., அவ்வகையில் நோக்கினால் அதாவது ஒரு மனித மனத்தின் வாழ்க்கையை பதிக்கும் ஒரு டைரிக் குறிப்பாகப் பார்த்தோமானால் உமது கதை ஒரு நல்ல நிகழ்வு..
அதே சமயம் அக்கதை ஒரு சிந்தனையாய், எதிர்காலக் கனவுடையதாய் இருக்கும் பட்சத்தில் கதாசிரியனுடைய எண்ணம், கொள்கை, அவன் என்ன சரியென நினைக்கிறான் என்பது அதில் வெளிப்பட வேண்டும்...
இக்கதை ஒரு நிகழ்வு என்னும் பட்சத்தில் விவாதிக்க ஒன்றுமில்லை. உமது ஆக்கம் மிக நன்று..
இது உமது கற்பனை, உமது எண்ணம் என்னும் போதினில் ....
நாகலிங்கம் போன்ற பல அண்ணன்கள் அங்கீகரிக்கப் படவேண்டும் என்பது எனது கருத்து

அல்லிராணி
11-10-2006, 06:46 PM
யன்னலைத் திறந்தாள் விமலா. எதிரே கடற்கரை பரந்து கிடந்தது. கடற்கரை உப்புக் காற்று ஏற்கனவே கலைந்திருந்த அவள் கேசத்தை மேலும் கலைத்தது. திடீரென காற்று கொஞ்சம் வேகமாக வீசவே அது உப்பு மணத்துடன் சிறுது மணலையும் அள்ளிவந்து அவள் முகத்தில் தூற்றியது. சினப்பதற்குப் பதிலாக அவள் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை. தன் விரல்களால் நிதானமாக மண்ணைத் தட்டிவிட்டாள்.
பின்னே திரும்பிப் பார்த்தாள் அவளது மாமியார் சுயநினைவற்று படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவள் ஆதரவற்று நின்றபோது ஆதரவு தந்த உள்ளம் இது.
அம்மாவும் எனக்கு மண்ணள்ளி வீசி தூற்றினவதானே... இப்ப இந்த கடற்காற்றும் மண்ணை வாரி இறைச்சுத் தூற்றுது. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே அவள் கடகடவென வெளியே செல்கின்றாள். விறாந்தையில் நாகலிங்கம் அண்ணே நின்றுகொண்டு இருந்தார்.
வாங்கோ அண்ணே!
நாகலிங்கம் நல்ல கறுப்பு நிறம். சாரம் அணிந்து கையில் மீனுடன் அஜானபாகுவாக வெறும் மேலுடன் நின்றிருந்தான். முதற் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவர் அவன் கடலில் சென்று மீன் வேட்டையாடும் வேட்டைக்காரன் என்று. விமலாவிற்கும் யாழ்ப்பாணத்தின் வட கரையிலுள்ள இந்த மீனவ சமூகத்திற்கும் ஒரு பந்தம் ஏற்பட்டு இருந்தது.
பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது. கையில் இருந்த இரண்டு விள மீன்களை நீட்டினான். விமலாவும் வாங்கிக்கொண்டாள்.
சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு அவர் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படரத்தொடங்கியது.
அப்ப நான் வாறன்
சரி அண்ணே
விமலா மீனை எடுத்துக் கொண்டு குசுனிக்குள் போனாள். அவள் மீனை எடுத்து ஒரு மண்சட்டிக்குள் போட்டாள். என்னொரு சட்டிக்குள் சிறிது நீர் எடுத்து அதனுள் இந்த மீனை இட்டு நன்கு கழுவிக் கொண்டாள். அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தன் முன்னாள் வைத்தாள். லாவகமாக பெரிய கத்தி ஒன்றை விரல்களுக்கிடையில் செருகிவிட்டு நறுக் நறுக் என்று மீனை வெட்டத் தொடங்கினாள். நன்கு பழகிய கை தொடர்ந்து மீன்னை வெட்டிக்கொண்டு இருந்தது. இடைக்கிடை நெற்றியில் விழும் கூந்தலை தன் பிறங்கையால் மேவிக்கொண்டாள். இப்போ அவள் நினைவுள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகரத்தொடங்கியது.
அடியே வெக்கம் கெட்ட நாயே.. உனக்குப் போயும் போயும் அந்த மீன்பிடிக்கிறவனா கிடைச்சான்?? மங்களம் வெறி பிடித்தவள் போல சத்தம் இட்டுக் கொண்டு இருந்தாள்.
பாவம் மங்களம் தன் மகளின் எதிர்காலம் பற்றி பல கற்பனைக் கோட்டைகள் கட்டிக்கொண்டு இருந்தவளிற்கு அவளின் மகளின் நடத்தை அப்படிக் கோவத்தைத் தூண்டி விட்டுடிருந்தது.
முன் வீட்டு சுந்தரம் எத்தன தரம் உன்னப் பற்றி சொல்லேக்க நான் நம்பேல.. என்ற மேள் இப்படியெல்லாம் செய்யாள் எண்டு அவனுக்கு விடுக்கா உறைக்கிற மாதிரிச் சொன்னனான். இப்ப பார்த்தா.. அதற்கு மேல் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள் மங்களம்.
முன்னுக்கு விறாந்தையில் விமலாவின் தந்தையார் என்ன பேசுவது என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். சாய்மனைக் கதிரையில் காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல பொசிந்து கொண்டு இருந்தது. ஒரே ஒரு பிள்ளை எண்டு செல்லமா வளர்த்தன் இப்பிடிச் செய்வாள் எண்டு நான் கொஞ்சமும நினைக்கேலையே.. தனக்குள் புலம்பினார் அந்த பாசமுள்ள தந்ததையார்.
வாசலில் யாரோ சத்தமிடுவது கேட்கவே மூவரும வாசலிற்கு வந்து பார்தனர். அங்கே ரஞ்சன்.
விமலா.. நீ வா என்னோட.. இனியும் இவயளோட இருக்கலாம் எண்டு நினைக்கிறியே ! வாசலில் வந்து விடுக்காகச் சத்தமிட்டான் ரஞ்சன்.
அப்பாவியான விமலாவின் தந்தை குமரேசன் செய்வதறியாது திகைத்து நின்றார். அக்கம் பக்கத்து வீட்டுச் சனங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்த்தொடங்கிவி்ட்டது.
இந்த வேளையில் விமலா குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய முன்வீட்டுக்காரன் சுந்தரம் வெளியே வந்து குமரனுடன் வாக்கு வாதப்படத் தொடங்கினான். இருவரும் பேச்சு முத்தி கைகலப்பில் ஈடுபடத் தலைப்பட்டனர்.
இந்த வேளையில் விமலா ஒரு புதுமைப் புரட்சி செய்யத் தலைப்பட்டாள். சட சட வென்று வெளியே வந்தாள்.
ரஞ்சன் சயிக்கிள எடு நாங்க போவம்.. இங்க நிண்டு தேவையில்லாம சண்டை போடாத விடு விடு எனப் பேசி முடித்தாள்.
ஒரு கணம் அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களில் முதலில் சுதாகரித்துக் கொண்டது விமலாவின் தாயார்தான்.
முன் முற்றத்திற்குச் சென்று வாய்க்கு வந்த படி திட்டத்தொடங்கினாள். பின்ன என்ன அவளுக்கு வலிக்காதா. 21 வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த் தன் மகளை நேற்று வந்தவன் இப்படி அலேக்காக தூக்கி சயிக்கிளில ஏத்திக்கொண்டு போறத எந்தத் தாய்தான் பார்த்துக் கொண்டு இருப்பாள். கோபத்தின் உச்சக் கட்டமாக மண்ணை வாரி ரஞ்சனையும் விமாலாவையும் நோக்கி வீசி திட்டத்தொடங்கினாள்.
அன்றைக்குப் பிறகு தாயையும் தந்தையையும் விமலா சந்திக்கவில்லை. சில தடவை பருத்தித்துறை சந்தையில் கண்ட போதும் அவர்கள் இவளுடன் கதைக்கவில்லை. பின்னர் தற்போது அவர்களின் பெறா மகனின் உதவியுடன் கனடாவில போய் இருக்கினம் என்று அறிந்து கொணடாள். அவர்களும் இவளைத் தொடர்புகொள்ளவில்லை இவளும் அவர்களைத் தொடர்புகொள்ளவில்லை.
சிந்தனையில் மூள்கியவாறே சமையலில் ஈடுபட்டு இருந்தவளை வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு கனவுலகில் இருந்து மீண்டாள். வாசலில இருந்து கூப்பிட்டது ரஞ்சனின் அக்கா சிவரஞ்சினி.
வாங்கோ..மச்சாள்..
அம்மா என்னபாடு?? வழைமையான கேள்வி.
அதே நிலைமைதான் மச்சாள் இவளும் வழமையான பதிலைச் சொன்னாள்.
பெற்ற தாய் வருத்தத்தில் வருந்தும் போது புதிதாய் வந்த மச்சாளிடம் அதைப் பாரமாகக் கருதி விட்டுக்கொடுத்த பெருமை இந்த சிவரஞ்சினியைச் சேரும்.
தாய் இருந்த அறையினுள் சென்ற சிவரஞ்சினி தாயை ஒருக்கால் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். வழமை போலப் பின்னர் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.
அம்மா எப்பிடி யெல்லாம் இருந்தவ தெரியுமே??. அவர் ஒருக்கால் கூட மற்றயவளிட்ட ஒண்டும் கேக்கிறதில்லை இப்ப இப்பிடி இருக்கிறா விமலாவிற்கு இவையெல்லாம உறைக்கவில்லை காரணம் தினம் தினம் கேட்கும் புலம்பல் தான் இது.
ரஞ்சனக் கூட உன்ன மாதிரி நல்ல மனசிருக்கிற உன்னட்ட இருந்து..
இப்ப என்னத்துக்கு மச்சாள் தேவையில்லாம வேற விசயங்களக் கதைக்கிறியள் சிவரஞ்சினியின் புதிய அலட்டலைக் தன் அரட்டல் மூலம் கட்டுப்படுத்தினாள் விமலா.
ஒரு நாள் கடற்தொழிலுக்கு விமலாவின் கணவன் ரஞ்சன் சென்றான். கடலில் இலங்கை கடற்படையின் பீரங்கிப்படகின் சுடுகலனின் கோரப்பிடியில் இவர்கள் சென்ற படகு மாட்டுப்பட்டது. படகில் சென்ற அனைவரும் மீண்டு வந்துவிட்ட போதும் ரஞ்சன் மட்டும் வரவில்லை. இன்றுடன் ஆண்டுகள 4 கழிகின்றன. ஆயினும் விமலா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.
தற்போது சிவரஞ்சினி வேறுவிடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவளின் கடைசி மகனின் குறும்பு தொடக்கம் தென் இந்தியாவின் பொதிகை சானலில் நேற்று அவள் பார்த்த எம்.ஜி.ஆர் இன் படம் வரை புட்டுப் புட்டு வைத்தாள். விமலாவும சும்மா ஒப்புக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.
இந்த அம்மா மனுசி போய் துலைஞ்சுட்டுது எண்டா எனக்கும் விடுதலை கிடைச்ச மாதிரி. நானும் அடிக்கடி இங்க வந்து நேரத்த மினக்கடுத் தேவையில்ல கூறியவாறே விடைபெற்றாள் சிவரஞ்சினி.
சிறிது நேரத்தில் விடைபெற்றுக் கொண்டு சிவரஞ்சினி சென்று விட்டாலும் அவள் தொடங்கின கதை விமலாவின் மனக் கண்ணின் முன் ஓடத்தொடங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது.
மச்சாளிற்கு மாமி செத்தாத்தான் விடுதலை. எனக்கு மாமியும் செத்துப் போனால் யார் இருக்கினம்??. நானும் இந்தக் கடலில விழுந்து சாக வேண்டியதுதான்.
எனக்கு எண்டைக்கும விடுதலையில்லை. விடுதலை எண்டு நினைச்சு வீட்டில இருந்து நான் வெளிக்கிட்ட நாளில இருந்து விடுதலை இல்லாமப் போயிட்டுது. உண்மையான விடுதலை நான் வீட்டில அப்பா அம்மாவோட இருக்கேக்கதான் இருந்தது.
குசினியின் ஓரத்தில் இருந்து விமலாவின் விசும்பல் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. அடுப்பில் இருந்த மீன்கறி கருகத் தொடங்கி விட்டதை அறிவிக்கும் முகமாக அவ்விடத்தில தீய்ந்த வாடை அடிக்கத் தொடங்கியது.
கதைக் களம் : ஒரு சிறிய வீட
கதை காலம் : சுமார் 1-1/2 மணி நேரம்..
சிறு சம்பவத்தை நேர்த்தியாய் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் சபாஷ்..
விமலா.. காதல் வயப்பட்டு, பின் சிறு கோப உணர்ச்சி உந்துதலில் பெற்றோரை விட்டு வந்து கணவனின் குடும்பத்தை தன் குடும்பமாய் மதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அக்மார்க் தமிழச்சி..
மற்றவர்கள்? சிலர் பெயரால் மட்டுமே அறிமுகம்.. சிறு சிறு நினைவுத் துணுக்குகள்..
இன்னொரு அக் மார்க் தமிழச்சியும் உண்டு இக்கதையில்.. சிவரஞ்சனி.. ஒரு சராசரி மனுஷியாய் தாய் படுக்கியில் கிடப்பதைக் கண்டு வேதனைப்பட்டு, பின் சகஜமாகி கதை பேசி.. போயிட்டா தேவைலை என்று போகிற போக்கில் சொல்லி விட்டு போகும் பெண்..
நாகலிங்கம் ரஞ்சனின் படகை உபயோகிறார் என்று தெரிகிறது.. ஆனால் இடிப்பது என்னவென்றால்..
பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது.
இந்த வார்த்தைகளை பாடுபடும் எந்த ஆண்மக்னும் அடுத்த வீட்டில் உபயோகிக்க தயங்குவான்..
சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு
என்று சொன்னதுடன்.. "இந்த புள்ள இண்டைக்கு கிடச்சது" என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.
மங்களத்தின் கோபமும், தந்தையின் மௌனமும் யதார்த்தம். சுந்தரத்தின் குறுக்கீடும், நீ யாரு அதைக் கேட்க என்று கேட்காத விமலாவும்.. 916 ஹால்மார்க் இயல்பான பாத்திரங்கள்.. வெடுக்கென வீம்பாய் வந்தாலும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்வது.. நல்ல மாமியார்..
கணவன் காணாமல் போய் நான்கு வருடம் ஆகியும் கணவனின் தாயைப் பேணி எது தன் குடும்பம் உணர்ந்த விதம் பரவாயில்லை.. எழுதாமலேயே விளங்க வைத்திருக்கிறீர்..
சிவரஞ்சனியின் கடைசி வார்த்தைகளுக்கு விமலாவின் எண்ண பதிலகள் கச்சிதம் . இந்த நிலையில் ஒரு பெண் இரு விதமாக மாறிவிடுவாள்.
1. தாயைத்தேடி சாய்ந்து அழ ஒரு தோள் தேடி துடித்து மருகி மனம் கருகி உடல் உருகி பைத்தியமாய் வாடுபவள்..
2. தன்னைத் தொலைத்து பிடிப்புகளில்லாமல், செய்யும் காரியங்களில் மனம் செல்லாமல்.. எண்ணங்களில் போராடி மருகி .. உங்கள் நாயகியைப் போல்..
ஆனால் ஒன்று சிவரஞ்சனி பேசிய விஷயங்களளப் பார்த்தால் 2 மணி நேரம் பேசியிருக்கலாம்.. அத்தனை னேரமா மீன் சமைப்பார்கள்? வீட்டிற்கு வந்த மச்சாளை மீன் சமைக்கும் அண்ணி ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போகலாமே என கேட்காதது விமலாவின் குணாதிசயத்திலிருந்து வேறுபடுகிறதே.. அவள் மனம் உறவுகளுக்கு ஏங்குகிறது.. ஆனால் மச்சாளின் பேச்சுக்கு காது கொடுத்தவள் உறவில் கொஞ்சம் மனம் கொடுத்திருக்கலாம், மீன் கருகி வீணாகி விட்டது..
சிறிது உள்ளும் சிறிது புறமுமான நடை.. இது அருகில் அமர்ந்து கதை சொல்லுவது போல் படிக்கும் போது
உணர்வைத் தருகிறது.. அருமையான் புகைபடம். கதையில் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறன. அதைதவிர எழுத்தாளனின் எண்ணங்கள் இல்லை.. எனவே கதையை இயல்பாக ரசிக்க இயல்கிறது..
தொடருங்கள்..

தாமரை
12-10-2006, 04:31 AM
மோதுகிற கையால "GOOD" வாங்கியிருக்கீங்க போலிருக்கே...:D :D :D

ஓவியா
12-10-2006, 05:40 PM
மோதுகிற கையால "GOOD" வாங்கியிருக்கீங்க போலிருக்கே...:D :D :D

அதான் எனக்கும் ஒரே ஆச்சர்யம்....:eek: :eek:
சும்மா பின்னியெடுப்பாங்களே...;) ..எப்படி இப்படி நடந்தது...:) :D :)

தம்பி மயூரேசா...!
எங்கப்பா இருக்கே?
மன்றதிலே ஒரு அதிசயம்....:D :D ...வந்து பாரு தெரியும்..:eek: :D

மயூ
17-10-2006, 07:31 AM
குதிரைக்கு கண்ணை பக்கவாட்டில் பார்க்க முடியாதவாறு கட்டி இருப்பார்கள். சில மனிதர்களும் அதே போல்.
அன்பு அன்னையிடம் தான் கிடைக்கும் என எதிர்பார்ப்பது
தன் குழந்தையிடம் மட்டுமே பாசமாய் நடந்து கொள்ளும் சுயநலம்
இரண்டுமே ஒரு வகை மூட நம்பிக்கை..
வீடு விட்டு வெளி வந்த பலர் நட்பு வட்டத்தை புது உறவுகளை உண்டாக்கிக் கொண்டு வாழுகிறோம். நாளை எங்கள் வீட்டில் ஒரு விஷேசமென்றால் என் வீட்டில் உறவினர்களை விட நண்பர் கூட்டமே மிக அதிகமாக இருக்கும்.
கதைகளில் இரு வகை உண்டு ஒன்று உண்மைக் கதை.. இவ்வகைக் கதைகளிலே சிந்தனைகள் மனித மனத்தை சார்ந்தவை., அவ்வகையில் நோக்கினால் அதாவது ஒரு மனித மனத்தின் வாழ்க்கையை பதிக்கும் ஒரு டைரிக் குறிப்பாகப் பார்த்தோமானால் உமது கதை ஒரு நல்ல நிகழ்வு..
அதே சமயம் அக்கதை ஒரு சிந்தனையாய், எதிர்காலக் கனவுடையதாய் இருக்கும் பட்சத்தில் கதாசிரியனுடைய எண்ணம், கொள்கை, அவன் என்ன சரியென நினைக்கிறான் என்பது அதில் வெளிப்பட வேண்டும்...
இக்கதை ஒரு நிகழ்வு என்னும் பட்சத்தில் விவாதிக்க ஒன்றுமில்லை. உமது ஆக்கம் மிக நன்று..
இது உமது கற்பனை, உமது எண்ணம் என்னும் போதினில் ....
நாகலிங்கம் போன்ற பல அண்ணன்கள் அங்கீகரிக்கப் படவேண்டும் என்பது எனது கருத்து
நன்றி செல்வன் அண்ணா!
உங்கள் ஆதங்கம் புரிகின்றது. நான் இங்கு ஆவணப்படுத்த முயன்றது யாழ்ப்பாண நடுத்தரக் குடும்பத்து பெண் ஒருவரின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை. இங்கு நான் என்னுடைய தனிப்பட்ட கருத்து எதையும் திணிக்க முயலவில்லை அதாவது தாய் தந்தையருடன்தான் அவள் சந்தோஷமாக இருந்தாள் போன்ற கருத்துக்கள். என் இக்கதையை நான் எனது வலைப்பதிவில் இட்டபோது ஒரு அன்பர் நீங்கள் சமூகத்தில் உழுத்துப்போன கட்டமைப்புகளிற்கு உங்களை அறியாமலேயே நீர் ஊற்றி வளர்க்கின்றீர் என்று கூறியிருந்தார். அவர் அதற்கு நான் இதற்கு முன் எழுதிய எனக்குமட்டும் ஏன் என்ற கதையை மேற்கோள் இட்டிருந்தார். உண்மையில் இது வரையில் என் கருத்துக்கள் எதையும் கதையில் திணிக்க முடியவில்லை. நிஜங்களை படம்பிடிக்க முயல்கின்றேன். அவ்வளவுதான்.
எல்லாத்துக்கும் மேல் நான் மொத்தமாக எழுதிய கதைகள் ஆகக் கூடினால் ஐந்து கூட இருக்காது. நான் வெறும் கத்துக் குட்டியே. உங்களைப் போன்றவரின் கருத்துக்கள் என் எழுத்துக்கு வளமூட்டும் என்பதில் ஐயமில்லை:)

மயூ
17-10-2006, 07:32 AM
கதைக் களம் : ஒரு சிறிய வீட
கதை காலம் : சுமார் 1-1/2 மணி நேரம்..
சிறு சம்பவத்தை நேர்த்தியாய் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் சபாஷ்..
விமலா.. காதல் வயப்பட்டு, பின் சிறு கோப உணர்ச்சி உந்துதலில் பெற்றோரை விட்டு வந்து கணவனின் குடும்பத்தை தன் குடும்பமாய் மதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அக்மார்க் தமிழச்சி..
மற்றவர்கள்? சிலர் பெயரால் மட்டுமே அறிமுகம்.. சிறு சிறு நினைவுத் துணுக்குகள்..
இன்னொரு அக் மார்க் தமிழச்சியும் உண்டு இக்கதையில்.. சிவரஞ்சனி.. ஒரு சராசரி மனுஷியாய் தாய் படுக்கியில் கிடப்பதைக் கண்டு வேதனைப்பட்டு, பின் சகஜமாகி கதை பேசி.. போயிட்டா தேவைலை என்று போகிற போக்கில் சொல்லி விட்டு போகும் பெண்..
நாகலிங்கம் ரஞ்சனின் படகை உபயோகிறார் என்று தெரிகிறது.. ஆனால் இடிப்பது என்னவென்றால்..
பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது.
இந்த வார்த்தைகளை பாடுபடும் எந்த ஆண்மக்னும் அடுத்த வீட்டில் உபயோகிக்க தயங்குவான்..
சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு
என்று சொன்னதுடன்.. "இந்த புள்ள இண்டைக்கு கிடச்சது" என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.
மங்களத்தின் கோபமும், தந்தையின் மௌனமும் யதார்த்தம். சுந்தரத்தின் குறுக்கீடும், நீ யாரு அதைக் கேட்க என்று கேட்காத விமலாவும்.. 916 ஹால்மார்க் இயல்பான பாத்திரங்கள்.. வெடுக்கென வீம்பாய் வந்தாலும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்வது.. நல்ல மாமியார்..
கணவன் காணாமல் போய் நான்கு வருடம் ஆகியும் கணவனின் தாயைப் பேணி எது தன் குடும்பம் உணர்ந்த விதம் பரவாயில்லை.. எழுதாமலேயே விளங்க வைத்திருக்கிறீர்..
சிவரஞ்சனியின் கடைசி வார்த்தைகளுக்கு விமலாவின் எண்ண பதிலகள் கச்சிதம் . இந்த நிலையில் ஒரு பெண் இரு விதமாக மாறிவிடுவாள்.
1. தாயைத்தேடி சாய்ந்து அழ ஒரு தோள் தேடி துடித்து மருகி மனம் கருகி உடல் உருகி பைத்தியமாய் வாடுபவள்..
2. தன்னைத் தொலைத்து பிடிப்புகளில்லாமல், செய்யும் காரியங்களில் மனம் செல்லாமல்.. எண்ணங்களில் போராடி மருகி .. உங்கள் நாயகியைப் போல்..
ஆனால் ஒன்று சிவரஞ்சனி பேசிய விஷயங்களளப் பார்த்தால் 2 மணி நேரம் பேசியிருக்கலாம்.. அத்தனை னேரமா மீன் சமைப்பார்கள்? வீட்டிற்கு வந்த மச்சாளை மீன் சமைக்கும் அண்ணி ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போகலாமே என கேட்காதது விமலாவின் குணாதிசயத்திலிருந்து வேறுபடுகிறதே.. அவள் மனம் உறவுகளுக்கு ஏங்குகிறது.. ஆனால் மச்சாளின் பேச்சுக்கு காது கொடுத்தவள் உறவில் கொஞ்சம் மனம் கொடுத்திருக்கலாம், மீன் கருகி வீணாகி விட்டது..
சிறிது உள்ளும் சிறிது புறமுமான நடை.. இது அருகில் அமர்ந்து கதை சொல்லுவது போல் படிக்கும் போது
உணர்வைத் தருகிறது.. அருமையான் புகைபடம். கதையில் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறன. அதைதவிர எழுத்தாளனின் எண்ணங்கள் இல்லை.. எனவே கதையை இயல்பாக ரசிக்க இயல்கிறது..
தொடருங்கள்..
அல்லிஇராணி அவர்களே முதலில் உங்கள் அருமையான விமர்சனத்திற்கு கோடி நன்றிகள்.
:D
இது சிலவேளை இந்தியாவில் வித்தியாசமாகப் பார்க்கப்படுதோ தெரியாது. எல்லாவற்றிலும் மிக முக்கியமான விடையம் இது முழுக்க முழுக்க என் கற்பனை ஆகவே இது என் பிழையாக இருக்கக் கூடி சந்தர்ப்பம் உண்டு. வெளி சமுதாய நடவடிக்கைகளில் அதாவது அவர்களின் நடைமுறை சம்பிரதாயங்கள் பற்றி அவ்வளவு அறிவில்லை.
:p
தாயின் தொடர்பு அறுந்து விட்ட நிலையில் தாயுடன் போக விருப்பமில்லாவிட்டாலும் தாயின் அன்பை அவள் மறக்கவில்லை என்பதையே நான் காட்ட முயன்றேன். இங்கு இவளும் நீங்கள் கூறிய படி வாழ்வில் பிடிப்பற்று தன் மாமியாருக்காக கடமைக்கு வாழும் ஒருவரே..

விமர்சனத் தொடக்கத்தில் கதைக்களம் 1 மணி நேரம் என்று சொல்லிவிட்டு இப்ப சிவரஞ்சினி மட்டும் 2 மணி நேரம் கதைச்சா என்று சொல்லுகின்றீர்களே இது நியாயமா???. :confused:

மற்றது நீங்கள் குறிப்பிட்ட சாப்பிட அழைக்காமை பற்றியது. சிவரஞ்சினி இங்கு வருவது அடிக்கடி நிகழும் நிகழ்வு இவளுக்கு அவள் மச்சினி சாப்பிட மாட்டாள் என்பது ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதல்லவா????:confused:

உங்கள் அருமையான விமர்சனத்திற்கு மீண்டும் ஒரு தடவை கோடான கோடி நமஷ்காரங்கள்.:)

மயூ
17-10-2006, 07:35 AM
மோதுகிற கையால "GOOD" வாங்கியிருக்கீங்க போலிருக்கே...:D :D :D
Good மட்டுமில்லை குட்டும் தான் வாங்கியிருக்கின்றேன்....:D

மயூ
17-10-2006, 07:35 AM
அதான் எனக்கும் ஒரே ஆச்சர்யம்....:eek: :eek:
சும்மா பின்னியெடுப்பாங்களே...;) ..எப்படி இப்படி நடந்தது...:) :D :)

தம்பி மயூரேசா...!
எங்கப்பா இருக்கே?
மன்றதிலே ஒரு அதிசயம்....:D :D ...வந்து பாரு தெரியும்..:eek: :D

பாத்தாச்சு.... பாத்தாச்சு... பாத்தாச்சு....:D :D

gayathri.jagannathan
28-12-2006, 08:48 AM
மயூரேசன்,

உங்களின் கதையை படிக்க இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது... கதை மிகவும் அருமை... கதையின் போக்கு மிகவும் இயல்பாக உள்ளது... குறிப்பாக அந்த ஈழத் தமிழில் உரையாடல்களை அமைத்தது கதை களத்திற்க்கும் போக்கிற்க்கும் ஏற்ப உள்ளது...

தொடர்க நினது படைப்புக்கள் (அப்படியே எனது பின்னூட்டங்களும்).... :D :D :D

மயூ
28-12-2006, 09:48 AM

கதை எழுதுவதற்கான நேரம் கிடைப்பதுதான் கஷ்டமாக உள்ளது. நேரம் கிடைத்தாலும் எழுதுவதற்கான மனநிலை கிடைப்பதில்லை....
எழுதுவோம் விரைவில் நன்றி அன்பரே!!! :)

gayathri.jagannathan
28-12-2006, 10:20 AM
எப்படி? தமிழ்ல ஒரு வசனம் சொல்வாங்களே... "கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்" அந்த மாதிரியா? escaaaaaaaaaapppppppppppppeeeeeeeeee........ :D :D :D :D

மயூ
29-12-2006, 06:08 AM
எப்படி? தமிழ்ல ஒரு வசனம் சொல்வாங்களே... "கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்" அந்த மாதிரியா? escaaaaaaaaaapppppppppppppeeeeeeeeee........ :D :D :D :D
:) :) நக்கலு...

sham
09-02-2007, 10:43 AM
கதை நன்றாகவுள்ளது. கடைசியில் விமலாவின் கணவன் வந்தானா? வரவில்லையா?
நல்ல முடிவாகச்சொல்லவும்..................

மயூ
09-02-2007, 10:54 AM
கதை நன்றாகவுள்ளது. கடைசியில் விமலாவின் கணவன் வந்தானா? வரவில்லையா?
நல்ல முடிவாகச்சொல்லவும்..................
காலமெல்லாம் காத்திருக்கின்றாள் என்று வைப்போமே!!!

maganesh
09-02-2007, 04:23 PM
நீண்ட நாளின் பின்னர் நம் தமிழ் மணம் வீசும் கதையை படிக்கத் தந்த மயூரேசனுக்கு நன்றி. அம்மாவும் மண் வாரித் தூற்றினாள். இப்போ காற்றும் மண் அள்ளித்தூற்றுகினறது எனற கரு என்னைக் கவர்ந்துள்ளது.

மயூ
09-02-2007, 04:39 PM
நீண்ட நாளின் பின்னர் நம் தமிழ் மணம் வீசும் கதையை படிக்கத் தந்த மயூரேசனுக்கு நன்றி. அம்மாவும் மண் வாரித் தூற்றினாள். இப்போ காற்றும் மண் அள்ளித்தூற்றுகினறது எனற கரு என்னைக் கவர்ந்துள்ளது.
நன்றி மயூரன்...
நிறைய நாட்களுக்கு முன்பு எழுதியது.. கதை எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது.. இன்னுமொரு கதை எழுத வேண்டும். :)

அறிஞர்
09-02-2007, 04:48 PM
வெகு நாட்கள் படிக்காமல் இருந்த கதை இன்று தான் கண்டேன்...

அருமை.. மயூரேசா.....

உனக்குள் இருக்கும் எழுத்தாற்றல் இன்னும் அதிகமாகட்டும்.. தொடர்ந்து எழுதுங்கள்.

மயூ
09-02-2007, 06:03 PM
வெகு நாட்கள் படிக்காமல் இருந்த கதை இன்று தான் கண்டேன்...

அருமை.. மயூரேசா.....

உனக்குள் இருக்கும் எழுத்தாற்றல் இன்னும் அதிகமாகட்டும்.. தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி அறிஞர் அண்ணா!
உங்கள் அன்பும் விமர்சனமுமே மேலும் வளரவைக்கும்..
நன்றிகள்...

Mathu
15-02-2007, 08:41 PM
ஆகா மயூரேசா உனக்குள் இப்படி ஒரு திறமையும் உண்டா....
தொடர்ந்து எழுது..... நிறைய எதிர்கலம் உண்டு

Mathu
15-02-2007, 08:55 PM
வாவ். மயூரேசன் மிகத் தெளிந்த நடை. அவ்வப்பொழுது வரும் ஈழத்துச் சொற்கள். குசினி (அடுப்பறை), கதிரை (நாற்காலி) சரியா??. சிறு குழப்பம் ரஞ்சன், குமரன் இருவரும் ஒருவரா அல்லது தட்டச்சு செய்கையில் நேர்ந்த பிழையா? அருமையா எழுதியிருக்கீங்க.
குசினி (சமயலறை),கதிரை (நாற்காலி).இவை இரண்டும் போர்த்துக்கீச சொற்கள். அவர்கள் சுறண்டியபின் விட்டு சென்ற எச்சங்களில் இவையும் அடங்கும்.....
;) :eek: ;)

இளசு
21-04-2007, 11:18 PM
மீன் கழுவும்போது ரஞ்சனின் நினைவுகள் வர
ஒரு கிரியா ஊக்கி - நாகலிங்கம்.. சரியா மயூரா?

(குமரன் -ரஞ்சன் இன்னும் சரிபண்ணவில்லையே)

-----------------------------------

என் மனமார்ந்த பாராட்டுகள்..

சில முடிவுகள் -- சில சிறைகள்!
முன்னாள் சிறைகள் - பின்னால் பார்க்கும்போது சொர்க்கங்கள்..

இருக்கும் அறையை விட்டு இருப்பவர் வெளியேறுவதும்
வெளியே இருப்பவர் அறைக்குள் நுழைய முண்டியடிப்பதுமாய்..

மாறி மாறி மனித மனங்கள் ஆடும் ஓயா பரமபதம் நம் வாழ்க்கை!

sns
15-05-2007, 10:59 AM
ஆக என்ன ஒரு சோக கதை, உன்மயகவே என் நென்சத்தை தொட்டு விட்டது

மயூ
21-05-2007, 06:04 AM
ஆகா மயூரேசா உனக்குள் இப்படி ஒரு திறமையும் உண்டா....
தொடர்ந்து எழுது..... நிறைய எதிர்கலம் உண்டு

குசினி (சமயலறை),கதிரை (நாற்காலி).இவை இரண்டும் போர்த்துக்கீச சொற்கள். அவர்கள் சுறண்டியபின் விட்டு சென்ற எச்சங்களில் இவையும் அடங்கும்.....
;) :eek: ;)
நன்றி மது அவர்களே!!!
ஆமாம் இலங்கைத் தமிழில் பல போர்த்துக்கேயச் சொற்களைக் காணலாம்!!!

மயூ
21-05-2007, 06:04 AM
ஆக என்ன ஒரு சோக கதை, உன்மயகவே என் நென்சத்தை தொட்டு விட்டது
நன்றி நண்பரே!!!:food-smiley-011:

மயூ
21-05-2007, 06:12 AM
மீன் கழுவும்போது ரஞ்சனின் நினைவுகள் வர
ஒரு கிரியா ஊக்கி - நாகலிங்கம்.. சரியா மயூரா?

(குமரன் -ரஞ்சன் இன்னும் சரிபண்ணவில்லையே)

-----------------------------------

என் மனமார்ந்த பாராட்டுகள்..

சில முடிவுகள் -- சில சிறைகள்!
முன்னாள் சிறைகள் - பின்னால் பார்க்கும்போது சொர்க்கங்கள்..

இருக்கும் அறையை விட்டு இருப்பவர் வெளியேறுவதும்
வெளியே இருப்பவர் அறைக்குள் நுழைய முண்டியடிப்பதுமாய்..

மாறி மாறி மனித மனங்கள் ஆடும் ஓயா பரமபதம் நம் வாழ்க்கை!
உங்களது விமர்சனத்தை எங்கள் படைப்பில் காண்பதே சந்தோஷமும் பெருமையும்தான்...!!!

ரஞ்சன்.. குமரன் விடயம் பலகாலம் முன்பே மாற்றப்பட்டாயிற்றே!!!!!

உங்கள் கருத்துக்கள் அத்தனையும் உண்மை நான் நூற்றுக்கணக்கான வார்த்தைககளில் சொன்னதை நீங்கள் சில வார்த்தைகளில் சொல்லி முடித்துவிட்டீர்கள்.. நன்றி இளசு அண்ணா! :icon_give_rose:

அக்னி
22-05-2007, 02:50 AM
"சாதிகள் இல்லையடி பாப்பா ! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்."

மகாகவி சென்ற நூற்றாண்டில் சொல்லிவிட்டானென்றாலும், எங்கள் தமிழ் சமூகத்தில் இன்னமும் சாதிப்பாகுபாடு தலைவிரித்தாடுகின்றது.
தாய்ப்பாசத்தையே செயலற்றதாக்கும் இந்தப் சாதிப்பேய் ஒழிந்திடுமா?

கருத்தோட்டமும், கையாளுகையும் சிறப்பு...

மயூ
23-05-2007, 02:04 PM
நன்றி அக்னி...!!!
உங்கள் விமர்சனமும் கருத்துக்களுக்கும் நன்றி...!! இவையெ ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும்!

மனோஜ்
23-08-2007, 08:41 PM
அருமையான கதை
சிலர் செயல்பட்ட பின்தான் சி்ந்திப்பர் அந்த நேரம் எல்லாம் முடிந்திருக்கும்

மயூ
04-09-2007, 02:09 PM
ஆமாம் மனோஜூ...
சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்!!!

lolluvathiyar
04-09-2007, 02:56 PM
மயூர் உங்கள் கதை அருமை. இது தான் நான் படித்த உங்கள் முதல் கதை.
ஏனோ சோகமாக ஆரம்பித்து சோகமாகவே கொண்டு சென்று முடிக்காமல் விட்டு விட்டீர்களே. இது போல் எத்தனை குடும்பங்கள் கஸ்டபடுகின்றன*