PDA

View Full Version : மார்கழி சந்தோஷம்

ஓவியா
05-10-2006, 08:29 PM
எல்லா நாட்களும் நல்ல நாளே,
இருப்பினும் நான் அதிகமாக ஏங்குவது இந்த மார்கழி மாததிற்க்குதான்....
எத்தனை புனிதமான காலை பொழுதுகள்.....

பிழையை தவிர்க்க
முதல் நாளே காகிதத்தில் வரைந்து வைத்த கோலம், ...........
கோலத்திற்க்கு கின்னத்தில் அரைத்துவைத்த அரிசிமாவு.....
பாதி தூக்கதில் தேய்த்து வைக்கும் சேலை,........வலயல்......சேருப்பு.....
திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் புத்தகம்,
(70பது பாடலும் மூளை சிப்பில் இருந்தாலும்)
பூக்கள்.....துளசி..............தயார்ப்படுத்தி வைத்து...

பொத்துனு படுக்கையில் விழ.....கண்ணைமூடியவுடனே ....
விடிந்துவிட்டது போல் மணி அடித்து விட....
நாராயணனை கூப்பிட்டுகொண்டே (திட்டிகொண்டே)
மூன்று மணிக்கு எழுந்து.....

எறும்பிற்க்கு எதிர்கட்ச்சிபோல் இயங்கி
கடனை முடித்து.....விளக்கேற்றி....
சூரிய நமஷ்காரம் செய்து
இருட்டில் துணைக்கு அனுமானை அழைத்து.....

ஓடுவதுபோல் நடந்து....
கோவில் சென்று...
ஐயரையும் எழுப்பி.......
வருவதர்க்குள் திருபள்ளியெழுச்சி பாடி.....

மாமாவிடம் முடிச்சாச்சுனு தலையாட்டி
மணி வாயல் திறந்து....
வாசல் கழுவி கோலம் இட்டு......
முதற்கால் பூஜை பார்த்து....

திருப்பாவை பாடி....
நாராயணை மகிழ்வித்து,
கோதையை வாழ்த்தி......
துளசிப் பூஜை பார்த்து....

கோவிந்தா கோவிந்தானு போட்டு......
ஆராத்தி கண்ணில் ஒற்றி....
துளசி தீர்த்தம் அருந்தி...
நமக்கு நாமே நாமம் இட்டு.....

ஆச்சா ஆச்சானு மாமி கூப்பிட
வந்தேன் வந்தேனென்று ஓட்டமாய் ஒடி
ஜம்முனு காரில் அமர்ந்து 5 நிமிடத்தில்
கட்சிமாற்றி லிங்கெஷ்வரர் முன் நிற்க்க

வயல் திறந்த கோவிலில்
பகவானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாட
மீண்டும் அதே கோலம் வாசல் தான் வேறு
அங்கே 30பது என்றால் இங்கே 20பது அதே ராகத்தில்

நந்தி பூஜை பார்த்து
ஆராத்தியை கண்ணில் ஒற்றி....
பால் தீர்த்தம் அருந்தி...
நாமத்தின் மேல் திருநீர் இட்டு....

பிரசாதம் கட்டிக்கொண்டு
வீடு வந்து விழுந்து நமஷ்காரம் செய்து...
அப்பாடானு....உட்காரா
சொல்வதர்க்கு வார்த்தை இல்லை

சந்தோஷம்....ஆத்மாவில்

mukilan
05-10-2006, 08:37 PM
அடடா லண்டன் கோயில்களில் கூட கோலம் போட ஆள் இல்லைனு தேடறாங்களாமே. எறும்புக்கு எதிர்க்கட்சியா, அப்போ சோம்பேறிக் கட்சி.. ஐயரையே நீங்கதான் எழுப்புவீங்களா. எப்படியோ அடி மனசில ஆறிப் போய்க்கிடந்த ஆசைகளை நீங்களும் உங்களுக்கு கொஞ்ச நாள் முன்ன லியோவும் எழுப்பி விட்டுட்டீங்க. இனிமேல் அந்த நாட்கள் வரவே வராது. உங்கள் பதிவுகள் எல்லாம் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்கிறது ஓவியா?

ஓவியா
05-10-2006, 08:44 PM

நன்றி முகிலன்

இதெல்லாம் கடந்த 7 வருஷமா நான் மலேசியாவில் அனுபவித்தவை.
போன வருடம் மார்கழிக்கு (கோவில் ரொம்ப தூரம் அதனால்)...லன்டனில் ஜம்மு ஜம்முனு நல்லா தூங்கினேனே.....:D

திருப்பள்ளியெழுச்சி கோவில் திறக்கும் முன் பாட வேண்டும்,
அதனால் ஐயர் நான் வரும் வரை காதிருப்பார் (படுக்கையில்)....:cool:

leomohan
06-10-2006, 06:33 AM
..........எதிர்கட்சிக்கு தாவி............

அருமை ஓவியா. பழைய நினைவுகள் சில நேரம் மனதை பிழிகின்றன. பார்ப்பவர்கள் கேட்பவர்கள் இறந்த காலத்தில் வாழும் முட்டாள் என்கிறார்கள் நம்மை.

ஆனால் என்ன தான் கார் வீடு வசதி என்று எந்திரங்களுடன் வாழ்ந்தாலும் இந்த வாழ்கையைவிட சிறந்த வாழ்கைக்கு தானே மனம் ஏங்குகிறது.

அந்த வாழ்வில் வெறும் மண் பானை தண்ணீர் தான் ஃபிரிட்ஜ் இல்லை, தரையில் பாயில் படுக்கை மெத்தை இல்லை, கையால் துணிதுவைத்து புழக்கடையில் காய வைத்து நடந்து பள்ளிக்கூடம் சென்று கோவில் சென்று .....................ம்ம். இந்த வசதி வாழ்கையில் ஏன் அந்த ஆனந்தம் இல்லை.

இது செயற்கை. அது இயற்கை. ஆகையால் தானோ.

ஓவியா
06-10-2006, 06:00 PM
..........எதிர்கட்சிக்கு தாவி............

அருமை ஓவியா. பழைய நினைவுகள் சில நேரம் மனதை பிழிகின்றன. பார்ப்பவர்கள் கேட்பவர்கள் இறந்த காலத்தில் வாழும் முட்டாள் என்கிறார்கள் நம்மை. .

நன்றி மோகன்

100 சதவிதம் உண்மை, அதுவும் சில முதியோர்களே நம்மை இப்படி சொல்லும் பொழுது....
அவர்களை பார்க்க நமக்கு ஒரு அனுதாபம் தான் தோன்றுகின்றது

வளரும் இளஞ்ச்சிட்டுக்கள், Generation gapனு ஒரு நக்கல் அடிக்கின்றன...:D

leomohan
06-10-2006, 08:51 PM
இந்த தலைமுறை பலவற்றையும் இழந்துவிட்டது. நம் தலமுறையின் மென்மை, தன்மை, சிறிய விஷயங்களில் நாம் பெற்ற இன்பம் இந்த தலைமுறையும் இனி வரும் தலைமுறைகளும் பெறப்போவதே இல்லை.

ஓவியா
08-10-2006, 02:38 PM
இந்த தலைமுறை பலவற்றையும் இழந்துவிட்டது. நம் தலமுறையின் மென்மை, தன்மை, சிறிய விஷயங்களில் நாம் பெற்ற இன்பம் இந்த தலைமுறையும் இனி வரும் தலைமுறைகளும் பெறப்போவதே இல்லை.

ஆமாம் மோகன்
முற்றிலும் உண்மையே...

வாய்ப்பு கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்.

meera
08-10-2006, 02:55 PM
ஓவியா உங்களின் பதிவு மார்கழி மாதத்திற்க்காய் காத்திருக்கும் கிராமத்து வாழ்க்கையை நினைவுட்டுகிறது.

நம் வீட்டு கோலத்துடன் நின்றுவிடுவதில்லை அந்த தெரு முழுவதும் ஒரு சுற்று சுற்றி யார் வீட்டு கோலம் அழகாய் இருக்கிறது என்ற ஆராய்ச்சியை முடித்து தான் வீடு வந்து சேர்வது..

ம்ம்ம்.. அது ஒரு அழகிய நிலா காலாம்.தேடினாலும் கிடைக்காது.

gragavan
08-10-2006, 02:58 PM
மார்கழி என்றாலே சிறுவயதில் தூத்துக்குடியில் அனுபவித்த மார்கழிதான் நினைவுக்கு வரும். சிற்றஞ் சிறுகாலே எழுந்து ஊராரோடு தெருவில் கூட்டமாய்ப் பாடி நடந்து வீடு வீடாகச் சென்று காப்பி குடித்து விட்டு அப்படியே பெருமாள் கோயிலுக்குள் நுழைந்தால் பெண்கள் எல்லாரும் திருப்பாவை பாடி முடித்திருப்பார்கள். தீப ஆராதனை முடிந்ததும் வெண்பொங்கலோ, ததியோன்னமோ, புளியோதரையோ, எலுமிச்சை சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ கையில் விழுகையில் வீட்டிற்குச் செல்லும் முன்னமே முடித்திடும் உத்வேகம். அடடா! மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய் இருந்தது அந்த பொழுதுதான்.

தாமரை
08-10-2006, 02:58 PM
நாம் பெற்ற இன்பம் இந்த தலைமுறையும் இனி வரும் தலைமுறைகளும் பெறப்போவதே இல்லை.

இந்தக் கருத்துதான் இடிக்கிறது.. இன்பம் என்பது தலைமுறைக்கு தலைமுறை வரையறை மாறிக்கொண்டே போகிறது.. என் தாத்தாவுக்கு இன்பம் என்பது என் தந்தைக்கு இன்பம் இல்லை. என் தந்தைக்கு இன்பம் எனப்பட்டது எனக்கில்லை.. எனக்கு இன்பமெனப் பட்டது என் மகனுக்கில்லை..

இழந்து விட்டது என் எண்ணிக்கொண்டிருக்கும் போது இந்த தலைமுறை பெற்றதையும் பாருங்கள்.. எத்தனை வண்ணப் புத்தகங்கள்.. எத்தனை விளையாட்டுப் பொருள்கள், கம்ப்யூட்டர், சிறுவர்களுக்கான தனித் தொலைக்காட்சி சேனல்கள்.. என்று எத்தனை எத்தனையோ..

நாம் நல்லது என்று நம்புவதை நல்லது என எல்லோருமே நம்ப வேண்டும் என எண்ணக் கூடாது.. காசிருந்தால்தான் கடவுள் தரிசனம் என்று மாறிக் கொண்டிருக்கும் காலத்தில் பக்தியை நம் குழந்தைகள் மிகப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அதனால் அவர்கள் நிறைய இழக்கிறார்கள் எனச் சொல்லுவது தவறென்றே நினைக்கிறேன்.

சில நேரங்களில் என் குழந்தை புராண பிரசங்கங்களை வெளியே சென்று விரும்பிக் கேட்கவில்லையே என்ற வருத்தம் வருவது இல்லை. ஏனென்றால் இன்னும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. பிரசங்கங்களின் சங்கதிகள் மாறிவிட்டன.. ரசிப்புக்குத்தகுந்த மாதிரி நகைச்சுவயாய் சொல்லுகிறேன்.. இளைஞர்களுக்கேற்ற மாதிரி நவீனமாக்குகிறேன்.. விஞ்ஞான விவரங்களை விளக்குகிறேன் பேர்வழி என கடித்து குதறி எடுக்கிறார்கள்.. என்றோ ஒரு முறை நல்ல பிரசங்கங்கள் கிடைக்கின்றன.

தான் முழுதாக நம்புவதை ஒருவன் எடுத்துச் சொல்லுவதற்கும், அரைகுறை நம்பிக்கை உள்ளவன் இட்டுக்கட்டி சொல்வதற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு..பிரசங்கம் செய்வோரின் நம்பிக்கையின்மை பிரசங்கங்களில் தெளிவாய் தெரிய ஆரம்பித்து விட்டது.

மார்கழி விடியற்காலை என்கிறோம். அன்றைய காலங்களில் 9:00 மணிக்கு உறங்கச் சென்றுவிடுவோம்.. இன்றோ 9:00 மணிக்குத்தான் குடும்பத்தார் முழுமையாக ஒன்றுகூடவே முடிகிறது. என் மகனை 9:00 மணிக்கு உறங்க வைக்க முடியாத நான் அவன் 4:00 மணிக்கு எழ வேண்டும் என எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. தொலை தொடர்பு அதிகரித்து விட்டதால் புராண இதிகாச கதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தங்களும், வேறுபாடுகளும் தெள்ளத்தெளிவாக தெரிய ஆரம்பித்து சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெரியவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் முழிக்கும் காலம் வந்து விட்டிருக்கிறது. இதனாலேயே பெரியவர்களும் சிறுவர்களுக்கு நல்ல சுவை மிகுந்த பாடல்கள், இலக்கியங்கள் இவற்றை சொல்லத் தயங்குகின்றனர்.. பெற்றோருக்கோ பணக்கவலை..

நாம் இழந்தது நம் குழந்தைகள் இழப்பதை விட மிக அதிகம்..

gragavan
08-10-2006, 03:02 PM
நாம் பெற்ற இன்பம் இந்த தலைமுறையும் இனி வரும் தலைமுறைகளும் பெறப்போவதே இல்லை.

சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெரியவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் முழிக்கும் காலம் வந்து விட்டிருக்கிறது. இதனாலேயே பெரியவர்களும் சிறுவர்களுக்கு நல்ல சுவை மிகுந்த பாடல்கள், இலக்கியங்கள் இவற்றை சொல்லத் தயங்குகின்றனர்.. பெற்றொருக்கோ பணக்கவலை..

நாம் இழந்தது நம் குழந்தைகள் இழப்பதை விட மிக அதிகம்.. முழுக்க முழுக்க ஒத்துக் கொள்கிறேன். சரியான கருத்து.

பென்ஸ்
08-10-2006, 07:02 PM
:D :D :D

ஹிஹி ஹி..ஹ ஹ ஹா...

ஐயோ ஐயோ... நான் ஒன்னும் சொல்லலப்பா..!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

:D :D :D

ஓவியா
08-11-2006, 07:58 PM
ஓவியா உங்களின் பதிவு மார்கழி மாதத்திற்க்காய் காத்திருக்கும் கிராமத்து வாழ்க்கையை நினைவுட்டுகிறது.

நம் வீட்டு கோலத்துடன் நின்றுவிடுவதில்லை அந்த தெரு முழுவதும் ஒரு சுற்று சுற்றி யார் வீட்டு கோலம் அழகாய் இருக்கிறது என்ற ஆராய்ச்சியை முடித்து தான் வீடு வந்து சேர்வது..

ம்ம்ம்.. அது ஒரு அழகிய நிலா காலாம்.தேடினாலும் கிடைக்காது.

நன்றி மீரா...

எங்க நாட்டில், இன்னும் ஒரு சில வீட்டில் வயதான பட்டிங்க தான் கோலம் போடறாங்க..
கேட்டா வீட்டிலுல்ல வயது பெண்களுக்கு கோலம் போட தெரியாதாம்......
இது எப்படி இருக்கு

ஓவியா
08-11-2006, 08:03 PM
மார்கழி என்றாலே சிறுவயதில் தூத்துக்குடியில் அனுபவித்த மார்கழிதான் நினைவுக்கு வரும். சிற்றஞ் சிறுகாலே எழுந்து ஊராரோடு தெருவில் கூட்டமாய்ப் பாடி நடந்து வீடு வீடாகச் சென்று காப்பி குடித்து விட்டு அப்படியே பெருமாள் கோயிலுக்குள் நுழைந்தால் பெண்கள் எல்லாரும் திருப்பாவை பாடி முடித்திருப்பார்கள். தீப ஆராதனை முடிந்ததும் வெண்பொங்கலோ, ததியோன்னமோ, புளியோதரையோ, எலுமிச்சை சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ கையில் விழுகையில் வீட்டிற்குச் செல்லும் முன்னமே முடித்திடும் உத்வேகம். அடடா! மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய் இருந்தது அந்த பொழுதுதான்.

ஆமாம் ராகவன்
எங்க தாத்தாவும் இதெல்லாம் சொல்லிருக்கார்.....
கூட்டமாய்ப் பாடி நடந்து வீடு வீடாகச்......சென்று........

ராகவன்
ததியோன்னமோ, அப்படினா என்ன உணவு????????

ஓவியா
08-11-2006, 08:38 PM
நாம் பெற்ற இன்பம் இந்த தலைமுறையும் இனி வரும் தலைமுறைகளும் பெறப்போவதே இல்லை.

இந்தக் கருத்துதான் இடிக்கிறது.. இன்பம் என்பது தலைமுறைக்கு தலைமுறை வரையறை மாறிக்கொண்டே போகிறது.. என் தாத்தாவுக்கு இன்பம் என்பது என் தந்தைக்கு இன்பம் இல்லை. என் தந்தைக்கு இன்பம் எனப்பட்டது எனக்கில்லை.. எனக்கு இன்பமெனப் பட்டது என் மகனுக்கில்லை..

இழந்து விட்டது என் எண்ணிக்கொண்டிருக்கும் போது இந்த தலைமுறை பெற்றதையும் பாருங்கள்.. எத்தனை வண்ணப் புத்தகங்கள்.. எத்தனை விளையாட்டுப் பொருள்கள், கம்ப்யூட்டர், சிறுவர்களுக்கான தனித் தொலைக்காட்சி சேனல்கள்.. என்று எத்தனை எத்தனையோ..

நாம் நல்லது என்று நம்புவதை நல்லது என எல்லோருமே நம்ப வேண்டும் என எண்ணக் கூடாது.. காசிருந்தால்தான் கடவுள் தரிசனம் என்று மாறிக் கொண்டிருக்கும் காலத்தில் பக்தியை நம் குழந்தைகள் மிகப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அதனால் அவர்கள் நிறைய இழக்கிறார்கள் எனச் சொல்லுவது தவறென்றே நினைக்கிறேன்.

சில நேரங்களில் என் குழந்தை புராண பிரசங்கங்களை வெளியே சென்று விரும்பிக் கேட்கவில்லையே என்ற வருத்தம் வருவது இல்லை. ஏனென்றால் இன்னும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. பிரசங்கங்களின் சங்கதிகள் மாறிவிட்டன.. ரசிப்புக்குத்தகுந்த மாதிரி நகைச்சுவயாய் சொல்லுகிறேன்.. இளைஞர்களுக்கேற்ற மாதிரி நவீனமாக்குகிறேன்.. விஞ்ஞான விவரங்களை விளக்குகிறேன் பேர்வழி என கடித்து குதறி எடுக்கிறார்கள்.. என்றோ ஒரு முறை நல்ல பிரசங்கங்கள் கிடைக்கின்றன.

தான் முழுதாக நம்புவதை ஒருவன் எடுத்துச் சொல்லுவதற்கும், அரைகுறை நம்பிக்கை உள்ளவன் இட்டுக்கட்டி சொல்வதற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு..பிரசங்கம் செய்வோரின் நம்பிக்கையின்மை பிரசங்கங்களில் தெளிவாய் தெரிய ஆரம்பித்து விட்டது.

மார்கழி விடியற்காலை என்கிறோம். அன்றைய காலங்களில் 9:00 மணிக்கு உறங்கச் சென்றுவிடுவோம்.. இன்றோ 9:00 மணிக்குத்தான் குடும்பத்தார் முழுமையாக ஒன்றுகூடவே முடிகிறது. என் மகனை 9:00 மணிக்கு உறங்க வைக்க முடியாத நான் அவன் 4:00 மணிக்கு எழ வேண்டும் என எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. தொலை தொடர்பு அதிகரித்து விட்டதால் புராண இதிகாச கதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தங்களும், வேறுபாடுகளும் தெள்ளத்தெளிவாக தெரிய ஆரம்பித்து சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெரியவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் முழிக்கும் காலம் வந்து விட்டிருக்கிறது. இதனாலேயே பெரியவர்களும் சிறுவர்களுக்கு நல்ல சுவை மிகுந்த பாடல்கள், இலக்கியங்கள் இவற்றை சொல்லத் தயங்குகின்றனர்.. பெற்றோருக்கோ பணக்கவலை..

நாம் இழந்தது நம் குழந்தைகள் இழப்பதை விட மிக அதிகம்..

அருமையான பினூட்டம்,
பல நல்ல கருத்துக்கள் அடங்கியுள்ளன...

ஆனாலும் அண்ணா,
வண்ணப் புத்தகங்கள்..
விளையாட்டுப் பொருள்கள், கம்ப்யூட்டர்,
சிறுவர்களுக்கான தனித் தொலைக்காட்சி சேனல்கள்..
என்று எத்தனை எத்தனையோ......

இதெல்லாம் ஆண்மீக தேவையை எப்படி பூர்த்தி செய்யும்!!!??????

ஓவியா
08-11-2006, 08:41 PM
:D :D :D

ஹிஹி ஹி..ஹ ஹ ஹா...

ஐயோ ஐயோ... நான் ஒன்னும் சொல்லலப்பா..!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

:D :D :D

:D :D :D
ஏன் இவ்வலவு பயம்

அருனீத் வரமாட்டான்....
சும்மா வந்ததை வைத்து ஒரு பினூட்டம் போடுங்க

pradeepkt
09-11-2006, 03:09 AM
ஆமாம் ராகவன்
எங்க தாத்தாவும் இதெல்லாம் சொல்லிருக்கார்.....
கூட்டமாய்ப் பாடி நடந்து வீடு வீடாகச்......சென்று........

ராகவன்
ததியோன்னமோ, அப்படினா என்ன உணவு????????
அட, நம்ம தயிர் சாதம்தான்.. ததியன்னம்... ராகவன் ஜெர்மானிய மொழியில் (அதான் ஆரியர்கள் எல்லாம் அங்க இருந்துதான் வந்தாங்களாமே... :D ) சொல்லிருக்காரு.. நம்ம வூட்ல தத்தின்னு திட்டுறதுக்குக் கூட தயிர் உதவும் :D

pradeepkt
09-11-2006, 03:10 AM
அதுவும் அந்தத் தயிர் சாதத்துக்கென்று ஒரு சுவை எங்கிருந்துதான் வருமோ??? அடடா அடடா...

பென்ஸ்
09-11-2006, 07:31 AM
எல்லோரும் தின்னுறதை பத்தி பேசுறதிலையே குறியா இருங்க....
சரி சரி... போயி சாப்பிட்டு வந்து7 மீதியை பேசுறென்...

ஓவியா
09-11-2006, 05:14 PM
அதுவும் அந்தத் தயிர் சாதத்துக்கென்று ஒரு சுவை எங்கிருந்துதான் வருமோ??? அடடா அடடா...

நன்றி பிரதீப்

சரியான ருசிதான்...எனக்குதான் ஆகாது...

எங்க விட்டில் .......தயிர் சாதத்துக்கென்று ஒரு புனை பெயர் உண்டு......சொர்க்கம்

யாரவது என்ன சமயல்னு கேட்டா......சொர்க்கம்னு சொல்லிடுவோம்......பேந்த பேந்த விழிப்பாங்க.....:D :D :D

ஓவியா
28-04-2007, 08:14 PM
எல்லோரும் தின்னுறதை பத்தி பேசுறதிலையே குறியா இருங்க....
சரி சரி... போயி சாப்பிட்டு வந்து7 மீதியை பேசுறென்...

பெஞ்சு
சாப்பிட்டு வந்தாச்சா???

மீதியை பேச இன்னும் நேரம் வேண்டுமா???

தென்னாட்டு சிங்கம்
31-01-2009, 02:21 AM
ஓவியாவின் சில மணி துளிகள் நிகழ்வுகளை கவிதையாய் தொடுத்து சுவைக்க வைத்து விட்டார்..

தாமரை நண்பரின் கூற்றையும் யோசித்தால் சரியென்றே படுகிறது..

ஓவியா
04-06-2009, 01:48 AM
ஓவியாவின் சில மணி துளிகள் நிகழ்வுகளை கவிதையாய் தொடுத்து சுவைக்க வைத்து விட்டார்..

தாமரை நண்பரின் கூற்றையும் யோசித்தால் சரியென்றே படுகிறது..

மிக்க நன்றி தென்னாட்டு சிங்கம் அவர்களே.

இது தமிழே சரியாக தெரியாமல் ச்சும்மா வெட்டியா உலா வந்த ஆரம்பகாலத்தில் எழுதியது. :)