PDA

View Full Version : சலனம்

ப்ரியன்
05-10-2006, 12:50 PM
மொட்டை மாடி
கலனிலிருந்து தட்டிவிட்டேன்;
சாக்கடையில் விழுந்து
பிரகாசித்துக் கொண்டிருந்தது
இரவெல்லாம் நிலவு
யாதுமொரு சலனமில்லாமல்!

- ப்ரியன்.

தாமரை
05-10-2006, 01:19 PM
மொட்டை மாடி
கலனிலிருந்து தட்டிவிட்டேன்;
சாக்கடையில் விழுந்து
பிரகாசித்துக் கொண்டிருந்தது
இரவெல்லாம் நிலவு
யாதுமொரு சலனமில்லாமல்!

- ப்ரியன்.

சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கலாம்...
சுத்தம் செய்யச் சொல்லுங்கள்..
இல்லாவிட்டால்,
டெங்கு மலேரியா, சிக் குன் குனியாவென
சில வியாதிகள் தட்டி விட
வீட்டு நிலவுகள்
சலனமின்றி போகக் கூடும்

(சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருந்தால் நிலாவின் சலனம் தெரியும்..
சாக்கடை தேங்கியதால் நிலவில் சலனமில்லை..)

அறிஞர்
05-10-2006, 01:21 PM
மீண்டும் ப்ரியனை இங்கு காண்பதில் மகிழ்ச்சி....

செல்வனின் நக்கலான கருத்தும் அருமை....

பென்ஸ்
05-10-2006, 05:23 PM
ப்ரியன்...
அதுதானே... மன்றம் அப்பப்பவாவது வரனும்...

கேள்வி:
நிழலாய் இருந்ததால்
நிலையாய்..
நிஜமாயிருந்தால்...????

உங்க கவிதையை நாங்க கஷ்டபட்டு படித்து புரியனும், எங்க கேள்வியை மட்டும் ஈசியா புரியவிடக்கூடாதுன்னுதான்... :-)

தாமரை
06-10-2006, 04:17 AM

தானே கறைபட்ட சந்திரன்
தன் நிழல் கறை பட்டால்
சலனப் பட்டு விடுமா என்ன?
சந்திரன்
சாக்கடையில் விழுந்திருந்தால்
சந்தோஷப் பட்டிருக்கக் கூடும்
அப்போதாவது
அதன் மீது
உயிர்கள் ஊறுமே!
நிஜம் சலனப்பட்டல்
நிழல் சலனப்படும்
நிஜம் சலனப் படாவிட்டாலும்
நிழல் சலனப்படும்
பட்ட இடத்தின் பயனாக

மதி
06-10-2006, 05:38 AM
ஐயா..செல்வரே...!
இப்படியெல்லாம் எழுதினா பென்ஸுக்கு புரிஞ்சிடுமாக்கும்...!
ஆகமொத்தம்..சலனங்கள் நிஜத்தைக்காட்டிலும் நிழலிலேயே அதிகமிருக்குமென்கிறீர்..! ஹ்ம்..!

தாமரை
06-10-2006, 06:22 AM
ஐயா..செல்வரே...!
இப்படியெல்லாம் எழுதினா பென்ஸுக்கு புரிஞ்சிடுமாக்கும்...!
ஆகமொத்தம்..சலனங்கள் நிஜத்தைக்காட்டிலும் நிழலிலேயே அதிகமிருக்குமென்கிறீர்..! ஹ்ம்..!
அப்படியும் இல்லை
ஆவேசாம சுத்திகிட்டிருக்கிற
ஆதவனின் நிழல்
அலுங்காம குலுங்காம
தெரியறதில்லையா..

மதி
06-10-2006, 06:57 AM
அப்படியும் இல்லை
ஆவேசாம சுத்திகிட்டிருக்கிற
ஆதவனின் நிழல்
அலுங்காம குலுங்காம
தெரியறதில்லையா..
ஆதவனால நிழலா..
இல்லை அவனுக்கே நிழலா..?

தாமரை
06-10-2006, 07:03 AM
ஆதவனால நிழலா..
இல்லை அவனுக்கே நிழலா..?

நிழல் என்பது பிம்பம் இங்கு...

ஓவியா
06-10-2006, 04:23 PM
அப்படியும் இல்லை
ஆவேசாம சுத்திகிட்டிருக்கிற
ஆதவனின் நிழல்
அலுங்காம குலுங்காம
தெரியறதில்லையா..

ஆதவனின் தீ பொரி ஆடாமல் அசயாமல் எரிவதில்லையே
ஆனால் அதன் பிம்பம் அசைவற்ற நிழலாய்.......

அழகான குட்டி கவிதை,

கண்மணி
07-10-2006, 05:27 PM
ஒண்ணு மட்டும் சொல்லுங்களேன்..
தெளிந்த நீரிலும் சாக்கடையிலும்
சலனமில்லா சந்திர பிம்பம்
என்றார் ஒருவர்..
நிஜத்தின் அளவு நிழல் சலனப் படாது என்றார் இன்னொருவர்
நிழலின் சலனம் நிஜத்தின் சலனத்தையும், நிழல் படு பொருளின் சலனத்தையும் பொறுத்தது என்றார் சமாளித்து..
நிஜத்தின் சலனம் நிழலில் தெரியாது என்று இன்னொரு முறை சொல்கிறார்..
சலனத்தைப் பற்றி இவ்வளவு சலனம் ஏன்?

free3mano
08-10-2006, 04:36 AM
னிலவும் நிஜமில்லை,னேஎயும் நிஜமில்லை
னிலவுக்கு பிரவிஉன்டு,உனகொ எதுமில்லை
இர்ருக்கும் கலம்வரை என்னவென்ட்ரு தெரியமல்
புதைக்கும் கலம் வன்தல் புட்தி தெலிழெரது

தாமரை
08-10-2006, 02:24 PM
ஒண்ணு மட்டும் சொல்லுங்களேன்..
தெளிந்த நீரிலும் சாக்கடையிலும்
சலனமில்லா சந்திர பிம்பம்
என்றார் ஒருவர்..
நிஜத்தின் அளவு நிழல் சலனப் படாது என்றார் இன்னொருவர்
நிழலின் சலனம் நிஜத்தின் சலனத்தையும், நிழல் படு பொருளின் சலனத்தையும் பொறுத்தது என்றார் சமாளித்து..
நிஜத்தின் சலனம் நிழலில் தெரியாது என்று இன்னொரு முறை சொல்கிறார்..
சலனத்தைப் பற்றி இவ்வளவு சலனம் ஏன்?
சொல்லப் போனால் சலனமில்லாத்து எதுவுமே இல்லை.. சலனமில்லாதது எனக் கருதப்படும் சவத்திலும் நெளியும் புழுக்கள் உண்டு.. அணுவுக்குள் உள்ள எலக்ட்ரான்கள் கருவை சுற்றி வருவதே சலனம் தானே.. அந்த எலக்ட்ரான்கள் அடுத்த அணுவின் வசம் காதல் வயப்பட்டு மின்சாரம் பாய்வதும் சலனம் தானே.. இன்னும் அதிகம் அந்த அணு சலனப்பட்டு கரு பிளந்தாலோ...!!!

கண்களறியும் சலனம் வேறு.. மனமறியும் சலனம் வேறு.. உண்மையான சலனம் வேறு..

ஓவியா
08-10-2006, 02:50 PM
சொல்லப் போனால் சலனமில்லாத்து எதுவுமே இல்லை.. சலனமில்லாதது எனக் கருதப்படும் சவதிலும் நெளியும் புழுக்கள் உண்டு.. அணுவுக்குள் உள்ள எலக்ட்ரான்கள் கருவை சுற்றி வருவதே சலனம் தானே.. அந்த எலக்ட்ரான்கள் அடுத்த அணுவின் வசம் காதல் வயப்பட்டு மின்சாரம் பாய்வதும் சலனம் தானே.. இன்னும் அதிகம் அந்த அணு சலனப்பட்டு கரு பிளந்தாலோ...!!!

கண்களறியும் சலனம் வேறு.. மனமறியும் சலனம் வேறு.. உண்மையான சலனம் வேறு..

செல்வன் அண்ணா,

விளங்கியது போல் ஒரு விளங்காத வரிகள்,
நேரம் இருப்பின் கொஞ்சம் விரிவாக விளக்கி எழுதவும்.

தாமரை
08-10-2006, 03:28 PM
கண்களறியும் சலனம் வேறு.. மனமறியும் சலனம் வேறு.. உண்மையான சலனம் வேறு..

நகரும் மேகங்களுக்கு மத்தியில் நிலவு நகர்வதாய் தெரிவது கண்களறியும் சலனம். மேகத்தின் உருவம் பெரிதாய் தெரிவதால் பெரும்பொருள் சிறுபொருள் ஒப்பீட்டிலே நிலவு நகர்வதாகத் தெரிகிறது.. கருமை பர்ந்து எல்லைகள் மழுங்கடிக்கப்பட்டு உங்களுக்கு தெரிந்த இருபொருட்கள் நிலவும் மேகமும். மேகம் பெரிதாய் கருமையாய் எல்லையற்றதாய் தோன்றும் பொழுது நிலவு நகர்வதாய் தோன்றுகிறது..

விடியற்காலைச் சூரியனைக் கண்டிருக்கிறீகளா. அந்த ஆரஞ்சுப் பந்து சுழலும் வேகமும்.. மேலே வரும் ஆவேசமும் கண்களுக்கு விருந்து.. மாலைச் சூரியனின் சுழற்சியில் அந்த ஆவேசம் தெரியாது.. வேகம் தெரியாது.. அதுவும் ஆரஞ்சுப் பந்துதான்.. அதுவும் அதே வேகத்தில்தான் சுழல்கிறது இதன் காரணம் மனம்தான்.. இது மனமறியும் சலனம்..

உண்மையாய் பார்க்கப் போனால் சலனமற்றது என எதுவுமே இல்லை.அசையாத பொருள் என்று ஒன்றுமே இல்லை. பார்க்கும் கண்களும் அசைகின்றன. ஒளிகூட சலனம் தான்.. இப்படி இருப்பதினால் சலனம் என்பதையே மறுவரையறை செய்ய வேண்டியதாகிறது.. அதாவது ஒரு ஒழுங்குமுறையில் அசையும் பொருட்கள் அந்த ஒழுங்கு தவறும் போது அவற்றை சலனம் என வரையறை செய்தோமானால்.. மாற்றம் என்பது சலனம் ஆகிவிடுகிறது.. அப்படியே பார்த்தாலும் மாற்றத்தை தவிர மாறாதது எதுவுமில்லை.. எனவே சலனமில்லாதது சலனம் மட்டுமே!:eek: :eek: :eek:

கண்மணி
08-10-2006, 04:19 PM
சபாஷ்! சலனமே இல்லாம சலனம் தலைப்பை ஹைஜாக் பண்ணிட்டீங்க

மதி
09-10-2006, 02:36 AM
செல்வரே..!
சலனத்தை பத்தி தெளிவான விளக்கங்கள்...!
ஹ்ம்ம்...சலனமில்லாமல் யார் தான் இருக்கார்..?

gragavan
09-10-2006, 07:02 AM
சலனமில்லாதது ஒன்றில்லை. கண்முன்னே அமைதியாக இருக்கும் மண்ணும் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. அதுதான் நிலவுக்கும் கதிருக்கும் பொருந்தும். சலனமில்லாமல் இருப்பது என்பது வேறொரு சலனத்தோடு ஒன்றி அதே சலனத்தோடு இருப்பதுதான். அதுதான் தவம். அதுவும் அவமுடையார்க்கே ஆகும். இறைவனின் நிலையோடு ஒன்றி இருப்பது தவம். நமக்குச் சலனமற்றுத் தோன்றினாலும் அங்கு புவனமெற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரம்.

ஓவியா
09-10-2006, 05:58 PM
கண்களறியும் சலனம் வேறு.. மனமறியும் சலனம் வேறு.. உண்மையான சலனம் வேறு..

நகரும் மேகங்களுக்கு மத்தியில் நிலவு நகர்வதாய் தெரிவது கண்களறியும் சலனம். மேகத்தின் உருவம் பெரிதாய் தெரிவதால் பெரும்பொருள் சிறுபொருள் ஒப்பீட்டிலே நிலவு நகர்வதாகத் தெரிகிறது.. கருமை பர்ந்து எல்லைகள் மழுங்கடிக்கப்பட்டு உங்களுக்கு தெரிந்த இருபொருட்கள் நிலவும் மேகமும். மேகம் பெரிதாய் கருமையாய் எல்லையற்றதாய் தோன்றும் பொழுது நிலவு நகர்வதாய் தோன்றுகிறது..

விடியற்காலைச் சூரியனைக் கண்டிருக்கிறீகளா. அந்த ஆரஞ்சுப் பந்து சுழலும் வேகமும்.. மேலே வரும் ஆவேசமும் கண்களுக்கு விருந்து.. மாலைச் சூரியனின் சுழற்சியில் அந்த ஆவேசம் தெரியாது.. வேகம் தெரியாது.. அதுவும் ஆரஞ்சுப் பந்துதான்.. அதுவும் அதே வேகத்தில்தான் சுழல்கிறது இதன் காரணம் மனம்தான்.. இது மனமறியும் சலனம்..

உண்மையாய் பார்க்கப் போனால் சலனமற்றது என எதுவுமே இல்லை.அசையாத பொருள் என்று ஒன்றுமே இல்லை. பார்க்கும் கண்களும் அசைகின்றன. ஒளிகூட சலனம் தான்.. இப்படி இருப்பதினால் சலனம் என்பதையே மறுவரையறை செய்ய வேண்டியதாகிறது.. அதாவது ஒரு ஒழுங்குமுறையில் அசையும் பொருட்கள் அந்த ஒழுங்கு தவறும் போது அவற்றை சலனம் என வரையறை செய்தோமானால்.. மாற்றம் என்பது சலனம் ஆகிவிடுகிறது.. அப்படியே பார்த்தாலும் மாற்றத்தை தவிர மாறாதது எதுவுமில்லை.. எனவே சலனமில்லாதது சலனம் மட்டுமே!:eek: :eek: :eek:

அண்ணா,
அற்ப்புதமான விளக்கம் அருமையான உதாரணங்கள்.

நன்றி.

ஓவியா
09-10-2006, 06:17 PM
சலனமில்லாதது ஒன்றில்லை. கண்முன்னே அமைதியாக இருக்கும் மண்ணும் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. அதுதான் நிலவுக்கும் கதிருக்கும் பொருந்தும்.

சலனமில்லாமல் இருப்பது என்பது வேறொரு சலனத்தோடு ஒன்றி அதே சலனத்தோடு இருப்பதுதான்.

அதுதான் தவம். அதுவும் அவமுடையார்க்கே ஆகும். இறைவனின் நிலையோடு ஒன்றி இருப்பது தவம்.

நமக்குச் சலனமற்றுத் தோன்றினாலும் அங்கு புவனமெற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரம்.

உண்மை...

நன்றி ராகவன்....