PDA

View Full Version : முதியோர் இல்லம்meera
05-10-2006, 05:39 AM
தளர்ந்த நடை
தெளிவில்லாத மனம்
ஆயிரம் ஆயிரம் சிந்தனை
எங்கே போவது,யாரிடம் போவது
ஏதும் அறியாமல் கால்போனபோக்கில்

அதோ கண்ணுக்கு தெரிகிறது-ஒரு
விளம்பர பலகை
பதைக்கிறது மனம்
சோர்வுற்ற கால்கள் எடுக்கின்றன வேகம்

கடவுளிடம் வேண்டுதல்-நமக்கு
உபயோகமாய் இருக்க வேண்டுமே என்று..
நெருங்கி பார்த்தபோது

மெலிந்த உடலில்
வேதனை முகத்தில்
சிறிய புன்னகை-காரணம்
அது
முதியோர் இல்லம்.

நாம் தான் இவ்வுலகில்
இப்படி நடுவீதியில்
நாதியின்றி நிற்கிறோமா?
கேள்வி கேட்டது மனம்.

எதையும் பொருட்ப்படுத்தாமல்
உள்ளே இழுத்துச்சென்றன கால்கள்

உள்ளே சென்றபோது தான் தெரிந்தது
நம்மைப்போல் பலரும்

சித்திரமாய் பட்ஜெட் போட்டு
சிக்கனமாய் குடும்பம் நடத்தி
சேமித்த பணத்தை எல்லாம்
பிள்ளைகளுக்கு செலவளித்து
பாசத்தை மட்டுமே தனக்கென சேமித்து
ஜாதியும்,மதமும் பார்க்காமல்
சாஸ்திரம்,சம்பிரதாயத்தை சட்டைசெய்யாமல்
உற்றாரும்,உறவினரையும் தூக்கி எரிந்து
உன் சந்தோஷம் என் சந்தோஷம் என நினைத்து
நீ விரும்பிய பெண்ணை மணமுடித்து வைத்து
இப்படி
ஆலமரத்தின் வேரும் விழுதுமாய்
பாசத்தையும்,படிப்பையும் ஊட்டி வளர்த்தும்-நீ
வேரை விட்டு விட்டு விழுதை மட்டும்
பற்றிக்கொண்டது ஏன்?
இதயத்தில் கனம்
இயலாமையில் மனம்

நாடி வந்தோம் முதியோர் இல்லம்-அங்கே
நண்பர்கள் பலர் கிடைத்த சந்தோசம்
குறைந்து வரும் நாட்களை
கூடி இருந்து குதூகலமாய் கழிக்க
ஆயத்தமாகிறது மனம்....

இனியவன்
05-10-2006, 06:17 AM
யதார்த்தம் சொல்லும் நல்ல பதிவு.
நன்றி மீரா.

தாமரை
05-10-2006, 02:10 PM
நாடி வந்தோம் முதியோர் இல்லம்-அங்கே
நண்பர்கள் பலர் கிடைத்த சந்தோசம்
குறைந்து வரும் நாட்களை
கூடி இருந்து குதூகலமாய் கழிக்க
ஆயத்தமாகிறது மனம்....
ஏன் முதியோர் இல்லத்தை தேடிச் செல்லவேண்டும்..
நாமே ஒன்று நடத்த ஆரம்பித்து விடலாமே
உடனடியாக

ஓவியா
05-10-2006, 04:05 PM
ஏன் முதியோர் இல்லத்தை தேடிச் செல்லவேண்டும்...
நாமே ஒன்று நடத்த ஆரம்பித்து விடலாமே
உடனடியாக

மன்னிக்கவும்...
அண்ணா கொஞ்ச நாளா உங்க பதிவெல்லாம் இப்படிதான்
எசக்கு பிசக்க இருக்கு ...என்னா நடந்துச்சு....யாரு மேலே கோவம்......

இந்த கவிதையை ஆமோததித்து பின்னூட்டம் போடுங்கண்ணா....
உங்கள் கருத்துக்கள் பலரை கவரும்.....
உங்கள் படைப்புகள் படிக்க படு ஜோரா இருக்கும்......:D

தங்கள் பின்னூட்டத்தை காண நானும் மீராவும் ஆவலாய் உள்ளோம்...

நன்றி

ஓவியா
05-10-2006, 04:12 PM
ஆலமரத்தின் வேரும் விழுதுமாய்
பாசத்தையும்,படிப்பையும் ஊட்டி வளர்த்தும்-நீ
வேரை விட்டு விட்டு விழுதை மட்டும்
பற்றிக்கொண்டது ஏன்?

சாட்டையடி கேள்வி....

மீரா

உங்கள் ஓவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கோனத்தில் அருமாய் அமைகின்றனா...

வாழ்த்துக்கள்

தாமரை
05-10-2006, 04:57 PM
மன்னிக்கவும்...
அண்ணா கொஞ்ச நாளா உங்க பதிவெல்லாம் இப்படிதான்
எசக்கு பிசக்க இருக்கு ...என்னா நடந்துச்சு....யாரு மேலே கோவம்......

இந்த கவிதையை ஆமோததித்து பின்னூட்டம் போடுங்கண்ணா....
உங்கள் கருத்துக்கள் பலரை கவரும்.....
உங்கள் படைப்புகள் படிக்க படு ஜோரா இருக்கும்......:D

தங்கள் பின்னூட்டத்தை காண நானும் மீராவும் ஆவலாய் உள்ளோம்...

நன்றி
பதில் கவிதைகள்!
ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு மறு பார்வை உண்டு.. இந்தக் கோணத்தினை காட்ட முயல்வதுதான் என் பதில் கவிதைகள் முயற்சி...
எடுத்துக்காட்டு..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294

காதலி காதலனின் கன்னத்தில் இட்ட முத்தம் எத்தனை விதமான கேள்விகளை எழுப்பி பதில்களை கொண்டுவந்திருக்கின்றன என பாருங்கள்..

மீராவின் முதியோர் இல்லக் கவிதையைப் பொருத்தவரை அந்தத் பெற்றவரின் வலி என்னுள் ஒரு பயமாய் எதிர்காலத்தை யோசிக்க வைத்தது.. நாளை நானும்.. என்ற எண்ணம் எழுகிறது.. அதனால் எனக்கு நானே சமாதானப் படுத்திக் கொள்ளும் விதமாக..

ஏன் முதியோர் இல்லத்தை தேடிச் செல்லவேண்டும்..
நாமே ஒன்று நடத்த ஆரம்பித்து விடலாமே
உடனடியாக

என்று சுயசமாதானமாய் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்..

மற்றவருக்குச் சொல்வதாய் இருந்தால் நீங்களே எனச் சொல்லி இருக்கலாமே..

கவிதைகளைப் படிக்கும் பொழுது வார்த்தைகளின் அர்த்தம் மட்டுமல்ல.. உணர்வுகளும் மனதை பாதிக்கின்றது.. சில பல வயோதிகர்கள் சொந்தப் பிள்ளைகளால் அனாதையாக விடப்படுவது.. சொத்துக்கள் பிடுங்கப்பட்டு துரத்தப்படுவதும் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. என் வீட்டுச் சொந்தக்காரரே சமீபத்தில் தன் தாய் தந்தையரை சொந்த ஊருக்கு விரட்டி விட்டார்..

நான் நக்கலாய் கிண்டலடிப்பதாய் எண்ண வேண்டாம். என் பதில் கவிதைகளுக்குப் பின்னால் விமர்சனம் இல்லை. இது நல்ல கவிதை இது கெட்ட கவிதை என்ற எண்ணம் இல்லை. உங்கள் கவிதைகள் தூண்டி விட்ட உணர்வுகளிம் மிச்சம்தான் என் பதில்கவிதை..

இது போதும் ஓவியா இன்னும் விளக்கம் வேண்டுமா?

பென்ஸ்
05-10-2006, 05:15 PM
ஓவி...
செல்வனின் இந்த பதில் கவிதைகளுக்கு என்னுடைய வரவேற்ப்புகள் எப்போதும் இருக்கும்....
பதில் கவிதைகளில் எப்போதும், மற்று சிந்தனை, வேறு கோணத்தில் பார்ப்பதாய் சொல்லுவது என்று பலவாறக எழுதலாம்... அந்த வரிசையில்... எடக்கு முடக்கா எழுதினாலும் எனக்கு அவரோட சிந்தனை பிடிக்கும்....
(என்னுடைய விமர்சனத்துக்கு கூட பதில் அடி வாங்கியது உண்டு)...

இது ஆரோக்கியமானதே... எனக்கு அவரை நன்றாக தெரியும் என்பதால்,...
ஆனால் மீரா மன்றத்தில் புதியவர், வளர்ந்துவரும் நல்ல எழுத்தாளர் என்பதை நாம் கண்டிப்பாக ஒத்து கொள்ள வேண்டும்... செல்வன் நீங்களும் தான்.... இந்த நிலையில் அவருக்கு அவ்வப்போதாவது பாரட்டு பதில் கவிதைகளும் கொடுக்கலாமே.. ( என்ன நான் சொல்லுறது ஓவி)...

செல்வன்.. மீரா, நான் இப்படி போன்ற சின்ன பிள்ளைகளை மிரட்டுவதே உம்மா வேலையா போச்சு.... இதேல்லாம் ரொம்ப ஓவரு....:D :D :D

ஓவியா
05-10-2006, 05:53 PM

இது இதுதான்....அண்ணானா அண்ணாதான்...நன்றி

சொடுக்கி அந்த சுட்டி முழுவதும் படித்தேன்......பல கரங்களின் குவியல்கள்...அழகான தித்திப்பான கவிதைகள்...தூள்

ஓவியா
05-10-2006, 05:54 PM
ஓவி...
செல்வனின் இந்த பதில் கவிதைகளுக்கு என்னுடைய வரவேற்ப்புகள் எப்போதும் இருக்கும்....
பதில் கவிதைகளில் எப்போதும், மற்று சிந்தனை, வேறு கோணத்தில் பார்ப்பதாய் சொல்லுவது என்று பலவாறக எழுதலாம்... அந்த வரிசையில்... எடக்கு முடக்கா எழுதினாலும் எனக்கு அவரோட சிந்தனை பிடிக்கும்....
(என்னுடைய விமர்சனத்துக்கு கூட பதில் அடி வாங்கியது உண்டு)...

இது ஆரோக்கியமானதே... எனக்கு அவரை நன்றாக தெரியும் என்பதால்,...
ஆனால் மீரா மன்றத்தில் புதியவர், வளர்ந்துவரும் நல்ல எழுத்தாளர் என்பதை நாம் கண்டிப்பாக ஒத்து கொள்ள வேண்டும்... செல்வன் நீங்களும் தான்.... இந்த நிலையில் அவருக்கு அவ்வப்போதாவது பாரட்டு பதில் கவிதைகளும் கொடுக்கலாமே.. ( என்ன நான் சொல்லுறது ஓவி)...
செல்வன்.. மீரா, நான் இப்படி போன்ற சின்ன பிள்ளைகளை மிரட்டுவதே உம்மா வேலையா போச்சு.... இதேல்லாம் ரொம்ப ஓவரு....:D :D :D

ஆமாம் சாமி.............:D

மதி
06-10-2006, 03:00 AM
செல்வன்.. மீரா, நான் இப்படி போன்ற சின்ன பிள்ளைகளை மிரட்டுவதே உம்மா வேலையா போச்சு.... இதேல்லாம் ரொம்ப ஓவரு....:D :D :D

இதான்யா ரொம்ப ஓவரு...நீரு சின்னபுள்ளையா..
அப்புறம் உம்ம கல்யாணத்துக்கு அனிருத்த கூட்டிட்டு வந்துடுவேன்..ஆமாம்..!:D :D

meera
06-10-2006, 05:00 AM
ஏன் முதியோர் இல்லத்தை தேடிச் செல்லவேண்டும்..
நாமே ஒன்று நடத்த ஆரம்பித்து விடலாமே
உடனடியாக
செல்வன் உங்களுக்கு தெரியாதா சிலர் முதியோர் இல்லத்தையும் பணம் சம்பாதிக்கும் தொழிலாக்கிய விஷயம்.அதுவும் நடக்கிறது நாட்டில்.

meera
06-10-2006, 05:28 AM
இத்தனை விளக்கம் போதும் செல்வன்

அந்த சுட்டியை நானும் படித்தேன் அத்தனையும் புதிதாய்,அழகாய், அருமையாய் இருக்கு

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..

meera
06-10-2006, 05:33 AM
செல்வன்.. மீரா, நான் இப்படி போன்ற சின்ன பிள்ளைகளை மிரட்டுவதே உம்மா வேலையா போச்சு.... இதேல்லாம் ரொம்ப ஓவரு....:D :D :D

ஓவியா சீக்கிரமா ஓடி வாங்க இது என்னானு கேட்டு சொல்லுங்க

இங்க யாரு சின்ன பசங்க,யாரு,யாரை மிரட்டுறாங்கனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ஆமா..:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

தாமரை
06-10-2006, 06:36 AM
செல்வன் உங்களுக்கு தெரியாதா சிலர் முதியோர் இல்லத்தையும் பணம் சம்பாதிக்கும் தொழிலாக்கிய விஷயம்.அதுவும் நடக்கிறது நாட்டில்.

கருவறையில் எனைக் கொள்ள
பணம் கொடுக்க வேண்டும் என் தாய்
வரதட்சணை
பிறந்து வெளியே வரவும்
சிசேரியன்..
பாலுக்கு பணம்
வளர வளர
ஸ்கூலுக்குப் பணம்
கல்லூரிக்குப் பணம்
கல்யாணத்துக்கும் பணம்
பிள்ளை பெறவும் பணம்
வளர்க்கவும் பணம்
கடைசியில் தலைசாய்த்து
செத்தாலும்
சுடுகாட்டில்
பொசுக்கி விடப் பணம்
முதியோர் இல்லங்களில் பணம் விளையாடுவது ஆச்சர்யமில்லை..
சொந்த செலவில் சமாதி கட்டிக் கொண்டார் சிலர்..(கி,ஆ.பெ. விசுவனாதன்).
செத்த பின் மகனுக்கு செலவு வேண்டாமென
சொந்த செலவில் முதியோர் இல்லம் கட்டினால்
கொஞ்சம் வாழவும் செய்யலாமே!!!

மதி
06-10-2006, 06:59 AM
இன்று ஊருக்கு கட்டினான்
முதியோர் இல்லம்
நாளை தானும் அங்கு போய்
சேர்வது அறியாமல்..!

meera
06-10-2006, 07:04 AM
இன்று ஊருக்கு கட்டினான்
முதியோர் இல்லம்
நாளை தானும் அங்கு போய்
சேர்வது அறியாமல்..!
உண்மைதான் முக்காலமும் அறிந்து கொள்ள அவன் ஞானியல்லவே.

தாமரை
06-10-2006, 07:08 AM
இன்று ஊருக்கு கட்டினான்
முதியோர் இல்லம்
நாளை தானும் அங்கு போய்
சேர்வது அறியாமல்..!

சேருமிடம் அறிந்ததால்
சோர்வு அடையாமல்
தேடும் வேலையை
மிச்சம் பிடிக்க
தனக்குத்தானே கட்டிகொள்வேன்
என்றுதான் சொன்னேன்
ஆனால்
அங்கிருந்தும் விரட்டப்பட்டால்
என்னாகும் என்று
எனக்குத் தெரியவில்லை

meera
06-10-2006, 07:46 AM
கருவறையில் எனைக் கொள்ள
பணம் கொடுக்க வேண்டும் என் தாய்
வரதட்சணை
பிறந்து வெளியே வரவும்
சிசேரியன்..
பாலுக்கு பணம்
வளர வளர
ஸ்கூலுக்குப் பணம்
கல்லூரிக்குப் பணம்
கல்யாணத்துக்கும் பணம்
பிள்ளை பெறவும் பணம்
வளர்க்கவும் பணம்
கடைசியில் தலைசாய்த்து
செத்தாலும்
சுடுகாட்டில்
பொசுக்கி விடப் பணம்
முதியோர் இல்லங்களில் பணம் விளையாடுவது ஆச்சர்யமில்லை..
சொந்த செலவில் சமாதி கட்டிக் கொண்டார் சிலர்..(கி,ஆ.பெ. விசுவனாதன்).
செத்த பின் மகனுக்கு செலவு வேண்டாமென
சொந்த செலவில் முதியோர் இல்லம் கட்டினால்
கொஞ்சம் வாழவும் செய்யலாமே!!!
பாசத்துக்கும் பணத்துக்கும்
நடக்கும் சண்டைகளில் பல தடவை
ஜெயிப்பது என்னவோ
பணம் தான்.

பணத்தை தேடி ஒடும் போது
மனங்கள் இங்கே மாண்டு போவது
மனிதர்கள் பலருக்கு தெரிவதில்லை
மாற்றுவதற்க்கு நமக்கு வழியும் தெரியவில்லை

செண்பகாகோபாலன்
06-10-2006, 08:37 AM
எதிர் பார்த்து எதிர் பார்த்து ஆசையாசையாய் வளர்த்து இது பிடிக்கும் அது பிடிக்கும் என கொடுத்து, பல நாள் தூங்காமலிருந்து கடைசியில் கைவிடப்பட்டு வழி தெரியாமல் விட்டேத்தியாய் போகும் நிலை, இறைவா இந்த நிலமையில் மரணத்தையே உடனடி பரிசாகத் தா?

ஓவியா
06-10-2006, 05:35 PM
பாசத்துக்கும் பணத்துக்கும்
நடக்கும் சண்டைகளில் பல தடவை
ஜெயிப்பது என்னவோ
பணம் தான்.

பணத்தை தேடி ஒடும் போது
மனங்கள் இங்கே மாண்டு போவது
மனிதர்கள் பலருக்கு தெரிவதில்லை
மாற்றுவதற்க்கு நமக்கு வழியும் தெரியவில்லை

கண்கெட்டபின் சூரிய நமச்காரம் எதர்க்கு
நாமாவது....பெற்ற பொக்கிஷங்களை போற்றி வாழ்வோம்