PDA

View Full Version : ஏக்கம்



meera
04-10-2006, 10:47 AM
பெருகி வரும் முதியோர் இல்லமும்
மூலைக்கு மூலை குழந்தைகள் காப்பகமும்
பெற்றோரை கவனிக்க மனம் இல்லை
குழந்தைகளை கொஞ்ச நேரமில்லை
எதை சாதிக்க
பாசத்தை தொலைத்து
பணத்தை தேடுகிறார்கள்
இவர்கள்..
குழந்தைகளோ காப்பகத்தில்
பெற்றோர்களோ முதியோர் இல்லத்தில்
ஆனால்
அதிர்ஷ்டம் செய்தது
அவர்களின் செல்லபிராணி
எங்கும்,எப்போதும்
அவர்களுடன் செல்ல

இந்த நாய்களின்
அதிர்ஷ்டம் எங்களுக்கு
எப்போது கிடைக்கும்????? :confused: :confused: :confused:

leomohan
04-10-2006, 12:15 PM
பெருகி வரும் முதியோர் இல்லமும்
மூலைக்கு மூலை குழந்தைகள் காப்பகமும்
பெற்றோரை கவனிக்க மனம் இல்லை
குழந்தைகளை கொஞ்ச நேரமில்லை
எதை சாதிக்க
பாசத்தை தொலைத்து
பணத்தை தேடுகிறார்கள்
இவர்கள்..
குழந்தைகளோ காப்பகத்தில்
பெற்றோர்களோ முதியோர் இல்லத்தில்
ஆனால்
அதிர்ஷ்டம் செய்தது
அவர்களின் செல்லபிராணி
எங்கும்,எப்போதும்
அவர்களுடன் செல்ல

இந்த நாய்களின்
அதிர்ஷ்டம் எங்களுக்கு
எப்போது கிடைக்கும்????? :confused: :confused: :confused:

உருக்கமான கவிதை. அசாதாரணமான விஷயத்தை சாதாரணமாக எடுத்து சொல்லிவிட்டீர்கள். ஆம் நாம் ஒரு பெரிய கலாச்சார சீரழிவை கண்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் அநாதை குழந்தைகள் போல அநாதை பெரியவர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அறிஞர்
04-10-2006, 01:31 PM
இந்த நாய்களின்
அதிர்ஷ்டம் எங்களுக்கு
எப்போது கிடைக்கும்????? :confused: :confused: :confused: கலக்கல் மீரா.....

உடனிருக்கும் சொந்தங்களை விட்டு..
ஒட்டி கொண்ட சொந்தத்திற்கு சொகுசு......

நாய் போல பேசாமலிருந்தால்
அனைவருக்கும் சொகுசு கிடைக்குமோ என்னவோ....

ஓவியா
04-10-2006, 04:13 PM
மீரா..

இங்கே நான் அடிக்கடி காணும் ஒரு காட்சி......

அழகான கவிதை

இனியவன்
04-10-2006, 05:23 PM
நாய்களின் பாக்கியம்
பற்றி அழகாய்ச்
சொல்லி விட்டீர்கள் மீரா.
நன்றி.

ஓவியா
04-10-2006, 05:33 PM
நாய்களின் பாக்கியம்
பற்றி அழகாய்ச் சொல்லி விட்டீர்கள் மீரா.
நன்றி.


இனியவன் உங்கள் பிணுட்டத்தை படித்து வாய் விட்டு சிரித்தேவிட்டேன்....

வித்தியசமான கண்ணோட்டம்.....

அப்பட்டமான உண்மைதான் .....

meera
05-10-2006, 04:29 AM
மீரா..

இங்கே நான் அடிக்கடி காணும் ஒரு காட்சி......

அழகான கவிதை
ஓவியா

மேலை நாடுகளின் கலாச்சாரம் இங்கே வேகமாய் பரவி வருவதன் தாக்கம் தான் இந்த கவிதை

ஓவியா
05-10-2006, 05:02 PM
ஓவியா

மேலை நாடுகளின் கலாச்சாரம் இங்கே வேகமாய் பரவி வருவதன் தாக்கம் தான் இந்த கவிதை


ஓ அப்படியா கதை

அப்ப இனியவன் சொல்வதுபோல் அங்கேயும்...

நாய்களுக்கு ஒரு நல்ல காலம் பிறகின்றதா....பேஷ் பேஷ்

தாமரை
05-10-2006, 05:12 PM
அங்கு நாய்களுக்கு நல்ல காலம் பிறந்து நிறைய ஆண்டுகள் ஆகின்றது..

அதற்கும் நல்ல காலம் வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் வரைதான்.. வாலாட்டினால் துப்பாக்கி குண்டுதான்,

மதி
06-10-2006, 03:12 AM
அற்புதமான கருத்து மீரா..!
குடும்ப பாரம் சுமக்கிறேன் பேர்வழி என்று பணம் சம்பாதிக்க ஆரம்பித்து பின் அது தரும் போதையில் குடும்பத்தை கைவிட்டவர் ஏகம்.

நேற்றைய தலைமுறையையும்
நாளைய தலைமுறையையும்
கவனிக்க நேரமில்லை
இன்றைய தலைமுறைக்கு
மறந்துவிட்டனர்
நாளை அவர் நேற்றைய
தலைமுறையாவர் என்று.

meera
06-10-2006, 05:10 AM
கலக்கல் மீரா.....

உடனிருக்கும் சொந்தங்களை விட்டு..
ஒட்டி கொண்ட சொந்தத்திற்கு சொகுசு......

நாய் போல பேசாமலிருந்தால்
அனைவருக்கும் சொகுசு கிடைக்குமோ என்னவோ....
அதுக்கு வாய் இல்ல அது பேசாம இருக்கு நாம எப்படி பேசாம இருக்க முடியும்.2 நாள் சாப்டாதனு சொன்னா இருக்கலாம் 2 நாள் பேசாதனு சொன்ன முடியுமா.

முடியற காரியம் ஏதாவது இருந்தா சொல்லுங்க நண்பா.

பென்ஸ்
06-10-2006, 01:33 PM
மீரா...
இன்றேல்லாம் தெய்வம் நின்று கொல்வதில்லை... உடனடியாகவே கொன்று விடுகிறார்.... என் கண்களால் என் கிராமத்திலையே பார்த்து இருக்கிறென்...
தான் பெற்றோரை வீட்டைவிட்டு வேளியேற்றி, அவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிய ஒரு குடும்பம் இப்போது அதே நிலையை தன் பிள்ளைகளால் அனுபவிக்கிறது, இதனால் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை, அது அவர்களுக்கு கடவுளல் கொடுக்கபட்டது....

தினை விதைத்தவன் தினை அறுப்பான்..
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...

சென்னையில் நான் இருந்த சில காலத்தில் வடபழனி பக்கம் ஒரு காப்பகம் செல்ல நேர்ந்தது.... சும்மா வளவள என்று பேசி கொண்டிருக்கும் நானே, சில நேரங்கள் வாயை மூடி அவர்கள் வேதனையை கேக்க வேண்டி இருந்தது...

அப்போது சுயனலாமாக வேண்டி கொண்டாலும் .. மனமார வேண்டியது "கடவுளே, அந்த பெரியவர் இருக்கும் இடத்தில் ஒரு பொழுதும் நான் இருக்கவே கூடாது"...

மீரா
கருத்தும் ... பொருளும் அருமை... வார்த்தைகளை குறைக்க முயலுங்கள்.... தேவையில்லாமல் வார்த்தைகள் இருப்பது போல் இருக்கு...

meera
06-10-2006, 02:39 PM
மீரா
கருத்தும் ... பொருளும் அருமை... வார்த்தைகளை குறைக்க முயலுங்கள்.... தேவையில்லாமல் வார்த்தைகள் இருப்பது போல் இருக்கு...

நன்றி நண்பரே,உங்கள் கருத்துபடி வார்த்தைகளை குறைக்க முயற்சிக்கிறேன்.

free3mano
07-10-2006, 05:10 AM
நல்ல சொற்கள்

udayasharan
07-10-2006, 06:59 AM
மீரா
உண்மையில் நாய்களுக்கு கிடைகும் மரியாதை வாழ்வு பெற்றோருக்கு கிடைப்பதில்லை. நிஜம் சுடுகின்றது

saguni
07-10-2006, 08:29 PM
கவிதைக்கு நன்றி. ஒரு உணர்வின் தாக்கமோ?

meera
08-10-2006, 08:11 AM
கவிதைக்கு நன்றி. ஒரு உணர்வின் தாக்கமோ?
வாருங்கள் நண்பரே,மன்றத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.ஆம் உணர்வின் தாக்கம் தான் சென்னை போன்ற மாநகரங்களில் நடக்கும் உண்மை தானே இது.

guna
11-10-2006, 04:43 AM
இப்போதிருக்கும் இந்த இயந்திர உலகில், வாடிக்கை யாகி விட்ட விசயம் இது...
இப்படி பட்ட சம்பவங்கல் நடக்க யார் காரணம்?

பிறந்து 3 மாதமேயான கை குழந்தை-ஐ "பேபி சிட்தெர்" இடம் விட்டு செல்லும் பெற்றோர்களை, வளர்ந்த பிறகு முதியோர் இல்லத்தில் விட்டு செல்வது தவறா?

பெற்ற குழந்தைகளை வளர்க பாடுபடும் பெற்றோர்களை விட, சமுதாயத்தில் தன் அந்தஷ்தை உயர்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தானே நிறைய பெற்றோர்கள் பாடு படுகிறார்கள்?

வளர்ந்த பிறகு பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் அளவுக்கு கல் நெஞ்ஜர்களாக வளர்க பட்டது பிள்ளைகளின் தவறா? இல்லை அவர்களை அப்படி வளர்த பெற்றொர்களின் தவறா?

ஒரு மனிதனின் அடிபடை குணதிசயங்கள் எந்த சூழ்னிலையிலும் மாறாது, அப்படி பட்ட அடிபடை குணதிசயங்களை , பண்புகளை ஒரு குழக்தயின் மனதில் பதிக்க தவறியது யார் தவறு?
தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாரு அடி பாயும் என்பது பொய் மொழியா?

குணா

meera
11-10-2006, 06:09 AM
பிறந்து 3 மாதமேயான கை குழந்தை-ஐ "பேபி சிட்தெர்" இடம் விட்டு செல்லும் பெற்றோர்களை, வளர்ந்த பிறகு முதியோர் இல்லத்தில் விட்டு செல்வது தவறா?


வளர்ந்த பிறகு பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் அளவுக்கு கல் நெஞ்ஜர்களாக வளர்க பட்டது பிள்ளைகளின் தவறா? இல்லை அவர்களை அப்படி வளர்த பெற்றொர்களின் தவறா?

குணா

பெற்றோர்களின் தவறாய் இருக்கலாம்,அவர்களின் தவறை நாமும் அவர்களுக்கு செய்ய வேண்டுமா தோழி.