PDA

View Full Version : என் காதலியும் என் கல்லறையும்leomohan
04-10-2006, 03:52 AM
என் சவப்பெட்டியை செய்து எத்தனித்தேன் உள்ளே செல்ல
வந்தாளே காதலி இடுகாட்டில் இருந்த பெட்டிக்கு மெல்ல
அன்பே இன்னும் இற்க்கவில்லை காத்திருந்தேன், நான் சொல்ல
பெட்டியில் அடிக்காமல் ஆணியை நெற்றியில் அடித்தாள் என்னை கொல்ல

இறந்தேன் - இறப்பைப் போன்று உறுதியான உண்மை.

தந்தை வந்தார் அழுதுச் சென்றார் தாயும் நின்றாள் சோர்ந்து
தம்பி வந்து தேம்பி அழ அக்காவோ புலம்பி அழுது
சுற்றமும் முற்றமும் தோழர்களும் ஏங்கி சேர்ந்து
அவளை தேடி அலுத்தது கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து

இறந்தாலும் - இருந்தேன் அங்கே ஆன்மாவாக.

அவளும் வந்தாள் கல்லறைக்கு பூக்கள் நிறைந்த கரங்கள்
ஆகா என் கண்மணி அறிவாள் எனக்கு பிடித்த நிறங்கள்
கல்லறை பிணங்களே என் காதலியை காண வாருங்கள்
என்னை கொன்றாலும் என்னை காதலிப்பதை பாருங்கள்

இறப்பிற்கு பின் வாழ்கையில்லையா இடுகாட்டிலே.

இன்னொரு தற்கொலை ஆத்மா என்னைப் பார்த்து சிரித்தது
பூக்கள் மேலிருந்த வாழ்த்து அட்டையை எடுத்தது
நண்பா உன் பெயர் இல்லையே இதில் இருப்பது
அவள் செய்தது நினைத்து மனம் நொந்தது

இறந்த எனக்கு அவள் இட்ட பூக்கள்...அவளுக்கு யாரோ கொடுத்த பூக்கள்

மீண்டும் வந்தாள் வெறுங் கையுடன் ஒரு நாள்
வந்து என் கல்லறையின் முன் அழுதாள்
ஆகா அவள் இன்னுமா என்னை காதலிக்கிறாள்
ஏழுபிறப்பிலும் அவளே காதலியாக வருவாள்

இறந்தவன் இறந்தவனாக இருக்க ஆன்மா அவள் இன்னொரு கல்லறைக்கு சென்றதை கண்டது.

அவளும் என்னைவிட்டு சென்றாள் இன்னொரு கல்லறைக்கு
காதலித்து ஏமாற்றி இன்னொருவனையும் கொன்றாயா இன்றைக்கு
திருந்தி நீ ஒருவனோடு வாழ்வது என்றைக்கு
காதலி, பிணங்களை நீ அனுப்பு இன்னும் இங்கு இடமிருக்கு

இறந்தது உடல் அன்று. கத்தி செத்தது ஆன்மா இன்று. அவள் காதில் விழவில்லை.

கண்மணி
04-10-2006, 04:04 AM
பெட்டியில் அடிக்காமல் ஆணியை நெற்றியில் அடித்தாள் என்னை கொல்ல

நெத்தி அடி.. (இப்படியுமா)

ஆமாம் காதலிக்கையில் சாவது காதலி கையில் சாவது.. காதலி கையால் சாவது என்ன வித்தியாசம்...???

leomohan
04-10-2006, 05:56 AM
பெட்டியில் அடிக்காமல் ஆணியை நெற்றியில் அடித்தாள் என்னை கொல்ல

நெத்தி அடி.. (இப்படியுமா)

ஆமாம் காதலிக்கையில் சாவது காதலி கையில் சாவது.. காதலி கையால் சாவது என்ன வித்தியாசம்...???

ஹாஹா அருமையான கேள்வி.

காதலிக்கையில் சாவது - நரகம்
காதலி கையால் சாவது - சொர்க்கம்

ஆனால் ஆணியால் அடிப்பது கொஞ்சம் கஷ்டமான சாவது தான். வேண்டுமானால் அவளும் என்னை காதலிப்பதாக சொல்லி ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம். இப்படி செய்தால் காதலிக்கையில் காதலி கையால் சாவது என்ற இரண்டையும் நிறைவேற்றியது போல் ஆகும். :)
ஆனால் சொர்க்கமாக நரகமா என்ற குழப்பம் வரும். திரிசங்கு சொர்க்கத்தில் சென்று முடியும்.

leomohan
04-10-2006, 05:59 AM
என் செத்துவிட்ட உடலின் ஆத்மா தினம் சோகம் தாங்கி
அவள் வரவை மீண்டும் காண இடுகாட்டில் நின்றது ஏங்கி
போய்விட்டதோ அவளிடம் கொஞ்சநஞ்ச உண்மையும் தூங்கி
இல்லாத என்னுடைய கண்கள் சிவந்தன அழுது வீங்கி

நானோ அவளை நினைத்து சுற்றிக் கொண்டிருந்தேன் பல நாளுக்கு
இன்றோ அந்த சூரியன் வந்ததே பெருமிதம் இந்த கோளுக்கு
திருமண அழைப்புடன் வருகிறாளே - என்ன சொல்வேன் ஊருக்கு
கல்லறைகளின் மேல் வைத்து அழுதாளே ஒரு பேருக்கு

என் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவன்
அவள் நெஞ்சம் கவர்ந்த யார் இந்த கள்வன்
நானொ உன்னை நினைத்து புலம்பியதாலே ஆனேன் புலவன்
எங்களையெல்லாம் வென்றுவிட்டு ஆனான் மாப்பிள்ளை தலைவன்

மலரின் கொத்தில் முன்பு அட்டை கண்டுபிடித்த ஆத்மா என்னருகில்
என்றும் நீ ஆனந்த கூத்தாடு அவள் காதலர்களின் முடிவில்
உங்களுக்கு மரணதண்டனை-முக்தி கொடுத்தாள் அவள் எளிதில்
வெறுத்தாளோ பலமடங்கு அவனை இடம் கொடுத்தே அவள் மனதில்.

கண்மணி
04-10-2006, 08:00 AM

அன்று தந்த மலர்கள் யாரோ அவளுக்குத் தந்தவை..
இன்று கொடுத்த இதழோ உனக்காகவே கொடுக்கப்பட்டது..

ஒரு வேளை சுடுகாடு நிறைந்ததால் கொஞ்சம் தள்ளிப் படு என்ற விண்ணப்பமா?

தாமரை
04-10-2006, 08:35 AM
நெத்தியில்
ஆணி அடித்து
காலண்டர் (அழைப்பிதழ்)
மாட்டி விட்டாள்!!!

meera
04-10-2006, 08:38 AM
காதலின் வேதனை செத்தாலும் தீராதோ?
மரணத்திலும் மனம் அமைதி பெறதோ?
அப்படியானால் காதலில் தோற்றவர்கள் சாவை தேடுவது ஏன்?

மோகன் காதலின் வேதனை மரணத்திலும் முடிவதில்லை என்பதை அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள்..

தாமரை
04-10-2006, 08:42 AM
என்ன காதல் இது
என்னவள் எனக்காக
ஏங்க வேண்டும் என
எதிர்பார்ப்பது,,,
என்னவள் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என
எண்ணுவதல்லவா காதல்..

leomohan
04-10-2006, 08:48 AM
நெத்தியில்
ஆணி அடித்து
காலண்டர் (அழைப்பிதழ்)
மாட்டி விட்டாள்!!!

ஹா ஹா.

leomohan
04-10-2006, 08:49 AM
காதலின் வேதனை செத்தாலும் தீராதோ?
மரணத்திலும் மனம் அமைதி பெறதோ?
அப்படியானால் காதலில் தோற்றவர்கள் சாவை தேடுவது ஏன்?

மோகன் காதலின் வேதனை மரணத்திலும் முடிவதில்லை என்பதை அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள்..

நன்றி மீரா. பாகம் மூன்றும் இருக்கிறது :)

meera
04-10-2006, 08:55 AM
நன்றி மீரா. பாகம் மூன்றும் இருக்கிறது :)
தாருங்கள்,தாருங்கள் மூன்றாம் பாகம் படிக்க ஆவலாய் இருக்கிறது.

leomohan
04-10-2006, 07:41 PM
என் காதலியும் என் கல்லறையும் 3

வெகு நாட்கள் ஆயின நானும் தனியாக இருந்து
தனிமைக்கு நல்ல துணையல்லவா மருந்து
ஆன்மாவாக நானும் அலைந்து திரிந்து
கிடைத்ததே கண்களுக்கு ஒரு நாள் விருந்து

யாருமே தனியாக இருக்கக் கூடாது தானே

இல்லாத மனிதர்கள் சேர்ந்து ஆன்மாக்களை அழைத்து
இடுகாட்டில் காதலர் தினவிழாவுக்காக கறி சமைத்து
காதல் ஆன்மாக்களின் மதுவில் சோகமும் கரைத்து
ஜோடி ஜோடியாக பேசினோம் பழையதை நினைத்து

ஆன்மாக்கள் காதலர் தினம் கொண்டாடக்கூடாதா

கண்டேன் அவளை அவளுக்கும் காதலில் தோல்வி
ஏனடி பெண்ணே தற்கொலை என்று கேட்டேன் கேள்வி
தோற்றுவிட்டதா உன்னுடைய காதல் வேள்வி
உன்னை விட்டு பிறரை மணந்தானே யாரந்த பாவி

ஆன்மாக்களில் ஆண் பெண் என்ற பேதம் உண்டா

ஆம் நண்பா ஆனால் ஆன்மாக்கள் காதலிக்கலாம் அல்லவா
இனி இறந்த பிறகு வாழ என்னுடன் மெல்ல வா
நீ என் ஆன்மா காதலன் என்று பிறரிடம் சொல்லவா
காதல் தோல்வியான கதையை என் மனதிலிருந்தே தள்ளவா

ஆன்மாக்கள் காதலிக்கக் கூடாதா

ஆஹா இன்று எனக்கு கிடைத்தாள் ஒரு காதலி
கல்லறையில் அரங்கேறும் காதலுக்கு வேண்டாம் ஒரு தாலி
சாதி மதம் என்று ஆன்மாக்களுக்கு இல்லை வேலி
பல நாட்களுக்கு பிறகு இன்றே மகிழ்ந்தேன் என் தோழி

ஆன்மாக்களின் சங்கமம் இன்றே

மிளிரும் என் கல்லறையை என் மனித காதலி கண்டாளே
செத்த பிறகும் நீ சுகமாகவா இருக்கிறாய் என்றாளே
மாந்தரீகம் செய்து ஆன்மா காதலியை குடுவையில் அடைத்தாளே
என்றுமே சுகமாய் நீயிருக்க கூடாது என்றே சொல்லிச் சென்றாளே

என் சோகத்தில் இவளுக்கு என்ன சுகம்

நான் இருந்த போதும் நீ என்னை மணக்க மறுத்தாய்
நான் இறந்தபிறகும் என் துணையை ஏன் மறைத்தாய்
என்னையும் சேர்த்து பலர் வாழ்கையை கெடுத்தாய்
ஆண்டவா இவளை இவ்வாறே ஏன் நீ படைத்தாய்

இம்முறை ஆண்டவனுக்கு காதில் விழவில்லை- - -

தாமரை
05-10-2006, 08:19 AM
கல்லறையில் ஏன்
கவிழ்ந்து கிடக்கிறாய்
அவள்
திரும்பி -
வருவாளென்ற
ஆசைய
இல்லை
திருந்தி வருவாளென்னும் பேராசையா!
நெற்றியில் ஆணி அடித்தும்
புத்தியில் இறங்கவில்லை
காதலில் ஏமாந்தவளை
காதலில் ஏமாந்தவன்
காதலித்தால்
காதல் ஏமாறுமா?
இல்லை ஏமாற்றுமா?
உன்னைக் குடுவையில் அடைக்க
இன்னுமொரு மந்திரவாதி வரவில்லையா?

leomohan
05-10-2006, 08:48 AM
செல்வன் ஐயா வார்த்தையிலே விளையாடிட்டீங்க.

ஆமா என்னை குடுவையில் எதுக்கு அடைக்கனும்ங்கறீங்க :confused:

தாமரை
05-10-2006, 01:23 PM
நீங்க காதலிச்ச அந்த ஆன்மாவின் காதலன் மந்திரவாதியைக் கூட்டிகிட்டு வரலையான்னு கேட்டேன்,,

leomohan
05-10-2006, 01:38 PM
நீங்க காதலிச்ச அந்த ஆன்மாவின் காதலன் மந்திரவாதியைக் கூட்டிகிட்டு வரலையான்னு கேட்டேன்,,

ஹா ஹா கேட்டு சொல்றேன் தலைவா

crisho
15-10-2006, 12:00 PM
ஆன்மா உலகுக்கே கூட்டீட்டு போய்ட்டீங்க தலைவா......

அருமையான சிந்தனை,
ஆனா என் மாந்தை என்ன அத்தனை கொடியவளா??

மெருதுவான
பூவை அவளுக்கு
ஏன்தானோ
கல் நெஞ்சம் கொடுத்தான்!

leomohan
16-10-2006, 08:11 AM
நன்றி கிரெஷோ. Knowledge comes from Experience என்பார்கள் அல்லவா:)

crisho
16-10-2006, 08:51 AM
ஆஹா....
உங்கள் அனுபவத்தை எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

meera
02-11-2006, 10:15 AM
மோகன், நன்றாய் இருக்கிறது இந்த காதல் காவியம்.

தொடருங்கள் உங்கள் கவிதைகளை.காத்திருக்கிறோம் உங்கள் படைப்புக்காக.

franklinraja
02-11-2006, 11:17 AM
தங்கள் காவியக்கவிதை அருமை மோகன்...

காதலின் சுகத்தையும், சுமையையும் அருமையாகக் கூறியுள்ளீர்கள்...

leomohan
02-11-2006, 12:04 PM
ஆஹா....
உங்கள் அனுபவத்தை எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

ஹா ஹா இது என் அனுபவம் இல்லை கிஷோர். காதலிக்கும் போதே இந்த கவிதை எழுதினேன். ஆனால் முடிவு என்னமோ நிஜத்திலும் தான். :)

ஓவியா
10-11-2006, 06:28 PM
என் சவப்பெட்டியை செய்து எத்தனித்தேன் உள்ளே செல்ல
வந்தாளே காதலி இடுகாட்டில் இருந்த பெட்டிக்கு மெல்ல
அன்பே இன்னும் இற்க்கவில்லை காத்திருந்தேன், நான் சொல்ல
பெட்டியில் அடிக்காமல் ஆணியை நெற்றியில் அடித்தாள் என்னை கொல்ல

இறந்தேன் - இறப்பைப் போன்று உறுதியான உண்மை.

தந்தை வந்தார் அழுதுச் சென்றார் தாயும் நின்றாள் சோர்ந்து
தம்பி வந்து தேம்பி அழ அக்காவோ புலம்பி அழுது
சுற்றமும் முற்றமும் தோழர்களும் ஏங்கி சேர்ந்து
அவளை தேடி அலுத்தது கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து

இறந்தாலும் - இருந்தேன் அங்கே ஆன்மாவாக.

அவளும் வந்தாள் கல்லறைக்கு பூக்கள் நிறைந்த கரங்கள்
ஆகா என் கண்மணி அறிவாள் எனக்கு பிடித்த நிறங்கள்
கல்லறை பிணங்களே என் காதலியை காண வாருங்கள்
என்னை கொன்றாலும் என்னை காதலிப்பதை பாருங்கள்

இறப்பிற்கு பின் வாழ்கையில்லையா இடுகாட்டிலே.

இன்னொரு தற்கொலை ஆத்மா என்னைப் பார்த்து சிரித்தது
பூக்கள் மேலிருந்த வாழ்த்து அட்டையை எடுத்தது
நண்பா உன் பெயர் இல்லையே இதில் இருப்பது
அவள் செய்தது நினைத்து மனம் நொந்தது

இறந்த எனக்கு அவள் இட்ட பூக்கள்...அவளுக்கு யாரோ கொடுத்த பூக்கள்

மீண்டும் வந்தாள் வெறுங் கையுடன் ஒரு நாள்
வந்து என் கல்லறையின் முன் அழுதாள்
ஆகா அவள் இன்னுமா என்னை காதலிக்கிறாள்
ஏழுபிறப்பிலும் அவளே காதலியாக வருவாள்

இறந்தவன் இறந்தவனாக இருக்க ஆன்மா அவள் இன்னொரு கல்லறைக்கு சென்றதை கண்டது.

அவளும் என்னைவிட்டு சென்றாள் இன்னொரு கல்லறைக்கு
காதலித்து ஏமாற்றி இன்னொருவனையும் கொன்றாயா இன்றைக்கு
திருந்தி நீ ஒருவனோடு வாழ்வது என்றைக்கு
காதலி, பிணங்களை நீ அனுப்பு இன்னும் இங்கு இடமிருக்கு

இறந்தது உடல் அன்று. கத்தி செத்தது ஆன்மா இன்று. அவள் காதில் விழவில்லை.

மனதை தைக்கின்றது
வடுக்களுக்கு அனுதாபங்கள்

ஆஹ மோகன்

அருமையான காயக்கவிதை..... காவியக்கவிதை

வார்த்தைகளின் கோர்வை அற்ப்புதம்.......... பாரட்டுக்கள்

நீங்களும் ஒரு சிறந்த படைப்பாளிதான்.....
(இப்பத்திக்கு இவ்வலவு ஐஸ் போதும் சாரே :D ).....

ஓவியா
23-11-2006, 07:45 PM
என் செத்துவிட்ட உடலின் ஆத்மா தினம் சோகம் தாங்கி
அவள் வரவை மீண்டும் காண இடுகாட்டில் நின்றது ஏங்கி
போய்விட்டதோ அவளிடம் கொஞ்சநஞ்ச உண்மையும் தூங்கி
இல்லாத என்னுடைய கண்கள் சிவந்தன அழுது வீங்கி

நானோ அவளை நினைத்து சுற்றிக் கொண்டிருந்தேன் பல நாளுக்கு
இன்றோ அந்த சூரியன் வந்ததே பெருமிதம் இந்த கோளுக்கு
திருமண அழைப்புடன் வருகிறாளே - என்ன சொல்வேன் ஊருக்கு
கல்லறைகளின் மேல் வைத்து அழுதாளே ஒரு பேருக்கு

என் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவன்
அவள் நெஞ்சம் கவர்ந்த யார் இந்த கள்வன்
நானொ உன்னை நினைத்து புலம்பியதாலே ஆனேன் புலவன்
எங்களையெல்லாம் வென்றுவிட்டு ஆனான் மாப்பிள்ளை தலைவன்

மலரின் கொத்தில் முன்பு அட்டை கண்டுபிடித்த ஆத்மா என்னருகில்
என்றும் நீ ஆனந்த கூத்தாடு அவள் காதலர்களின் முடிவில்
உங்களுக்கு மரணதண்டனை-முக்தி கொடுத்தாள் அவள் எளிதில்
வெறுத்தாளோ பலமடங்கு அவனை இடம் கொடுத்தே அவள் மனதில்.

இறந்த பின்னும் ஆத்மா ஏங்குமா!!
காதலித்தால் இலவச முக்தியா!!!

காதல் புலம்பல் ஜோராதன் இருக்கு
ஆனால் ஆறுதல் சொல்லமுடியலையே

leomohan
23-11-2006, 08:05 PM
இப்போதாவது படிக்க உங்களுக்கு நேரம் கிடைத்ததே. மிக்க நன்றி.

ஓவியா
23-11-2006, 08:26 PM
இப்போதாவது படிக்க உங்களுக்கு நேரம் கிடைத்ததே. மிக்க நன்றி.

ஆமாம் நண்பா

நீங்கதான் நையில் நதிக்கு போட்டியா எழுதி வைக்கறீகளே....

அப்புறம் வேற,
சுபம்னு போட தோடரும்னு போடறீகளே!!!!!!!!!1

இளசு
24-11-2006, 10:08 PM
ஆன்மா , மனிதம் என்ற போர்வை போர்த்தி
இதயம் , மூளையின் போராட்டம் உணர்த்தி
ஐடியல், பிராக்டிகல் வித்தியாசம் காட்டி
அழகான வரிகளில் சந்தத்தோடு சொன்ன உத்தி...

பாராட்டுகள் மோகன்..

மெல்லிய உணர்வுகள் கொண்ட வல்லிய படைப்பாளி நீங்கள்..

இரசித்து வியக்கவைக்கிறீர்கள்..

---------------------------------------------------------

செல்வனின் 'எசப்பாட்டு ' -இப்படைப்புக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு.

leomohan
24-11-2006, 11:58 PM
மிக்க நன்றி இளசு.

kavitha
18-12-2006, 06:42 AM
"ஒருதலை அன்பு காதல் ஆகுமா?
காதல் இல்லை எனும் போது பொறாமை ஏனம்மா?"
எனப்பாடத்தோன்றுகிறது மோகன்.
நன்றாக இருக்கிறது 3 பாகங்களும். பாட்டு வடிவில் தந்திருப்பது சிறப்பு.

leomohan
18-12-2006, 07:37 AM
ஒரு தலை காதல் இல்லை கவிதா. காதல் பிறகு கமரிஷியல் ஆகிவிட்டது. ஹா ஹா.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நம்பிகோபாலன்
18-12-2006, 08:30 PM
சாகவும் முடியாம வாழவும் முடியாம ரன படுவதுதான் காதலின் இயல்பு

leomohan
19-12-2006, 06:30 AM
சாகவும் முடியாம வாழவும் முடியாம ரன படுவதுதான் காதலின் இயல்பு

ஹா ஹா. வெல் செட்.

ஓவியா
20-12-2006, 02:41 PM
சாகவும் முடியாம வாழவும் முடியாம ரன படுவதுதான் காதலின் இயல்பு

காதல் தத்துவமா...:eek:

ஜோரா அனுபவிக்கவும்...:D

நம்பிகோபாலன்
20-12-2006, 04:04 PM
காதலுக்காக இறப்பதும் காதலிகாகவே இருப்பதும் ரெண்டும் சுகமானவை

leomohan
20-12-2006, 04:18 PM
காதல் தத்துவமா...:eek:

ஜோரா அனுபவிக்கவும்...:D

எங்கே ஓவியா ஆளையே காணோம்.

ஓவியா
20-12-2006, 04:40 PM
எங்கே ஓவியா ஆளையே காணோம்.

படிப்புதான்..........ஆனால் புத்தகத்தை திறந்து வைத்து கனவு கான்கின்றேன்....:D :D ......

பென்ஸ்
20-12-2006, 05:31 PM
என்ன கனவு மக்கா.....????

ஓவியா
20-12-2006, 06:04 PM
என்ன கனவு மக்கா.....????

:D :D :D

அந்த மக்கிபோன கனவுதான்......:) .

அலோ, நான் கன்வு கண்டா பரவாயில்லை...

சிலர் சம்பளம் வாங்கிண்டு, கனவு காணறாங்களே....:eek: :D

meera
21-12-2006, 05:53 AM
:D :D :D

அந்த மக்கிபோன கனவுதான்......:) .

அலோ, நான் கன்வு கண்டா பரவாயில்லை...

சிலர் சம்பளம் வாங்கிண்டு, கனவு காணறாங்களே....:eek: :D

கரீட்டா சொன்னீங்க ஓவி,

(ஐய்யோ யாரோ அடிக்க வரமாதிரி இருக்கூஊஊ.):eek: :eek:

தாமரை
21-12-2006, 05:55 AM
:D :D :D

அந்த மக்கிபோன கனவுதான்......:) .

அலோ, நான் கன்வு கண்டா பரவாயில்லை...

சிலர் சம்பளம் வாங்கிண்டு, கனவு காணறாங்களே....:eek: :D

நாங்க சம்பளம் எல்லாம் வாங்கறதில்லை..:rolleyes: :rolleyes: :rolleyes: அவங்களே அக்கவுண்டில டிபாசிட் பண்ணிடறாங்களாக்கும்...:D :D :D

(விவரம் வேணுமா காணுக என் பயோ டேட்டா
தொழில் -- > கனவு காண்பது :D :D
கனவு ---> தொழிலில் முன்னேற்றம் ;) ;)
)