PDA

View Full Version : இரு குழந்தைகள் - இரண்டு பாகங்கள்leomohan
04-10-2006, 03:51 AM
தமிழ் மன்ற கலைஞர்களே கவிஞர்களே அறிஞர்களே இந்த கவிதை மூன்று பாகமாக உள்ளது. சற்றும் சம்பந்தமில்லாத இரு வெவ்வேறு சூழலில் வளரும் குழந்தைகளைப் பற்றியது. அவசியம் படித்து உங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள்.

இங்கோ இருவர் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டு உடலால் காதல் கண்டு
பெண் வயிற்றில் ஒரு பளு சுமந்து அவளுக்காக அவன் கணவன் செய்த தொண்டு
பாத்திரம் கழுவி வீடு பெருக்கி சமையல் செய்து அவளுக்கு அளித்து
மருந்தை அளித்து மருத்தவரிடம் அழைத்துச் சென்று அவள் ஏக்கத்தை கழித்து
அவளை சீராட்டி சிங்காரித்து சீமந்தம் செய்து அவள் குழந்தைக்கு நான் தந்தை என்று
பறைசாற்றி
வந்தவர்க்கு உணவு பரிமாறி உடை வழங்கி வருவது ஆணா பெண்ணா என்று மகிழ்ந்து
அரற்றி
பத்து மாதம் சென்று நாள் வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி
உள்ளே அவளின் அழுகுரலை கேட்கச்சகிக்காமல் மருத்துவரைத் தேடி
எப்படி இருக்கிறாள் என் மனைவி என்று மீண்டும் மீண்டும் விசாரித்து
எனக்கு சேய்வேண்டாம் தாயை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என்று உரைத்து
பதர வேண்டாம் நண்பா தாயும் சேயும் நலம் என்ற சேதி கேட்டு விண்னைத்தொட்டு
ஓடிச்சென்று மனைவியை நன்றி கண்ணோடு பார்த்து அவள் நெற்றியில் முத்தமிட்டு
அவள் அருகே படுத்திருக்கும் பிஞ்சைக் கண்டு பூரித்து புளங்காகிதம் அடைந்து
அவன் கண் என்னைப்போல உள்ளதா உன்னைப்போல உள்ளதா என்று கடைந்து
என் குடும்பத்திற்கு ஒரு வாரிசை உருவாக்கி விட்டாயே என்று அவளுக்கு நன்றி கூறி
தாயையும் சேயையும் உயிருடன் காத்து நின்ற மருத்துவருக்கு கோடி நன்றி நன்றி
என்று வீட்டுக்கு அவளை அழைத்து செல்லலாம் என்று அனைவரையும் கேட்டு
மிகு விலை கொடுத்து சிறந்த மகிழ்வுந்தை அழைத்து அவளையும் குழந்தையையும் அன்பாள் அதில்
இட்டு
வீடு வந்ததும் அவளுக்கு பூசை செய்து பொட்டு வைத்து திருஷ்டி கழித்து
அவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசை ரகசியமாய் அளித்து
குழந்தையின் தாத்தா பாட்டி குழந்தையை கொஞ்சும் போது ரகசியமாய் மனைவியை
கொஞ்சி
பச்சை உடம்பில் காயம் பட்டுவிடுமோ என்று காமம் கொள்வதற்கு அஞ்சி
தூரத்திலிருந்தே என் மனைவியை ரசிப்பேன் என்று காதலுக்கு காமம் மட்டுமே
தேவையில்லை என்று உணர்த்தி
என்னை இப்படி பயமுறுத்திவிட்டாயே என் செல்லக் குறத்தி
இப்படியாக அன்பிற்கும் பண்பிற்கும் காதலுடன் கடமையுடன் இருந்த இருவருக்கு பிறந்ததாம்
ஒரு குழந்தை!

அங்கோ இருவர் கண்டவர் கண்டு திருமணம் என்ற சடங்கை முடித்து
கட்டில் என்றால் காமம் கொள்ளத்தான் என்ற ஒருவரையொருவர் குதறி கடித்து
பிள்ளை தாச்சி என்று பாராமல் குடித்துவிட்டு மனைவியை அடித்து உதைத்து
சொல்லொண்ணா சொற்களால் அவள் நெஞ்சை வதைத்து
பிள்ளை தாங்கியுள்ள வயிற்றுடன் வேலைக்கு போ என்று சொல்லி
அவள் சம்பாதித்து வந்த ஓரிரு ரூபாயிலும் மது மாமிசங்களை அள்ளி
உள்வளரும் அந்த சிசுவுக்கு கிடைக்க இருந்து உணவை தடுத்து
கொடுமைகளை செய்கிறான் அவள் மேல் அடுத்தடுத்து
ஆசையை அடக்கத்தெரியாமல் தன் உயிரை சுமப்பவளை விலைமாதாய் நினைத்து
வெறி அடங்கியதும் அவளை ஒரு பொருட்டாக எண்ணாமல் சிதைத்து
கூலிக்கு வேலை செய்பவனின் வைராக்கியம் என்ன அவள் தெருவில் ஒரு நாள் உருள
அதைக்கண்டு அவள் சேரியில் உள்ள அக்கம்பக்க மக்கள் திரள
ஓடிச் சென்ற ஏவரோ ஒரு ரிட்சாவை அழைத்து வர
அவளை அதில் பதமாக ஏற்ற பலர் கைகளை தர
அரசாங்க மருத்துவமனையில் ஏதோ ஒரு மூலையில் அவள் பிள்ளையை பெற
சாராய போதையில் வீழ்ந்து கிடந்த அவள் கணவனுக்கு யார் மூலமோ செய்தி சேர
பத்து நாட்கள் கழித்து அவளாக வீட வந்து பின்னும்
குழந்தையை அவன் கொஞ்ச ஒரு முறையும் வரவில்லை இன்னும்
எவனுக்கடி பெத்த இந்த பையனை என்று மனைவியை வேசி என்று அழைக்காத குறை
எப்போ வேலைக்கு போவே என்று அவள் தாய்மைக்கு போட்டானே ஒரு திரை
இன்னும் ஒரு மாசம் என்னல் முடியாதுங்க என்று இவள் பரிதாபமாக சொல்ல
இந்த சனியனால தானே நீ வேலைக்கு போகலை என்று சென்றான் அதைக் கொல்ல
அந்த பரிதாபமமோ தாயின் வயிற்றிலிருக்கும் போதே உண்ணவில்லை
இந்த தந்தை தாயிடம் தான் பிறப்பேன் என்று முன்பே எண்ணவில்லை
இப்படியாக காமத்திற்கும் வறுமைக்கும் பொறுப்பற்றதனத்திற்கும் பஞ்சத்திற்கும் பிறந்ததாம்
மற்றோரு குழந்தை

meera
04-10-2006, 09:05 AM
மோகன் அழகாய் சொல்லியிருக்கிங்க.இரு வேறுபட்ட ஆண்களின் மனங்களை இன்கே அழகாய் படம்பிசிருக்கிங்க..
பெண்களை போற்றுபவனும் உண்டு,தூற்றுபவனும் உண்டு என்பதை தெளிவாய் சொல்லி இருக்கிறீர்கள்.

உங்களின் அடுத்த பாகத்துக்காய் காத்திருக்கிறேன்.

விரைவில் அளியுங்கள்.

leomohan
04-10-2006, 09:30 AM
உங்கள் கருத்துக்களுக்கு என் வணக்கம். இதோ பாகம் 2.

leomohan
04-10-2006, 09:32 AM
இரு குழந்தைகள் - பாகம் இரண்டு
பாகம் இரண்டு: பள்ளியில் சேர்க்கை

இங்கோ குழந்தைக்கு வயது மூன்று நன்றாக வளரும் கன்று
தாய் குழந்தை பால் கேட்க காத்திருந்து குழந்தை வளர்ந்தது நன்று
தந்தை வேலை முடிந்து வந்ததும் என் குட்டிப்பையன் எங்கே என்று தேட
அந்த குழந்தையோ தந்தையின் வாசம் அறிந்து அவனைத்தேடி ஓட
அப்பா வந்தாச்சு பார்த்தியா என்று குழந்தை மழலையில் தாய் பேச
டேய் ஆபிஸ்லேர்ந்து வந்த உடனே குழந்தையை தொடாதே என்று பாட்டி ஏச
என் குழந்தைய பார்க்காமே வேலையே ஓடலைம்மா என்று பாசம் பொழிய
இல்லைன்னா மட்டும் வேலை பார்கிறீங்களா என்று மனைவி வழிய
நீங்கள் இருவர்தான் என் உலகம் என்று மனைவியிடம் கண்களால் உறுதியளிக்க
காப்பி காரம் இனிப்பு என்று குடும்பத்துடன் அவன் களிக்க
பள்ளிக்கூடம் எப்பபோது சேர்ப்பது என்று அனைவருடன் விவாதம் செய்ய
எங்க காலத்தில் அஞ்சு வயசிலே பாடசாலை போனோம் என்று தாத்தா வைய்ய
உங்க காலம் வேறப்பா இப்ப கம்ப்யூட்டர் காலம் பிறந்த குழந்தை ஸ்கூலுக்கும் போகும்
சரிப்பா அருகில் இருக்கும் பள்ளியில் போடு இல்லாவிட்டால் தாய் மனம் நோகும்
பிறகு அந்த இளம் தந்தை பள்ளிக்கு அனுமதி சீட்டு வாங்கும் வரிசையில் நின்று
கால்கடுக்கக வெயிலில் தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி என்று
பள்ளியில் சேர்த்து பத்தாம் வகுப்பு அளவுக்கு புத்தகம் வாங்கி
பள்ளி சீருடை கால் சட்டை மேல் சட்டை புத்தகப்பை வேறென்ன மறந்தோம் என்று ஏங்கி
குட்டிக்கு மதிய சாப்பாட்டு டப்பா வாங்கவில்லை என்று மனைவியிடம் குட்டுப்பட்டு
இது தான் நீயும் வரணும்னு சொன்னேன் இந்த பட்டியிலில் இருக்கா காட்டு
நான் வீட்டிலே எத்தனை வேலை செய்யறது உங்கம்மாக்கு கால் வலி
அப்பாவுக்கு ஓய்வூதியம் வாங்க உதவி செய்து மின்சார பில் கட்டி
இன்னும் எத்தனை வேலை பையன் வேண்டும் என்று கேட்டாயே அல்லல்படு
அவன் என் பையன் மட்டுமோ உனக்கும் பையன் தானே என்று செல்லமாக கடிந்துவிட்டு
காலையில் எழந்து குளித்துவிட்டு பூஜை செய்து சீக்கரம் குட்டியை தயார் செய்
இல்லை நேற்றுப்போல தாமதம் செய்தால் நீயே அவனை அனுப்பி வை
நீங்க தயார் ஆகறத்துக்குள்ள எட்டு பசங்களை தயார் பண்ணுவேன் - இது தாயார்
இதற்குள் குழந்தையை குளிப்பாட்டு பொட்டு இட்டு குழந்தையும் தயார்
கன்னதில் சிறிய திருஷ்டி பொட்டு முகத்தில் செல்லமாக ஒரு முத்தம்
இன்னிக்கு அம்மா சீக்கிரம் வந்துடுவேன் கண்ணா என்று செய்யும் ஆயுத்தம்
அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அனைத்து அம்மாக்கு டாட்டா சொல்லு
தாத்தாக்கு டாட்டா சொல்லு பாட்டிக்கு டாட்டா சொல்லு என்று அவன் கட்டிநிற்கும் மல்லு
குடும்பமே வந்து வழியனுப்ப இரண்டு சக்கிர வாகனத்தில் வாகாக நிற்கவைத்து
முன்னாடி பிடிச்சுக்கோ கண்ணா என்று அன்பாய் அறிவுரை அது நிற்கும் அழகில் லயித்து
மனைவிக்கு டாட்டா சொல்லி பள்ளிக்கு சென்று வாசலில் இறக்கி விட்டு
வாத்தியாரம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அவன் வகுப்புக்கு செல்லும் வரை நின்றுவிட்டு
மதியம் ஏதோ காரணம் சொல்லி அலுவலகத்திலிருந்து அனுமதி பெற்று
குழந்தையை அழைத்து வீட்டிற்கு கொண்டு விட்டு சாயங்காலம் வரேன் என்று
ஓடி வேலைக்குச் சென்று அவசரமாக வேலை முடித்து மீண்டும் குழந்தையை காண
குழந்தையின் அப்பா வருவார்டா கண்ணா என்று தயார் செய்து இவ்வாறே பேண
குழந்தையை தெய்வமாய் எண்ணி ஒரு ஏற்ற சுற்றுச்சூழலில் வாழ்கிறதாம் இந்த குழந்தை!

இங்கோ பள்ளி எது என்று அறியாத ஒரு அம்மா அப்பா குடும்ப அவலம்
குழந்தை தானாகவே எப்படி வளர்ந்தது என்று இங்கு கண்டு அறிய இயலும்
குப்பத்தின் அழுக்கில் வாழ்ந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து வாழ்ந்து
இந்த தேசத்திற்கு ரிக்ஷா ஓட்டுனரையும் முடிதிருத்துவோரையும் ஈன்று
வேலைக்காரகிளையும் துணிவெளுப்பபோரையும் உருவாக்கி
எலும்பும் சதையுமாய் உயிரே உயிரைவிடும் வாழ்க்கையில் உயிரை கலக்கி
பீடி சாராயம் சகதியில் வாழ்க்கை வெந்ததை தின்போம் விதி வந்தால் சாவோம்
ஓட்டு போட காசு வாங்கி மீதி ஐந்து வருடங்கள் வறுமையில் வாடுவோம்
வருடத்திற்கு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மாநாடு
அண்டா குண்டா சேலை வேட்டி என்று ஜனநாயகம் நடத்தும் இலவச கேடு
கல்யாணம் என்பதே இந்த கூட்டத்தில் சில பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு
பல திருமணம் பல மனைவிகள் பலர் செய்யும் சமூக ஏய்ப்பு
பல குழந்தைகள் இதில் பல ஏதற்காக பிறந்தன என்று அறிவதற்கு முன்னே
ஆட்டுக்கறி சமையலுக்கு பதிலாக மனிதர்களை போடலாமா பின்னே
இதன் நடுவில் அறிவொளி இயக்கம் போல சில நல்ல இயக்கங்கள்
ஆனாலும் இதிலும் சிலருக்கு குப்பங்களில் செல்ல தயக்கங்கள்
அப்படியும் சிலர் இதுபோல இடங்களுக்கு செல்ல சிக்கியது இக்குழந்தை
முகம் ஒட்டி ஆடையில்லாமல் கொசு கடித்து தடித்த முகம் அழுது சிவந்த கண்ணம்
மூக்கில் சளி ஒழுகி ஒழுகி காய்ந்து இதற்கும் மேல் ஒழுகு சளியில்லை இன்னும்
குழந்தையின் அப்பாவிடம் சென்ற இந்த சமூக சேவகி கல்வியின் முக்கியத்துவத்தை அறிவுறுத்த
பீடி பிடித்துக்கொண்டே லுங்கியை ஏற்றிக்கட்டிக்கொண்டு தந்தை வெக்கமில்லாமல் கேட்டு
அம்மா சமூக சேவகியின் உதவிக்கு வந்து சாப்பாடு போடுவாங்களாங்க
பொஸ்தகம் வாங்கி கொடுத்து மத்தியானம் முட்டை போடுவாங்களாங்க
துணிமணியும் உண்டுன்னு இந்த அம்மா சொல்லுறாக வேணாம்னு சொல்லாதீங்க
இந்த கெஞ்சலை கேட்டு வாழ்க்கையின் அர்த்தம் புரியாத அந்த ஜந்து என்னங்க
எனக்கு என்ன கொடுப்பீங்க என்று அதிலும் காசு தேட
இத பாருங்க அரசாங்கம் உங்களுக்கு உதவி செய்யுது காசு கேக்காதீங்க இதுக்கு கூட
எத்தையாவது செய்து தொலைங்க நான் கூலிக்கு போவனும் என்று அங்கிருந்து விலக
இதப்பாரும்மா வர பத்தாம் தேதி பள்ளிக்கூடம் திறக்குது அவசியம் வாங்க
பல முயற்சிகளுக்கு பிறகு அந்த குழந்தைக்காக பேச ஒரு ஜீவன்
ஆன்டிக்கு டாட்டா சொல்லு என்று அம்மாவுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் ஒரு முயற்சி
குழந்தையை தொட்ட கையோடு கிறுமிநாசினையை போட்டு கழவவேண்டிய இகழ்ச்சி
ஆனாலும் இந்த சுயலமுள்ள பொது நலத்திலும் சிலர் பெறும் வெற்றி
பல பிள்ளைகளை உணவிற்கு ஆசை காட்டி பள்ளியில் சேர்க்க சுற்றி
அப்படியாக பள்ளியில் சேர கிடைத்தது இந்த குழந்தைக்கு ஒரு வாய்ப்பு
மீண்டும் பள்ளி திறப்பு நாளன்று அந்த சமூக சேவகி வந்து நினைவுறுத்த
குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு முதலாளியம்மா கொடுத்த துணி துவைத்து
காயவைத்து சற்று பெருத்த குழந்தைக்கு கஷ்டப்பட்டு அதைப்போட்டு
இந்தாங்க கொழந்தைய பள்ளிக்கூடத்துல விட்டுட்டு வாங்க என்று கோரிக்கை வைத்து
தா இந்த சனியன் படிக்க போகுதா வேற வேலையில்ல நீயே போ சாவு கிராக்கி
இனி பேசிப் பிரயோஜனம் இல்லை என்று அவளே அந்த குழந்தையை தூக்கி
பள்ளிக்கூடம் போறோம்டா கண்ணா என்று ஏதோ நம்பிக்கை ஊட்டி
வருவதை அறியாமல் குழந்தையை சுமையாக நினைக்கும் ஒரு இடத்தில் பிறந்து
அரசாங்கம் தரும் இலவச கல்வி உடை உணவை நம்பி வாழ்ந்ததாம் அந்த குழந்தை!!

Mano.G.
04-10-2006, 09:43 AM
அருமை மோகன் அருமை,
சமூகத்தில் இரண்டு நிலையில் உள்ள குடும்பதின்
வாழ்க்கை நிலை ,

மிடல்கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்கம் தான் முதலில்
குறிப்பிட்ட குடும்பம்.

அதற்கும் மேலே உள்ள குடும்பத்தில் உள்ள குழந்தையின் நிலை
வறுமையில் வாடும் குழந்தையை போலவே.
வாழ வசதிகள் இருந்தும் பாசத்திற்காக ஏங்கும்
குழந்தைகள் அதன் வறுமை பாசமும் அன்பான அரவணைப்புமே.

மனோ.ஜி

leomohan
04-10-2006, 09:54 AM
மிக்க நன்றி மனோ.

ஓவியா
21-01-2007, 09:01 PM
மோகன்ஜீ,

ஏழைக்குழந்தைகள் கல்விக்கு மட்டும் ஏங்குவதில்லை, இன்னும் எத்தனையோ விசயங்களுக்கு ஏங்குவது கண்கூடாக காணும் விசயம்.

எப்பொழுதும் தாய்க்கு குழந்தையின்பால் அதிக அக்கறை உண்டு என்று ஆழமாக பறை சாற்றுவது மிகவும் உயர்ந்த நிலை. கவிதையில் கண்டேன், நன்றி

இது யார் குற்றம்? கல்வி அறிவே இல்லாத பெற்றோருக்கு எப்படி கல்வியின் முக்கியத்துவம் தெரியும்?

ஏழையின் அவலங்களை அழகாக எழுதியுல்லீர்கள்.

பாராட்டுக்கள்

அமரன்
21-05-2007, 03:35 PM
இது கூட வித்தியாசமான கவிதையே. வாழ்த்துகள் மோகன். இரு வேறுபட்ட சூழ்நிலைகளில் வளரும் இருவரின் மனோ வித்தியாசங்களைப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.