PDA

View Full Version : எத்தனை ஜென்மம் எடுத்தாலும்....Shanmuhi
03-10-2006, 06:52 PM
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்....


http://img217.imageshack.us/img217/6379/1pu9.jpg (http://imageshack.us)

மாலைத்தென்றலின் இதமான வருடல் அவள் உடலை மெதுவாக தழுவிக் கொண்டிருந்தது. அவள் கண்கள் முரளியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தது. முதன் முதலாய் அவனை பார்த்தபோது அவளுக்கு அவனை பிடிக்கவில்லை. முரளியைக் காணும் போதெல்லாம் அவளுக்குள் ஏனோ அவனை திட்டி தீர்த்துக் கொள்வாள். ஆனால் இன்று அவனைக் காண வேண்டும், அவனை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று சில மெல்லிய உணர்வுகள் அவளை அறியாமல் அவளுக்குள் விட்டில் புழுவாய் துடித்துக் கொண்டிருந்தது. அவனைக் காணும்போதெல்லாம் அவள் மனம் தொலைந்து போகிறது. அவனைக் காணாத போது அவள் விழிகள் அழுகின்றது.

அவளுக்குள் புகுந்து ஒருயிராய் மனமும் ஒன்றிணைந்த நிலையில் அவள் இருந்தாள்.

அவனுக்குப் பிடித்த நீலநிறச் சேலை. வெள்ளை நிற ஒற்றை ரோஜா. கைநிறைய வளையல்கள். எல்லாம் அவனுக்கு பிடித்தவையாக பார்த்து பார்த்து அலங்காரம் பண்ணிக்கொண்டு வந்திருந்தாள்.

குறிப்பிட்ட நேரம் கடந்து வந்த முரளி " ஒ... ஸாரிம்மா கொஞ்சம் லேட்டாயிட்டுது..." என்று மன்னிப்பை வேண்டிக்கொண்டே " உண்மையிலேயே இன்று நீ என் கண்களுக்கு அப்சரஸ் மாதிரி வடிவா இருக்கிறாய்" என்று கூறிவிட்டு அவளருகில் அமர்ந்து கொண்டவன் அவளின் அழகிய அந்த மென்மையான கைவிரல்களை பற்றியபடி அதன் மீது தன் இதழ் பதித்து, கண்கள் மேல் எழ அவளை நிமிர்ந்து பார்த்தான். அதை சற்றும் எதிர்பார்க்காத ப்ரியா ஒரு கணம் மெய்சிலிர்த்துப் போனாள். அவள் முன்பின் அறியாத உணர்வு அது.
உன் விரல்களால் என் தேகம் சீண்டுகையில் என் மனம் வானில் இறக்கை கட்டிப் பறக்கின்றது! உன்னை நினனத்த வேளை எதை பார்த்தாலும் என் கண்ணில் நீயாகவே தெரிகின்றாய். அவள் மனம் மெதுவாக சொல்லிக் கொண்டது.

அவள் மனதின் எண்ண ஒட்டங்களை அறிந்தவன்போல் அவனும் அவளிடம் குழைந்தான் "ப்ரியா ஆசையாய் உன்னை காண வந்தால் உன் நாணம் என்னை காந்தம் போல் உன்பால் கட்டி இழுக்கிறதே. " என்றான்
முரளியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் திராணியற்று நாணத்தால் அவள் முகம் சிவக்க, நிலத்தை நோக்கினாள்.

இரண்டு ஐஸ்கிறீம்க்கு ஓடர் பண்ணிவிட்டு " ப்ரியா ஒன்று சொல்ல மறந்து விட்டன். இப்போ நான் சிகரெட்.குடி ஒன்றையும் கையால் கூட தொடுவது இல்லை. எல்லாத்தையும் விட்டுப் போட்டன்... " என்றான் பெருமிதமாக.

ப்ரியால் அதை நம்ப முடியாமல் இருந்தது. தான் காண்பது கனவா... என்பது போல் தன் கையை தானே ஒருகணம் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

முதன் முதலாக கண்ட முரளியா இது. எந்தநேரமும் சிகரெட்டும் கையுமாக இருந்த தன்னையே சுற்றி சுற்றி வந்த முரளியா இவர்...? ஆச்சரியத்தால் கண்கள் விரிய அவனையே வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப்பார்வையில் அவன் மேல் கொண்ட காதலின் இறுக்கம் நிறையவே இருந்தது.

அவள் விழிகளில் காதல்,அன்பு, ஆசை சொட்ட சொட்ட பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளது நினைவுகள் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

அவனுடன் பழகத் தொடங்கிய அந்த ஆரம்ப நாட்கள் அவள் கண்முன் நிழற்படங்களாக கண்முன் விரிந்து கொண்டிருந்தது.

முதன் முதலாக முரளியை எங்கு பார்த்தானே அன்றிலிருந்தே அவன் அவளை நிழலாய் தொடர ஆரம்பித்தான். ப்ரியா அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் போகும் இடம் எல்;லாம் நிழலாக அவள் பின்னால் சுற்றியபடியே சுருள் சுருளாக விடும் சிகரெட் புகையுடன் அலைந்தான்.

ப்ரியாயின் பாராமுகம் முரளியை ஏமாற்றமடைய வைத்தது. மனம் நொந்து போன அவன் தேவதாஸ் தாடியுடன் அலைந்து இறுதியில் விஷ போத்தலுடன் நீ இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை.

" என் இதயத்தினை கொள்ளை அடித்தவளே
என் காதலை சொன்ன போது ஏற்காமல் மறுத்தவளே
நான் தேவதாஸ் தாடியுடன் உனக்காக ஏங்குகின்றேன்
எனது சோகம் என்ன என்று உனக்குப் புரியாதா பைங்கிளியே
புரிந்தும் புரியாது போல் நடிக்கின்றாயா
நீயில்லை என்றால் எனக்கு வாழ்வேயில்லை
அடைந்தால் ப்ரியா இல்லாவிட்டால் மரணம் என்னை அணைக்கட்டும் " என்று அவன்முன் விஷத்துடன் வந்து புலம்பிய போது கனியாத அவள் இதயம் மெல்ல மெல்ல காதல் வயப்பட்டு கனியத் தொடங்கியது.
நீ யாரை நேசிக்கிறாயோ... அதனிலும் பார்க்க உன் மீது யார் அன்பை பொழிந்து நேசிக்கிறார்களோ... அந்த நிதர்சனமான அன்பில் காதல் வாழும் என்று யாரோ கூறியவை அவள் மனதை தட்டி விட்டுப் போக ப்ரியாவின் மனம் மெல்ல மெல்ல காதல் வயப்பட ஆரம்பித்தது. அவன் மீது தன் அன்பை பூரணமாய் ஆழமாக பொழிய ஆரம்பித்தாள்.

காதல் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தேன்!
எனக்கு அதையும்கற்பித்தவன் நீதான்!
என்னை அறியாமலே எனக்கு காதலை ஊட்டிவிட்டாய்!
இப்போது என்நினைவில் நீயே உலாவுகிறாய்

முரளியின் மீது ப்ரியா வின் காதல் எல்லைகடந்து ஊடுறவ ஆரம்பித்தது.

வானொலியில் ஒலித்த பாடல் அவள் நினைவை திசை திருப்பியது அந்தப் பாடல்.

அந்தப் பாடலின் வரிகள் அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்... என்று வருகிறதே
அந்த பாடலில் உள்ளதைப்போலத்தான் இவரும் என்னை விரும்பத்தொடங்கிய பிறகு சிகரெட்> குடி என்று எல்லாத்தையும் விட்டுப்போட்டார். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் நிற்கிறாள் என்பது எத்தணை நிதர்சனமானது தன் வாழ்விலும் நிதர்சனமாக விட்டதே என்ற பெருமிதம் அவளுக்குள் எங்கும் துளிர்விட, அவள்முகத்தில் என்றுமில்லாத ஒர் பிரகாசம்.

கன்னத்து கிண்ணம் அதில் தேன் ததும்பும்
அன்னத்தின் எண்ணமதில் உயிர் துடிக்கும்
உன் கண்கள் என்னை பார்த்திட்ட போதும்
உன் கைகள் என்னை தீண்டும் போதும்
உன் இதழ்கள் என்னை மொழிபகரும் போதும்
நீ வாசம் செய்யும் சுவாசக் காற்றை நான் சுவாசித்த போது
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்காக
பிறந்தவன்...
அவள் ஆத்மார்த்தமாக எண்ணிக் கொண்டவள்
" உண்மையிலேயே நீங்கள் எல்லாத்தையும் விட்டுப்போட்டியளே எனக்கிருக்கிற சந்தோசத்திலே என்ன செய்றது என்டே தெரியல. " தன் மகிழ்ச்சியை எப்படித் தெரிவிப்பது என்று தெரியாத நிலையில் திண்டாடிக்கொண்டிருந்தவேளையில் அவன் "stop it " குரலை கொஞ்சம் உயர்த்தி அன்பாக " பொறும்மா நான் சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிடுறேனே" என்றவன் சற்றே கவலையாக "உன்னை காதலிக்க தொடங்கியபிறகு கையில்ல காசு நிற்கிறதே இல்லை தெரியுமா.. " என்று கூறத் தொடங்கிய போது அவள் முகம் சற்றே வாடியதை கவனிக்கத் தவறிவில்லை அவன்.

அறிஞர்
03-10-2006, 07:00 PM
முதலில் ஷாருக் கான் படத்தை பார்த்தவுடன்... படத்திற்கு விமர்சனமோ என எண்ணினேன்... பின் கதை...

காதலிற்காக தியாகம் செய்த காரியங்களை படித்தால்.. .முடிவில் ஒரு சிரிப்பு.......

இன்னும் எழுதுங்கள்... அன்பரே

Shanmuhi
03-10-2006, 08:30 PM
தங்கள் விமர்சனத்துக்கு நன்றிகள்.
உங்களை கொஞ்சமாவது சிரிக்க வைக்க வேண்டும் என்ற சிறு முயற்சி...

pradeepkt
04-10-2006, 05:17 AM
சரி ஏதோ ஒரு விதத்துல காசு போவத்தானே செய்யும்... காதலும் ஒரு போதைதான். உடலை உறுத்தாமல் உள்ளத்தைக் குலைக்கும் போதை!

இன்னும் எழுதுங்கள் சண்முகி அக்கா

gragavan
04-10-2006, 02:03 PM
காதல்னாலே காசு போய்த்தான ஆகனும்...இதுல என்ன அதிசயம்..கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆசன்னா முடியுமா!

அறிஞர்
04-10-2006, 02:14 PM
காதல்னாலே காசு போய்த்தான ஆகனும்...இதுல என்ன அதிசயம்..கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆசன்னா முடியுமா! அதான் இராகவன் காதல் வயப்படாமல் தெளிவாக இருக்கிறீரா....

தாமரை
04-10-2006, 02:34 PM
காதல்னாலே காசு போய்த்தான ஆகனும்...இதுல என்ன அதிசயம்..கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆசன்னா முடியுமா!
காதல் கூழா இல்லை மீசையா??

ஓவியா
04-10-2006, 03:45 PM
ரசித்து படித்தேன்,
நல்ல ஆரம்பம்....முடிவில் ஒரு புன்னகை....

தொடரவும்
வாழ்த்துக்கள்.....

ஷன்முகி யக்கோய்,
பார்த்திர்களா உங்களை மீண்டும் எழுத வைத்துள்ளேன்.....:D


பின் குறிப்பு
சில ஆண்கள் காதலுக்கு பின் தான் இந்த மது, புகை, தாடினு.....
சவகசத்தை தேடுரங்களே........எத்தனை தமிழ் படம் பர்த்திருக்கேன்.....:D

gragavan
04-10-2006, 03:51 PM
காதல் கூழா இல்லை மீசையா??காசுதான கூழு. காதல் மீசைதான். மீசையில்லாமலும் இருக்கலாம். கூழில்லாம இருக்க முடியுமா?

ஓவியா
04-10-2006, 04:10 PM
காசுதான கூழு. காதல் மீசைதான். மீசையில்லாமலும் இருக்கலாம். கூழில்லாம இருக்க முடியுமா?


அட நம்ப தேங்காய் பன் புலவரா இது.......:eek:

என்ன ஞானம்.........தத்துவானந்தா.......:D

Shanmuhi
04-10-2006, 07:27 PM
கருத்து சொன்னவர்களுக்கு நன்றிகள்...

Shanmuhi
04-10-2006, 07:29 PM
ரசித்து படித்தேன்,
நல்ல ஆரம்பம்....முடிவில் ஒரு புன்னகை....

தொடரவும்
வாழ்த்துக்கள்.....

ஷன்முகி யக்கோய்,
பார்த்திர்களா உங்களை மீண்டும் எழுத வைத்துள்ளேன்.....:D


பின் குறிப்பு
சில ஆண்கள் காதலுக்கு பின் தான் இந்த மது, புகை, தாடினு.....
சவகசத்தை தேடுரங்களே........எத்தனை தமிழ் படம் பர்த்திருக்கேன்.....:D

உண்மைதான் மீண்டும் உங்களால் தான் எழுதுகிறேன்...

ஓவியா
04-10-2006, 07:38 PM
உண்மைதான் மீண்டும் உங்களால் தான் எழுதுகிறேன்...அப்படி போடு அறுவாளா,...............:D

ஒரு எழுத்தாளினியை உருவாக்கிய பெறுமை தமிழ் மன்றத்தை சேரட்டும்................:) :)

சுகந்தப்ரீதன்
03-03-2008, 07:47 AM
சண்முகி அக்கா...!!

கதைக்கு முன்னாடி படத்தை போட்டு...அதற்கு பொருத்தமா காட்சிகளை காதல் உணர்வோடு நகர்த்திட்டு போயி.. யதார்த்தமா கடைசியில நைசா நக்கல்லடிச்சிருக்கீங்க பாரு.. அங்கதான் உங்களோட திறமை வெளிபடு அக்கா..!! வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!அப்படி போடு அறுவாளா,...............:D
ஒரு எழுத்தாளினியை உருவாக்கிய பெறுமை தமிழ் மன்றத்தை சேரட்டும்................:) :)

இப்ப இரண்டு அக்காக்களோட எழுத்தை காணாத வருத்தமும் அதே தமிழ் மன்றத்தைதான் சேரும் அக்கா..!

இளசு
19-03-2008, 10:41 PM
இரண்டு கெட்ட பழக்கங்கள் ( புகை + மது) = ஒரு கெட்ட பழக்கம் (காதல்)..

கவிதையாய்க் கதையெழுதி ஒரு நிதர்சன நகைச்சுவையுடன்
நச்சென முடித்த ஷண்முகி அவர்களுக்குப் பாராட்டுகள்!

SivaS
20-06-2008, 09:34 AM
ஒரு ஜோக் சொல்ல இவ்வளவு மினக்கெட்டு இருக்க வேன்டாமே

சின்னவனின் சிறு பிள்ளை விமர்சனம்