PDA

View Full Version : ஊனமான நிரந்தர முகவரி

ஓவியா
03-10-2006, 06:27 PM
ஒரு உண்மைக்கதை, ஊமையாய்,

என் 1000வது பதிவு

http://en.epochtimes.com/news_images/2006-10-11-india-child.jpg

http://perfilip.typepad.com/photos/uncategorized/poor_needy_child.jpg

ஊனமான நிரந்தர முகவரி......................

சந்தேகம் என்ற மாயை
சாக வேண்டும் என்று
தீயிட்டுகொண்ட தாயுடன் கருகியதா
இவள் நிரந்தர முகவரி

கடந்த காலம் செழிக்க
சதா நீர் உற்றி சுயனினைவில்லாமல்
செத்துபோன அப்பாவுடன் கறைந்ததா
இவள் நிரந்தர முகவரி

காசு வேண்டும் என்று மாமா
அக்காவை துபாய்க்கு பொட்டலம் கட்டினாரே
அவளுடன் பொட்டலம் பொய் விட்டதா
இவள் நிரந்தர முகவரி

இல்லை பசிக்கு திருடிய
அண்ணானுடன் சிரையில் அடைபட்டிருகின்றதா
இவள் நிரந்தர முகவரி

நீங்கள் சொல்லுங்களேன்
எங்கே தொலைந்தது இந்த சிறுமியின் நிரந்தர முகவரி...........

leomohan
03-10-2006, 06:38 PM
1000 பதிப்புகளுக்கு வாழ்த்துக்கள். கவிதை அருமையோ அருமை. 1000 பதிப்புக்கு முத்தாய்ப்பாய் இருந்தது.

அறிஞர்
03-10-2006, 07:16 PM
சிந்திக்க வைக்கும் ஏழைச்சிறுமியின் அவல நிலை...

தொடருங்கள்.. ஓவியா...

Shanmuhi
03-10-2006, 08:34 PM
1000 கருத்தாக அமைந்த கவிதை அருமை.
எங்கே தொலைந்தது இந்த சிறுமியின் நிரந்தர முகவரி. கவிதைத் தலைப்பும் அருமை.
வாழ்த்துக்கள்...

Mano.G.
04-10-2006, 12:08 AM
தங்கை ஓவியாவின் 1000மாவது பதிப்பு
அருமையான கவிதையில்
"நிரந்தர முகவரி"

அருமை
மேலும் பல ஆயிரம் பதிவுகள்
படைக்க வாழ்த்துக்கள்

உங்கள் மலேசிய சகோதரன்
மனோ.ஜி

மயூ
04-10-2006, 03:09 AM
1000 ஆவது பதிப்பு அருமை அக்கா!
ஒரு அவலைப் பெண்ணின் இயலாமையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்..
இதுதான் இன்று பல இடங்களில் நிஜம்.. மத்திய கிழக்கிற்கு இலங்iகியல் இருந்துபல பெண்கள் செல்வார்கள்.. அவர்களில் பெரும்பாலானோர் அங்கே அடிபட்டு உதைபட்டு வருகின்றனர். பலர் படுத்த படுக்கையாக வருகின்றனர். தொலைக்காட்சியில் பார்க்கும் போது இரத்தம் கொதிக்கும். இதற்கு முடிவுகட்ட பணிப்பெண்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்புவதை தடைசெய்ய வேண்டும். பெண்மையை புரியாதவன் அரபியானால் என்ன ஆப்கானிஸ்தான் காரன் என்றால் என்ன நடுவீதியில் வைத்து சுட்டுத்தள்ளப்பட வேண்டியவன்....

pradeepkt
04-10-2006, 05:09 AM
சுடும் உண்மை. பாராட்டுகள் ஓவியா.

meera
04-10-2006, 06:34 AM
ஓவியா உங்களின் 1000வது பதிப்பு அருமையாய் இருக்கிறது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

இனியவன்
04-10-2006, 05:25 PM
மனதைச் சுடும் வினா?
விடை ,, ,, ,, ,,
ஓவியா தொடரட்டும்
உங்கள் கணை.

ஓவியா
04-10-2006, 07:17 PM
1000 பதிப்புகளுக்கு வாழ்த்துக்கள். கவிதை அருமையோ அருமை. 1000 பதிப்புக்கு முத்தாய்ப்பாய் இருந்தது.

நன்றி மோகன்

சிந்திக்க வைக்கும் ஏழைச்சிறுமியின் அவல நிலை...

தொடருங்கள்.. ஓவியா...

நன்றி அறிஞர்

ஓவியா
04-10-2006, 07:23 PM
1000 கருத்தாக அமைந்த கவிதை அருமை.
எங்கே தொலைந்தது இந்த சிறுமியின் நிரந்தர முகவரி.
கவிதைத் தலைப்பும் அருமை.
வாழ்த்துக்கள்...

நன்றி.

ஆம்,
இதை போல் எத்தனை-எத்தனை காரணங்களால்
எத்தனை-எத்தனை மனிதனின் நிரந்தர முகவரி தொலைந்துள்ளது தெரியுமா....
கடந்துள்ள அவனுக்கே வேளிச்சம்

ஓவியா
04-10-2006, 07:25 PM
தங்கை ஓவியாவின் 1000மாவது பதிப்பு
அருமையான கவிதையில்
"நிரந்தர முகவரி"

அருமை
மேலும் பல ஆயிரம் பதிவுகள்
படைக்க வாழ்த்துக்கள்

உங்கள் மலேசிய சகோதரன்
மனோ.ஜி

அவசர அவசரமாக 10 நிமிடத்தில் எழுதியது.....

அண்ணன் பாராட்டினால் ஒரு தனி சந்தொஷம் தான்,

நன்றி அண்ண

ஓவியா
04-10-2006, 07:32 PM
1000 ஆவது பதிப்பு அருமை அக்கா!
ஒரு அவலைப் பெண்ணின் இயலாமையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்..
இதுதான் இன்று பல இடங்களில் நிஜம்.. மத்திய கிழக்கிற்கு இலங்கியல் இருந்துபல பெண்கள் செல்வார்கள்.. அவர்களில் பெரும்பாலானோர் அங்கே அடிபட்டு உதைபட்டு வருகின்றனர். பலர் படுத்த படுக்கையாக வருகின்றனர். தொலைக்காட்சியில் பார்க்கும் போது இரத்தம் கொதிக்கும். இதற்கு முடிவுகட்ட பணிப்பெண்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்புவதை தடைசெய்ய வேண்டும். பெண்மையை புரியாதவன் அரபியானால் என்ன ஆப்கானிஸ்தான் காரன் என்றால் என்ன நடுவீதியில் வைத்து சுட்டுத்தள்ளப்பட வேண்டியவன்....

நன்றி மயூ

தம்பி மயூரசேன்,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே...
ஒரு சில கதையை கேட்டாள் அழுகையே வரும்...
மனம் தூங்காது...

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி

ஓவியா
04-10-2006, 07:35 PM
சுடும் உண்மை. பாராட்டுகள் ஓவியா.

அடடா.....:eek: :eek:
இது பிரதீப்பா...............

எங்க போய் சொல்லுவேன் இந்த கதையை....;)

பிரதீப் கையால (மோதிர விரலால்......) பாராட்டா....நன்றி மக்கா

ஓவியா
04-10-2006, 07:42 PM
ஓவியா உங்களின் 1000வது பதிப்பு அருமையாய் இருக்கிறது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி மீரா,

ஆனால் உங்களின் கவிதிரனுக்கு இது சாதாரனம்......
கருவை உங்களிடம் கொடுத்திருந்தாள் சும்ம பிச்சு ஒதரி இருபீங்க..... ஆமாதானே...........:D

ஓவியா
04-10-2006, 07:52 PM
மனதைச் சுடும் வினா? விடை ,, ,, ,, ,, ஓவியா தொடரட்டும் உங்கள் கணை.

நன்றி இனியவன்

இது தொடரகூடாத ஒரு கதை....
கணைகள் தொடரும்.....

ஆமா
கனிவான இனியவன் நலமா...
தாங்களை காண்பது அறிதாகி வருகின்றதே....
தயாரிப்பளர், .....தமிழ் படம் எதேனும் எடுக்க ஆரம்பிச்சச்சா......:D

meera
05-10-2006, 04:51 AM
நன்றி மீரா,

ஆனால் உங்களின் கவிதிரனுக்கு இது சாதாரனம்......
கருவை உங்களிடம் கொடுத்திருந்தாள் சும்ம பிச்சு ஒதரி இருபீங்க..... ஆமாதானே...........:D
ஓவியா 10 நிமிடத்தில் படைக்கும் திறன் என்னிடம் இல்லை.

உங்களிடம் நான் கற்றுகொள்ள வேண்டிய விஷயம் ஏராளம்.
என்ன இருந்தாலும் நீங்க எனக்கு சீனியர்.எப்பவும் சீனியர் சீனியர் தான்.
பென்ஸ்,அறிஞர்,மனோ,கண்மணி,கிஷோர் ,மோகன்,நீங்க மற்றும் நம் மன்ற நண்பர்களின் உற்சாகமான விமர்சனம் தான் எனக்கு தூண்டுகோள்.

பென்ஸ்
06-10-2006, 03:42 PM
ஓவி மக்கா...

முதலில் ஆனந்தமான பாராட்டுகள்...
மன்றத்தில் நீர்குமிழிகள் போல வந்து செல்லும் சில மனிதர்கள்
மத்தியில் ஒரு அருவியாய் வந்து பொழிந்து செல்வதில் எங்களுக்கு சந்தோசமே....

இனி கவிதை...

முதலில்...
ஓவியா இதை எழுதினாள் என்றால் என்னால் ஒத்து கொள்ள முடியாது...
அந்த அளவு அருமையா இருக்கு... (சும்மா லுலுவாயிக்கு):D :D :D :D

கவிதை என்பது ஆழ்ந்த உணர்ச்சிகளின் வேளிப்பாடு என்பது என் கருத்து,
அதிலும் மனதின் படிமங்களாய் (நன்றி: கவிதா) ஒளிந்து இருக்கு
சிலவற்றி பற்றி சொல்லும் போது வார்த்தைகளும், சொல் நயமும் எங்கிருந்து வரும் என்றே தெரியாது....
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஓவி...

மன்றம் ஒரு நல்ல குடும்பம்...
இங்கு கவிதைகள் கவிதைகளாக மட்டும் அல்லாமல்,
உணர்வுகளாகவும் புரிந்து கொள்ளபடுகின்றன...

மன்றம்..
இந்த முகவரி, ஒரு தற்காலிக முகவரியா என்று தெரியாது ஆனால்,
இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறவுகளாய்...
இதனால் பிரிவுதான் ஊனமாய் நிற்கிறது....

மதி
07-10-2006, 02:21 AM
அக்கா...
அருமையான அர்த்தம் பொதிந்த கவிதை..
பாராட்டுக்கள்..!

முகவரிகள் உலகில் யாருக்கும் நிரந்திரமாய் இருப்பதில்லை. ஆயினும் இது போன்ற பல உண்மை ஊமைக் கதைகள் தொடராமல் இருக்க வேண்டுவோம்.!

guna
11-10-2006, 04:57 AM
அருமையான கவிதை..
வாழ்துக்கள் ஓவியா

வலித்தது இதயம், கவிதையோடு இனைதிருக்கும் சிருமியை பார்த போது..

குணா

ஓவியா
11-10-2006, 06:31 PM
ஓவி மக்கா...

முதலில் ஆனந்தமான பாராட்டுகள்...
மன்றத்தில் நீர்குமிழிகள் போல வந்து செல்லும் சில மனிதர்கள்
மத்தியில் ஒரு அருவியாய் வந்து பொழிந்து செல்வதில் எங்களுக்கு சந்தோசமே....

இனி கவிதை...

முதலில்...
ஓவியா இதை எழுதினாள் என்றால் என்னால் ஒத்து கொள்ள முடியாது... அந்த அளவு அருமையா இருக்கு... (சும்மா லுலுவாயிக்கு):D :D :D :D

கவிதை என்பது ஆழ்ந்த உணர்ச்சிகளின் வேளிப்பாடு என்பது என் கருத்து, அதிலும் மனதின் படிமங்களாய் (நன்றி: கவிதா) ஒளிந்து இருக்கு
சிலவற்றி பற்றி சொல்லும் போது வார்த்தைகளும், சொல் நயமும் எங்கிருந்து வரும் என்றே தெரியாது....
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஓவி...

மன்றம் ஒரு நல்ல குடும்பம்...
இங்கு கவிதைகள் கவிதைகளாக மட்டும் அல்லாமல்,
உணர்வுகளாகவும் புரிந்து கொள்ளபடுகின்றன... ....

நன்றி பெஞ்சமின்,

பெஞ்சுவும் பாராட்டியாச்சு......:D :D

ஓவி மக்கா...
மன்றம்..
இந்த முகவரி, ஒரு தற்காலிக முகவரியா என்று தெரியாது ஆனால்,
இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறவுகளாய்...
இதனால் பிரிவுதான் ஊனமாய் நிற்கிறது....

உண்மைதான் பெஞ்சு.........

ஓவியா
11-10-2006, 06:42 PM
அக்கா...
அருமையான அர்த்தம் பொதிந்த கவிதை..
பாராட்டுக்கள்..!

முகவரிகள் உலகில் யாருக்கும் நிரந்திரமாய் இருப்பதில்லை. ஆயினும் இது போன்ற பல உண்மை ஊமைக் கதைகள் தொடராமல் இருக்க வேண்டுவோம்.!

நன்றி ராஜேஷ்,

ஊமைக் கதைகள் தொடராமல் இருக்க....
முகவரியில்லா ஆண்டவனிடம் வேண்டுவோம்..

நலமா மதி,
கொஞ்ச நாளாவே ரொம்ப சிக்கனமா பதிவும் பின்னூட்டமும் வருதே,
என்ன மக்கா காரணம்....
அடிக்கடி வந்து போகவும்...
நேரம் இருப்பின் அதிகம் பின்னூட்டம் போடவும்...

மதி
11-10-2006, 06:58 PM
நலமா மதி,
கொஞ்ச நாளாவே ரொம்ப சிக்கனமா பதிவும் பின்னூட்டமும் வருதே,
என்ன மக்கா காரணம்....
அடிக்கடி வந்து போகவும்...
நேரம் இருப்பின் அதிகம் பின்னூட்டம் போடவும்...
நான் நலமாருக்கேன் அக்கா...
நீங்க நலமா?
இந்த நேரத்துல அலுவலகத்துல இருந்து பின்னூட்டம் போடும் போதே புரியும்னு நினைக்கிறேன்..ஹ்ம்..இன்னும் கொஞ்ச நாள் தான். சீக்கிரம் வந்து கலாய்க்கிறேன்..

ஓவியா
11-10-2006, 07:05 PM
அருமையான கவிதை..
வாழ்துக்கள் ஓவியா

வலித்தது இதயம்,
கவிதையோடு இனைதிருக்கும் சிருமியை பார்த போது..

குணா

நன்றி சுகுணா,

ஒரு விசயம் சுகுணா,

நான் முன்முதலில் இந்த படத்தை பாத்தவுடனே ஒரு கணம் அதிர்ந்தேன்,
அய்யோ என்ன இந்த பாப்பா குட்டி ஜட்டிகூட இல்லாமல் மணலில் இப்படி அமர்ந்து.....பசி அவ்வலவு கொடுமையா...இல்லை.......(போல்)முகவரி அற்றவளானு.....அதன் தூண்டலே இந்த கவிதை...

crisho
14-10-2006, 07:30 AM
லேட்டா வந்தாலும் சகோதரி ஓவியாக்கு லேட்டஸ்டா வாழ்த்துக்கள்!

கவிதை பிரமாதம்!

ஓவியா
16-10-2006, 05:00 PM
லேட்டா வந்தாலும் சகோதரி ஓவியாக்கு லேட்டஸ்டா வாழ்த்துக்கள்!

கவிதை பிரமாதம்!

நன்றி கிஷோர்

ஆதவா
14-01-2007, 06:13 PM
ஒரு உண்மைக்கதை, ஊமையாய்,

என் 1000வது பதிவு

ஊனமான நிரந்தர முகவரி......................

சந்தேகம் என்ற மாயை
சாக வேண்டும் என்று
தீயிட்டுகொண்ட தாயுடன் கருகியதா
இவள் நிரந்தர முகவரி

கடந்த காலம் செழிக்க
சதா நீர் உற்றி சுயனினைவில்லாமல்
செத்துபோன அப்பாவுடன் கறைந்ததா
இவள் நிரந்தர முகவரி

காசு வேண்டும் என்று மாமா
அக்காவை துபாய்க்கு பொட்டலம் கட்டினாரே
அவளுடன் பொட்டலம் பொய் விட்டதா
இவள் நிரந்தர முகவரி

இல்லை பசிக்கு திருடிய
அண்ணானுடன் சிரையில் அடைபட்டிருகின்றதா
இவள் நிரந்தர முகவரி

நீங்கள் சொல்லுங்களேன்
எங்கே தொலைந்தது இந்த சிறுமியின் நிரந்தர முகவரி...........

உங்கள் குறிப்பேழையில் நுழையும் போது கவனித்தேன்..

ஓவியா காவியம் படைப்பவரா??????

இது முதல் கவிதையா? முதல் ஆயிரங்கவிதையா?
நீங்கள் எழுதியதுதானா/.?? (அருமைங்க..... பெஞ்சமின் மாதிரி லுலுவாயி)
இத்தனை திறமை வெச்சிருக்கீங்க,, வேற திரி இன்னும் கொளுத்தாம இருக்கீங்க..??
சின்ன சின்ன இலக்கணப்பிழை (எழுத்துப்பிழை) சரிசெய்தால் லண்டனிலிருந்து அருமையான க்விதாயினி தயார்,,,

எழுதுங்க கவிதைகளை.... எனக்கான வேண்டுகோள் மட்டுமல்ல.. மன்றத்திற்காக....

ஓவியா
14-01-2007, 06:38 PM

நன்றி ஆதவரே

நான் சிறு குழந்தையாக இருந்த பொழுதுதான் தமிழ் பயின்றேன்...அதுவும் ஏழு வயதிலிருந்து 11 வயதுவரைதான்........அதனால் தமிழ் மொழியை சரிவர எழுதி பழகவில்லை, ஓரளவு பிழையின்றி பேசுவேன் அவ்வளவுதான் :D

ஆதவா
14-01-2007, 06:47 PM
நன்றி ஆதவரே

நான் சிறு குழந்தையாக இருந்த பொழுதுதான் தமிழ் பயின்றேன்...அதுவும் ஏழு வயதிலிருந்து 11 வயதுவரைதான்........அதனால் தமிழ் மொழியை சரிவர எழுதி பழகவில்லை, ஓரளவு பிழையின்றி பேசுவேன் அவ்வளவுதான் :D

நீங்கள் பரவாயில்லை ஓவி.. இங்கே பிழையென்ற வார்த்தைக்கு அர்த்தமறியா தமிழர்கள் உள்ளார்களே@ (உள்ளார்களே@1) என்னே பிழை??

ஓவியா
14-01-2007, 06:51 PM
நீங்கள் பரவாயில்லை ஓவி.. இங்கே பிழையென்ற வார்த்தைக்கு அர்த்தமறியா தமிழர்கள் உள்ளார்களே@ (உள்ளார்களே@1) என்னே பிழை??

ஆமாம் அவர்கள் டமிலர்கல்

nonin
15-01-2007, 03:55 AM
உடுத்த ஆடையின்றி ஓராயிரம் கனவுகள் - எதிர்காலம்
விடுக்கும் கேள்விகளுக்கு பதிலறியா பார்வை.
தருமமிகு அரசாங்கம் போடும் அந்த கருமம் பிடித்த ஐந்தாண்டு திட்டத்தால் தொலைந்தது
இவளின் நிரந்தர முகவரி

ஓவியா
15-01-2007, 12:13 PM
அழகா சொன்னீர்கள் நோனின்

மிக்க நன்றி

மதுரகன்
15-01-2007, 04:24 PM
ஓவியா உங்கள் வரிகளில் சிரத்தை இருக்கின்றது,
வார்த்தைகளில் நளினம் இருக்கின்றது...
எங்கள் அகராதியில் நீங்கள் கவிஞர்தான் பயப்படாமல் கவிதைகளை எழுதித்தள்ளுங்கள்....

இரண்டரை வருடங்களுக்கு முன்னால் கவிதை எப்படி எழுதுவது என்று
சிந்தித்தவன் நான் இப்பொழுது ஏதோ கவிதை என சொல்லும் வண்ணம் ஏதோ எழுதுகின்றேன் என்றால் அது துணிந்து இறங்கியமையால்தான்..
வரவேற்கிறோம் கவிஞரே....

மன்மதன்
05-03-2007, 06:23 PM
அடடே இப்போதான் பார்க்கிறேன்..

சந்தேகம் என்ற மாயை
சாக வேண்டும் என்று
தீயிட்டுகொண்ட
தாயுடன் கருகியதா

கடந்தகாலம் செழிக்க
சதா நீரூற்றி
சுய
நினைவில்லாமல்
செத்துப்போன
அப்பாவுடன்
கறைந்ததா

பணத்திற்காக
அக்காவை துபாய்க்கு
பொட்டலம் கட்டினாரே
அதனுடன்
போய் விட்டதா

இல்லை பசிக்கு
திருடிய
அண்ணனுடன்
சிறையில்
அடைபட்டுக் கிடக்கின்றதா

இவள்
நிரந்தர
முகவரி

ஓவியா எப்பவாவதுதான் கொடுக்கிறார். நச்சென்று இருக்கிறது.

ஆதவா
05-03-2007, 06:27 PM
ஆமாமாம்/// கவிதைப் போட்டியி கடைசி நேரத்தில் பங்கெடுத்து பட்டம் வாங்கிவிட்டாரே!!!

அறிஞர்
05-03-2007, 06:51 PM
ஆமாமாம்/// கவிதைப் போட்டியி கடைசி நேரத்தில் பங்கெடுத்து பட்டம் வாங்கிவிட்டாரே!!!
கடைசி நேர தாக்குதல் தான் நல்ல பலனை தருகிறது என யோசித்துள்ளாரோ... என்னவோ... .
அதான் இந்த முறையும் அப்படியே செய்துள்ளார்.

மனோஜ்
05-03-2007, 07:27 PM
ஓவியா உங்கள் 1000 மாவது கவிதை படித்ததில் மகிழ்ச்சி
கவிதை அருமையாக உள்ளது நன்றி

டாக்டர் அண்ணாதுரை
06-03-2007, 12:56 AM
ஏழைகளின் அவலங்களின் ஓவியம்!
'உயிர் கொடுத்து வரைந்த ஓவியத்தை
குப்பையில் எரிக்கிறதே ....அந்தக் கரங்களை பிடியுங்கள்..
வெட்டுவது நானாக இருக்கட்டும்!
குழைந்தைகளை தீக் குச்சியில் தீண்டும்
மிருகங்களை பிடியுங்கள்....
இன்று நான் அசைவமாய் இருந்துவிட்டு போகிறேன்!

ஓவியா.....இது உங்களின் அற்புதமான கவிதையை தொடர்ந்து
பின் வரக்கூடிய அடியேனின் அடுத்த கவிதை முயற்சி.
எனது அடுத்த கவிதைக்கு அடி எடுத்து கொடுத்த
தங்களுக்கு இனிய நன்றி.
அன்புடன் அன்பன்
ஆனந்த்

ஓவியன்
06-03-2007, 02:17 AM
நிதர்சனத்தை எடுத்துரைத்து இருக்கிறீர்கள்!

வாழ்த்துக்கள்!

ஓவியா
06-03-2007, 02:35 PM
மதுரகன், மன்மதன், மனோஜ் அலேக்ஸ், ஓவியன், ஆதவா மற்றும் அறிஞருக்கு நன்றிகள் பல

கடைசி நேர தாக்குதல் தான் நல்ல பலனை தருகிறது என யோசித்துள்ளாரோ... என்னவோ... .
அதான் இந்த முறையும் அப்படியே செய்துள்ளார்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை

எழுத்துப்பிழைத்திருத்தம் செய்ய தாமதமாகி விட்டது. :D
:angry:

ஓவியா
06-03-2007, 02:40 PM
ஏழைகளின் அவலங்களின் ஓவியம்!
'உயிர் கொடுத்து வரைந்த ஓவியத்தை
குப்பையில் எரிக்கிறதே ....

அந்தக் கரங்களை பிடியுங்கள்..
வெட்டுவது நானாக இருக்கட்டும்!
குழைந்தைகளை தீக் குச்சியில் தீண்டும்
மிருகங்களை பிடியுங்கள்....
இன்று நான் அசைவமாய் இருந்துவிட்டு போகிறேன்!

அருமையான சிந்தனை, பாராட்டுகிறேன்

ஓவியா.....இது உங்களின் அற்புதமான கவிதையை தொடர்ந்து
பின் வரக்கூடிய அடியேனின் அடுத்த கவிதை முயற்சி.
எனது அடுத்த கவிதைக்கு அடி எடுத்து கொடுத்த
தங்களுக்கு இனிய நன்றி.

அன்புடன் அன்பன்
ஆனந்த்

வணக்கம் டாக்டர்.

தங்களின் விமர்சனதிற்க்கு மிக்க நன்றி

அன்பாய்
ஓவியா

அக்னி
11-05-2007, 11:11 AM
வாழ்நிலையின் உண்மைகளை ஆழமாகத் தொட்டிருக்கிறீர்கள். ஏழ்நிலையின் நெருக்கும் தருணங்களை அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.

பலருக்குப் பல முகவரிகள் இருப்பினும், பலருக்கு முகவரிகளே இல்லை...

இந்த முகவரி, உங்கள் கவித்திறனின் முகவரி...

lolluvathiyar
22-05-2007, 08:15 AM
இது என் கன்னில் படாமல் இருந்தற்க்கு வருந்துகிறேன்
திட்டமிட்டு 1000 ஆவது பதிப்பை தந்த ஓவியாவுக்கு
பாராட்டு மற்றும் மணதை பிழிந்த காரனத்துக்காக
25 இ பணமும் தருகிறேன்

ஓவியா
23-05-2007, 12:31 PM
வாழ்நிலையின் உண்மைகளை ஆழமாகத் தொட்டிருக்கிறீர்கள். ஏழ்நிலையின் நெருக்கும் தருணங்களை அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.

பலருக்குப் பல முகவரிகள் இருப்பினும், பலருக்கு முகவரிகளே இல்லை...

இந்த முகவரி, உங்கள் கவித்திறனின் முகவரி...

மிக்க நன்றி.. உங்கள் படைப்புகளும் அருமை.

இது என் கன்னில் படாமல் இருந்தற்க்கு வருந்துகிறேன்
திட்டமிட்டு 1000 ஆவது பதிப்பை தந்த ஓவியாவுக்கு
பாராட்டு மற்றும் மணதை பிழிந்த காரனத்துக்காக
25 இ பணமும் தருகிறேன்

நன்றி குருவே.

இதயம்
29-05-2007, 04:42 AM
1000-வது பதிவு மட்டும் சிறப்பு அல்ல. அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதையும், அதன் கருப்பொருளும், அதற்காக நீங்கள் இட்ட புகைப்படமும் உங்கள் படைப்பை இன்னும் உயர்த்துக்கிறது. ஆனால், கொடுத்த புகைப்படத்தின் கனம் மட்டும் மனதை இரணமாக்குகிறது.

சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்..!!

சிவா.ஜி
29-05-2007, 04:53 AM
மனதைத்தொட்ட கவிதை. மனதைப்பிழிந்த படம். ஆயிரமாவது படைப்புக்கு
ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்.

ஓவியா
31-05-2007, 08:21 PM
1000-வது பதிவு மட்டும் சிறப்பு அல்ல. அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதையும், அதன் கருப்பொருளும், அதற்காக நீங்கள் இட்ட புகைப்படமும் உங்கள் படைப்பை இன்னும் உயர்த்துக்கிறது. ஆனால், கொடுத்த புகைப்படத்தின் கனம் மட்டும் மனதை இரணமாக்குகிறது.

சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்..!!

நன்றி ஃஜபார்.

பார்க்கும் நமக்கே இதயம் கணத்தால், அதை அனுபவிக்கும் அந்த குழந்தைக்கு, பின் அவள் வளர்ந்ததும் இதை உணரும் பொழுது ???? தான் மிஞ்சும். நன்றி நண்பரே

மனதைத்தொட்ட கவிதை. மனதைப்பிழிந்த படம். ஆயிரமாவது படைப்புக்கு
ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பரே.
நேரம் இருக்கும் பொழுது உங்கள் படைப்புகளை அவசியம் விமர்சிக்கிறேன்.

..........................................................................................................................
கொசுரு:
இப்ப எனக்கு 5000 பதிவுக்கே வாழ்த்து போட்டாச்சு, இது 1000 பதிவுதான். ஹி

அமரன்
08-08-2007, 07:02 PM
அருமையான கவிதை.. முதல்க்கவிதை என்று நம்ப முடியவில்லை. ஊனமான நிரந்தர முகவரி என்கின்ற தலைப்பே வசீகரிகின்றது. நன்றி.

இலக்கியன்
08-08-2007, 07:08 PM
வாழ்த்துக்கள் ஓவியா கலங்கவைத்தது உங்கள்வரிகள்
உங்கள் பதிவுகள் தொடரா வாழ்த்தும் இலக்கியன்

ஓவியா
09-08-2007, 01:49 AM
வாழ்த்துக்கள் ஓவியா கலங்கவைத்தது உங்கள்வரிகள்
உங்கள் பதிவுகள் தொடரா வாழ்த்தும் இலக்கியன்

நன்றி இலக்கியன். அந்த படம் இன்னும் என் மணக்கண்ணில் அப்படியே உள்ளது.

அருமையான கவிதை.. முதல்க்கவிதை என்று நம்ப முடியவில்லை. ஊனமான நிரந்தர முகவரி என்கின்ற தலைப்பே வசீகரிகின்றது. நன்றி.

நன்றி அமர், இது போல் அமரா காவியம் கோடி உண்டு இவ்வுழகில்.

ஷீ-நிசி
09-08-2007, 05:57 AM
யாரும் இல்லாமல் அநாதைகளாக அலைந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு சிறுவர்/சிறுமியருக்கும் அர்ப்பணம் இந்தக் கவி....

இவர்களின் நிரந்தர முகவரி...எங்கேயிருக்கிறது...

முகவரி இல்லாத அந்த இறைவனிடம்தானே!

வாழ்த்துக்கள் ஓவி!

ஓவியா
09-08-2007, 08:28 PM
நன்றி ஷீ−நிஷி.

kalaianpan
11-08-2007, 08:14 AM
வாழ்த்துக்கள்.......
100வது பதிப்பு
ஒரு மெடல தரலாம் உங்களுக்ககு....
தொடரட்டும் சேவை.....
:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

ஓவியா
11-08-2007, 05:07 PM
இது 1000 பதிவு.

.

ஓவியா
11-08-2007, 05:07 PM
கலையன்பன், இது 1000 பதிவு.

உங்கள் பாராட்டிற்க்கு நன்றி, இது ஒரு 10 நிமிடத்தில் எழுதிய கவிதை.

வலையில் சுற்றும் பொழுது இந்த சிறுமியின் படம் கண்ணில் பட்டது, அதை எண்ணத்தில் கற்பனை கொண்டு செத்துக்கினேன் அவ்வளவுதான். நன்றி.

இணைய நண்பன்
11-08-2007, 05:30 PM
பத்து நிமிடத்தில் கவிவடித்தாலும் அழகாக வடித்திருக்கிங்க.உங்கள் கவிகள் எல்லாம் ஆழமான உருக்கமான கருத்தை தருகிறது.நன்றி.வாழ்த்துக்கள்

ஓவியா
11-08-2007, 05:34 PM
நன்றி இக்ராம்,

உங்கள் ரோஜாத்தோட்டத்தில் இன்று இரவு நிலாவைப்போல் உலா வருகிறேன், இப்போ வீட்டுக்கு போகிறேன், நன்றி.

இணைய நண்பன்
11-08-2007, 05:42 PM
நன்றி இக்ராம்,

உங்கள் ரோஜாத்தோட்டத்தில் இன்று இரவு நிலாவைப்போல் உலா வருகிறேன், இப்போ வீட்டுக்கு போகிறேன், நன்றி.

நன்றி ஓவியா

பூமகள்
08-02-2008, 11:31 AM
சந்தேகம் என்ற மாயை
சாக வேண்டும் என்று
தீயிட்டுகொண்ட தாயுடன் கருகியதா
இவள் நிரந்தர முகவரி
தீக்குளித்த சீதையின்
பிள்ளையா முகவரி
தொலைத்து முகம்
தேடி நிற்கிறது??

கடந்த காலம் செழிக்க
சதா நீர் உற்றி சுயனினைவில்லாமல்
செத்துபோன அப்பாவுடன் கறைந்ததா
இவள் நிரந்தர முகவரி
தீயினால் சுட்டுவிட்ட
மனம் வேக
தந்தையுமிழந்து தடுமாறுதோ
தளிர் கொழுந்து??

காசு வேண்டும் என்று மாமா
அக்காவை துபாய்க்கு பொட்டலம் கட்டினாரே
அவளுடன் பொட்டலம் போய் விட்டதா
இவள் நிரந்தர முகவரி
காசுப் பிசாசின்
கையில் அகப்பட்டு
கடல் கடந்து
தமக்கை போனதால்
தளர்ந்து நிற்குதோ பூச்செண்டு??

இல்லை பசிக்கு திருடிய
அண்ணானுடன் சிரையில் அடைபட்டிருகின்றதா
இவள் நிரந்தர முகவரி
தமையன் தன்
பசி நீக்க
பறித்து வந்த
ரொட்டி மண்ணில் வீழ
முட்டித் தள்ளி பிரித்ததனால்
கல்லில் தட்டி இறையிடம்
அடித்து இடித்துரைத்ததுவோ..??!!

நீங்கள் சொல்லுங்களேன்
எங்கே தொலைந்தது இந்த சிறுமியின் நிரந்தர முகவரி...........
வறுமை தின்று
ஏப்பம் விட்ட
குழந்தையாகி
தொலைந்ததால் முகவரியும்
தொலைந்ததுவோ??!!

--------------

ஆயிரமாவது கவிதை.. அசத்தல் அக்கா..!!

மனம் தொட்ட கவிதை.. கனக்க வைக்கிறது.

பாராட்டுகள் எனதினிய ஓவியா அக்கா. :)

Narathar
09-02-2008, 04:31 PM
அழகிய கவிதை தந்த ஓவியாவை வாழ்த்துவதா..........
இல்லை எங்கேயோ இருந்ததை எடுத்துத்தந்த பூமகளை வாழ்த்துவதா...???

இது பரவாயில்லை ஆனால் வரவேற்புப்பகுதியில் பழையவர்களை வரவேற்பதுதான் கொஞ்சம் ஓவர் ஹ ஹா

பூமகள்
09-02-2008, 04:34 PM
நன்றிகள் நாரதர் அண்ணா. :)

வரவேற்பில் வரவேற்றது ஒரு போட்டிக்காக நாரதர் அண்ணா..!
அது கண்ணாமூச்சி விளையாட்டு போட்டியில் அமரன் அண்ணா சொல்லியிருந்தார் பின்னூட்டமும் இடுங்க என்று...!!

அதான் எல்லா கண்டுபிடிச்ச திரிக்கும் மேல தூக்கி பதில் போட்டு கொண்டு வந்தேன்..!:rolleyes::)
அதுக்காக, பழையவர்களை நாங்க திரும்ப வரச் சொல்லி வரவேற்க கூடாதா???? :icon_ush:

ஓவியா
08-12-2008, 11:19 PM
தீக்குளித்த சீதையின்
பிள்ளையா முகவரி
தொலைத்து முகம்
தேடி நிற்கிறது??

தீயினால் சுட்டுவிட்ட
மனம் வேக
தந்தையுமிழந்து தடுமாறுதோ
தளிர் கொழுந்து??

காசுப் பிசாசின்
கையில் அகப்பட்டு
கடல் கடந்து
தமக்கை போனதால்
தளர்ந்து நிற்குதோ பூச்செண்டு??

தமையன் தன்
பசி நீக்க
பறித்து வந்த
ரொட்டி மண்ணில் வீழ
முட்டித் தள்ளி பிரித்ததனால்
கல்லில் தட்டி இறையிடம்
அடித்து இடித்துரைத்ததுவோ..??!!

வறுமை தின்று
ஏப்பம் விட்ட
குழந்தையாகி
தொலைந்ததால் முகவரியும்
தொலைந்ததுவோ??!!

--------------

ஆயிரமாவது கவிதை.. அசத்தல் அக்கா..!!

மனம் தொட்ட கவிதை.. கனக்க வைக்கிறது.

பாராட்டுகள் எனதினிய ஓவியா அக்கா. :)

தாமதமாக நன்றி சொல்வதற்க்கு மன்னிக்கவும்.

எனக்கு சிந்திக்க தெரியும் ஆனால் எழுதவராத பொழுது எழுதிய என் கன்னிப்பதிவு.

1000வது பதிவுதான் என் முதல் சுயபடைப்பு.... 999 பின்னூட்டங்களில் குறைந்தது 700 பின்னூட்டம் மன்ற மக்களில் பதிவுகளின் குறை நிறைகளை கண்டு விமர்சித்ததே!!

எனக்கு விமர்சனம் எழுதவே அதிகம் பிடிக்கும், ஆனால் நேரமில்லை. :traurig001:

அழகிய கவிதை தந்த ஓவியாவை வாழ்த்துவதா..........
இல்லை எங்கேயோ இருந்ததை எடுத்துத்தந்த பூமகளை வாழ்த்துவதா...???

இது பரவாயில்லை ஆனால் வரவேற்புப்பகுதியில் பழையவர்களை வரவேற்பதுதான் கொஞ்சம் ஓவர் ஹ ஹா

பூவையே வாழ்த்துங்க அண்ணா, இப்படி ஒரு கவிஞ்சை என் பதிவை பாரட்டியது எனக்கு மகிழ்ச்சிதான்.

பின்னூட்டத்திற்க்கு நன்றி அண்ணா.