PDA

View Full Version : மெல்லக் கொல்வேன் மர்மத் தொடர்



leomohan
02-10-2006, 12:38 PM
மெல்லக் கொல்வேன் மர்மத் தொடர் - 1




ராகவ். 35க்கும் 40க்கும் நடுவில். வெற்றிகரமான வியாபாரி. இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பாண்டி பஜாரில் ஒரு பெரிய 5 நட்சத்திர ஓட்டல்.

பொறியியல் முடித்துவிட்டு நண்பர்களுடன் வெளியே வந்த மூன்று இளைஞர்களில் ஒருவன். பல கனவுகளுடன் வெளியே வந்த மூவரையும் நாட்டின் சட்ட திட்டங்களும் சமுதாயத்தின் தடைகளும் வேகமாக வளரவேண்டிய ஆசைகளும் சந்தித்தன.

சட்டத்தின் நடைமுறை வரைமுறைகளுக்குள் வாழ்ந்தால் வறுமையில் வாழ்ந்து மடிய வேண்டியது தான் என்று உணர்ந்தவர்கள் அனைத்து ஓட்டைகளில் வண்டியை ஓட்டி 15 வருடங்களில் செல்வத்தின் உச்சியை சென்று அடைந்தனர்.

அன்று வெறும் மனமகிழ் மன்றம். பிறகு கான்டின். இன்று 5 நட்சத்திர ஓட்டல். ராகவ். சீராக செல்லும் வாழ்க்கை. வெளிநாட்டிப் பயணங்கள். ஆடம்பர பங்களா. கார். தினம் ஒரு உடை. தினம் ஒரு திறப்பு விழா பரிசளிப்பு விழா. நாளிதழ்களில் பேட்டி.

பல் தேய்க்கும் நேரம் உணவு உண்ணும் நேரம் தவிர்த்து வாயில் உயர்ந்த ரக பைப். தேக்கு மரத்தில் செய்தது. விலை உயர்ந்த புகையிலை பிரத்யேகமாக ஹவானவிருந்த வரவழைக்கப் பட்டது. மது அருந்தும் பழக்கம் இல்லை. பைப்பை எடுத்து அவன் லாவகமாக கையில் வைத்துக் கொண்டு புகை விடும் போது புகை பிடிக்காதவர்கள் கூட புகைப் பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இவனிடம் ஒரு பழக்கம். நண்பர்களுக்காக எதையும் செய்வான். இன்னும் திருமணம் ஆகவில்லை. அதற்கு அவசியம் என்று அவன் நினைக்கவும் இல்லை. அப்பா அம்மா இருந்தார்கள் என்பதற்கு ஒரே சாட்சி அவன் பாடத்தில் ஒரு குழந்தை பிறப்பதற்கு ஒரு ஆணும் பெண்னும் தேவை என்று அவன் படித்தது.

பள்ளிப்பருவத்தில் இருந்த அவன் கூட படித்து நண்பர்கள் இன்று தொழிலில் பார்ட்னர்கள். வேறு என்னக் கவலை இருக்க முடியும் இவனக்கு.

ஆனால் இவனிடத்தில் புகை பிடிப்பதை தவிர்த்து இன்னொரு கெட்ட பழக்கம் உண்டு. அது இந்த மூன்று நண்பர்களிடம் இருக்கும் ஒரு பொது குணம்.

அந்த குணம் எங்கே இவனை கொண்டு போகவிடுகிறது என்று நீங்களே பார்க்லாம்.

leomohan
02-10-2006, 12:39 PM
மெல்லக் கொல்வேன் மர்மத் தொடர் - 2

பிரவீன். கடைசியாக அவன் பெற்றோர்களை சந்தித்தபோது தன்னுடன் படித்த கிறிஸ்துவ பெண்னை மணக்க அனுமதி கேட்க அவர்கள் அதற்கு மறுக்க இனி அவர்கள் முகம் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வட நாட்டிலிருந்து ஓடி வந்தவன்.

வளர்ச்சி சொத்து அனைத்திலும் ராகவ்வைப் போல. ஆனால் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. மது அருந்துவான். ஆனால் அது நண்பர்களை மகிழ்விக்க மட்டும்.

பல முறை மற்ற இரு நண்பர்களுக்கு நடுவில் வரும் சண்டையை பார்த்து ரசிப்பான். அத்துமீறும் போது சமாதானப் படுத்துவான். இந்த மூன்று நண்பர்களின் நட்பு 20 ஆண்டுகளாக இருப்பதற்கு ஒரே காரணம் இவனுடைய பேச்சும் அவர்களை சமாதானப்படுத்தும் குணமும் தான். இவனை அவர்களிருவரும் மதிப்பார்கள்.

வியாபாரம் இந்த அளவு முன்னேறியதற்கும் இவன் தான் காரணம். நகரத்தில் இருக்கும் ஏஜென்ட் டிரைவர் போலீஸ் அரசியல்வாதி சப்ளையர்கள் என்று அனைவரும் இவனையே சந்திப்பார்கள்.
அனைவரையும் நன்றாக கவனித்துக் கொள்வான். அவனுக்காக அவர்களும் சட்டத்தை வளைப்பார்கள்.

குறிப்பாக வரி அலுவர்களின் வீட்டில் டிவி ஃபிரிட்ஜ் வாஷிங் மெஷின் இருக்கிறதென்றால் அது இவனால் தான். வரி ஏய்ப்பில் மேல் பட்டங்கள் பெற்றிருந்தான்.

ஆனால் ஒரு சின்ன குணம். மிகவும் கோபப்பட்டால் இந்த முன்னேற்றம் எல்லாம் எண்ணால் தான் என்று சொல்ல மறுக்க மாட்டான். இதனால் அவர்களிருவரும் சற்று கோபம் அடைந்தாலும் அது உண்மைதான் என்பதால் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம்.

இவனை திருமணம் செய்துக் கொண்ட கரோலினா இவனிடம் மயங்கிய அந்த வடநாட்டு மஞ்சள் தோலிலும் அவனுடைய கொஞ்சும் தமிழிலும். கடைசி ஆண்டு வரை அவனால் வாழைப் பழம் என்று சொல்ல முடியவில்லை.

அவன் கரோலினாவிடம் மயங்கியது அவளுடைய பொறுமையான குணத்தில்.

அந்த மூவருக்கும் உள்ள பொது கெட்ட குணம் இவளுக்குத் தெரிந்ததே. ஆனால் கல்யாணம் ஆன ஒரே வருடத்தில் குழந்தை பிறந்து விட்டது. அந்த ஒரு குழந்தைக்காக பொறுமையாக இருக்கிறாள். பலரும் திருமணமான முதல் வருடத்திலே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பிறகு தான் தன்னுடைய கணவனையோ மனைவியையோ புரிந்துக் கொள்கிறார்கள். தவறான கணவன் மனைவி பொருத்தம் இல்யையென்று உணரும் முன் குழந்தை. குழந்தையின் எதிர்காலத்திற்காக தியாகம். படுக்கையில் அழுகை. தினமும் சண்டை. இதுவே பலரது வாழ்கையாகிவிடுகிறது. அந்த மாதிரி குழந்தைக்காக தியாகம் செய்த பல பெண்மணிகளில் இவள் முதலாக. காரணம் பிறந்தது பெண் குழந்தை.

மாதம் ஒரு முறை இரவில் அவனுடன். சம்பிரதாயம் மாதிரி. அவளும் அமைதியாக சகித்துக் கொள்வாள். காதல் இல்லாத இடத்தில் காமம் வெறும் சம்பிரதாயம் தானே. விலை மாதுவிடம் படுத்து விட்டு காசு தரவேண்டும். மனைவியிடம் படுத்தால் குழந்தை வீடு வீட்டு செலவுக்கு பணம் தரவேண்டும். அவளுக்கென்று ஒரு மனம் உண்டு அதில உணர்வுகள் உண்டு என்று பலர் நினைப்பதில்லை. கலாச்சார கட்டுகளில் கட்டுண்டு கிடக்கும் பல கைதிகள். ஜெயிலர் கணவன் தான். சிறையறை அவர்களது வீடு. குழந்தைகள் சிறையறை சுவர்கள். சட்டம் கலாச்சாரம்.

ஒரு முறை கரோலினா கோபத்தில் உச்சத்தில் விவாகரத்தைப் பற்றி பேச மறுநாளே வக்கீலுடன் வந்துவிட்டான். அதன் பிறகு அவள் அந்த பேச்சை எடுக்கவே இல்லை.

வேகமாக வாழ்க்கையில் வளர்ந்துவிட்டதாலும் பணம் தான் எல்லாமே என்று நினைத்ததாலும் வாழ்க்கையில் இன்பம் தரும் மனைவியின் சிரிப்பு குழந்தையின் மழுலை என்று பலவற்றையும் உதறி தள்ளியிருந்தான். கல்லூரி நாட்களில் அந்த சிரிப்பை அவன் ரசித்ததுண்டு.

வீட்டில் சண்டையிட்டு திருமணம் புரிந்ததால் அவளுடைய வீட்டிலும் அவளை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர். இப்போது அவளுக்கு ஒரே கதி ப்ரவீன் தான்.

அவனுடைய ஆடம்பர பங்களாவில் ஒரு ஓரத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் எல்லா பார்டிகளிலும் தன் மனைவி எத்தனை அழகானவள் என்று காட்ட அவளை நன்றாக அலங்கரித்து அழைத்துச் சென்றுவிடுவான்.

மனைவி வெறும் சமுதாய அடையாளம். நானும் குடும்பஸ்தன் என்று காட்டிக் கொள்ள.

மூவருக்கும் பணம் குறுக்கு வழியில் சம்பாதிப்பதை விட இன்னாரு பொது கெட்ட குணம் இவனையும் சும்மா விடப்போவதில்லை.

leomohan
02-10-2006, 12:39 PM
மெல்லக் கொல்வேன் மர்மத் தொடர் -4

காயத்திரி. 28 வயது. இளமை காணாமல் போனதை உணராதவள். தலையில் வேகமாக வளரும் வெள்ளிக் கம்பிகள். திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் இல்லை. தாய் அவள் 10 வயதில் இயற்கை எய்தினாள். தந்தை அவளுடைய 20 வயதில். சொந்தங்கள் இல்லாமல் வாழும் பல குடும்பங்களில் அவளும் ஒருவள். ஆனால் அவளுக்கு ஒரு சொந்தம் உண்டு. தம்பி கீர்த்தி.

அவள் வேலை செய்வதே அவனை நன்றாக படிக்க வைக்கத்தான். தாய்க்கு தாயாக இருந்த வளர்த்தவள். தந்தை இறந்தபோது ஒடி வந்து கட்டிக் கொண்ட சிறுவன் இன்று கெமிக்கல் இன்ஜினியரிங் மூன்றாவது வருடம் படித்து வருகிறான். கீர்த்தியின் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றால் அவன் அவளுக்கு அண்ணாக இருந்து திருமணத்தை முடிப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

வீட்டின் ஒரு அறையில் பெரிய ஆராய்ச்சியாளனைப் போல கண்ணாடி குடுவைகளை வைத்துக் கொண்டு ஏதாவது செய்துக் கொண்டிருப்பான். அவனைப் பார்த்தால் அவளுக்கு பெருமை. தான் வளர்த்த பையன் என்று மகிழ்ச்சி. எப்போதும் படித்துக் கொண்டே இருப்பான். படித்த நேரம் போக பக்கத்தில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் அந்த சிவனைப் பார்த்தவாறே அமர்ந்திருப்பான். தெய்வ பக்தி. படிப்பு. இது இரண்டு மட்டும் தான்.

அக்கா படும் கஷ்டங்களை அறிந்திருந்தான். அதனால் வேறு எந்த கவனமும் இல்லை. அக்காவை பெரிய இடத்தில் திருமணம் செய்து தர வேண்டும். இந்த நாடு போற்றும் வகையில் ஒரு பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற வெறியில் இருந்தான்.

அவள் ஒரு ட்ரேடிங் கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தாள். ப்ரவீன் ராகவ் ராபின் இவர்கள் நடத்தும் குட் ஓல்ட் டேஸ் 5 நட்சத்திர ஓட்டலுக்கு டிஷ்யூ பேப்பர் சப்ளை செய்துக் கொண்டிருந்தது இந்த ட்ரேடிங் கம்பெனி.

பல லட்சம் பணம் ஓட்டலிருந்து வரவேண்டியது. அதனால் இவள் ப்ரவீனிடம் தொலைபேசியில் நேராக பேசினாள். இவளுடைய இனிமையான குரலிலும் தெளிவான அழகான ஆங்கிலத்திலும் மயங்கி அவள் சம்பாதித்துக் கொண்டிருந்த 7 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வேலைக்கு சேர்த்துக் கொண்டான். அவளும் தம்பியின் வாழ்கை சீராக வேண்டும் என்பதால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள். வந்து சேர்ந்த 3 மாதம் வரை இந்த மூவரின் கெட்ட குணம் இவளுக்கு தெரியாமல் இருந்தது. அது தெரிய வந்த நாள் இவள் அதிர்ச்சியின் எல்லைய தொட்டுவிட்டாள்.

leomohan
02-10-2006, 12:42 PM
மெல்லக் கொல்வேன் மர்மத் தொடர் - 2

பிரவீன். கடைசியாக அவன் பெற்றோர்களை சந்தித்தபோது தன்னுடன் படித்தகிறிஸ்துவ பெண்னை மணக்க அனுமதி கேட்க அவர்கள் அதற்கு மறுக்க இனி அவர்கள் முகம்பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வட நாட்டிலிருந்து ஓடி வந்தவன்.

வளர்ச்சி சொத்து அனைத்திலும் ராகவ்வைப் போல. ஆனால் புகை பிடிக்கும் பழக்கம்இல்லை. மது அருந்துவான். ஆனால் அது நண்பர்களை மகிழ்விக்க மட்டும்.

பல முறைமற்ற இரு நண்பர்களுக்கு நடுவில் வரும் சண்டையை பார்த்து ரசிப்பான். அத்துமீறும்போது சமாதானப் படுத்துவான். இந்த மூன்று நண்பர்களின் நட்பு 20 ஆண்டுகளாகஇருப்பதற்கு ஒரே காரணம் இவனுடைய பேச்சும் அவர்களை சமாதானப்படுத்தும் குணமும் தான்.இவனை அவர்களிருவரும் மதிப்பார்கள்.

வியாபாரம் இந்த அளவு முன்னேறியதற்கும்இவன் தான் காரணம். நகரத்தில் இருக்கும் ஏஜென்ட் டிரைவர் போலீஸ் அரசியல்வாதிசப்ளையர்கள் என்று அனைவரும் இவனையே சந்திப்பார்கள்.
அனைவரையும் நன்றாககவனித்துக் கொள்வான். அவனுக்காக அவர்களும் சட்டத்தை வளைப்பார்கள்.

குறிப்பாக வரி அலுவர்களின் வீட்டில் டிவி ஃபிரிட்ஜ் வாஷிங் மெஷின்இருக்கிறதென்றால் அது இவனால் தான். வரி ஏய்ப்பில் மேல் பட்டங்கள்பெற்றிருந்தான்.

ஆனால் ஒரு சின்ன குணம். மிகவும் கோபப்பட்டால் இந்தமுன்னேற்றம் எல்லாம் எண்ணால் தான் என்று சொல்ல மறுக்க மாட்டான். இதனால்அவர்களிருவரும் சற்று கோபம் அடைந்தாலும் அது உண்மைதான் என்பதால் அமைதியாக இருக்கவேண்டிய கட்டாயம்.

இவனை திருமணம் செய்துக் கொண்ட கரோலினா இவனிடம் மயங்கியஅந்த வடநாட்டு மஞ்சள் தோலிலும் அவனுடைய கொஞ்சும் தமிழிலும். கடைசி ஆண்டு வரை அவனால்வாழைப் பழம் என்று சொல்ல முடியவில்லை.

அவன் கரோலினாவிடம் மயங்கியது அவளுடையபொறுமையான குணத்தில்.

அந்த மூவருக்கும் உள்ள பொது கெட்ட குணம் இவளுக்குத்தெரிந்ததே. ஆனால் கல்யாணம் ஆன ஒரே வருடத்தில் குழந்தை பிறந்து விட்டது. அந்த ஒருகுழந்தைக்காக பொறுமையாக இருக்கிறாள். பலரும் திருமணமான முதல் வருடத்திலே குழந்தைபெற்றுக் கொள்கிறார்கள். பிறகு தான் தன்னுடைய கணவனையோ மனைவியையோ புரிந்துக்கொள்கிறார்கள். தவறான கணவன் மனைவி பொருத்தம் இல்யையென்று உணரும் முன் குழந்தை.குழந்தையின் எதிர்காலத்திற்காக தியாகம். படுக்கையில் அழுகை. தினமும் சண்டை. இதுவேபலரது வாழ்கையாகிவிடுகிறது. அந்த மாதிரி குழந்தைக்காக தியாகம் செய்த பலபெண்மணிகளில் இவள் முதலாக. காரணம் பிறந்தது பெண் குழந்தை.

மாதம் ஒரு முறைஇரவில் அவனுடன். சம்பிரதாயம் மாதிரி. அவளும் அமைதியாக சகித்துக் கொள்வாள். காதல்இல்லாத இடத்தில் காமம் வெறும் சம்பிரதாயம் தானே. விலை மாதுவிடம் படுத்து விட்டுகாசு தரவேண்டும். மனைவியிடம் படுத்தால் குழந்தை வீடு வீட்டு செலவுக்கு பணம்தரவேண்டும். அவளுக்கென்று ஒரு மனம் உண்டு அதில உணர்வுகள் உண்டு என்று பலர்நினைப்பதில்லை. கலாச்சார கட்டுகளில் கட்டுண்டு கிடக்கும் பல கைதிகள். ஜெயிலர் கணவன்தான். சிறையறை அவர்களது வீடு. குழந்தைகள் சிறையறை சுவர்கள். சட்டம்கலாச்சாரம்.

ஒரு முறை கரோலினா கோபத்தில் உச்சத்தில் விவாகரத்தைப் பற்றி பேசமறுநாளே வக்கீலுடன் வந்துவிட்டான். அதன் பிறகு அவள் அந்த பேச்சை எடுக்கவேஇல்லை.

வேகமாக வாழ்க்கையில் வளர்ந்துவிட்டதாலும் பணம் தான் எல்லாமே என்றுநினைத்ததாலும் வாழ்க்கையில் இன்பம் தரும் மனைவியின் சிரிப்பு குழந்தையின் மழுலைஎன்று பலவற்றையும் உதறி தள்ளியிருந்தான். கல்லூரி நாட்களில் அந்த சிரிப்பை அவன்ரசித்ததுண்டு.

வீட்டில் சண்டையிட்டு திருமணம் புரிந்ததால் அவளுடையவீட்டிலும் அவளை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர். இப்போது அவளுக்கு ஒரே கதி ப்ரவீன்தான்.

அவனுடைய ஆடம்பர பங்களாவில் ஒரு ஓரத்தில் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள். ஆனால் எல்லா பார்டிகளிலும் தன் மனைவி எத்தனை அழகானவள் என்று காட்டஅவளை நன்றாக அலங்கரித்து அழைத்துச் சென்றுவிடுவான்.

மனைவி வெறும் சமுதாயஅடையாளம். நானும் குடும்பஸ்தன் என்று காட்டிக் கொள்ள.

மூவருக்கும் பணம்குறுக்கு வழியில் சம்பாதிப்பதை விட இன்னாரு பொது கெட்ட குணம் இவனையும் சும்மாவிடப்போவதில்லை.

leomohan
02-10-2006, 12:45 PM
மெல்லக் கொல்வேன் மர்மத் தொடர் - 3

ராபின். கரோலினாவை கல்லூரி நாள் முதலாகவே கண்டபடி கற்பனை செய்துவிட்டு ப்ரவீனை மணந்ததும் தங்கை என்று தடம் மாறியவன். வெறும் வார்த்கைகளில் மட்டும். நல்ல குணங்கள் எதுமே இல்லாதவன். வாய்ப்பு கிடைத்தால் ப்ரவீனுக்கு துரோகம் செய்வான். மூன்று பேர்களில் அதிகமாக குற்றம் புரிபவன் என்று பரிசு தரலாம்.

தினம் ஒரு குற்றம். அதிகமாக குடிக்கும் பழக்கம். போதை தெளிந்திருந்தால் ஓட்டலுக்கு வருவான். ஆனால் பலர் பல மணி நேரம் செய்யும் வேலைகளை இவன் சில மணி நேரத்தில் செய்து விடுவான்.

இவனுக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரத்யேகமான ஓக் பாரெல் எனும் சீமை ஆல மரத்தால் செய்த பீப்பாய்களில் வொயின் எனும் திராட்சை மது வரவழைக்கப்படும். ஓட்டலுக்காக வரவழைக்கப்பட்ட அந்த பீப்பாய்களிலிருந்து வாரம் இரண்டு பீப்பாய்கள் அவன் வீட்டிற்குச் செல்லும். இவன் வொயினில் தான் குளிக்கிறானா என்று பணியாளர்க்கு சந்தேகம் எப்போதும் உண்டு. இந்த பீப்பாயில் தங்கத்தால் ஆன ஒரு குழாய். வொயின் க்ளாஸை எடுத்து தண்ணீர் குடிப்பது போல க்ளாஸை நிரப்பிக் குடித்துக் கொண்டிருப்பான்.

பணத்தை சம்பாதிக்கவும் அதை பராமறிக்கவும் நன்றாக தெரியும். பல இடங்களில் முதலீடு உண்டு. பங்குச் சந்தையில் பல கோடிகளை சம்பாதித்தவன். படித்தது பொறியியல் என்றாலும் கணக்கு வழுக்குகளை நன்றாக கற்றவன். இதுவரை மூன்று சி.ஏக்களை கணக்குகளில் குளறுபடி செய்திருக்கிறார் என்று வேலையை விட்டு எடுத்துவிட்டான்.

ராகவ்வும் ப்ரவீனும் ஆச்சர்யப்பட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பார்த்து அனுமதியளித்த கணக்குகளில் அவர்கள் கோட்டை விட்ட இடத்தை சில நொடிகளில் கண்டு சொல்லிவிட்டான்.

இவனுடைய இந்த திறமையை என்றும் சலாம் செய்வார்கள் மற்ற இருவரும். ஆனால் குடிப்பழக்கத்தினால் இவன் இழுந்ததும் உண்டு. நண்பர்களை கண்டபடி திட்டிவிடுவான். பிறகு மறுநாள் மன்னிப்பும் கேட்பான். இன்னும் திருமணமாகவில்லை. இவன் உலகில் மதிப்பது இவனை எடுத்த வளார்த்த பாதிரியாரைத்தான். அவரை வருடத்தில் ஒரு நாள் அவன் பிறந்த நாளில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்று அவன் வளர்ந்த அனாதை ஆசிரமத்திற்கு ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ நன்கொடை கொடுத்துவிட்டு வருவான்.

அவரும் ஓவ்வொரு வருடமும் குடிப் பழக்கத்ததை விட்டுவிடு இது உன்னை தவறான பாதையில் கொண்டு செல்லும் என்று போதனை செய்வார். அதை தவிர்த்து அவரால் என்ன செய்ய முடியும்.

இந்த மூவரும் சேர்ந்து ரசித்த செய்யும் ஒரு குற்றம் உண்டு. அது இவர்களின் பெரிய எதிரி. ஆனாலும் இது வரை அந்த கெட்ட பழக்கத்தின் பலனை அவர்கள் அறியவில்லை. ஏனென்றால் அது தவறான பாதை என்றோ இல்லை அந்த தவறால் அவர்களுக்கு என்ன பாதிப்பு வரும் என்றோ அவர்கள் அறியவில்லை. ஆனால் வெகு நாட்கள் தூரம் இல்லை அவர்கள் அறியும் காலம்.

pradeepkt
04-10-2006, 04:35 AM
அப்படி என்னதாங்க அது கெட்ட குணம்..
ஒரு கருத்து! நீங்க உங்க அத்தியாயங்களை ஒவ்வொரு நாளும் ஒண்ணொண்ணாப் போடுங்க... திகிலைக் கூட்டும்

leomohan
04-10-2006, 05:50 AM
சரி நண்பரே. அவ்வாறே செய்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி.

leomohan
05-10-2006, 09:52 AM
மெல்லக் கொல்வேன் மர்மத் தொடர் -4

காயத்திரி. 28 வயது. இளமை காணாமல் போனதை உணராதவள். தலையில் வேகமாக வளரும் வெள்ளிக் கம்பிகள். திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் இல்லை. தாய் அவள் 10 வயதில் இயற்கை எய்தினாள். தந்தை அவளுடைய 20 வயதில். சொந்தங்கள் இல்லாமல் வாழும் பல குடும்பங்களில் அவளும் ஒருவள். ஆனால் அவளுக்கு ஒரு சொந்தம் உண்டு. தம்பி கீர்த்தி.

அவள் வேலை செய்வதே அவனை நன்றாக படிக்க வைக்கத்தான். தாய்க்கு தாயாக இருந்த வளர்த்தவள். தந்தை இறந்தபோது ஒடி வந்து கட்டிக் கொண்ட சிறுவன் இன்று கெமிக்கல் இன்ஜினியரிங் மூன்றாவது வருடம் படித்து வருகிறான். கீர்த்தியின் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றால் அவன் அவளுக்கு அண்ணாக இருந்து திருமணத்தை முடிப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

வீட்டின் ஒரு அறையில் பெரிய ஆராய்ச்சியாளனைப் போல கண்ணாடி குடுவைகளை வைத்துக் கொண்டு ஏதாவது செய்துக் கொண்டிருப்பான். அவனைப் பார்த்தால் அவளுக்கு பெருமை. தான் வளர்த்த பையன் என்று மகிழ்ச்சி. எப்போதும் படித்துக் கொண்டே இருப்பான். படித்த நேரம் போக பக்கத்தில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் அந்த சிவனைப் பார்த்தவாறே அமர்ந்திருப்பான். தெய்வ பக்தி. படிப்பு. இது இரண்டு மட்டும் தான்.

அக்கா படும் கஷ்டங்களை அறிந்திருந்தான். அதனால் வேறு எந்த கவனமும் இல்லை. அக்காவை பெரிய இடத்தில் திருமணம் செய்து தர வேண்டும். இந்த நாடு போற்றும் வகையில் ஒரு பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற வெறியில் இருந்தான்.

அவள் ஒரு ட்ரேடிங் கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தாள். ப்ரவீன் ராகவ் ராபின் இவர்கள் நடத்தும் குட் ஓல்ட் டேஸ் 5 நட்சத்திர ஓட்டலுக்கு டிஷ்யூ பேப்பர் சப்ளை செய்துக் கொண்டிருந்தது இந்த ட்ரேடிங் கம்பெனி.

பல லட்சம் பணம் ஓட்டலிருந்து வரவேண்டியது. அதனால் இவள் ப்ரவீனிடம் தொலைபேசியில் நேராக பேசினாள். இவளுடைய இனிமையான குரலிலும் தெளிவான அழகான ஆங்கிலத்திலும் மயங்கி அவள் சம்பாதித்துக் கொண்டிருந்த 7 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வேலைக்கு சேர்த்துக் கொண்டான். அவளும் தம்பியின் வாழ்கை சீராக வேண்டும் என்பதால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள். வந்து சேர்ந்த 3 மாதம் வரை இந்த மூவரின் கெட்ட குணம் இவளுக்கு தெரியாமல் இருந்தது. அது தெரிய வந்த நாள் இவள் அதிர்ச்சியின் எல்லைய தொட்டுவிட்டாள்.

leomohan
05-10-2006, 09:53 AM
மெல்லக் கொல்வேன் மர்மத் தொடர் -5

கல்லூரி முடித்த இவர்கள் பொழுதை கழித்தது ராபினுடைய ராயப்பேட்டையில் இருக்கும் பங்களாவில். அனாதையாக வாழ்ந்த ராபின் திடீரென்று ஒரு பணக்கார மாமா வாரிசில்லாததால் விட்டுச் சென்ற வீடு அது.

மனமகிழ் மன்றம் என்று உறுப்பினர்களை சேர்த்து நாடகம் பாட்டு மெல்லிசை என்று நிகழ்ச்சிகளை நடத்தி காசு பார்த்து வந்தவர்கள் உறுப்பினர்கள் அதிகமானதும் காரம் செஸ் சீட்டு என்று பல விஷயங்களை சேர்த்தனர்.

ஆனால் காரம் செஸ் இவைகளில் என்ன இருக்கிறது. சீட்டு ஆடும் கூட்டம் அதிகரித்தது. பணம் வைத்து விளையாடும் பைத்தியம் அதிகரித்தது. பணம் வைத்து ஆடும் கூட்டம் மது மாதுக்கள் கேட்டது.

பார் பர்மிட் வாங்கி வீட்டின் முதல் தளத்தில் பார் அமைக்கப்பட்டது. உறுப்பினர் கட்டணம் அதிகரித்தது. பணக்காரர்கள் மட்டும் வர முடியும் நிலமை ஏற்ப்பட்டது. அதனால் பணம் அதிகம் புழுங்கியது.

2.5 சதவிகிதம் வருமானம் ஒரு நாளுக்கு. 1 லட்சம் ஆடினால் 2500 ரூபாய் கிளப்புக்கு. மதுவினால் வரும் வருமானம் தனி. மாதுவினால் வரும் வருமானமும் அதிகரித்தது. அதிலும் பண்காரர்கள் கண்டு சென்ற பிறகு இவர்களுக்கு இலவசம். இளம் வயது பணக்காரனாக கனவு இவை இவர்களை தவறான பாதையில் மேலும் இட்டுச் சென்றது.

கேட்பவர்கள் யாரும் இல்லை. தடை செய்ய யாரும் இல்லை. குற்றங்கள் வளர்ந்தது.

ஒரு நாள் 10 லட்சம் ரூபாய்க்கு உறுப்பினர்கள் சீட்டு விளையாடி சூதின் சக்தியை மூவரும் உணர்ந்தனர். ஒரு நாள் வருமானம் 25 ஆயிரம்.

குட் ஓல்ட் டேஸ் ஓட்டல் ரவீனா என்ற பெயரில் நடந்துக் கொண்டிருந்தது. கடன் தொல்லையால் அதை விற்க வேண்டிய நிலமை. ப்ரவீன் ஒரு யோசனையுடன் வந்தான். ராபின் சம்மதித்தால் அவன் வீட்டை அடமானம் வைத்து இந்த ஓட்டலை எடுத்து நடத்தலாம். பார் கிளப் என்று அமோகமாய் ஓட்டலாம். மூவரும் சீக்கிரம் பணம் பார்க்கும் வழியை உணர்ந்தனர். உடனே சம்மதித்தான் ராபின்.

தமிழர்கள் பழையனவற்றை மறந்திருக்கலாம். அவர்கள் தினசரி வாழ்கையை இயந்திரங்களும் விஞ்ஞானமும் ஆட் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு பழமையின் மேல் இருக்கும் காதல் மறுக்கமுடியாத ஒன்று. மறக்க முடியாத ஒன்று.

ப்ரவீன் இன்னொரு யோசனை கூறினான். ஓட்டலின் தரை தளத்தில் ஓட்டு வீடு பெரிய மர கதவு லாந்தர் விளக்கு அம்மிக்கல் குழவி உரல் என்று 18ம் நூற்றாண்டு தமிழ் வீட்டை சித்தரித்தான்.

வருபவர்களுக்கு பெரிய பச்சை வாழையிலையில் உணவு. இட்லி தோசை கையால் அரைத்த மாவால். பாக்கு இடித்து உடனுக்குடன்.
கலாச்சாரத்தையும் பழமையையம் கண்காட்சிகளில் மட்டுமே காணவேண்டிய நிலையில் தள்ளப் பட்ட தமிழுனுக்கும் இன்றைய சமுதாயதித்தினருக்கும் இது ஒரு சுவாரிஸ்யமான விஷயமாக இருந்தது. கூட்டம் அலை மோதியது.

ஆனால் முதல் தளத்தில் கலாச்சாரத்தின் துரோகிகளான மது மாது சூது. மூன்றாம் நான்காம் தளங்களில் 5 நட்சத்திர வசதியுடன் கூடிய அறைகள். நாள் ஒன்றுக்கு 3000 முதல் 5000 வரை வாடகை.

இரண்டு ஆண்டில் ராபினின் வீட்டை மீட்டதுமில்லாமல் ப்ரவீன் ராகவ் இருவரும் தனித்தனியாக வீடு வாங்கினார்கள். ப்ரவீனின் திருமணம் கரோலினாவுடன் ஆடம்பரமாக நடந்தது.

அதிகப் பணம் இவர்களிடம் கெட்ட பழக்கங்களை வித்திட்டது. முதலில் மிஞ்சியதை எஞ்சியதை சுவைத்து வந்த இவர்கள் இனிமேல சுவைத்தால் புதிய மலர்களையே சுவைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

அதிலும் ஜனநாயக முறைப்படி. இவர்கள் அதிகம் செலவிடுவது முதல் தளத்தில் உள்ள அவர்களது பிரத்யேக அறையில் தான். அதில் தான் அதிக நேரம் செலவிடுவார்கள். எந்த முடிவெடுத்தாலும் மூவரில் இருவர் சம்மதித்தால் அது உடனே நிறைவேறும். மூவருக்கும் மூன்று கருத்துகள் இருந்தால் அந்த வேலை தள்ளிப்போடப்படும்.

சிறிய விஷயங்களில் ப்ரவீன் ராபின் ராகவ் இவர்களின் கருத்ததுகளை ஆமோதிப்பான். ஆனால் சில முக்கிய விஷயங்களில் அவன் தன்னுடைய முடிவுதான் சரி என்று அடம் பிடிப்பான். ஏனென்றால் இந்த ஓட்டலே அவனுடைய புதுப்புது யோசனைகளால் ஓடுவதாக அவனுக்கு நினைப்பு.

இவர்கள் மலர்களை தேடுவதும் தேர்ந்தெடுப்பதும் அவைகளை சேர்ந்து கசக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.

தினமும் வெள்ளைப் பலகையில் மூவரும் பெயர்களை எழுதுவார்கள். வழக்கப்படி இருவரின் குறி எதன் மேல் வீழுந்ததோ அந்த பறவை அன்று தன் கண்ணியம் இழக்கும்.

அதிகமான பறவைகள் அங்கு வேலை செய்யும் பெண்களே!. இன்டர்வ்யூ எடுத்து வரவேற்ப்பிற்கு கணக்கு வழுக்கு பார்ப்பதற்கு விருந்தோம்பல் செய்வதற்கு விருந்தினர்களை கவனிப்பதற்கு என்று அழகான பெண்களாய் தேர்ந்தெடுத்து நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு சேர்ப்பார்கள்.

இதில் பண்பாடை மறக்காத பறவைகள் அடிபட்டதும் அழுது கண்ணீர் வடித்து வேலையை விட்டுச் செல்லும்.

சில அவர்கள் தரும் பணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவர்களிடம் செல்லும்.

சில ட்ரெயினுக்கு முன் நின்று தன்னையே மாய்த்துக் கொள்ளும்.

பல பெண்கள் வாழ்க்கையின் வேகத்தை புரிந்துக் கொண்டு அதிக பணம் பெற்று சங்கதியை முடித்துக் கொள்வர். இவர்கள் விலை மாது இல்லை. ஆனாலும் நம் சமுதாயித்தில் இன்னும் ஓங்கி வளர்ந்திருக்கும் வரதட்சணை கொடுமையால் கணவனிடம் விலை மாதாகமல் இருக்க கல்யாணத்திற்கு முன் செல்லும் போதே கணவனை அடக்கி ஆளும் எண்ணத்துடனும் பணத்தால் முகத்தில் அடிப்பதற்கும் இதை பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த புது பெண்களை அழிக்கும் விளையாட்டை ரசித்து செய்துக் கொண்டிருந்தனர். இதனால் அழியும் பலரின் வாழ்க்கையைப் பற்றி அறியாமல் இருந்தார்கள். அறிந்திருந்தும் பணம் அவர்கள் கண்ணை மறைத்தது.

leomohan
09-10-2006, 04:26 PM
ராகவ் வந்த பலகையில் மாதவி என்று எழுதிச் சென்றான். மாதவி இரண்டாம் தளத்தில் ப்ளோர் இன்சார்ஜ்ஜாக வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. மந்திரி ஒருவர் தங்கியிருந்தார் என்று இரண்டாம் தளத்திற்கு சென்ற ராகவ் மாதவியின் இடையில் தெரிந்த இடையில் தன்னை இழந்தான். குறித்து வைத்துக் கொண்டான்.

ப்ரவீன் வந்து ரஞ்சனா என்று எழுதினான். புதிதாக பகல் ஷிஃப்டில் சேர்ந்திருந்த ரிசப்ஷனிஸ்ட்.

ராபின் வந்து ரீட்டா என்று எழுதினான். அவன் வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் புதிதாக வந்திருந்த பறவை. கல்லூரியில் படிப்பு. அவனை பொருத்த வரையில் இன்று பூத்த மலர். அவனுடைய நம்பிக்கை பணத்தால் எதுவும் சாதிக்கலாம் என்பது.

மூவரும் மூன்று பெயர்களை எழுதியதால் பெரிய விவாதம் நடந்தது. பிறகு ராபின் தன் முடிவை மாற்றிக் கொண்டான. ரீட்டாவிற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதை ராகவ் உணர்த்தினான்.

மாதவி என்று முடிவானது. அவளை அழைத்து வர ஏற்பாடும் செய்யப்பட்டது.

மாதவி.துடிப்பான பெண். ஏர் ஹோஸ்டஸாக முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். மாடலிங்கும் செய்துக் கொண்டிருந்தாள். ஒரு முறை துவைத்தால் இரு முறை அழுக்கு போகும் என்று முட்டாள்தனமான விளம்பரத்தில் ஒன்று இரண்டு என்று விரல்களை அசைத்து அழுகு பதுமையாக நின்று துணி துவைத்த பெண் இவள்தான்.

மாதவி இன்னிக்கு ராகவ் வீட்டிலே சம் ஹை ப்ரோஃபைல்ட் கெஸ்ட் வருவாங்க. அதனால உங்களுக்கு ட்யூட்டி அங்கே இன்னிக்கு. ரைட்? என்றுவிட்டு அவள் பின்புறத்தை தட்டினான் ராபின்.

அவன் செய்தது அருவறுப்பை தந்தாலும் பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொண்டாள்.

பெரிய கார் வந்து அவளை மகாபலிபுரம் பங்களாவுக்கு அழைத்துச் சென்றது. பங்களாவில் யாரும் இல்லை. பணியாள் கரீமிடம் கேட்டாள் என்ன வீட்டில் யாரும் இல்லை?

இல்லை மேடம். 10 மணிக்குத்தான் வருவாங்க. நீங்க ட்ரிங்ஸ் சாப்பிட எல்லாத்தையும் எப்படி அலங்கரிக்கலாம்னு சொல்லுங்க. நாம்ப ரெண்டு பேரும் எல்லாத்தையும் செஞ்சிரலாம் என்றான் கரீம்.

இருவரும் சேர்ந்த அந்த பங்களாவின் ஹாலில் ஒரு 5 நட்சத்திர ரெஸ்டாரெண்ட் போல அலங்காரத்தை செய்தார்கள். மணி 10.30 இன்னும் யாரும் இல்லை.

10.30 ஆயிடுத்து கரீம் என்றாள் மாதவி.

மேடம் நான் வேணா ஹோட்டல் வரைக்கும் போயிட்டு வந்திடடுமா? என்று கேட்டான்.

தனியாக இந்த வீட்டில் இருக்க அவளுக்கு பயம். வேண்டாம். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம் என்றால் தயக்கத்துடன்.

ஒரு கார் வந்த நின்றது. அதிலிருந்து ராபின் ராகவ் ப்ரவீன் மூவரும் இறங்கினார்கள். அவர்கள் சொன்ன விருந்தினர்களைக் காணவில்லை.

உள்ளே வந்ததும் 500 ரூபாய் நோட்டை எடுத்து கரீம் எனக்கு ஒரு பாக்கெட் 555 சிகரெட் வாங்கிட்டு வாங்க என்றான் ராகவ்.

சார் மகாபலிபுர ரேட்டில ரொம் தூரம் வரை 555 கிடைக்காது. சிட்டிக்கு போயிட்டு வந்திடட்டுமா? என்று கேட்டான் பணிவாக.

செய்யுங்க என்று சொல்லி விட்டு எக்ஸலண்ட் ஜாப் மாதவி. அருமையா டெக்கோரெட் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு நல்ல ரசனை இருக்கு என்று அவளை பாராட்டினான்.

ராபினை கண்டுதும் வெறுப்படைந்தவள் ராகவின் இந்த வார்த்தைகளால் சற்று ஆறதல் அடைந்தாள்.

தாங்க் யூ சார். உங்களுக்கு டிரிங்ஸ் தரட்டுமா?

மீ அண்ட் ட்ரிங்ஸ். நோ வே. ராபினுக்கு ஒரு டபுள் மாலிபு போடுங்க. ப்ரவீன் வில் பி பைஃன் வித் ஷாம்பெயின்.

நிஜமா குடிக்க மாட்டிங்களா? ஆச்சர்யமாக கேட்டாள் மாதவி.

உங்க மேல சத்தியமா? என்று அவள் முகத்தை சிவக்க வைத்தான்.

என்னாச்ச இப்ப வரவேண்டிய விருந்தினர்கள் எல்லாம்?

அவங்க பிளைட் கான்செல் ஆயிடுத்து. அதனால என்ன எங்க மூனு பேரையும் நீங்க கவனிக்கலாம் என்றான் பல அர்த்தங்களுடன்.

மூவரும் பல வியாபார விஷயங்களை பேசத்தொடங்கினார்கள். பல இடங்களில இடம் வாங்குவதைப் பற்றியும் வெளிநாட்டில் இதன் கிளையை துவக்குவதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள் நள்ளிரவு வரை.

அவளுக்கு தூக்கமாக வந்தது. அவர்கள் குடித்து முடிக்க கோப்பைகளை நிரப்பிக் கொண்டிருந்தாள். ராகவ் நிரப்பிக் கொண்டிருந்த புகையிலை சாம்பல் தாம்பளங்களை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.

கரீமை இன்னும் காணவில்லை. அவன் வந்ததும் வீட்டில் இறக்கி விட சொல்லவேண்டும்.

பிறகு உணவு பரிமாறினாள். மூவரும் அவளையும் சேர்ந்த உணவு உண்ண சொன்னார்கள். பெருந்தன்மையுடன் சொன்னதாக நினைத்து அவளும் சேர்ந்து உணவு உண்டாள்.

பிறகு மூன்று ஓநாய்கள் அந்த மானை துரத்தி துரத்தி வேட்டையாடின. உடைகள் கிழிந்து உதட்டில் மூவரால் கடித்து குதறப்பட்டு ரத்தம் வழிந்தது. ஆண்களின் வேட்கை முடிந்திருந்தது. அவளுடைய மலர்ந்த முகம் வடிவிழந்து ஒடுங்கிப் போயிருந்தது.

ராகவ் வந்து பேரம் பேசினான். சமாதானம் செய்தான். அரை மணிக்குப் பிறகு இன்னொரு அறையில் அவளை அழைத்துச் சென்றான். அவளை குளிக்கச் சொல்லி பது ஆடைகளைத்தந்தான். மன்னிப்பு கேட்கவில்லை. பதிலாக 5 லட்சத்தில் வியாபாரத்தை முடித்தான்.

மாதவிக்கு உதடு காய்ந்திருந்தது. உடம்பெல்லாம் வலித்தது. கண்கள் தூக்கத்தால் சொருகின். ஆனால் அவள் எதிர்காலத்தைப் பற்றி இனி கவலைப்படத் தேவையில்லை.

நிஜ வாழ்க்கையின் நிஜத்தை உணர்ந்திருந்த பறவை தன் சிறகுகளை எரித்து ஒரு கூட்டை வாங்கியிருந்தது. எங்கோ போயிருந்த கரீம் திரும்பி வந்தான். பறவையை தன் வாடகைக் கூட்டில் கொண்டு சென்று விட்டான். ராகவ் 555 புகைப்பதில்லை. அதை அவன் அறிந்திருந்தான்.

ஏன் மாதவி போட்டுவந்த உடையிலிருந்து புது உடை உடுத்தினாள் என்று அவனுக்குத் தெரியும். அநாவசியமாக அவளிடம் கேட்டு அவளை சங்கடபடுத்த விரும்பவில்லை. கையில் பெட்டி இருந்தால் பேரம் சுமுகமாக முடிந்துவிட்டது என்று அவனுக்குத் தெரியும்.

அதில் ஒரு சந்தோஷம் அவனுக்கு. ஏனென்றால் நாளை இளம் பெண் தற்கொலை என்ற செய்தி படிக்க வேண்டியதில்லை. அழுது கொண்டே உட்கார்ந்து வரும் பெண்களின் கண்களை ரியர்வ்யூ கண்ணாடியில் பார்ப்பான். அப்படி அழும் பெண்களை கண்டால் அவனுக்கு பயம். நாளைக்கு யாருடைய மரணம் என்று ஒரு பயம் வரும். சில பெண்கள் அவனுடன் வர மறுத்து ஆட்டோவுக்காக நள்ளிரவில் ரோட்டில் நிற்ப்பார்கள். அவர்களைப் பற்றி அவனுக்கு நன்றாக தெரியும். போலீஸ்சிடம் செல்வார்கள். போலீஸ் அவன் முதலாளிகளிடம் சம்பளம் வாங்கும் கைகூலிகள். கோர்ட்டில் இதைவிட முக்கியமான கேஸ் கட்டுகள் கிடக்கின்றன். அப்படியே வந்தாலும் அதிகம் படித்த வக்கீல்களுக்கு தெரியாத சட்டமா?

இன்று கரீம் நிம்மதியாக தூங்குவான்.

leomohan
09-10-2006, 04:26 PM
கீர்த்தி. பெயருக்கு ஏற்ற மாதிரி புகழை அடைய வெறி. படிப்பில் கெட்டி. எந்த கெட்ட பழக்கமும். இல்லை. வேதியியலில் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள.

தினம் ஒரு புது மருந்தையோ வேதியியல் பார்முலாவையோ கண்டுபிடித்துவிட்டு கல்லூரி பேராசிரியர்களை தொந்தரவு செய்வான். எப்போதோ படித்துவிட்டு இன்றைய நாட்டு நடப்பை அறியாத அந்த காலத்து ஆசிரியர்கள் இவனுக்காக மறுபடியும் படிக்க வேண்டியிருந்தது. ஆனால் கல்லூரியில் மிக நல்ல பெயர். நல்ல மதிப்பெண்கள். ஜனாதிபதியின் நாளைய விஞ்ஞானி விருதுக்கு அனைவரும் இவன் பெயரையே சிபாரிசு செய்திருந்தார்கள்.

புது வேலையில் சேர்ந்ததும் புதிதாக ஒரு கம்யூட்டர் வாங்கித் தந்தாள். இனிமேல் ப்ரவுசிங் சென்டர் போகவேண்டியதில்லை. மாதம் 250 செலவில் 24 மணி நேர இன்டெர்நெட் தொடர்பு.

தினமும் ஒரு மெயில் ஓட்டலிலிருந்து எழுதுவாள். சாப்பிட்டாயா புதிய சட்டை போட்டுக் கொண்டாயா செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறாயா அவன் வீட்டில் அமைந்திருந்த ஆய்வுக் கூடத்தை சுத்தம் செய்தானா அங்கிருந்த திரவங்கள் அவன் மேல் கொட்டிக் கொள்ள வில்லையே என்று சதாசர்வகாலமும் அவனைப்பற்றியே நினைப்பு அவளுக்கு. அவனைவிட்டால் அவளுக்கு யார்?

பல பேர் அவளை காதலிப்பதாக அவளிடம் கூறியதுண்டு. ஆனால் யாரும் அவள் தம்ப படிப்பை முடிக்கும் வரை காத்திருக்க தயாராக இல்லை. இன்னும் 6 மாதம் தான் பாக்கி உள்ளது என்று சொன்ன போதிலும் தன்னுடன் கடற்கரைக்கு வரவேண்டும் உணவகங்கள் வரவேண்டும் என்று பலர் வற்புறுத்தியதுண்டு.

அவளைப் பொருத்த வரை பீச்சுக்கு செல்லும் காதல் காதலில்லை. காமத்தின் முதல் கட்டம். கட்டி அணைக்க கடற்கரை. உணவகங்கள் செல்வது லஞ்சம். பிறந்த நாள் காதலர் தினப் பரிசுகள் வியாபாரம். அவர்களில் சிலரை இவளுக்குப் பிடித்தும் இருந்தது. அவள் தன் லட்சியத்தை சொன்னவுடன் கழற்றிக் கொண்டவர்கள் அதிகம். அப்படியே அவளுக்கும் வயதாகியும் போனது. யாரும் அவளிடம் வருவதுமில்லை அவளை காதலிப்பதாக சொல்வதும் இல்லை. அவளும் அதற்காக வருந்தவும் இல்லை.

ஃப்யூச்சர் மெயில் என்ற இணையதளத்தை ஒரு நாள் அவள் கண்டுபிடித்தாள். இதில் இன்று நீங்கள் எழுத வேண்டிய மின் அஞ்சலை எழுதலாம். ஆனால் எந்த தேதியில் நீங்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்று அதில் எழுதினால் 20 ஆண்டுகளுக்கு பிறகும் அவர்களுக்கு சென்றடையும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீர்த்தியின் இந்த வருட அடுத்த வருட அதற்கு அடுத்த வருட பிறந்த நாளுக்கு தன்னுடைய செய்திகளை அதில் எழுதி வைப்பாள். அவன் படிப்பு முடித்த மறுநாள் மெயில் பார்த்தால் நீ முதல் மதிப்பெண்ணில் வந்து விட்டாய் என் வாழ்த்துக்கள் என்று இருக்கும்.

இன்னும் 5 வருடங்கள் கழித்துப் பார்த்தால் திருமண வாழ்த்துக்கள் என்றிருக்கும்.

10 வருடங்கள் கழித்துப் பார்த்தால் நீ ஒரு பெரிய விஞ்ஞானி ஆகிருப்பாய் என்று எழுதியிருப்பாள்.

இந்த மெயில் எதுவுமே அவனை இன்று சென்று அடையாது. அந்தந்த நேரம் வரும் போது அந்த மின்னஞ்சல் அவனைச் சென்றடையும்.

தான் திருமணம் ஆகிப்போனால் அவன் எப்படி தனியாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று இதில் ஒரு அறிவுரையும் உண்டு. அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு பாச மலர் சிவாஜி-சாவித்ரி ஒரு கீழக்குச் சீமை விஜயகுமார்-ராதிகா போன்ற ஒரு உன்னதமான அக்கா-தம்பி சகோதர-சகோதரி பாசம். நட்பிற்கும் மேல் ஒரு தாய்ப்பாசம் அவளுக்கு.

இதற்கு எந்த வகையில் கீர்த்தி பங்கம் விளைவித்ததில்லை. அவளுடைய சொல்படி கேட்டு நடப்பான். அவளுக்காக உயிரையும் கொடுப்பான்.

அவனுடைய இந்த நாள் வெற்றி அனைத்திருக்கும் அவனுடைய அக்கா காயத்திரி தான் காரணம். காயத்ரிக்கு ஒரு பெரிய சோதனை காத்திருந்தது.

leomohan
09-10-2006, 04:27 PM
7
நன்றாக குடித்துவிட்டே உள்ளே நுழைந்தான் ராபின். ராகவும் ப்ரவீனும் வியாபாரவிஷயங்களை அலசிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக தாம்பரத்தில் கட்டப் போகும் புதிய ஓட்டலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாதவியின் விஷயம் நடந்து ஒரு வாரம் இருக்கும். அவள் வேலையை விடவில்லை. ஆனாலும் அவளை மறுபடியும் இவர்கள் சீண்ட மாட்டார்கள். தினமும் பூத்த ரோஜாவை அணிபவர்கள் கீழே விழுந்து பூவை தொடுவதில்லை. மாதவிக்கும் அது தெரிந்திருந்தது. பஸ்சிலும் ட்ரெயினிலும் ஆண்களிடம் அடிபட்டு தினம் மனஉளைச்சலில் இருந்தவளுக்கு ஒரு முறை இவளை கன்னித் தன்மையை பங்கம் செய்து நிரந்தரமாக அந்த மன உளைச்சிலில் இருந்து விடிவித்தது இவர்கள் தந்த 5 லட்சம் ஹூண்டாய் சான்ட்ரோவாக மாறி.

என்ன பண்ணலாம் இன்னிக்கு? ராபின்.

இன்னிக்கு எதுவும் கண்ணில் படவில்லை. என்கிட்ட ஒரு பறவை இருக்கு. வயசாயிடுத்து. ஆனா பூ இன்னும் புது பூ தான் ராகவ்.

கரோலினா என்று எழுதிவிட்டு அமர்ந்தான் ப்ரவீன்.

என்ன? என்று ஆச்சர்யமாக கேட்டான் ராகவ்.

ஆமான்டா. இன்னிக்கு அவளுக்கு பிறந்த நாள். நான் அவளோட நேரம் கழிக்க விரும்பறேன் என்றான் ப்ரவீன்.

காய்த்ரி என்று எழுதிவிட்டு அமர்ந்தான் ராகவ்.

கரோலினா என்று சிரித்தப்படியே எழுதிவிட்டு அமர்ந்தான் ப்ரவீன்.

கரோலினா என்று எழுதிவிட்டு அமர்ந்தான ராபின். அதிகம் குடித்திருந்தான். அறிவை இழந்திருந்தான். பல நாளாக மனதில் தேக்கி வைத்திருந்த ஆசை வெளியே வந்தது.

எந்தக் கரோலினா? பதட்டத்துடன் கேட்டான் ப்ரவீன்.

உன் கரோலினா ராபின. மெஜாரிட்டி வின்ஸ். உன் கரோலினா தான் இன்னிக்கு நம்ம மூனு பேருக்கும் என்டெர்டெயின்மென்ட்

கோபம் சுலபமாக ப்ரவீனுக்கு வராது. இன்று அவனுடைய உணர்ச்சி மையத்தை ராபின் தொட்டுவிட்டான்.

வாட் நான்சென்ஸ் என்று எழுந்து கோபத்தில் பலகையை கீழே தள்ளினான். நீ ரொம் குடிச்சிருக்கே. பேசாம வீட்டுக்கு போ என்றான் ப்ரவீன்.

நான் ரொம்ப குடிச்சிருக்கேன். ஆனா கன்ட்ரோல் போகாது. நாம்ப எது செஞ்சாலும் சேர்ந்து தானே செய்யறோம். லெட் அஸ் ஹாவ் கரோலினா டுடே ராபின்.

ஷட் அப். அண்ட ஜஸ்ட் கெட் லாஸ்ட ப்ரவீன்.

ராகவ் இவர்களுக்குள் நடக்கும் சண்டை நிஜமானதா இல்லை பொய்யானதா என்று தெரியாமல் அமர்ந்திருந்தான். கரோலினா என்று ராபின் சொன்னதும் அவன் அதிர்ந்திருந்தான்.

நீ யார் என்னை வெளியே போடான்னு சொல்றதுக்கு? இது என்னோட ஓட்டல் ராபின்.

இது உன்னோட ஓட்டல் இல்லை. நான் இந்த ஓட்டலை இந்த அளவுக்கு கொண்டு வந்ததிற்கு என்னோடு உழைப்பு தான் காரணம் ப்ரவீன்.

டேய் அன்னிக்கு எங்க மாமாவீட்டை அடகு வெச்சி பணம் கொடுக்கலைன்னா இன்னிக்கும் நாம ரிக்ரியேஷன் கிள்ப்ல மாமா வேலை தான் செஞ்சிட்டிருப்போம். ராபின்.

சம்பந்தம் இல்லாத பேசாத ராபின். எல்லாரும் சோந்து கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலமைக்கு வந்திருக்கோம். உன்னோட பணம் எவ்வளவு முக்கியமா இருந்ததோ அத்தனை முக்கியம் எங்களோட உழைப்பும் சமாதானமாக பேச முயன்றான் ராகவ்.

எது செஞ்சாலும் சேர்ந்து தானே செஞ்சோம். ஐ வான்ட் கரோலினா டுடே அடம் பிடித்தான் ராபின்.

பளாரென்று அவன் கன்னத்தில் அரை விட்டான் ப்ரவீன். பிறகு அவனிடம் ஆள்காட்டி விரல் நீட்டி இன்னொரு முறை என் பெண்டாட்டியைப் பத்தி பேசினா உன்னை கொலை பண்ணிடுவேன் என்றான்.

பிறகு கோபமாக அறையைவிட்டு வெளியேற முயன்றான். இந்த அடியை எதிர்பார்க்காத ராபின் சட்டென்று எழுந்து அங்கிருந்த மது பாட்டிலை எடுத்து அவன் பின் மண்டையில் ஓங்கி அடித்தான். அவன் ரத்தம் பீச்சியடிக்க தலை சுற்றி கீழே விழுந்தான்.

என்னடா காரியம் பண்ணிட்டே என்று கத்தினான் ராகவ்.

டேய் நீ என்னடா அவனுக்கு சப்போர்ட்டு? நான் பணம் போட்டேன். அவன் வேலை செஞ்சான். நீ ஒன்னுமே பண்ணாமே பெரிய ஆளாயிட்டே. உன்னை தனியா விட்டிருந்தா நீ இன்னிக்கு பிச்சை எடுத்திருந்திருப்பே ராபின்.

ராபின் மைன்ட் யுவர் வேர்ட்ஸ் ராகவ்.

என்னடா பெரிய ம.... என்று அந்த பாட்டிலால் அவன் தலையில் ஒரு போடு போட்டான்.

leomohan
09-10-2006, 04:28 PM
8

விக்ரமன் புதிதகாக தேர்ந்தெடுக்கப் பட்ட பெண் கமான்டோக்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

பெண்கள் வேலைசெய்யாத இடங்களே இல்லை இப்போது. ஆனால் பெண்கள் மிக முதலில் வேலைக்கு சேர்ந்த இடமே காவல் துறையில் தான். ஏனென்றால் ஆண்களுக்கு சமமாக பெண்களும் இந்த சமூகத்தில் குற்றங்கள் புரிய தொடங்கியதால் தான்.

அனைவருக்கும் கை கொடுத்தார். 6 மாத பயிற்சி பல கைகளை கடினமாக்கியிருந்தன. கூந்தல் போய் குறைந்த தலைமுடி பாஃப் வந்திருந்தது. ஆண்கள் போடும் மேல் சட்டை கால் சட்டையில் பெண்மை காணாமல் போயிருந்தது.

சில கைகள் இன்னும் பெண்மையுடன் இருந்தது. கை குலக்கலில்
தெரிந்தது.

இவர்களுக்கு தனியாக பாடம் சொல்லித்தரவேண்டும். கடினமாக கைகளை போகச் சொல்லி விட்டு மென்மைகளை தங்கச் சொன்னார்.

மூன்று இளம் பெண் கமாண்டோக்கள். காவல் துறையின் கடினங்களை விவிரித்தார். ஏதற்காக இவர்கள் போலீஸ் வேலையை தேர்தெடுத்தார்கள் என்ற காரணத்தைக் கேட்டார்.

பல வகையான பதில்கள். நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் பெண்னும் போலீஸ் ஆகலாம் என்று காட்ட வேண்டும் இல்லை அப்பா இறந்துவிட்டால் கிடைத்த வேலை என்று ஆளுக்கு ஒன்றாக சொன்னார்கள்.

அவர்களுக்கான வேலையை பகிர்ந்து கொடுத்தார். சிறப்பாக பணி புரிய வாழ்த்தினார்.

அந்த நேரத்தில் ஒரு போன் கால். நகரத்தில் சிறந்த வியாபார காந்தங்கள் மூன்று அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் கிடந்தன என்று. விஷயம் பெரிய இடத்து விஷயமானதால் இவரே அதை கவனிக்க வேண்டும் என்று மேல் அதிகாரி கூறினார்.

தொப்பியை எடுத்துக் கொண்டு ஜீப்பைத் தவர்த்து காவலின் அழகைக் கூட்டம் என்பீல்ட் பைக்கை எடுத்துக் கொண்டு 3-இன்-1 ஆஸ்பிடலை சென்று அடைந்தார்.

முதலில் ப்ரவீன்.

யார் உங்களை அடித்தது?

யாரும் இல்லை சார்

பிறகு எப்படி இந்த பின் மண்டையில் காயம்?

எங்க பெர்சனல் பாரிலிருந்த பாட்டில் எடுக்கப் போனபோது மேலிருந்த பாட்டில்கள் விழுந்துடுத்து

பாட்டில் விழுந்தா இத்தனை ஆழமான காயம் ஏற்படாது மிஸ்டர் ப்ரவீன்

சார் இது சாதாரணமான ஆக்ஸிடண்ட். ஏதுக்கு இதை விவகாரமாய் ஆக்கறீங்க?

சரி. ராகவ் எங்கே?

நெக்ஸ்ட் வார்டில்

நன்றி என்று சொல்லிவிட்டு சட்டென்று அடுத்தவார்டுக்கு சென்றார்.

என்னாச்சு மிஸ்டர் ராகவ். உங்க மூனு போருக்குள்ள ஏதாவது பிரச்சனையா?

பிரச்சனையா? நாங்க மூன்று பேரும் 20 வருஷமாக நண்பர்கள் சார்

பின்ன எப்படி முகத்தில் இந்த காயம்?

குற்றங்களை செய்து அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்னாளும் என்று யோசிப்பவர்களை யாரும் என்ன செய்து விட முடியும்?

ட்ரிங்ஸ் ராக் மேல ப்ரவீன் மேல விழந்துடுத்த சார். கீழே விழுந்த பாட்டில் ஒன்னு தெறிச்சி என் மேல பட்டுடுத்தது சொல்லி வைத்தது போல ஒரே பொய்.

ராபின் எங்கே?

ரிசெப்ஷன்ல இருப்பான் சார்

ரிசெப்ஷன் சென்று ராபினை சந்தித்தார். இந்த தடிலாடி தாக்குதல் நண்பர்கள் மீது நடத்திவிட்ட 20 நிமிடம் கழித்து தான் அவனுக்கு நிலமை புரிந்தது. ப்ரவீன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துக் கிடந்தான். ராவக் முகத்தில் ரத்தம் வழிய உட்கார்ந்திருந்தான். சட்டென்று நம்பகமான ஒரு வேலையாளை அழைத்து அறையை சுத்தம் செய்யச் சொன்னான். இருவரையும் அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.

ராபின் என்ன நடந்தது?

பேசி வைத்திருந்த காரணத்தை நன்றாக விவரமாக சொன்னான்.

சரி உங்க ஓட்டல் ஊழியர்களை ஒரு ரொட்டின் என்கொய்ரி செய்ய வேண்டும்

தாரளமாக சார் என்று அவரை வழிநடத்திச் சென்றான்.

இன்னும் 20 நிமிடங்கள் அந்த ஓட்டலில் விக்ரமன் செலவழித்தார். எந்த உபயோகமும் இல்லை. பிறகு ராபின் அவரை ஆஸ்பத்திரியில் விட்டு விட என்பீல்ட் எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் சென்றார். மேல் அதிகாரிகளிடத்தில் நடந்ததை கூறிவிட்டு எழுத்தாளரிடம் பைஃலை மூடிடுங்க என்றுவிட்டு அமர்ந்தார் யோசனையுடன்.

leomohan
09-10-2006, 04:29 PM
9

இது நடந்து ஒரு வாரம் இருக்கும். மூன்று பேரும் தனியறையில். இறுக்கமான அமைதி நிலவியது.

கரோலினா தன் பிறந்த நாள் அன்று நடந்த இந்த கூத்தை மறக்க முயற்சி செய்தாள். ஆனால் இந்த நட்பு அவளுக்கு எந்த விதத்திலும் சம்மதம் இல்லையென்றும் அதனால் ஒரு நாள் ப்ரவீன் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று எச்சரித்தாள்.

உடல் சரியானதும் அவளையும் குழந்தையையும் ஒரு நாள் வெளியே அழைத்துச் சென்று சமாதானம் செய்ய முயற்சித்தான். பலன் இல்லை.

ராகவ் நிலமையை சரி செய்ய வெள்ளை பலகையில் சென்று இன்று காயத்ரி ஜபம் செய்யலாமா? என்று எழுதினான்.

ராபின் மெதுவாக தன் தவறை உணர்ந்திருந்தான். இந்த நட்பு உடைந்தால் யாருக்கும் லாபமில்லை. கரோலினாவுக்காக பல கன்னிகளை இழக்க வேண்டியிருக்கும்.

நண்பர்கள் என்னை மன்னித்தால்.. என்று எழுதிவிட்டு அமர்ந்தான்.

இறுக்கம் குறைந்தது. ப்ரவீன் எழுந்துச் சென்று

இது பழைய பாட்டில். ஆனால் புது வொயின். நான் தயார் என்று எழுதிவிட்டு அமர்ந்தான்.

நண்பர்கள் சிரித்துக் கொண்டனர். கை குலக்கிக் கொண்டனர். காய்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாதவியிடம் சொன்ன அதே காரணம். அந்த பிரத்யேக கார் வந்து நின்றது ஓட்டலின் போர்டிகோவில். கார் ஏறுவதற்கு முன்பு மாதவி ஓடி வந்து ஜாக்கிரதை காயத்ரி என்று சொல்லிவிட்டு போனாள். அவளுக்குப் புரியவில்லை. ஆனால் மாதவிக்கு தெரிந்தது. காயத்ரியின் மரணம் அவள் கண் முன்னே. ஹூண்டாய் காருக்கு மடிய மாட்டாள் காயத்ரி.

10 மணி 10.30 ஆனது. 500 ரூபாய் வெளியே வந்தது. 555 சிகரெட் வாங்க கரீம் வெளியே சென்றான். மது பரிமாறப்பட்டது. உணவு பரிமாறப்பட்டது.

இன்னொரு மலர் கசக்கி சக்கையாக பிழியப்பட்டது. பணத்தின் பலம் செல்லாமல் போனது. கரீம் அழுதுக் கொண்டே பின்னால் இருந்த பெண்ணை பார்த்தான்.

அவன் உள்ளுக்குள் பயம் மின்னலைப்போல பாய்ந்து சென்றது. அவள் கையில் பெட்டி இல்லை. இன்றிலிருந்த ஒரு வாரம் காலையில் பேப்பர் படிக்க வேண்டும். தூக்கோ எலி மருந்தோ தண்டவாளமோ என்று பயந்தான்.

நடுக்கத்துடன் மகாபலிபுர ரோட்டில் 2 மணி குளிரில் காரை ஓட்டிக் கொண்டு வந்தான். இன்று அவன் தூங்கப் போவிதில்லை.

இறக்கி விட்டவுடன் அம்மா தப்பான எந்த காரியத்திற்கும் போயிடாதீங்க என்று கெஞ்சினான். அவள் அழுதுக் கொண்டே அந்த மையிலாப்பூர் தீப்பெட்டி சைஸ் வீட்டின் உள்ளே நுழைந்து ஓங்கி கதவை சாத்திக் கொண்டாள்.

சற்று நேரம் அந்த வீட்டையே பார்த்துவிட்டு கரீம் வானத்தை நோக்கி அல்லா என்று விட்டு கிளம்பினான்.

leomohan
09-10-2006, 04:30 PM
10

காயத்ரிக்கு மூன்று நாட்களாக உடல் சுகமில்லை. மிருகங்கள் அவள் உடலை பிராண்டி தள்ளியிருந்தன். உடல் வலியால் துடித்தாள். ஜுரம் தினமும் ஏறிக் கொண்டே இருந்தது. வெட்கம் துக்கம் வலி என்று அந்த ஜீவன் தள்ளாடிக் கொண்டிருந்தது.

கீர்த்தி இன்று கல்லூரிக்குச் செல்லும் முன்போ கூறிவிட்டு போயிருந்தான். அக்கா இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள உனக்கு சரியாகலை அப்படின்னா சீரியஸா ஏதோ இருக்கு. இது சாதாரண தலைவலி ஜுரம் இல்லை. வெள்ளம் வந்ததால எல்லா இடத்திலேயும் இந்த ஜுரம் பரவிகிட்டு இருக்கு. டாக்டர்கிட்டே போயிடலாம்

கல்லூரியில் இமெயில் பார்த்த அவனுக்கு ஆச்சர்யம். அக்காவிடமிருந்து ஒரு மெயில். அக்கா இத்தனை உடல் சரியில்லாமல் இருந்தும் அவனுக்கு மெயில் செய்திருக்கிறாளே?
உடனே தொலைப் பேசியில் காயத்ரியிடம் பேசினான். அக்கா ஒரு நாள் நீ வீட்ல ரெஸ்ட் எடுக்கமாட்டியா? எனக்கு ஒரு நாள் மெயில் எழுதாட்டி என்ன்?

அது நான் இன்னிக்கு எழுதன மெயில் இல்லடா கீர்த்தி. ஃப்யூச்சர் மெயில்ல எழுதியிருக்கேன். அது உனக்கு இன்னிக்கு வந்திருக்கும். இது மாதிரி உன் வாழ் நாள் முழுக்க என் கிட்டேர்ந்து உனக்கு மெயில் வந்துக்கிட்டே இருக்கும்டா. நான் இருந்தாலும் செத்தாலும் என் மெயிலை நீ தினம் படிப்பே என்றாள். உடல் சோர்வு மனச் சோர்வு அவள் குரலில் தெரிந்தது.

அக்கா நீ ஏன் சாவனும். பயப்படாதே நான் சாயந்திரம் உன்னை டாக்டர்கிட்டே அழைச்சிட்டு போறேன். நீ ரெஸ்ட எடு என்றான்.

சரி.

அக்கா உன்னை மாதிரி எனக்கு ஒரு அக்கா கிடைச்சதுக்கு நான் கடவுள் கிட்டே தினமும் நன்றி சொல்றேன்-க்கா. ஐயாம் க்ரேட்ஃபுல் டு காட் என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

கண்ணில் நீர் தெறிக்க போனை வைத்தாள். இந்த இளம் பிஞ்சை விட்டுச் செல்ல மனம் இல்லை. நடந்த எல்லா விஷயத்தையம் ஃப்யூச்சர் மெயிலில் எழுதினாள்.

புடவையை எடுத்து பேன் க்ளாம்பில் மாட்டினாள். புடவையை விடுத்து சுடிதாரில் மாறினாள். தற்கொலை செய்துக் கொள்ளும் பெண்களின் மானம் இறந்த பிறகும் போகிறதே!. ஆம் தின செய்தித்தாள்கள் இறந்த பெண்ணின் போட்டோ என்று அவர்கள் கோரமாக ஆடை விலகி மார்பகம் தெரிய கிடக்கும் போட்டோக்களை பிரசுரித்து தங்கள் வக்கிர புத்தியை செய்தி எனும் போர்வையில் காட்டிக் கொள்வதில்லையா?

அதற்கு அவளும் ஒரு பாத்திரமாக விரும்பவில்லை. தன் சாவுக்கு பிறகு போலீஸ் கேஸ் என்று தன் தம்பி எதற்கும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக காதலில் தோற்றேன். காதலனை காட்டிக் கொடுக்க விருப்பம் இல்லை. என் சாவுக்கு நானே தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு முதன் முறையாக கழுத்து நெறிப்பதின் அர்த்தம் என்ன என்று உணர்ந்தாள்.

சில நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு அமைதி. முழு அமைதி. சாவில் அமைதி கிட்டுமா? ஒரு மகானின் கருத்துப்படி அமைதி என்பது நாம் உயிருடன் இருக்கும் போதே தேடவேண்டிய விஷயம். செத்தால் அமைதி கிடைக்காது. அதனால் காயத்ரியும் அமைதியடையவில்லை.

கல்லூரியிலிருந்து திரும்பியவனுக்கு அதிர்ச்சி. காரணம் புரியாததால் குழப்பம். தன்னை அனாதையாக விட்டுச் சென்றாளே என்ற கோபம். காதல் காரணமாக இருக்காது என்று ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. அக்கம் பக்க பழமைவாதிகளின் ஏளனப்பேச்சு. தன் வீட்டில் நடக்கும் வரை அனைவரும் நல்லவர்களே!

காரண காரியங்கள் சரியாக இருந்ததால் கேஸ் தற்கொலை என்று சீக்கிரம் முடிவுக்கு வந்தது. காவல் துறையும் ஏழைகளின் கேஸ்சுகளை அதிக நாள் நடத்த விரும்புவதில்லை.

ஒரு வாரத்தில் அவனுக்கு ஓட்டலிலிருந்த ஒரு கடிதம் வந்தது. அவள் சாவிற்கு ஓட்டல் நிர்வாகமே மிகவும் வருந்தியது. அவளுக்கு சேரவேண்டிய ரூபாய் 60000 காசோலையாக வந்தது. அவளுக்கு பதிலாக அவள் குடும்பத்தில் தகுதி உடைய யாராவது இருந்தால் அவருக்கு வேலை தர ஓட்டல் நிர்வாகம் விருப்பம் தெரிவித்திருந்தது.

படிப்பு நின்று போகாமல் இருக்க இரவு பணி ஏதாவது கிடைக்குமா என்று ஓட்டல் மேலாளரிடம் கேட்டான். அவரும் இரவு ஷிஃப்டில் ஸ்டுவர்டாக 10000 சம்பளத்தில் அவனை வேலைக்கு சேர்த்துக் கொண்டார். பயிற்சி சமயம் முடிந்ததும் 15000 சம்பளம் என்றும் உறுதியளித்தார்.

முதன் முறையாக அக்கா இல்லாத வாழ்க்கை. முதன் முறையாக வேலை. அதுவும் படிப்பு முடியும் முன். விஞ்ஞானி வேலையல்ல். உணவு பரிமாற்றங்களை மேற்பார்வையிடும் ஒரு வேலை.
எந்த வேலையும் கீழானது இல்லை தான். தன் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் இந்த பணம் தேவைப்படும் என்று ஒத்துக் கொண்டான்.

leomohan
09-10-2006, 04:30 PM
11
பணம் கொழிக்கும் இடம் மூன்று. வியாபாரம் அரசியல் மற்றும் சினிமாத்துறை. குற்றங்கள் கொழிக்கும் இடமும் இவை மூன்றும் தான். இந்த மூன்று துறைகளுக்கும் இடையயே ஆழ்ந்த சம்பந்தம் தொடர்பு சகோதர நட்பு. புகழும் கிடைக்கும் விளம்பரமும் கிடைக்கும் பணமும் கிடைக்கும். பிரச்சனைகளுகம் பஞ்சமில்லை இன்று.

இன்று ஸ்நேகா சிம்ரன் ஜோதிகா இவர்களை பின் தள்ளிவிட்டு மலையாளத்திலிருந்து வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிரஞ்சிதாவின் திரைப்பட தொடக்க விழா. குட் ஓல்ட் டேஸ் ஓட்டலில். மரியாதை நிமித்தமாக மூன்று முதலாளிகளுக்கும் அழைப்பு வந்திருந்தது.

வழுக்கப்படி நள்ளிரவில் தான் இது போன்ற பார்டிகள் தொடங்கும். ராகவ் நிரஞ்சிதாவை சந்தித்து வாழ்த்து சொல்லி கைகுலக்கினான். கைகுலக்கியவுடன் அவனுக்குத் தெரிந்தது. இதோட இந்த உறவு முடியப்போதில்லை என்று

ராபின் கண்களால் ப்ரவீனுக்கு நிரஞ்சிதாவை காட்டினான். அவனும் கண்களை மூடித்திறந்து திருப்தி என்று சொன்னான். முதல் முறையாக மூவரும் ஒரு பறவைக்கு ஒப்புதல் அளித்திருந்தனர்.
ராகவ் கோடு போட்டு கட்டம் போடத் துவங்கியிருந்தான். இதுபோன்ற வேலைகளுக்கு மூவரில் அவனே சாமர்த்தியசாலி. அவன் போக்கில் விட்டுவிட்டு மற்ற பறவைகளை நோட்டம் விட்டனர் இருவரும். பல நடிகைகள் இவர்களின் வசதி அறிந்து தாமாக வலையில் விழு காத்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு நாட்டம் இல்லை. இவையெல்லாம் பல காலங்களுக்கு முன்பே பார்த்திவிட்டிருந்தனர். இப்போது அவர்களது கொள்கை புதிய மலர்களின் வாசம் பார்ப்பதுதான்.


ஓட்டலில் வசதிகளை காட்டப்போவதாக கூறி நிரஞ்சிதாவை ராகவ் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான். அவளும் அந்த ஆடம்பரத்ததை கண்டு வியன்றவாறே பாராட்டு வார்த்தைகளை அங்குமிங்குமாக கூறிக் கொண்டிருந்தாள்.

பிறகு மசாஜ் பார்லருக்கு அழைத்துச் சென்றுக் காட்டினான். அவனுடைய பணியாட்கள் வெளிநாட்டில் பயிற்சி பெற்றதாகவும் நுணுக்கங்களை அறிந்தவர்கள் என்றும் உயர்ந்த மூலிகளை பயன்படுத்துவதாகும் மார்கெடிங் செய்துக் கொண்டிருந்தான்.

பிறகு நாளை வந்து இலவசமாக தங்கள் ஓட்டிலில் தங்கி சிகிச்சை பெற அழைப்பு விடுத்தான். அவளும் அதை ஏற்றுக் கொண்டு நன்றி கூறி விடைபெற்றாள்

விழா முடிந்ததும் டுமாரோ வில் பி எ டிஃபெரன்ட் ட்ரீட் என்று விட்டு கட்டை விரலை உயர்த்திக் காட்டினான் ராகவ்.

leomohan
16-10-2006, 07:14 AM
12

சித்ரா ஓட்டலில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அனைவரையும் கவர்ந்துவிட்டாள். பெரியவர்களிடத்தில் மதிப்பு. உடன் பணிபுரியும் ஆட்களுக்கு உதவும் குணம். கீழ் வேலை செய்பவர்களிடம் பொறுமை. நுனி நாக்கில் ஆங்கிலம். 5 நட்சத்திர ஓட்டலில் வேலை என்றாலும் ஆடம்பரம் இல்லாத அதே நேரத்தில் அழகான ஆடைகளை உடுத்தினாள். இதுவரை மூவேந்தர்களின் கண்ணில் படவில்லை. பட்டால் காயம் தான்.

அக்கா இருக்கும் வரை கீர்த்தி எந்த பெண்ணையும் ஏறெடுத்தப் பார்த்ததில்லை. ஆண்கள் அனைவருக்கும் எப்போதுமே காமம் வேண்டும் என்பதில்லை. ஆணக்கு ஒரு பெண் துணை அவசியம். அது இந்த சிருஷ்டியின் விந்தை. அக்கா அம்மா தோழி காதலி மனைவி மகள் என்று யாராவது ஒருவர் வேண்டும் ஒருவனின் வாழ்க்கையில்.

ஆணை அடுக்குவதும் பெண்தான். அவனிடம் அடங்குவதாக காட்டி அவனை அடக்கி ஆள்வதும் பெண்தான். மென்னை கடினத்தை வெல்லும் விந்தை. எந்த வேத வேதாங்களும் அறிவியியலும் கண்டு பிடிக்காத மர்மம்.

ஆண் சீட்டு என்று எந்த பேருந்திலும் இல்லை. ஆண்களுக்கு குறைந்த பட்ச இட ஒதுக்கீடு என்றும் இல்லை. ஆண் ஆதிக்கம் என்ற வார்த்தைதான் காதல் விழுமே ஒழிய பெண் ஆதிக்கம் என்று கேட்பதில்லை.

ஒரு கற்பழிப்பில் ஆணின் பகுதி என்ன பெண்ணின் பகுதி என்ன? ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளை கெடுக்க முடியுமா? சமீபத்தில் படித்த செய்தி ஆச்சர்யப்பட வைத்திருக்கும். தன்னை கெடுக்க வந்த ஆணின் உறுப்புக்களை ஒரு பெண் சேதப்படுத்திவிட்டு தப்பினாள் என்று. அப்படியிருக்க இன்னும் இந்த கொடுமைகள் நாட்டில் எப்படி நடக்கின்றன? பெண் போராட மறுக்கிறாளா அல்லது விரைவில் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு ஆணின் வேகத்திற்கு இறையாகிறாளா. பெண் நிஜமாகவே வீக்கர் செக்ஸ் தான என்றால் பெண்கள் அல்லவா ஆண்களின் பின் ஓடவேண்டும். ஆனால் இங்கு கதையே வேறாகிறதே!

கீர்த்திக்கு தனிமை வாட்டியது. இனிமையாக அவன் வாழ்வில் மெல்ல நுழைந்தாள் சித்ரா. வயது பொருத்தம் யாரும் இப்போரு பார்ப்பதில்லை. இவனை விட அவள் ஒரு வயது மூத்தவள். காந்தியை எதற்காக உதாரணம் எடுத்துக்கொள்கிறார்களோ இல்லையோ தன்னை விட மூத்தவளை விரும்புபவர்கள் அவரை உதாரணமாக கொள்கின்றனர்.


அவள் மென்மை. அளவான பேச்சு. பெரிய கண்கள். நிறைய அறிவு. தைரியம் என்று பல குணங்கள் கீர்த்தியை அவளை நாடச் செய்தது.
இரவு ஷிஃப்டில் இருப்பவர்களை வீட்டுக் கொண்டு செல்லும் ஓட்டல் வேன் வந்து அவர்களை ஏற்றிச் செல்ல நின்றிருந்தது. அவள் முன்பே ஏறி அதில் அமர்ந்திருந்தாள். கீர்த்தி இரண்டாவதாக ஏறி அவள் அருகில் அமரலாமா வேண்டாமா என்று யோசித்தப்படி இருந்தான்.

அவள் மெல்லியதாக புன்னகைத்து இங்கே உட்காரலாம் என்று தன்னருகில் இருந்த சீட்டை காட்டினாள்.

தாங்ஸ் என்றுவிட்டு உட்கார்ந்தான்.

உடம்பில் சூடு ஏறியது. ஒரு புது வித உணர்வு. கல்லூரியில் எந்த பெண்ணையும் கிட்டே வரவிட்டதில்லை. உடல் நடுங்கியது. ஒரு பெண்ணின் அருகில் ஒரு ஆண் அமரும் போது அவனிடம் மட்டும் காதல் இருந்தால் மட்டுமே இந்த நடுக்கம் இருக்கும். அவள் தன்னை காதலிக்கிறாள் என்று தெரிந்துவிட்டால் இந்த நடுக்கம் இருக்காது.

எங்கிருக்கு உங்க வீடு? அவன்.

மந்தைவெளி. உங்க வீடு?

மைலாப்பூர். உங்க அப்பா அம்மா....?

அப்பா அம்மா யாரும் இல்லை. ஹாஸ்டலில் தங்கியிருக்கேன். உங்கப்பா எங்கே வேலைப் பார்க்கிறார்?

எனக்கும் அம்மா அப்பா யாரும் இல்லை. ஒரே ஒரு அக்கா. அவள்தான் என்னை அப்பா அம்மா மாதிரி பார்த்துகிட்டு இருந்தாங்க. அவங்களும் போன மாசம் இறந்துட்டாங்க.

ஐயாம் சாரி. எத்தனை வயசு அவங்களுக்கு?

28

சின்ன வயசுதான். என்னாச்சு?

உடம்பு சரியில்லாம இருந்தாங்க. முதல் நாள் சந்திப்பிலே அக்காவின் தற்கொலையைப் பற்றி பேச விரும்பவில்லை.

அவளுடைய கரிசனம் அவனக்கு பிடித்திருந்தது. அது அவனுக்கு தேவைப்பட்டிருந்தது. அவளுடைய தைரியம் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. நட்பு நன்றாக மலர்வதற்காக அறிகுறிகள் அன்று தென்பட்டது.

leomohan
16-10-2006, 07:15 AM
13

நிரஞ்சிதா அம்மாவேடு வந்திருந்தாள் மறுதினம். வரவேற்கச் சென்ற ப்ரவீன் அதைப் பார்த்ததும் இன்னிக்கு ப்ரோகிராம் அவுட் என்று முடிவுக்கு வந்தான்.

பார்லரில் சந்திக்கச் சென்ற ராகவ் கிடைத்த சந்தர்ப்பத்தில் நீங்க அம்மாவோட வருவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கலை. மாடியில் ஓபன் நீச்சல் குளத்திற்கு அருகே உங்களுக்காக சின்ன பார்டியை எற்பாடு செஞ்சிருந்தோம் ஒரு சர்ப்ரைஸாக என்றான் ஆதங்கத்துடன்.

அதனால என்ன இன்னொரு நாள் தனியாக வர்றேன் என்றாள் என்னமோ பெருந்தன்மையாக இருப்பதாக.

அன்று அவள் செய்துக் கொண்ட அலங்காரம் மூலிகை சிகிச்சை அனைத்தும் இலவசம். சுமார் 25 ஆயிரம் மதிப்பு. சும்மா செலவிடவில்லை இந்த மூவேந்தரும். பணக்காரர்களின் நட்பு எந்த விதத்தில் பயன்படும் என்று உணர்ந்தாள் அன்று நிரஞ்சிதா.
அந்த வாரம் சனிக்கிழமை இரவு பீச்சில் இருக்கும் ராபினின் இன்னொரு பங்களாவில் சந்திக்க அழைப்பு விடுத்தான். அவளும் ஏற்றுக் கொண்டாள்.

இதன் நடுவில் இவர்களைப்பற்றியும் இந்த ஓட்டலில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைள் பற்றியும் பல விஷயங்களை சேகரித்திருந்தார் விக்ரமன்.

மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் ஏதாவது அரசியல் கோணம் இருக்கிறதா என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தார். மேலிடத்தின் உத்தரவுக்கும் காத்திருந்தார்.

எடுக்கும் நடவடிக்கை தடாலடியாக இருக்கவேண்டும். ஒரு முறைதான் அடி விழவேண்டும். தப்பிக்க வாய்ப்வே இருக்கக்கூடாது. நீதிமன்றத்திலும் தப்பிக்க எந்த வாய்ப்பும் இருக்கக் கூடாது என்று பல விஷயங்களில் கவனமாக இருந்தார். அவரைத் தவிர இந்த ஆபரேஷனைப் பற்றி ஒரே ஒரு காவல்துறை கமாண்டோக்கு மட்டும் தெரியும். இதில் அவர் எந்த பிசகும் செய்யவில்லை.

leomohan
16-10-2006, 07:16 AM
14

சனிக்கிழமை இரவு எல்லாம் எதிர்பார்த்ப்படியே நடந்தது. ஆனால் ஓட்டலிலிருந்து யாரும் தேவைப்படவில்லை. ஏனென்றால் கலைத்துறை இவர்களை மகிழ்விக்க வருகிறதே.

10.30 மணிக்கு அவளும் வந்தாள். குடி ஆட்டம் பாட்டு என்று 1.30 மணிவரை கூத்த நடந்தது. பணம் பத்துக்கு மேல் செய்துக்கொண்டிருந்தது. கரீம் 555 வாங்க வெளியே செல்லத் தேவையிருக்கவில்லை. ஏனென்றால் அது நடுத்தர வர்க பெண்களுக்கு மட்டும் தான். இது உயர்குடி. தூக்காது போர்கொடி என்று நினைத்தார்கள்.

அதற்கு மாறாக அன்றும் போராட்டம் நடந்தது. அடி உதையில் தொடங்கி கீறல் கடித்தல் வரை மனிதர்களின் மிருக வேட்டை நடந்தது.

வழக்கப்படி ராகவ் பேரத்தை தொடங்கினான். 1 லட்சம் தொடங்கி 5 லட்சம் வரைச் சென்றது. அவள் மசியவில்லை. 10 லட்சம் 15 லட்சம் வரை போனது. ழூவரும் சேர்ந்து பேசிப்பார்த்தார்கள். எதற்கும் மசியவில்லை அவள். பிறகு அவள் குளியறைக்கு சென்றாள். குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு காயப்பட்ட இடங்களில் டின்சர் தடவிவிட்டு வெளியே வந்தாள்.

அவள் வருவதற்கு முன் பேச்சு நடத்தினார்கள் மூவரும். ராபின் 15 லட்சம் அதிகம் என்றான். ப்ரவீன் அவள் உயர்குடி என்ற நினைவுப்படுத்தினான். ராகவ் அவள் மிகவும் கடினமானவள் என்று தன் கருத்தை கூறினான்.

குளித்து முடித்து வெளியே வந்தவள் ராகவ்விடமிருந்து பைப்பை எடுத்து புகைத்தாள். பிறகு பாய்ஸ் கலைத்துறைக்கு வரும்போதே எல்லாத்துக்கும் தயாராக இருக்கனும்னு சொல்லித்தான் அழைச்சிட்டு வர்றாங்க.

உங்களுக்கு ஒரு எக்சைட்மென்டுக்காகத்தான் இந்த செட் போடாத டிராமா. ஸோ டோன்ட் வேஸ்ட் மை டைம். லெட் அஸ் செட்டல் டவுன் ஃபார் 25 லாக்ஸ் என்றாள் ஸ்டைலாக.

எத்தனையோ போர்களம் கண்ட இம்மன்னர்களுக்கு இந்த பாணி புதிதாக இருந்தது. ராபின் அசந்து போனான். ராக்வ் ப்ரவீன் இது அதிகம் என்று தலையாட்டினர். ராபின் தன் பங்கிலிருந்த அதிகம் தர தயாராக இருந்தான்.

ஓகே பேபி ஐயாம் ரெடி. பட் ஐ நீட் அனதர் ரவுண்ட் என்றான். அவளும் சரி என்றாள்.

ப்ரவீனும் ராகவ்வும் சென்றுவிட்டனர். நிரஞ்சிதாவும் ராபினும் பாடி ஆடி உருண்டு பிரண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர். டைரெக்டர் ஆக்ஷன் என்று சொல்லாமல் ஒரே டேக்கில் நன்றாக நிரஞ்சிதா நடித்தது இந்த சீனாகத்தான் இருக்கும்.

இந்த நடிப்புக்கு மொழி தேவையில்லை. பின்னனி குரலும் தேவையில்லை. சுமார் நான்கு மணிக்கு அவள் 25 லட்சம் கொண்ட பெட்டியுடன் வெளியே சென்றாள். நள்ளிரவின் விளையாட்டு ராபினை தூக்கமாக ஆட்கொண்டது. பிறகு அவன் எழுந்திரிக்கவே இல்லை.

leomohan
28-10-2006, 08:03 AM
15

ராபின் கரோலினாவைக் கேட்டதாகவும் ப்ரவீன்அதனால் கோபம் அடைந்ததாகவும் இன்னொருமுறை அப்படிக் கேட்டால் கொன்றுவிடுவேன் என்றுப்ரவீன் மிரட்டியதாகவும் முன்பே விக்ரமனுக்கு தகவல் கிடைத்திருந்தது. ஆனால் யாரும்ஆதாரம் சொல்ல முன்வராததால் பிறகு பார்த்துக் கொள்வோம் என்றுவிட்டுவிட்டார்.

இப்போது மூவரில் ஒருவர் இல்லை. கட்டாயம் இவர்களை கட்டம்கட்ட சரியான வேளை என்று நினைத்துக் கொண்டார்.

நேராக நிரஞ்சிதாவின்வீட்டுக்கு சென்று 25 லட்சம் கொண்ட பெட்டியை கைப்பற்றினார். அவளை கைதி செய்துமகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ராகவ்வை நன்றாக துருவியதில் அப்படிஒரு சம்பவம் நடந்ததை ஒத்துக் கொண்டான். ஆனால் ப்ரவீன் கொலை செய்யும் அளவுக்குமுட்டாள் இல்லை என்பதையும் கூறினான்.

ப்ரவீன் ராபின் அதிகம் குடிக்கும்பழக்கத்தால் தான் இறந்திருப்பான் என்றும் போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் இந்த உண்மைதெரிந்துவிடும் என்று உறுதியாக கூறினான்.

ராபின் அவன் படுக்கை அறையில்அமைதியாக படுத்த நிலையில் மரணத்தை தழுவியிருந்தான். கரீம் வீட்டிற்கு செல்லும் முன்பங்களாவை நன்றாக சுத்தம் செய்துவிட்டுத்தான் சென்றிருந்தான். ஆனாலும் நிரஞ்சிதாவந்து சென்றதற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன.

நிரஞ்சிதா தான் அந்த கொலையைசெய்யவில்லை என்று சாதித்தாள். அந்தப் பணம் எப்படி வந்தது என்பதையும் சொல்லமறுத்தாள்.

விக்ரமன் இப்போது போஸ்ட் மார்டம் ரிப்போர்டிற்காககாத்திருந்தார்.
ரிப்போர்ட் கிடைத்துமும் ஆவலாக அதை படித்துப் பார்த்தார்.கழுத்து நெறிக்கப்படவில்லை. விஷம் இல்லை. துப்பாக்கி குண்டு இல்லை. சண்டையில்லலை.யாருடைய தலை முடியும் கை நகங்களும் சிக்கவில்லை. ஆனால் ஒரு மனிதன் ஒருமாதிற்குள்ளாக உட்கொள்ளும் போதைப் பொருளின் சதவிகிதம் அதிகமான காரணத்தால் மரணம்ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருந்தது.

உடனே ராபினின் வீட்டிலிருந்தபீப்பாய்களிலிருந்த குடிப்பானங்களை சோதனைக்கு அனுப்பினார். வீடு முழுவதும் ஏதாவதுபோதை மருந்து இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டது.

ப்ரவீனிடமும்ராகவ்விடமும் மீண்டும் விசாரனை. கட்டயாமாக ராபினுக்கு போதை மருந்து பழக்கம் இல்லைஎன்று சத்தியம் செய்தனர் இருவரும்.

குழப்பத்தில் ஆழ்ந்தார்விக்ரமன்.

கோர்ட்டுக்கு செல்லும் முன் நிரஞ்சிதாவைப் பார்த்து இன்னும் 10 லட்சத்திற்கு பேரம் பேசினார்கள். தாங்கள் கொடுத்தப் பணம் ஓட்டலில் நடக்க இருக்கும்கலைநிகழ்ச்சியில் அவள் பங்குபெறுவதற்கான அட்வான்ஸ் என்று கூறச்சொன்னார்கள்.

அவளுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தத்தையும் போலீஸால் நிருபிக்கமுடியவில்லை.
.

leomohan
28-10-2006, 08:05 AM
16

இது நடந்து ஒரு மாதம் இருக்கும். விக்ரமன்தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்தார். தாங்கள் கண்காணிக்கப்படுவதை அறிந்த அவர்கள்ஒரு மாதம் அமைதியாக இருந்தனர். கண்காணிப்பு சற்று தளர்க்கப்பட்டதாக உணர்ந்தவர்கள்மறுபடியும் தங்கள் பொழுது போக்கை துவங்கினார்கள்.

மீண்டும் அந்த பிரத்யேகஅறை. ஆனால் மூவருக்கு பதிலாக இருவர்.

ராகவ் போர்டில் இன்று பௌர்ணமி. சித்ராபௌர்ணமி என்று எழுதினான்.

ப்ரவீன் போர்டிற்குச் சென்று டுடேஸ் மெனுசித்ரா என்று எழுதினான்.

சித்ராவுக்கு அழைப்பு. அதே வெளிநாட்டுவிருந்தினர்களின் கதை. இந்த முறை ராகவ்வின் தனி பங்களாவில். எல்லாம் மாதவிக்கும்காயத்ரிக்கும் நடந்த மாதிரியே நடந்தது.

படுக்கை அறைக்குள் வந்த சித்ராவைபின் புறத்திலிருந்து கட்டியணைக்க முயன்றான் ப்ரவீன். ராகவ் குளியலறைக்குள்இருந்தான்.

சார் நீங்க எதுவும் பலவந்தப் படுத்தவேண்டாம். நான் தயார் என்று சொல்லிவிட்டு படுக்கையில் சென்று படுத்தாள் சித்ரா. பரவாயில்லை பறவைபடிந்துவிட்டது இன்று போராட்டம் இல்லை என்று அவள் ஆடையை கழற்றினான். அவள்மார்ப்பகத்தில் கைவைத்த அவனுக்கு ஜில்லென்று இரும்பின் உணர்வு பட்டது. சட்டென்றுஎழுந்து விளக்கை பெரிது செய்தவன் அவள் மார்ப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைகண்டு அதிர்ந்தான்.

நீ .. என்னப் பண்ற சித்ரா?

நீங்க ஒண்ணும்பண்ணாம இருக்க பாதுகாப்பிற்கு வைச்சிருக்கேன். ஒரு பொண்ணையும் நல்லா இருக்கவிடமாட்டாங்களே உங்களை மாதிரி ஆளுங்க. பணம் இருந்தா என்ன வேணும்னாலும்செய்வீங்களா? என்று கத்தினாள்.

அப்ப ராபினை கொன்னது நீதானா?

ராபினோ பாபினோ என் மேல யாரும் கைவைக்க முடியாது. என் மேல கை வைச்சிருந்தாஅவனையும் கொல்லுவேன். ஆனா அவனை நான் கொலை பண்ணலை என்றாள்.

ஏய் நீ பொய்சொல்ற. நீதான் அவனைக் கொன்னே என்றான் பயத்ததுடன் ப்ரவீன்.

சரி. இப்பஎண்ணப் பண்ணலாம். ஒன்னு நான் கற்ப்போட வெளியே போகனும். இல்லை உன் பிணத்தோட என்றாள.

நீ போ. நீ போ இங்கிருந்து என்று சொன்னான் அவசரமாக. அவள் தன்மேலாடைகளை பொறுக்கிக் கொண்டு மெதுவாக வெளியே சென்றாள்.

குளித்துவிட்டு வந்தராகவ் வேர் இஸ் மை பேப் என்றான் ஸ்டைலாக. ப்ரவீனின் முகம் வெளிரிப்போகிஇருந்தது.

என்னாச்சு?

ஷி ஹாட் அ கன் என்றான். நடந்ததைக்கூறினான்.

பிட்ச். என்றுவிட்டு நாளை அவள் வேலைக்கு வருவாளா இல்லை ராஜினாமாசெய்வாளா இல்லை போலீஸ்சிடம் செல்வாளா அப்படிச் சென்றால் என்ன செய்யலாம் என்றுயோசிக்கத் தொட்ங்கினான். பைப்பை கையில் எடுத்து புதிதாக புகையிலை நிரப்பி அதைபற்றவைத்து ஆழமாக இழுத்தான். அவன் அறை புகை மண்டலமாக காட்சி அளித்தது.

ப்ரவீன் ராகவ்விடம் விடை பெற்று வீட்டிற்குச் சென்றான். சனிக்கிழமை அதுவும் 12.00 மணிக்கு முன்வே வீட்டிற்கு வந்த கணவனை சற்று ஆச்சர்யத்துடனும் பயத்துடனும்சந்தேகத்துடனும் பார்த்தாள் கரோலினர். ராபின் இறந்ததிலிருந்து இவனுக்கு என்ன ஆகுமோஎன்று அவளுக்கு பயம். அதுவும் ராபின் தன் உயிலில் தனக்கு என்ன நேர்ந்தாலும் சொத்துமுழுவதும் கரோலினாவுக்கு போய் சேரவேண்டும் என்று எழுதியிருந்தான்.

இதனால்ப்ரவீன் மீது போலீஸ் ஒரு கண் வைத்திருந்தது. ஆனால் கரோலினாவை தன் தங்கை மாதிரிநடுத்துவான் என்று சொல்லி சமாளித்திருந்தான் ப்ரவீன். அந்த பாட்டில் அடிசண்டையினால் அந்த கருத்தை காவல் ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை.

ப்ரவீன் சென்றசில மணி நேரங்கள் புகைத்தபடி இருந்த ராகவ் புகைப்பதை நிறுத்தினான்.பிறகு மூச்சு விடுவதையும் நிறுத்தினான். ஆம் மூவரில் இருவர் உயிருடன்இல்லை

leomohan
28-10-2006, 08:06 AM
17

கீர்த்தி சித்ராவுக்கு போன் செய்தான் சுமார் 10 மணி காலையில். இரவு ஷிஃப்ட் முடிந்து 5 மணிக்குத்தான் ஹாஸ்டல் சென்றிருப்பாள். ஆனாலும் அவளை தூக்கத்தில் எழுப்ப வேண்டிய கட்டாயம்.

ஏனென்றால் அவனுக்கு இன்று பிறந்த நாள். காலையில் எழுந்தவுடன் தாய்தந்தை பிறகு அக்காவின் படங்களை வேண்டிக் கொண்டான். பிறகு இமெயிலில் அக்காவின் வாழ்த்தையும் படித்தான்.

குட் மார்னிங் சித்ரா. தொந்தரவுக்கு மன்னிக்கனும். இன்னிக்கு என்னோட பிறந்த நாள். அதனால் உங்கைள லஞ்சுக்கு வெளியே அழைச்சிகிட்டு போலாம்னு நினைக்கிறேன் என்றான் அன்புடன்.

குட் மார்னிங். ஹாப்பி பர்த் டே டு யூ. ஏதுக்கு லஞ்சுக்கு வெளியே போகனும். உங்க வீட்டிற்கு வந்து என் கையால நானே சமைச்சி போடறேன் என்றாள்.

ஆறு மாத காதலுக்கும் ஆயுள் முழுதுமான காதலுக்கு இதுதான் வித்தியாசம். இந்த இரண்டு காதலிலும் காமம் உண்டு. ஆனால் இரண்டாவது மிகவும் இங்கிதமான காமம். அதில் ஆன்மாக்கள் கலக்க பொறுமையுண்டு.

உடல்கள் சேர இன்னும் பொறுமை உண்டு. ஒரு காதலி வீட்டிற்கு வந்து சமைத்து போடுகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் அதற்கு? அவள் திருமணத்திற்கு தயார் என்று தானே? வானத்தின் உச்சியைத் தொட்டிருந்தான் கீர்த்தி.

அவசியம். எனக்கு என்ன சொல்றதுன்னெ புரியலை. நான் ரொம் சந்தோஷமா இருக்கேன் இன்னிக்கு. எப்ப வருவீங்க?

நான் இன்னும் ஒரு மணி நேரத்தில அங்க இருப்பேன்

ஒரு மணி நேரம் அவனுக்கு ஒரு யுகமாக தோன்றியது.

நாற்காலியில் அப்படியே அமர்ந்திருந்தான். அக்காவின் படத்தை நோக்கி அக்கா உனக்கு சித்ராவை பிடிக்கும் பாரு. அவள் உன்னை மாதிரி அழகா அமைதியா இருக்கற பொண்ணு. அவளை பார்த்துட்டு உனக்கு சம்மதமான்னு இமெயில்ல சொல்லு என்று பிதற்றிக் கொண்டிருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது.

என்றும் அவளை ஓட்டல் சீருடையில் கண்டவனுக்கு புடவையில் இன்னும் அழகாக தெரிந்தாள்.

வாங்க என்று வரவழைத்து உபசரித்தான்.

அந்த சிறிய வீட்டை அவள் நோட்டம் விட்டாள். ஒரு சிறிய ஹால். சிறிய கிட்சன். அவனுடைய அறையில் அளவில்லா புத்தகங்கள். சோதனை கூடம் அமைத்திருந்தான். பல குடுவைகள். பல வண்ண திரவங்கள். ஒரு சிறிய கெமிஸ்ட்ரி லைப்ரரியே அங்கிருந்தது. பார்த்து அசந்துவிட்டாள். ஜனாதிபதியின் விருதை ஃப்ரேம் போட்டு மாட்டியிருந்தான்.

இவங்க தான் உங்க அக்காவா? என்று காயத்ரியின் படத்தைக் காட்டி கேட்டாள்.

ஆமாம்

இவங்களை எங்கேயோ பாத்திருக்கேன்

நம்ம ஓட்டல்லதான் பாத்திருப்பீங்க. பெஸ்ட எம்பளாயி ஆஃப் த மன்த் அவார்ட்ல சில மாசத்திற்கு முன் எங்க அக்கா வாங்கியிருந்தாங்க. அவங்க போட்டோவை பார்த்திருப்பீங்க

ஆமாம். கரெக்ட். நம்ம ஓட்டல்லேயா வேலைப் பார்த்தாங்க?

ஆமாம்

சரி. இந்த லிஸ்ட்ல இருக்கிற சாமான்களையெல்லாம் வாங்கிட்டு வாங்க. நான் வீட்டை சுத்தம் பண்ணி வைக்கிறேன். நீங்க வந்ததும் சமைச்சி நாம்ப ரெண்டு பேரும் சாப்பிடலாம்

ஏதுக்கு வீட்டையெல்லாம் சுத்தம் பண்ணிகிட்டு. சிரமம்

நான் பண்ணாம வேற யார் பண்ணுவா?

கேட்டதும் நெகிழ்ந்துவிட்டான்.

நீங்க போறதுக்கு முன்னாடி கொஞ்சம் கம்யூட்டர்ல லாகின் பண்ணிட்டு போயிடுங்க. நான் இன்னிக்கு லீவ் சொல்ல மெயில் எழுதனும் என்றாள்.

எதுக்கு லீவ்?

இன்னிக்கு முழுசா உங்களோட இருந்தா ராத்திரி எப்படி வேலைக்கு போறது? செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

இன்னிக்கு முழுசா என்னோடையா? ஐயாம் வெரி லக்கி என்று குளிர்ந்து போனான். ஆனால் ராத்திரி உங்களை பார்க்காம எப்படி? என்றான் காதலுடன்.

ஒரு நாள் தானே என்றாள் அவளும்.

கம்ப்யூட்டரை தொடக்கிவிட்டு லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கடைவீதிக்கு கிளம்பினான். இப்போதே கல்யாணம் ஆன களை வந்துவிட்டதே என்னிடம் என்று பெருமிதமாக.

அவன் வெளியே சென்றதும் சட்டென்று தன் பையில் இருந்து ஒரு சீ.டீ.யை எடுத்த உளவு பார்க்கும் ஒரு மென்பொருளை அந்த கணினியில் ஏற்றினாள். பிறகு எடுத்துவந்திருந்த எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் அந்த கணிணியில் உள்ள அனைத்து விஷயங்களையும் பிரதி எடுத்துக் கொண்டாள். பிறகு எடுத்து வந்திருந்த மினி காமிராவில் அங்கிருந்தவைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

மின்னல் வேகத்தில் இதை செய்துவிட்டு வீட்டை சுத்தம் செய்யத்தொடங்கினாள் சித்ரா.

வீட்டிற்கு வந்து பார்த்ததும் அசந்து போனான் கீர்த்தி. அக்கா இறந்த பிறகு முதன் முறையாக வீட்டு வாசலில் கோலத்தைப் பார்த்தான். வீடே சாம்பிராணி வாசனையில் மணம் வீசியது. அடுப்படி சுத்தமாக இருந்தது. டேப்பில் பக்திப்பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

அவனுடைய நூலகத்தில் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வேதியியல் கூடம் பள்ளி லாப்போல சுத்தமாக இருந்தது. அங்கும் மருந்து வாசனைப் போக சாம்பிராணி போடப்பட்டிருந்தது. வீடே ஒரு கோவிலாக மாறியிருந்தது.

இதற்குத்தான் மனைவி வேண்டும். அதுவும் சித்ரா போல என்று நினைத்துக் கொண்டான்.

கண்ணில் நீர் மல்க அவள் கரத்தை பிடித்து ஐயாம் ரியல்லி க்ரேட்ஃபுல் டு யூ என்றான். அவள் மெதுவாக கையை விடுவித்துக் கொண்டு நெறைய வேலை இருக்கு என்று சொல்லிக் கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தாள்.

ஒரு மணி நேரத்தில் மணக்கும் சுவையான சமையல் ரெடி. இருவரும் பல விஷயங்களை பேசிக் கொண்டே உணவருந்தினர்.

உங்க அக்கா எப்படி இறந்து போனங்கன்னு சொல்ல மாட்டிங்களா?

எங்க அக்கா மூன்று நாளா உடம்பு சுகம் இல்லாம இருந்து தூக்கு மாட்டிக்கிட்டு செத்துப் போயிட்டாங்க. சாகம் போது காதல்ல தோத்துட்டேன்னு ஒரு லெட்டர் எழுதி வைச்சிருந்தாங்க. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல அவங்க கன்னித்தன்மை இழுந்துட்டாங்கன்னு வந்திருக்கு என்றாள் கலங்கியவாறு.

சட்டென்று அவன் முகம் மாறியது. எங்க அக்காவை ஏமாத்தினவங்க... ஏமாத்தினவன் மட்டும் என் கையில கெடைச்சான் அன்னிக்குத்தான் அவனுக்கு கடைசிநாள் என்றான் ஆக்கிரோஷமாக.

அமைதியா இருங்க கீர்த்தி. நீங்க இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியதிருக்கு. செத்தவங்களுக்காக நீங்க கஷ்டத்தில மாட்டிக்காதீங்க. நீங்க ஓட்டல்ல யாரையாவது சந்தேப்படறீங்களா?

தெரியாது என்று தலையை ஆட்டினான்.

உங்களுக்கு ட்ரக்ஸ் பழக்கம் இருக்கா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க சித்ரா. எங்க அக்கா என்னை அப்படி வளர்க்கலை

பின்ன தடைசெய்யப்பட்ட ட்ரக்ஸ் பத்தி இத்தனை புத்தகங்கள் வெச்சிருக்கீங்க

அதுவா நான் அந்த தலைப்பில ஒரு தீஸிஸ் எழுதிக்கிட்டு இருக்கேன் என்றான்.

உங்களுக்கு என்ன சாப்பாட்டெல்லாம் பிடிக்கும்? என்று பேச்சின் திசையை மாற்றினாள் சித்ரா.

அன்று முழுவதும் அவனுடன் இருந்தாள். அவன் பல நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாக இருந்தான்.

அங்கிருந்து விடை பெற்று செல்வதற்கு முன் அந்த வீட்டின் சாவியை கொண்டுவந்திருந்த மெழுகில் அச்செடுத்திருந்தாள்.
மாலை அவனை அழைத்துச் செல்ல ஓட்டல் வண்டி வந்தது. அவன் சென்றதும் தயார் செய்த சாவியைப் போட்டு திறந்து வீட்டை நன்றாக அலசினாள். பிறகு வேண்டிய தகவல்கள் கிடைத்ததும் வீட்டை பூட்டிவிட்டு காவல் நிலையம் சென்றாள்.

leomohan
28-10-2006, 08:06 AM
18

விக்ரமன் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் என்பது அவரது விரல் நெற்றிப் பொட்டை தேய்த்துக் கொண்டிருப்பது பார்த்து உணர்ந்திருக்கலாம்.

இரு கொலைகள். தடயங்கள் இல்லை. பல எதிரிகள் அதனால் பலர் மீது சந்தேகம். பல இளம் பெண்களின் வாழ்க்கை கிடைப்பில். அதில் அடிபட்ட நாகம் ஏதாவது ஒன்றிருக்கும். இருவரும் இறந்தது ஒரே காரணத்தால் - உடலில் அளவுக்கு அதிகமான ஒரு போதைப் பொருள்.

இருவருக்கும் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கம் இல்லை. ராபின் வீட்டிலிருந்து கிடைத்த வொயின்களில் போதை மருந்து இல்லை. ராபின் வீட்டிலும் ஓட்டலிலும் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. ராகவ் வீட்டிலும் அவன் உபயாகிக்கும் புகையிலைகளையும் நன்றாக சோதித்து பார்த்தபிறகு ஒரு போதைப் பொருளும் இல்லை என்று ரிப்போர்ட் அளித்தனர்.

இவர்களை கைதிசெய்ய அவர் சேகரித்த அனைத்து விபரங்களும் வீணாகப்போய்விட்டது. இன்னும் ஒருவன் தான் பாக்கி. அவனையும் யாராவது கொன்று விட்டால் நகரத்தில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். கோர்ட் கேஸ் என்று நேரம் கடத்த தேவையில்லை.

விக்ரமன் என்றைக்கும் கொலை கேஸ்சுக்கு அஞ்சியதில்லை. கொலையாளி ஏதாவது தடயங்களை அவசியம் விட்டுச் செல்லவான். அவர் கவலைப்படுவதெல்லாம் கொள்ளை கடத்தல் கற்பழிப்புச் சம்பவங்களுக்குத்தான்.

கற்பிழந்த பெண்கள் எதிர்கால வாழ்க்கைக்கு அஞ்சி காவல்துறையை அணுகுவதில்லை. இல்லை மிரட்டலுக்கு பயந்துவிடுகின்றனர். அதுவும் இல்லையென்றால் பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.

இவ்வாறாக யோசித்துக் கொண்டிருந்தவரை குட் மார்னிங்க் என்ற குரல் கலைத்தது. கை குலக்கிவிட்டு மென்மையான கைகள் கொண்ட மூவரைத் தேர்ந்தெடுத்து அதில் ஒருவருக்கு குட் ஓல்ட் டேஸ் ஓட்டலைக் கண்காணிக்கும் வேலை கொடுத்திருந்தார். அதற்கு காரணம் எந்த நிலையிலும் யாரும் அவர்களை போலீஸ் என்று கண்டுபிடிக்கக் கூடாது என்பதால். சித்ரா அவனைப் பார்த்து மரியாதை புன்னகையை வீசினாள்.

ப்ரவீன் சித்ரா தான் ராகவ்வை கொன்றிருக்க முடியும் என்று விக்ரமனிடத்தில் கூறியிருந்தான். தாங்கள் இருவரும் அவளிடத்தில் தவறாக நடக்க முயற்சி செய்ததாக ஒத்துக் கொண்டிருந்தான். மானத்ததை விட உயிர் பெரிதல்லவா? அவரும் அவளை கண்காணிப்பதாக உறுதியளித்தார். அவனை கண்காணிக்கத்தானே அவளையே அங்கு வேலைக்கு அனுப்பினார்.

சார். கீர்த்தி வீட்டுக்குப் போனேன். எனக்கு தகுந்த ஆதாரங்கள் கிடைச்சிடுத்து. அவனோட அக்காவை மிருகத்தனமா கற்பழிச்சிருக்காங்க இந்த மூன்று பேரும். அவளும் தூக்கு மாட்டி தொங்கறததுக்கு முன்னாடியே நடந்தததையெல்லாம் விவரமா எழுதி வைச்சிட்டு போயிட்டா.

அவனுடைய அறையில் போதைப் பொருட்களைப் பற்றியும் நிறைய வேதியியல் ஆராய்ச்சிகளைப் பற்றியும் புத்தகங்கள் மருந்துகள் திரவங்கள் இருக்கு. அவனுடைய கம்ப்யூட்டரை ஹாக் பண்ணதில் அவனுடைய அக்கா காயத்ரி எழுதின மெயிலும் கிடைச்சிடுத்து. திஸ் இஸ் அ சிம்பிள் ரிவென்ஜ் கேஸ் என்றாள் ஸ்பெஷல் ஏஜெண்ட் சித்ரா.

பிரமாதமான வேலை செஞ்சிருக்கீங்க சித்ரா. ஆனா இரண்டு விஷயம். நம்மிடம் கீர்த்திக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லை. அதனால அவன் வாயாலே கன்பெஷன் கிடைக்கனும்.

இரண்டாவது அவன் பிரயோகித்த போதை மருந்தும் மெதடாலாஜியும் கிடைக்கனும். அப்பத்தான் அவனை கைதி செய்ய முடியும்

செஞ்சிரலாம் சார். நான் இன்னிக்கு ராத்திரி அவனை மறுபடியும் சந்திக்கிறேன் என்றாள் நிறைவுடன்.

அதுக்கு முன்னாடி மிஞ்சியிருக்கிற ப்ரவீனுக்கு பாதுகாப்பு கொடுக்கனும் வேண்டாய் வெறுப்பாக இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும் அல்லவா?

சரி சார் என்று கூறிவிட்டு விடைப் பெற்றாள்.

leomohan
28-10-2006, 08:07 AM
19

கல்லூரியிலிருந்து வீடு வந்த கீர்த்தி மிகவும் சோர்ந்திருந்தான். அக்காவை நினைத்து அழுதான். ராபினையும் ராகவ்வையும் கொன்ற பிறகும் அவன் ஆத்திரம் தீரவில்லை. இன்னும் ப்ரவீன் பாக்கியிருக்கிறானே?

சித்ராவின் அன்பான முகத்தை காண ஏங்கினான். அவள் தோளில் சாய்ந்து அழுவேண்டும் போலிருந்தது. அவளிடம் உண்மையெல்லாம் சொல்லி நான் கெட்டவனில்லை என்று பாவ மன்னிப்பு கேட்கவேண்டும் போலிருந்தது. அவள் மடியில் தலை வைத்து உறங்கவேண்டும் போலிருந்தது. அப்படியே இறந்துவிடவேண்டும் போல் இருந்தது.

இந்த யோசனைகளில் அவன் ஆழ்ந்திருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது. சோர்வாக சென்று கதவைத் திறந்தான்.

வாங்க சித்ரா. இப்பத்தான் உங்களைப் பத்தி நினைச்சிகிட்டு இருந்தேன்

அப்படியா? என்னன்னு?

ம் என்று தத்தளித்தான்.

கீர்த்தி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.

இப்படி உட்கார்ந்துகிட்டு சொல்லுங்க.

கீர்த்தி இன்னிக்கு மாதவியை ஒரு ரெஸ்டாரெண்டில் பார்த்தேன். அவளை ராகவ் ப்ரவீன் ராபின் மூன்று பேரும் சேர்ந்து அழிச்சிட்டாங்க. நிரஞ்சிதாவைக் கூட அவங்க தான் கெடுத்தாங்களாம். உங்க அக்காவைக் கூட ....... அவள் தயங்கினாள்.

அவங்க கூட போறதை பாத்திருக்கா. ஜாக்கிரதையா இருன்னும் சொல்லியிருக்கா. அதுக்கு மூனு நாளைக்கப் புறம் தான் உங்க அக்கா தூக்கு மாட்டியிருக்காங்க என்றாள்.

அவன் அமைதியாக இருந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. அவள் அருகில் வந்து அமர்ந்தான். அவள் தோளில் சாய்ந்தான் ஆதரவைத்தேடி. அவள் அவனை அள்ளி எடுத்து அவன் தலையை தன் மார்பில் புதைத்துக் கொண்டாள். அவன் அழும் சத்தம் கேட்டது. விசும்பல் பெரிய அழுகையாக மாறியிருந்தது.

என்னாச்சு ஏன் அழுறீங்க?

எனக்குத் தெரியும் சித்ரா. ஐ நோ. ஐ கில்ட் த பாஸ்டர்ட்ஸ். நான் தான் ராபினையும் ராகவ்வையும் கொன்னேன். ப்ரவீனையும் கொல்லாம விடமாட்டேன். எங்க அக்கா பட்ட கஷ்டத்துக்கு அவங்களை சும்மா விடமாட்டேன்.

மைக்ரோ ரிக்கார்டரை முன்பே தட்டிவிட்டிருந்த சித்ரா ஆச்சர்யத்துடன் கேட்பது போல

என்ன? என்ன சொல்றீங்க கீர்த்தி? நீங்க கொலை பண்ணீங்களா? என்னால நம்பவே முடியலையே?

சித்ரா. நான் தான் அவங்களை கொலைப் பண்ணேன் என்றான் விரக்தியுடன்.

எப்படி?

தன் ஆய்வுக்கூடத்திற்கு சென்று ஒரு மெழுகு போன்ற பொருளை எடுத்துவந்து காட்டினான்.

இது தான் என்னோட கண்டுபிடிப்பு. முதல்ல இதை ராபின் குடிக்கிற வொயினோட பாரெல்ல இருக்கிற பைப்புக்குள்ள மறைச்சி வெச்சேன். அவன் தினமும் வொயின் குடிக்கும் போதும் வொயின் பாரெல்லேர்ந்து பைப்வழியாக வெளியே வரும்போது இந்த மருந்தையும் கொஞ்ச கொஞ்சமா கரைச்சிக்கிட்டே வெளியே வரும். ஒரு நாளைக்கு 1 எம்ஜி. 30வது நாள்ல உடல்ல 30 எம்ஜி லெவல் கிராஸ் ஆகும் போது மனஷன் சாகறது நிச்சயம்.

ராகவ்?

ராகவ்வுக்கு பைப் பிடிக்கிற பழக்கம். தினமும் அவன் பைப்மேல இந்த மருந்தை தடவிடுவேன். அவன் 24 மணிநேரம் பைப் பிடிப்பான். அவனும் போய் சேர்ந்திட்டான். ப்ரவீனை கொல்றதுக்கு தான் வழி தேடிக்கிட்டு இருக்கேன். நானே போலீஸ்ல சரணைடஞ்சிரலாம். ஆனா நான் ஏன் என் வாழ்கையை வீணடிச்சிக்கனும்? தப்ப செஞ்சது அவங்க. அவங்கத்தான் தண்டனையை அனுபவிக்கனும் என்றான் கோபத்துடன்.

அந்த மருந்தை அவன் கையிலிருந்து வாங்கிப் பார்த்தவள் சட்டென்று தன் பையில் போட்டுக் கொண்டு அதிலிருந்து துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி நீக்கினாள்.

சாரி. கீர்த்தி. குட் ஓல்ட் டேஸ் விவகாரங்களை கண்டுபிடிக்க வந்த ஸ்பெஷல் ஏஜெண்ட் நான் தான். உங்களை கைதி பண்ண வேண்டிய கட்டயாத்தில இருக்கேன். அதனால தயவு செய்து எனக்கு ஒத்துழைப்பு கொடுங்க என்றாள்.

திகைத்த நின்றான் கீhத்தி. இந்த் பெண்ணா? சற்று நேரம் அமைதியாக இருந்தான். பிறகு முகத்தை துடைத்துக் கொண்டு

சித்ரா யூ ஆர் வெரி ஸ்மார்ட். ஆனா உங்க கிட்ட ஒரு கோரிக்கை. ஒரு கொலைப் பண்ணாலும் மூன்று கொலைப் பண்ணாலும் எனக்கு தூக்கு நிச்சயம். இந்த படுபாவியை விட்டா இன்னும் பல பெண்களோடு வாழ்க்கை நாசமாயிடும். எனக்கு ஒரு நாள் நேரம் கொடுத்தா அவனையும் தீர்த்துட்டு நானே சரணடைஞ்சிடறேன். இது சத்தியம் என்றான் கெஞ்சல் பார்வையுடன்.

தன் மேலாடையை அவிழ்த்த ப்ரவீனை தானே பதம் பார்த்திருக்க வேண்டும் அன்று.

ஆனா நீங்க எப்படி கொல்வீங்க அவனை. அவனுக்கு தான் குடி புகையின்னு எந்த பழக்கமும் இல்லையே?

அதைப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நாளை பத்து மணிக்கு என்னை அரெஸ்ட் பண்ணிக்குங்க என்றான் நம்பிக்கையுடன்.
அவனை நம்பி அவள் விடைப் பெற்றுச் சென்றாள்.

leomohan
28-10-2006, 08:08 AM
20
விக்ரமன் இரவு முழுவதும் சித்ராவிடமிருந்து போன் வராதது கண்டு குழம்பிபோயிருந்தார்.

கரோலினா தன் குழந்தையை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு ப்ரவீனுடன் வந்திருந்தாள். ப்ரவீன் சில சட்ட தஸ்தாவேஜ்களில் அவளிடம் கையெழுத்து வாங்குவதற்காக அழைத்து வந்திருந்தான். வக்கீலும் வந்திருந்தார். மூன்று பேரும் அந்த பிரத்யேக அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வழக்கமாக இருக்கும் மூன்று பேர் இல்லை.

இந்த கொலைகளினால் தன் மீது ஏதாவது நடவடிக்கை காவல்துறை எடுக்குமா என்று சட்ட சிக்கல்களை அலசிக் கொண்டிருந்தான்.

சுமார் 9.30 மணி இருக்கும். கீர்த்தி ஓட்டலுக்கு வந்து சேர்ந்தான்.

நேராக முதல் தளத்திற்கு வந்தான். வெளியே இருந்த பேரர் கீர்த்தியைப் பார்த்து நட்பு புன்னகை வீசினான்.

உள்ளே யாரு? என்றுக் கேட்டான்.

அய்யாவோட சம்சாரம் அவரோட குழந்தை வக்கீல் என்று சொல்லிட்டு நகர்ந்தான் அவன்.

மிகுந்த யோசனையில் ஆழ்ந்தான் கீர்த்தி. தன்னைப்போல இன்னொரு அனாதை உருவாகக் கூடாது. ப்ரவீன் கெட்டவன் தான். ஆனால் அந்த பச்சிளம் குழந்தை யாருக்கு எந்த துரோகமும் செய்யவில்லை.

பக்கத்திலிருந்த டாய்லெட்டுக்குள் நுழைந்தான். எடுத்து வந்திருந்த மருந்து மெழுகை தூள் தூளாக உடைத்து ஃப்ளெஷூக்குள் எறிந்தான்.

பிறகு அங்கிருந்த ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டான்.

அதை ப்ரவீனின் அறைக்கதவுக்கு வெளியே வைத்தான். அறைக்குள் சென்று சார் ஒரு முக்கியமான விஷயம் பேசனும் என்றான்.

கொஞ்ச நேரம் வெயிட்டு பண்ணுங்க என்றான் ப்ரவீன்.

இல்லை சார். இந்த கொலைகளைப் பத்தி ஒரு தகவல் கிடைச்சிருக்கு என்றான் பதட்டத்துடன்.

கரோல் குழந்தையை அழைச்சிகிட்டு வெளியே போய் இரு. வக்கீல் சார் நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கேட்டுக் கொண்டான் ப்ரவீன்.

குழந்தையுடன் வெளியே வந்த கரோலினா பார்த்துவா குட்டி இது ஆஸிட் பாட்டில் என்றாள் அறைக்கு வெளியே இருந்த பாட்டிலைக் காட்டி.

ஆஸிட்ன்னா என்னம்மா என்று கேட்டது அந்த கிள்ளை.

ஆஸிட்டு மேல பட்டுச்சினா உடம்பு எரிஞ்சி போயிடும் கண்ணா என்றாள்.

கரோலினா குழந்தை மற்றும் வக்கீல் மூவரும் வெளியில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்.

சார் நீங்களும் உங்க நண்பர்களும் சேர்ந்து காயத்ரியோட வாழ்க்கையை அலைகழிச்சிட்டீங்க. அதனால அவன் தம்பி தான் இந்த கொலைகளை செஞ்சிட்டான்

என்ன? என்று அதிர்ச்சியுடன் கேட்டான் ப்ரவீன். நீ......நீ.. தானே அவளோட தம்பி? என்று தற்காப்புக்கு துப்பாக்கியை தேடிக்கொண்டே.

ஆமாம் சார் என்று சொல்லிக் கொண்டே கண் இமைக்கும் நேரத்தில் கதவிற்கு வெளியே இருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்த திராவகத்தை அவன் முகத்தில் வீசி விட்டு வெளியேறினான்.

ப்ரவீன் அய்யோ அம்மா என்று கூச்சலிட பதட்டத்துடன் வெளியே இருந்த மூவரும் உள்ளே ஓடினர். வக்கீல் அவனைப் பிடிங்க பிடிங்க என்று கத்தினார்.

பக்கத்தில் ஒரு அறையில் ஒளிந்திருந்த சித்ரா சட்டென்று துப்பாக்கியுடன் வெளியே வந்து யூ ஆர் அன்டர் அரெஸ்ட் என்றாள்.

அமைதியாக அவன் கைகளை நீட்டினான். ப்ரவீனுக்கு அவன் தண்டனை அளித்துவிட்டான். அவன் தன் அழகில் இனிமேலும் யாரையும் அழிக்க மாட்டான். அவன் குழந்தையும் அனாதையாக வில்லை. அக்காவுக்கு நியாயம் செய்துவிட்டான். சித்ராவிற்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றிவிட்டான்.

மணி காலை 10. அவன் அவளை நன்றியோடு பார்த்தாள். அவள் அவனை நன்றியோடு பார்த்தாள். அன்று காலையில் அவள் அக்கா எழுதிய இமெயில் ஞாபகத்திற்கு வந்தது.

4 வருட படிப்பை வெற்றியோடு முடித்து முதல் மதிப்பெண் வாங்கியிருந்ததற்காக அவனைப் பாராட்டி எழுதியிருந்தாள்.

கல்லூரியில் அவன் முதல் மதிப்பெண் வாங்கியதாக போர்டில் எழுதி ஒட்டியிருந்தனர்.

முற்றும்

leomohan
03-11-2006, 03:33 PM
அனைவருக்கும் நன்றி. இந்த தொகுப்பையும் இம்மன்றத்தில் மின் புத்தகப் பகுதியில் ஏற்றியுள்ளேன்.

pradeepkt
06-11-2006, 04:00 AM
மிக்க நன்றி மோகன். முழுமையாகப் படித்துவிட்டுக் கருத்துகளைச் சொல்கிறேன்.

ஓவியா
06-11-2006, 06:22 PM
அனைவருக்கும் நன்றி. இந்த தொகுப்பையும் இம்மன்றத்தில் மின் புத்தகப் பகுதியில் ஏற்றியுள்ளேன்.


நன்றி மோகன்

மன்னிக்கவும்
நான் மெல்ல-மெல்ல படித்து
அடுத்தவருடம் கருத்து பினூட்டம் இடுகின்றேன்....:D

பாரட்டுக்கள் நண்பா

leomohan
19-02-2007, 06:38 PM
நன்றி மோகன்

மன்னிக்கவும்
நான் மெல்ல-மெல்ல படித்து
அடுத்தவருடம் கருத்து பினூட்டம் இடுகின்றேன்....:D

பாரட்டுக்கள் நண்பா

படித்து முடித்தீர்களா?

அக்னி
12-08-2007, 10:28 PM
படித்து முடித்தேன். வியந்து முடிக்கவில்லை.
பாராட்டுக்கள் மோகன்...

leomohan
13-08-2007, 07:24 AM
படித்து முடித்தேன். வியந்து முடிக்கவில்லை.
பாராட்டுக்கள் மோகன்...



நன்றி அக்னி. முன்பு என்னிடம் உறுதியளித்ததுபோல் பழைய படைப்புகளை படித்து வருகின்றீர்கள் என்று நினைக்கிறேன். தங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.