PDA

View Full Version : மார்கழியில் ஒரு காலை



leomohan
02-10-2006, 12:31 PM
மார்கழியின் காலை பொழுதை ரசித்தவரா நீங்கள். இப்போது அதைபார்க்காமல் ஏங்குபவரா நீங்கள்.......... கட்டாயம்படியுங்கள்.


நன்றாக கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் போது அப்பா எழுப்பி Уபோய் பால் வாங்கிட்டு வாФ என்று மார்கழியில்ஒரு காலையில் எழுப்ப மார்கழியின் காலை எத்தனை ரம்மியமானது என்று உணர ஒரு வாய்ப்புகிடைத்தது.

ஆனால் எழுந்திரிக்க மனம் இல்லாமல் குளிருக்கு இதமாக போர்வையைநன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றும்.

இத்தனை ரம்மியமானஅழகான உணர்ச்சிப் பூர்வமான மார்கழியை இத்தனை ஆண்டுகாலமாக ரசிக்காமல் விட்டுவிட்டஇந்த சோம்பேறித்தனை உதைக்கத் தோன்றியது.

இது அறிந்தும் அதை போற்றாமல்தூங்கிக் கொண்டிருக்கும் மடையர்களை Уஇனிமேல் நீங்கள் வாழ தகுதியற்றவர்கள்Ф என்றுகூறி அவர்களை தூக்கிலிடத் தோன்றியது.

வாயைய் மட்டும் கழுவிவிட்டு பல்தேய்க்காமல் மஃப்ளரை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டு குரங்கு குல்லாயை தலையில்மாட்டிக் கொண்டு எவர்சில்வர் கூஜாவை கையில் வைத்துக் கொண்டு வெளிய வந்தேன்.

ஆஹா நம் தெருவில் இத்தனை அழகான பெண்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம் வந்தது.அந்த அதிகாலை குளிரிலும் செப்பு பாய்லரில் சுள்ளி கரி போட்டு சுடு தண்ணி வைத்துமஞ்சள் போட்டு குளித்து தலை துவட்டியும் தலையில் ஈரம் போகாததால் வெள்ளை துண்டைஎடுத்து கட்டி முடித்து அதிலும் ஈரம் போகாமல் அந்த கூந்தலின் ஓரத்திலிருந்துதண்ணீர் சொட்டுச் சொட்டாக கொட்ட முகத்தில் அந்த மஞ்சளை எடுத்துத்தானோ மஞ்சள் நிறமாகஆதவன் வருகிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்த இன்னும் பல பெண்கள் வருவதற்கேகாத்திருக்கிறானோ அந்த ரவி என்று தோன்றவைக்க இதன் நடுவில் கோலப் பொடியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து மாடத்தில் வைத்து விட்டு சாணியை எடுத்து துருப்பிடித்த இரும்புவாளியில் போட்டு தண்ணீர் ஊற்றி சின்ன சொம்பை எடுத்து அதை வீட்டு வாசலில் முன்ஊற்றும் போது அது அந்த தாய் மண்ணை அடைந்து ஒரு இன்பமான மணத்தை வீச தென்னங்குச்சிதொடப்பத்தை எடுத்து தாவணியை எடுத்து முடித்து இடுப்பில் சொருகி அந்த சிறியஉள்ளங்கைகளால் தொடப்பத்தை தட்டிச் சேர்த்து சில நேரம் சனல் கயிறை இறுக்கி த்தசர்த்தசர் என்று பெருக்கும் அழுகு...........

பேப்பர் போடும் பையனோ இனி ஏழேழுஜென்மமும் பேப்பர் போடும் பையனாகவே பிறக்க வேண்டும் என்று பிரும்மாவிடம் வேண்டிக்கொண்டே அந்த தாவணிகளை ரசித்துக் கொண்டு பேப்பரை சில பேரிடம் வண்டியை நிறுத்திகொடுத்துவிட்டு வீட்டு பெரியவர்கள் இருக்கும் வீட்டில் Уபேப்பர்Ф என்று கூவி தூக்கிஎரிந்துவிட்டு போய்க் கொண்டிருந்தான்.

அழகாக புள்ளிகள் வைத்து கோலம் போட்டுசிறிய சாணி உருண்டையாக கோலத்தின் நடுவில் வைத்து அதன் நடுவில் பூசணிப்பூவை அழகாகசொருகி செர்ரி ஆன் டாப் என்ற ஆங்கிலப் பழமொழி இதைப்பார்த்தால் தோற்றுப்போகும் எனும்அளவுக்கு ஒரு அழகு.

அரசு பால் பூத்தில் கிடைப்பது பாக்கெட் பால். விலைஅதிகம். தண்ணீர் அதிகம். ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அம்மாவின் கட்டளை Уபால்வாங்கினால் கோனாரிடம் இல்லையென்றால் நீ போகவேண்டாம் நானே போயிட்டு வர்றேன்Ф. அம்மாவை தொந்தரவு செய்யவேண்டாம் என்று பல நாள் சோம்பலை விடுத்து இந்தசாகசங்கள்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவு. இன்னும் சூரியன் தென்படவில்லை. மூடுபனி. தெருவில் மின்மினி பூச்சிகள். விளக்கு பூச்சி என்று சொல்வோம். அதன் வாலில்வரும் பச்சை நிற விளக்கை பார்த்துத்தான் ரேடியம் விளக்கைகண்டுபிடித்தாரோ?

பிறகு அந்த பட்டுப்பூச்சிகள். இது நிஜ பட்டுப்பூச்சிகள்இல்லை. இதிலிருந்து பட்டு எடுக்க முடியாது. ஆனால் இதன் நிஜ பெயர் எங்களுக்குதெரியாது. சிவப்பு நிறம். கையில் எடுத்துக் கொண்டால் மெதுவாக ஊர்ந்துச் செல்லும்.அதன் மேல்புறத்தை தொட்டால் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். அதனால் இந்த பெயர்.எங்கே அலட்ச்சியமாக சென்றால் கால் பட்டு அவை கொல்லப்படுமோ என்று பார்த்துப்பார்த்து செல்வோம்.

மணம் குணம் திடம் வேண்டாத சோம்பேறிகளுக்கு வீட்டுவாசலிலே பால்காரன். ஈயத்தட்டினால் ஆன பீப்பாயை சைக்கிள் காரியரில் மரப்பலகை வைத்துநன்றாக கட்டி அந்த பீப்பாயின் கீழே ஒரு குழாய். அலுமினிய அரை லிட்டர் கால் லிட்டர்குடுவைகளை எடுத்துக் கொண்டு சின்ன மணியை வைத்துக் கயிற்றால் Уடிங் டிங்Ф என்றுஅடித்தும் விட்டு Уஅம்மா பால்Ф என்று கூவுவான்.

பழகின கூஜாவாக இருந்தால்நேராக குழாயை திறந்துவிட்டு விளிம்பு வரை பால் ஊற்றுவான். புதிய கூஜாவாகவோபாத்திரமாகவோ இருந்தால் அந்த அலமினிய அளவை வெளியே எடுத்து ஒரு லிட்டராக இருந்தால்இரு முறை நிரப்பி ஊற்றுவான். மாட்டின் மடியிலிருந்து பால் கறப்பதைப் பார்ப்பது ஒருஅழகு என்றால் பீப்பாய் குழாயிலிருந்து பால் வருவது ஒரு அழகு. எதாவது பேசிக் கொண்டேபால்காரன் பாத்திரத்தின் விளிம்பையும் தாண்டி ஊற்றிவிற்றால் கொள்ளை சந்தோஷம். ஒருலட்சம் லாட்டரி அடித்தது போல.

இதையெல்லாம் மங்கி கேப்பின் நடுவிலிருந்துகண்களால் நோட்டம் விட்டுக் கொண்டே பொடி நடையாக கோனாரின் வீட்டை நோக்கி. எதிர்தெருவிலிருந்த அந்த தென்றல். ஆஹா பல நாளாக சைட் அடித்து வரும் பெண். இவள் பால்வாங்க தினமும் வருகிறாள் என்றால் அம்மாவிடம் பரிவாக பேசி தினமும் பால் வாங்கி வரும்அந்த அரும்பணியை நாமே ஆற்றவேண்டும். அவளை பார்த்து ஒரு புன்னகை. தான் தான்விழுப்புரத்தின் பேரழகி என்று ஒரு நினைப்பு அவளுக்கு. புன்னகையை அலட்ச்சியம்செய்துவிட்டு வேகமாக முன்னே நடந்து செல்வாள். பெண்களை முன்னே நடக்கவிட்டு பின்னேசெல்லும் சுகத்தை என்போன்ற இளவட்டத்திடம் விவரமாக கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்பிறகு.

சிம்மேந்திர மத்யமம் ராகத்தில் Уஅசைந்தாடும் மயிலொன்று காணும் நம்அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்Ф என்று பாட்டுக் கற்றுக் கொள்ளும்கலைஆர்வ குழந்தைகளின் இனிமையான குரல்கள். பாட்டு வாத்தியாரும் கறிகாய் நறுக்கிக்கொண்டே தாளம் போடுவாள். ஒரு வேளை கர்நாடக சங்கீதம் இல்லையென்றால் தென்னிந்தியாவேஅழிந்து விட்டிருக்குமோ என்று எண்ணத்தோன்றும்.

இதைக் கேட்டுக் கொண்டேபெருமாள் கோவிலை கடந்து சென்றால் மார்கழி மாத பஜனை பேஷாக நடந்துக் கொண்டிருக்கும்.டாக்டர் இன்ஜினியர் என்று பல நல்ல வேலைகளில் இருப்பவர்களும் அதிகாலை எழுந்துகுளித்துவிட்டு செந்நிற நாமத்தை இட்டுக் கொண்டு அந்த குளிரிலும் சட்டை எதுவும்போட்டுக் கொள்ளாமல் சின்ன துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பெருமாளை சேவிக்கவந்துவிடுவார்கள்.

இசை ஞானம் உள்ளவர்கள் பட்டை வைத்த ஹார்மோனியத்தை தோளில்போட்டுக் கொண்டு இறைவன் துதியில் இசைஞானத்தை கலந்து அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

Уமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்Ф என்றுதிருப்பாவை காதில் கேட்டுக்கொண்டே பக்தர்கள் சுடச்சுட பிரசாதம் தயாராக்கிக்கொண்டிருந்தார்கள். முந்திரிப் பருப்பு மிளகு சீரகம் நெய் போட்டு பொங்கல் பிரசாதமாகதயாராகிக் கொண்டிருந்தது. நான் பல முறை யோசித்து அசந்து போன விஷயங்களில் இதுவும்ஒன்று. பிராசதம் என்பதால் இத்தனை சுவையாக இருக்கிறதா இல்லை கோவில்களில் மட்டும்ஏதாவது தனிப்பாணி கையாள்கிறார்களா? எப்படி? ஓட்டலில் இந்த சுவைவருவதில்லையே?

பல யோசனைகளுடன் நடந்து கோனார் வீட்டைச் சென்றடையும் போதுலேசாக விடிந்திருக்கும். பல மாடுகள். எருமை பசு. சாணம் கோமூத்திரம் கலந்து புல்வைக்கோல் பரந்து கிடக்கும் மாட்டுக் கொட்டகையின் அழகை என்னவென்று சொல்வது?

கிருஷ்ணன் வாழ ஏசு அவதரிக்க மாட்டுத் தொழுவத்தை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்றுஅங்கு போனால்தான் தெரியும். கொடுக்கவே பிறப்பெடுக்கும் மாடுகள். இருக்கும் போதுபாலாய் மருந்தாய் இறந்தப் பிறகும் தோலாய்.

மனிதர்கள் மாட்டிடமிருந்துகற்றுக் கொள்ளவேண்டியது பலப்பல. கன்றுகளை காட்டி அன்பாக கையால் பால் கறக்கும்காலம். இயந்திரங்களை வைத்து பாலை ரத்தத்துடன் உரியும் காலம் இல்லை அது.

Уலட்சுமிக்கு என்ன கோபம் இன்னைக்குФ என்று மாடுகளுக்கும் பெயர் வைத்துஅவைகளை தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக நினைத்து கோனார் மனித-மிருக அன்பிற்கு ஒருஎடுத்துக் காட்டாய் விளங்கினார்.

அவர்கள் வீட்டில் மனிதர்கள் இறந்தாலும்மாடுகள் இறந்தாலும் ஒரே அளவு சோகத்தை பார்த்திருக்கிறேன். அவர் பெண் என் அம்மாவைகூப்பிடுவதும் ஒரு அழகுதான். இழுத்துப் பேசும் பழக்கம் உள்ள அவள் Уடீச்சருஹ்ஹுУ என்று மூச்சை இழுத்துப் பேசுவாள். அம்மா தையல் சொல்லித்தருவதால் Уடீச்சர்Ф Уமிஸ்Ф என்று பல பெயர்கள்.


Уஎப்படி இருக்கே தம்பி?Ф என்ற கேட்டுவிட்டு கூஜாவைஎடுத்து செல்வார். பிறகு லட்சுமியிடம் அன்பாக பால் தரச்சொல்லி நிரப்புவார்.அலட்ச்சியம் செய்துவிட்டுச் சென்ற எதிர் தெரு Уமிஸ் விழுப்புரம்Ф முன்பே வந்துநின்றாலும் Уடீச்சர் பையன்Ф என்ற அந்தஸ்து இல்லாததால் நிற்கத்தான் வேண்டும்.அப்போது அவளைப் பார்த்து நான் விடுவேன் ஒரு அலட்ச்சியப் பார்வை. Уபார்த்தாயாகோனாரிடம் எனக்கு உள்ள செல்வாக்கைФ என்று அந்தப் பார்வைக்கு ஒருஅர்த்தம்.

திரும்பி நடந்தால் செல்லியம்மன் கோவிலில் டேப் போட்டிருப்பார்கள். Уதாயே கருமாரி தேவி மகமாயிФ என்று தெய்வப்பாடல்கள் என்றால் எல் ஆர் ஈஸ்வரிதான்என்னும் அளவுக்கு ஒரு தெய்வீகக் குரல்.

அம்மா சொல்லூவார். Уஅவங்ககிரிஸ்டியன்தான் தெரியுமா? இருந்தாலும் அம்மன் பாட்டு அவங்க பாடினாதான் நல்லாஇருக்கும்Ф என்று. பிறகு சரஸ்வதி சபதம் திருவிளையாடல் என்று சாமி பட கேஸட்டுகள்ஒலிக்கும்.

Уசாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பாФ என்று அதிகாலையில் குளித்துகருப்பு நிற ஆடை உடுத்தி குங்கும் சந்தனம் இட்டு ஐயப்ப பக்தர்கள் 40 நாள்விரதத்துடன் இருமுடி கட்டி பஜனையில் ஈடுப்பட்டிருப்பர். இன்னொரு கிரிஸ்துவரானஏசுதாஸ் ஐயப்ப பக்தர்களுக்காக பாடிய பாடல்கள் இந்தியனின் பரந்த மனதையும் உயர்ந்தஉள்ளத்தையும் எடுத்துக் காட்டும். இவர் பாடியிருக்காவிட்டால் ஐயப்பனேவருத்தப்பட்டிருப்பானோ?


சிறிது நேரத்தில் பக்கத்து ஊரிலிருந்துதயிர்காரி வருவாள். மண் பானையிலிருந்து தயிர் ஊற்றிவிட்டு சுவரில் ஒரு கரியால் கோடுபோட்டுவிட்டுப் போவாள். நான் அம்மாவிடம் கேட்பதுண்டு Уஅம்மா வீட்டில் வெள்ளைஅடித்துவிட்டால் கோடுகளெல்லாம் அழிந்துவிடுமே?Ф என்று Уஅப்போது எந்த கணக்கில்அவளுக்கு பணத்தை கொடுப்பது?Ф. அம்மாவும் பொறுமையாக У10 ரூபாய்க்கு மேலே ஒருமாசத்திற்கு ஆகாதுடா கண்ணாФ என்பாள். Уநெய்யும் அவளிடம் தானே வாங்குகிறோம். அதில்சேர்த்துக் கொடுத்துவிடலாம்Ф என்பாள்.

வீடுகளில் பாட்டிமார்கள் மடியாககுமுட்டி அடுப்பை வைத்து தனியாக சமைக்கும் வாசனை புகை நன்றாக தெருவுக்கே தெரியும்.மடிமடியாக அம்மாக்கள் உள்ளே சமையல். அப்பாக்கள் கிணத்தடியில் தண்ணீர் இறைத்துக்கொண்டோ ரேடியோவில் செய்திகள் கேட்டுக் கொண்டோ பேப்பரை படித்துக் கொண்டோ பக்கத்துவீட்டு மாமாக்களுடன் அரட்டை அடித்துக் கொண்டோ இருப்பார்கள். டிவி எனும் மாயைஇன்னும் பரவாத காலம் அது. மோட்டார் போட்டு தண்ணி இறைக்க வேண்டிய கொடுமையும் இல்லை.நடுவயதினரும் ஆரோக்கியமாக தடித்த புஜங்களுடன் இருந்ததற்கு காரணம் இந்த கிணற்றடிஉடற்பயிற்சிதான்.

சிறிய நகரங்களில் எப்படி இத்தனை நேரம் கிடைக்கிறது என்றுநான் வியக்கும் விஷயங்களில் இன்னொன்று. பத்து மணிக்குத் தான் பள்ளிக் கூடங்களும்அலுவலகங்களும்.

வீட்டுக்குச் சென்று பால் கொடுப்பதற்கு முன் வீட்டில் பாய்படுக்கை சுருட்டப்பட்டிருக்கும். ஆனால் சோம்பல் போயிருக்காது. அம்மா காபிபோடுவதற்குள் இன்னொரு குட்டித்தூக்கம் போடத் தோன்றும். அப்படியே சுருட்டியபடுக்கையில் உடலைச் சாய்த்தால் பத்து நிமிடத்தில் அப்பாவின் கையால் முதுகில் ஒருஅடி.

Уஎழுந்திரி ஹாஃப் இயர்லி எக்ஸாமுக்கு படிக்கத் தேவையில்லை?Ф Уஅப்பாஇன்னும் 10 நிமிஷம்Ф என்று கெஞ்ச Уஎங்க காலத்திலே நாங்க 5 மணிக்குஎழுந்திரிச்சு....Ф என்று பல முறை கேட்டு புளித்தப்போன லெக்சரை ஆரம்பிப்பதற்கு முன்எழுந்து ஓடி பல் தேய்க்க பிரஷைத் தேடி பேஸ்ட் போட்டு பாத் ரூமில் நின்றப்படியேதூக்கம்.

அம்மாவிடமிருந்து Уகாம்ப்ளான் போட்டிருக்கு ஆறிடப்போகுதுФ என்றுரிமைன்டர். உயரத்துள்ளும் காம்பளான் குடித்துவிட்டு குளிக்கச் சென்றால் அந்தவெந்நீரின் மனம் மனதை கலக்கும். குளிரில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்கலாம் என்றுதோன்றும்.

ஆனால் இன்னொரு அலார்ம் வருவதற்கு முன் ஓட்டம். கடவுளைக்கும்பிட்டு நெற்றியில் குங்குமமிட்டு பனியன் சட்டை போட்டுக் கொண்டு அம்மாவின்சுடச்சுட இட்லி சட்னி சாம்பார்.

அளவில்லாமல் இட்டிலியை உள்ளே தள்ளிவிட்டுவெளியே வந்தால் சூரியன் தன் லேட் ட்யூட்டியை தொடங்கியிருப்பான். பள்ளிக்கு போவதற்குமுன் பாடங்களை ஒரு ரிவிஷன்.

வீட்டில் விபூதி கற்பூரம் சாம்பிராணி ஊதுவத்திமணம். பனியின் மழையால் நனைந்த சாலைகள் எங்கும் பக்தி மயம். வெயிலினால் கொடுமைஇல்லை. இந்த மார்கழியில் தைப்பிறக்க போகிறது என்ற செய்தியை தாங்கி வரும் மார்கழிஉழுவர்களின் நம்பிக்கை பக்திக்கும் இசைக்கும் ஒரு உகந்த நேரம் பள்ளிச்செல்லும்சிறுவர்கள் மட்டுமே பயப்படும் பரீட்சை நேரம், இப்படியாக எங்கோ ஒரு மார்கழியின் காலைஇதையெல்லாம் விட்டு இங்கே வந்து இயந்திர வாழ்கையில் பணத்திற்காக பலவற்றையும் இழந்துஅந்த விழுப்புரத்து தெருக்களின் சுகந்தத்தை மறந்து மிருகமாய்வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்கையின் ஓரத்தில் நினைவுகளைத் தொட்டு கண்ணோரம்நீர்துளிகளை வரவழைத்துச் சென்றது.

அன்புடன்

மோகன்
[/URL]
[URL="http://www.leomohan.net/"]http://www.leomohan.net (http://www.muthamilmantram.com/image.php?u=10486&type=sigpic&dateline=1158889867)
http://tamilamudhu.blogspot.com (http://tamilamudhu.blogspot.com/)
http://leomohan.blogspot.com (http://leomohan.blogspot.com/)

рооропрпВ
03-10-2006, 06:35 AM
மர்கழி பின்னாடி இத்தனை விசயமா??? பிரமிக்க வைச்சிட்டீர் போம்யா!!!

leomohan
03-10-2006, 07:39 AM
மிக்க நன்றி மயூரேசன்.

роЕро▒ро┐роЮро░рпН
03-10-2006, 07:06 PM
வாவ் அழகான நடை... மலரும் நினைவுகளை தூண்டிவிட்டது........

மார்கழி குளிரில்..... ரசிக்கவேண்டியவைகள் பல.........

காலையில் அழகான கோலங்களை போடும் தேவதைகள்... பாட்டுக்களின் சத்தம், கோனார் வீட்டு வாசம்......

இன்னும் தொடருங்கள் மோகன்....

leomohan
03-10-2006, 07:16 PM
நன்றி அறிஞரே. உங்கள் உற்சாகம் இன்னும் எழுத தூண்டுகிறது. நவராத்திரி நேரத்தில் நம் ஊரில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி தொகுத்து எழுதலாம் என்று நினைக்கிறேன்.

роЕро▒ро┐роЮро░рпН
03-10-2006, 07:22 PM
நன்றி அறிஞரே. உங்கள் உற்சாகம் இன்னும் எழுத தூண்டுகிறது. நவராத்திரி நேரத்தில் நம் ஊரில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி தொகுத்து எழுதலாம் என்று நினைக்கிறேன். அவசிய எழுதுங்கள்.... உண்மையிலே சிறு வயது சம்பவங்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

"மாமி ஆத்துல கொழு உண்டோ" என சத்தம். வீடு வீடா சுண்டல் சாப்பிட்டு சுத்தி வருவோம்... அதுல எந்த வீட்டுல நல்லா இருந்துச்சு.. மார்க் வேறு....

பின் நண்பர் படை.... கரண்டை ஆப் பண்ணும்.. சிலது திருடும்.... வித்தியாசமான அனுபவங்கள்....

pradeepkt
04-10-2006, 04:50 AM
மார்கழி மாதத்தில் மட்டும் குளிரோடு எழுந்து வேகமாகக் குளித்து கோயிலுக்குப் போகாவிடில் எனக்குத் தூக்கமே வராது.
ஏன்னா அப்பத்தான் சர்க்கரைப் பொங்கல் (தேங்காய்ச் சில்லுடன்) சுண்டல், அக்கார வடிசில் (நெய் வடியும்) எல்லாம் கோயிலில் கொடுப்பார்கள். :D :D

அதை நினைவு படுத்திய மோகனுக்கு நன்றி.

роУро╡ро┐ропро╛
05-10-2006, 08:15 PM
அழகான கட்டுரை,
உரிமையாளருக்கு ஒரு பாராட்டு.....

அருமையை இருக்கு நண்பா


உங்களுடைய ஆரம்பதில் ஒரு சிறிய தொடர்....
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7030

рокро╛ро░родро┐
05-10-2006, 11:06 PM
உண்மைதான் நண்பரே. பணம் என்ற மாயைக்காக நாம் இழக்கும் விசயங்கள் ஏராளம். நினைவுகள் மட்டும்தான் தென்றல் காற்றாய் மனதை வருடிச்செல்லும். வருத்தங்களுக்கு பரிகாரம் சொல்லும். தொடர்ந்து எழுதுங்கள்.

leomohan
06-10-2006, 06:34 AM
நன்றி ஓவியா, பாரதி.

родро╛рооро░рпИ
06-10-2006, 04:14 PM
1976 - சேலத்திற்கு குடி வந்தோம். மிக நீளமான வீடு.. ஒரே கஷ்டம் நல்ல தண்ணீர் காலை 2:00 மணிக்கு வரும். கஷ்டத்தையும் சுகமாக மாற்றத் தெரிந்தவர்கள்தானே பெண்கள்.. நைட் ஷோ பார்த்துட்டு வந்து தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு தூங்குவார்கள்.. காலையில் பால் வாங்கி வரும் பணி எங்கள் தலையில்.. (நானும் என் அண்னனும்). மற்ற நாட்களில் முறைவைத்து ஒரு நால் அவன் ஒரு நாள் நான் என மாறி மாறி போனாலும்.. மார்கழி வந்து விட்டால் இருவரும் போவோம்...

காலை 4 மணிக்கு பால் வந்து விடும். பாலை வாங்கிக் கொண்டு நேரே காய் மார்க்கெட் பிள்ளையாஅர் கோவில்தான். அங்கே வைணவக் கடல் கிருஷ்ண மூர்த்தி அவர்களின் ராமயணம், மஹாபாரதம், திருப்பாவை, திருவெம்பாவை, பாகவதம் என் அதாவது ஒரு சொற்பொழிவு 6:00 மணி வரை.. பிறகு பூஜை முடிந்து பொங்கலுடன் வீடு திரும்புவோம். மாலையிலும் 6:00 மணியில் இருந்து 9:00 மணி நேரம் வரியிலான சொற்பொழிவு.. ஒவ்வொரு சம்பவமும் விவரிக்க விவரிக்க கண் முன் கொண்டுவந்து ஒரு நாடகமே நடத்தி விடுவார்..

இப்படி 7 வது வரை 4 வருடங்கள் கேட்ட கதைகளின்றும் என் செவிகளில் மனதில்..

அரையாண்டுத்தேர்வுக்க்கு படிப்பதா? அதெல்லாம் அப்புறம்தான்.. முதல் ரேங்க் மாணவனுக்கு எப்பவுமே வீட்டில் சலுகைகள் உண்டு..

leomohan
06-10-2006, 08:57 PM
செல்வன் அந்த பொங்கல் ஆஹா நினைத்தாலே நாக்கு ஊறுகிறது.

காலையில் சுடச்சுட அப்பா, இந்த பிரட்-ஜாம் தின்போரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

родро╛рооро░рпИ
07-10-2006, 03:00 AM
செல்வன் அந்த பொங்கல் ஆஹா நினைத்தாலே நாக்கு ஊறுகிறது.

காலையில் சுடச்சுட அப்பா, இந்த பிரட்-ஜாம் தின்போரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

காலையில பிரெட் ஜாம்
அப்புறம் ட்ராஃபிக் ஜாம்
கேட்டா
ஜாம் ஜாம்னு இருக்கேன்னு
சொல்லுவாங்க..

рооропрпВ
07-10-2006, 04:05 AM
மார்கழி மாதத்தில் மட்டும் குளிரோடு எழுந்து வேகமாகக் குளித்து கோயிலுக்குப் போகாவிடில் எனக்குத் தூக்கமே வராது.
நிசங்களா????:D :D :D :D

рооройрпНроородройрпН
07-10-2006, 08:29 AM
இது கதை அல்ல நிஜம் என்ற அளவுக்கு இருந்தது கதையின் நடை. அபாரம்..


மார்கழி மாதத்தில் மட்டும் குளிரோடு எழுந்து வேகமாகக் குளித்து கோயிலுக்குப் போகாவிடில் எனக்குத் தூக்கமே வராது.
ஏன்னா அப்பத்தான் சர்க்கரைப் பொங்கல் (தேங்காய்ச் சில்லுடன்) சுண்டல், அக்கார வடிசில் (நெய் வடியும்) எல்லாம் கோயிலில் கொடுப்பார்கள். :D :D
.

:cool: :cool: முதல் வரியை படித்ததுமே தெரிந்து விட்டதே. நீ ச.ச.ச.பொ பார்ட்டிதான் :rolleyes: :rolleyes: என்று ... (சரியான சமத்து சர்க்கரை பொங்கல் பார்ட்டி...:D :D )

leomohan
07-10-2006, 03:23 PM
நன்றி மன்மதன்.

роУро╡ро┐ропро╛
08-10-2006, 03:42 PM
காலையில பிரெட் ஜாம்
அப்புறம் ட்ராஃபிக் ஜாம்
கேட்டா
ஜாம் ஜாம்னு இருக்கேன்னு
சொல்லுவாங்க..


நிசங்களா????:D :D :D :D



:cool: :cool: முதல் வரியை படித்ததுமே தெரிந்து விட்டதே. நீ ச.ச.ச.பொ பார்ட்டிதான் :rolleyes: :rolleyes: என்று ... (சரியான சமத்து சர்க்கரை பொங்கல் பார்ட்டி...:D :D )


ஒரே கடியா இருக்கு.....:D :D :D :D :D :D

родро╛рооро░рпИ
08-10-2006, 03:49 PM
ஒரே கடியா இருக்கு.....:D :D :D :D :D :D

கடி-தம் என்றாலே தம்பிடிச்சு கடிக்கிறதுதானுங்களே!!!:rolleyes: :rolleyes:

guna
09-10-2006, 06:46 AM
niceeeeeeeee..

рооропрпВ
09-10-2006, 11:05 AM
niceeeeeeeee..
குணா வாருங்கள்... தமிழில் தட்டச்சிடலாமே!!!:)
அறிமுகம் பகுதியில் உங்களைப்பற்றி ஒரு அறிமுகம் போடுங்கள்....:)

pradeepkt
10-10-2006, 05:54 AM
நிசங்களா????:D :D :D :D
ஏய்ய்ய்ய்... என்னைய வச்சுக் காமெடி கீமெடி பண்ணலையே...

роУро╡ро┐ропро╛
10-10-2006, 07:25 PM
ஏய்ய்ய்ய்... என்னைய வச்சுக் காமெடி கீமெடி பண்ணலையே...


இல்லனு சொன்னா நம்பவா போரிங்க.....:D :D :D