PDA

View Full Version : நீரோடை தெளிந்தது! கவிதை - மோகன்leomohan
02-10-2006, 12:26 PM
நீரோடை தெளிந்தது! கவிதை - மோகன்

இரண்டு நாட்களில் முடிந்துவிட்ட காதல் கதை
இலக்கிய வரலாற்றில் மிகச்சிறிய காதல் காவியம்
அத்தியாயம் இல்லாத அதியசம்
அறிவாளிகள் இருவர் அறிவில் மயங்கியதாக செய்த ஆரவாரம்
கடைசியில் காமத்தில் கருகிய மனம்
முடிந்தது இந்த மயக்கம் தீர்ந்தது இந்த குழப்பம்
இனி பயம் இல்லை பதட்டம் இல்லை ஆண்மையின் உந்துதல் இல்லை
அக்கம் பக்கம் பார்க்கத்தேவையில்லை அடிக்குரலில் பேச வேண்டியதில்லை
கண்களை கண்கள் பார்க்கும் போது தலை குனிய தேவையில்லை
உள்ளுக்குள் ஓசை இல்லை பொய்யாக செய்யும் பூசையில்லை
இனி மங்களம் எங்கெங்கும் இல்லை எந்த கலங்கம்
பொய் விலகியது உண்மை தோன்றியது
காதலுக்கு வெற்றி கண்ணியத்திற்கு வெற்றி
காதலனுக்கும் வெற்றி காதலிக்கும் வெற்றி
காதலர் இணையவில்லை ஆனாலும் காதல் தோற்கவில்லை
அதிசயமாய் பார்ப்பவரே கேளுங்கள் சொல்கிறேன்

சுனாமியால் அசைக்க முடியாத விவேகானந்தர் பாறை நான்
போர்கள் பல கண்டு பலம் கண்ட சீனப்பெருஞ்சுவர் நான்
கயிற்றில் நடந்து பல காட்டாற்று வெள்ளங்களை கண்டு கலங்காதவன் நான்
கண்டவற்றை கண்டு மயங்காதவன் நான் உடற்ப்பசியறியாதவன் நான்
தூக்கம் கண்டிலேன் ஏக்கமும் கண்டிலேன் நான்
துக்கம் உடைத்தவன் துன்பம் துடைத்தவன் நான்
மொத்தத்தில் வெள்ளத்தின் நடுவே ஒரு தெளிந்த நீரோடை
மக்கள் போற்றி போற்றுவர் எனக்கு பொன்னாடை

இந்த நீரோடையும் கலங்கியது ஒரு நாள்
குளிக்க வரும் குதிரைகளின் குளம்பால் குழம்பியதா - அல்ல
கன்னிப் பெண்கள் மேனி பட்டு அரண்டதா - அல்ல
காட்டாற்று வெள்ளம் கரை கடந்ததாலா - அல்ல

கள்ளம் கபடமற்ற ஒரு தாமரையின் வரவால்
இன்று பிறந்த குழந்தை போல சிரித்த அந்த சிரிப்பால்
தாமரை இலை போல பரந்த விரிந்த அந்த மனதால்
பாசத்தை பொழிந்த அந்த இதயத்தால்
தொலைவிலிருந்து கட்டி அணைத்த அந்த மெல்லிய கரத்தால்
பெண்மை மென்மை என்ற உணர்த்திய அந்த தாமரைத் தண்டுடலால்
மலர்ந்த தாமரை போல அந்த செவ்விதழால்
எல்லை இல்லா காதலை பொழிந்த அந்த எழுத்தால்

தாமரையால் நீரோடை கலங்கிய கதையுண்டோ?
உண்டென்றால் இங்கும் அது உண்டு
தாமரை இலையின் நடுவே எண்ணை ஊற்றி பார்தத்துண்டோ?
அந்த எண்ணைத்துளி பட்டதும் அந்த சீற்றம் கண்டதுண்டோ?
பாட்டியின் வீட்டில் சிறு வயதில் நான் பார்த்ததுண்டு
பல நாட்கள் பிறகு அதை நான் கண்டேன் இன்று

தமிழ் பண்பாடு வெற்றியடைந்தது கதையும் இனிது முடிந்தது
காமம் அழிந்துவிட்டது காதல் வென்றுவிட்டது
கற்றுக் கொண்ட பாடம் என்ன?
- சலனம் மரணம்!
__________________
அன்புடன்
http://www.confusionclub.net/theni/smallmohan.jpg
மோகன்

http://www.leomohan.net (http://www.leomohan.net/)
http://tamilamudhu.blogspot.com (http://tamilamudhu.blogspot.com/)
http://leomohan.blogspot.com (http://leomohan.blogspot.com/)

அறிஞர்
02-10-2006, 10:49 PM
நீரோடை தெளிந்ததை தெரிந்த கொள்ள இரண்டும் மூன்று முறை படிக்கனும் போல...

வித்தியாசமான முறையில் படைப்புக்களை தொடருங்கள் மோகன்.

leomohan
03-10-2006, 02:01 PM
நன்றி நண்பரே. இன்னும் தெளிவாகவும் எளிமையாவும் எழுத முயலுகிறேன்.

தாமரை
03-10-2006, 03:05 PM
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!
தாமரை..

leomohan
03-10-2006, 03:15 PM
ஐயோ இல்லை அண்ணா, தாமிரை கவிதை மன்றம் சேருவதற்கு முன்பே எழுதிவிட்டேன்.

pradeepkt
04-10-2006, 04:40 AM
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!
தாமரை..
இதில சந்தேகம் என்ன உங்களுக்கு :rolleyes: :rolleyes:

ஓவியா
11-10-2006, 08:24 PM
இன்றுதான் புரிந்தது,
தமிழ் சமுத்திரம் அல்ல அதையும் தாண்டி.....

விளங்காத கவிதைக்கு என்ன பதிவு எழுத....:eek: :eek:

மன்னிக்கவும்.....
மீண்டும் ஒரு முறை வாசித்து புரிய முயற்ச்சிக்கின்றேன்

விளங்கினால் பதிவு உண்டு....:)