PDA

View Full Version : தோழி



mgandhi
01-10-2006, 05:35 PM
என்னை நினைக்கிறாயா -நான்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி
கனவரை ஆபிஸ் அனுப்பி
சமையல் வேலைகளை முடித்து
ஓய்வு நேரத்தில் டிவி துடைத்து
செல்பில் புத்தகத்தை அடிக்கிவைத்து
ஏரவானத்தில் ஒட்டடை தட்டும்போதும்
தோழி நான் உன்னை நினைக்கிறேன்- நீ
என்னை நினைக்கிறாயா - தோழி
பெண்களுக்கு தோழமை யென்பது
கல்யாணத்திர்க்கு பின்னும் தொடராதா

ஓவியா
03-10-2006, 07:05 PM
அழகானு நிஜம்

எத்தனை இதயங்களின் ஏக்கங்களோ......

கரு தோழமை என்றாலும்
பெண்ணினத்தின் பெருமையை பாடும் கவிதை

குடும்பத்திற்க்காக தோழமையையும் தியாகம் செய்யும்
மாந்தர்களும் பாரில் உண்டே

வடித்த கைகளுக்கு....... வலயல் பொட முடியாதலால்......
சொல்லிவைக்கின்றேன் ஒரு

சபாஷ்

அறிஞர்
03-10-2006, 07:09 PM
வேலை செய்து களைத்தபின் சாய ஒரு தோள் தேவையோ... அதான் தோழியின் நினைப்பா....

தோழமையை தொடர திருமணம் ஒரு தடையா......

மனமிருந்தால் மார்க்கமுண்டே.......

leomohan
03-10-2006, 07:23 PM
நல்ல குட்டிக் கவிதை. ஆண்கள் திருமணத்திற்கு பிறகும் அவர்களுடைய பள்ளிப் பருவ நட்பு தொடர்கிறது. ஆனால் பெண்களுக்கு நட்பு தேவைப்படும் போது கிடைப்பதில்லை. வீடே வாழ்கையாகிறது. அப்படியை நட்பு கிடைத்தாலும் அது கணவனின் நண்பர்களின் மனைவிகள் மட்டுமே. வருத்தம் தான்.

அறிஞர்
03-10-2006, 07:24 PM
நல்ல குட்டிக் கவிதை. ஆண்கள் திருமணத்திற்கு பிறகும் அவர்களுடை பள்ளிப் பருவ நட்பு தொடர்கிறது. ஆனால் பெண்களுக்கு நட்பு தேவைப்படும் போது கிடைப்பதில்லை. வீடே வாழ்கையாகிறது. அப்படியை நட்பு கிடைத்தாலும் அது கணவனின் நண்பர்களின் மனைவிகள் மட்டுமே. வருத்தம் தான். அமையும் கணவரை பொறுத்தது என்று சொல்லலாம்.... என் மனைவி பழைய தோழிகளுடன் தொடர்பு கொள்கிறார். என் தோழிகளும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்...