PDA

View Full Version : லதா எழுத்தரு



leomohan
29-09-2006, 09:55 PM
ஐயா,

நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். அவர்கள் அளிக்கும் தமிழ் கீ போர்ட் உயிர்பித்து லதா எழுத்தரு பயன்படுத்துகிறேன். ஆனால் என்னால் கேள்விக்குறி உபயோகப்படுத்த முடியவில்லை.

உதவி கோருகிறேன்.

அறிஞர்
02-10-2006, 01:47 PM
நம் நண்பர்கள் உதவுவார்கள் என எண்ணுகிறேன்

இனியவன்
02-10-2006, 02:48 PM
Shift + > விசைகளை அழுத்துங்கள்
வினாக்குறி கிடைக்கும்.

leomohan
02-10-2006, 03:28 PM
இல்லை இனியவன். ய எழுத்தே வருகிறது.

இனியவன்
04-10-2006, 05:20 PM
இல்லை இனியவன். ய எழுத்தே வருகிறது.
எனக்குச் சரியாக இருக்கிறது லியோ.
எங்கே கோளாறு என்று விளங்கவில்லை.
நண்பர்கள் யாராவது உதவிக்கு வரலாம்.
பொறுத்திருப்போம்,

Gurudev
17-01-2007, 12:20 PM
கீ போட்டை மாற்றி பாருங்கள். குறிப்பிட்ட அந்த கீ இல் குறைபாடு இருக்கலாம். யூனிகோட் தமிழ் எழுத்துருவில் சிறந்தது Tscu Paranar. இன்கே டவுண்லோட் பண்ணிக்கொள்ளலாம் http://vethathiri.org/tamil/index_html/tscu_paranar.zip

leomohan
17-01-2007, 01:07 PM
நன்றி குரு. ஆனாலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

விசைப்பலகையின் கடைசி எழுத்து உங்களுக்கு என்ன வருகிறது.

Gurudev
17-01-2007, 05:47 PM
யுனிகோட்டு தமிழ் டைப் செய்ய என்ற Topic ல் Post #3 ஐ பார்க்கவும். அதில் ஆங்கில கீ போட்டில் எப்படி தமிழ் டைப் செய்வது என கூறியுள்ளேன்

leomohan
18-01-2007, 12:35 PM
நன்றி குரு. படித்தேன். நான் என்ன நிறுவியிருக்கிறேன் என்று கூறுகிறேன்.

1. Windows XP Professional Edition
2. Regional Settings - Tamil Keyboard Enabled
3. Default Font - Latha


வேறு எந்த மென்பொருளும் பயன்படுத்தவில்லை. போனோடிக் முறையும் உபயோகிக்கவில்லை.

இப்போது கடைசி தட்டு

ெ - ம ந வ ல ஸ , . ய - இது ஷிஃப்டு பயன்படுத்தாமல்
எ - ண ன ள ஷ ஷ ஸ்ரீ ய - இது ஷிஃப்டு பயன்படுத்தி

எவ்வாறு கேள்வி கூறி அடிப்பது.