PDA

View Full Version : போர் முடிந்ததின் அறிகுறிleomohan
29-09-2006, 11:40 AM
கருணையுள்ளம் கொண்ட மானிடர்
மதத்தை மனித வாழ்வின் மார்க்கமாக ஏற்றவர்
கானி நிலத்தில் கடமை காணும் உழவர்
எதிரியையும் நட்புடன் அணைக்கும் நல்லவர்
பீரங்கிகளை வரலாற்று பாடத்தில் மட்டும் காணும் மாணவர்

விமானங்கள் கடல் கடந்து மனதிர்களை இணைக்க
கப்பல்கள் களிப்போடு வாணிகத்தை பெருக்க
ஆடவரும் அவர் மனையுடன் சுற்றுலா செல்ல
தந்தைகளிடமிருந்து பிள்ளைகள் மகிச்சியுடன் களிக்க
காதலில் உயிர்விடுவோரே ஓழிய போரில் காதலர் உயிர் விடாமல் இருக்க

ஊனங்கள் உடலிலோ உள்ளத்திலோ இல்லாத மக்கள்
மருந்தை மருந்துக்காகவே பயன்படுத்தும் ஆரோக்கியர்கள்
ஆறுகளில் பாலும் தேனும் ஓடாவிட்டாலும் நீர் ஓட தடைபோடாதவர்கள்
ராட்சதன் என்றொருவர் உண்டென்று கதைகளில் மட்டுமே கேட்பவர்கள்
கன்னிகளின் மதிப்பை அறிந்து பாதுகாக்கும் பொதுமக்கள்

தாய்க்கு தனி இடம் அவளுக்கு ஓர் உயர்விடம்
சேய் பாதுப்பாக இருக்கும் அதன் பிறப்பிடம்
மண்ணில் மனிதனுக்கு ஒரு தனியிடம்
வெறுப்பறியாத வாழ்கையில் அனைவருக்கும் சிறப்பிடம்
பெற்றவளையும் மற்றவளையும் இவ்வுலகம் கும்பிடும்

சினத்தை சிறிதே பயன்படுத்தும் பக்குவம்
பேச்சால் பிரச்சனைகளை தீர்க்கும் தீர்க்கம்
காட்டை அழிக்காமல் நாட்டை வளர்க்கும் நோக்கம்
வீட்டை வாழவைத்து வீதிக்கும் மானிடம் உழைக்கும்
கண்ணீர் சொட்டுகள் காண்பதே ஒருநாள் அறிதாகும்

திருவாசகமும் தேவாரமும் தேனாய் கோவில்களில் ஓலிக்கும்
செத்தவரின் ஆன்மா முறையுடன் ஆசீர்வதிக்கும்
மானிடர் செய்யும் யாகத்திலிருந்தே புகை வளர்க்கும்
மறைந்த மனிதனுக்கும் மரியாதை கிடைக்கும்
ரத்தங்கள் தானம் செய்யவே கொட்டித் தீர்க்கும்

மலர்களால் மாலை அணிந்து அணிவித்து
குளித்து முடித்து தினமும் எளிமையாய் அலங்கரித்து
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று எண்ணவைத்து
விலங்குகளாய் மாறாமல் விலங்கை நண்பனாக வளர்த்து
புன்னகை என்றும் எல்லோர் வாழ்விலும் நிலைத்து

அறிவைத்தேடி அது அளிக்கும் சுகத்தைத் தேடி
போர்முனை எனும் ஓர் முனை அறியாமல் அமைதியை நாடி
பெண்களும் துணையோடு அவர் வாழ்வில் இன்பம் புறையோடி
தமக்கையரும் தமையரும் மகிழ்ந்து விளையாடி

எதுவும் வேண்டும் நிலை இங்கு இல்லையே
பொதுவாழ்வே என்றதனால் அரசியல்வாதிகளால் இல்லை தொல்லையே
உண்மையும் அதன் உயர்வையும் பேசுவதில் இல்லை எல்லையே
இனி ஒருவரும் ஒருவரையும் பிரியவில்லையே

மனித நேசத்தை யாரும் இங்கு மறக்கவில்லை
தந்தையறியா குழந்தைகள் இனி பிறப்பதில்லை
கடவுள் விண்னைவிட்டு மண்ணிற்கு வந்ததில்லை
ஆனாலும் அமைதியெனும் வடிவில் பிறந்த நல்ல பிள்ளை
அதனால் தினமும் இப்புவியில் தீபாவளியின் இன்பக் கொள்ளை

போர்முனைகள் உடைந்துவிட்டன எல்லைகள் அகன்றுவிட்டன
துப்பாக்கிகள் தொலைந்துவிட்டன குண்டுகள் நொறுங்கிவிட்டன
ஒப்பந்தமில்லாமல் வார்த்தைகளுக்கு மதிப்பு வரும் நாள் வந்தன
ராணுவம் எனும் ஸ்தாபனம் சம்பிரதாயமாயின
உடலும் உள்ளமும் நிம்மதியில் ஆரோக்கியமாயின

இனி யாருக்கும் இல்லை ஏது தவிப்பு
உள்ளம் கேட்டு நடக்கும் மனிதரின் துடிப்பு
காயவில்லை உதடுகள் இங்கு ஏதும் இல்லை நடிப்பு
கண்கள் கருணையால் மட்டுமே நீர் கொள்வது இயல்பு
மதங்களுக்கும் இனங்களுக்கும் காணலாம் அதில் சகிப்பு

இந்த அமைதிப்பூங்காவில் இல்லை கழுத்தின் சுளுக்கு
சுவாசம் நேர்மையில் நாணயத்தில் அதனால் இல்லை இழுக்கு
நல்ல சேதி மட்டுமே கொண்டுவரும் தபால்காரனின் வழக்கு
நன்றிக்கு மட்டுமே சொல்ல தூக்கும் வேலை கைகளுக்கு
உயர்ந்தன முதுகுகள் உயர்ந்து நிற்கும் பணி தோள்களுக்கு

போர் முடிந்து ஆகிவிட்டது பல காலம்
ஓய்ந்துவிட்டது வலியில் மக்கள் எடுத்த ஓலம்
எலும்புகளில் தேசப்பற்று எனும் இரும்பு பலம்
ஏழ்மை தோற்றுவிட்டு விட்டது இக்களம்
செங்கோல்கள் இனி காக்கும் மக்களின் நலம்

-மோகன் கிருட்டிணமூர்த்தி

ஓவியா
11-10-2006, 08:27 PM
திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி
நேரம் இருப்பின் தங்களின் எழுத்து திறமையில்
இந்த கவிதைக்கு ஒரு சிறு விளக்கம் எழுத முடியுமா

தாழ்மையுடன்
ஓவியா

பென்ஸ்
12-10-2006, 09:49 AM
நன்று...

தாமரை
12-10-2006, 09:51 AM
இன்னொரு முறை நன்றுன்னு அறிஞர் ஸ்டைல்ல எழுதினீங்கன்னா தெரியும்..

leomohan
12-10-2006, 11:38 AM
நன்றி பென்சமின்.

ஓவியா, இந்த கவிதை போர் வெறியின் தொடர்ச்சி. போர் வெறியினால் மக்கள் படும் பாட்டை எழுதிவிட்டு அதன் தொடர்ச்சியாக போர் முடிந்துவிட்டால் என்னாகும் என்பதை எழுதியிருக்கிறேன்.

இது போர் முடிந்துவிட்டதாக கற்பனை செய்துக்கொண்டு அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனும் ஆதங்கத்தில் எழுதியது.

போர் வெறி கவிதையின் வரிக்குவரி கஷ்டத்தையும் போர் முடிந்ததின் அறிகுகறியில் அதே வரிகளுக்கான சுகத்தையும் படைத்திருக்கிறேன்.

பென்ஸ்
12-10-2006, 03:40 PM
இன்னொரு முறை நன்றுன்னு அறிஞர் ஸ்டைல்ல எழுதினீங்கன்னா தெரியும்..

பின்ன என்னயா.. நானும்தான் பாக்கிறேன்...
நம்ம பசங்க பக்கம் பக்கமா கவிதை, கதை எழுதுறாங்க...
ஆனா நம்ம மக்க வாசித்துபுட்டு நன்று, அருமை என்று ஒரு வரியில் எழுதி சென்று விடுகிறார்கள்....
அது போல நானும் செய்து பார்த்தேன்.....

கோவம் வருது இல்லையா.. ?????

அதுனால் எல்லோரும் ஒழுங்க மருவாதையா கருத்து எழுதுங்க....

என்னுடையா வழக்கமான பின்னுட்டம் தொடரும்...

ஓவியா
21-11-2006, 05:58 PM
ம்ம்ம் நல்லா தான் இருக்கு
ஆனா போர் எப்போ ஓய்வது?
இது எப்போ நடைமுறைக்கு வருவது.........

ஏக்கத்துடன் !!!!!!!!!!

leomohan
21-11-2006, 06:38 PM
ஆம் ஓவியா, பல கனவுகள், கனவுகாளவே இருந்துவிடுகின்றன. நமமோடு சேர்ந்து இறந்தும்விடுகின்றன.

மதுரகன்
22-01-2007, 06:00 PM
அருமை மோகன் இத்தனை நாளாய் உங்களை தவறவிட்டது வருத்தமளிக்கின்றது..

leomohan
22-01-2007, 06:03 PM
அருமை மோகன் இத்தனை நாளாய் உங்களை தவறவிட்டது வருத்தமளிக்கின்றது..

ஹா ஹா. இப்போது தான் சந்தித்துவிட்டோமே.

ஆதவா
22-01-2007, 06:04 PM
இந்த எளிமையான கவிதைக்கு விமர்சனம் நாளை................

ஆதவா
22-01-2007, 06:13 PM
பின்ன என்னயா.. நானும்தான் பாக்கிறேன்...
நம்ம பசங்க பக்கம் பக்கமா கவிதை, கதை எழுதுறாங்க...
ஆனா நம்ம மக்க வாசித்துபுட்டு நன்று, அருமை என்று ஒரு வரியில் எழுதி சென்று விடுகிறார்கள்....
அது போல நானும் செய்து பார்த்தேன்.....

கோவம் வருது இல்லையா.. ?????

அதுனால் எல்லோரும் ஒழுங்க மருவாதையா கருத்து எழுதுங்க....

என்னுடையா வழக்கமான பின்னுட்டம் தொடரும்...


அப்பாடி நான் தப்பிச்சேன்பா!!

இளசு
22-01-2007, 10:05 PM
அன்பு மோகன்

Utopia-ன் கனவென்று ஒன்று உண்டு..
ஈடன் தோட்டமென்று சொல்வாருமுண்டு..
இப்புவியில் இந்நிலை வாராதென்று
எப்போதோ உணர்ந்து சொர்க்கம் படைத்தவருண்டு..

வாள் அம்பு பாணம் மாறி
ஸ்கட்,பயோவார் என்றாகி..
முன்னேற்றம் ஆக்கத்தில் மட்டுமல்ல..
மூர்க்கமாய் அழிப்பதிலும்தான்..

நனவில் நடக்காததை
கனவில் காண சுகமே...

உங்கள் கவிதை அவ்விதத்தில் சுகமே..

leomohan
23-01-2007, 04:26 AM
உங்கள் நேரத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி இளசு.