PDA

View Full Version : ஹைக்கூ 05 - கிளி ஜோசியம்meera
29-09-2006, 06:29 AM
உன் எதிர்காலம்
சொல்லும் எனக்கு
எப்போது விடுதலை?
-கிளி ஜோசியம்

தாமரை
29-09-2006, 06:37 AM
உன் எதிர்காலம்
சொல்லும் எனக்கு
எப்போது விடுதலை?
-கிளி ஜோசியம்
கொஞ்ச நாள் பொறு..
காசே கிடைக்காமல்
வயிற்றுப் பசி
தாங்க முடியாவிட்டால்
தந்து விடுகிறேன்
ஒரேடியாக

meera
29-09-2006, 06:57 AM
கொஞ்ச நாள் பொறு..
காசே கிடைக்காமல்
வயிற்றுப் பசி
தாங்க முடியாவிட்டால்
தந்து விடுகிறேன்
ஒரேடியாக
அடடா!நான் உங்ககிட்ட ஒரேடியா விடுதலை கேக்கல சாமி.கூண்டுல இருந்து விடுதல கேட்டேன்.

இப்படி ஆகும்னு முன்னாடியே தெரிஞ்றுந்தா நான் விடுதலையே கேட்டுறுக்கமாட்டேன்

தாமரை
29-09-2006, 07:14 AM
பிறர் பசி தீர்த்தல்
பெரிய புண்ணியம்..
புண்ணியத்தை
பிறருக்குத் தருதல்
மாபெரும் புண்ணியம்
உனக்குப் புண்ணியம்..
எனக்கு
மாபெரும் புண்ணியம்
சரியா கிளியே!!

meera
29-09-2006, 07:25 AM
பிறர் பசி தீர்த்தல்
பெரிய புண்ணியம்..
புண்ணியத்தை
பிறருக்குத் தருதல்
மாபெரும் புண்ணியம்
உனக்குப் புண்ணியம்..
எனக்கு
மாபெரும் புண்ணியம்
சரியா கிளியே!!
தனக்கு பின் தானம்.நானே பசியோடு இருக்கும் போது உன் பசியை தீர்க்க என்னால் முடியாது.
ஒரு உயிரை கொன்று புசிப்பது பாவம்.
அதிலும் நானோ மிகச் சிறிய பறவை.என்னை கொன்று ஏன் பாவத்தை சம்பாதிக்க நினைக்கிறாய்.

தாமரை
29-09-2006, 07:30 AM
தனக்கு மிஞ்சியதே தானம்..
உனக்கு மிஞ்சி யிருப்பது இப்போது 100 கிராம் கறி..
அதைதான் தானம் செய் என்றேன்
நான் உன்னைக் கொல்ல நினைக்கவில்லை
நெல்மணி வாங்க காசில்லை..
செத்துதானே போகப்போகிறாய்..
செத்தும் கொடுத்தாள்
பச்சைக்கிளி என
உன் பெயர் நிலவட்டும்..

aren
29-09-2006, 07:38 AM
மீரா - செல்வம் கவிதை கலக்கல்கள் அருமை. தொடருங்கள்.

meera
29-09-2006, 07:41 AM
தனக்கு மிஞ்சியதே தானம்..
உனக்கு மிஞ்சி யிருப்பது இப்போது 100 கிராம் கறி..
அதைதான் தானம் செய் என்றேன்
நான் உன்னைக் கொல்ல நினைக்கவில்லை
நெல்மணி வாங்க காசில்லை..
செத்துதானே போகப்போகிறாய்..
செத்தும் கொடுத்தாள்
பச்சைக்கிளி என
உன் பெயர் நிலவட்டும்..
அடடா என்னே ஓர் உயர்ந்த எண்ணம்.தலைவா, நான் ஒன்றும் கர்ணன் பரம்பரையில் வரவில்லை.உனக்கு நெல்மணி வாங்கவே காசில்லையே அப்புறம் ஏன் என்னை வைத்து கஷ்டபடுகிறாய்.என்ன விடுதல செய் என் உணவை நான் தேடிக்கொள்வேன். நா ஒன்னும் உன்ன மதிரி சோம்பேரி இல்ல

தாமரை
29-09-2006, 08:30 AM
பாவமாய்த்தான் இருக்கிறது..
ஒத்துக் கொள்கிறேன்..
நீ கேட்டது கிடைக்கும்..
விடுதலை யென்றாய்..
விட்டு விடுகிறேன்.
தலையை மட்டும்.

gragavan
29-09-2006, 08:49 AM
நெல்லுக்கு வந்ததா கிளி
ஊர்க்கான
சொல்லுக்கு வந்ததா கிளி
சோதிடனோடு
மல்லுக்கு வந்ததா கிளி
இல்லை குழம்பில்
கொதித்து வெந்ததா கிளி

தாமரை
29-09-2006, 08:56 AM
நெல்லுக்கு வந்ததா கிளி
ஊர்க்கான
சொல்லுக்கு வந்ததா கிளி
சோதிடனோடு
மல்லுக்கு வந்ததா கிளி
இல்லை குழம்பில்
கொதித்து வெந்ததா கிளி

வெந்திருச்சு வாங்க சாப்பிடலாம்..
சோதிடம் பார்ப்பவனிடம்
திடம் இல்லை
"சோ:" திடம் பார்க்கிறான்

meera
29-09-2006, 09:18 AM
வெந்திருச்சு வாங்க சாப்பிடலாம்..
சோதிடம் பார்ப்பவனிடம்
திடம் இல்லை
"சோ:" திடம் பார்க்கிறான்
எப்போ டா கொஞ்ச நேரம் பேசாம இருக்கும் குழம்பு வச்சு சாப்பிடலாம்னு காத்துட்டு இருக்குபா ஒரு கூட்டம்.தலைவா உங்களுக்கே அந்த கிளி பத்தாது நீங்க மன்றத்துல இருக்க எல்லாரையும் கூப்பிடறீங்களா?ஓசில கெடச்சா உடனே குழம்பு பண்ணலாமா,குருமா பண்ணலாமானு பட்டிமண்றம் நடத்தீடுவீங்களே

பென்ஸ்
12-10-2006, 07:24 PM
ஞயிற்று கிழமைகளில் மடிவாலா சந்தை செல்லூவோம்...
(எதோ பங்கு சந்தை என்று நினைக்க வேண்டாம்).
எனக்கு இங்க போயாச்சுனா இங்கு கம்பங்கூளு, கரும்பு சாறு, ராகி உருண்டை சாப்பிடும் ஆசையெல்லாம் நிறைவேறும்.... ஒரு நாள் இப்படியே சுத்திகிட்டு வரும்போது ஒரு ஜோதிடம் பார்ப்பவணிடம் வந்தோம் (அட நாங்க நாலு பேரு உண்டுப்பா) ... எங்கு போனாலும் சிக்கலில் மாட்டுபவன் நான் என்ற கணக்கில் எனக்கு ஜோதிடம் முதலில் பார்க்க பட்டது...

அட எனக்கு சத்தியமா காதல் கல்யாணம் தானாம்..(நம்பிட்டேன்)

அடுத்தது அவன் என் அன்பு நண்பனின் கையை பார்க்க

ஜோஷியகாரன் அவனிடம் "நீ காதல் கல்யாணம் பண்ணினா, அவா வேற வாழ போயிடுவா என்று சொல்ல"

பளீர்...

பாவம் ஜோசியகாரன் காதில் இருந்து ரத்தம்....

எனக்கு சிரிப்பு தாங்கலை.. பின்ன அவனுக்கு என்ன நடக்க போவுதுன்னு தெரியாம அடுத்தவன் எதிர்காலம் சொன்னா...

எப்படியோ.. செல்வரே கிளி சூப் எப்படி... எனக்கு பங்கு உன்டா????

ஓவியா
12-10-2006, 07:36 PM
தோழி மீரா, அண்ணன் செல்வன் இருவரின் சண்டை கவிதை ஜோர்....

என்னா சன்டை முடிந்ததா.....

பென்ஸ்
12-10-2006, 08:12 PM
தோழி மீரா, அண்ணன் செல்வன் இருவரின் சண்டை கவிதை ஜோர்....

என்னா சன்டை முடிந்ததா.....

திரும்பவும் "பத்தவச்சிடியே பரட்டை":rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D :D

குறிப்பு: இங்கு மட்டும் பரட்டை = மக்கா

இளசு
13-10-2006, 02:00 AM
மீராவின் கிளிப்பேச்சு கேட்கவந்தால்...
செல்வனின் பசிப்பேச்சு பெரிதாகி..
ராகவனின் தமிழ்ப்பேச்சில் சிக்கி...
பென்ஸின் சோசியரின் செவிப்பேச்சில் நிற்கிறது...

கிளி விருந்தெல்லாம் எம்மாத்திரம்..
இம்மொழி விருந்துக்கு முன்னால்.

தத்தை பாவம் தப்பிக்கொள்ளட்டும்..
செல்வன்.. வாங்க நாம வேற ஏதாவது தேடலாம்...

மதி
13-10-2006, 03:20 AM
ஞயிற்று கிழமைகளில் மடிவாலா சந்தை செல்லூவோம்...
(எதோ பங்கு சந்தை என்று நினைக்க வேண்டாம்).
எனக்கு இங்க போயாச்சுனா இங்கு கம்பங்கூளு, கரும்பு சாறு, ராகி உருண்டை சாப்பிடும் ஆசையெல்லாம் நிறைவேறும்.... ஒரு நாள் இப்படியே சுத்திகிட்டு வரும்போது ஒரு ஜோதிடம் பார்ப்பவணிடம் வந்தோம் (அட நாங்க நாலு பேரு உண்டுப்பா) ... எங்கு போனாலும் சிக்கலில் மாட்டுபவன் நான் என்ற கணக்கில் எனக்கு ஜோதிடம் முதலில் பார்க்க பட்டது...

அட எனக்கு சத்தியமா காதல் கல்யாணம் தானாம்..(நம்பிட்டேன்)

அடுத்தது அவன் என் அன்பு நண்பனின் கையை பார்க்க

ஜோஷியகாரன் அவனிடம் "நீ காதல் கல்யாணம் பண்ணினா, அவா வேற வாழ போயிடுவா என்று சொல்ல"

பளீர்...

பாவம் ஜோசியகாரன் காதில் இருந்து ரத்தம்....

எனக்கு சிரிப்பு தாங்கலை.. பின்ன அவனுக்கு என்ன நடக்க போவுதுன்னு தெரியாம அடுத்தவன் எதிர்காலம் சொன்னா...

எப்படியோ.. செல்வரே கிளி சூப் எப்படி... எனக்கு பங்கு உன்டா????
இது மட்டும் தானா..?? இல்ல..ஏழரை சனி..அது இதுன்னு நேத்து சொன்னீங்க..?!:confused: :confused:

meera
13-10-2006, 04:28 AM
தோழி மீரா, அண்ணன் செல்வன் இருவரின் சண்டை கவிதை ஜோர்....

என்னா சன்டை முடிந்ததா.....

அண்ணாவோடு சண்டை போடுவது என்றால் ஒரு தனி சந்தோஷம் தானே ஓவியா. :D :D :D :D :D

meera
13-10-2006, 04:31 AM
மீராவின் கிளிப்பேச்சு கேட்கவந்தால்...
செல்வனின் பசிப்பேச்சு பெரிதாகி..
ராகவனின் தமிழ்ப்பேச்சில் சிக்கி...
பென்ஸின் சோசியரின் செவிப்பேச்சில் நிற்கிறது...

கிளி விருந்தெல்லாம் எம்மாத்திரம்..
இம்மொழி விருந்துக்கு முன்னால்.

தத்தை பாவம் தப்பிக்கொள்ளட்டும்..
செல்வன்.. வாங்க நாம வேற ஏதாவது தேடலாம்...
இதுக்கு தான்ய்யா மன்றத்துல ஒரு பெரிய மனுஷன் வேணும்கறது.:eek: :eek: :eek: :eek:

பென்ஸ்
13-10-2006, 04:48 AM
மீராவின் கிளிப்பேச்சு கேட்கவந்தால்...
செல்வனின் பசிப்பேச்சு பெரிதாகி..
ராகவனின் தமிழ்ப்பேச்சில் சிக்கி...
பென்ஸின் சோசியரின் செவிப்பேச்சில் நிற்கிறது...

கிளி விருந்தெல்லாம் எம்மாத்திரம்..
இம்மொழி விருந்துக்கு முன்னால்.

தத்தை பாவம் தப்பிக்கொள்ளட்டும்..
செல்வன்.. வாங்க நாம வேற ஏதாவது தேடலாம்...

இளசு நீங்க தோள்ல கை போட்டிருக்கிரது போறப்போ
"வாராய் நீ வாராய் , போகுமிடம் வேகுதூரமில்லை"
என்ரு பேக் கிரவுண்டில் ஒரு மியூசிக் வருதே....

இது இரண்டு பேரில் யார் பாடும் பாட்டோ???

meera
13-10-2006, 04:58 AM
ஞயிற்று கிழமைகளில் மடிவாலா சந்தை செல்லூவோம்...
(எதோ பங்கு சந்தை என்று நினைக்க வேண்டாம்).
எனக்கு இங்க போயாச்சுனா இங்கு கம்பங்கூளு, கரும்பு சாறு, ராகி உருண்டை சாப்பிடும் ஆசையெல்லாம் நிறைவேறும்.... ஒரு நாள் இப்படியே சுத்திகிட்டு வரும்போது ஒரு ஜோதிடம் பார்ப்பவணிடம் வந்தோம் (அட நாங்க நாலு பேரு உண்டுப்பா) ... எங்கு போனாலும் சிக்கலில் மாட்டுபவன் நான் என்ற கணக்கில் எனக்கு ஜோதிடம் முதலில் பார்க்க பட்டது...

அட எனக்கு சத்தியமா காதல் கல்யாணம் தானாம்..(நம்பிட்டேன்)

அடுத்தது அவன் என் அன்பு நண்பனின் கையை பார்க்க

ஜோஷியகாரன் அவனிடம் "நீ காதல் கல்யாணம் பண்ணினா, அவா வேற வாழ போயிடுவா என்று சொல்ல"

பளீர்...

பாவம் ஜோசியகாரன் காதில் இருந்து ரத்தம்....

எனக்கு சிரிப்பு தாங்கலை.. பின்ன அவனுக்கு என்ன நடக்க போவுதுன்னு தெரியாம அடுத்தவன் எதிர்காலம் சொன்னா...

எப்படியோ.. செல்வரே கிளி சூப் எப்படி... எனக்கு பங்கு உன்டா????

வாங்கய்யா வாங்கா அந்த ஒத்த கிளிக்கு எத்தன பேரு பங்குக்கு வரது ம்ம்ம்ம்........முடியல முடியல இப்பவே மூச்சுவாங்குதே ஷ் ஷ் ஷ்.......

தாமரை
15-10-2006, 02:44 AM
வாங்கய்யா வாங்கா அந்த ஒத்த கிளிக்கு எத்தன பேரு பங்குக்கு வரது ம்ம்ம்ம்........முடியல முடியல இப்பவே மூச்சுவாங்குதே ஷ் ஷ் ஷ்.......

அதான் அதான் சொன்னேன் மூச்சை வாங்கவும் வேண்டாம் விக்கவும் வேண்டாம்,,, நிறுத்திடுவோம்.. எல்லாத்தையும் நிறுத்திடுவோம்.. :eek: :eek: :eek: (அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன் டயலாக் ரிசர்வ் செய்யப்படுகிறது.. வேறு டயலாக் உபயோகிக்கவும்..)

இளசு:: புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு கிளி உயர்ந்தது... கண்ணில் தெரியும் பலாக்காயை விட கையில் உள்ள களாக்காயே மேல்..:D :D :D

பென்ஸ்
15-10-2006, 10:52 AM

நீங்க ஏன் நிறுத்தனும்...
ஏன்...

குப்பை லாரின்ன்ற பெயரில வழி நெடுக்க குப்பை போடுறான அவன் நிறுத்துறான
வழி நெடுக்க போலிஸ் நின்று கெட்லைட்ல பொட்டு வைக்கலன்னு காசு வாங்குறனே அவன் நிறுத்துறானா...
சினிமா நடிகைங்க ரிபன் கட்டி நடிக்கிரதை நிருத்துறாங்களா...

அது எல்லாம் ஏன்...

பிரதிப்பு சாப்பிடுரத நிருத்துறானா..
இல்லை ராகவன் சாப்பாடை பற்றி எழுதுறது நிறுத்துறானா...
சரவணன் கடலை போடுறது நிறுத்துறானா....

இவங்க எல்லாம் நிறுத்தலையே
அப்புறம் நீர் மட்டும் எதுக்கு நிறுத்தனும்....
நீரு தொடருமையா...
உம்ம வேலையை நீரு தொடருமையா....

meera
15-10-2006, 01:35 PM

பென்ஸ்,கரீட்டுப்பா க்கும்..:D :D :D :D :D

meera
15-10-2006, 01:42 PM
அதான் அதான் சொன்னேன் மூச்சை வாங்கவும் வேண்டாம் விக்கவும் வேண்டாம்,,, நிறுத்திடுவோம்.. எல்லாத்தையும் நிறுத்திடுவோம்.. :eek: :eek: :eek: (அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன் டயலாக் ரிசர்வ் செய்யப்படுகிறது.. வேறு டயலாக் உபயோகிக்கவும்..)

இளசு:: புதரில் உள்ள இரு பறவைகளை விட கையில் உள்ள ஒரு கிளி உயர்ந்தது... கண்ணில் தெரியும் பலாக்காயை விட கையில் உள்ள களாக்காயே மேல்..:D :D :D

அண்ணா மூச்ச நிறுத்தறதுல என்னா ஒரு சந்தோஷம்.அவ்வளவு சீக்கிரம் நிறுத்த முடியாதுங்கண்ணாவ்......

மதி
15-10-2006, 01:51 PM
நீங்க ஏன் நிறுத்தனும்...
ஏன்...

குப்பை லாரின்ன்ற பெயரில வழி நெடுக்க குப்பை போடுறான அவன் நிறுத்துறான
வழி நெடுக்க போலிஸ் நின்று கெட்லைட்ல பொட்டு வைக்கலன்னு காசு வாங்குறனே அவன் நிறுத்துறானா...
சினிமா நடிகைங்க ரிபன் கட்டி நடிக்கிரதை நிருத்துறாங்களா...

அது எல்லாம் ஏன்...

பிரதிப்பு சாப்பிடுரத நிருத்துறானா..
இல்லை ராகவன் சாப்பாடை பற்றி எழுதுறது நிறுத்துறானா...
சரவணன் கடலை போடுறது நிறுத்துறானா....

இவங்க எல்லாம் நிறுத்தலையே
அப்புறம் நீர் மட்டும் எதுக்கு நிறுத்தனும்....
நீரு தொடருமையா...
உம்ம வேலையை நீரு தொடருமையா....
நல்ல வேளை நான் மாட்டல..!:D :D

தாமரை
15-10-2006, 01:57 PM

நான் நிறுத்தறுதை நிறுத்தக்கூடாதுன்னு சொன்னீங்களே சூப்பர்..

பென்ஸ்
15-10-2006, 01:57 PM
நல்ல வேளை நான் மாட்டல..!:D :D

உன்னை பத்தி எழுதி இருந்தா பண்பட்டவர்பகுதிக்கு மாத்தி இருப்பாங்க அதுதான் நான் எழுதலை...:rolleyes: :rolleyes: :D :D :D

தாமரை
15-10-2006, 01:59 PM
அண்ணா மூச்ச நிறுத்தறதுல என்னா ஒரு சந்தோஷம்.அவ்வளவு சீக்கிரம் நிறுத்த முடியாதுங்கண்ணாவ்......
பென்ஸூ என்னைத் தொடரச் சொல்ல அதைப் புரியாம அவருக்கு கரீட்டு சொல்லிட்டு நிறுத்தமுடியாதுன்னு அடம் பிடிக்கக் கூடாது..

ஒண்ணு மூச்சை நிறுத்தணும் இல்லைன்னா பென்ஸூக்கு கரீட்டு சொன்னதை வாபஸ் வாங்கணும். எதைச் செய்யறதா உத்தேசம்?

பென்ஸ்
15-10-2006, 01:59 PM
நான் நிறுத்தறுதை நிறுத்தக்கூடாதுன்னு சொன்னீங்களே சூப்பர்..

அமா அடுத்தவங்க நல்லா இருந்தா எனக்கு பிடிக்காது....:D :D :D :D

பென்ஸ்
15-10-2006, 02:05 PM
பென்ஸூ என்னைத் தொடரச் சொல்ல அதைப் புரியாம அவருக்கு கரீட்டு சொல்லிட்டு நிறுத்தமுடியாதுன்னு அடம் பிடிக்கக் கூடாது..

ஒண்ணு மூச்சை நிறுத்தணும் இல்லைன்னா பென்ஸூக்கு கரீட்டு சொன்னதை வாபஸ் வாங்கணும். எதைச் செய்யறதா உத்தேசம்?

என்ன இதோட நிப்பாட்டி விட்டீர்கள்....
மீரா இந்தா அருவா...:rolleyes: :rolleyes:
செல்வன் இந்தாரும் பிளேடு (அது ஏற்க்கனவே இருக்கா???):D :D
வெட்டு...:p
குத்து...:D
ரத்த ஆறு ஓடனும்....B)

இப்போ தேவர்மகன் கமல் ஸ்டைலில் எல்லாம் இப்படி டயலாக் பேசபிடாது
" அட போங்கட.. போயி உங்க பிள்ளை குட்டியளை படிக்க வையுங்க, ரத்தம், உயிரு எடுத்தது எல்லாம் போதும்... போங்கடா போங்க..."

மதி
16-10-2006, 02:46 AM
உன்னை பத்தி எழுதி இருந்தா பண்பட்டவர்பகுதிக்கு மாத்தி இருப்பாங்க அதுதான் நான் எழுதலை...:rolleyes: :rolleyes: :D :D :D
அடடா..இது வேறயா...????
நானில்ல சாமியோவ்...:D :D :D :D :D

மதி
16-10-2006, 02:48 AM
என்ன இதோட நிப்பாட்டி விட்டீர்கள்....
மீரா இந்தா அருவா...:rolleyes: :rolleyes:
செல்வன் இந்தாரும் பிளேடு (அது ஏற்க்கனவே இருக்கா???):D :D
வெட்டு...:p
குத்து...:D
ரத்த ஆறு ஓடனும்....B)

இப்போ தேவர்மகன் கமல் ஸ்டைலில் எல்லாம் இப்படி டயலாக் பேசபிடாது
" அட போங்கட.. போயி உங்க பிள்ளை குட்டியளை படிக்க வையுங்க, ரத்தம், உயிரு எடுத்தது எல்லாம் போதும்... போங்கடா போங்க..."
அட...இன்னொரு விசயகுமாரு....
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு....

தாமரை
16-10-2006, 04:05 AM
என்ன இதோட நிப்பாட்டி விட்டீர்கள்....
மீரா இந்தா அருவா...:rolleyes: :rolleyes:
செல்வன் இந்தாரும் பிளேடு (அது ஏற்க்கனவே இருக்கா???):D :D
வெட்டு...:p
குத்து...:D
ரத்த ஆறு ஓடனும்....B)

இப்போ தேவர்மகன் கமல் ஸ்டைலில் எல்லாம் இப்படி டயலாக் பேசபிடாது
" அட போங்கட.. போயி உங்க பிள்ளை குட்டியளை படிக்க வையுங்க, ரத்தம், உயிரு எடுத்தது எல்லாம் போதும்... போங்கடா போங்க..."

மீராகிட்ட அரிவாளா:rolleyes: :rolleyes:
மீரா அறிவாளா:rolleyes: :rolleyes:
மீறாட்டா அரிவாள் எதுக்கு :cool: :cool:
மீறிட்டா அறிவால அடக்கு.:cool: :cool: .

இப்பவே ரத்த ஆறு ஓடுதே :eek: :eek: :eek:

meera
16-10-2006, 04:16 PM
பென்ஸூ என்னைத் தொடரச் சொல்ல அதைப் புரியாம அவருக்கு கரீட்டு சொல்லிட்டு நிறுத்தமுடியாதுன்னு அடம் பிடிக்கக் கூடாது..

ஒண்ணு மூச்சை நிறுத்தணும் இல்லைன்னா பென்ஸூக்கு கரீட்டு சொன்னதை வாபஸ் வாங்கணும். எதைச் செய்யறதா உத்தேசம்?
அண்ணா, பென்ஸுக்கு கரீட்டு சொன்னத வேணா வாபஸ் வாங்குவேன், மூச்ச நிறுத்த சம்மதம் இல்லீங்கோ :angry: :angry:

ஓவியா
16-10-2006, 07:41 PM
ஹக்கூ பதிவு சும்மா கலக்கலா இருக்கு....

மொத்த பதிவையும் படிச்சா ஒரு பயமே வருதுடா சாமி
எப்படியோ மன்றதிலே இரண்டு கட்சி உருவாகிடுச்சு...

தாமரை
17-10-2006, 01:47 AM
அண்ணா, பென்ஸுக்கு கரீட்டு சொன்னத வேணா வாபஸ் வாங்குவேன், மூச்ச நிறுத்த சம்மதம் இல்லீங்கோ :angry: :angry:

நிறுத்த வேணாம்.. விடாதீங்கோ....

நான் பச்சைக் கிளிகளை
சாப்பிடுவதில்லை
சமைத்துதான்...:D :D :D

அறிஞர்
17-10-2006, 01:01 PM
மீராவின் கவிதை அருமை....

செல்வன், இராகவன், பென்ஸு.. லொள்ளுகளும் அருமை...
--------
மற்ற கவிதைகள் எங்கே மீரா????????/

தொடருங்கள்...

meera
17-10-2006, 01:16 PM
மீராவின் கவிதை அருமை....

செல்வன், இராகவன், பென்ஸு.. லொள்ளுகளும் அருமை...
--------
மற்ற கவிதைகள் எங்கே மீரா????????/

தொடருங்கள்...

நன்றி அறிஞரே!!!

மற்ற கவிதைகள் விரைவில் கொடுக்கலாம் அறிஞரே

meera
17-10-2006, 01:21 PM
நிறுத்த வேணாம்.. விடாதீங்கோ....

நான் பச்சைக் கிளிகளை
சாப்பிடுவதில்லை
சமைத்துதான்...:D :D :D

சமைத்து சப்பிடுவது உங்கள் சாமர்த்தியம்
தங்களிடம் மாட்டாமல் இருப்பது என் சாமர்த்தியம்.
சமைக்கலாம்,சப்பிடலாம் என்ற கனவை கலைத்துவிடுங்கள் அண்ணா.

அறிஞர்
17-10-2006, 02:06 PM
நிறுத்த வேணாம்.. விடாதீங்கோ....

நான் பச்சைக் கிளிகளை
சாப்பிடுவதில்லை
சமைத்துதான்...:D :D :D எங்கு சுற்றினாலும், சாப்பாட்டுக்கு வந்துவிடுகிறார்.. செல்வன்.... :rolleyes: :rolleyes: :rolleyes:

தாமரை
17-10-2006, 02:06 PM
சமைத்து சப்பிடுவது உங்கள் சாமர்த்தியம்
தங்களிடம் மாட்டாமல் இருப்பது என் சாமர்த்தியம்.
சமைக்கலாம்,சப்பிடலாம் என்ற கனவை கலைத்துவிடுங்கள் அண்ணா.

கவலைப் படாதே கிளியே!
உன் பெயர் (சமையல் குறிப்பு http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=50 (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=50)) புத்தகத்தில்
பொன்னெழுத்தில் பொறிக்கப்பட போகிறது..

நீயும்தான்
பொன்னிறத்தில்...
பொரிக்கப்படப் போகிறாய்

பிடிப்பது என் சாமர்த்தியம்..
நான் பிடிக்காமல் நீ எப்படி கூட்டில்..
தப்பிபது உன் சாமர்த்தியம்..
கமுக்கமாய் செய்திருக்கலாம்..

சமைக்கலாம் என்பது கனவல்ல
அது இலட்சியம்..

தாமரை
17-10-2006, 02:23 PM
எங்கு சுற்றினாலும், சாப்பாட்டுக்கு வந்துவிடுகிறார்.. செல்வன்.... :rolleyes: :rolleyes: :rolleyes:

எங்கம்மாவும் இதையேதான் சொல்லுவாங்க...

ஓவியா
17-10-2006, 05:25 PM
மீராகிட்ட அரிவாளா:rolleyes: :rolleyes:
மீரா அறிவாளா:rolleyes: :rolleyes:
மீறாட்டா அரிவாள் எதுக்கு :cool: :cool:
மீறிட்டா அறிவால அடக்கு.:cool: :cool: .

இப்பவே ரத்த ஆறு ஓடுதே :eek: :eek: :eek:

கவலைப் படாதே கிளியே!
உன் பெயர் சமையல் குறிப்பு புத்தகத்தில்
பொன்னெழுத்தில் பொறிக்கப்பட போகிறது..

நீயும்தான்
பொன்னிறத்தில்...
பொரிக்கப்படப் போகிறாய்

பிடிப்பது என் சாமர்த்தியம்..
நான் பிடிக்காமல் நீ எப்படி கூட்டில்..
தப்பிபது உன் சாமர்த்தியம்..
கமுக்கமாய் செய்திருக்கலாம்..

சமைக்கலாம் என்பது கனவல்ல
அது இலட்சியம்..

அண்ணா,
இந்த கவிதையை படித்துட்டு
மீரா சொந்தமா அரிவாள் எடுத்து வெட்டிக்க போறாங்க...

meera
18-10-2006, 09:46 AM
கவலைப் படாதே கிளியே!
உன் பெயர் (சமையல் குறிப்பு http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=50 (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=50)) புத்தகத்தில்
பொன்னெழுத்தில் பொறிக்கப்பட போகிறது..

நீயும்தான்
பொன்னிறத்தில்...
பொரிக்கப்படப் போகிறாய்

பிடிப்பது என் சாமர்த்தியம்..
நான் பிடிக்காமல் நீ எப்படி கூட்டில்..
தப்பிபது உன் சாமர்த்தியம்..
கமுக்கமாய் செய்திருக்கலாம்..

சமைக்கலாம் என்பது கனவல்ல
அது இலட்சியம்..அண்ணா,தங்களின் இலட்சியமே இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இலட்சியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பரிசு என்ன தரலாம்(பரிசு தொகையா கிளியை மட்டும் கேக்க படாது சரியா).

meera
18-10-2006, 09:51 AM
அண்ணா,
இந்த கவிதையை படித்துட்டு
மீரா சொந்தமா அரிவாள் எடுத்து வெட்டிக்க போறாங்க...

ஓவியா,
நீங்க சொன்ன மாதிரி அந்த கவிதை படிச்சுட்டு ஒரு நிமிஷம் யோசிச்சேன் வெட்டிக்கலாமானு.

தற்கொலை கோழைத்தனம் இல்லயா அதான் யோசிக்கறேன்;) ;) ;) ;) :p :p

தாமரை
18-10-2006, 01:05 PM
அண்ணா,தங்களின் இலட்சியமே இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இலட்சியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பரிசு என்ன தரலாம்(பரிசு தொகையா கிளியை மட்டும் கேக்க படாது சரியா).

கிளியை மட்டும் கேட்கலை.. கூடவே பொரிக்க எண்ணெயும், மணக்க மணக்க அரைத்த மசாலாவும், ஒரு வாணலியும் குடுங்க,,,:cool: :cool: :cool:
(மட்டும் என்பதை இப்படியும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமே!!:eek: :eek: :eek: !)

தாமரை
18-10-2006, 01:07 PM
ஓவியா,
நீங்க சொன்ன மாதிரி அந்த கவிதை படிச்சுட்டு ஒரு நிமிஷம் யோசிச்சேன் வெட்டிக்கலாமானு.

தற்கொலை கோழைத்தனம் இல்லயா அதான் யோசிக்கறேன்;) ;) ;) ;) :p :p

தற்கொலை கோழைத்தனம் தான்
உயிர் தியாகம் வீரமல்லவா???:D :D :D

மதி
18-10-2006, 02:25 PM
தற்கொலை கோழைத்தனம் தான்
உயிர் தியாகம் வீரமல்லவா???:D :D :D
யாருக்காக இந்த உயிர்தியாகமெல்லாம்...?:confused: :confused:

தாமரை
19-10-2006, 12:17 AM
பறந்து செல்லத் துடிக்கும் ஒரு கிளியின் கதியே இது என்றால், என் மேலாண்மையின் கீழ் வேலை செய்யும் பொறியியல் வல்லுனர்களின் நிலையை கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தீர்களா மதி?

meera
19-10-2006, 04:55 AM
பறந்து செல்லத் துடிக்கும் ஒரு கிளியின் கதியே இது என்றால், என் மேலாண்மையின் கீழ் வேலை செய்யும் பொறியியல் வல்லுனர்களின் நிலையை கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தீர்களா மதி?
அண்ணா, கிளியின் நிலையே இதுவென்றால்,தங்களின் கீழ் வேலை செய்பவர்கள் நிலை:confused: :confused: :confused: . அய்யோ நினைக்கவே பயமாய் இருக்கிறது :eek: :eek: :eek:

meera
19-10-2006, 04:59 AM
கிளியை மட்டும் கேட்கலை.. கூடவே பொரிக்க எண்ணெயும், மணக்க மணக்க அரைத்த மசாலாவும், ஒரு வாணலியும் குடுங்க,,,:cool: :cool: :cool:
(மட்டும் என்பதை இப்படியும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமே!!:eek: :eek: :eek: !)

அண்ணா,தங்களுடன் பேசி ஜெயிக்க முடியாது தான் ஒத்துக்கறேன்.
(ஆனா என்ன நடந்தாலும் கிளி தற்கொலையும் செய்யாது,உயிர் தியாகமும் செய்யாது க்கும்ம்ம்.)

gragavan
19-10-2006, 06:15 AM
அண்ணா,தங்களுடன் பேசி ஜெயிக்க முடியாது தான் ஒத்துக்கறேன்.
(ஆனா என்ன நடந்தாலும் கிளி தற்கொலையும் செய்யாது,உயிர் தியாகமும் செய்யாது க்கும்ம்ம்.) தற்கொலையும் செய்யாது...தியாகமும் செய்யாதுன்னா....பேசாம நம்மளே எடுத்துக்கிற வேண்டியதுதான். கபால மோட்சம் குடுத்துட்டா சரியாப் போகும்.

meera
19-10-2006, 06:27 AM
தற்கொலையும் செய்யாது...தியாகமும் செய்யாதுன்னா....பேசாம நம்மளே எடுத்துக்கிற வேண்டியதுதான். கபால மோட்சம் குடுத்துட்டா சரியாப் போகும்.

அட கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க:angry: :angry: :angry:

மதி
19-10-2006, 08:56 AM
பறந்து செல்லத் துடிக்கும் ஒரு கிளியின் கதியே இது என்றால், என் மேலாண்மையின் கீழ் வேலை செய்யும் பொறியியல் வல்லுனர்களின் நிலையை கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தீர்களா மதி?
அவர்கள் உலகின் தலைசிறந்த பொறியியல் வல்லுநராவதற்கு வாய்ப்பிருக்கு. பின்ன உங்கள சமாளிச்சு வேலை பாக்க வேண்டாமா..? செல்வரே..உங்கள் மேலாண்மையின் கீழ் எத்தனை பேர் ரொம்ப நாள் தாக்குப்பிடிச்சிருக்காங்க..?:D :D

ஓவியா
19-10-2006, 05:55 PM
கிளி ஜொஷியமும் ஒருவகை மோட்டிவேஷேன் தான்...

இன்று உங்களுக்கு அந்த
திருமலையானே தரிசணம் தரான்
எடுத்த காரியம் கைகூடும்..........
கடவுள் உங்க பக்கம்.......
தைரியமா ஆரம்பிங்க............

இப்படியெல்லாம் சொன்னா
எந்த நாளும் நல்ல நாளே நம் நாளே.....
மனதில் ஒரு தெம்பு வரும்....

ஆமாம் தானே...:D :D இல்லையா........:eek: :eek: :cool:

தாமரை
22-10-2006, 03:42 PM
அவர்கள் உலகின் தலைசிறந்த பொறியியல் வல்லுநராவதற்கு வாய்ப்பிருக்கு. பின்ன உங்கள சமாளிச்சு வேலை பாக்க வேண்டாமா..? செல்வரே..உங்கள் மேலாண்மையின் கீழ் எத்தனை பேர் ரொம்ப நாள் தாக்குப்பிடிச்சிருக்காங்க..?:D :D

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

தாமரை
23-10-2006, 05:59 AM
கிளி ஜொஷியமும் ஒருவகை மோட்டிவேஷேன் தான்...

இன்று உங்களுக்கு அந்த
திருமலையானே தரிசணம் தரான்
எடுத்த காரியம் கைகூடும்..........
கடவுள் உங்க பக்கம்.......
தைரியமா ஆரம்பிங்க............

இப்படியெல்லாம் சொன்னா
எந்த நாளும் நல்ல நாளே நம் நாளே.....
மனதில் ஒரு தெம்பு வரும்....

ஆமாம் தானே...:D :D இல்லையா........:eek: :eek: :cool:

ஆமாமுங்கோ.. நாம தனியா சொன்னா ஏத்தி விட்டு வேடிக்கை பாக்கறாங்கன்னு சொல்லுவாங்கோ.. ஒரு கிளியை (?!) பக்கத்தில வச்சுகிட்டு சொன்னா நம்புவாங்கோ..

தாமரை
23-10-2006, 06:08 AM
அண்ணா,தங்களுடன் பேசி ஜெயிக்க முடியாது தான் ஒத்துக்கறேன்.
(ஆனா என்ன நடந்தாலும் கிளி தற்கொலையும் செய்யாது,உயிர் தியாகமும் செய்யாது க்கும்ம்ம்.)

அப்ப கிளிக்கும் ஒரு சி.டி. கொடுத்திட வேண்டியதுதான்.. இல்லையா பென்ஸ், ராகவன், பிரதீப்பு மற்றும் பரம்ஸ்.??

கண்மணி
23-10-2006, 11:17 AM
உன் எதிர்காலம்
சொல்லும் எனக்கு
எப்போது விடுதலை?
-கிளி ஜோசியம்
யார் யாருக்கோ சீட்டெடுத்த கிளியே!
பேசும் முன்
உன் பெயருக்கு ஒரு சீட்டு எடுத்துப் பார்த்திருக்கக் கூடாதா?
ஒரு வேளை எருமை மேல் எமதர்மன் வந்து
எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா?

தாமரை
03-12-2006, 06:14 AM
யார் யாருக்கோ சீட்டெடுத்த கிளியே!
பேசும் முன்
உன் பெயருக்கு ஒரு சீட்டு எடுத்துப் பார்த்திருக்கக் கூடாதா?
ஒரு வேளை எருமை மேல் எமதர்மன் வந்து
எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா?

அந்தச் சீட்டு கட்டில் இருக்காது..
அது வந்தால்
அது சோதிடனுக்கே சோதனையாகவும் போகலாம்..

யாருக்காவது போய்
உங்க உயிர் இப்பவோ அப்பவோன்னு ஊசலாடிகிட்டு இருக்குன்னு சொன்னா
கேட்டவன் அறிவால யோசிக்காம, யோசிக்காம அரிவாளை எடுத்தா??

எதுக்கு வம்புன்னு எந்த சோதிடனும் அந்த சீட்டை வைத்துக் கொள்வதில்லை..:rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
21-12-2006, 05:34 PM
யப்பா!@@@!@!!! மன்றத்தில் அருமையான உரையாடல்ல்... கிளியை கிழிச்செடுத்துட்டாங்கப்பா!!!

மன்மதன்
21-12-2006, 05:54 PM
கவிதை ஏரியா உள்ளே வந்து ரொம்ப நாள் ஆச்சு.. ஒரு சந்தேகம் .. ஹைக்கூ-வை எப்போ ஹக்கூ என்று மாத்தினாங்க??;) ;)

ஆதவா
21-12-2006, 06:10 PM
கவிதை ஏரியா உள்ளே வந்து ரொம்ப நாள் ஆச்சு.. ஒரு சந்தேகம் .. ஹைக்கூ-வை எப்போ ஹக்கூ என்று மாத்தினாங்க??;) ;)

கிளி கத்தற சத்தத்தை வெச்சு மாத்தீட்டாங்களோ என்னவோ? கிளி கூட ஹக்கூன்னா கத்தும்????

மன்மதன்
21-12-2006, 06:42 PM
இல்லையே .. வடிவேலு கூட ஒரு படத்தில் கூண்டுக்குள் கிளியா வந்து 'க்கீ..க்கீ' என்றுதானே கத்துவார்.

தாமரை
22-12-2006, 01:12 AM
இல்லையே .. வடிவேலு கூட ஒரு படத்தில் கூண்டுக்குள் கிளியா வந்து 'க்கீ..க்கீ' என்றுதானே கத்துவார்.
இது கூட தெரியாமல் கிளித்தேரில் ஏறி வலம் வருகிறீரா?

கிளிக்கு ஜலதோஷம்.. அதுதான் "ஹச்சூ" தும்மிகிட்டே ஹைக்கூன்னு சொன்னது உம்ம காதில் ஹக்கூ ன்னு விழுது... உம்ம வாகனத்தையும் அப்பப்போ கவனிக்கனும்.. தெரியுதில்ல...

meera
22-12-2006, 03:19 AM

ஐய்யோஓஓஒ,

அண்ணான்னா அண்ணா தான்.என்ன மன்மதன் உங்க கேள்விக்கு விடை கிடைச்சாச்சா..

ஹா ஹா ஹா

அல்லிராணி
25-12-2006, 02:59 PM
இது கூட தெரியாமல் கிளித்தேரில் ஏறி வலம் வருகிறீரா?

கிளிக்கு ஜலதோஷம்.. அதுதான் "ஹச்சூ" தும்மிகிட்டே ஹைக்கூன்னு சொன்னது உம்ம காதில் ஹக்கூ ன்னு விழுது... உம்ம வாகனத்தையும் அப்பப்போ கவனிக்கனும்.. தெரியுதில்ல...

விட்டா கிளி மூக்கு சிவந்திருக்கக் காரணம் ஜலதோஷம்னு சொல்லுவீகளே!!!:D :D :D

ஆதவா
25-12-2006, 04:34 PM
பாவம் அந்த கிளி யார் பெத்த கிள்ளையோ!! சீ. பிள்ளையோ!! சீ... என்ன சொல்றது? ரெம்ப கொடுமை படுத்திரீங்க அந்த் கிளிய... புளு கிராஸ்ல போட்டு கொடுத்துருவேன் ஆமா...

தாமரை
26-12-2006, 01:06 AM
பாவம் அந்த கிளி யார் பெத்த கிள்ளையோ!! சீ. பிள்ளையோ!! சீ... என்ன சொல்றது? ரெம்ப கொடுமை படுத்திரீங்க அந்த் கிளிய... புளு கிராஸ்ல போட்டு கொடுத்துருவேன் ஆமா...
பச்சைக் கிளி, சிவப்பு மூக்கு, வெள்ளை மனசு, புளூ கிராஸ்.. கலர்ஃபுல்லா இருக்கு...

ஏற்கெனவே சொல்லி இருக்கேன்.. இந்த பாக்டீரியா வைரஸ், கொசு போன்ற சிறு சிறு உயிரினங்களை வேரோட அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை நிறுத்தச் சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்:D :D :D :D

ஆதவா
26-12-2006, 06:47 AM

நாயகன் பட டயலாக் மாதிரி இருக்கே!! இருந்தாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்... !!

தாமரை
26-12-2006, 08:39 AM
நாயகன் பட டயலாக் மாதிரி இருக்கே!! இருந்தாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்... !!

எது ஓவர்? பத்து கிலோ ஆட்டை அடிச்சு குளம்பு முதல் கொம்பு வரை குழம்பாக்கி சாப்பிடறீங்களே அது ஓவரா இல்லை ஒரு 100 கிராம் கிளி இது ஓவரா?:D :D

ஆதவா
26-12-2006, 11:12 AM
எது ஓவர்? பத்து கிலோ ஆட்டை அடிச்சு குளம்பு முதல் கொம்பு வரை குழம்பாக்கி சாப்பிடறீங்களே அது ஓவரா இல்லை ஒரு 100 கிராம் கிளி இது ஓவரா?:D :D

100 கிராம் கிளி!!! உங்களுக்கே தோணலியா? யாருக்குத்தான் பத்தும்?

நம்ம மன்றத்தில ஏற்கனவே பங்கு கேட்டுட்டாங்க!! (நானும் இந்த லிஸ்ட்ல இருக்கேன்)

நான் அதுக்கு "ரெம்ப ஓவர்"னு சொல்லல...

வைரஸ் பாக்டீரியாவைக் கொல்ர டாக்டரை கொல்லனும்னு சொல்றீங்களே அதுதான் ஓவர்,,, வேணும்னா மனுஷன கொல்ர டாக்டரை..... வேண்டாம் வேண்டாம். அப்றம் நம்மள காப்பாத்த யாரும் இருக்கமாட்டாங்க!!

தாமரை
26-12-2006, 11:33 AM

புளூ கிராஸின் நோக்கம் என்ன? கொள்கை என்ன? அதைக் கொஞ்சம் ஆழமா ஆராய்ந்தால் உங்களுக்கு நான் சொன்னது தப்பு இல்லைன்னு புரியும்..

புறாவின் பச்சை இரத்தத்தை (அட ஆமாங்க நிஜமா) ஜிஞ்சர் சோடாவில் கலந்து குடித்து வளர்ந்த பரம்பரையாக்கும்.. எங்க பரம்பரை..

ஆதவா
26-12-2006, 11:43 AM

யப்பா சாமி, ஆள விடுங்க,,, மொதல்ல அந்த கிளிய காப்பாத்தனும்யா... எஸ்கேப்....:D

அல்லிராணி
09-06-2007, 07:03 PM
கடைசியில கிளி எங்கப்பா?

இனியவள்
09-06-2007, 07:10 PM
கடைசியில கிளி எங்கப்பா?

யாரும் விடுதலை தரவில்லை என்று பறந்து போய் இருக்கும் என்று நினைக்கின்றேன்:icon_shades:

அமரன்
11-06-2007, 07:11 PM
ஆமாமுங்கோ.. நாம தனியா சொன்னா ஏத்தி விட்டு வேடிக்கை பாக்கறாங்கன்னு சொல்லுவாங்கோ.. ஒரு கிளியை (?!) பக்கத்தில வச்சுகிட்டு சொன்னா நம்புவாங்கோ..

ஆஹா. ஒரு தமிழ் சொல்லாட்டமே நடந்திருக்கு. அத்தனியும் அருமை. மீரா,தாமரை,இளசு உட்பட பல சொல்லாடல் மன்னர்கள் கலக்கியுள்ளார்கள். செல்வரே கிளியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சொல்லியும் நம்பாதோர் இருக்கின்றார்களே.

ஆதவா
11-06-2007, 07:22 PM
மீராவை இந்த பக்கம் வரவிடாம தடுக்குதுப்பா ஒரு கூட்டம்...

ஓவியா
20-06-2007, 07:17 PM
எசமான்: என் அழகிய செல்ல கிளியே கூட் மார்னிங் சொல்லு, பிலிஸ்

கிளி: ...........

எசமான்: என் கண்ணு, ஒரே ஒரு முறை குட் மார்னிங் சொல்லு பார்ப்போம். பிலிஸ்டா செல்ல*ம்

(ம்ம் இந்தக்கிளி பேசாது போல, வீனா எதற்க்கு, சரி இத பறக்க விட்டுடுவோம்.)

எசமான்: சரி நீ பேச மாட்டேன்கிற, எதுக்கு தண்டமா தீனி போடனும்............பறந்து போ.........என் கண்ணு முன்னுக்கு நீக்காதே பறந்து போ..........

கிளி: தங்க் யு வெரி மாச்.

தாமரை
15-11-2007, 04:19 AM

எதுக்கு பறக்க விடணும்?

meera
15-11-2007, 06:44 AM

அட, தோழி, அன்பு கூட்டிலிருந்து அத்தனை சுலபமாய் பறந்து விட முடியுமா?:D:D:D

meera
15-11-2007, 06:47 AM
எதுக்கு பறக்க விடணும்?

அண்ணா, அத்தனை சுலபமா கிளி உங்களை விட்டு போகாது ஹா ஹா ஹா

அறிஞர்
15-11-2007, 04:39 PM
மீண்டும் மீராவை மன்றத்தில் காண்பதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து கவிதைகளை கொடுங்கள்..

அக்னி
16-11-2007, 11:30 PM
ஒரு ஹைக்கூ கிளிய வைச்சு இந்த ஓட்டு ஓட்டி இருக்காங்களே...

அண்ணா, அத்தனை சுலபமா கிளி உங்களை விட்டு போகாது ஹா ஹா ஹா
அப்போ (கிளிக்கூ) தொடரப் போகுதா...?
அப்ப எப்பிடி போகாது...???
ஒண்ணுமா புரியலையே...

meera
17-11-2007, 02:09 AM
ஒரு ஹைக்கூ கிளிய வைச்சு இந்த ஓட்டு ஓட்டி இருக்காங்களே...

அப்போ (கிளிக்கூ) தொடரப் போகுதா...?
அப்ப எப்பிடி போகாது...???
ஒண்ணுமா புரியலையே...

கிளிக்கூ தொடர்ந்தாலும் இனி கிளி ஓடாது அக்னி.:lachen001::sprachlos020::icon_b:

அக்னி
17-11-2007, 02:27 AM
கிளிக்கூ தொடர்ந்தாலும் இனி கிளி ஓடாது அக்னி.:lachen001::sprachlos020::icon_b:
ஏன்..?
கிளிக்கு என்னாச்சு..?

meera
17-11-2007, 02:33 AM
ஏன்..?
கிளிக்கு என்னாச்சு..?

கிளி கூடுதல் தைரியத்தோட வந்திருக்கு அண்ணா கூட சண்டை போட.(இத அண்ணாகிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்.):aetsch013::aetsch013::eek:

மதி
17-11-2007, 02:35 AM
கிளி கூடுதல் தைரியத்தோட வந்திருக்கு அண்ணா கூட சண்டை போட.(இத அண்ணாகிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்.):aetsch013::aetsch013::eek:
சொல்லாமலேயே அண்ணாக்கு தெரிஞ்சிடும்..:):):)

அக்னி
17-11-2007, 02:46 AM
கிளி கூடுதல் தைரியத்தோட வந்திருக்கு அண்ணா கூட சண்டை போட.(இத அண்ணாகிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்.):aetsch013::aetsch013::eek:
அண்ணாச்சி சொற்சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கின்றார்...
தைரியத்த அங்கவும் கொஞ்சம் காட்டுறது...

சொல்லாமலேயே அண்ணாக்கு தெரிஞ்சிடும்..:):):)
தனிமடல் அனுப்பியாச்சு போலிருக்கே...
அப்போ எப்படி நமக்குத் தெரியும்?

மதி
17-11-2007, 02:52 AM
தனிமடல் அனுப்பியாச்சு போலிருக்கே...
அப்போ எப்படி நமக்குத் தெரியும்?

இதுக்கெல்லாம் தனிமடல் அனுப்புவாங்களா..?
போன் போட்டு சொல்லிட்டா போச்சு... :D:D:D:D

அக்னி
17-11-2007, 02:56 AM
இதுக்கெல்லாம் தனிமடல் அனுப்புவாங்களா..?
போன் போட்டு சொல்லிட்டா போச்சு... :D:D:D:D
அப்பச் சரி...
ஏனுங்க மீரா... நான் ஒண்ணுமே செய்யலை...
அப்புறம் போட்டுக்கொடுத்த அக்னி என்ற்ல்லாம் சொல்லப்படாது...
போட்டுக்கொடுக்கிறதுன்னா போன் பில்லக் கூட ஏத்துறாங்களே...

meera
17-11-2007, 02:58 AM
இதுக்கெல்லாம் தனிமடல் அனுப்புவாங்களா..?
போன் போட்டு சொல்லிட்டா போச்சு... :D:D:D:D

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.....

எத்தனை பேரு இப்படி கிளம்பிருக்கீங்காஆஆஆஆஆஆஆஆஆ:fragend005::fragend005::fragend005::fragend005:

மதி
17-11-2007, 02:59 AM
அப்பச் சரி...
ஏனுங்க மீரா... நான் ஒண்ணுமே செய்யலை...
அப்புறம் போட்டுக்கொடுத்த அக்னி என்ற்ல்லாம் சொல்லப்படாது...
போட்டுக்கொடுக்கிறதுன்னா போன் பில்லக் கூட ஏத்துறாங்களே...
ஹீஹீ..
அண்ணாவாச்சு தங்கையாச்சு...நடுவுல நாம யாரு அக்னி...

meera
17-11-2007, 03:01 AM
அப்பச் சரி...
ஏனுங்க மீரா... நான் ஒண்ணுமே செய்யலை...
அப்புறம் போட்டுக்கொடுத்த அக்னி என்ற்ல்லாம் சொல்லப்படாது...
போட்டுக்கொடுக்கிறதுன்னா போன் பில்லக் கூட ஏத்துறாங்களே...

ஆமம்பா.

அக்னி நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு போட்டுகொடுக்கலையே:mini023::mini023:

meera
17-11-2007, 03:04 AM
ஹீஹீ..
அண்ணாவாச்சு தங்கையாச்சு...நடுவுல நாம யாரு அக்னி...

வேல முடிஞ்சது போல நலுவியாச்சு.:rolleyes::rolleyes::rolleyes:

மதி
17-11-2007, 03:07 AM
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.....

எத்தனை பேரு இப்படி கிளம்பிருக்கீங்காஆஆஆஆஆஆஆஆஆ:fragend005::fragend005::fragend005::fragend005:

அக்னி ஒருத்தர் மட்டும் தான்... :D:D:D:D

அக்னி
17-11-2007, 03:12 AM
அக்னி ஒருத்தர் மட்டும் தான்... :D:D:D:D
ஆமா... அக்னியாக ஒருத்தர்...
மதியாகப் பலர்... மதியூகி...
மதி(தான்) ஊகி...
மதி(தான்) ஊக்கி...

மதி
17-11-2007, 03:16 AM
ஆமா... அக்னியாக ஒருத்தர்...
மதியாகப் பலர்... மதியூகி...
மதி(தான்) ஊகி...
மதி(தான்) ஊக்கி...
விட்டா அந்நியனாக்கிடுவீங்களே...
சரி..கவிதை திரியில கலாய்க்க வேண்டாம்...
அப்புறம்..கழுத்தை பிடிக்க ஆரம்பிச்சுடுவாங்க... :icon_ush::icon_ush:

பரஞ்சோதி
17-08-2009, 09:39 AM
ஹா! ஹா!

சுவையான திரி.

சில திரிகளை நீண்ட நாட்களுக்கு பின்னர் படிக்கும் போது, அய்யோ அந்த நேரத்தில் மன்றம் வராமல் போய் விட்டோமே என்று எண்ணத் தோணும், அதை இத்திரியில் கண்டேன்.

மீரா சகோதரி கொடுத்த கவிதை இத்தனை பதிவுகள் வர காரணமாக இருந்ததற்கு அவருக்கு என் பாராட்டுகள்.

நெல் மணி கிடைக்காவிட்டாலும் விடாமல் சீட் எடுத்து போட்ட தாமரைக்கிளியாருக்கு என் பாராட்டுகள்.

தாமரை
17-08-2009, 11:22 AM
ம்ம்... விடிய விடிய இராமாயணம் கேட்டும் ... அப்படீங்கற பழமொழிதான் ஞாபகம் வருது...

இன்னுமொரு முறை படிங்க பரம்ஸ்.. கிளி-மீரா... ஜோஸியர்-தாமரை....