PDA

View Full Version : பேராயுத பூஜை



umanath
29-09-2006, 04:31 AM
பேராயுத பூஜை

ஊர் விழாக்கோலத்தில்..
பூவின் மணமும்
சந்தன வாசமும் காற்றினில்..
நானும் எடுக்கிறேன் ஒரு பூஜை
ஓயாமல் உழைக்கும் கைகளுக்கு
உலகை காட்டும் விழிகளுக்கு
நடமாட, ஆட வைக்கும் கால்களுக்கு
சுவாசிக்க உதவும் நாசி துவாரங்களுக்கு
எதையும் நேசிக்க வைக்கும் மனதிற்கு
இப்படி என்னோடு இருந்து
என்னை செயல்பட வைக்கும் அனைத்திற்கும்...
இது ஆயுதபூஜையல்ல பேராயித பூஜை
இவைகள் ஆயுதமல்ல பேராயுதம்..

http://vizhiyan.wordpress.com/2006/09/29/perayutha-poojai/ (http://vizhiyan.wordpress.com/2006/09/29/perayutha-poojai/)

leomohan
29-09-2006, 09:58 PM
அருமை அருமை தொடரட்டும்.

இளசு
18-08-2007, 07:50 AM
உடல் ஓர் ஆலயம்..
உள்ளம் அதன் மூலவர்..

பேணிப்பராமரிப்பது
சாலச் சிறந்தது..

பாராட்டுகள் உமாநாத்..

ஓவியன்
19-08-2007, 03:28 AM
அருமையான கவிதை உமாநாத்..........

உங்கள் வரிகளை அடிக்கடி காண பேராவல்.........
அடிக்கடி மன்றம் வாருங்களேன்..........!

சிவா.ஜி
19-08-2007, 04:25 AM
அவயங்களை ஆயுதங்களாக்கி அவைகளின் துணையால் வாழ்க்கைப்போர் புரிந்து,வாழ்ந்து சாதிப்பதால் அவற்றுக்கும் ஒரு பூஜை,அது சாதாரணபூஜையல்ல ஆயுதப்பூஜை...பேராயுதப்பூஜை...நல்ல சிந்தனை.வாழ்த்துக்கள் உமாநாத்.

Narathar
22-08-2007, 08:15 AM
அருமை

richard
22-08-2007, 08:21 AM
பூவின் மணமும்
சந்தன வாசமும் காற்றினில்..
நானும் எடுக்கிறேன் ஒரு பூஜை

தார*ளாம*க* எடுங்க*ள் உங்க*ள் பூஜையை