PDA

View Full Version : அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன்



leomohan
28-09-2006, 11:34 PM
ஒரு கற்பனை பேட்டி

வணக்கம்.

வணக்கம்.

அமெரிக்காவை நெருக்கடியில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பத்தி கேட்கனும்.

எங்க நாட்ல பிரச்சனையா.

ஆமா இருக்கு.

சரி கேளுங்க.

இந்த ஈரான் பிரச்சனை....

ஈரான் ஒரு பெரிய நாடு. 100 கோடி மக்கள் தொகை. கஷ்டங்கள் சகஜம் தான்.

ஐயா நான் குறிப்பது இந்தியாவை இல்லை. ஈரான்....

ஓ. வடக்கு ஈரான். அங்கே கம்யூனிசத்தின் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. அதனாலதான்.

ஐயா நான் வட கொரியா பற்றி பேசவில்லை. ஈரான் ஐயா ஈரான்.

நாட்டின் பெயரில் என்ன இருக்கிறது. என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் தான்.

உள்நாட்டு விவகாரம்-உயரும் வரி வேலையில்லாமை விலைவாசி இதை யார் கவனிப்பது.

அநாவசியமாக கேள்வி கேட்டு தொந்திரவு செய்யும் நிருபர்களையும் உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கலாம் என்று தீவிரமாக யோசிக்கிறேன்.

ஐயா சாமி ஆளை விடுங்க.

அறிஞர்
28-09-2006, 11:37 PM
இது என்ன புஷ் போல் குழப்பமா இருக்கு......

அடுத்த தடவை அவங்க கட்சி ஆட்சிக்கு வராதுன்னு தெளிவா தெரியுது

pradeepkt
29-09-2006, 05:53 AM
என்னமோ போங்க.
யாரையும் விட்டு வைக்கிறது இல்லையா?

ஓவியா
21-11-2006, 06:51 PM
புஷ்............புஸை இன்னும் கொஞ்சம் கேள்வி கெட்டிருக்கலாமே

ஓ வானாமா
அதுகுள்ளெ குண்டு போட்டுடுவாங்களா....சரி அப்ப வானாம்..பா

arun
18-12-2006, 04:40 AM
இதே நிலைமையில போனா புஷ் புஸ்னு போய்டுவார்

ஆதவா
18-12-2006, 05:19 AM
அமெரிக்க இடைத்தேர்தலே இதை உறுதிபடுத்துதே!!

மயூ
18-12-2006, 09:54 AM
இம் முறையுடன் புஷ் வீட்டைதானே!
அவரிண்ட கட்சியும் அவுட் போல தெரியுது...?
ஹிலாரி கிளிண்டன் அடுத்த அதிபராக வருவாரா! தாங்காதம்மா பூமி

pradeepkt
18-12-2006, 10:04 AM
அப்போ மோனிகா வந்தாப் பரவாயில்லையா??? என்ன சொல்ற நீ?

மயூ
18-12-2006, 10:08 AM
அப்போ மோனிகா வந்தாப் பரவாயில்லையா??? என்ன சொல்ற நீ?
இதையே பூமி தாங்காதுண்ணா!!
மோணிக்காவா.... :D :D :D :D
அப்புறம்
மோணிக்காவா இல்ல பூமிக்காவா ! எண்டு பாட்டு படித்துக் கொண்டுருக்கும் நிலைக்கு யுஸ் மக்கள் வந்து விடுவார்கள்! :eek:

leomohan
18-12-2006, 10:11 AM
அப்போ மோனிகா வந்தாப் பரவாயில்லையா??? என்ன சொல்ற நீ?

மோனிகாவே வரட்டும் அண்ணே ஹம்மா.............என்னா ஃபிகரு :p

மயூ
18-12-2006, 10:18 AM
மோனிகாவே வரட்டும் அண்ணே ஹம்மா.............என்னா ஃபிகரு :p
ஆ.. ஜொளளு.... :D

gragavan
18-12-2006, 10:30 AM
அனேகமாக ஹிலாரி வருவதற்கு வாய்ப்பிருப்பது போலத் தெரிகிறது.

அறிஞர்
18-12-2006, 01:50 PM
ஓபாமா பாராக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் களத்தில் இறங்குகிறார்.

கென்னடி வாரிசில் ஒருவர் களமிறங்கலாம்.

போட்டி கடினமாக தான் இருக்கும்.