PDA

View Full Version : பிரபலங்களுக்கு ஒரு வரி



leomohan
28-09-2006, 11:33 PM
அஜீத் நீங்கள் மிகச்சிறந்த கார் ரேஸ்காரர் ஆகவேண்டும் என்பது என் விருப்பம்.

விஜய் ரஜினியை காப்பியடிக்காமலும் டப்பாங்குத்து பாட்டு இல்லாமலும் ஒரு படத்திலாவது நீங்கள் நடிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

தனுஷ் ஏன் கண்றாவியாக நடித்து உங்கள் மாமனார் பெயரைக் கெடுக்கிறீர்கள்.

விவேக் சீக்கிரம் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு புகார் கொடுங்கள். உங்கள் காமெடி காணாமல் போய்விட்டது.

சத்தியராஜ் போதும்.

வடிவேலு நிறுத்திடுப்பா நிறுத்திடு. இது ரொம்ப ஓவர்.

சன் டிவி நிலையத்தாரே தயவு செய்து உங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை மேல் நாடு போகவேண்டாம் என்று சொல்லுங்கள். ஆபாசம் தாங்கவில்லை.

பார்திபன் நீங்க மஞ்சள் பத்திரிக்கை படிக்காமல் நீலப்படங்கள் பார்க்காமல் மூன்று மாதம் இருந்தால் ஒரு நல்ல படம் தயாரிக்கலாம்.

த்ரிஷா கண்ணுக்கு கீழே இருக்கும் தண்(கண்)ணீர் பையை மெட்ரோவில் இணைத்துவிடுங்களேன்!

ஸ்நேகா உங்கள் துரதிர்ஷ்டம் நீங்கள் தனுஷ்டன் நடிக்க வேண்டியதாகிவிட்டது. கவலைப் படாதீங்க நல்ல காலம் பிறக்கும்.

கமல் நீங்கள் வேட்டையாடவும் இல்லை விளையாடவும் இல்லை. இந்த படம் உங்களுக்கு தேவைதானா?

மாதவன் கமலைப்போல நடிக்காமல் உங்களைப்போல் எப்போது நடிக்கப்போகிறீங்க?

கிரஸி மோகன் யூஎஸ்ல காமெடியை விட காம நெடிதான் அதிகமாக இருக்கு. கொஞ்சம் க்ளாஸ் எடுங்க இவங்களுக்கு!

அறிஞர்
28-09-2006, 11:41 PM
ஒவ்வொன்றும் கலக்கல்..... அன்பரே..

இளம் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றிய வரியை நீக்கியுள்ளேன் அன்பரே...

pradeepkt
29-09-2006, 05:56 AM
அப்படி என்னங்க எழுதிட்டாரு? நீக்குற அளவுக்கு???
தனிமடல்ல சொல்லுங்க லியோ