PDA

View Full Version : இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேருடன் ஒரு கī



leomohan
28-09-2006, 11:32 PM
வணக்கம்.
கொஞ்சம் இருங்க என்று சொல்லிக் கொண்டே ஜார்ஜ் புஷ்ஷுக்கு போன் போடுகிறார்.
இவரு லியோ தமிழ் நிருபர். அவர் பயங்கரவாதி இல்லைன்னு நீங்க சொன்னீங்கன்னா பதில் வணக்கம் போடறேங்க.
....
சரிங்க.
வணக்கம் லியோ.
என்ன ஐயா வணக்கம் சொல்லக் கூட அவருகிட்டே அனுமதி வாங்கறீங்க.
அனுமதி இல்லை. அவருக்கு எல்லாம் தெரியும். நீங்க பேட்டிக்கு வாங்க.
நீங்க ஏன் அநாவசியமா ஈராக் போரில் தலை நுழைத்தீர்கள்.
அநாவசியமா. அது அவசியம். ஜார்ஜ் சொன்னார்.
உங்க நாட்டு சுகாதாரத் துறையில் ஊழல் அதிகமாகிவிட்டதாமே. நீங்க எதுவும் நடவடிக்கை எடுக்கமாட்டீங்களா.
அதை பத்தி அவர் இன்னமும் ஒன்றும் சொல்லவில்லை.
ஐயா இது உங்கள் உள்நாட்டு விவகாரம்.
ஐயா நான் தினமும் எந்த நிறத்தில் டை அணிய வேண்டும் என்பதையே அவரை கேட்டுத்தான் செய்கிறேன்.
நன்றி. நான் இப்ப போகலாமா.
ஒரு நிமிஷம் ஜார்ஜை கேட்டு சொல்கிறேன்.

அறிஞர்
28-09-2006, 11:39 PM
இது கொஞ்சம் ஓவர்......

டோனி பிளேர் கட்சிக்கும் அடுத்த எலக்ஷனில் ஆப்புதானா....

pradeepkt
29-09-2006, 05:55 AM
எனக்கென்னமோ அடுத்த முதல்வன் அர்ஜூன் நம்ம லியோதான்னு தோணுது... கூவத்துல, சாரி உங்க ஊரு ஏதாச்சும் ஆத்துல முக்கிற போறாங்க, பாத்து சூதானமா இருந்துக்கங்க.

leomohan
29-09-2006, 12:08 PM
ஹா ஹா. அதுக்கப்புறம் பால்ல குளிப்பாட்டுவாங்களா.........

அறிஞர்
29-09-2006, 02:04 PM
எனக்கென்னமோ அடுத்த முதல்வன் அர்ஜூன் நம்ம லியோதான்னு தோணுது... கூவத்துல, சாரி உங்க ஊரு ஏதாச்சும் ஆத்துல முக்கிற போறாங்க, பாத்து சூதானமா இருந்துக்கங்க. அவர் இருக்கிற ஊரில்.. ஏகப்பட்டு.. பூங்கா, ஏரிகள் தான்...

rajasi13
30-09-2006, 10:39 AM
ஹா ஹா. அதுக்கப்புறம் பால்ல குளிப்பாட்டுவாங்களா.........
பால்ல நீங்களா முங்க வேண்டியதுதான். ஆனா அப்புறம் வீட்டுக்கு ஆட்டோ வரும். (ஒங்க ஊருல தமிழ் நாட்டுக்காரன் இல்லாமலா இருப்பான்)

leomohan
30-09-2006, 02:14 PM
பால்ல நீங்களா முங்க வேண்டியதுதான். ஆனா அப்புறம் வீட்டுக்கு ஆட்டோ வரும். (ஒங்க ஊருல தமிழ் நாட்டுக்காரன் இல்லாமலா இருப்பான்)

:-)
என்னப்பா என் முகவரி கொடுத்து நீரே அனுப்பிவிடுவீர்கள் போலும். அவர் உங்களுடைய நண்பரா

ஓவியா
03-10-2006, 07:38 PM
ஹா ஹா. அதுக்கப்புறம் பால்ல குளிப்பாட்டுவாங்களா.........


ஆஆ என்ன நக்கல்.....:D :D



அனைத்து பதிவையும் படித்தவுடன்....நல்லா சிரித்தேன்...


ஜோரா தொடருங்க...

ஓவியா
21-11-2006, 06:54 PM
இது கொஞ்சம் ஓவர்......

டோனி பிளேர் கட்சிக்கும் அடுத்த எலக்ஷனில் ஆப்புதானா....


ம்ம்ம் கூடியவிரைவில் அங்களுக்கு ஆப்புதான்

leomohan
22-11-2006, 05:14 AM
மிக்க நன்றி ஓவியா.