PDA

View Full Version : கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல்leomohan
29-09-2006, 12:29 AM
டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே.

ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே.

ஏன்டா அந்த கருமத்தை போட்டே.

ஒரு சந்தேகம் அண்ணே.

எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே.

இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே.

அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா.

சொல்லுங்கண்ணே.

அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா.

அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க.

அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தான்.

அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது.

டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒரு வேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க 5 வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க. அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காசை 5 வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.

அதுக்கு என்ன பண்றது அண்ணே.

அதுக்கு நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன்.

கெடா வாங்கிட்டீங்களா.

டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி பேறிக்கா மண்டையனா.

அப்புறம்.

நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா.

அறிஞர்
29-09-2006, 12:36 AM
வாய் கொடுத்து... கடாவா மாறிட்டானா..... பாவம்
வாய்க்கு தடா போட சொல்லுங்கப்பா....

pradeepkt
29-09-2006, 06:51 AM
சூப்பர்

sarcharan
02-10-2006, 12:58 PM
டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே.
அப்புறம்.

நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா.

அது என்ன "ஜார்ஜ் புஷ் வாயா." இந்த வரி ரொம்ப ஒவரு:mad: :mad:

meera
02-10-2006, 01:07 PM
சிரிப்பது ஒரு கலை(ஓவரா சிரிக்காதீங்க அதுக்கு பேரு நம்ம ஊர்ல வேற வச்சுருக்காங்க).சிரிக்க வைப்பதும் ஒரு கலை.

மோகன் உங்க காமெடி நல்லா இருக்கு.. கலக்குங்க...:D :D :D :D :D

leomohan
02-10-2006, 01:21 PM
அது என்ன "ஜார்ஜ் புஷ் வாயா." இந்த வரி ரொம்ப ஒவரு:mad: :mad:

உலகத்தில் என்னை கிண்டல் பண்ணாத பத்திரிக்கை, தொலைகாட்சி, எழுத்தாளர் யாருமே இல்லை. நீ மட்டும் என்னை ஏன் கிண்டல் செய்யவில்லை என்று ஒரு நாள் புஷ் என் கனவில் வந்து கேட்டார்.

இல்லை என்னால் உங்களை புகழத்தான் முடியும் என்றேன்.

எப்படி என்று கேட்டார்.

நான் உங்களை செந்திலுக்கு இணையாக ஒப்பிட்டு எழுதுகிறேன் என்றேன்.

அது என் பாக்கியம் என்று சந்தோஷமாக கூறினார். அதனால் தான் இது. :)

இனியவன்
02-10-2006, 03:40 PM
ஜார்ஜ் புஷ்ஷை
வாயா ன்னு
கூப்பிட்ட
முதல் ஆளு
நீங்க தான் மோகன்.:) :)

leomohan
02-10-2006, 04:31 PM
அமெரிக்க விமானப் படை விட்டு எங்கள் வீட்டின் மேல் குண்டு எறிய மாட்டாருன்ற ஒரு தைரியம் தான்.

ஏன்னா எங்க வீட்டு கிணற்றில் பெட்ரோல் இல்லையே :)

தாமரை
03-10-2006, 11:48 AM
தண்ணி கிணறுக்காக குண்டு போடற நாள் ரொம்ப தொலைவில் இல்லை. தெரிஞ்சி நடந்துக்கோங்க

sarcharan
03-10-2006, 11:48 AM
அமெரிக்க விமானப் படை விட்டு எங்கள் வீட்டின் மேல் குண்டு எறிய மாட்டாருன்ற ஒரு தைரியம் தான்.

ஏன்னா எங்க வீட்டு கிணற்றில் பெட்ரோல் இல்லையே :)


ஜார்ஜ் புஷ்ஷைப்போல தீவிரவாதத்தை எதிர்க்கும் தைரியமுள்ள மனிதர்களை போற்ற வேண்டும். ஏன் ஓசாமா வாயான்னு சொல்ல வேண்டியது தானே. யாராவது அதை படித்துவிட்டால் என்னாவது என்ற பயமோ??:mad: :mad: :mad:

நான் அதிபர் புஷ்ஷின் கொள்கைகள மதிப்பவன்

leomohan
03-10-2006, 02:28 PM
நண்பரே கவலைப்படாதீர். உங்கள் ஆசையை அடுத்த பதிவில் நிறைவேற்றி வைக்கிறேன். ஒஸாமா - அடுத்த ஹாஸ்ய கட்டுரையில் அவனே என் கதாநாயகன்.

இப்போதைக்கு இந்த வீடியோ பார்த்து மகிழுங்கள்.

http://www.youtube.com/watch?v=7Qr25LFcS2M

leomohan
03-10-2006, 02:45 PM
அமெரிக்காவில் இருப்பவன் என்பதால் அமெரிக்காவைப்பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1. அமெரிக்கா தான் முதல் தீவிரவாத நாடு. பிற நாட்டு விஷயங்களில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

2. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து இங்கு ஆடிக் கொண்டிருக்க ஒரு நாட்டின் முட்டாள் தலைவன் தான் விண்வெளி ஆராய்ச்சியிலும் போர்களிலும் பணத்தை கண்ட படி செலவிடுவான்.

3. பெடரல் வரி மாநில வரி மாகாண வரி நகர வரி உப வரி என்று மக்கள் இங்கு வரிகட்டியே வரிகுதிரைகள் ஆகிவிட்டார்கள்.

4. சாலைகள் மட்டமாக உள்ளன. ரயில் நிலையங்கள் அசுத்தமாக உள்ளன. ரயில்கள் நேரத்தில் வருவது இல்லை.

5. தொலைகாட்சியை எடுத்தால் மற்ற மதங்களையும் இனங்களையும் பழிக்காமல் ஒரு நிகழ்ச்சியும் இல்லை. ஒரின சேர்கை குழந்தைகளின் கற்பழிப்பு தகாத உறவுகள் என்று கலாச்சாரம் சீர் அழிந்து கிடக்கின்றது. இதில் மாட்டாத செனெட்டரோ கவர்னரோ இல்லை.

6. தினமும் நியு ஜெர்ஸியில் மட்டும் சராசரியாக ஒரு கொலை ஒரு கற்பழிப்பு நடக்கிறது.

7. இரவில் தனியாக சென்றால் உங்களிடம் உள்ள பணத்திற்காகவும் தொலைபேசிக்காகவும் மக்கிங்க நடக்கலாம்.

8. புஷ் முட்டாள் என்று உலகுக்கே தெரியும். உள் நாட்டு பத்திரிக்கைகள் அவரை பற்றி விமர்சிக்காத நாளே இல்லை.

9. புஷ்ஷின் கொள்கையா. கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது.

10. போர்ட் கம்பெனி 75000 வேலைகளுக்கு ஆப்பு வைத்துவிட்டது. டெல் நிறுவனம் போலியாக கணக்கு காட்டியதாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் படுத்துவிட்டது. நாடு ரிஸேஷன் நோக்கி போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டுக்காக எதுவும் செய்யாமல் மக்களை போர் எனும் பொய் பிடியில் வைத்து அழகான அமெரிக்காவை துவம்சம் செய்துக் கொண்டிருக்கின்றனர் புஷ்ஷூம் அவருடைய எதிரியாக கருதப்படும் அவர் நண்பர் ஒஸாமாவும்.

சந்தேகம் இருந்தால் மற்ற அமெரிக்க நண்பர்களை கேட்டுப்பாருங்கள். சற்றே அமெரிக்க பத்திரிக்கைகளை படியுங்கள் நண்பரே. உண்மை விளங்கும்.

ஓவியா
03-10-2006, 06:21 PM
நண்பரே,
அருமையான நகைச்சுவை பதிவு...

வெள்ளை மாலிகையின் கருப்பரை விளாக்கமும் நன்று

தொடருங்கள்

leomohan
03-10-2006, 07:35 PM
மிக்க நன்றி ஓவியா.

pradeepkt
04-10-2006, 05:39 AM
ஜார்ஜ் புஷ்ஷை
வாயா ன்னு
கூப்பிட்ட
முதல் ஆளு
நீங்க தான் மோகன்.:) :)
இதை ஏன் மடக்கி மடக்கி கவிதை மாதிரி எழுதி இருக்கீங்க???