PDA

View Full Version : செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி



leomohan
28-09-2006, 11:12 PM
வணக்கம்.

வணக்கம்.

நீங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்பீர்களா?

இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி. நான் தான் ஆட்சி செய்கிறேன்.

என்ன? ஆனால் கலைஞர் தானே முதல்வர்?

அவர் முதல்வராக இருந்தால் என்ன. நான் தான் ஆட்சி செய்கிறேன்.

அவர் உங்கள் பெயரை சொல்லக்கூட மாட்டேங்கறார்?

அவருக்கு ஆங்கிலம் தெரியாது.

உங்கள் பெயர் தமிழ்தானே?

இல்லை. ஆங்கிலத்தில் தான் என் பெயர் ஜெயலலிதா.

தமிழிலில்?

புரட்சி தலைவி.

என்ன புரட்சி செய்தீர்கள்?

நான் தலைவியாக இருப்பதே ஒரு புரட்சிதானே?

சரி. நீங்கள் ஏன் கலைஞருடன் மோதுகிறீர்கள்?

அவர் நடத்தும் டிவியின் பெயர் மட்டும் சன் என்று ஆங்கிலத்தில் இருக்கலாமா?

உங்கள் டிவியின் பெயரும் தான் ஜெயா என்று ஆங்கிலத்தில் இருக்கிறது.

இல்லை. ஜெயா என்பது தமிழ் பெயர்.

இப்போது தானே நீங்கள் ஜெயா ஆங்கிலம் என்று சொன்னீர்கள்.

அது என் இஷ்டம். நீங்கள் போகலாம்.

அறிஞர்
28-09-2006, 11:25 PM
குண்டக்க மக்க... பதில்களால்.. கலக்கல் பேட்டி.... தொடருங்கள் அன்பரே

pradeepkt
29-09-2006, 05:48 AM
அப்படியே ஜெயலலிதாவை நேரில் பேட்டி கண்ட மாதிரி இருந்தது :)

sarcharan
02-10-2006, 12:01 PM
வணக்கம்.

அவர் உங்கள் பெயரை சொல்லக்கூட மாட்டேங்கறார்?

அவருக்கு ஆங்கிலம் தெரியாது.

உங்கள் பெயர் தமிழ்தானே?

இல்லை. ஆங்கிலத்தில் தான் என் பொய் ஜெயலலிதா.

தமிழிலில்?
.
????????:confused: :confused:

leomohan
02-10-2006, 12:23 PM
நன்றி சர்சரன்.

இல்லை. ஆங்கிலத்தில் தான் என் பெயர் ஜெயலலிதா.

இது தான் சரியான வரி.

gragavan
03-10-2006, 04:04 PM
ஜெயலலிதாவப் பாத்தீங்களா....முடியவே முடியாதுன்னாங்க....அடுத்து கருணாநிதியா? அவரப் பாக்க மட்டுந்தான் முடியும்னு சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்கன்னு பாப்போம்.

தாமரை
03-10-2006, 04:07 PM
அது என்னமோ தெரியலை.. சுவேதாவிற்கு.. ஜெயலலிதா படத்தை பார்த்து விட்டால் அப்படி ஒரு குஷி,.. அம்மா அம்மா ஜெயயயிதா என உற்சாகமாய் ஆர்ப்பரிப்பாள்..
ம்ம்ம்ம்... மத்தபடி ஸ்பெஷலா ஒண்ணுமே இல்லையே..
ஜெயா என்பது தமிழ்.. லலிதா என்பது ஆங்கிலம்.
இதுகூட தெரியாத உங்களுக்கு கட்சி கொள்கை எப்படி புரியும்.

gragavan
03-10-2006, 04:13 PM
அது என்னமோ தெரியலை.. சுவேதாவிற்கு.. ஜெயலலிதா படத்தை பார்த்து விட்டால் அப்படி ஒரு குஷி,.. அம்மா அம்மா ஜெயயயிதா என உற்சாகமாய் ஆர்ப்பரிப்பாள்..
ம்ம்ம்ம்... மத்தபடி ஸ்பெஷலா ஒண்ணுமே இல்லையே..
ஜெயா என்பது தமிழ்.. லலிதா என்பது ஆங்கிலம்.
இதுகூட தெரியாத உங்களுக்கு கட்சி கொள்கை எப்படி புரியும்.ஹி ஹி ஹி சரியாச் சொன்னீங்க...ஜெயலலிதா இங்கிலீசு. கருணாநிதி தமிழ். வைகோ மலையாளம். ராமதாசு தெலுங்கு.

ஓவியா
11-10-2006, 08:08 PM
கற்பனை பேட்டி தூள்.

கருணாநிதி அங்கிளை ஒரு பேட்டி எடுக்கவும்.....

பதிவினை மஞ்சள் நிர எழுத்துகளால் எழுதவும்...

அங்கிள் சந்தோஷபடுவார்.............:D

மன்மதன்
12-10-2006, 09:10 AM
ஆஹா.. கலக்குறீங்கய்யா....

leomohan
12-10-2006, 11:46 AM
நன்றி மன்மதன், ஓவியா.

கலைஞர், ராமதாஸ், புஷ், ப்ளேயர், சோ என்று அனைவருடன் எடுத்த கற்பனை பேட்டிகளையும் இந்த களத்தில் இட்டிருக்கிறேன். படித்து மகிழவும்.