PDA

View Full Version : சோவுடன் ஒரு கற்பனை பேட்டி



leomohan
28-09-2006, 11:12 PM
வணக்கம்.

லொக் லொக். ம்ஹூம். வணக்கம். சொல்லுங்க.

நீங்க ஜெயலலிதா சப்போர்ட்டா?

அவங்க ஆட்சியிலே இருந்தா அவங்களை சப்போர்ட் பண்ண மாட்டேன்.

நீங்க கலைஞரின் சப்போர்ட்டா?

அவரு ஆட்சி செஞ்சா மாட்டேன்.

ஆட்சியில் இருப்பவர்களை சப்போர்ட் செஞ்சா தானே வசதியா இருக்கும்.

அதில்லை சார். யாரையாவது குறை சொல்லியே பழக்கம் ஆயிடுச்சு.

சரி. பிஜேபியை ஆதரிக்கிறீர்களா?

பிஜேபி? அப்படின்னு ஒரு கட்சி இருக்குது நம்ம நாட்ல?

நீங்க சோனியா பிரதமரா வருவதை ஏற்றுக் கொள்வீர்களா?

கொஞ்சம் இருங்க. எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு பார்த்திட்டு அதுக்கு ஏதிரா சொல்றேன்.

உங்களுக்குன்னு சொந்த கருத்தே இல்லையா?

இருக்குப்பா. ஆனா நான் சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க?

அப்ப நீங்க செய்யறதெல்லாம் என்ன வெறும் ஸ்டண்ட்தானா?

ஜெயலலிதா பண்ணா ஸ்டண்ட் இல்லை. கலைஞர் பண்ணா ஸடண்ட் இல்லை. நான் பண்ணா மட்டும் ஸ்ட்ண்டா?

அறிஞர்
28-09-2006, 11:27 PM
இங்க வந்து புது ஸ்டண்ட அடித்து... கலக்குறீங்க...

தங்களை பற்றி கூறுங்கள்.. அடுத்த தடவை உங்க ஊருக்கு வரும்போது சந்திக்கிறேன்

pradeepkt
29-09-2006, 05:48 AM
கலக்கிப் போட்டீங்க... மன்றத்தில் தொடர்ந்து இந்த மாதிரி கலக்கல்களை அரங்கேற்றுங்கள்.

bullu
14-10-2006, 05:47 PM
நன்றாக வந்துள்ளது. இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம். வாழ்த்துகள்.

ஓவியா
16-10-2006, 05:11 PM
கலக்கல்......

பாலு சொல்வதுபோல் இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம்..

இரண்டாம் பாகம் தொடரவும்

நன்றி

leomohan
17-10-2006, 12:20 PM
அனைவருக்கும் நன்றி. இன்னும் முயற்சி செய்கிறேன். அதிகம் எழுதினால் படிக்க நேரம் இல்லாமல் விட்டுவிடுவீர்களோ என்ற கவலையும் சுவையும் குன்றிவிடுமே என்ற கவலையும் இருந்தது.

உங்கள் ஆதரவிற்கு பிறகு இரண்டாம் பாகமும் எழுத தோன்றுகிறது. எழுதுகிறேன்.

meera
18-10-2006, 10:55 AM
உங்கள் நகைச்சுவை கலக்கல் அருமை.

நல்லது நண்பரே,இரண்டாம் பாகம் தொடருங்கள்.

gragavan
18-10-2006, 12:03 PM
சரியோ தவறோ அவருடைய கருத்தில் சோ மிகவும் தெளிவாக இருக்கிறார். நமக்குத்தான் குழம்புகிறது.

நல்ல கற்பனை மோகன்.

pgk53
25-10-2006, 02:06 AM
மிகவும் நல்ல கற்பனை நண்பரே.
இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போயிருக்கலாமே?

பென்ஸ்
25-10-2006, 11:52 AM
என்ன மோகன்... ஆளை கொஞ்ச நாள கானோம்???

அல்லிராணி
26-10-2006, 04:07 PM
என்ன மோகன்... ஆளை கொஞ்ச நாள கானோம்???
சோவோட பேசினதில குழம்பி கடவுச் சொல்லை மறந்திட்டார் போல..

leomohan
26-10-2006, 09:28 PM
சோவோட பேசினதில குழம்பி கடவுச் சொல்லை மறந்திட்டார் போல..

ஹா ஹா. இல்லை. வேலை பளு அதிகம். மேலும் அனைத்து தமிழ் பகுதிகள் கொண்ட ஒரு வலைதளத்தை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் மற்ற நேரத்தை கழிக்கிறேன். தமிழ் கணினி கலைச்சொல், தமிழ் திரைப்பட பாடல் வரிகள், தமிழ் வானோலி, தமிழ் இலக்கியம், மின் புத்தகம் மற்றும் தமிழ் கல்வி என்று அனைத்தையும் தொகுத்து ஒரு இடத்தில் வழங்க முயற்சி செய்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். www.etheni.com (http://www.etheni.com)
http://tamilradio.etheni.com, etc.

balakmu
27-10-2006, 03:04 AM
i am able to type in tamil and converting the same in unicode. I am able to copy the sentences but I am unable to post the message. I am using netscape browser. Please help me

vckannan
28-10-2006, 06:09 AM
ஹா ஹா ஹா
சோ அவர்கள அவரோட மாறுபட்ட அல்லது வித்தியாசமான பார்வையா காமடி பண்ணிடிங்களே தோழரே
சினிமா கவர்ச்சி இல்லாம பத்திரிக்கை நடத்துற மனுஷன்.

சரி சரி காமடினா அதில்லாம் பாக்கக்கூடாது இன்னும் போட்டு தாக்குங்க