PDA

View Full Version : கலைஞருடன் ஒரு கற்பனை பேட்டி



leomohan
28-09-2006, 11:11 PM
வணக்கம்.

வணக்கம்.

நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததைப்பற்றி?

அது கடவுளின் விருப்பம்.

ஆனால் நீங்கள் கடவுளை நம்பாதவர் ஆயிற்றே?

ஆம். இதை நான் சொன்னது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு.

ஓ. அப்படியென்றால் உங்கள் கருத்துப்படி?

என் கருத்துப்படி இது அம்மையாரின் தோல்வி.

யார் அம்மையார்?

அவர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை?

செல்வி ஜெயலலிதாவா?

ஆம். அந்த அம்மையார் தான்?

ஜெயலலிதா தான் அம்மையாரா?

ஆம்.

யார் அம்மையார்?

ஜெயலலிதா. ஓ. அவர் பெயரை என் வாயாலே சொல்ல வைத்து விட்டீர்களே? இன்னிக்கு ஒரு வேலையும் நடக்காது.

அதனால் என்ன? நீங்கள் பகுத்தறிவு வாதி ஆயிற்றே?

ஆம். அந்த பகுத்தறிவில் தான் சொல்கிறேன். அந்த அம்மையாரின் பெயரை எடுத்தால் எந்த
வேலையும் நடக்காது.

http://www.muthamilmantram.com/images/misc/progress.gif

அறிஞர்
28-09-2006, 11:30 PM
தரமில்லாமல் பெயர் சொல்வது.. முதிர்ந்த அரசியல்வாதிக்கு மரியாதையில்லை என நினைக்கிறாரோ.. என்னவோ....

leomohan
28-09-2006, 11:37 PM
ஹா ஹா ஆம்.

pradeepkt
29-09-2006, 05:52 AM
ஆஹா... கலைஞரின் மேனரிஸங்களையும் நன்றாகவே அசை போட்டிருக்கிறீர்கள் மோகன். பாராட்டுகள்.
அம்மையாரைப் பத்தி நல்லவேளை அவரை இன்னும் பேச விட்டிருந்தீங்கன்னா, இந்தப் பதிவைப் பண்பட்டவர் பகுதிக்கு மாத்திருப்பாங்க :D
தொடருங்கள் உங்கள் வெடிகளை!

ஓவியா
11-10-2006, 08:36 PM
ஹா ஹா, ஹா ஹா

கலக்கல்.......உங்கள் கர்ப்பனை திரண் ஜோர்

மன்மதன்
12-10-2006, 09:06 AM
அதை தொடர்ந்து இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது.. சினிமாவை பற்றி....

'நமீதாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'

'திரிஷா,ஜோதிகா,அசின், நயந்தாரா என்று சொல்லும் போது உதடுகள் கூட ஒட்டுவதில்லை.. நமீதா என்று சொல்லும் போதுதான் உதடுகள் ஒட்டுகின்றன..'

leomohan
12-10-2006, 11:53 AM
அதை தொடர்ந்து இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது.. சினிமாவை பற்றி....

'நமீதாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'

'திரிஷா,ஜோதிகா,அசின், நயந்தாரா என்று சொல்லும் போது உதடுகள் கூட ஒட்டுவதில்லை.. நமீதா என்று சொல்லும் போதுதான் உதடுகள் ஒட்டுகின்றன..'

கழுதை மூன்றெழுத்து
சினிமா மூன்றெழுத்து
திரிஷா மூன்றெழுத்து
ஜோதிகா மூன்றெழுத்து
அசின் மூன்றெழுத்து
நமீதா மூன்றெழுத்து
நயந்தாரா படம் பார்ப்பது நம் தலையெழுத்து, தலையெழுத்து என்று உறுதியாக கூறி வாய்ப்பளித்த உடன்பிறப்புகளுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

pgk53
25-10-2006, 02:09 AM
அருமையான கற்பனை.வாழ்த்துக்கள் நண்பரே.